Sunday, 31 May 2020

பில்லி சூனியம் போக்கும்ஐந்து வீட்டு சுவாமி.!!

செட்டியாபத்து, தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அடுத்துள்ளது செட்டியாபத்து. இங்கு அருட்பாலிக்கிறார் ஐந்து வீட்டு சாமி.தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையை சார்ந்தவர் வடுகநாதர். இவருடைய மனைவி பொன்னம்மாள். இவர்கள் இருவரும் மணமுடிந்து 5 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால், மதுரை சென்று மீனாட்சி அம்மனை மனமுருக வழிபட்டு வந்தனர். மறுமுறை அவர்கள் மதுரை சென்றனர். அப்போது கோயில் அருகே நின்று கொண்டிருந்த ஒருவர், ‘‘வைகையில் தம்பதியர் சகிதமாக நீராடி வந்து அம்பாள் மீனாட்சியையும், அப்பன் சொக்கனையும் வணங்கி செல்லுங்கள். உங்கள் வேண்டுதல் நிறைவேறும்’’ என்று அவர்களிடம் கூறினார்.

அதனை தெய்வ வாக்காகக் கருதி வைகை ஆற்றங்கரையினிலே நீராடச் சென்றனர்.  அங்கு குழந்தையின் அழுகுரல் கேட்டது.  அந்த அழுகுரல் வந்த இடத்தினை நோக்கி சென்றபோது  அங்கு அழகான ஓர் ஆண் குழந்தையைக் கண்டனர்.  அந்த குழந்தையை கையிலெடுத்து வாரி அணைத்த பொன்னம்மாள், தனது கணவரிடத்தில், ‘‘நாம, இந்த குழந்தையை வீட்டுக்கு கொண்டு போவோமாங்க’’ என்றாள். அவர் இது “கடவுள் தந்த பரிசு, அதனால் நாம் வீட்டுக்கு கொண்டு போவோம் என்றார். அதன்பிறகு குழந்தையுடன் சென்று மீனாட்சியையும், சொக்கநாதனையும் வழிபட்டு விட்டு  ஊர் வந்து சேர்ந்தார்கள்.தும்பைச் செடிகளின் அருகே கண்டு எடுத்ததால் அந்த குழந்தைக்கு ‘தும்பையப்பர்’’ என்று பெயர் சூட்டினர். தும்பையப்பர் மருவி பையப்பர் ஆகி அது ஐயப்பர் ஆனது.  

ஏழு வயது நிரம்பிய தும்பையப்பரை அழைத்துக்கொண்டு வடுகநாதரும் - பொன்னம்மாளும் மதுரை மீனாட்சி கோயில் திருவிழாவுக்கு சென்றனர். குழந்தைச் செல்வத்தைக் கொடுத்த மீனாட்சியைத் தரிசித்த பின்னர் மதுரை நகரை சுற்றி வந்த போது, விழாக்கூட்டத்தில் தும்பையப்பனை தவறவிட்டனர். எங்கு தேடியும் குழந்தையைக் காணவில்லை. பெற்றோர்கள் அழுது புலம்பி தவித்தனர்.  உயிரற்ற ஜடம்போல் ஆனார் பொன்னம்மாள். அவரை தேற்ற முடியாத துயரத்தோடு வடுகநாதர் அவளை அழைத்துக்கொண்டு ஊருக்கு சென்றார். மதுரை நகர் முழுவதும், பெற்றோரை தேடி அலைந்து ஓய்ந்து போன தும்பையப்பர், அங்கு மளிகைக் கடை ஒன்றில் பணியாளராக சேர்ந்துக்கொண்டார்.

தாய், தந்தையர் மீனாட்சி, சொக்கநாதரின் பெருமைகள் பற்றி அடிக்கடி கூறியதால், தினமும் கடை திறக்கும் முன், கோயிலுக்கு சென்று மீனாட்சி அம்மனை வணங்கி செல்வார். ஒரு நாள் கோயிலுக்கு சென்ற போது அம்பாள் சந்நதியில் செந்நிற பட்டுகட்டி, செந்தூர திலகமிட்டு மணம் புரிந்த மங்கையாய், பிள்ளை பெற்ற அன்னையாய் மீனாட்சி அம்பாள் மானிட பெண் வடிவில் நின்றிருந்தார். அவர், தும்பையப்பரிடம், குழந்தாய், கோயிலுக்கு தினமும் வந்து செல்கிறாயே, என்ன வேண்டுதல் உனக்கு இந்த சின்ன வயதில் என்று வினவ, தும்பையப்பர் கூறலானார் அம்மா, என் பெற்றோர்களிடம் நான் மீண்டும் சேரவேண்டும். அவர்களை என்மனம் தேடுகிறது. படுத்தால் என் தாயின் முகம்தான் என் கண்ணுக்குள் தெரிகிறது. எனக்கு தூக்கமே வரவில்லை என்று கூறியபடி அழுதார்.

சரி, சரி அழாதே, மீனாட்சி அம்மனை வணங்கி வந்தால் வேண்டுதல் நிறைவேறும் என்று நம்புறீயா என்று கேட்க, நிச்சயம் நடக்கும் என் தாய், தந்தையர் கூறியிருக்கிறார்கள் அவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள். அது மட்டுமல்ல, மீனாட்சி அம்பாள் அருளால் தான் நான் பிறந்தேனாம் என்றார் தும்பையப்பர். இப்படி பேசிக்கொண்டிருக்கும் போது, நேரமாச்சு, கடை மாமா தேடுவாங்க, நான் போயிட்டு வாரேன். நீங்க வீட்டுக்கு போகலியா என்று தும்பையப்பர் கேட்க, நான் அப்புறமா போறேன். சரி, நீ போயிட்டு நாளைக்கு வா என்று விடைகொடுத்தாள் அம்பாள். இப்படி பல நாள் தும்பையப்பரிடம் ஒரு மானிட பெண்ணாக மாறி பேசி வந்தார் மீனாட்சி அம்மாள். ஆண்டொன்று முடிந்த நிலையில் வழக்கம் போல் கோயிலுக்கு வரும் பெற்றோரை, தும்பையப்பர் ஒரு நாள் நேரில் கண்டார். அவர்கள்  தன் மகன் எதிர்வருவதைக் கண்டு மகிழ்ந்தனர். மகிழ்ச்சி மிகுதியால் தாய், தந்தை இருவரும் ஒருசேர ‘ஐயப்பரே’’ என்று கூவி அழைத்தனர். இருவருமே ஓடோடிச்சென்று குழந்தையை
கட்டித்தழுவி ஆனந்தமாய் நின்றனர்.

தும்பையப்பரிடம் “ஐயப்பா ஊருக்கு போகலாம் வா” என்று அழைத்தனர். இவ்வார்த்தைகளைக் கேட்டதும் தும்பையப்பர் அவர்களிடம் “சிறிது நேரம் இங்கு இருங்கள் என்று கூறிவிட்டு, அம்பாள் சந்நதி முன்னே சென்றார். அம்மா, எங்க அம்மா, அப்பாவ, நான் கண்டுவிட்டேன். என்று கூறியவாறு கண்களை மூடி இருகைகளையும் ஒரு சேர வைத்து வணங்கியபடி மீனாட்சி அம்பாளுக்கு நன்றி கூறினார். அப்போது எதிரே மானிட பெண்ணாக அம்பாள் நின்று கொண்டிருந்தார். அவரைக்கண்டு சந்தோஷம் பொங்கிய தும்பையப்பர், அம்மா உங்களை தான் நான் தேடினேன். மீனாட்சி அம்பாள் அருளால் என் பெற்றோர் எனக்கு கிடைத்து விட்டனர் என்றார். அப்படியா ரொம்ப சந்தோஷம் என்று பதில் கூறிய, அன்னை தன்னை யாரென்று அவன் அறியும் பொருட்டு சிறுவனுக்கு காட்சி கொடுத்தார். பின்னர் ஒரு கண்ணாடியையும், எலுமிச்சைகனி ஒன்றையும் கையில் கொடுத்து “தும்பையப்பா, கண்ணாடியை வைக்கிற இடத்தில், அந்த கண்ணாடி மேல் இந்த எலுமிச்சம் கனியை வைத்துக்கொள். கனி அழுகி என்றைக்கு கண்ணாடியில் முகம் தெரியாமல் போகிறதோ அன்று என்னிடம் வா. இப்போது பெற்றோருடன் ஊருக்கு சென்று வா” என்று விடை கொடுத்தார்.

பெற்றோருடன் ஊர் வந்த தும்பையப்பர். தனிமையில் ஒரு இடம் அமைத்து அதில் அன்னையை பூஜை செய்தார். குதிரை வளர்ப்பிலே  மிகவும் நாட்டம் கொண்ட அவர், அதிலே பொழுதை அதிகம் கழித்தார். வசதி மிக்க வீட்டிலே வளர்ந்த அவருக்கு தேவையான எல்லா சுகபோகங்களுக்கும் வாய்ப்புகள் இருந்தும் எதிலும் தன்னை உட்படுத்திக் கொள்ளவில்லை. இந்நிலையில் ஒருநாள் பூஜை செய்யும் போது கனி அழுகி இருப்பதைக் கண்டார். கண்ணாடியையும் பார்த்தார் முகம் தெரியாமல் இருந்தது. உடனே, யாரிடமும் எதுவும் கூறாமல் அன்னையைக் காண  மதுரையை நோக்கி சென்றார். அங்கே அன்னையை அம்மா,அம்மா என்று அழைத்தபோது எந்த பதிலும் வரவில்லை. அங்கே யாகம் நடந்து கொண்டிருந்தது. தும்பையப்பர் அந்த யாகத் தீயினுள் பாய்ந்து விட்டார். “அம்மா, அம்மா” என்றழைத்த மகன் தன்னைக் காணாது யாகத் தீயினுள் பாய்ந்துவிட்டான் என்பதை அறிந்த அன்னை யாகசாலைக்கு வந்தார். அப்போது யாக குண்டத்துள்ளிருந்து தும்பையப்பர் வெளியே வந்தார். அன்பு மகனின் மேனியில் அனலின் வடு எங்கும் இல்லாதது கண்டு அன்னை அகமகிழ்ந்தாள். தும்பையப்பரின் பக்தியை கண்டு மகிழ்ந்து, தும்பையப்பரின் செவிகளிலே எட்டெழுத்து மந்திரத்தை அன்னை உபதேசம் செய்தார்.

பின்னர் இந்த லோகத்தில் மாய சக்திகளும், மாந்திரீக சக்திகளும் மேலோங்கி வருகிறது. குறிப்பாக தென்னாட்டில் மாந்திரீக சக்தியால் தெய்வ சக்தியை அடக்கி ஆள ஒரு கூட்டம் உதயமாகியிருக்கிறது. அதிலிருந்து மக்களை காத்து வா, அதற்காக நீ இந்த மண்ணில் தோன்றியிருக்கிறாய். என்னை நோக்கி “பூஜை செய்து வா. நான் உன்னோடு இருப்பேன். தென்திசையை  நோக்கி செல் என்று அன்னை கூறியதும், தாயே, நான் எங்கு இருக்க வேண்டும். என்று தும்பையப்பர் கேட்க, நீ, செல்லுமிடத்தில் எங்கே சம்பு அடர்ந்து நீர் நிலையோடு இருக்குமிடத்தில் புலியும், மானும் ஒன்றாக நீர் அருந்துகிறதோ அவ்விடமே நீ தங்கி இருக்க ஏற்ற இடமாகும். என்று கூறி வாழ்த்தி விடைகொடுத்தார் அன்னை. அன்னையின் வாக்கை சிரமேற்கொண்டு தென்திசை நோக்கி தும்பையப்பர் புறப்பட்டார்.தென்திசை நோக்கி வந்த தும்பையப்பர், உவரி வந்து, அங்கு குடிகொண்டுள்ள சுயம்புலிங்கசுவாமியை தரிசனம் செய்து விட்டு செட்டியாபத்து  கிராமத்துக்கு வந்தார். செட்டியாபத்து பகுதி அந்நாளில் வனமாக இருந்தது. நல்லநீர் நிலையோடு, சம்பும் அடர்ந்து வளர்ந்து இருந்த இடத்தில் புலியும், மானும் ஒன்றாக நீர் அருந்துவதைக் கண்டார்.  அன்னை கூறிய படியே அந்த இடம் இருந்ததை உணர்ந்து ஆனந்தமடைந்தார். அன்னையின் ஆணைப்படி நாம் தங்கியிருக்க இதுவே சரியான இடம் என்று முடிவு செய்து அந்த இடத்தில்  யோகநிலையோடு அமர்ந்தார். அம்மனுக்கு கோயில் எழுப்பி, பூஜை செய்து வந்தார்.

நாளடைவில் அங்கு நிலம் வைத்திருந்த வைணவர் ஒருவரின் கனவில் தோன்றிய தும்பையப்பர் தான் பூஜித்து வந்த அம்பாளுக்கு தினமும் நீ பூஜை செய்து வா, அதோடு என்னையும் கவனி, உன் நிலத்துக்கும், குலத்துக்கும் காவலாய் இருப்பேன் என்றார். அந்த வைணவர் அம்பாளுக்கும், தும்பையப்பருக்கும் கோயில் எழுப்பினார். முதன்முதலில் எழுப்பிய சாமி என்பதாலும், கனவில் பெரிய உருவமாக வந்ததாலும் அவருக்கு பெரியசாமி என்று பெயரிட்டார். அம்பாளுக்கு அவரறிந்த வைணவ நாமங்களில் ஒன்றான பெரிய பிராட்டி என்ற நாமத்தை கொடுத்தார். தொடர்ந்து வந்த தலைமுறையினர் வைணப்பெருமாள் சந்நதி, அனந்தம்மாள் சந்நதி, ஆத்தி சாமி சந்நதி என 5 சந்நதிகள் உருவாக்கினர். ஆத்திசாமி தான் காவல் தெய்வமாக உள்ளார். இதனால் இக்கோயில் 5 வீட்டு சாமி என்று அழைக்கப்பட்டது. அடுத்து வந்த தலைமுறையினர் திருப்புளியாழ்வார் சந்நதியை உருவாக்கினார்கள். 1984 ஆம் ஆண்டு புதிதாக  பெரிய சுவாமி சந்நதியின் எதிர்புறம் ஆஞ்சநேயர் சந்நதி கட்டப்பட்டுள்ளது. இப்போது பல சந்நதிகள் இருந்தாலும் பழைய பெயரான ஐந்து வீட்டு சாமி என்றே இப்போதும் இக்கோயில் அழைக்கப்படுகிறது.

பெரிய சாமி திருக்கையில் சங்குசக்கரம் ஏந்தியவராய் பக்தர்களுக்கு அருட் பாலித்துக்கொண்டிருக்கிறார். பில்லி. சூனியம், செய்வினை, ஏவல் உள்ளிட்டவைகளை போக்கும் தலமாகவும், மாந்திரீக பிரச்னைகளுக்கும், மனநோயால் பாதிக்கப்பட்டோருக்கும் பரிகார தலமாகவும் இக்கோயில் விளங்குகிறது. சுகபிரசவம் வேண்டுவோரும் பெரியபிராட்டி அம்மையாருக்கு வளையல்களை காணிக்கையாக செலுத்தி வேண்டிக்கொள்கின்றனர்.கால் உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஆத்தி சுவாமி கோயிலுக்கு நேர்ச்சையாக செருப்பு மற்றும் கதாயுதம் போன்றவற்றை காணிக்கையாக செலுத்துகிறார்கள். இவ்வாறு பக்தர்கள் செலுத்தும் செருப்புகளை அணிந்ததின் அடையாளமாக மறுவருடம் வந்து பார்த்தால் ஆத்தி சுவாமியின் கால் தடங்கள் அந்த செருப்பில் விழுந்திருப்பதை இன்றும் பார்க்கலாம். கிரக தோஷத்தால் கஷ்டப்படுவார்கள்  அவர்கள் தலையை சுற்றி முட்டைகளை  பெரியசாமி, ஆத்திசாமி, பெரியபிராட்டி ஆகிய அம்மன் சந்நதிகளில் காணிக்கையாக செலுத்துகிறார்கள். ஒரு சிலர் கோழி குஞ்சுகளை தங்களின் தலையைச் சுற்றி இத்தலத்தில் காணிக்கையாக செலுத்துகிறார்கள்.

இந்த கோயிலில் வடக்கு வாசலில் இருந்து உள்ளே நுழைந்தால் ஆஞ்சநேயர் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். அதை தொடர்ந்து சென்றால் பெரியசாமி  தெற்கு நோக்கி காட்சி  அளிக்கிறார், அவர் அருகே பெரிய பிராட்டியும் தெற்கு நோக்கி காட்சி அளிக்கிறார்கள்.  தொடர்ந்து செல்லும் போது திருப்புளி ஆழ்வார் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். அவரை தொடர்ந்து ஆத்தியப்பன்சாமி கிழக்கு நோக்கி அவரின் எதிரே குதிரை வீரன் வடக்கு நோக்கியும் காட்சி அளிக்கின்றனர். அதை கடந்து சென்றால் வயணப்பெருமாளும், அலந்தம்மாளும் வடக்கு நோக்கி காட்சி தருகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 18ம் தேதி துவங்கி 6 நாட்கள் வரை சித்திரை திருவிழாவும், தைமாதம் 5ம்தேதி துவங்கி மூன்று நாட்கள் தை திருவிழாவும் மிக விமர்சையாக நடக்கும். அமாவாசை, பௌர்ணமி தினங்களில் விசேஷ பூஜைகளும் நடக்கும். சித்திரை திருவிழாவின் இறுதி நாளன்று வழங்கப்படும் அன்னமுத்திரை என்ற பிரசாதம் முற்றிலும் மகிமை உள்ளதாக கருதப்படுகிறது.இக்கோயிலில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. பெண்களால் தொட்டு வணங்கிய பிறகே, பூஜைக்குரிய சாமான்கள் ஐந்து வீட்டு சுவாமிகளுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இந்த கோயில் செல்ல நெல்லையிலிருந்து உடன்குடி  செல்லும் பஸ்சில் ஏறி மெஞ்ஞானபுரம் வழியாக செட்டியாபத்து செல்லலாம்...

சு.இளம் கலைமாறன்

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

Saturday, 30 May 2020

காகத்திற்கு இரு கண் இருந்தும் ஒரு கண் பார்வை ஏன்?

காகங்கள் இரண்டு கண்கள் பெற்றிருந்தாலும் ஒரு கண் வழியே பார்க்கும் காரணம். தேவேந்திரன் மகன்களில் ஒருவனான ஜெயந்தன் வனத்தின் வழியே வரும்போது ஆற்றில் சீதா தேவி நீராடிக் கொண்டிருப்பதை கண்டான். நீராடுகிற போது நீருக்குள் நின்றபடி தனது ஆடையை களைந்துக் கொண்டிருந்தாள். அப்போது சீதையின் தனங்களை பார்க்க வேண்டும் என்ற காம எண்ணோட்டத்தில் இருந்த ஜெயந்தன்.  காகம் உருக்கொண்டு ஆற்றின் கரையிலே அமர்ந்து சீதையின் மேனியை பார்க்கிறான். இதை ஞான திருஷ்டியால் உணர்ந்த ராமபிரான் பிரும்மாஸ்திரத்தை எய்தினார். பிரும்மாஸ்திரம் ஜெயந்தனின் ஒரு கண்ணை பறித்தது. அது முதல் இதை உணர்த்தும் வகையிலும் இதே தவறை எவரேணும் செய்யாத வகையிலும் இருக்கவே இரு கண் இருந்தும் ஒரு கண் பார்வையை காகம்  சாபமாக பெற்றது. அதனால்தான் அதுமுதல் தீமைகளுக்கு தண்டனைத் தரும் சனி பகவானின் வாகனமாக காகம் மாறியதாகவும் சொல்லப்படுகிறது...

சு.இளம் கலைமாறன்

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

திருமகள் அருள் பெற்ற பொன் அம்பலம்சிதம்பரம்.!!

கடலூர் மாவட்டத்திலுள்ளது சிதம்பரம். இங்கே வீற்றிருக்கும் ஆனந்தக் கூத்தன் என நந்தனாரால் போற்றப்படும் சிதம்பரம் நடராஜர் சந்நதியும், ஆழ்வார்களால் போற்றப்படும் அரங்கநாதன் குடி கொண்டிருக்கும் திருசித்திரக்கூடம் என்ற இந்த சேத்திரம் நாடியில், ‘‘கயிலாயத்து தொழுந் தேவரெலாம் நேரே நின்று தொழ அமைந்த தலமா மிது தக்ஷிண கயிலாமாமே'' என்கிறது. 

அதாவது இமயமலையில் கயிலாய தரிசனம் செய்து முடித்தபின் தேவர்களும் சித்தர்களும் ககன மார்க்கமாய் (வான் வெளியில்) ஒரே நேர் அச்சில் தெற்கு நோக்கி வந்தால், சிதம்பரத்தை அடையலாம் என்கிறது நாடி. கயிலாயமும், சிதம்பர நடராஜரும் 180 டிகிரி அச்சில் அமைந்துள்ளன. இங்கு ஆகாய அம்சமாக சிவன் தாண்டவமாடி மகிழ்ச்சியுடன் இருப்பதை ரிஷிகள் அனுபவித்து இங்கு கோயிலை எழுப்பி இருக்கின்றனர். ஆகாயத்தை எப்படி பார்க்க இயலாதோ அப்படி சிவனையும் நாம் லிங்க வடிவில் தரிசிக்க இயலாது. அகத்தியர், போகர் வான்மீகி போன்றோர்களால் பூஜிக்கப்பட்ட ஒளி புகும் ஸ்படிகலிங்கம். இங்கு இறைவன் ஆனந்தமயமாக & ஸ்வர்ணமயமாக தாண்டவமாடுகிறார். இதனைப் பார்வதி பிராட்டியும் மகாலட்சுமியும் கண்டு இன்புறுகிறார்கள்.
வைகுந்தத்தில் திருமகளை காணாத மகாவிஷ்ணு, அன்னை, தில்லையில் இருப்பதை அறிந்து அங்கு வந்தார். சிவபெருமானின் ஆனந்த நடனத்தை தன்னை மறந்து ரசித்தவராய் இமை சிமிட்டாமல் வியந்து பார்த்துக் கொண்டு இருக்க, கோடானு கோடி தேவர்களும், கந்தர்வர்களும், யக்ஷர்களும், அண்டத்து ரிஷியரும், முனிவரும் கூடி தொழ, ஆனந்தமயமானது தில்லை. தனது சகோதரி மகாலட்சுமியின் வேண்டுகோளுக்கு இணங்கி இன்றுவரை முக்கண்ணனார், தன் நெற்றிக் கண்ணை மூடிக் கொண்டுதான் ஆனந்த நர்த்தனம் புரிகிறார். சிவபெருமானின் கிருபை பூர்ணமாக லட்சுமிக்கு கிடைக்கிறது. சிவபெருமானின் உள்ளத்து உணர்வுகளை நன்கு உணர்ந்தவர் பார்வதி தேவியார். அவர் மகாலட்சுமியை நோக்கி சிவனின் ஆசியை கூறுகிறாள். ‘‘நீ எனது ஆனந்த கூத்தை இமை மூடாது பார்த்து மகிழ்ந்தமையால் தேவர்களும், மற்றேனைய தேவ புருஷர்களுக்கும் இனி இமை மூடாது எமது நடனத்தை கண்டு முழுமையான இன்பம் கண்டமையால், நீ இருக்கும் இடத்தில் ஆனந்தத்திற்கு குறை இராது. எமது மேனி, திருமகளே, உன் பார்வையால் தங்கமானது. அதனால் இக்கணம் தொட்டு நீ தங்கத்தில் முழுமையாக வாசம் செய்வாய். வெற்றிலை, மஞ்சள், பட்டு, நவரத்தின கற்கள், மண், உலோகம், கரி எண்ணெய் போன்றவற்றில் உன் ஆட்சி இருக்கும். சுமங்கலி பெண்களின் குங்குமத்திலும், வளையல்களிலும், சிரிப்பிலும் தேவர்கள் உன்னைக் காண்பர். மகாலட்சுமி ஆன நீ, எமைப்போல ரூபமின்றி, பக்தர்கள் வீட்டில் சஞ்சரிப்பாய். புண்ணிய, தர்ம சிந்தை உடையவர்களுடன் அரூபமாக வாழ்வாய். ஸ்ரீமகாலட்சுமியே, நீ இருக்கும் இடத்தை எல்லா ஜீவராசிகளும் விரும்பும். தேவர்களும் அரசர்களும் உன்னை போற்றுவர். உன் வாசம்தான் பரிபூர்ண வாழ்வு என்பர் மாந்தர்'' என சிவபெருமானின் திரு உள்ளத்தை பார்வதி தேவி, திருமகளுக்கு ஓதி ஆசி தந்தார். திருமகளும் மகிழ்ந்து தனது பூர்ண கருணா கடாக்ஷத்தை சிவனுக்கும் பார்வதிக்கும் தர, பொன்மயமானது அவர்கள் மேனி. அவர் அணிந்திருந்த வில்வமாலையும் மற்றேனைய பொருட்களும் தங்கமயமாக, அந்தக் கோயில் பொன் அம்பலமானது என்கிறார் அகஸ்தியர்.
இன்றும் இந்த ஆனந்த நடனத்தை ரசித்தபடியே சக்கரத்தான் கோயில் கொண்டிருக்கிறார். இந்த கோயிலுக்கு சித்திரகூடம் என்று பெயர். இந்த பெருமாளை தொழுத குமுதவள்ளி தாயாரும், திருமங்கை கலியனும் சிவபெருமானை தொழுது இன்புற்றனர். ராமானுசன் இந்தப் பெருமாளை தொழுது சிவதரிசனம் கண்டார் என்கிறது நாடி. இங்குள்ள நந்தீசன் சிவபெருமானை தொழுது கயிலாயம் நோக்கி கை கூப்பினார். அப்போது சிவகணங்கள் யாவும் தென் கோடியில் வேறு ஒருபுறத்தை நோக்கி தொழுது வான்வெளி பிரயாணம் செய்ய கண்டார். அந்த சிவகணங்கள் நாடிச் சென்றது, கோணீஸ்வரம். என்ற கோணமலையில் குடிகொண்டிருக்கும் ஈசனையே. இது இன்று திரிகோணமலை என்று இலங்கையின் வடகிழக்கு புறத்தே விளங்குகிறது. இதை 'தக்ஷிணகோடி கைலாயம்' என்கிறார் அகஸ்தியர். கைலாயம்&சிதம்பரம்&கோணீஸ்வரம் மூன்றும் பூமியின் ஒரே அச்சில் அமைந்துள்ளன என பூலோக வல்லுநர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
கைலாய தரிசனம் செய்ய வேண்டும். இயலாதவர்கள், தில்லை நடராஜரையும், கோணீஸனையும் தொழுதால் பிறந்த பயனை அடைய செய்யும். மதுமாயி சமேதராய் கோணேசர் அருள் பரிபாலிக்கிறார். இந்திரஜித்து, இராவணேஸ்வரன், கும்பகர்ணன், கர்ணன் ஆகியோரால் பூஜிக்கப்பட்ட மூர்த்தி இவர். கிரியா பாபா அனுதினமும் தொழும் சிவ ஸ்தலங்களுள் முக்கியமானது. சீதையால் ஆராதனை செய்யப்பட்ட சிவத்தலங்களுள் தகுளேஸ்வரம், திரு கீர்த்தீஸ்வரம், மண்ணீஸ்வரம், தென்னார ஈஸ்வரம் என்பன அதிமுக்கியம் வாய்ந்தவை. இன்றும் திரு அருட்பிரகாச வள்ளலார், கிரியா பாபா உள்ளிட்ட தேவர் குழாம், கோணேஸ்வரருடன் கூடிய நகுளேஸ்வரன் உள்ளிட்ட ஐந்து சிவ க்ஷேத்திரங்களையும் தொழுது தில்லை நடனராசனையும் திருச்சித்திரக்கூட அண்ணலையும் ஆராதித்து பின் கைலாயம் செல்கின்றனர் என்கிறது நாடி. கலியுகம் தோன்றி 5120 ஆண்டுகளுக்கு பிறகே திருசித்திரக் கூடத்துறையும் அரங்கிற்கு அனைத்து சிவ பக்தர்களும் ஒப்ப பிரம்மோற்சவம் உள்ளிட்ட பல உற்சவங்களும் நடைபெற சாத்தியமான சூழல் உண்டாகும். அதுவரை பற்பல தடைகள் வரக்கூடும். பிற்காலத்தில் தில்லை நடராஜர் சந்நதி உலகிலேயே மிகப் பிரபலமான சேத்திரமாக விளங்கப்போகிறது. இன்றும் சுந்தரமூர்த்தி நாயனார் கண்ணப்ப நாயனார், ஞான சம்பந்தர், அப்பர், பதஞ்சலி, வ்யாக்ரபாதர் போன்றோரும், சிவநாடு சேர்ந்த ராஜராஜ சோழர், திருமலை நாயக்கர், பராந்தகச் சோழர், கிருஷ்ண தேவராயர், ஆதித்ய சோழர், அருள்பாய சோழர், விக்ரமாதித்யர் போன்றோர் மகா சிவராத்திரிக்கு எழுந்தருளி சிவனை ஆராதிக்கின்றனர். சிவகங்கை தீர்த்தமே பூலோகத்தில் சகல பீடைகளிலும் இருந்து நிவாரணம் தரவல்லது. மேலும், சிவனின் நடன காட்சியானது தீமைகளை அழித்து மக்களை காத்தல், உலகை நடத்திச் செல்லல் என்ற பல அம்சங்களைக் கொண்டுள்ளது.
இங்கு 48 நாட்கள் கோயில் வளாகத்தில் தங்கி மதியம் உணவு மட்டும் உண்டு விரதம் இருந்து தேவார திருவாசங்களை பாராயணம் செய்தால் & 16 தலைமுறைக்கு பெரும் நோய் அண்டாது. குறைவில்லாத தனம் சேரும் என்கிறது நாடி சாஸ்திரம். இதையே புலிக்கால் முனி தனது நாடியில்,
''போகா பீடை போம்
வம்ஸமது வ்ருத்தி யுண்டாம்
வாடா தனமது தானே வந்தண்டும்
சித்திரக் கூடத்துஞ் சிவகாமி நாதனை விரதங்கொண்டு
தில்லையிருந்து சேவிப்பார்க்கிது
திண்ணமாய் சொன்னோம்''
பேய் பிசாசு போன்றவை கோயிலுக்குள் வருவது இல்லை. தீய சக்திகளும் ஒளிந்து ஓடும். பைத்தியம் என்ற பெரும் பீடைக்கு மருந்து, மன அழுத்தம் தீர மருந்து ஒன்று உண்டு. மகாசிவராத்திரி இராப்பொழுது முழுதும், தில்லை பொற்கூரையடி வீற்றிருக்கும் கயிலாநாதனை மனத்தில் ஒரு முகமாய் எண்ணி அவனை நோக்கி அமர்ந்து ''ஓம் நமசிவாய'' என சொல்லி எழுந்தால் குறைவற்ற செல்வம் சேரும். இறை தரிசனமும் சேரும் என்கிறார் அகஸ்தியர்...

-கிருஷ்ணா

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

பக்கத்துணை இருப்பாள்பகவதி அம்மை.!!

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு கடற்கரைச்சாலையில் உள்ள கிராமம் மண்டைக்காடு. இங்கு அருட் பாலிக்கிறாள் பகவதி அம்மன். மண்டைக்காடு முன்பொரு காலத்தில் அடர்ந்த வனமாகவும், மணல் மேடாகவும் இருந்தது. இப்பகுதியைச் சுற்றியிருக்கும் கிராமங்களிலுள்ள மக்கள், தங்கள் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக  வனத்திற்கு ஓட்டி வருவார்கள். தற்போதைய தம்மத்துக்கோணத்தைச் சேர்ந்த சிலர் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாட்டு பசு மாடுகளை வளர்த்து வந்தனர். இந்த மாடுகளை பெரும்பாலும் வனத்திலே விட்டுத்தான் வளர்ப்பார்கள். அந்த மாடுகளை மலை மாடுகள் என்று கூட அழைப்பதுண்டு. இந்த மலை மாடுகள் இரவிலும் அங்கேயே பட்டியல் வைத்து அடைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு மாடுகள் அடைக்கப்படும், அல்லது கூடும் இடத்தை மந்தை என்று அழைப்பார்கள். அந்த வகையில் இவ்விடம் மந்தைக்காடு என்று அழைக்கப்பட்டது.

அது மருவி மண்டைக்காடு என்று அழைக்கப்படலாயிற்று.

முன்னொரு காலத்தில் இப்போதைய மண்டைக்காடு பனங்காடாக இருந்தது. இப்பகுதியில் பருத்திவிளையைச் சேர்ந்த பொன்னையா நாடார் குடும்பத்திற்குச் சொந்தமான பனை விளையும் இருந்துள்ளது. இங்குள்ள பன மரங்களில் இருந்து இப்போதைய அனந்தநாடார் குடியிருப்பு, வைராகுடியிருப்பு, காரவிளை, எள்ளுவிளை, புல்லுவிளை, மேலசங்கரன்குழி, பாம்பன்விளை, கீழசங்கரன்குழி, எறும்புக்காடு, பூச்சிவிளாகம்
(குறிப்பு. இவையெல்லாம் இடைக்காலத்தில் உருவான ஊர்ப்பெயர்கள்) பகுதிகளைச் சேர்ந்தவர்கள் சிலர் பதநீர் இறக்கும் தொழிலை செய்து வந்தனர். இவர்களில் அனந்தன் நாடாரும் ஒருவராவார். மக்கள் பெருக்கம் அதிகமாக இல்லாத காலம் ஆகையால் மக்கள் நடமாட்டம் இவ்விடத்தில் மிகக் குறைவாகவே இருக்கும். அனந்தன் நாடார் இறக்கி வைக்கும் பதநீரை அவரது மனைவி பொன்னம்மை குடிசைக்கு எடுத்துச் சென்று பதப்படுத்துவது மற்றும் காய்ச்சி கருப்புக் கட்டியாக்குவது அவர்களின் அன்றாடப்பணியாகும்.
தென் நாட்டு நாடார் மக்களின் குல தெய்வம் பத்திரகாளி. இதை மலைநாடான கேரளா மற்றும் அதையொட்டியுள்ள குமரி மாவட்டத்தில் பத்திரகாளியை “பகவதியென்று” அழைப்பது வழக்கம். பனையேறும் நாடார் தொழிலாளிகள் பருவ காலத்தில் முதல் முதலாவதாக இறக்கும் பதிநீரை பத்திரகாளிகுப் படைத்த பிறகுதான் தங்களது வீட்டுற்கு எடுத்துச் செல்வதை ஒரு மரபாக அக்காலத்தில் கடைபிடித்து வந்துள்ளனர்.
அதுபோல் அனந்தன் நாடார் பதநீரை இறக்கி வைத்துவிட்டு, அருகேயிருக்கும் ஓடையில் குளித்து விட்டு வந்து பத்திரகாளியை  வணங்கி விட்டு கலயத்தை எடுத்துச் செல்வார். ஒரு நாள் கலயத்தை இறக்கி வைத்து விட்டு ஓடைக்கு குளிக்கச் சென்றுள்ளார். அவ்வேளையில் அவரது மனைவி பொன்னம்மை பதநீரை வீட்டிற்கு எடுத்து குடிசை வீட்டிற்கு வந்துவிட்டார். குளித்து விட்டு திரும்பிய அனந்தன்நாடார் பதநீரை காணாததால் திடுக்கிட்டார். படையல் செய்வதற்கு முன் பதநீரை எடுத்துச் செல்வது நெறி தவறிய செயலாகும்.  எனவே அவர் மனம் வெதும்பியது. இந்நிலையில் குடிசைக்குச் சென்றார். அங்கு பதநீரை மனைவி எடுத்து வந்து அடுப்பேற்றி இருந்ததைக் கண்டு சினம் கொண்டார்.
விவரம் அறியாத பொன்னம்மை அவரின் கோபத்திற்கு காரணம் என்ன என்று வினைவினாள். “காரணமா கேட்கிற அம்மனுக்கு படையல் வைக்கும் முன்னாடி  யார் உன்னை பதிநீரை எடுத்து வரச் சொன்னது’’ என்று சத்தமிட்டு, ஆத்திரத்தால் பெண்பனைப்பூவை பதப்படுத்தும் கடிப்பு ஆயுதத்தால் ஓங்கி தலையில் அடித்து விடுகிறார். மண்டையில் பலமாக இறங்கிய அடியால் பொன்னம்மை அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தாள். சிறிது நேரத்தில் அவள் உயிர் பிரிந்தது. ஆத்திரத்தில் அறிவிழந்து விட்டோமே என அஞ்சிய அனந்தன்நாடார் ஊராருக்கும், போலீசாருக்கும் பயந்து எவரிடமும் சொல்லாமல் ஊரை விட்டு ஓடி தலைமறைவானார். கால் போன போக்கில் பயணமானவர் மலையாள (கேரளா) நாட்டிற்கு சென்றுவிட்டார்.

அவர் சென்ற பிறகு மறுநாள் பக்கத்து வீட்டினர் வந்து பார்க்கையில் பொன்னம்மை ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டனர். உடனே ஊரார்கள் ஒன்று கூடி பொன்னம்மையின் சடலத்தை எடுத்து வந்து பனங்காட்டு கடலோரத்திலுள்ள மந்தைக்காட்டில் புதைத்து விட்டனர். இந்த புதைகுழியின் அருகாமையில் ஊருக்கு பொதுவான குடிநீர் கிணறு ஒன்று உள்ளது. அக்கிணறு இன்றும் உள்ளது. அக்கிணற்றில் ஊர் பெண்கள் தண்ணீர் எடுத்துவரச் செல்வது வழக்கம். பொன்னமையின் இந்த அகால மரணத்தால் அவரது ஆவியானது சில இளம் பெண்களை தொந்தரவு செய்து, சாமி ஆடினதாக பெரியார்கள் இன்றும் கூறுகின்றனர். இதனால் அச்சம் கொண்ட ஊரார்கள் பொன்னம்மையின் ஆவியை சாந்தப்படுத்துவதற்காக சாவு பூஜை நடத்தி படையல் போட்டனர். இப்படையல் அவள் இறந்த நாளான மாசி மாதம் 20-ம் நாள் போடப்பட்டது. அவளது புதை குழிக்கரையில் படையல் வைக்கப்பட்டது. நாஞ்சில் நாட்டில் படையல் போடுவதை படுக்கை என்றும் சிறப்பு வழிபாடு என்றும் அழைப்பதுண்டு. அந்த வகையில் குமரி மேற்கு மாவட்டங்களில் பெரும்பாலும் படுக்கை என்றே அழைப்பர்.
பொன்னம்மைக்கு படுக்கை செய்து வழிபட்ட பின்னர் பயமின்றி பெண்களும், குழந்தைகளும் ஊரில் உலா வந்தனர். இதனிடையேஆண்டுகள் பல கடந்தாலும் அனந்தன்நாடார் ஆழ்மனதில் தனது மனைவி சாவுக்கு தான் காரணமாகிவிட்டோமே என்ற வருத்தம் இருந்தது. மீண்டும் சொந்த ஊரான பருத்திவிளை பனங்காட்டிற்கு வந்து மனைவியின் பூத உடல் என்னவாயிற்று என்று அறந்திட ஆர்வம் கொண்டு, ஒரு பண்டார வேடமணிந்து பனங்காட்டிற்கு வந்தார்.
உறவினர் ஒருவர் மூலம் நடந்ததை அறிந்துக் கொண்ட அனந்தன்நாடார், மனைவியின் சமாதிக்கு வருகிறார். சமாதியில் புற்று ஒன்று வளர்ந்திருந்ததையும், அதில் படுக்கை பூசைகள் செய்யப்பட்டதையும் கண்டு அங்கு ஏதோ தெய்வத்தன்மை நிலவுவதாக நம்பிய அவரும் சடங்குகளைச் செய்து, படுக்கை போட்டுவிட்டு திரும்பவும் கொல்லம் சென்றுவிட்டார்.
ஆண்டுகள் சில ஆன நிலையில் பொன்னம்மாள் சமாதியை யாரும் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் காலங்கள் சில கடந்த நிலையில் இந்த மண்டைக்காடு பகுதியில் காலரா, சின்னம்மை, பெரியம்மை போன்ற  நோய்களால் மக்கள் கடும் துன்பத்துக்கு ஆளாகினர். இந்த நோயின் தாக்கத்தை மந்திரவாதிகள் பேய், பிசாசு, இறந்து போனவர்களின் ஆவி என்று பலவாறு கூறி மக்களிடம் பணம் பறித்து வந்தனர். குறிப்பாக மந்தைக்காடு பகுதியில் இருந்த சுணை அருகே கணவனால் கோபத்தில் தாக்கப்பட்ட பெண் எதிர்பாராதவிதமாக மரணம் அடைந்தாள். அந்த பெண்ணை அவ்விடத்தில் அடக்கம் செய்திருந்தனர். அந்த பெண்ணின் ஆவி தான் காரணம் என்று கூறி நோயின் தாக்கத்தில் இருந்தவர்களிடம் பேய் விரட்டினேன் என்று கூறி பணம் மற்றும் கோழி, ஆடு முதலான பொருட்களை வாங்கிக்கொண்டு தங்களை மந்திரவாதிகள் வசதியாக்கிக் கொண்டனர்.

இவைகளைப் பற்றி கேள்வியுற்ற அவ்வழியாக பயணம் செய்த ஒரு மடாதிபதியின் சீடர் ஒருவர் மந்தைக்காட்டிற்கு விஜயம் செய்தார். சுணை(நீர் ஊற்று, தற்போது கிணறாக உள்ளது) அருகே வந்தார். 63  கோணங்களுடன் ஒரு சக்கரம் வரைந்து, தினமும் பூஜை செய்தார். அப்பகுதி மக்கள் அவ்விடத்தில் கூடினர். தம் தவ வலிமையால்  மக்களின் நோய்களைத் தீர்த்து வைத்தார். நீண்டகாலம் அங்கே தங்கியிருந்த சுவாமிஜி, மக்களின் நோய்களைத்  தீர்த்து வைத்ததுடன், சிறுவர்களை மகிழ்விக்க சித்து விளையாட்டுகளும் செய்து  காட்டினார். சாது ஸ்ரீசக்கரம் வைத்து வழிபட்ட இடத்தில் ஒரு புற்று வளர்ந்திருந்தது. ஒருமுறை  ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு, சிறுவர்கள் அவ்விடத்தில் கூடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். புல்லை மேய்ந்துகொண்டிருந்த ஓர் ஆடு, அங்கு  வளர்ந்திருந்த புற்றை மிதித்துவிட்டது.

உடனே புற்றிலிருந்து ரத்தம்  பீறிட்டது. அதிர்ந்துபோன சிறுவர்கள், புற்றை உதைத்ததால் ஆட்டின் காலில்  அடிபட்டு ரத்தம் வந்திருக்குமோ என்று நினைத்து, ஆட்டின் காலைப்  பார்த்தபோது, காயம் எதுவும்  இல்லை. புற்றிலிருந்துதான் ரத்தம் வருகிறது  என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட சிறுவர்கள், ஊர்ப் பெரியவர்களிடம் சென்று  கூறினார்கள். அவர்களும் புற்று இருந்த இடத்துக்கு வந்து, சிறுவர்கள்  கூறியது உண்மைதான் என்பதைப் புரிந்துகொண்டார்கள். மேலும், ஏதேனும் தெய்வக்  குற்றம் நிகழ்ந்துவிட்டதோ என்று அச்சப்பட்டார்கள். பின்னர் இத்தகவல் திருவிதாங்கூர் மன்னருக்கு தெரிய  வந்தது. பரிவாரங்களுடன் வந்து பார்த்த மன்னரும் அதிர்ச்சி அடைந்தார். அப்போது ஒரு பெண் குரலாக அசரிரீ கேட்டது ‘‘புற்றிலிருந்து வடியும் ரத்தம் நிற்கவேண்டுமானால், புற்றில்  களபம் (அரைத்த சந்தனம்) சாத்தி வழிபடவேண்டும்’’ என்று கூறியது. மறுநாள் மன்னர்,  அமைச்சர், காவலர்கள் மற்றும் அரண்மனை ஜோதிடர்களையும் அழைத்துக்கொண்டு மண்டைக்காடு வந்து,  புற்றின் முன்பு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். பின்னர், புற்றில் சந்தனம் சாத்தி வழிபட்டார். மன்னர் களபம்  சாத்தி வழிபட்டதும் புற்றில் ரத்தம் வடிவது நின்றது. பிறகு புற்றைச் சுற்றிலும் ஓலை வேயப்பட்டு நித்தமும்  விளக்கேற்றி வழிபாடு நடத்தப்பட்டது.

மக்களின்  பிணி தீர்க்க வந்த கேரளத்து சாது, மண்டைக்காடு  பகவதி அம்மன் கோயிலுக்கு எதிரே இடது  புறத்தில் ஆழமாக ஒரு குழி தோண்டினார். பின்னர், அங்கு  விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை அழைத்து, ‘‘நான் இந்தக் குழியில் தியானம்  செய்யப்போகிறேன். நான் தியானத்தில் ஆழ்ந்ததும், இந்தக் குழியை மண்ணால்  மூடிவிட்டு மறுநாள் காலையில் வந்து பாருங்கள்’’ என்று கூறினார். சிறுவர்கள், சாது கூறியபடியே, அவர் தியானத்தில் ஆழ்ந்ததும் மண்ணைக் கொட்டி  குழியை நிரப்பினர். சிறுவர்கள் நடந்ததை ஊர்மக்களிடம்  தெரிவித்தனர். மறுநாள் சிறுவர்கள் சுட்டிக்காட்டிய இடத்தில் மண்ணைத் தோண்டிப் பார்த்தபோது,  குழிக்குள் சாது தியானத்தில் ஆழ்ந்ததுபோல் இருந்தார்.

அவரிடம் எந்த ஒரு  சலனமும் இல்லை. அவர் சமாதி அடைந்துவிட்டார் என்பதை உணர்ந்த மக்கள், குழியின் மேல் பலகை வைத்து அதன் மேல் மண்ணைக் கொட்டி,  குழியை மூடிவிட்டனர்.  மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு எதிரில் இப்போது அமைந்திருக்கும்  பைரவர் சந்நதிதான், சாதுவின் சமாதி என்று கூறுகிறார்கள். மண்டைக்காடு  பகவதிக்கும், பின்னர் சாதுவின் சமாதி பீடத்திலும் நைவேத்தியம்  செய்கிறார்கள். ஓலைக்குடிசையாக இருந்த இந்தக் கோயில், வழியாக கேரள  மாநிலம் கொல்லம் உள்ளிட்ட  இடங்களிலிருந்து வியாபாரிகள் மாட்டுவண்டியில் தேங்காய், புளி போன்ற  பொருள்களை கோட்டாறு சந்தைக்கு விற்பனைக்குக்  கொண்டுசெல்வது வழக்கம். ஒருநாள் கொல்லத்தைச் சேர்ந்த வியாபாரி, தன்  வியாபாரத்தை முடித்துவிட்டு மாட்டுவண்டியில் மண்டைக்காடு வழியாக  வந்துகொண்டிருந்தார்.

அப்போது இரவாகிவிட்டது களைப்படைந்த வியாபாரி,  மண்டைக்காடு கோயில் அருகே ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தவரிடம், ‘‘பசி  வயிற்றைக் கிள்ளுகிறது. இந்தப் பகுதியில் ஊணு களிக்க கடை ஏதும் உண்டா?’’ என்று  கேட்டார். அந்த நபர், விளக்கொளியில் மிளிர்ந்த  மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலைச் சுட்டிக்காட்டி, ``அதோ வெளிச்சம்  தெரிகிறதே அங்கு சென்றால் உணவு கிடைக்கும்’’ என்று கேலியாகச் சொன்னார்.  அதனை நம்பிய வியாபாரி, கோயிலுக்குள் நுழைந்தார். அங்கு  வியாபாரி எதிர்பார்த்தபடி கோயில் விடுதியாகக் காட்சியளித்தது. அங்கு  ஒரு மூதாட்டி இருந்தார். அவரிடம், ``அம்மச்சி சாப்பிட ஏதும் கிட்டுமா’’ என்று கேட்கவும், இலையில் அறுசுவை உணவைப் படைத்து வழங்கினார்  அந்த மூதாட்டி.

அத்துடன் நிற்காத மூதாட்டி வண்டி  மாடுகளுக்குத் தண்ணீரும் தீவனமும் தயாராக இருப்பதாகக் கூறினார். காளை  மாடுகளுக்கு உணவு கொடுத்த வியாபாரி, நள்ளிரவு ஆகிவிட்டதால் அங்கேயே  தங்கினார். காலையில்  கண்விழித்துப் பார்த்தபோது, மூதாட்டி அங்கு இல்லை. இரவு வீடு இருந்த இடத்தில் கோயில் இருப்பதைக் கண்டார். இரவு தனக்கு உணவளித்தது  பகவதி அம்மை தான் என்பதை உணர்ந்தார். நெஞ்சுருகி அம்மன் பாதத்தில்  விழுந்து வணங்கினார். வியாபாரத்தின் மூலம் கிடைத்த பணத்தின் ஒரு பகுதியை  துணியில் கட்டி கோயில் திருப்பணிக்கான காணிக்கையாக வைத்தார். கொல்லத்துக்குச் சென்று மண்டைக்காட்டில் நடந்த அதிசயத்தை மக்களிடம் சொன்னதுடன், அமுது படைத்த பகவதி அம்மனுக்கு பொங்கல் சமைத்து படையல்  செய்வதற்காக, ஆண்டுதோறும் இருமுடி கட்டி மண்டைக்காட்டுக்கு வரத்  தொடங்கினர்.

இருமுடியில் ஒருமுடியில் பொங்கலிடத் தேவையான பொருட்களும்  மற்றொரு முடியில் பூஜைக்குத் தேவையான பொருட்களும் இருக்கும். ‘‘அம்மே சரணம்,  தேவி சரணம், மண்டைக்காட்டம்மே சரணம், சரணம் தா தேவி, சரணம் தா தேவி  பொன்னம்மே’’ என்று சரண கோஷம் ஒலிக்க, கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள்  இருமுடி சுமந்து பக்திப் பரவசத்துடன் மண்டைக்காட்டுக்கு ஆண்டுதோறும்  வருகிறார்கள். இக்கோயில் நாகர்கோவிலிலிருந்து  சுமார் 17 கி.மீ  தொலைவில் அமைந்திருக்கிறது. மண்டைக்காடு பகவதி அம்மன்  கோயில். குளச்சலில் இருந்து மூன்று கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.  பெண்கள் 41 நாட்கள் விரதமிருந்து, இருமுடி கட்டி இந்தக் கோயிலுக்கு  வருவதால் ‘பெண்களின் சபரிமலை’ என்று இக்கோயில் அழைக்கப்படுகிறது...

சு.இளம் கலைமாறன்

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

குழந்தை வரம் அருள்வாள்பாட்டாங்கரை தில்லை காளி.!!

இளையநயினார்குளம், ராதாபுரம், நெல்லை

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே அமைந்துள்ளது இளையநயினார்குளம். பருவமழை பெய்தால் பசுமை தங்கும் அழகான சிற்றூர். இவ்வூரின் மேற்கு எல்லையில் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார் பாட்டாங்கரை தில்லை மாகாளியம்மன். சுமார் நாநூறு ஆண்டுகளுக்கு முன்பு இளையநயினார்குளம் ஊரில் வாழ்ந்து வந்த மாடக்கோனார், மாடத்தி தம்பதியருக்கு மணம் முடிந்து ஐந்து ஆண்டுகள் கடந்தும் மழலை செல்வம் கிட்டவில்லை. அந்த காலத்தில் முதல் குழந்தை பாக்யம் இல்லாமல் போனால் முதல் தாரத்தின் அனுமதியோடு அவளது தங்கையோ அல்லது வேறு ெபண்ணையோ இரண்டாவதாக திருமணம் செய்வது உண்டு. அந்த வகையில் மாடக்கோனாரும், தனக்கு வாரிசு வேண்டும் என்ற எண்ணத்தில் மனைவி மாடத்தியின் அனுமதியோடு இரண்டாவதாக வள்ளியம்மாளை திருமணம் செய்து கொண்டார். இரு தாரம் மணந்தும் மாடக்கோனாருக்கு குழந்தை பாக்யம் கிடைக்கவில்லை.
உறவினர்கள் சொல்லும் கோயிலுக்கெல்லாம் தனது இரு தாரங்களோடும் சென்று வழிபட்டு வந்தார்.ஒரு நாள் அந்த ஊருக்கு வந்த கோடங்கி, மாடக்கோனாரிடம் விசுவாமித்திரர் சிவ பூஜை செய்யும் விஜயாபதி சென்று சிவனையும், எல்லையில் நின்றாளும் தில்லைக்காரியிடமும் உமது குறையை சொல்லி கையெடுத்து வணங்கி வாரும் மறு ஆண்டு பரம்பரை பேர் சொல்ல, பாங்குடனே வந்து பிறக்கும் பிள்ளை என்று கூறிச்சென்றான். கோடங்கியின் வாக்கை தெய்வ வாக்காக எண்ணிய மாடக்கோனார், தனது இரு மனைவியர்களுடன் ஒரு அமாவாசை தினத்தன்று விஜயாபதி சென்றார். மூவரும் அங்குள்ள கடலில் நீராடி கயிலை நாதனான மகாலிங்க சுவாமி உடனுறை அகிலாண்டேஸ்வரி அம்பாளையும் தரிசனம் செய்தனர். பின்னர் விசுவாமித்திரரையும் வணங்கினர். அடுத்து தில்லை காளி அம்பாள் சந்நதிக்கு வந்தனர்.

தில்லை மாகாளி அம்மனை வணங்கி விட்டு. அவ்விடத்தில் அமர்ந்து தாங்கள் கொண்டு வந்த உணவை உண்டனர். சில நிமிட ஓய்வுக்கு பின் தாங்கள் கொண்டு வந்த பச்சரிசி மாவையும் கருப்பட்டியும் சேர்த்து சாப்பிட்டார்கள் ....மீதியிருந்த பச்சரிசி மாவையும் கருப்பட்டியும் அங்குள்ள காரம் செடி அருகே தூக்குசட்டியில் மூடி வைத்தனர். மாடக்கோனார் குரல் கொடுத்தார்.‘‘கிளம்புவோம், அந்தி கருக்கல் முன்னாடி ஊரு போய் சேருவோம். பொறவு ராவாயிட்டுண்ணா அமாவாசை இருட்டுல நடக்க முடியாது’’ என்றார்.உடனே இளைய நயினார்குளம் நோக்கி மூவரும் புறப்பட்டார்கள்.  விஜயாபதி கொத்தங்குளம் அடுத்த அரசன்குளம் கடந்து வரும் வேளையிலே அந்திசாயும் நேரம் நெருங்கியது.உடனே மாடக் கோனார், மாடத்தி அம்மாளிடம், ‘‘ஏட்டி, வாய் நம, நமன்னு வருது, அந்த பச்சரிமாவும், கருப்பட்டியும் மீதியிருந்தில்லா அது கொண்டா...’’என்று கேட்க, வள்ளியம்மாள் பதிலுரைத்தாள், ‘‘ஏங்க, அத நான் அங்குள்ள உடமரத்து மூட்டுலேயே மறந்து வைச்சிட்டு வந்துட்டேனே, சரி, நான் போயி எடுத்துக் கொண்டாரேன். என்று சொல்ல,உடனே மாட கோனார் ‘‘அங்கே விட்டது அங்கேயே இருக்கட்டும், இருட்ட முன்னாடி வீடு போயி சேருவோம்..’’ என்றார்.
உடனே வள்ளியம்மாள், ஆத்தாடி, மாவு இருந்தது, என் பித்தாளை தூக்குச்சட்டியில்லா அத விட முடியுமா, என் அப்பனோட பிறந்த அத்தை எடுத்து கொடுத்தது சும்மா விட முடியுமா நான் ஒரு ஓட்டத்துல போயி எடுத்திட்டு வாரேன்’’ என்று கூறிக்கொண்டு, மாலையிட்ட மணாளன் மாடக்கோனார் பேச்சைக் கேட்காமல் வள்ளியம்மாள் வேகமாகச் சென்றாள்.

விஜயாபதி வந்தாள் தில்லை மாகாளி சந்நதியில் நின்றாள். தில்லைக்காளி மானிட ரூபம் கொண்டு பார்க்க. இமைக்கொட்டாமல் அதைக்கண்டாள் வள்ளியம்மாள். மையான அமைதி நிலவியது. மனம் படபடத்தது. பட்சிகள் சத்தம் பாவை அவளை பயத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது.  தில்லை காளி சந்நதியை விட்டு, அஞ்சி நடுநடுங்கி திரும்பி பார்க்காமல் வேகமாக நடைப்போட்டாள், மாடக்கோனார், மாடத்தியிடம் வந்தாள். காரணம் கேட்டனர். கண்கள் இமைத்ததே தவிர வார்த்தைகள் வரவில்லை வள்ளியம்மாளிடம்  இருந்து. வீட்டுக்கு அழைத்து வந்தனர். யாரிடமும் பேசவில்லை, உண்ண வில்லை, நீர் கூட அருந்தவில்லை தன்னந்தனியாகப் பித்து பிடித்தவர் போல் இருந்தாள் வள்ளியம்மாள். என்ன செய்வதென்று அறியாமல் இருந்தார்கள் மாட கோனாரும் மாடத்தி அம்மாளும், நாட்கள் இரண்டு கடந்து விட, மூன்றாவது நாள் மாடகோனார், தனது நெருங்கிய நண்பரான பெருமாள்தேவரிடம் நடந்ததை கூறினார்.

மறுநாள் பெருமாள் தேவரும், மாடக்கோனாரும் ராதாபுரம் சென்றனர். நித்தியகல்யாணி அம்மன் கோயில் தெப்பக்குளத்தின் கரையில் இருந்து குறி சொல்லும் பார்வதி என்பவரிடம் வள்ளியம்மாளின் நிலை குறித்து கேட்டனர்.  ‘‘ஐயா, கோனாரே, உம்ம பொஞ்சாதியோட வந்திருப்பது ஆத்தா தில்லைமாகாளி  தான்.’’ என்று சொல்லி முடிக்கும் முன்னே குறி சொன்ன பார்வதியின் விழிகள் வித்தியாசம் காட்டியது. அமைதியாக குறி உரைத்தவள். ஆதாளி போட்டாள்.‘‘மாட கோனார், உன் வீட்டுக்கு வந்திருக்கிறது நான் தான். எனக்கு ஊருக்கு எல்லையிலே நிலையம் கொடுத்து பூஜித்து வா. நான் உனக்கு வேண்டும் வரம் அளிப்பேன். என்னை வணங்கி வரும் யாவருக்கும் வேண்டியதை கொடுத்து வாழ வைப்பேன். என்னை நம்பும் பேருக்கு நல்வாழ்வு அளிப்பேன்.’’ என்றுரைத்தாள். சத்தம் குறைந்தது. பின்னால் இருந்த தெப்பக்குளக்கரை சுவரில் சாய்ந்து இருந்தாள். தண்ணீர் கொடுத்தனர் சுற்றி நின்றவர்கள். உடனே இருவரும் இளைய நயினார்குளம் திரும்பினர்.

இளைய நயினார்குளம் ஊரின் மேற்கு பக்கம் இருந்த பாடங்குளத்தின் கரையில் வடக்கு பக்கம் கிழக்கு நோக்கி தில்லை காளிக்கு நிலையம் இட்டு ஓலை கூரையில் கோயில் அமைத்தனர்.மறு வருடம் மாடக்கோனார் மாடத்திக்கு ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து வள்ளியம்மாள், மாடத்தி இருவரும் பிள்ளைகள் பெற்றனர். குடும்பம் தழைத்தோங்கியது. கோயிலில் மூலஸ்தானத்தில் தில்லை மாகாளி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். பரிவார தெய்வங்களாக வைரவர், சுடலைமாடன் பேச்சியம்மன் ்அருள் பாலிக்கின்றனர். பாட்டாங்குளத்தின் கரையில் கோயில் கொண்டமையால் இத்தலத்து தில்லைக்காளி பாட்டாங்கரையாள் என அழைக்கப்பட்டாள். பாட்டாங்கரை இசக்கி என்றும் இத்தல அம்மன் அழைக்கப்படுகிறாள்.இளைய நயினார்குளம் ஊரில் குடும்பத்தில் பிறக்கும் மூத்த பிள்ளைகளுக்கு தில்லை என்ற பெயர் சூட்டுகிறார்கள். காரணம் எல்லாம் அந்த பாட்டாங்கரையாள் அருள் தான் என்கின்றனர். இந்த ஊரில் கொடுக்கல் வாங்கல், சத்தியம் செய்தல், என எந்த பிரச்னைக்கும் நடுவராக பாட்டாங்கரையாளையே அழைக்கிறார்கள். உண்மையிலேயே பாட்டாங்கரையா என அழைத்தால் மறு குரல் வருகிறது நான் இருக்கிறேன் என்பதை சொல்லாமல் சொல்லும்படி பல்லியோ, பறவைகளோ எழுப்பும் குரல் மூலமே.ஆண்டுக்கு குறைந்தது ஆறு கொடைவிழா காண்கிறாள் இந்த தாய் பாட்டாங்கரையாள். காரணம் எல்லாம் நேர்ந்துக் கொண்டது தான். தனக்கு எது தேவையோ அது நடந்தால் கொடை விழா நடத்துகிறோம் என வேண்டிக்கொள்கிறார்கள். அது நடந்ததும் வேண்டிக் கொண்டதுபடி கொடை விழா நடத்துகிறார்கள்...

சு. இளம் கலைமாறன்

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

அகமகிழ அருள்வார்அழியாபதி ஈஸ்வரர்.!!

நெல்லை வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி பாய்ந்தோடும் திருநெல்வேலி மாநகரத்தில் நெல்லுக்கு வேலியிட்டு காத்த எம்பெருமான் காந்திமதி உடனுறை நெல்லையப்பர் அரசாளும், நெல்லையில் குறுக்குத்துறை முருகன் ஆலயத்திற்கு அருகில் கருப்பூந்துறையில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ சிவகாமசுந்தரி உடனுறை அழியா பதிஈஸ்வரர் தன்னை அடிபணியும் அன்பர்களுக்கு மங்கா புகழும் அழியா செல்வமும் தந்தருள்கிறார். இத்தலம் கோரக்கர் சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஊழ் வினை அகற்றும் ஸ்தலமாகும்.

அழியா பதி ஈசன் என்ற நாமம் கொண்ட உலகிலேயே ஒரே சிவன் கோயில் இது மட்டும் தான் உள்ளது. இத்திருக்கோயில் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்டது. தட்சன் நடத்திய யாகத்தின் போது ஈசனை அழைக்காமலும் அவருக்குக் கொடுக்க வேண்டிய அவில்பாகம் கொடுக்காமலும் அவமதித்தான் அதனால் சினம் கொண்டு வெகுண்டெழுந்த ஈசன், வீரபத்திரரை அவதரிக்கச் செய்து தட்சனின் தலையை கொய்து விட்டு தாமிரபரணி கரையோரம் உள்ள மேலநத்தம் என்ற இடத்தில் உக்கிரமாக வந்து அமர்ந்தார். அவருடைய உக்கிரமான பார்வையின் காரணமாக நத்தம் பகுதிக்கு அருகில் உள்ள கரிக்காதோப்பு கருங்காடு வரையிலான வயல் வெளிகள் யாவும் தீக்கிரையானது அதனால் கரிக்காதோப்பு, கருங்காடு எனவும் இன்றுவரை அழைக்கப்படுகிறது

ஈசனின் உக்கிரமான பார்வையின் காரணத்தினால் வயல் பகுதிகள் அனைத்தும் தீக்கிரையாகி பஞ்சம் ஏற்பட்டது. அப்போது அவ்வழியாக வந்த கோரக்க மகரிஷி ஈசனை வழிபட முயன்றார் ஈசன் அக்னிஸ்வரராக இருப்பதை கண்டு தனது ஞான திருஷ்டியின் மூலம் அவருடைய உக்கிரமான காரணத்தை அறிந்தார். உடனடியாக அக்கினீஸ்வரரை சாந்த படுத்துவதற்காக ஈசன் அமர்ந்திருந்த மண்டபத்தின் நேர் எதிரே கிழக்கு முகமாக கோரக்க சித்தர் தலைமையில் பௌர்ணமி அன்று கூடிய ரிஷிகள் ஒன்று சேர்ந்து யாகம் வளர்த்து பூஜைகள் செய்து ஈசனின் சினம் தணிய வைத்து, அவ்விடமே லிங்க வடிவில் பிரதிஷ்டை செய்தனர். அதன் பின் நெடுங்காலம் கடந்த நிலையில் பெரு வெள்ளம் வந்ததால் சுற்றுவட்டார பகுதிகள் நிலைகுலைந்து போக நெல்லையம்பலத்தை அழியாமல் காத்தருள் புரிந்தார் இத்தல ஈசன். அன்று முதல் இவர் அழியா பதி ஈஸ்வரர் என்ற நாமத்தில் பக்தர்கள் வணங்கி வந்தனர்.
நெல்லையம்பதியை அழியாமல் காத்த பதி அழியாபதி ஈசன் அதனால் நம்மையும் அழிவிலிருந்து காப்பார். 
தாமிரபரணி நதிக்கரையோரம் மேற்கு பார்க்க அக்னீஸ்வரர் ஆகவும் கிழக்குப் பார்க்க அழியா பதி ஈஸ்வரராகவும்  எதிர் எதிரே அமையப்பெற்ற சிறப்புமிக்க ஸ்தலம் மேலும் தாமிரபரணி தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பாய்வதால் உத்திரவாகினி ஸ்தலம் எனவும் இத்தலம் பெயர் பெற்றது.
நெல்லையம்பதியை அழியாமல் பாதுகாக்க போகர், புலிப்பாணி, கருவூர்சித்தர் மூவரும் கோரக்கர் உடன் இணைந்து அழியா பதி ஈஸ்வரனை பிரதிஷ்டை செய்துள்ளனர். (
அழியா பதி ஈஸ்வரனுக்கு வலதுபக்கத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் மூன்று அடுக்கு தீபங்களில் மேல் ஸ்தானத்தில் உள்ள இரு தீபங்கள் மட்டும் ஈசன் விடும் மூச்சுக் காற்றில் இடைவிடாமல் அசைவதை காணலாம்.
ஈஸ்வரனுக்கு வலதுபுறம் தனி சந்நதியில் எழுந்தருளியுள்ள அன்னை சிவகாம சுந்தரி என்ற சவுந்தரிய வள்ளி கருவறையின் அமைப்பு தெற்கு நோக்கியும், ஐயனை நோக்கி தலை சாய்ந்த வண்ணமும் பார்வை ஐயனின் மீதும், அடியார்களின் செவிமடுத்து கேட்டு அவரிடம் எடுத்துரைப்பது போலவும் அமையப் பெற்றுள்ளது. அம்பாள் நின்ற வண்ணம் அருட்பாலிக்கிறாள். சித்தர்கள் அடிக்கடி வாசம் செய்யும் ஸ்தலமாக இவ்வாலயம் உள்ளது கோரக்க சித்தரின் பீடமும் ஆலயத்தின் உள்ளே அமைந்துள்ளது. மேலும் இவ்வாலயத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான், பைரவர், சண்டிகேஸ்வரர் சாஸ்தா ஆகிய தெய்வங்கள் தனித்தனியாக சந்நதி கொண்டு அருட்பாலிக்கின்றன.
இவ்வாலயத்தில் சித்திரை முதல் நாள், ஆடிபூரம், ஐப்பசி திருக்கல்யாணம், தை மாதப்பிறப்பு, திருக்கார்த்திகை, மாசி மகா சிவராத்திரி ஆகிய திருவிழாக்கள் நடைபெறுகிறது. மாதந்தோறும் தமிழ் மாத பிறப்பு, பிரதோஷம், அமாவாசை, தேய்பிறை, அஷ்டமி ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள் பூஜைகள் நடைபெறுகிறது. ஞாயிறுதோறும் ருத்ர ஜபம், திருவாசகம், முற்றோதுதல் உழவாரப்பணி நடைபெறுகிறது. வெள்ளிதோறும் கோபூஜை நடைபெறுகிறது.
இத்தகைய சிறப்பு பெற்ற ஈசனின் ஆலயத்திற்கு அவசியம் பிரார்த்திக்க அன்புடன் அழைக்கிறோம்...

-கண்ணன், மேலநத்தம்

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

உன்னத வாழ்வளிப்பாள்உத்தமி அம்மன்.!!

நெடுவயல், கடையநல்லூர், திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ளது நெடுவயல். இவ்வூரில் அமைந்துள்ளது உத்தமி அம்மன் கோயில்.
தென்காசியிலிருந்து தெற்கே 10 கி.மீ தொலைவில் உள்ளது அச்சன்புதூர் கிராமம். இங்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து வந்த அக்கா தங்கை இருவரும் அடுத்த, அடுத்த ஊர்களில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டனர். இதில் அக்காவிற்கு குழந்தை இ்ல்லை. தங்கைக்கு ஆறு குழந்தைகள். தங்கையின் குழந்தைகள் மேல் அதிகம் பாசம் வைத்திருந்த அக்கா, வாரம் தவறாமல் செவ்வாய் கிழமை தோறும் தங்கை வீட்டுக்கு வகை, வகையாய் பலகாரம் செய்து கொண்டு சென்று குழந்தைகளுக்கு ஊட்டிவிட்டு மகிழ்ச்சியோடு தன் வீட்டிற்கு வருவாள். இது சில மாதங்கள் தொடர தங்கையின் வீட்டு அருகே வசித்து வந்த மூதாட்டி ஒருவர் ‘‘புள்ள இல்லாத உங்க அக்கா மலடி வந்து உம்புள்ளங்கள கொஞ்சுறதும், ஊட்டுறதும் உனக்கு வேணுமுன்னா நல்லா இருக்கலாம். ஆனா குழந்தைங்களுக்கு கண்ணு விழுந்திரும். அதனாலதான் நீ என்ன ஊட்டம் கொடுத்தாலும் உன் புள்ளங்க சத்து புடிக்காம இருக்குதுங்க’’ என்று கூற, மனம் மாறினாள் தங்கை.

அந்த வாரம் செவ்வாய் கிழமை வந்தது. அக்கா வரும் நேரமாயிற்றே என்று எண்ணிய தங்கை, தனது குழந்தைகளுக்கு உணவு கொடுத்து, கோழி அடைக்கும் கூடைக்குள் குழந்தைகளை அடைத்து விட்டாள். அதிரசம், வடை, முருக்கு உள்ளிட்ட பலகாரங்களோடு அக்கா வந்து, குழந்தைகளை எங்கே என்று தங்கையிடம் கேட்க, இரண்டு தெரு தள்ளியிருக்கும் உன் கொழுந்தனாரு(தனது கணவன்) சொந்தத்தில உள்ள பெண் வந்து குழந்தைகளை அழைத்து சென்றிருப்பதாக கூறிவிடுகிறாள். மாலை வரை காத்திருந்த அக்கா, ‘‘சரி, பொழுது சாய்ந்திட்டு, புள்ளைங்ககிட்ட இந்த பலகாரங்கள கொடு’’ என்று  கூறி, தான் கொண்டு வந்த பலகாரங்களை தங்கையிடம் கொடுத்துவிட்டு சென்று விடுகிறாள். அக்கா சென்றதும் தங்கை குழந்தைகளை அடைத்து வைத்திருந்த கூட்டை திறந்து பார்க்கிறாள். அங்கே குழந்தைகள் உயிரற்று படுத்த நிலையில் இருந்தன. கத்தினாள், கதறினாள். அக்கா வை தேடி ஓடினாள். நடந்ததை கூறினாள். உடனே தங்கையோடு விரைந்து வந்த அக்கா, தண்ணீர் தெளித்து, தான் கொண்டு வந்த பிரம்பால் லேசாக தட்ட, குழந்தைகள், தூங்கி விழித்தது போல் எழுந்து இருந்தன.
தவறு இழைத்த தங்கையை மன்னித்து குழந்தைகளுக்கு உயிர் கொடுத்த உத்தமியே என்று அக்காவின் கையை பிடித்து கண்கலங்கி நன்றி தெரிவித்தாள் தங்கை.

இது நடந்து முன்னூறு ஆண்டுகளுக்கு பின் அப்பகுதியில் வேளாண்மை செய்வதற்காக, உழவர் ஒருநாள் உழுது கொண்டிருக்கும் போது அதே வயலின் வடகிழக்கு மூலையில் உழும்போது மாடு இரண்டும் நகரவே இல்லை, உழவர் அடித்தும் மாடுகள் நகராதது கண்டு, மண் வெட்டியோடு வந்து அந்த இடத்தை தோண்டி பார்க்கும் போது அமர்ந்த நிலையில் அழகான அம்மன் சிலை இருந்தது. அந்த சிலையை எடுத்த உழவர். தனது வயிலின் ஒரு பகுதியில் ஓலை கீற்றால் கூரை அமைத்து கோயில் கட்டினார். அன்றிரவு அவரது கனவில் தோன்றிய அம்மன் தான் யார் என்பதையும், தனது வாழ்வில் நடந்த சம்பவங்களையும் கூறியது. அதன்பின்னர் இக்கோயில் அம்மன் உத்தமி அம்மன் என்ற பெயரோடு அழைக்கப்பட்டாள். அக்கா முப்பிடாதி என்றும் தங்கை வடக்கு வா செல்வி என்றும் கூறப்படுகிறது.
நாளடைவில் ஊரார்கள் ஒன்று கூடி கோயில் பெரிதாக கட்டினர். நித்ய பூஜைக்காக பூசாரி ஒருவரையும் நியமித்திருந்தனர். ஆற்காடு நவாப் ஆட்சியின் காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடி வாரப்பகுதியிலுள்ள வேளாண்மை நிலங்களை ஒருங்கே இணைக்கும் பொருட்டு முடிவு செய்த நவாப், இந்த கோயிலை இடிக்க திட்டமிட்டார். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையறிந்த நவாப் நாளை நானே வருகிறேன். எவன் எதிர்க்கிறான் பார்ப்போம் என்று கூறி, மறுநாள் கோயிலுக்கு படை வீரர்களுடன் வருகிறார்.
நவாப் முன்னிலையில் வீரர்கள் நிற்க, வெளியூரைச் சேர்ந்த கூலியாட்கள் கோயிலை இடிக்க முற்படுகின்றனர். அப்போது கோயில் பூசாரியும், நிர்வாகியும் ஓடிச்சென்று நவாப்பிடம், கோயிலை இடிக்க வேண்டாம் என்று மன்றாடினர். அதற்கு செவி சாய்க்காமல் நவாப் இடிக்க உத்தரவிட்டார். ஒருவர் முதலில் இடிக்க முயல்கையில் சுவரில் கீறல் விழுந்த இடத்திலிருந்து ரத்தம் கொட்டியது. அந்த நேரம் ஒரு பெண்ணின் குலவைச்சத்தம் ஓங்கி ஒலித்தது. அதுவே மறுவிநாடி ஒப்பாரி சத்தம் ஆனது. மீறி இடிக்க முற்படும்போது நவாப் மற்றும் அவரது வீரர்கள், கூலியாட்கள் என அங்கே இருந்த முப்பதுக்கும் மேற்பட்டோருக்கு அந்த நிமிடமே கண் பார்வை தெரியாமல் தவித்தனர்.
உடனே கோயில் இடிப்பு பணியை நிறுத்த உத்தரவிட்டார் நவாப், பூசாரியை அழைத்து பேசினார். பூசாரியின் வேண்டுதலுக்குப்பின் அவர்கள் கண்பார்வை பெற்றனர். அதன் பின்னர் பேசிய நவாப், பூசாரியிடம் கோயிலுக்கு என்ன வேண்டும் கேள் என்றார். அப்போது பூசாரி கோயிலுக்கு விளக்கு எரிக்க எண்ணை வேண்டும் என்றார். அதன்படி நவாப் எண்ணையை தானமாக அளித்து வந்தார். நாளடைவில் இந்த கோயிலுக்கு வடக்கே குடியிருப்புகள் தோன்றின. அங்கே உருவாக்கப்பட்ட கோயில் புதுவீட்டம்மன் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இது தங்கை கோயிலாகவும், ஊருக்கே தெற்கே உள்ள உத்தமி அம்மன் கோயில் அக்கா கோயிலாகவும் சொல்லப்படுகிறது. முப்பிடாதி அம்மன் தான் உத்தமி அம்மனாகவும், செல்வி அம்மனே புதுவீட்டம்மனாகவும் இருப்பதாக கூறுகின்றனர்.

உத்தமி அம்மனுக்கு தை மாதம் முதல் செவ்வாய் கொடியேற்றி, இரண்டாவது செவ்வாய் திருவிழா நடக்கிறது. 9 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் போது புதுவீட்டம்மன் சப்பரத்தில் எழுந்தருளி, அக்காவிடம் மன்னிப்பு கோரும் பொருட்டு உத்தமி அம்மனை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது பார்க்கும் பக்தர்களை பரவசப்படுத்துகிறது. விழாவை ஐந்து சமுதாயத்தினர் முன்னின்று நடத்துகின்றனர். நெடுவயல், அச்சன்புதூர் கிராம மக்களின் குலத்தெய்வமாக உத்தமி அம்மன் திகழ்கிறாள். உள்ளம் உருகி வழிபடும் அடியவர்களுக்கு உயர்வான வாழ்வு அளிக்கிறாள் உத்தமி அம்மன். இக்கோயில் கடையநல்லூரிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது...

சு.இளம் கலைமாறன்

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

நாக தோஷம் நீக்கும் நாகம்மன்.!!

சூலக்கரை, விருதுநகர்

விருதுநகர் அருகே சூலக்கரை கிராமத்தில் உள்ள வீரபெருமாள் கோயில் வளாகத்தில் அமைந்திருக்கும் நாகம்மன். நாக தோஷம் நீக்கி நல்லருள் தருகிறாள்.
சுமார் நாநூறு ஆண்டுகளுக்கு முன்பு சூலக்கரை கிராமத்தில் அந்தனர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்தனர். தங்களது நிலங்களில் வேலை செய்யும் பொருட்டு அருகேயுள்ள கிராமங்களை சேர்ந்தவர்களை வரவழைத்து தங்க இடம் கொடுத்து வேலை செய்ய வைத்தனர். இவ்வாறு வந்தவர்களில் விஸ்வகர்மா சமூகத்தை சேர்ந்த இரண்டு குடும்பத்தினரும் இவ்வூரில் வாழ்ந்து வந்தனர். அந்த குடும்பத்தை சேர்ந்த முனீஸ்வரன் ஆசாரி, உறவுப்பெண் மாரியம்மாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களது இல்லற வாழ்வு சிறப்புற்று இருந்தது. மாரியம்மா கர்ப்பமுற்றாள். ஏழு மாத கர்ப்பினியாக மாரியம்மா இருந்தபோது ஒரு நாள் காலை வயல் வெளிக்கு சென்ற முனீஸ்வரன் வரப்பு மேட்டில் நல்ல பாம்பை கண்டார்.
அவரது காலடி சத்தம் கேட்ட அந்த பாம்பு அவ்விடம் விட்டு நகர்ந்தது. இருப்பினும் கண்ட பாம்பை அடிக்காமல் விடக்கூடாது என்றெண்ணிய முனீஸ்வரன், தனது பின் இடுப்பில் சொருகியிருந்த அரிவாளை எடுத்து பாம்பின் நடு கண்டத்தில் வெட்டினார். வெட்டுப்பட்ட பாம்பு பாதி உடலோடு புதருக்குள் சென்று பதுங்கியது.
துடித்த கண்டம் பகுதி சற்று நேரத்தில் உயிரற்று போனது. மாரியம்மாள் குழந்தை பெற்றாள். அந்த குழந்தை பெண் தலையோடும் பாம்பு உடலோடும் இருந்தது. அப்போது தான் முனீஸ்வரன் தான் செய்த தவறை மனைவியிடத்தில் கூறினார்.
குழந்தை பிறந்த நாற்பத்தியோராவது நாள் நாகம் தீண்டி முனீஸ்வரன் இறந்தார். கணவன் இறந்த பின் மாரியம்மா தோட்ட காடுகளுக்கும். வயல்களுக்கும் வேலைக்கு சென்று வந்தாள். நாகத்தை பெற்றெடுத்ததால் அவளை நாகத்தின் அம்மா என்று அப்பகுதியினர் அழைத்தனர். அதுவே நாளடைவில் நாகம்மா என பெயராயிற்று.

நாகம்மா கடைக்கு சென்றாலும், தண்ணீர் எடுக்க கிணற்றுக்கு சென்றாலும், குழந்தையைப்போல நாக குழந்தை அவள் பின்னாலே செல்லுமாம். ‘‘நான் வரும் வரைக்கும் வீட்டுல  இருக்கணும்’’ என்று நாகம்மா கட்டளை இட்டு சென்றாலும், தாயின் வருகை தாமதமானால் பதிவாக செல்லும் இடங்களுக்கு சென்று பார்த்து விட்டு வீட்டுக்கு வருமாம் நாக குழந்தை. இதை ஊரார்கள் நாகம்மாளிடம் உன் குழந்தை இப்ப தான் தேடி வந்துச்சு என்று கூறுவார்களாம். அந்தளவுக்கு தாய் நாகம்மாள் மீது பாசம் வைத்திருந்தது நாககுழந்தை.
நாகம்மா வேலைக்கு செல்லும் போது பாம்பு குழந்தையும் தாய்வேலை செய்யும் தோட்டத்தில் சென்று பாத்தியில் படுத்துக் கொள்ளுமாம். இதனால் தோட்ட உரிமையாளர்கள் உனக்கும், உன் பிள்ளைக்கும் என்று கூறி, நாகம்மாளுக்கு கூலியாக இரு மடங்கு தானியம் வழங்கி உள்ளனர். (அந்த காலத்தில் கூலியாக தானியங்கள் தான் பெருமளவில் வழங்கப்பட்டது)
காய்கனிகள் காய்க்கும் தோட்டத்தில் நாகம் சென்று விட்டால். உடனே அந்த தோட்டக்காரர். தங்கள் தோட்டத்தில் விளைந்த காய், கனிகளில் ஒரு பகுதியை நாகம்மாவிடம் கொடுப்பதுண்டு. இதனால் நாகம்மா வீட்டில் தானிய வகைகளுக்கும், காய், கனிகளுக்கும் குறைவில்லை. அக்கம்பக்கத்தினர் இரக்கப்பட்டு வழங்கி வந்ததை, நாகம்மாளின் கணவர் வழி உறவினர்கள் இரக்கமின்றி தடுக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதனால் பொறாமை கொண்ட அவர்கள், குழந்தை நாகத்தை கதிர் அரிவாளால் துண்டு, துண்டாக நறுக்கி, வறட்சியால் வெடித்து நின்ற வயலில் அந்த வெடிப்பு பகுதியில் துண்டுகளை வைத்து களிமண் கொண்டு அதன் மேல் பூசிவிட்டனர்.
நாகம்மாள் குழந்தை நாகத்தை தேடி வனத்திலும், வயல் வெளிகளிலும் அலைந்தாள். மூன்றாவது நாள் இரவில் நாகம்மாள் கனவில் தோன்றிய பாம்பு குழந்தை, உறவினர்கள் தன்னை நறுக்கி போட்டதையும், தன்னை புதைத்து வைத்த இடத்தையும் கூறியது.

மனம் வருந்திய நாகம்மாள், மறுநாள் காலை கனவில் நாக குழந்தை கூறிய வயல் பகுதிக்கு சென்று நறுக்கி கிடந்த பாம்பு துண்டுகளை எடுத்து கற்றாழை நாரில் கோர்த்து வைத்து, கையில் ஏந்தியபடி ஊருக்குள் கொண்டு வருகிறாள். மாலை பொழுதில் ஊர் பெரியோர்கள் கூடியிருந்த ஆலமரத்தடிக்கு வருகிறாள்.
ஐயா, பெரியோரே, ஆன்றோரே, சான்றோரே, தனக்கு இருந்த பிள்ளையை கொன்றவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். எனக்கு நியாயம் சொல்ல வேண்டும் என்று கதறி அழுதாள். கூடியிருந்த பெரியோர்கள் பெற்றது பாம்பு பிள்ளை, அதை போய் பிரச்னைன்னு கொண்டு வந்து நிக்கிறியே, போம்மா, இனி எப்படி பிழைக்கலாமுன்னு பாரு, என்று பதிலுரைத்து அனுப்பினர். இதனால் மனமுடைந்த நாகம்மாள்,
தனக்கு நியாயம் கிடைக்காமல் சூலக்கரையில் யாரும் வசிக்க முடியாது என சாபமிட்டாள். வேகத்தோடும், கோபத்தோடும், தலை விரி கோலத்தோடும் அங்கிருந்து விரைந்து வந்தாள். ஊர் எல்லையில் உள்ள வீரப்பெருமாள் கோவிலுக்கு வந்து கதறி அழுது உயிரை மாய்த்தாள்.
நாகம்மாள் சாபத்தை தொடர்ந்து, ஊரில் வறட்சி ஏற்பட்டது.  வீடுகள், தோட்டங்கள், வயல் வெளிகள் என எல்லா இடங்களிலும் பாம்புகள் அட்டகாசம் அதிகரித்தது. பாம்பு தீண்டி இறப்பு அதிகம் நேர்ந்தது. இந்த கொடுமைகளை தாங்க முடியாமல் அங்கிருந்த அக்ரஹாரமே தேவகோட்டைக்கு இடம் பெயர்ந்தது. ஊர் வாசிகள் ஒன்று கூடி நாகம்மாவுக்கு சிலை நிறுவி, பூஜை செய்தனர். பிரச்னைகள் ஓய்ந்தது. நாக தோஷம் விலகியது.
நாகம்மாள் இறந்த இடத்தில் வீரபெருமாள் கோயில் வளாகத்தில் நாகம்மாள் சிலை உள்ளது. நாகம்மாள் கையில் பாம்பு குழந்தையை வைத்தபடி அமர்ந்த நிலையில் வீற்றிருக்கிறாள். இக்கோயில் விருதுநகர் மாவட்டம் சூலக்கரையில் ரயில்வே கேட் அருகேயுள்ள வீரபெருமாள் கோயில் வளாகத்தில் உள்ளது. இக்கோயிலில் சிவராத்திரி அன்று சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது...

சு. இளம் கலைமாறன்

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

தீராப் பிணி தீர்ப்பார் பூதலிங்கசுவாமி.!!

பூதப்பாண்டி, கன்னியாகுமரி

வளம் கொழிக்கும் நாஞ்சில்நாடு எனும் இப்பகுதியை முன்னொரு காலத்தில் ஆண்டு வந்த பாண்டிய மன்னன் தீவிர சிவபக்தன் ஆவார். அவருக்கு தீராத வயிற்றுவலி உருவானது. இதனால் மிகுந்த வேதனைப்பட்டார். சிரமம் தீர சிவபெருமானை வேண்டி கண்ணீர்மல்க வழிபட்டார்.
மன்னன் கனவில் தோன்றிய சிவபெருமான், ‘‘எனக்கு காடு நீக்கி ஆலயம் எழுப்பு நோய் நீங்கப்பெருவாய்’’ என்றார்.
மனம் மகிழ்ந்த மன்னன் மறுநாள் முதல் ஆலயம் அமைப்பதற்கான ஏற்ற இடத்தை தேடினார். தனது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் நிரம்ப காடுகள் உள்ளன. இதில் எந்த காடு, சிவபெருமானுக்கு கோயில் எழுப்ப ஏற்றது என்று ஆலோசித்து வந்தார்.
இந்த நிலையில் அப்பகுதியில் ஆடைகள் நெய்யும் நெசவுத்தொழில் சிறப்புற்று இருந்தது. அவ்வாறு ஆடை நெசவு செய்யும் தொழில் புரிந்து வந்த சாலியர், பூர்வ புண்ணியசாலி என்பவரது பசு அன்று மாலை பால் கறக்கவில்லை. மாறாக மாட்டின் மடு வற்றிப்போய் இருந்தது.
உடனே புண்ணியசாலி, மாடுமேய்க்கும் இடையரிடம் இதுபற்றி கேட்டார். அவர், ஐயா, எப்படி மாடு, மடு வற்றி, பால் தராமல்போனது என்று தெரியவில்லை. என்று கூறினான்.
உடனே சாலியர், இனி இப்படி மாடு பால் தராமல் போனால் நீ தான் பொறுப்பு என்றார். சரிங்க ஐயா, என்ற அந்த இடையர், அடுத்தநாள் அந்த பசுவை கவனித்து வந்தார். பகல் 12 மணிக்கு மேய்ந்து கொண்டிருந்த பசு, பழையாற்றங்கரையில் அமைந்த திருமலைப்பாறைக் குகைக்கு சென்றுவிட்டு, திரும்புவதைக்கண்டார்.
உடனே அந்த பசு மாட்டை ஓட்டிக்கொண்டு சென்று பசுவின் உரிமையாளரிடம் போய் கூறினார். மறு நாள் மாட்டின் உரிமையாளர் சாலியரும், மேய்த்து வந்த இடையரும் பசுவை கண்காணித்தனர். அதேபோல் சரியாக பகல் 12 மணிக்கு கனத்து மடுவுடன் பசு, திருமலைப்பாறைக் குகைக்குள் சென்றது. பசுவின் பின்னால் சாலியரும் பின் தொடர்ந்து சென்றார். பசு குகையினுள் இருக்கும் சுயம்பாக தோன்றிய லிங்கத் திருமேனி மீது பேரானந்ததுடன் பால் சொரிந்தது. அந்த தெய்வீக அற்புதகாட்சியைக்கானும் பேறு பெற்றனர் இருவர். எனவே இத்திருமேனிக்கு சாலியர் கண்ட திருமேனி எனப்பெயர் வழங்கலாயிற்று. இந்த அற்புத நிகழ்வுபற்றிய செய்தி அன்று அழகியபாண்டியபுரத்தில் தங்கியிருந்த பாண்டிய மன்னனுக்கு உடனே தெரிவிக்கப்பட்டது. மன்னனும் அமைச்சர் பரிவாரங்களுடன் வந்து சுயம்புலிங்கத் திருமேனியைக்கண்டு பேரானந்தம் அடைந்தார்.
ஏற்கனவே ஈசன் அருளிய வார்த்தைப்படி காடுநீக்கி ஆலயம் அமைக்க இடம் தேடினோம். இதோ இடமும், மூலவருமே கிடைத்து விட்டனர் என்று மகிழ்ந்த மன்னர், அவ்விடமே கோயில் எழுப்பினார். ஈசன் அருளால் நோயும் நீங்கப்பெற்றார். ரதவீதியுடன் அமைந்த இவ்வூரும் பாண்டிய மன்னன் பெயராலேயே பூதப்பாண்டி என அழைக்கப்படலாயிற்று.
இங்கு சிவன் சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார். நினைத்ததை முடிக்கும் விநாயகர் பெருமானுக்கு தனிக்கோயில் உள்ளது. சுப்ரமணிய சுவாமிக்கும் சாஸ்தாவிற்க்கும் தனிச் சந்நதி உள்ளது. மூலவரின் முன்புறம் வடக்குப்பக்கம் பூதநாதர் என்ற முனிவரின் திருச்சந்நிதி அமைந்துள்து. இவருக்கு வேக வைக்காத பொருள்கள் மட்டுமே படைக்கப்படுகிறது. இவரும் வேண்டுவன வழங்கும் ஆற்றல் மிக்கவர்.
இங்கே இறைவனே பூசாரியாக வந்து பிரசாதம் வழங்கப்பெற்ற ஆண்டிச் செட்டியார் என்னும் பக்தருக்குப் பெருமை சேர்க்கும் விதமாக செட்டி மண்டபம் விளங்குகிறது. மூலவரின் வலப்புறம் அன்னை சிவகாமியின் திருச்சந்நதியும் வடபுறம் காசிவிசாலாட்சி விஸ்வநாதர் சந்நதியும் அமைந்துள்ளது. கல்லில் சங்கிலியும் சுழலும் வலை அமைப்பும், அம்பாள் விமானமும் சிற்ப வேலைப்பாடுகளுக்கு பெருமை சேர்க்கின்றது. மேலும் இக்கோயிலில் மிக உயரமான தேர் உள்ளது. இது மிக எடை உடைய தேர் ஆகும். இத்தேர் நிலையை வந்தடைவதற்கு அதிக நேரம் பிடிக்கும். தினமும் காலை 5.10 மணியளவில் பள்ளியரை வழிபாட்டில் திருவாசகப்போற்றித்திருவகவல் (108 வரிகள்) அனைவரால் பாடப்பெறுகிறது. 41 நாள்கள் இதில் கலந்துகொள்பவர்கள் ஆன்ம பலம் பெறுவதோடு, தீமைகள் அகன்று, வேண்டுவன பெறுகின்றார்கள் என்பது கண்கண்ட உண்மை.
மற்ற எந்த கோயிலிலும் இல்லாத ஒன்று இக்கோயிலில் அமாவாசை தோறும் கிரிவலம் நடைபெறுகிறது. இவ்விழாவில் இறைவன் சந்திரசேகரராய் அழகு மணித்தேரில் கிரிவலம் வருகிறார். இது ஒரு குகைவரைக் கோயில்.

இத்தலம் தாடகை வனமாக இருந்தது. இதற்கு இயற்கைச் சான்றாக கிழக்கே தாடகைமலை, மேற்கே துவரங்காடு, வடக்கே விளாங்காடு, தெற்கே நாவல்காடு என்ற பெயர்களில் ஊர்கள் அமைந்துள்ளன. தலவிருட்சம் வில்வம் மரம்.
பாண்டிய மன்னர்களால் சுமார் 500-600 வருடங்களுக்கு முன் இக்கோயில் கட்டப்பட்டது. தாடகை மலை (இராமாயணத்தில் ராமன் தாடகையை வதம் செய்த இடம்) முகப்பில் கோயில் உள்ளது.
ராமன் தாடகையை வதம் செய்ய திரிசரம் (மூன்று அம்புகள்) கோர்ப்பு செய்யப்பட்ட இடமே இன்று தெரிசனங்கோப்பு என மருவி வழங்கப்படுகிறது. தாடகை என்னும் ஒட்டுமொத்த தீமையின் உருவம் அழிக்கப்பட்டதால் இவ்வூர் தீமையில்லாத புனிதமான திருத்தலமாக விளங்குகிறது. எனவே இங்கு வழிபடுவோர் வேண்டியன வேண்டியவாறு பெறுகின்றனர் என்பது உண்மை.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இக்கோயில் நாகர்கோயில் அருகேயுள்ளது. இக்கோயில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தோவாளை தாலுகாவில் உள்ளது பூதப்பாண்டி...

-ச. சுடலை குமார்,

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

பிள்ளைப்பேரு பார்த்த பேச்சி மகன் மாயாண்டி.!!

தனக்கர்குளம், நெல்லை

நெல்லை மாவட்டம் தனக்கர்குளத்தில் பெரிய குளத்தாங்கரையில் கோயில் கொண்டுள்ள ஆலமூட்டு சுடலை தன்னை நம்பி வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு பெண் உருவம் கொண்டு பிள்ளைப்பேறு பார்த்தார்.
ஆங்கார வடிவமாக திகழும் என் அப்பன் மாயாண்டி தஞ்சம் என்று தன்னிடம் வரும் அடியவர்களுக்கு எந்த ரூபத்திலாவது வந்து காத்தருள்வார் என்பது உண்மையிலும் உண்மை. அந்த வகையில் இந்த ஆலமூட்டு சுடலையின் மகிமையை என் தாத்தா சொல்லி செவி வழி கதையாக கேட்டதை இந்த ஆன்மிக மலரில் பதிவு செய்கிறேன். இதற்கு வாய்ப்பளித்த எங்கள் நிறுவனத்திற்கு நெஞ்சார்ந்த நன்றியை கூறுகிறேன்.
நெல்லை மாவட்டம் உதயத்தூரில் சுமார் நானூறு ஆண்டுகளுக்கு  முன்பு நிலச்சுவந்தாராக இருந்தவர் சொக்கலிங்கம் பிள்ளை. இவருக்கு நான்கு மகன்களும், ஒரு மகளும் உண்டு. கடைசிப்பிள்ளை பெண் குழந்தை என்பதால் ராஜராஜேஸ்வரி என்று பெயரிட்டு செல்லமாக வளர்த்து வந்தார். அண்ணன்களும் தங்கையை பாசமாக போற்றி வளர்த்து வந்தனர்.
சொக்கலிங்கம்பிள்ளை தோட்டத்தில் முத்தையன் வேலைப்பார்த்து வந்தான். இருபத்தைந்து வயது நிரம்பிய வாலிபன். ராஜேஸ்வரிக்கு இளநீர் மீது அதிக நாட்டம் உண்டு. அதனால் முத்தையனிடம் உரிமையோடு தினமும் இளநீர் கொண்டு வரவேண்டும் என்று உத்தரவு போட்டிருந்தாள். ஒரு நாள் இளநீர் கொண்டு வர மறந்து விட்டான் முத்தையன். அன்றைய தினம் கடும் சினம் கொண்டாள். மறுநாள் அவளை சாந்தப்படுத்துவதற்காக பல விதமான பழ வகைகள், இளநீர் கொண்டு வந்து கொடுத்தான். இந்த உரிமைப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. ஒரு நாள் இருவரும் தொழுவத்தில் நின்று பேசிக்கொண்டிருந்ததை வண்டிக்காரன் ராமையா பார்த்து விடுகிறான். எங்கே தந்தையிடம் சொல்லி பிரச்சனையாகி விடுமோ அதனால் முத்தையன் உயிருக்கு ஏதும் நேர்ந்து விடுமோ என்று அச்சம் கொண்ட ராஜராஜேஸ்வரி மற்றும் முத்தையன் இருவரும் அன்று இரவே வீட்டை விட்டு ஓடிவிடுகிறார்கள்.

எங்கு தேடியும் கிடைக்காததால் ராஜேஸ்வரியின் தாயார் காமாட்சி, மற்றும் தந்தை சொக்கலிங்கம்பிள்ளை கவலையுற்றனர். மாதம் பத்து கடந்த நிலையில் ஒரு நாள் வண்டிக்காரன் ராமையா வேகமாக ஓடி வந்து சொக்கலிங்கம்பிள்ளையிடம்
‘‘ஐயா...’’
‘‘சொல்லு ராமு’’
‘‘அம்பட்டையன் இசக்கி உங்கள பார்க்கணுமுன்னு சொல்லுதான்’’
‘‘அப்படியா பின் பக்கமா வரச்சொல்லு’’
‘‘சரிங்க ஐயா’’
இசக்கி பின்பக்கமாக வர, சொக்கலிங்கம்பிள்ளை பின் வாசல் வழியாக தொழுவத்தின் அருகே வருகிறார். அப்போது
‘‘என்னல இசக்கி...’’
‘‘ஐயா,  சங்கநேரி பக்கம் ஒரு ஜோலியா போயிருந்தேன், அப்போ நம்ம ஆத்தா ஊர் பொதுகிணத்தில தண்ணி எடுத்திக்கிட்டு இருந்தாங்க, புள்ளதாச்சியா இருந்தாங்க..’’
‘‘ஏலே, நிசமாத்தான் சொல்லுதியா..’’
‘‘ஆமாங்கய்யா...’’ உடனே சொக்கலிங்கம்பிள்ளை தனது மூத்த மகன் சட்டநாதனை அழைத்தார்.
‘‘இசக்கி நல்ல சேதி கொண்டு வந்திருக்காம்ல அவனுக்கு பத்துமரக்கா நெல்லை கொடுத்து அனுப்பு..’’ என்று கூறுகிறார்.

மாலையில் மகனை அழைத்த சொக்கலிங்கம்பிள்ளை
‘‘நாதா, மேலத்தெரு கொம்பய்யாகிட்ட நான் சொன்னேன் சொல்லி இந்த பணத்தை கொடுத்து கூட நாலுபேர கூட்டிட்டுப்போய் ராத்திரியோட ராத்திரியா ஓடு காலி நாயையும், அந்த பண்டார பயலையும் கண்டதுண்டமா வெட்டிப்போடச் சொல்லு. நீ போகாத சொல்லிட்டு வந்திரு. நாளைக்கு சூரியன் உதிக்கும் போது அதுங்க செத்துட்டுண்ணு சேதி வரணும். போ..’’
என்று கூறி அனுப்பி வைக்கிறார். சட்டநாதன் மேலத்தெரு கொம்பைவிடம் சொல்ல, கொம்பை நான்கு பேரை துணைக்கு அழைத்துக்கொண்டு சங்கநேரி செல்கிறார்கள்.
அங்கே மறுநாள் நடக்க இருக்கும் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக ராஜேஸ்வரி முத்தையா வசித்து வந்த தெருவிலுள்ளவர்கள் ஆதரவற்ற புள்ளைங்களுக்கு நாம செய்வோம் என்று எண்ணி வளைக்காப்புக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் எல்லா பொருட்களையும் வாங்கி வைத்துவிட்டு அவரவர்கள் வீடுகளுக்கு சென்றனர். எல்லோரும் போன பின்பு அந்த வீட்டிற்குள் அருவா, கம்புகளுடன் கொம்பையாவும், அவர் கூட்டாளிகளும் செல்கின்றனர். வீட்டிற்கு தகராறு நடக்கிறது. பின்வாசல் வழியாக ராஜேஸ்வரியை அழைத்துக்கொண்டு முத்தைய்யன் ஓடினான். இருவரும் சங்கநேரி கடந்து கோலியான்குளம் நான்கு முக்கு பாதை கடந்து தனக்கர்குளம் நோக்கி வருகிறார்கள்.

பின்னாடி அவர்களும் துரத்திக்கொண்டு வருகிறார்கள். பாதை வழியே போனால் விரைந்து வந்து பிடித்துவிடுவார்கள் என்று எண்ணிய முத்தையன் தோட்டக்காடுகள் வழியே வருகிறார்கள். அங்கே செம்மறி ஆட்டுக்கிடை மறிக்கப்பட்டிருந்தது. குட்டி ஆடுகளை அடைத்து வைத்திருக்கும் ஆட்டுக்கூடு(பனை ஓலையால் செய்யப்பட்டிருக்கும்) பெருங்கூட்டுக்குள் ராஜேஸ்வரியை இருக்கச் சொல்லி மூடிவிட்டு துரத்தி வந்தவர்கள் பார்க்கும்படி ஓடுகிறான் முத்தையன். ஓடும் சத்தம் கேட்டு அவர்கள் போய்விட்டார்கள் என்றெண்ணி கூட்டை திறந்து வெளியே வருகிறாள் ராஜேஸ்வரி. வந்தவள் நள்ளிரவு நேரம் நடந்த பெரியகுளத்தாங்கரை வந்து ஆலமரத்தின் கீழ் அமருகிறாள். நிமிர்ந்து பார்த்தாள் சுடலைமாடசுவாமி பீடம்.
அழுதாள்...
நாலு மாசம் ஆன நடை தாண்டக்கூடாது. ஆனா நிறைமாச கர்ப்பிணியா உன்கிட்ட வந்திருக்கேன். எனக்கு தெரிஞ்சு போச்சி இனி உசுரோடு இங்கிருந்து போக முடியாதுண்ணு. நீ பேயா இருந்தா என்ன சாப்பிட்டுவிடு... தெய்வமா இருந்தா என்னைக் காப்பாத்து என்றாள்....
மையான அமைதி, பட்சிகளின் சத்தம் நடு சாமப்பொழுது. அச்சமே ராஜேஸ்வரிக்கு பிரசவவலியை கொடுத்து விட்டது. அழுது புரண்டாள். அப்போது என் அப்பன் மாயாண்டி சுடலை. ஐம்பது வயது மதிக்கத்தக்க சுமங்கலி பெண் உருவம் கொண்டு வந்தார். ஏம்மா இப்படி அழுகிற வா அந்த வேப்பமரத்துக்கிட்ட போவோம் என்று கைத்தாங்கலாக பிடித்து அழைத்து வருகிறார். அங்கே வயதான பெண் உருவம் கொண்டு இரண்டு பாட்டிகள் நிற்க, அவர்கள் துணியைக் கொண்டு நாலாபுறமும் சுத்திக்கட்ட துணியால் செய்யப்பட்ட கூரையை தயாராக்கினார்கள். துணியெல்லாம் வேட்டியாக இருப்பதை கண்ட ராஜேஸ்வரி காரணம் கேட்டாள், அதற்கு அந்த வயதான பெண்மணிகள் இது ஆம்பளை மட்டும் குடித்தனம் பண்ற இடம். அதனால் வேட்டி மட்டும் தான் உண்டு. அதப்பத்தி உனக்கென்ன.. உனக்கு மறப்பு இருக்கா பாரு. என்றனர். துணி கூடாரத்திற்குள் பிரசவம் பார்க்கப்பட்டது. வந்தவர்கள் யார்? என் அப்பனை தில்லையில் ஆதரித்தார்களே தாயான பேச்சியும், பிரம்மசக்தியும் தான்.
ராஜேஸ்வரி அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள். குழந்தையின் சத்தம் கேட்டு அவ்விடம் வந்தான் முத்தையன். குழந்தையோடு இருவரும் இருக்க. குளத்தின் மறுகால் பக்கம் ஓடி வந்துக்கொண்டிருந்த கொம்பையா முன்னாடி போய் நின்றார் என் அப்பன் சுடலை. எப்படி தெரியுமா அவனது சித்தப்பா சுந்தரபாண்டி ரூபத்தில். சுருட்டி பிடித்தபடி ஒத்த கரை வேட்டியைக்கட்டிக்கொண்டு நின்றார் சுடலை. ஏலே... இந்த நேரத்தில இங்க உனக்கென்ன வேலை,
சித்தப்பு அத நான் கேக்கணும்
மறவனுக்கு ராத்திரியும் பகலும் ஒண்ணு தான சித்தப்பு
உன் மகனுக்கு வாந்தி பேதியாகி மூச்சில்லாம கிடக்கான் போய் பாருல அத சொல்லத்தான உன்ன பார்க்க வந்தேன் என்று கூற.. உடனே பதறிய கொம்பையா தனது கூட்டாளிகளுடன் அங்கிருந்து வீட்டிற்கு புறப்பட்டான். வீட்டில் அவன் அவ்வாறிருக்க தனது தெய்வத்தை வேண்ட அவனது தெய்வமான தூசிமாடன் அசிரிரீயாக நடந்ததை சொல்ல தவறை உணர்ந்தான்.

முத்தைய்யா, ராஜேஸ்வரியிடம் வந்த மாயாண்டி சுடலை, நீங்க எங்கும் போக வேண்டாம், பொழுது விடியப்போகுது ஊருக்குள்் இருக்கிற பெரிய பண்ணையார் வீட்டுக்கு போங்க...அவரு உனக்கு வேலை கொடுப்பாரு. தங்கிக்க வீடும் கொடுப்பாரு. இனி எந்தக்கவலையும் வேண்டாம் என்று கூறி அனுப்பினார் என் அப்பன் மாயாண்டி சுடலை.
உடனே பெரிய பண்ணையார் (ராமச்சந்திர ரெட்டியார்) (அந்தக்காலத்தில் ரெட்டிமார்கள் பண்ணையார் என்று அப்பகுதிகளில் அழைக்கப்பட்டனர்.) கனவில் தோன்றிய என் அப்பன் மாயாண்டி சுடலை நடந்ததை கூறி உதவி செய்யும்படி சொன்னார். மறுநாள் காலை பண்ணையார் அவர்களை வரவேற்று உங்களால் தான் என்் சாமி என்னிடம் பேசினார் என்று மெய்யுருகி கூறியதோடு ராஜேஸ்வரியை மகளாகவும், முத்தைய்யனை மருமகனாவும் நடத்தி வந்தார்.
சுடலைமாடசுவாமியால் பிரசவம் பார்க்கப்பட்ட ராஜேஸ்வரியின் வம்சா வழிகள் இப்போது அமெரிக்காவில் குடியுரிமையே பெற்றுள்ளனர். அந்த அளவிற்கு செல்வ செழிப்பு, கல்வியில் மேன்மையும் பெற்று திகழ்கின்றனர்.
என் அப்பன் மாயாண்டி சுடலைக்கு கோயில் ெபரிய அளவில் கட்ட முன் வந்தனர். என் அப்பன் மழை பெய்தால் நனைவேன். வெயிலடிச்சா காய்வேன் இதுவே இந்த மரத்து மூடே போதும் என்று சொல்ல கோயில் கட்டப்படாமல் உள்ளது. செல்வச்செழிப்பில் கட்டியே தீருவேன் என்று இறங்கியவர் பணி தொடங்கும் முன்னே மாரடைப்பால் இறந்து போக,, கவனிப்பாரின்றி கோயில் இருந்தது. கொம்பையாவின் வம்சா வழியினர் மாதக்கடைசி வௌ்ளிக்கிழமை எண்ணெய் மஞ்சனை சாத்தி விளக்குப் போட்டு வருகின்றனர். பத்து ஆண்டுகளுக்கு முன்பு கொடை நடந்ததாக சொல்கிறார்கள்.
நம்பி வந்தவர்களுக்கு வாழ்வு தருவார் என் அப்பன் மாயாண்டி சுடலை. அவருக்கு பிடிக்காதபோது அதை செய்யக்கூடாது. நம் வீட்டு விளக்கானாலும் கை வைத்தால் சுடத்தான் செய்யும்...

சு.இளம் கலைமாறன்

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

கசமாடன் சுவாமி வரலாறு.!!

அச்சம் போக்கும்

ஸ்ரீ கசம் காத்த மாடசாமி

புன்னைச் சாத்தான்குறிச்சி, தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட மேல ஆத்தூரைச் சேர்ந்த பெருமாள்சாமி, புளி, உப்பு முதலான பொருட்களை வியாபாரம் செய்து வந்தார். இவருடைய வியாபாரத்திற்கு பக்கபலமாக இருந்தார், இவரது மனைவி சுயம்புகனி.  வசிக்க சொந்தமாக ஓட்டு வீடும், வாழ்வாதாரத்திற்கு சிறிய அளவிலான புளியந்தோப்பு ஒன்றும் வைத்திருந்த பெருமாள்சாமி தனக்கு பிறந்தது மூன்றும் பெண் குழந்தைகள் என்பதால் அதை எண்ணி அடிக்கடி வருத்தப்பட்டுக்கொள்வார்.
49 வயதான பெருமாள்சாமி ஒரு முறை உப்பு கொள்முதல் செய்ய உப்பளத்துக்கு வரும்போது, உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மராந்தலை என்னும் இடத்தில் மயங்கி விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்த வீரய்யன், பெருமாள்சாமியின் முகத்தில் தண்ணீர் தெளித்து அவரை எழுப்பி தனது வீட்டுக்கு அழைத்துச்சென்றான். நல்ல முறையில் அவரை கவனித்த வீரய்யன். தனது ஊரான புன்னைக்காயலில் இருந்து மேல ஆத்தூருக்கு மாட்டு வண்டியில், பெருமாள்சாமியை வைத்து அழைத்துச் சென்றான்.
அவரை இறக்கிவிட்ட பின் புறப்பட தயாரானபோது பெருமாள்சாமி, வீரய்யனை வீட்டுக்கு அழைத்தார். அப்போது வெறுங்கையோடு நான் வந்திருக்கேனே என்று மறுத்த அவனை. "அதெல்லாம் ஒண்ணுமில்ல, சும்மா வாங்க என்று அன்போடு அழைத்தார். வீரய்யன், ஐயா, நீங்க போய் என்னை வாங்க, போங்கன்னு மருவாதியெல்லாம் கொடுத்து பேசாதீக, சும்மா தம்பின்னு சொல்லுங்க அது போதும் அய்யா. என்றான்.
நீ என்னப்பா அப்படி சொல்லிப்புட்ட, மூச்சடைச்சி கிடந்த என்னை தூக்கிட்டுப்போய், என் உசுர காப்பாத்தியிருக்க, என் சாமி தாம்பா, உன் ரூபத்தில வந்திருக்கு என்று அவர் உருகிப்போய் கூறியதும் வீரய்யன் மனமகிழந்து வாரேன் அய்யா என்று கூறிச்சென்றான்.
மறு வாரம் அறுக்குலா, சீலா மீன்களுடன் பெருமாள்சாமி வீட்டுக்கு வருகிறான். அங்கு அவரது மூத்த மகள் வனப்பேச்சி, தனது தோழிகளுடன் தாயம் ஆடிக்கொண்டிருந்தாள். இதனால் வீட்டுக்கு வெளியே நின்ற வீரய்யன், அய்யா என்று குரல் கொடுத்தான். அதைக்கேட்டு எழுந்திருக்க முயன்ற வனப்பேச்சியை, அவளது தோழி பூரணம் தடுத்தாள். "பிச்சை கேட்டு எவனாவது வந்திருப்பான். இரண்டு முறை சத்தம் போட்டுட்டு போயிருவான். நீ தாயகட்டைய உருட்டு" என்றாள்.
2 முறை குரல் கொடுத்த வீரய்யன், இனியும் சத்தம் கொடுத்தால் அய்யா தொந்தரவு பண்ணுறதா நினைப்பாங்க எனக்கருதி, கொண்டு வந்த மீன்களோடு, முற்றத்தில் நின்ற பூவரசம் மரத்தின் நிழலில் அமர்ந்துகொண்டான். தாயக்கட்டையை உருட்டிக்கொண்டிருந்த வனப்பேச்சி, யேய் நீங்க ஆடுங்கடி, அடுப்பில உலை கொதிக்குது அரிசிய கழுவி போட்டுட்டு வாரேன் என்றபடி எழுந்து அரிசி போட தயாரானாள். அப்போது வீட்டு வாசல் அருகே போய் குரல் கொடுத்தால் அய்யா வருவார் என்று எண்ணி, வீட்டு வாசல் நோக்கி வருகிறான் வீரய்யன். அப்போது அரிசி கழுவிய தண்ணீரை வீட்டு திண்ணையில் நின்றபடி முற்றத்தை நோக்கி கொட்ட அந்த தண்ணீரில், வீரய்யன் முழுதும் நனைந்து விட்டான்.
உடனே பாத்திரத்தை கீழே வைத்துக்கொண்டு, இரண்டு கைகளையும் உதறுகிறாள் வனப்பேச்சி. தவறை உணர்ந்து நாணத்துடன் பேசினாள். அய்யய்யோ, என்னை மன்னிச்சிடுங்க, நான் பார்க்காம பண்ணிப்புட்டேன். யாரு, நீங்க, என்ன வேணும்?. என்று கேட்டாள்.
பெருமாள்சாமி அய்யாவ பார்க்க வந்திருக்கேன். என்றான் வீரய்யன். அவுக வியாபாரத்துக்கு போயிருக்காவ, எங்க அப்பச்சிதேன், ஏதாவது சொல்லனுமா! என்று கேட்ட பேச்சியிடம்,
இந்த மீனுகள எடுத்து ஊட்டுல கொண்டு போய் வைங்க, புன்னைக்காயலிலிருந்து வந்த வீரய்யன் கொடுத்தான்னு சொல்லுங்க.
அடி, ஆத்தே, நான் மீனெல்லாம் வாங்க மாட்டேன். வூட்டுல ஆத்தாவும் இல்லை. உங்க சங்காத்தமெல்லாம் எங்க அப்பச்சியோடு வச்சிக்குங்க என்று முகத்துக்கு நேரா பேசிவிட்டு வீட்டிற்குள் சென்று விட்டாள். மீன்களுடன் திரும்பிச் சென்றான் வீரய்யன்.
மாலையில் வீடு திரும்பிய தகப்பனிடம் பகலில் நடந்ததை ஒன்று விடாமல் ஒப்பித்தாள் வனப்பேச்சி. "ஏன் ஆத்தா, இப்படி பண்ணிப்புட்ட, அந்த பையன் உங்க அப்பன் மேல வச்சிருந்த பிரியத்தில, மீன் கொண்டாந்திருப்பான். அத போய் வேணாமுன்னு சொல்லி புட்டியே ஆத்தா, அந்த பையன் மனசு என்ன பாடு பட்டுருக்கும்" என்றார்.
உடனே குறுக்கிட்ட பெருமாள் சாமியின் மனைவி சுயம்புகனி, "நம்ம புள்ள செஞ்சது சரிதேன்" என்றாள்.
"என்ன கனி, நீ புத்தி கெட்டு பேசுதே, 7 மைல் தூரம் மீன் சுமந்து கொண்டு வந்திருக்கான். அவனை மூஞ்சில அடிச்சது மாதிரி பேசி அனுப்பினது பெரிய சாமர்த்தியமோ.?"
"நீருதான் புத்தி இல்லாம பேசுறது. வயசு வந்த புள்ள, அவ போய் வந்தவன் எவன்னே தெரியாது. அவன் கொடுத்ததை வாங்கினா நல்லாவா இருக்கும். அவன் என்ன நம்ம சாதியா, சனமா?" என்று கடிந்தாள். உடனே "சரி, சரி விடுங்க என்னால நீங்க சண்டை போடாதீங்க" என்று கூறினாள் வனப்பேச்சி.
இவற்றையெல்லாம் கண்டும் காணாதது போலிருந்தார்கள் வனப்பேச்சியின் தங்கைகள். சண்டைக்கு பின் ஏற்பட்ட அமைதியின்போது, பேசிய பெருமாள்சாமி, வீரய்யனின் பெருமைகளையும், திறமையையும் பற்றி கூறினார். அதைக்கேட்ட வனப்பேச்சி தனக்குள் வீரய்யன் மேல் ஒரு வித அன்பை உருவாக்கி கொண்டாள். தனக்குள்ளே மோகத்தை ஏற்படுத்திக் கொண்டாள்.

8 நாட்கள் கடந்து மீண்டும் வந்த வீரய்யனுக்கு நல்ல வரவேற்பை கொடுத்தனர் பெருமாள்சாமி குடும்பத்தினர். ஆதரவு யாருமின்றி தனது தாய் வழி பாட்டியின் கவனிப்பில் வளர்ந்த வீரய்யனுக்கு பெருமாள் சாமியின் குடும்பத்தினர் காட்டிய அன்பும், அரவணைப்பும் அவனை புது உலகத்திற்கே அழைத்துச் சென்றதாக உணர்ந்தான். அவன் அந்த குடும்பத்தில் ஒருவனாக மாறினான். ஒருநாள் அவங்க ஊர் ஆலய விழாவில் பெண்களுக்கான அழகு மற்றும் பொட்டு வகைகளை வாங்கி வந்து வனப்பேச்சியிடமும், அவளது தங்கைகளிடமும் கொடுத்தான்.
வனப்பேச்சியை தவிர மற்ற இருவரையும் தங்கை என்றே அழைத்தான் வீரய்யன். இது பேச்சியின் மனதில் காதலை ஏற்படுத்தியது.
அந்த காலக்கட்டத்தில் பாண்டிய மன்னன் அரண்மனை கோட்டை அகழியிலிருந்த முதலைகளுள் ஒன்று நீர் வரும் வாய்க்கால் வழியாக அப்பகுதியிலுள்ள பொருமாள் கோயில் தெப்பகுளத்திற்குள் போய்விட்டது. இதையறிந்தவர்கள் மன்னனிடம் தெரிவித்தனர். மன்னன் பலரை அனுப்பியும் முதலையை பிடிக்க முடியவில்லை. உடனே மன்னன் கோயில் தெப்பகுளத்திலுள்ள முதலையை பிடிப்பவர்களுக்கு ஆயிரம் பொன்னும் நிலமும் சன்மானமாக வழங்கப்படும் என்று அறிவித்தான். இதை முரசறைவோன் கிராமம் கிராமமாக சென்று முரசறைந்தான். அப்போது வீட்டில் இருந்தபடி கேட்டுக்கொண்டிருந்த பெருமாள் சாமி.
மறுநாள் காலை விடிந்தும், விடியாத நேரம் சென்றார் புன்னைகாயலுக்கு. வீட்டில் வீரய்யனின் பாட்டி மட்டும் இருந்தாள். ஐயா, காலங்காத்தால இம்புட்டு வழி வந்திருக்கீக, என்னய்யா, என்னாச்சு.
என்று பதறியவளிடம், ஒண்ணுமில்லம்மா, உப்பளத்துக்கு வந்தேன். அப்படியே வீரய்யனை பாத்துட்டு போலாம்ன்னு வந்தேன் என்றார்.
கண்ணுக்கெட்டுற தூரத்துல கட்டுமரங்க தெரியுதுல, அதுலதேன் அவனும் ஒருத்தனா இருப்பான் என்று குடிசையிலிருந்து வெளியே வந்த வீரய்யனின் பாட்டி, கடல் நோக்கி பார்த்தபடி கூறினாள். சற்று நேரத்தில் வந்த வீரய்யன், பெருமாள் சாமியை பார்த்ததும் மகிழ்ச்சியும், திகைப்பும் கொண்டு விழிகளால் வினா தொடுத்தான்.
வீரய்யனிடம், பெருமாள்சாமி, மன்னன் செய்த அறிவிப்பு பற்றி கூறினான். உடனே சத்தமாக சிரித்த வீரய்யன். இதுக்கா இம்புட்டு தொலவு வந்தீக, என்று கேட்க,
என்னப்பா நான் செய்யுறது? 3 பொம்பள பிள்ளைய பெத்திருக்கேன். நகை, நட்டு போடாம எவன் கட்டிட்டு போவான். உனக்கென்ன நீ தனிக்கட்ட என்று சொன்னதும். சரிங்க அண்ணாச்சி, உமக்காக இல்லாட்டியும், உம்ம புள்ளைங்களுக்காவது முதலைய நான் புடிக்கிறேன்" என்று வாக்குறுதி கொடுத்தான்.
அதன்படி பெருமாள் கோயில் தெப்பகுளத்திலிருந்த முதலையை பிடித்து அரண்மனை அகழியில் கொண்டு விட்டான். மன்னனும் அறிவித்த பரிசுத்தொகையினையும், நிலத்திற்கு உரிய பட்டயத்தையும் வீரய்யன் நாளை மறுநாள் அரண்மனையில் நடக்கும் விழாவில் வந்து பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தான்.
மகிழ்ச்சியில் திளைத்த பெருமாள் சாமி, வீரய்யனை கட்டிப்பிடித்துக் கொண்டு நீ என் குலசாமிடா, என் புள்ளைங்களை கரை சேர்க்க, பெரும் உதவி செஞ்ச, உன்னை கோயில் கட்டி கும்பிடலாம்டா. என்று கூற, பதிலுரைத்த வீரய்யன். இது என்ன அண்ணாச்சி, உங்களுக்காக என் உசுரயே தருவேன். என்று கூறினான்.

வீரய்யனை தன் வீட்டுக்கு அழைத்து வருகிறார். கிடா வெட்டி சிறப்பு விருந்து வைத்தார். விருந்துண்ட பின் வீரய்யன், வனப்பேச்சி மற்றும் அவளது தங்கையர்களோடு தாயம் ஆடுகிறான். வீட்டிற்குள் மனைவி சுயம்புகனியுடன் மகள்களின் எதிர்காலம் பற்றி பேசிக்கொண்டிருந்த பெருமாள்சாமி திடீரென வெளியே வருகிறார்.
அப்போது திண்ணையில் மற்ற மகள்கள் இருக்க, வனப்பேச்சியும், வீரய்யனையும் காணவில்லை. பதட்டத்துடன் வீட்டிற்கு பின்னால் இருந்த ஓடைக்கரை அருகே வந்தார். அங்கே நின்றிருந்த ஆலமரத்துக்கு கீழே, அவர் கண்ட காட்சி அவரை திடுக்கிட வைத்தது. வீரய்யன் முதலையை பிடித்ததற்கு பரிசு கேட்க, வனப்பேச்சி அவனது உச்சி முகர்ந்து முத்தமிட்டாள். அதைக்கண்ட பெருமாள்சாமி ஆத்திரம் கொண்டு வீச்சருவாளால் வீரய்யனையும், மகள் வனப்பேச்சியையும் வெட்டி வீழ்த்தினார்.

வெட்டிய பின் பேசினார் பெருமாள் சாமி, நாயே, உன்ன என் உடன் புறப்புபோல நினைச்சி வூட்டுக்கு கூட்டியாந்து உறவாடினதுக்கு, என் புள்ளகூடவே உறங்க பாக்குறியோ.. உண்ட வூட்டுக்கு ரெண்டகம் பண்ணி புட்டியல. நீயே இப்படி பண்ணினா, எவனல நம்புறது இனி. என்று ஆத்திரம் பொங்க முனுமுனுத்தார்.
வீரய்யனின் முண்டம் விட்டு பிரிந்த தலை பேசியது, "ஐயா, என்னை மன்னிச்சிருங்க, பருவக்கோளாறுல, பேச்சி காட்டுன அன்புல  நான் தப்பு பண்ணிட்டேன்.  ஆனாலும் உங்க மக மேல நான் வச்சிருக்க பிரியத்த விட, உம்ம மேல வச்சிருக்கிற மருவாதி ரெம்ப அதிகமய்யா, உசுரு போற சமயத்துல யாரும் பொய் பேசமாட்டங்க, அதால இப்பவும் சொல்லுதேன். இந்த முரட்டுபய, மதிக்கிற மனுஷன் நீருதாய்யா. என்னை வெட்டியதுக்கு நான் வருத்தப்படல, என்னை எப்போதும் போல மதிக்கணும் அய்யா,   நீங்க என்னை எப்பவும் சொல்லுவேளே, உங்க சாமி, சாமின்னு. அத உண்மையாக்கிடுங்க. நான் சின்னவன் தப்பு பண்ணிட்டேன். நீ பெரியவன் சொன்னத செஞ்சு காட்டு. எனக்கு கோயில் கட்டு." என்று கூறியதும் மூச்சடங்கியது. ஓடையில் இறங்கி தனது மேலிருந்த ரத்த கறைகளை கழுவிக்கொண்டிருக்கும்போது பெருமாள் சாமியின் காலருகே, வீரய்யன் தலை மிதந்து வருகிறது. அப்போதும் முனுமுனுக்கிறார் பெருமாள் சாமி, இவ்வளவும் பண்ணின உனக்கு கோயில் ஒரு கேடா? என்று கூறிவிட்டு அவ்விடம் விட்டு கிளம்புகிறார்.
இந்த ஓடை தண்ணீர் அப்பகுதியில் உள்ள கசத்தில்(ஆழமான நீர்நிலை) போய் சேருகிறது. அந்த தண்ணீரில் இழுத்து செல்லப்பட்ட வீரய்யன், வனப்பேச்சி உடல்களும் அந்த கசத்தில் போய் கலந்து அகழியில் ஒன்றாக மூழ்கியது. இதற்கு முன் அந்த கசத்தில் பல பேர் விழுந்து இறந்திருக்கிறார்கள். தற்கொலையும் செய்து இருக்கிறார்கள். இந்த சம்பவத்திற்கு பின்பு தற்கொலை செய்ய சென்றவர்கள் காப்பற்றப்பட்டு வீடு திரும்புகின்றனர். வியப்புற்ற ஊர் மக்கள், மலையாளத்து மந்திரவாதிகளை கொண்டு வந்து பார்த்தபோது வீரய்யன் கசத்தை காத்து வருவதாக கூறினர். அவருக்கு கோயில் எழுப்பி வழிபட்டால் நன்மை வந்து சேரும் என்றும் கூறினர்.

அதன்படி அப்பகுதி மக்கள் புன்னை சாத்தான் குறிச்சியில் வீரய்யனுக்கு கோயில் எழுப்பினர். கசம் காத்த சாமி என்றும் கசம் காத்த மாடசாமி என்றும் கசம் காத்த பெருமாள் என்றும் பல நாமங்களில் வழிபட்டு வருகின்றனர். இந்த கோயிலில் கசம் காத்த பெருமாள் அருகே வனப்பேச்சிக்கு பீடம் உள்ளது. வனப்பேச்சி மலைபேச்சியம்மன் என்ற நாமத்தில் அழைக்கப்படுகிறாள். கோயிலில் 21 பரிவார தெய்வங்களும் உள்ளது. இந்தக்கோயில் தூத்துக்குடியிலிருந்து சுமார் 23 கி.மீட்டர் தூரத்தில், முத்தையாபுரம் வழியாக முக்காணி கடந்து சென்றால் ஆத்தூர் அடுத்துள்ள புன்னைச் சாத்தான் குறிச்சியில் அமைந்துள்ளது...

சு.இளம் கலைமாறன்

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

மனசு குழப்பமாக இருக்கும் போது இந்த தீபத்தை ஏற்றுங்கள். ரெண்டே நாளில் எல்லா பிரச்சனையும் போயே போச்சு சொல்லுவீங்க.!!

திருஷ்டி செய்யும் வேலைகளை நீங்கள் அறிவீர்களா? பொறாமை கண்கள், கண் திருஷ்டி போன்றவை சாதாரண விஷயம் அல்ல. இதனால் நாம் சில விஷயங்களில் பாதிக்கப்படுவது உண்மைதான். இதனை எதிர்மறை ஆற்றல் என்று கூறுகிறார்கள். நேர்மறை ஆற்றல்கள் எப்படி இருக்கிறதோ அதே மாதிரிதான் எதிர்மறை ஆற்றல்களும் நம்முடன் இருக்கிறது. நாம நல்லா இருந்தாலே சில பேருக்கு பொறாமையா இருக்கும். நமக்கு நல்லது செய்வதற்கு நாலு பேர் இருந்தால், கெட்டது செய்வதற்கு நாற்பது பேர் இருப்பார்கள்.

நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருந்தாலும் நம்மள பார்த்து பொறாமை படுபவர்களும் நம்முடைய சுற்றத்தில் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. இது போன்ற கண் திருஷ்டியை ஊமத்தை காயால் நீக்கிவிட முடியும். நமக்கு ஏற்படும் பாதிப்பை நம்மால் தடுத்து பாதுகாத்துக் கொள்ள முடியும். மிகவும் சுலபமான வழிபாடு தான். இதற்கென்று தனியாக நீங்கள் எந்த நாளையும் தேர்ந்தெடுக்க தேவையில்லை. நீங்கள் பூஜை செய்யும் நல்ல நாட்களில் ஊமத்தை தீபத்தை ஏற்றினால் கண் திருஷ்டிகள் தடுக்கப்படும். எப்படி இந்த தீபம் ஏற்றுவது என்பதைக் குறித்த தகவல்களை இப்பதிவில் நாம் காணலாம்.

நீங்கள் தினமும் பூஜை செய்பவராக இருந்தாலும் சரி, செவ்வாய், வெள்ளி போன்ற கிழமைகளில் பூஜை செய்பவராக இருந்தாலும் சரி, ஒரு சிலர் அமாவாசை, பவுர்ணமி, சங்கடஹர சதுர்த்தி, ஏகாதசி, சஷ்டி என்று எல்லா நல்ல நாளிலும் பூஜை செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இது போன்ற நாட்களில் நீங்கள் பூஜை செய்யும் வேளையில் தவறாமல் இந்த தீபத்தையும் ஏற்றினால் எப்போதும் உங்களுக்கு கண் திருஷ்டி அல்லது பொறாமை கண்களோ பாதிப்பை உண்டாக்காது. இது பல பேரும் அறியாத ரகசியமாகவே உள்ளது.

சிவனுக்கு உரிய இலையாக வில்வ இலை உள்ளது. அதற்கு இணையாக ஊமத்தை இலையும் உள்ளது. ஊமத்தை இலையால் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்வதால் நன்மைகள் பல நடைபெறும். வீட்டில் ஏற்படும் கஷ்டங்கள் நீங்கும் என்பது ஐதீகமாக உள்ளது. ஊமத்தை காயை எடுத்துக்கொண்டால் அதன் மேல் பகுதியில் முட்களாக இருக்கும். முட்கள் கொண்ட இந்த காயால் தீபம் ஏற்றினால் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் முட்களை அடியோடு நீக்கிவிட முடியும்.

எந்த பிரச்சனையாக இருந்தாலும், எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் சிவபெருமானை நினைத்து ஊமத்தை தீபத்தை ஏற்றுங்கள். இரண்டே நாட்களில் உங்களது பிரச்சினைகள் நீங்கி தீர்வு கிடைத்துவிடும். பொதுவாக ஊமத்தை தீபத்தை நீங்கள் எந்த நாளில் ஏற்றுகிறீர்களோ அதே நாளில் ஒன்பது வாரங்கள் ஏற்ற வேண்டும். நீங்கள் வெள்ளி அன்று ஏற்றினால் ஒன்பது வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து ஏற்றி வந்தால் போதும் வாழ்வில் நிம்மதி கிடைக்கும்.

ஊமத்தை காயின் காம்பை நீக்கினால் உள்ளே விதைகள் இருக்கும். விதைகளை எடுத்து விட்டால் அகல் போன்ற வடிவம் கிடைத்துவிடும். ஊமத்தை காயின் அடியில் மண் அகல் ஒன்றை வைத்து கொள்ளுங்கள். அதன் உருண்டை வடிவம் தரையில் நிற்க்காது. அதன் உள்ளே வெண்கடுகு சிறிதளவு போட்டுக் கொள்ளுங்கள். சிவபெருமானுக்கு உகந்த எண்ணெய் இலுப்பை எண்ணெய் எனவே வேறு எந்த எண்ணெயும் பயன்படுத்தாமல் இலுப்பை எண்ணெய்யை பயன்படுத்தி தீபம் ஏற்றுங்கள். பிரச்சனைகளில் இருந்து வெளியே வந்து சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்யுங்கள்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்யும் வேர்! உங்க வீட்டை வீட்டு மகாலட்சுமி வெளியே செல்லாமல் இருக்க, இந்த வேரை தண்ணீரில் போட்டு வைத்தாலே போதும்.!!

ஒருவருடைய வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்து விட்டாலே போதும். நிம்மதிக்கு குறைவிருக்காது. இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். இதற்காக நாம் பல பூஜைகளை செய்து வருகின்றோம். பல குறிப்புகளை பின்பற்றுகின்றோம். பணவரவிற்கு எத்தனையோ தந்திர, மந்திர வழிகளை எல்லாம் செய்கின்றோம். இருந்தும் சில பேருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிப்பதில்லை. எல்லோருக்கும் பலன் அளிக்கும் படியான ஒரு பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இயற்கையான நல்ல வாசம் தரக்கூடிய ஒரு வேர், இந்த வேர். நம் வீட்டில் இருந்தால் நமக்கு அதிர்ஷ்டம் தான். வாசம் நிறைந்த இடம் என்றாலே அந்த இடத்தில் கட்டாயம் மகாலட்சுமி இருப்பாள் என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். இந்த வேரை முறையாக எப்படி பயன்படுத்தினால், நம் வீட்டில் சுபிட்சம் நிலைத்து நிற்கும் என்பதை பற்றியும், மகாலட்சுமியின் அம்சம் கொண்ட அந்த வேர் எது? என்பதைப் பற்றியும், அந்த வேரை நல்ல முறையில் நம் வீட்டில் எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்யும் அந்த வேர், வெட்டி வேர். இந்த வேர், சாதாரணமாக எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். இதை வாங்கி எப்போதுமே வீட்டில் இருக்கும்படி பார்த்துக் கொள்வது மிகவும் நல்லது. உங்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு சிறிய கண்ணாடி டம்ளரில் சுத்தமான தண்ணீரை ஊற்றி, அதில் ஒரு எலுமிச்சை பழத்தையும் போட்டு, இந்த வேரையும் சிறிதளவு அந்த தண்ணீரில் போட்டு வைத்தால் போதும். அந்த வாசத்திற்கு நம்முடைய வீடு மிகவும் மங்களகரமாக இருக்கும். இந்த வாசத்தில் தான் மகா லட்சுமி நிரந்தரமாக குடி இருப்பாள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. இந்த தண்ணீரை வாரத்திற்கு ஒருமுறை மாற்றவேண்டும். எலுமிச்சை பழத்தையும் மாற்ற வேண்டும். தண்ணீரில் இருக்கும் வேர் கெட்டுப் போக வாய்ப்பில்லை. மாதத்திற்கு ஒருமுறை மாற்றினால் போதும்.

இதே போல் எந்த ஒரு கெட்ட சக்தியும், இந்த வேரிடம் நெருங்க முடியாது என்று சொல்லப்பட்டுள்ளது. சிறிதளவு வெட்டிவேரை எடுத்து, ஒரு சிறிய மஞ்சள் துணியில் கட்டி உங்கள் வீட்டு நிலை வாசற் படியில் கட்டி வைத்தாலே போதும். உங்கள் வீட்டிற்குள் எந்த ஒரு கெட்ட சக்தியும் நுழையாமல் இருக்கும்.

இந்த வெட்டிவேரை சிறிதளவு எடுத்து நன்றாக காயவைத்து அதன் பின்பு மிக்ஸியில் நன்றாக பொடி செய்து, சல்லடையில் சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும். சிறிதளவு வேப்பங் கொழுந்தையும், நன்றாக உலர வைத்து அரைத்து  எடுத்துக் கொள்ளலாம். அதன்பின்பு, இந்த தூளை நெற்றியில் இட்டுக்கொள்ளும் விபூதியோடு கலந்து விடுங்கள். தினந்தோறும் அந்த விபூதியை நெற்றியில் வைத்துக் கொண்டு, வெளியே செல்லும் பட்சத்தில் நீங்கள் செல்லும் எந்த ஒரு நல்ல காரியமாக இருந்தாலும் அது வெற்றியில் முடியும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இதோடு மட்டுமல்லாமல் கண் திருஷ்டியாக இருந்தாலும், எந்த ஒரு கெட்ட சக்தியும் நம்மை நெருங்காது என்பதும் உண்மை.

வெட்டிவேரில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக ஊறவைத்து அதன் பின்பு, அந்த தண்ணீரை வீட்டின் மூலை முடுக்குகளில் தெளித்து விட்டாலும், எதிர்மறை ஆற்றல் நீங்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. இப்படியாக வெட்டிவேரை சரியான முறையில் பயன்படுத்தும் பட்சத்தில், நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்து இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

Friday, 29 May 2020

பணவரவிற்கு தடையாக இருக்கும் எப்படிப்பட்ட, கண்ணுக்குத் தெரியாத தோஷமும் தெறித்து ஓடும். இந்த ஒரு சிறிய முடிச்சை பார்த்தால்.!!

பணக்காரர்களுக்கு அதிகப்படியான பணம் மேலும் மேலும் சேர்ந்து கொண்டே இருக்கின்றது. ஏழையாக இருப்பவர்கள் மேலும் மேலும் ஏழையாகிக் கொண்டே இருக்கிறார்கள். இன்றைய சூழ்நிலையில் நடப்பது இதுதான். யாராலும் மறுக்க முடியாத உண்மை. என்ன செய்வது? பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர் ஆவதற்கு அவர்கள் பெற்று வந்த வரமும் காரணமில்லை. ஏழை மேலும் மேலும் ஏழையாதற்கு அவர்கள் வாங்கிய சாபமும் காரணம் இல்லை. பணக்காரராக இருப்பதும், ஏழையாக இருப்பதும் அவரவர் கையில்தான் இருக்கின்றது. நாம் நினைத்தால் நம்மால் நிச்சயமாக பணக்காரராக முடியும் என்ற தன்னம்பிக்கை முதலில் நம் மனதில் வரவேண்டும். தன்னம்பிக்கையோடு முயற்சி எடுக்கும் பட்சத்தில், தொடர்ந்து பல தோல்விகளை சந்திக்க நேரிட்டாலும் அதை எல்லாம் தாண்டி வரும்போது தான் நமக்கு வெற்றி கிடைக்கும்.

நம்முடைய கையில் பணம் தங்காமல் இருப்பதற்கு கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ தோஷங்கள் காரணமாக இருக்கலாம். ஜாதகரீதியாக தோஷங்கள், பூர்வ புண்ணிய தோஷங்கள் இப்படி பல தோஷங்கள் உள்ளது. அதைப்பற்றி எல்லாம் கவலையே படாதீங்க! பணம் வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் மனதில் விதையுங்கள்! நம்முடைய முன்னோர்கள் சொல்லுவார்கள், எந்த ஒரு விஷயத்தையும், மூன்று நாட்கள் தொடர்ந்து ஒருசேர, ஒரு சிந்தனையாக நினைத்துக் கொண்டிருக்கின்றோமோ அது நடந்துவிடும் என்று. மூன்று நாட்கள் ஒரே ஒரு நினைப்பை மட்டும் மனதில் வைத்துக் கொள்வது என்பது மிகவும் கஷ்டம் தான்! நீங்கள் வேண்டுமென்றால், சோதனை பண்ணி பாருங்கள்.

எந்த ஒரு விஷயத்தை தொடர்ந்து நினைக்கிறீர்களோ அது கட்டாயம் நடந்துவிடும். அப்படிதான் பணமும். ‘பணம் என்னிடமெல்லாம் வராது!’ அப்படின்னு நினைச்சிட்டு இருந்தா, வராமல் போய்விடும். ‘பணம் வரும். பணம் என்னிடம் வரும்.’ என்று நினைத்துக் கொண்டே இருந்தால் வந்துவிடும். இவ்வளவுதாங்க!

சில பேருக்கு வருமானம் வந்துகொண்டே இருக்கும். ஆனால் வீண் விரயம் ஆகிக்கொண்டே இருக்கும். சேமிப்பு என்று ஒரு ரூபாய் கூட எடுத்து வைக்கவே முடியாது. சில பேர் சேமித்து வைப்பார்கள். அதைக் கொண்டுபோய் மருத்துவமனையில் கொட்டுவார்கள். ஒருசிலரால் மட்டும்தான் பணத்தை சேமித்து, அதை வீண் விரயம் செய்யாமல் சந்தோஷத்திற்காக அனுபவிக்கும் சூழ்நிலை அமையும். நம்முடைய வாழ்க்கையை நாமும் சந்தோஷமாக மாற்றிக்கொள்ள, நம் கையில் இருக்கும் பணம் வீண் விரயம் ஆகாமல் இருக்க, ஒரு சிறிய பரிகாரத்தை செய்தாலே போதும். அது என்ன பரிகாரம் என்பதைப் பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம்.

வெள்ளிக்கிழமை அன்று காலை, உங்கள் வீட்டில் வழக்கம் போல் பூஜையை முடித்துக்கொள்ள வேண்டும். பூஜை அறையில் ஏற்றும் தீபத்தை மட்டும் அணையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அன்றைய தினம் மதியம், ஒரு மணியிலிருந்து இரண்டு மணி வரை இருக்கக்கூடிய சூத்திர ஓரையில் தான் இந்த பரிகாரத்தை செய்யப் போகிறீர்கள். பரிகாரத்தை செய்து முடிக்கும் வரை காலையில் ஏற்றிய தீபத்தில் மட்டும் குளிர விடாமல் பார்த்துக் கொண்டால் போதும்.

வெள்ளிக்கிழமை மதியம் சுக்கிர ஓரையில், அதாவது மதியம் ஒரு மணியிலிருந்து இரண்டு மணிக்குள் மூன்று பாதாமை உங்களது கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும். மூன்று பாதாமும் கையில் இருந்தபடியே இரு கைகளையும் சேர்த்து சுக்கிர பகவானை மனதார நினைத்து ‘ஓம் சுக்ராய நமஹ’. என்ற மந்திரத்தை 11 முறை உச்சரிக்க வேண்டும்.

அதன்பின்பு குலதெய்வத்தையும், சுக்கிர பகவானையும் மனதார வேண்டிக்கொண்டு, ஒரு பச்சை வண்ண துணியில் இந்த பாதாம் பருப்பை வைத்து, பச்சை நிற நூலில் கட்டி நீங்கள் பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விடுங்கள். இந்த சுக்கிர ஓரையிலேயே, பணப் பெட்டியில் வைக்க வேண்டும்.

பணம் சேராமல் இருப்பதற்கு கண்ணுக்குத் தெரியாத எந்த பிரச்சனையாக இருந்தாலும் சரி. அது உங்களை விட்டு காணாமல் போய்விடும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. மூன்று மாதங்கள் கழித்து இதேபோல் மற்றொரு வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஓரையில் அந்த பாதாம் பருப்பை மாற்றிக்கொள்ளலாம். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு செய்து பாருங்கள். பலன் அடைய முடியும். எக்காரணத்தைக் கொண்டும் பணம் சம்பாதிக்கும் உங்களது முயற்சியை மட்டும் கை விடாதீர்கள். எதுக்காக தெரியுமா பரிகாரம் செய்ய சொல்றாங்க? ‘பரிகாரம் செஞ்சுட்டோம்! இனிமே எந்த பிரச்சனையும் வராது. என்று  உங்களுக்குள் ஒரு மன நிம்மதி வரும். அந்த நிம்மதியை போதுங்க! பணமும் தானா உங்ககிட்ட வந்து சேர்ந்துவிடும். அப்போ! பரிகாரம் எல்லாம் பொய்யா, என்ற விதண்டாவாத கேள்வியை எழுப்பாதீர்கள். “மந்திரம் கால் மதி முக்கால்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

மனைவி ஸ்தானத்தில் இருக்கும் பெண்கள், கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில ரகசியங்கள்! திருமணமாகாத பெண்களாக இருந்தாலும் படிக்கலாம். பிற்காலத்தில் உதவும்.!!

மனைவி ஸ்தானத்தில் இருக்கும் பெண்கள் மட்டும் தான், இதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. உங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றாலும், எதிர்காலத்தில் மனைவி ஸ்தானத்தை அடையும் போது எப்படி இருக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்ளலாம். கணவன் மனைவிக்கிடையே வர கூடிய பிரச்சனைகளுக்கு இது தான் காரணமாக இருக்க முடியும் என்று ஆணித்தனமாக சொல்லலாம். அப்படிப்பட்ட சில காரணங்களை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த பதிவில் குறிப்பிட போகும் குறிப்புகளை பின்பற்றினாலே போதும். குடும்பத்தில் நிம்மதி கெட்டு போக வாய்ப்பே இல்லை. இப்ப, நீங்க படிக்கப் போற குறிப்புகள் எல்லாமே உங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம்! ஆனால், யாரும் பின்பற்றுவதில்லை. நீங்கள் பின்பற்றுகிறீர்களா? பார்க்கலாம்!

காலையில் எழுந்தவுடன், உங்களது கணவரை, நீங்கள் எழுப்பும் பழக்கம் இருந்தால், முதலில் நீங்கள் முகம் கழுவி, பொட்டு வைத்து, தலைசீவி அதன்பின்பு கணவரின் முன் போய் நிற்க வேண்டும். அதன்பின்பு கணவரை எழுப்புவது மிகவும் நல்லது.

அடுத்ததாக கணவரின் வருமானத்திற்கு தகுந்த செலவை மனைவிமார்கள் செய்ய வேண்டும். எந்த வீட்டில் கணவரின் சம்பாத்தியத்தை விட, அதிகமாக செலவு செய்யும், குறிப்பாக ஆடம்பர செலவு செய்யும், மனைவிமார்கள் இருக்கின்றார்களோ! அந்த வீட்டில் நிச்சயம் நிம்மதி இருக்காது. வீட்டின் குடும்பத்தலைவி பொறுப்பில் இருக்கும் நீங்கள், உங்களது கணவரை கடன் வாங்கச் சொல்லி எக்காரணத்தைக் கொண்டும் அழுத்தம் கொடுக்கவே கூடாது. வருமானத்திற்கு மீறிய செலவை வீட்டுப் பெண்கள் செய்யக்கூடாது.

உங்களது கணவர் கோபமாக இருக்கும் சமயத்தில் எந்தப் பிரச்சனையை பற்றியும் விவாதம் செய்ய வேண்டாம். குறிப்பாக கணவரின் தாய் தந்தை, சொந்த பந்தத்தைப் பற்றி எந்தக் குறையையும் கூறி விடக்கூடாது. அதேசமயம், பெண்கள் சதாகாலமும் பிறந்த வீட்டின் பெருமைகளை சொல்லி, புகுந்த வீட்டை மட்டம் தட்ட கூடாது. பிரச்சனைதான் வரும். பூகம்பம் கூட வர வாய்ப்பு உள்ளது. என்ன செய்வது? மனைவிமார்களே! விட்டுக் கொடுப்பதால், என்றும் நீங்கள் கெட்டுப் போவதில்லை.

உங்கள் கணவருக்கு பிடிக்காதவர்களிடம் நீங்கள், பழக கூடாது. சிலரிடம் பேசுவது, உங்களுடைய கணவருக்கு பிடிக்கவில்லை என்றால், அவர்களை தவிர்த்து விடுங்கள். சில கணவன்மார்களுக்கு அக்கம் பக்கம் வீட்டாருடன் பேசுவது கூட பிடிக்காது. பரவாயில்லை! அனுசரித்து அதை தவிர்த்துக் கொள்வது தான் மனைவிக்கு நல்லது.

கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை வராமல் கட்டாயம் இருக்காது. பிரச்சனை வரும். ஆனால், முதலில், யார் பேசுவது என்ற ஈகோ பிரச்சினையும் வரும். கணவன் தனியாக இருக்கும் சமயத்தில் அவர் மனதுக்குள்,  மனைவியிடம் கோவப்பட்டு சண்டை போடுவதற்காக, ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டிருப்பார். மனைவி தனியாக இருக்கும் போது, நடந்ததை நினைத்து மனதிற்குள் ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டுக் கொள்வார்கள். புரிகிறதா? ‘கணவர் மனைவிகிட்ட மன்னிப்பு கேட்கமாட்டார். ஆனா, மனசுக்குள்ள அவர் பண்ணது தப்புன்னு அவருக்கு புரியும். மனைவிகிட்ட, மனசுக்குள்ளே மன்னிப்பு கேட்டுபாரு! வெளியே செல்ல மாட்டாரு!’ அந்த மனைவியும் இப்படித்தான் இருப்பாங்க. இதில் ஒரே ஒரு முறை இரண்டு பேரும் நேருக்கு நேர் மன்னிப்பு கேட்டுக் கொண்டால் பிரச்சினையே கிடையாது.

“கணவன், மனைவியிடத்தில் கௌரவத்தை பார்க்கக்கூடாது. மனைவி, கணவரிடத்தில் கவுரவம் பார்க்கக்கூடாது. இருவரும் வேறு வேறு இல்லை என்பதை உணர வேண்டும்.” இந்த கணவன்மார்கள், அவங்களோட பாஸ், கஸ்டமர்ஸ் இப்படி யார் திட்டினாலும் தாங்குகிறாங்க! மனைவி திட்டினா மட்டும் கோபப்பட்றாங்க! அதுதான் ஏன்னு தெரியல.

கணவரைப் பற்றிய எந்த ஒரு விஷயத்தையும் வெளி நபரிடம் பகிர்ந்து கொள்ளக் கூடாது. அவருடைய குணாதிசயம், நிறைகள், குறைகள் இப்படி என்று எதையுமே பகிர்ந்து கொள்ளாதீர்கள். மூன்றாவது நபர்களிடம், உங்களுடைய கணவரைப் பற்றிய பேச்சுகளை அனாவசியமாக பேசும் சமயத்தில் ஒரு விதமான தோஷத்தை உண்டாக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

அதாவது, ஒரு மூன்றாவது நபரிடம் உங்களது கணவரைப்பற்றி சொல்லுகிறீர்கள். ‘அந்த மூன்றாவது நபருடைய மனதில், உங்களது கணவரைப் பற்றி எதிர்மறையான சிந்தனைகளை நினைக்க ஆரம்பித்து விட்டால், அந்த சிந்தனை தோஷமாக மாறி, உங்களையும் உங்கள் வீட்டையும், உங்கள் கணவரையும் தாக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது’. அதாவது, வெளியாட்களிடம் உங்கள் கணவரைப் பற்றி நல்ல விதமாக சொன்னால் கண் திருஷ்டி தோஷம் தாக்கும். கெட்ட விதமாக சொன்னால், எதிர்மறை ஆற்றல் தாக்கும்.

நம்மில் பலபேர் இதை அனுபவப்பூர்வமாக அனுபவித்திருப்போம். நம்முடைய குடும்ப விஷயங்களை யார்கிட்டயாவது போய் சொல்லிட்டு வந்திருப்போம். அன்னைக்கு வீட்ல பெரிய பிரச்சனை, ரகளை நடக்கும்! உங்களுக்கு அந்த அனுபவம் இருக்கா?

சில பெண்கள் பெருமைக்காகவோ அல்லது தங்களுடைய கஷ்டத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதற்காகவோ, தங்கள் வீட்டு பிரச்சினைகளையும், தங்கள் கணவர் செய்யும் தவறுகளையும் சுட்டிக் காட்டுவதாக எண்ணிக் கொண்டு அடுத்தவர்களிடம் குறை கூறும் பழக்கத்தை தயவுசெய்து விட்டுவிடுங்கள்.

அடுத்ததாக விரதமிருக்கும் பெண்கள், இறைவழிபாட்டை மேற்கொள்ளும் பெண்கள், தங்களுடைய கணவனின் அனுமதியோடு தான் விரதம் இருக்க வேண்டுமே தவிர, கணவனுக்குத் தெரியாமல் விரதமிருப்பது கோவிலுக்கு செல்வது போன்ற பழக்கங்களை வைத்துக் கொள்ளக்கூடாது. அப்படி கணவனுக்குத் தெரியாமல் விரதமிருந்து இறைவனை வழிபட்டாலும் அதற்கான பலன் கிடைக்காது என்றே சொல்லலாம்.

எது எப்படியாக இருந்தாலும், ஒரு வீட்டின் நிம்மதியானது, அந்த வீட்டின் குடும்பத் தலைவியிடம்தான் உள்ளது. கணவர் நல்லவராக இருந்தாலும், கெட்டவராக இருந்தாலும் அவரை வழிநடத்திச் செல்ல வேண்டிய பொறுப்பு, மனைவியின் கையில் உள்ளது என்பதை மறந்து விடாதீர்கள்.

கணவனை விட்டு பிரிந்து சென்ற மனைவி, தனியாக இருந்தாலும் நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும். அதாவது பெண்கள் தனியாக இருந்தாலும், வாழ்ந்து சாதித்து விடுவார்கள். மனைவியை விட்டு பிரிந்திருக்கும் கணவனால், எக்காரணத்தைக் கொண்டும் நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவே முடியாது. ஏனென்றால், மனைவி இல்லாத வாழ்க்கையை கணவன்மார்களுக்கு வாழவே தெரியாது. இதுதான் உண்மை.”

கோபத்தால் எதையுமே சாதிக்க முடியாது. கோபத்தில் இருக்கும் கணவரிடமும் நாம் எதையும் சாதிக்க முடியாது. ஒரு மனைவி ஸ்தானத்தில் இருக்கக்கூடிய பெண், எவ்வளவு விஷயங்களை விட்டுக்கொடுத்து வாழ்கின்றாள்! என்பதை எண்ணி கணவன்மார்களும், மனைவியை அனுசரித்துச் செல்லவேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

Thursday, 28 May 2020

அதிர்ஷ்டம் உங்கள் வீட்டு கதவை தட்டவே மாட்டேங்குதா? அப்படின்னா இந்த ஒரு பொருள் உங்க வீட்டில இல்லைன்னு அர்த்தம்.!!

யாருக்கு எப்போ அதிர்ஷ்டம் அடிக்கும் என்று சொல்லவே முடியாது. சில பேர் மண்ணைத் தொட்டாலும் அது பொன்னாக மாறிவிடும். சில பேர் திருமணம் செய்யும் நேரம், அவர்களை வாழ்க்கையின் உச்சிக்கே கொண்டு சென்றுவிடும். வீட்டுக்கு வந்தவளோட ராசி என்று கூட சொல்லுவார்கள்! சிலபேர் குடிபோகும் வீடு அதிர்ஷ்டத்தை தேடி தரும். இப்படி இருக்க, இந்த அதிர்ஷ்டமானது நமக்கு எப்போது அடிக்கும் என்று காத்துக் கொண்டே இருந்தால், வாழ்க்கையே அதற்குள் முடிந்து போய்விடும்! நம்மையும் அதிர்ஷ்டம் தேடி வர வேண்டுமென்றால், என்ன செய்யலாம்?

ஒருவருக்கு அதிர்ஷ்டம் உண்டாக பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், அதிர்ஷ்டம் ஏற்படாமல் இருக்க சில காரணங்களே உள்ளன. ஒருவருடைய ஜாதக கட்டத்தில் தீராத தோஷம் இருந்தால், அதிர்ஷ்டம் வராது. வீட்டில் வாஸ்து பிரச்சனை இருந்தால் அதிர்ஷ்டம் வராது. பூர்வஜென்ம வினை இருந்தால், அதிர்ஷ்டம் நம்மைத் தேடி கட்டாயம் வராது. அடுத்தவர்களுக்கு கெடுதல் நினைத்தாலும் அதிர்ஷ்டம் வராது. அடுத்தவர்களைப் பார்த்து பொறாமை பட்டாலும் அதிர்ஷ்டம் வராது.

மேற்குறிப்பிட்டுள்ள சில தவறுகளை பரிகாரங்கள் செய்து, பிராயச்சித்தத்தை தேடிக் கொள்ளலாம். சிலவற்றை திருத்திக் கொள்வது உங்கள் கையில்தான் உள்ளது. சரி. இப்போது நமக்கு அதிஷ்டத்தை தரப்போகும் அந்த ஒரு பொருள் என்ன என்பதைப் பற்றி பார்த்துவிடுவோம். ஒருவரை அதிர்ஷ்டசாலிகள் என்று எதை வைத்து கூறுவார்கள். முதலில் மன அமைதியான வாழ்க்கை, அடுத்தது செல்வந்தர்களாக வாழும் வாழ்க்கை. இவை இரண்டும் இருந்து விட்டால் நிச்சயம் அவர்கள் அதிர்ஷ்டசாலிகள் தான். ஒருவருடைய வாழ்க்கையில் மன நிம்மதி மட்டும் இருந்தால், நல்ல வாழ்க்கை அமைந்து விடாது. பணம் மட்டும் இருந்தாலும் நல்ல வாழ்க்கை அமைந்து விடாது. இரண்டையும் ஒருசேர அமைத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்.

நல்ல வழியில் நாம் சம்பாதித்துக் கொண்டிருக்கும் அந்த பணமானது, நம்முடைய பணப் பெட்டியில் இருந்து வீண் விரயம் ஆகாமல் இருந்தாலே பிரச்சனையில் பாதி முடிந்துவிடும். பண வரவு அதிகமாக இருந்தால், மன நிம்மதி, தானாக வரும் என்று கூட சொல்லலாம். தவறில்லை. இப்படி உங்களுடைய பணப்பெட்டியில் உள்ள பணத்தை பத்திரமாக பார்த்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்? இதற்கு எல்லாவகையான தோஷத்தை நீக்கும், முருகப் பெருமானின் வாகனமான மயில் இறகை உங்களது பணப்பெட்டியில் வைக்கவேண்டும். இந்த மயில் இறகை, முறைப்படி உங்களது பணப் பெட்டியில் வைத்தால் நிச்சயம் அதிர்ஷ்டம் உங்களைத் தேடிவரும்.

நீங்கள் பணம் வைக்கும் பெட்டியிலோ, அல்லது பீரோவிலோ முதலில் கருநீல துணியை விரித்துக் கொள்ள வேண்டும். அந்த துணியானது வெல்வெட் துணி அல்லது பட்டுத்துணியாக இருந்தால் மேலும் சிறப்பு. அதன்மேல் மயிலிறகு ஒன்றை வைத்து, அதன் மேல் நீங்கள் பணத்தை பர்சிலோ அல்லது அந்த மயில் இறகின் மேல் நேரடியாக கூட, பணத்தை வைத்து சேமித்து வரலாம். இப்படி செய்யும் பட்சத்தில் உங்களது பணம் வீண் விரயம் ஆகாமல் சேமிப்பு அதிகரிக்கும் என்று சில குறிப்புகளில் சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக வட மாநிலத்தவர்கள் தங்களுடைய பீரோவில் இந்த கரு நீல வெல்வெட் துணி இல்லாமல் பணத்தை வைக்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

மயிலிறகை சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம். இந்த ஒரு மயிலிறகிற்க்குல் பல வகையான சக்தி அடங்கியுள்ளது. இந்த மயில் இறகில் 9 மயிலிறகை எடுத்து, உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து, வழிபட்டால் சனியால் உண்டாகும் தோஷங்கள் அனைத்துமே நீங்கிவிடும். மூன்று மயிலிறகை ஒன்றாக வைத்து முருகப் பெருமானையும் உங்களது குலதெய்வத்தையும் வேண்டிக் கொண்டு பூஜை அறையில் வைத்து வழிபட்டால், நீங்கள் செய்த பாவத்திற்கு விமோசனம் கிடைக்கும்.

சாதாரணமாகவே உங்களது வீட்டில் ஆங்காங்கே இந்த மயிலிறகை அழகுக்காக வைத்தாலும், அது மிகவும் நல்லதுதான். எந்த ஒரு கெட்ட சக்தியும், எந்த ஒரு கெட்ட தோஷமும், கண் திருஷ்டியும் உங்களை தாக்காது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அதிர்ஷ்டமானது நம்மைத் தேடி வரும் வரை காத்திருக்காமல், சின்னச்சின்ன பரிகாரங்களை செய்து அந்த அதிர்ஷ்டத்தை தேடி நாம் சென்றால் தவறில்லை என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴