Wednesday, 31 October 2018

வித்யா சங்கரருக்காக எழுப்பப்பட்ட கோவில்.!!

வித்யா சங்கரர் கோவில் கி.பி. 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. வித்யா சங்கரருக்காக எழுப்பப்பட்டது. 14-ம் நூற்றாண்டில் இருந்த சிருங்கேரி மடத்தின் பீடாதிபதிகளில் ஒருவர் தான் வித்யா சங்கரர்.

வித்யா சங்கரர் கோவில் கி.பி. 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. வித்யா சங்கரருக்காக எழுப்பப்பட்டது. ஓய்சாளர் மற்றும் திராவிடக் கலைப்பாணி கலந்த கட்டிடக்கலை. கி.பி. 14-ம் நூற்றாண்டில் இருந்த சிருங்கேரி மடத்தின் பீடாதிபதிகளில் ஒருவர் தான் வித்யா சங்கரர். இவருக்கு வித்யா தீர்த்தர் என்றும் பெயர் உண்டு. ஆதி சங்கரருக்குப் பிறகு சிருங்கேரி மடத்தின் 11-வது குருவாக விளங்கியவர்.

வித்யா சங்கரர் கி.பி. 1228-ம் ஆண்டு சிருங்கேரி மடத்தின் பீடாதிபதியாக பட்டம் சூடினார். கி.பி. 1333-ம் ஆண்டு சமாதியை அடைந்தார். கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கும் மேலாக மடத்திற்குத் தொண்டாற்றியுள்ளார். அவர் ‘லும்பிகா’ யோக நிலையில் இருந்தபேது சமாதி நிலையை அடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

நிலவறை ஒன்றில் இறங்கி தியான நிலையில் இருக்கப்போவதாகவும் பன்னிரண்டு ஆண்டுகள் கழிந்த பிறகு அந்த சுரங்க வாயிலைக் திறந்து பார்க்குமாறும் அப்போது அவர் லிங்க வடிவில் காணப்படுவார் என்றும் தமது சீடர்களுக்குக் கூறியிருந்தார். ஆனால், ஆவலால் உந்தப்பட்ட சீடர்கள் மூன்றாண்டுகள் கழிந்ததுமே சுரங்க அறையை திறந்து பார்க்க, அங்கு ஒரு லிங்கம் காணப்பட்டதாக அந்த வட்டாரத்தில் ஒரு கதை வழங்கப்பட்டு வருகிறது.

வித்யா சங்கரருக்கு பிறகு பட்டம் பெற்ற அவரது சீடர் பாரதிதீர்த்த சுவாமிகள் தமது குருவின் மேல் கொண்ட பேரண்பு மற்றும் அபிமானத்தின் காரணமாக அவருக்கு ஒரு கோவிலை எழுப்பத் திட்டம் தீட்டினார். இந்த கோவில் கட்டுமான பணிகளுக்காக விஜயநகர மன்னர்களாகிய ஹரிஹரர். புக்கர் ஆகியோர் நன்கொடைகளை வழங்கினர்.

அவர்களின் குருவாகவும், அமைச்சராகவும் இருந்த வித்யாரண்யர் கோவில் பணிகளை முடித்து கி.பி.1356-ம் ஆண்டில் குடமுழுக்கு விழாவுக்கும் ஏற்பாடு செய்தார். வித்யாசங்கரர் கோவில் ஓய்சாளர் கலைப்பாணியும், திராவிடக்கலைப்பாணியும் கலந்த அரிய படைப்பாகும். இக்கோவில் உயர்ந்த மேடையில் மீது கட்டப்பட்டுள்ளது. கோவில் கிழக்கு முகம். மூலத்தானமும், அதன் முன்பு ஒரு மண்டபமும் உள்ளது. இவற்றைச்சுற்றி வருவதற்காக பாதையும் உள்ளது.

நவரங்க மண்டபம் பதினெட்டு அடி உயரமுள்ளது. இம்மண்டபத்தின் விதானம் எட்டடி சதுரம் உள்ளது. அதன் நடுப்பகுதி தாமரை மலரைக் கவிழ்த்து வைத்தது போல இரண்டடி ஆழம் கொண்டது.

தாமரை இதழ்களில் கிளிகள் அமர்ந்திருப்பது போன்று காணப்படுகிறது. நடுவில் தாமரை மொட்டு போன்ற சிற்ப வடிவம். இதழ்கள் ஐந்தடுக்குகளாக உள்ளன. மேற்குறிப்பிட்ட மண்டபத்திற்கு மூன்று வாயில்கள் கிழக்கு, தெற்கு, வடக்குப் பக்கங்களில் காணப்படுகின்றன. இந்த வாயில்களின் வெளிப்புற முகப்பு உத்தரத்தில் கீழ்க்காணும் சிற்ப வடிவங்கள் உள்ளன.

தெற்கு வாயில்-சரஸ்வதி
மேற்கு வாயில்-லட்சுமி நாராயணர்
வடக்கு வாயில்-உமா மகேசுவரர்

மண்டபத்தின் வெளிச்சுவர் முழுவதும் கண்ணைக்கவரும் சிற்பங்கள் காணப்படுகின்றன. அவை திருமாலின் பத்து அவதாரங்களையும், சிவபெருமான் சக்தி ஆகியோரின் பல்வேறு வடிவங்களையும், கோமடேசுவரரின் சிறிய சிற்ப வடிவத்தையும் கொண்டுள்ளன. இந்த சிற்பங்களின் மேல் வரிசையில் சிறிய அளவில் அமைந்த கந்தர்வர்களின் சிற்பங்கள் அமைந்துள்ளன. மற்றொரு சிறப்பம்சம் கோவில் மூலைகளில் மேலிருந்து தொங்கும் கல் சங்கிலிகள்.

நவரங்க மண்டபத்தை சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த 12 தூண்கள் தாங்கி நிற்கின்றன. அவற்றில் ஒவ்வொன்றிலும் சிங்கத்தின் மீது அமர்ந்த வீரன். சிங்கங்களின் வாய்களில் உருளும் கருங்கற்களால் ஆகிய பந்துகள். ஒவ்வொரு தூணிலும் ஒரு ராசி வீதம் 12 ராசிகளின் அடையாளங்கள். மேலே சூரியனைக்குறிக்கும் சிற்ப வடிவம்.

மூலவர் அறையில் உள்ள லிங்கத்திற்கு ‘வித்யா சங்கரலிங்கம்’ என்று பெயர். இது வித்யாதீர்த்த சுவாமிகளின் நினைவாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மூலவருக்கு மேல் பகுதியில் விமானம் உள்ளது. இது மூன்றடுக்குகளையும், ஒரு கலசத்தையும் கொண்டுள்ளது. கலசம் உலோகத்தால்ஆகியது.
சிருங்கேரியை அடைய பல்வேறு ஊர்களில் இருந்து நல்ல சாலைகளும், பேருந்து வசதிகளும் உள்ளன. மங்களூர் சிருமகளூர் ஆகிய இடங்களில் இருந்து அடிக்கடி பேருந்து வசதி உள்ளது. பெங்களூர், சிமோகா, மைசூர் ஆகிய இடங்களில் இருந்து நேரடிப்பேருந்துகளும் உள்ளன...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

கணபதியின் அருளைப் பெறுவதற்கான விரதங்கள்.!!

எந்த ஒரு செயலை தொடங்குவதற்கு முன்பும் கணபதியை வேண்டி வழிபாடு செய்த பின்னர் தொடங்குவது வெற்றியை தரும். கணபதியின் அருளை பெறுவதற்காக விரதங்களை பார்க்கலாம்.

1. வைகாசி வளர்பிறை:
 
முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி ஒரு வருடம் செய்வது வெள்ளிக்கிழமை விரதம்.

2. செவ்வாய் விரதம்:
 
ஆடிச் செவ்வாய் தொடங்கி ஒவ்வொரு செவ்வாயும் ஓராண்டு வரை செய்வது செவ்வாய் தோஷம் விலகிவிடும்.
 
3. சதுர்த்தி விரதம்:
 
பிரதி மாதம் சதுர்த்தி அன்று இருப்பது காரியத்தடைகள் நீங்கும்.
 
4. குமாரசஷ்டி விரதம்:
 
கார்த்திகை மாத தேய்பிறை பிரதமை திதி அன்று தொடங்கி மார்கழிவரை பிறை சஷ்டி வரை 21 தினங்கள் செய்வர். 21 இழைகள் உடைய மஞ்சள் நூலை கையில் கட்டிக்கொள்வர். பிள்ளை செல்வம் குடும்ப வளத்திற்காக செய்யப்படுகின்ற இந்த விரத்திற்குப் பிள்ளையார் நோன்பு என்ற பெயர் உண்டு.
 
5. தூர்வா கணபதி விரதம்:
 
கார்த்திகை மாத வளர்பிறை சதுர்த்தி அன்று விநாயகரை அருகம்புல் ஆசனத்தில் அமர்த்தி செய்வது வம்சவிருத்தி ஏற்படும்.
 
6. சித்தி விநாயக விரதம்:
 
புரட்டாசி வளர்பிறை 14-ம் திதியான சதுர்தகி திதியில் விரதம் இருப்பது எதிரிகள் விலகுவர்.
 
7. தூர்வாஷ்டமி விரதம்:
 
புரட்டாசி வளர்பிறை அஷ்டமி அன்று தொடங்கி விநாயகரை 1 ஆண்டு அருகம்புல்லால் அர்ச்சித்து வருவது உடல் வலிமை உண்டாகும்.
 
8. விநாயக நவராத்திரி:
 
ஆவணி வளர்பிறை சதுர்த்தியை தொடர்ந்து ஒன்பது நாட்கள் செய்வது விநாயக நவராத்திரி.
 
9. வெள்ளிப்பிள்ளையார் விரதம்:
 
ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் விநாயகரை நேர்ந்து கொண்டு விரதம் இருந்து நாம் கோருகின்ற பலனுக்கு ஏற்ப துதிகள் பாடி பலகார பட்சனங்கள் படைத்து வணங்குதல். இந்த விரத பூஜையை பெண்கள் செய்ய வேண்டும். எண்ணங்கள் நிறைவேறும் படி செய்வது.
 
10. செவ்வாய் பிள்ளையார் விரதம்:
 
ஆடி மாத செவ்வாயன்று செய்யப்படுவது. ஆண்கள் கலந்து கொள்ளக்கூடாது. இந்த விரத பூஜையைச் செய்யும் பெண்கள் வீட்டிலிருந்து பச்சரிசியைக்கொண்டு வந்து பொது இடத்தில் இடித்து மாவாக்கி தேங்காய் துருவல் சேர்த்து உப்பின்றி கொழுக்கட்டை அடை செய்து விநாயகருக்கு படைப்பர். கன்று போடாத பசு சாணத்தால் உருவம் செய்து புங்கமரக்கொழுந்து, புளிய மரக்கொழுந்தால் தட்டி செய்து மேடையாக்கி அதில் அவரை பிரதிஷ்டை செய்து ஆடிப்பாடுவர்.
 
11. அங்காரக சதுர்த்தி விரதபூஜை:
 
பரத்வாஜ முனிவருக்கும், இந்திர லோகப்பெண் துருத்திக்கும் ஒரு ஆண் குழந்தை பிறக்க அதை பூமாதேவி வளர்த்து பெற்றோரிடம் ஒப்படைக்க மகரிஷியோ அதற்கு அங்காரகன் எனப்பெயர் சூட்டி விநாயகரை பூஜித்து வரும்படி கூறினார். இதில் மகிழ்ந்த விநாயகர் நவக்கிரஹகங்களில் ஒருவராக அங்காரகனுக்கு பதவி அளித்தார். ஏழையாக உள்ள ஒருவன் மாசி தேய்பிறை செவ்வாயில் தொடங்கி ஒரு வருடம் பூஜை செய்து வந்தால் பெரும் பணக்காரன் ஆவான் என்று விநாயகர் வழிபாட்டு சாத்திரங்கள் சொல்கின்றன...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்.!!

1. திருமந்திரம் நூல் ஆசிரியர்...........
திருமூலர்

2. விநாயகர் மீது வள்ளலார் பாடிய பாட்டு...........
சித்தி விநாயக வள்ளல் துதி

3. இசை, நடனக்கலையை விவரிக்கும் வேதம்...........
சாமவேதம்

4. பராசக்தி ஆடும் நடனத்தின் பெயர்..........
லாஸ்யம்

5. உலகை அழிக்கும் போது சிவன் ஆடுவது...........
சம்ஹார தாண்டவம்

6. யஜுர் வேதத்தில் உள்ள மகாவாக்கியம்...........
அஹம் பிரம்மாஸ்மி(நான் கடவுள்)

7. பாவங்களைத் தீயில் பொசுக்கும் ஆற்றல் கொண்ட மலை.............
வேங்கடமலை(திருப்பதி)

8. பெரிய புராணத்திற்கு சேக்கிழார் வைத்த பெயர்...........
திருத்தொண்டர் புராணம்

9. தசாவதாரங்களில் சிரஞ்சீவியாகத் திகழ்பவர்.............
பரசுராமர்

10. கலப்பை கொடி ஏந்திய மகாராஜா.............
ஜனகர் ( சீதையின் தந்தை...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்.!!

1. வேல், மயிலால் வழங்கப்படும் முருக மந்திரம்............
வேலு மயிலும்

2. அக்னியின் அம்சமான முருகனின் பிறப்பிடம்........
சரவணப்பொய்கை

3. கந்தன் என்பதன் பொருள்...........
ஒன்று சேர்ந்தவன்(ஆறுமுகமாக இணைந்தவர்)

4. குழந்தை முருகனுக்கு மயிலை பரிசளித்தவர்..........
இந்திரன்

5. வள்ளியின் வளர்ப்புத் தந்தை............
நம்பிராஜன்

6. சந்த நயத்துடன் அருணகிரிநாதர் பாடிய பாடல்கள்.............
திருப்புகழ்

7. திருமுருகாற்றுப்படை பாடிய புலவர்............
நக்கீரர்

8. தமிழ் ஆண்டுகள்(60) படிகளாக கொண்ட படைவீடு..........
சுவாமிமலை

9. முருகன் மீது 6666 பாடல்கள் பாடியவர்.........
பாம்பன் சுவாமிகள்

10. சரவணபவ என்பதன் பொருள்...........
நாணல்காட்டில் பிறந்தவர்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்.!!

1. ஆதிசங்கரர் லட்சுமி மீது பாடியது........
கனகதாரா ஸ்தோத்திரம்

2. ஸ்ரீவிருட்சம் என அழைக்கப்படுவது..........
வில்வமரம்

3. லட்சுமிக்கு விருப்பமான மலர்..........
செவ்வந்தி என்னும் சாமந்திப்பூ

4. நெற்றியில் இடும் நாமத்தில் லட்சுமியைக் குறிப்பது.........
ஸ்ரீசூர்ணம் (நடுபாகம்)

5. பசுவின் உடலில் லட்சுமி வீற்றிருக்கும் பகுதி..........
பின்பாகம் (ஆசன வாய்)

6. மான் போல சாயல் உள்ளதால் லட்சுமியை ....... என்பர்
ஹரிணி

7. லட்சுமிக்குரிய மலர்...........
செந்தாமரை

8. நெருப்பில் இருந்து லட்சுமி தோன்றியதாக கூறும் நூல்...........
ஆனந்த ராமாயணம்

9. சுபநிகழ்ச்சியில் லட்சுமியின் அடையாளமாக இடம் பெறுவது.........
வெற்றிலை

10. பாற்கடலில் லட்சுமியுடன் பிறந்த தேவலோக யானை.
ஐராவதம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்.!!

1. ஆடித்தபசு விழா நடக்கும் ஊர்..........
சங்கரன்கோவில் (திருநெல்வேலி மாவட்டம்)

2. சிவ விஷ்ணுவை சங்கர நாராயணராக தரிசிக்க செய்யும் விழா.........
ஆடித்தபசு

3. ஆடித்தபசு என்பதன் பொருள்...........
ஆடியில் செய்த தவம்

4. சங்கரன்கோவிலில் அருள்பாலிக்கும் அம்பாள்................
கோமதி

5. கோமதியம்மன் தவம் செய்ய காரணமான நாக அரசர்கள்...........
சங்கன், பதுமன்

6. கோமதி என்பதன் பொருள்...........
சந்திரன் போல அழகுள்ளவள்

7. கோமதியம்மனின் தவக்கோலம் எப்படிஇருக்கும்?
ஒற்றைக்காலில் நின்ற கோலம்

8. ஆடித்தபசு விழா ........... நாளில் நடத்தப்படுகிறது.
ஆடி பவுர்ணமியும், உத்திராட நட்சத்திரமும் சேரும் நாள்

9. ஆடித்தபசன்று அம்மனுக்கு இறைவன் ........... வடிவில் காட்சிஅளித்தார்
சங்கர நாராயணர்

10. சங்கரன்கோவிலில் வழங்கும் நோய் தீர்க்கும் பிரசாதம்...........
புற்று மண்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்.!!

1. குருவாயூர் கிருஷ்ணர் மீது நாராயணீயம் பாடியவர்..........
நாராயண பட்டத்திரி

2. நந்த நந்தன அஷ்டகம் பாடியவர்..........
ஆதிசங்கரர்

3. கிருஷ்ணருக்கு பெயர் சூட்டியவர் .......
கர்க முனிவர்

4. மருத மரமாக இருந்து கிருஷ்ணரால் சுயவடிவம் பெற்றவர்கள்...........
குபேரனின் பிள்ளைகளான நளகூபன், மணிக்ரீவன்

5. பாகவத புராணத்தில் கிருஷ்ணரின் வரலாறு உள்ள பகுதி..........
பத்தாம் அத்தியாயம்

6. ஆயர்பாடியில் கிருஷ்ணரின் நண்பர்களாக இருந்தவர்கள் .........
ஸ்ரீதாமா, ஸுபலா, ஸ்தோக கிருஷ்ணா

7. கிருஷ்ண தரிசனம் பெற பூலோகம் வந்த தேவலோக பசு...........
சுரபி

8. கோபியருடன் கிருஷ்ணர் ஆடியது........
ராஸ நடனம்

9. ராஸ நடனம் என்பதன் பொருள்..........
பல பெண்களுடன் நடனமாடுவது

10. கிருஷ்ண ஜெயந்தியன்று .......... படிப்பது புண்ணியம் அளிக்கும்
பாகவதம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்.!!

1. விநாயகரின் உலகமாக கருதப்படுவது ........
ஆனந்த புவனம்

2. அவ்வையார் பாடிய புகழ் மிக்க விநாயகர் துதி..........
விநாயகர் அகவல்

3. சனிதோஷம் நீங்கும் விநாயகர்.........
வன்னி மரத்தடி விநாயகர்

4. விநாயகர் என்பதன் பொருள்...........
மேலான தலைவர்

5. ஐந்து முகம் கொண்ட விநாயகர்..........
ஹேரம்ப கணபதி

6. குழலாதும் விநாயகர் வீற்றிருக்கும் தலம்..........
ஸ்ரீசைலம்(ஆந்திரா)

7. விநாயகர் விஷ்ணுவுக்கு உபதேசித்த தத்துவம்.........
கணேச கீதை

8. சிவபார்வதியுடன் விநாயகர் அருளும் கோலம்........
கஜமுக அனுகிரஹ மூர்த்தி

9. விநாயகரும் அனுமனும் இணைந்த வடிவம்.........
ஆத்யந்த பிரபு

10. கணேச பஞ்ச ரத்தினத்தை பாடியவர்.........
ஆதிசங்கரர்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்.!!

1. வியர்வை சிந்தும் முருகன் சிலைகள் உள்ள இடங்கள்...........
திருச்செந்தூர், சிக்கல் 

2. அர்ஜுனனுக்கு சிவபெருமான் வழங்கிய ஆயுதம்........
பாசுபதாஸ்திரம்

3. சிவனுக்கு வில்லால் ஏற்பட்ட பெயர்.........
பினாகபாணி

4. ராமபிரான் ஏந்தியிருக்கும் வில்..........
கோதண்டம்

5. விஷ்ணு தாங்கியிருக்கும் வில்...........
சாரங்கபாணி

6. மகாபாரதத்தை தமிழில் எழுதியவர்...........
வில்லிபுத்தூரார்

7. வில் ஏந்திய முருகன் வீற்றிருக்கும் தலம்...........
திருவையாறு

8. ராமர் சீதையை மணம்புரிய உடைத்த வில்........
சிவதனுசு

9. ராசி மண்டலத்தில் வில்லை குறிப்பது.........
தனுசு

10. வில்லால் புகழ் பெற்ற பாண்டுவின் மைந்தன்...........
அர்ஜுனன்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்.!!

1. வாமனர் என்பதன் பொருள்..........
குள்ளமானவர்

2. மகாபலி யாகம் நடத்திய இடம்.........
நர்மதை நதிக்கரை

3. வாமனரை வழிபட்டால் ........... தோஷம் நீங்கும்
குரு தோஷம்

4. பிள்ளை வரம் பெற அதிதி மேற்கொண்ட விரதம் .........
பயோவிரதம்

5. வாமன மூர்த்தியின் பெற்றோர்..........
காஷ்யபர், அதிதி

6. விஷ்ணு பக்தனான மகாபலியின் முன்னோர்...........
பிரகலாதன்

7. ஓங்கி உலகளந்த உத்தமன் என வாமனரை போற்றும் நுால்.......
திருப்பாவை

8. இந்திரனின் தம்பியான வாமனரை........ என அழைப்பர்
உபேந்திரன்

9. வாமனருக்கு தானம் அளித்ததை தடுத்த அசுரகுரு..........
சுக்கிராச்சாரியார்

10. உலகளந்த பெருமாளின் திருவடியை சத்தியலோகத்தில் பூஜித்தவர்........
பிரம்மா...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

சிவலிங்கத்தின் அர்த்தம்.!!

சிவலிங்கம் மூன்று பாகமாக பிரிக்கப்படுகிறதோ அதாவது மேல் பக்கம் சிவன், நடுபக்கம் விஷ்ணு, அடிப்பக்கம் பிரம்மா என்று சிவலிங்கத்தை கூறுவர்.

ஒவ்வொரு குருவும் ஒவ்வொரு விதமாக சிவலிங்கத்தின் அர்த்தம் கூறுவார்கள். நாம் வாசியோகத்தின் மூலமாக விந்துவை சக்கரங்களின் வழியாக சுழிமுனைக்கு ஏற்றி அது நாசி துவாரம் வழியாக உள்நாக்கில் இறங்கும். இந்த இறங்கும் திரவமே ரசமணி ஆகும். எப்படி ஆவுடயார் பாகத்தில் லிங்கபாகத்தை மருந்த சாத்தி இணைத்து பின்பு சிவபெருமானாக பார்க்கிறோமோ, அதை போலவே இந்த திரவமானது உள்நாக்கின் வலியாக இறங்கி பெருநாக்குடன் இணைகிறது. அப்போது நாம் சிவனாகவே மாறுகிறோம். இதுவே வாசியோகத்தின் இறுதிகட்டம்.

எப்படி சிவலிங்கம் மூன்று பாகமாக பிரிக்கப்படுகிறதோ அதாவது மேல் பக்கம் சிவன், நடுபக்கம் விஷ்ணு, அடிப்பக்கம் பிரம்மா என்று சிவலிங்கத்தை கூறுவர். அதை போலவே நம்முடைய மூலாதாரம் பல உயிர்களை உண்டாக்கும் சக்தி உடையது அதனால் பிரம்மா என்றும், திருவேணி சங்கமம் என்று சொல்லப்படும் மார்புபகுதியில் நம் உடலை காக்கின்ற இதயம் இருப்பதால் நம்மை காக்கின்ற விஷ்ணு இருக்கும் இடமாக கருதுகிறோம்.

உடலின் முக்கியமான இடமான மூளை இருப்பதாலும், வாசியோகத்தின் முடிவிடம் என்பதாலும் முக்கன்னனான சிவபெருமனை தலை பாகத்திற்க்கு வைத்துள்ளோம். அதனால் தான் கபாலம் வலியாக உயிர் பிரிந்தால் முக்தி என்று புராணம் கூறுகிறது. நன்றாக பாருங்கள் நமது பெருநாக்கு ஆவுடையார் பாகம் போலவும், சிருநாக்கு லிங்கபாகம் போலவும் இருப்பதை காணலாம் .இதை என்று நாம் இணைக்கிறமோ அன்று நாம் சிவனாகவே மாறிவிடுவோம்.

ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதியாகிய இறைவன், உயிர்கள்( ஆன்மாக்கள் ) உய்வு பெற வேண்டும் என்பதற்காக மூன்று விதமான வடிவங்களை எடுத்துக்கொண்டு வந்து, நமக்கு அருள்செய்கின்றான்.

அவ்வடிவங்கள்,

அருவம் - சிவம் - அதிசூக்குமம் - கண்ணுக்கு புலனாகாது- >இது நிட்களத் திருமேனி எனவும் சொல்லப்படும்.
உருவம் - மகேசுவரன் - தூலம் - கண்ணுக்குப் புலப்படும்-இது சகளத் திருமேனி எனவும் சொல்லப்படும்.
அருவுருவம் - சதாசிவன் - சூக்குமம் - வடிவம் இல்லை-இது சகள நிட்களத் திருமேனி எனவும் சொல்லப்படும்.

இதில் அருவம் - கண்ணுக்கு புலனாகாது, உருவம் - உமா மகேசுவரர், தட்சிணா மூர்த்தி, நடராசர் - போன்றவை. 

இந்த உருவத் திருமேனிகள் அறுபத்து நான்கு(64) வகையாக உள்ளதாகஆகமங்கள் கூறுகின்றன, அதிலும் சிறப்பாக இருபத்தி ஐந்து(25)வடிவங்கள் - மகேசுவர மூர்த்தங்கள் என்றுசொல்லப்படுகின்றன.மூன்றாவதாக இருக்கக் கூடிய அருவுருவத் திருமேனியே - சிவலிங்கம் எனப்படும்."இலிங்கம்" - என்பதற்கு குறி என்பது பொருள், " குறி " - என்றால் = ஒரு அடையாளம்ஆக காண முடியாத இறைவனை காணுவதற்கான அடையாளமேசிவலிங்கம் எனப்படும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡