Tuesday, 5 May 2020

சித்ரா பவுர்ணமி அன்று திருவண்ணாமலை கிரிவலம் வர பக்தர்களுக்கு தடை! வீட்டிலிருந்தே அண்ணாமலையாரை எப்படி கிரிவலம் வரலாம் என்று இப்போது பார்க்கலாம்.!!

பொதுவாகவே பௌர்ணமி தினம் என்றால் திருவண்ணாமலையில் கிரிவலம் வருவது சிறப்பு. அதிலும் சித்திரா பவுர்ணமி கிரிவலத்திற்கு இன்னும் அதிகப்படியான மகத்துவம் உள்ளதை எவராலும் மறுக்க முடியாது. இந்த வருடம், கூட்டம் கூட கூடாது என்ற தடை உள்ளதால், கிரிவலம் செல்ல முடியாத சூழ்நிலை அமைந்துவிட்டது. இந்த வருடம் கிரிவலம் செல்ல வேண்டும் என்று நினைத்தவர்களுக்கும், அண்ணாமலையாரை தரிசிக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் வீட்டிலிருந்தபடியே, மனதார ஈசனை கிரிவலம் வரலாம். வீட்டிலிருந்தபடியே கிரிவலமா? அது எப்படி முடியும்? மனமிருந்தால் மார்க்கம் உண்டு. என்பதை மறந்து விடாதீர்கள். வீட்டிலிருந்தபடி சித்ராபவுர்ணமி கிரிவலத்தை, ஈசனை நினைத்து எப்படி வலம் வரலாம் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த முறையை பின்பற்றி தங்களுடைய வேண்டுதல்களை வைத்தால், நிச்சயம் நிறைவேறும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

நம்மில் பலபேர் வீட்டின் பூஜை அறையில் சிறிய அளவு சிவலிங்கத்தை வைத்து வழிபடும் பழக்கத்தை வைத்து இருப்போம். உங்கள் வீட்டில் இருக்கும் எந்த உலோகத்தில் இருக்கும், எவ்வளவு சிறிய சிவலிங்கமாக இருந்தாலும், சரி. அதை எடுத்துக்கொள்ளுங்கள். லிங்கத்துடன் கட்டாயம் நந்திதேவரும் அவசியம் தேவை. இந்த இரண்டு சிலைகளையும் மஞ்சள் நீரால் அபிஷேகம் செய்து கொள்ளுங்கள். வீட்டின் வரவேற்பறையில் அதாவது ஹாலை சுத்தம் செய்துகொண்டு, அந்த இடத்தில் நடுப்பகுதியில் உங்கள் வீட்டில் இருக்கும் மேஜையையோ, மரப்பலகையையோ எதுவாக இருந்தாலும் சரி. அதன் மேல் ஒரு விரிப்பை விரித்து வைத்து, அதன் மேல் ஒரு தாம்பூலத்தை வைத்து, தாம்பூலத்தில் சிறிதளவு பச்சரிசியை அல்லது சிறிதளவு பூ பரப்பி அதன் மேல் சிவலிங்கத்தை வைத்து, சர்க்கரை பொங்கலை நைவேத்யமாக படைத்து, தேங்காய் உடைத்து தீப தூப ஆராதனை காட்டி, உங்கள் வீட்டு பூஜை முறைப்படி, அந்த ஈசனை உங்கள் வீட்டிலேயே கிரிவலத்திற்க்காக தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

வீட்டில் சிவலிங்கம் இல்லாதவர்கள் என்ன செய்வது? திருவண்ணாமலை என்பது அக்னிக்குரிய ஸ்தலம். ஈசன் இருக்க வேண்டிய இடத்தில் ஒரே ஒரு அகல் தீபத்தை ஏற்றி வைத்தாலே போதும். அந்த தீபத்தை சுற்றி வலம் வந்து கொள்ளலாம்.

உங்கள் வீட்டில் நீங்களே தயார் செய்து வைத்திருக்கும் லிங்கமாக இருந்தாலும், தீபமாக இருந்தாலும் அதற்கான தீப தூப ஆராதனைகள் செய்து முடித்துவிட்டு அதன்பின்பு அந்த ஈசனை வலமிருந்து இடமாக, ‘ஓம் அஷ்ட லிங்கங்களே போற்றி’ என்ற மந்திரத்தை சொல்லி 11 முறை வலம் வரவேண்டும். அதன்பின்பு ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை உச்சரித்து மீண்டும் 11 முறை வலம் வரவேண்டும். இந்த கிரிவலத்தை தனி ஒருவராக நீங்கள் மட்டும் வலம் வந்தாலும் சரி அல்லது உங்கள் குடும்பத்தோடு வலம் வந்தாலும். மனதார செய்யக்கூடிய இந்த கிரி வலத்திற்கு அதிக பலனுண்டு என்பதை மறந்துவிடாதீர்கள்.

அந்த காலத்தில் சித்தர்கள் எல்லாம் எந்த சிவலிங்கத்தை வைத்தும் எந்த ஒரு சுவாமி சிலையை வைத்தும் தியானம் செய்யவில்லை. சித்தர்கள் தங்கள் மனதார நினைத்து, மானசீகமாக வேண்டிய வேண்டுதல் களுக்காக கிடைத்த வரங்களே அதிகம் என்பதையும் மறந்து விடாதீர்கள். நாமும் எந்த ஒரு சிலையும் வைக்காமல் மானசீகமாக வெறும் இடத்தையே சுற்றி வரக் கூடாதா? என்ற விதண்டாவாத கேள்வியெல்லாம் கேட்காதீர்கள். நாம் ஒன்றும் சித்தர்கள் இல்லை. மனிதர்கள் என்ன செய்யவேண்டுமோ அந்த முறையை பின்பற்றலாம். எடுத்துக்காட்டாக சொல்லப்பட்டது தான் சித்தர்கள் பெற்ற வரம். மானசீகமாக வேண்டிக் கொள்ளும் பிரார்த்தனைக்கு பலன் அதிகம் என்பதை உணர்த்துவதற்காகவே.

இந்த கிரிவலத்தை வீட்டிலிருந்தே எந்த நேரம் செய்வது என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கும். நாளை மாலை அதாவது 6.5.2020 மாலை 7.30 மணியிலிருந்து 7.5.2020 சூரிய உதயத்திற்கு முன்பாக எப்போது வேண்டுமென்றாலும் இந்த முறைப்படி உங்கள் வீட்டிலிருந்தபடியே கிரிவலத்தை செய்து, அந்த அண்ணாமலை ஈஸ்வரனின் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளலாம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் நம்பிக்கையோடு செய்து பாருங்கள். உங்கள் மனதார வைக்கப்படும் அந்த வேண்டுதல்கள் கூடிய விரைவில் நிறைவேறும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

இந்த உடைகளை மட்டும் சுமங்கலி பெண்கள் கட்டாயம் உடுத்தவே கூடாது. குடும்பத்திற்கு தரித்திரத்தை ஏற்படும்.!!

ஒரு வீட்டிற்கு மகாலட்சுமியாக விளங்குவது அந்த வீட்டின் சுமங்கலிப் பெண்கள் தான். ஒரு வீட்டில் ஆண் தவறு செய்தால் அது அவனை மட்டுமே பாதிக்கும். ஒரு பெண் தவறு செய்தால் அது அந்த குடும்பத்தையே பாதிக்கும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே. சுமங்கலி பெண்ணானவள் எந்த மாதிரியான உடைகளை கட்டாயம் பயன்படுத்தக்கூடாது என்பதை இப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளுங்கள்.

எந்த வீட்டில் சுமங்கலிப் பெண்கள் சிரித்த முகத்துடன் தினமும் மாலை வேளையில் விளக்கேற்றி வைக்கிறாரோ, அந்த வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் எப்போதும் நிறைந்து காணப்படும். சுமங்கலிப் பெண்கள் உடுத்தும் உடையில் கவனமாக இருப்பது நல்லது. ஏன் கவனமாக இருக்க வேண்டும்? வீட்டில் இருக்கும் மற்றவர்கள் யாரும் செய்யாத வேலைகளை, அந்த வீட்டின் குடும்ப பெண்கள் செய்து வருகின்றனர். உதாரணத்திற்கு விளக்கு ஏற்றுவது, தானம் அளிப்பது போன்ற செயல்களை அந்த வீட்டில் சுமங்கலி பெண்கள் தான் செய்கின்றனர். எனவே சுமங்கலிப் பெண்கள் தங்கள் உடையில் கவனம் செலுத்த வேண்டும்.

சுமங்கலிப் பெண்கள் கட்டாயம் கிழிந்த உடைகளை அணியவே கூடாது. நாம் எங்கு செல்ல போகின்றோம்? வீட்டில் தானே இருக்கிறோம் என்ற எண்ணத்தில் கிழிந்த துணிமணிகளை சுமங்கலிப் பெண்கள் உடுத்தினால், அந்த வீட்டில் தரித்திரம் உண்டாகும். சுமங்கலிப் பெண்கள் எப்போதும் நல்ல துணிமணிகளை உடுத்துவதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதுதான் உங்களுக்கும், உங்களின் குடும்பத்தாருக்கும் நீங்கள் பெற்று தரும் மரியாதையாக இருக்கும்.

சுமங்கலிப் பெண்கள் அசுத்தமான ஆடைகளை கட்டாயம் உடுத்தவே கூடாது. அசுத்தமான ஆடைகளை உடுத்திக்கொண்டு வீட்டின் தலை வாசலை தாண்டி செல்லவே கூடாது. அப்படி செல்லும்போது குடும்பத்தில் தரித்திரம் உண்டாகும். அசுத்தமான ஆடைகளில் மூதேவி வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது. ஏன்? சுமங்கலிப் பெண்கள் தான், இவற்றை கடைபிடிக்க வேண்டுமா? மற்றவர்கள் கிழிந்த உடைகளையும், அசுத்தமான ஆடைகளையும் உடுத்தினால் தரித்திரம் பிடிக்காதா? என்று கேள்வி கேட்டால், உங்களது கேள்வியே தவறு என்று கூறலாம். ஏனென்றால், முதலில் கூறியது தான், ஒரு வீட்டின் மகாலட்சுமியாக விளங்குவது அந்த வீட்டின் சுமங்கலி பெண்கள் தான். ஸ்ரீ தேவியை வீட்டிற்குள் அழைப்பதும், மூதேவியை வீட்டிற்குள் வரவழைப்பதும் சுமங்கலிப் பெண்கள் கையில்தான் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஒரு குடும்பத்தில் பெண்கள் அழுதுகொண்டே இருந்தால், சுலபமாக வீட்டில் மூதேவி நுழைந்து விடுவாள். மூதேவி நுழைந்த வீட்டிற்குள் பொருளாதார நிலை பாதிப்பு ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி சீர்குலையும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் தாழ்ந்து போகும். உழைத்த பணம் வீட்டில் தங்காது. வீண் விரயங்கள் ஏற்படும். அதனால்தான் குடும்பத்தில் பெண்களை அழ வைப்பது பாவமாக சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுமங்கலிப் பெண்கள் ஓட்டை விழுந்த துணிமணிகளை உடுத்துவதும் தவறு. நீங்கள் உடுத்தியிருக்கும் துணியில் தவறுதலாக நெருப்பு பட்டு, ஆடையின் நூலிழைகள் பாழ்ப்பட்டிருக்கும் அல்லது விளக்கினாலோ, ஊதுபத்தியினாலோ ஓட்டை ஏற்பட்டிருக்கலாம். இது போன்ற துணிமணிகளை கட்டாயம் சுமங்கலிப் பெண்கள் தவிர்க்க வேண்டும். சிறிய, மெல்லிய ஓட்டை விழுந்து இருந்தாலும் கூட அந்த உடையை உடுத்தக்கூடாது.

குடும்பத்தின் ஆணிவேராக விளங்குவது சுமங்கலிப் பெண்கள். சுமங்கலிப்பெண்கள் கட்டாயம் நைட்டி போட்டுக் கொண்டு விளக்கு ஏற்றக்கூடாது. உடை மாற்றிக் கொண்டு விளக்கு ஏற்றுவதற்கு கட்டாயம் சோம்பேறித்தனமாக தான் இருக்கும். ஆனால் உங்களின் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு நீங்கள் இதை செய்வது தவறில்லை. நாள் முழுவதும் உழைத்த வேர்வை துளிகளும், அழுக்குகளும் அசுத்தமாக அந்த உடையில் படர்ந்திருக்கும். எனவே அத்தகைய உடைகளை உடுத்திக் கொண்டு விளக்கு ஏற்றும் பொழுது மகாலட்சுமி அந்த வீட்டில் வாசம் செய்ய மாட்டாள்.

கிழிந்த துணிகளை தானம் கொடுப்பதும் தவறான விஷயம் தான். வீடு துடைக்க வேண்டுமானால் பயன்படுத்தி கொள்ளலாம். ஓட்டை விழுந்த துணிகளை பாத்திரம் வாங்க வைத்து கொள்ளலாம். ஆனால் சுமங்கலி பெண்கள் இவற்றை உடுத்துவதை கட்டாயம் தவிர்த்தால் குடும்பத்தில் தரித்திரம் ஏற்படாமல் என்றும் சுபீட்சத்துடன் விளங்கும் என்பதில் சந்தேகம் இல்லை...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

12 ஆழ்வார்கள் | பொய்கையாழ்வார் ( 1 )

தமிழ்க் குமரியின் நெற்றித் திலகம் போல் தொண்டை நாடு திகழ்கிறது. அவளுடைய புன்சிரிப்பு போல் நாடு அங்கு இயற்கை நெடுகிலும் புத்திளமையின் பொலிவு படர்ந்திருக்கும். அத்தொண்டை நாட்டில் தொன்று தொட்டு பழம்பெரும் நகராகக் காஞ்சிபுரம் விளங்கி வருகிறது. இது கச்சி என்றும் திரு அத்தியூர் (சின்னக்காஞ்சிபுரம்) என்றும் வழங்கப்படுகிறது. ஒரு காலத்தில் சோழ நாட்டின் தலைநகராகவும் பிறகு பல்லவ நாட்டின் தலைநகராகவும் காஞ்சிபுரம் விளங்கியது. இக்காஞ்சிபுரம் இயற்கை எழில் மிகுந்த ஒரு நகரம்.

இத்தகு சிறப்பு வாய்ந்த காஞ்சி நகரில் பல வைணவ தலங்களும், பல சிவ தலங்களும் உண்டு. அவ்வைணவ தலங்களுள் திருவெஃகா என்பதும் யதோத்காரி சன்னிதி என்பதும் ஒன்றாகும். அங்கு திருமாலின் பெருங்கருணை நிறைந்திருக்கும். பக்தர்களின் பக்திப்பாடல்கள் எக்காலத்தும் ஒலித்துக் கொண்டிருக்கும். அங்கு சொன்ன வண்ணம் செய்தான் (யதோத்காரி) சன்னிதியின் அருகே தேவர்களும் வானுலகக் கன்னியர்களும் நீராடுவதும், வீடு பேற்றை அளிக்கும் சிறப்புடையதும், பரந்தாமனின் கருணை நெஞ்சைப்போன்று மிகக் குளிர்ச்சி பொருந்தியதுமான ஒரு பொய்கை. அப்பொய்கையிலேள நறுமணத்தை அள்ளிவீசும் அழகான செந்தாமரை, வெண்டாமரை, கருங்குவளை, நீரோற்பலம், அல்லி முதலான பூக்களெல்லாம் பூத்துக்குலுங்கும் வண்டினங்களிலே உயர்வான கரும்புகள் அம்மலர்களிலே சுரக்கும் இனிய தேறயுண்டு மயங்கி, காலைப்போதும் மாலைப்போதும் முடியும் பொழுதில் மலர்கள் கூம்ப அதனுள் அகப்பட்டுத் தத்தளிக்கும்.

அன்னங்கள் கூட்டம் கூட்டமாக மலர்களினூடே அமைந்து நீங்கி விளையாடும். இவ்வாறான சிறப்பு பொருந்திய பொய்கையில் மலர்ந்திருக்கும் பொற்றாமரை மலர் ஒன்றிலிருந்து இனிய வாசம் கமழும் துளசிச் செடி போல், அன்பே குணமாகக் கொண்டு அறிவொளி வீசும் ஞானச்சுடராக பக்தியின் முழுப்பொருளாக ஒரு மைந்தர் சித்தார்த்தி வருஷம் ஐப்பசி மாதத்தில் சுக்லாஷ்டமி செவ்வாய்கிழமையன்று திருவோண நட்சத்திரத்தில் அரங்கப் பெருமானின் ஐம்படைகளில் ஒன்றாகிய பாஞ்சசந்நியம் என்னும் திருச்சங்கின் அம்சமாக அவதரித்தார். அவர் பொய்கையில் அவதரித்த காரணத்தால் பொய்கையார் எனச் சிறப்பிக்கப்பட்டார்.

என் நெஞ்சம் அவனது அன்பையே எக்காலமும் எண்ணி எண்ணி மகிழச்சொல்கிறது. என் நாக்கு அவனது அழகிய திருமேனியை துளவ மாலை சூடிய மார்பை, செங்கமல கண்களை, சக்கராயுதம் தரித்த கையை, கழலணிந்த கால்களை, வெண்ணெய் ஒழுகும் செம்பவள உதடுகளை எந்நேரமும் புகழ்ந்து பாடிக்கொண்டேயிருக்க விழைகிறது என் கண்கள். பிறப்பறுக்கும் பெருமானை, உலகளந்த குறுமுனியை, மாயக்கள்ளனை, திருமகள் நாதனான கண்ணனைக் காண் என்று இயம்புகின்றன.

என் செவிகளோ அவன் தன் அருட்புகழ் பேசும் பாடல்களைக் கேட்க விரைகின்றன என்று எப்பொழுதும் சொல்லிக் கொண்டேயிருப்பார். தன்னை மறந்து பரமன் மேல் பாடி மகிழ்வார். அவன் அருங்குணங்களையும் அரிய செயல்களையும் புகழ்வார். நெடியோன் மாயனின் திருப்பெயர்களையெல்லாம் கூறிக்கூறிப் போற்றுவார். அப்போது அவர் கண்களிரண்டும் ஆனந்தக் கண்ணீரைச் சொரியும். அகம் கரைந்து உள் ஒடுங்கி திருமாலின் திவ்விய அழகில் தன்னையும் மறந்து போவார். பொய்கையார் பிறர் பொருளை விரும்ப மாட்டேன், கீழான தன்மையுள்ளவர்களுடன் நட்பு கொள்ள மாட்டேன், உயர்ந்தவரோடு சேர்ந்து வாழ்வேனே அல்லாமல் மற்றவர்களோடு சேரமாட்டேன்; திருமாலைத் தவிர வேறு தெய்வத்தைத் தெய்வம் என்று புகழமாட்டேன்; வணங்க மாட்டேன்; ஆதலால் நம்மை நாடி பிறப்பு இறப்புத் துன்பத்தைத் தரும் வினை இனி வரமுடியாது.

நயவேன் பிறர் பொருளை; நள்ளேன் கீழாரோடு உயவேன் உயர்ந்தவரோடு அல்லால்; வியவேன் திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன்; வருமாறு எம் மேல் வினை? என்றெல்லாம் திருமாலை பாடிப் பரவுவார், மேலும் அவர்.

ஏற்றான் புள் ஊர்ந்தான், எயில் எரிந்தான்,
மார்விடந்தான்
நீற்றான் நிழல்மணி வண்ணத்தான் கூற்று ஒருபால்
மங்கையான், பூமகளான் வார்சடையன், நீள்முடியான்
கங்கையான், நீள்கழலான் காப்பு

என்று பாடுவார்.பயோடேட்டா பிறந்த ஊர்:காஞ்சிபுரம், திருவெக்கா பொற்றாமரை பொய்கையில்அவதரித்தவர், 
பிறந்த நாள்:7ம்நூற்றாண்டு
நட்சத்திரம்:ஐப்பசி திருவோணம் (வளர்பிறை அஷ்டமி திதி)
கிழமை:செவ்வாய்
எழுதிய நூல்:முதல் திருவந்தாதி
பாடல்கள்:100
சிறப்பு:திருமாலின் சங்கின் அம்சம். வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேன்சொன் மாலை
இடராழி நீங்குகவே என்று ! இவ்வாறு நூறு பாடல்களைப்பாடியவர் பொய்கையாழ்வார். வைணவத்தினர் இவரை கவிஞர் தலைவன் என் போற்றுகின்றனர். இவர் காஞ்சி நகர் திருவெக்கா பொய்கையில் அவதரித்தார். பொய்கையில் அவதரித்த காரணத்தாலேயே இவர் பொய்கைஆழ்வார் என அழைக்கப்பட்டார். திருமாலின் கருணையால் அனைத்தையும் கற்றார். கற்றதின் பயனாய் இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தரக்கூடியது திருமாலின் தொண்டு தான் என்பதை உணர்ந்தார். அத்துடன் தன்னையே பெருமாளின் தொண்டிற்கு அர்ப்பணித்து கொண்டார். மொத்தம் 6 திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்துள்ளார். இவர்தான் முதலில் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை இவ்வுலகிற்கு அர்ப்பணித்தவர். சதா சர்வ காலமும் விஷ்ணுவின் நினைப்பிலேயே இருப்பார். தன்னையே மறந்து பகவானை பாடி மகிழ்வார். ஹரியும் சிவனும் ஒன்றுதான். ஹரியை வணங்குபவர்கள் சிவனை வெறுக்க வேண்டாம். சிவனை வெறுக்க வேண்டாம். சிவனை வழிபடுபவர்கள் ஹரியை பழிக்க வேண்டாம். இதை மக்களிடம் கூறிக்கொண்டதோடு ஹரியிடம் மாறாபக்தி கொண்டும் அவருக்கு சேவை செய்தும் வாழ்ந்து வந்தார். இறைவனை அடைந்து ஒன்றாக கலப்பது தான் ஆத்மாவின் தன்மை என்றும், இறைவனை பிரிந்திருப்பது தான் துன்பங்களுக்கெல்லாம் மூல காரணம் என்பதையும் பொய்கையாழ்வார் உணர்த்துகிறார். ஒரு சமயம் பொய்கை ஆழ்வார் திருக்கோவிலூர் மிருகண்டு முனிவரது ஆசிரமத்துக்கு சென்றார். அங்கு பூதத்தாழ்வாரும் பேயாழ்வாரும் வந்து சேர்ந்தனர். இவர்கள் மூவரும் நெருக்கியடித்து நிற்க அங்கு சங்கு, சக்கரத்துடன் திருமால் தோன்றி மூவருக்கும் காட்சியளித்தார். இவர் பேயாழ்வார் மற்றும் பூதத்தாழ்வாருடன் பல திவ்ய தேசங்களுக்கு சென்று பரந்தாமனைப் பாடி பணிந்தார். பெருமாளின் 108 திருப்பதிகளில் பொய்கையாழ்வார் தனியாக மங்களாசாசனம் செய்யாமல் , பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து மொத்தம் 6 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார். பொய்கையாழ்வார், திருமங்கை ஆழ்வார் (1) 1. காஞ்சிபுரம் (அருள்மிகு ஆதி கேசவ பெருமாள் திருக்கோயில், அஷ்டபுஜம், காஞ்சிபுரம்) பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார் (1) 1. திருக்கோயிலூர் (அருள்மிகு திரிவிக்கிரமர் திருக்கோயில், திருக்கோயிலூர், விழுப்புரம்) பொய்கையாழ்வார், திருமங்கை ஆழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார் (1) 1. திருவெக்கா (சொன்ன வண்ணம் செய்த பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம்) பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார் (2) 1. திருவேங்கடம் (அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திருப்பதி, சித்தூர், ஆந்திரா)
2. திருப்பாற்கடல் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடி பொடியாழ்வார் (1) 1. ஸ்ரீரங்கம் (அருள்மிகு ரங்கநாதன் திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சி...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

Monday, 4 May 2020

சமையல் அறையில் இருக்கும் உப்போடு சேர்த்து, இதையும் கட்டாயம் வைக்க வேண்டியது பெண்களுடைய கடமை! இதன்மூலம் ஐஸ்வர்யம் மேலும் பெருகும்.!!

ஒரு பெண் தன் வீட்டின் பூஜை அறைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறாலோ, அதே அளவிற்கான முக்கியத்துவத்தை சமையலறைக்கும் கொடுக்க வேண்டும். அந்தப் பெண்ணின் கையில் தான், குடும்பத்தின் ஆரோக்கியமே அடங்கியுள்ளது என்று சொன்னால் அது பொய்யாகாது. தன்னுடைய குடும்பத்தின் ஆரோக்கியம், தன் கையில் உள்ளது என்பதை நினைவில் கொண்டு தன்னுடைய சமையலறையை தூய்மையாகவும் வைத்துக்கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.

தன் குடும்பத்தின் ஆரோக்கியம் குறைந்து விடக்கூடாது, என்பதாலேயே சமையலறை கட்டுப்பாட்டை அடுத்தவரிடம் சில பெண்கள் கொடுக்க விரும்ப மாட்டார்கள். ‘என் சமையலறையை பயன்படுத்தும் உரிமை எனக்கு மட்டும்தான் உள்ளது’. என்று பிடிவாதமாக சொல்லும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்! இப்படிப்பட்ட இந்த சமையலறையில் உப்பை குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது குடும்பத் தலைவியின் ஒரு கடமை. உப்புடன் சேர்த்து இன்னும் சில விஷயங்களையும் கவனித்துக் கொண்டால் வீட்டில் ஐஸ்வர்யம் குறையாமல் இருக்கும் என்று சொல்கிறது சாஸ்திரம். அது என்னென்ன பொருட்கள் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

சமையலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும், மஞ்சள் தூள் வீட்டு சமையலறையில் என்றும் குறையாமல் இருக்க வேண்டும். சுத்தமாக தீருவதற்கு முன்பாகவே மஞ்சள் தூளையும் வாங்கி வைத்துக் கொள்வது மிக மிக அவசியம். இதேபோன்று அந்த காலங்களில் எல்லாம் மண் பானைகள், பித்தளை அண்டா, செம்பு தவலை, இவற்றிலெல்லாம் தண்ணீரை குறையாமல் வைத்து இருப்பார்கள். இந்த காலம் நவீன காலமானதால், RO வாட்டர் டேங்கிலிருந்து தண்ணீரை குழாய் மூலம் பிடித்து குடிக்கின்றோம். இருந்தாலும் ஒரு சிறிய குடத்திலோ அல்லது ஒரு சிறிய சொம்பிலாவது தண்ணீர் நிரம்பி இருக்கும் படி, சமையல் அறையில் வைக்க வேண்டியது அவசியம்.

அடுத்ததாக மிக மிக முக்கியமாக சமையல் அறையில் இருக்க வேண்டிய ஒரு படம் அன்னபூரணியின் திருவுருவப்படம். சமையலறையில் உப்பை குறையாமல் பார்த்துக் கொள்வது என்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு இந்த அன்னபூரணியின் படம் சமையல் அறையில் இருக்க வேண்டியதும் மிகவும் முக்கியமான ஒன்று.

பூஜை அறையில் அன்னபூரணி திரு உருவப்படத்தை வைத்து வழிபட்டாலும், சமயலறையில் கட்டாயம் ஒரு அன்னபூரணியின் படம் இருக்க வேண்டும். நீங்கள் தினம்தோறும் சமைக்கும் சாப்பாடு அமிர்தமாக மாறுவதற்கு அன்னபூரணியின் திருவுருவப்படம் அவசியம் தேவை.

அசைவம் சமைக்கும் சமயத்தில் தெய்வத்தின் திருவுருவப்படம் அந்த அறையில் இருப்பதை விரும்பாதவர்கள், அன்று மட்டும் எடுத்து பூஜை அறையில் வைத்து கொள்ளலாம். தினம்தோறும் சமையலை தொடங்குவதற்கு முன்பு பெண்கள், இந்த அன்னபூரணியை வணங்கிவிட்டு சமையல் செய்யத் தொடங்கினால், அவளுடைய பரம்பரைக்கே சாப்பாட்டிற்கு பஞ்சம் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

உங்கள் வீட்டில் இந்த திசையில் மட்டும் இந்த புகைப்படங்களை மாட்டி வைக்காதீர்கள். புகைப்படங்களும் அதன் திசைகளும்.!!

எல்லோரது வீட்டிலும் கட்டாயம் இடம்பெறும் ஒரு முக்கிய பொருளாக இருப்பது புகைப்படம். புகைப்படம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நல்ல நினைவுகளை நினைவூட்டக்கூடிய அரும்பெரும் பொக்கிஷங்கள் ஆகும். இவற்றை முறையாக பராமரிப்பதில் சிலர் அதிக ஆர்வம் கொள்கின்றனர். நாம் எவ்வளவுதான் மன இறுக்கத்தில் இருந்தாலும் பழைய புகைப்படம் ஒன்றை பார்க்கும் போது மனம் அப்படியே முற்றிலுமாக மாறி விடுவதை நம்மில் பலரும் உணர்ந்திருப்போம். ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி நம்மை ஆட்கொண்டு விடும் சக்தியை இப்புகைப்படங்கள் பெற்றுள்ளது. அத்தகைய புகைப்படங்களை எந்த திசையில் மாட்ட வேண்டும்? எந்தத் திசையில் மாட்ட கூடாது? ஏன் அந்த திசையில் மாட்டி வைக்கக் கூடாது? என்பதைப் பற்றி இப்பதிவில் இனி காணலாம்.

வீட்டில் மாட்டி வைத்திருக்கும் புகைப்படங்களில் முக்கியமாக இருப்பது திருமண புகைப்படம். திருமண புகைப்படங்கள் நல்ல அனுபவங்களையும், நம்மை சார்ந்த உறவுகளை அடிக்கடி நினைவூட்ட கூடிய ஒன்றாக இருக்கிறது. திருமண புகைப்படங்கள் வீட்டில் கட்டாயம் இடம்பெற வேண்டிய புகைப்படங்களில் ஒன்றாக இருக்க வேண்டும். அனைவரது கண்களிலும் தினமும் பார்க்கும் வண்ணம் இப்புகைப்படம் மாட்டி வைப்பது நல்லது.

முந்தைய காலங்களில் எல்லாம் வம்சா வழியாக வரும் அனைவரது புகைப்படங்களும் வரிசையாக, அழகாக மாட்டி வைக்கப்பட்டிருக்கும். எந்த வீட்டிற்கு சென்றாலும் இக்காட்சியை நம்மால் காண முடிந்தது. இதன் உளவியல் காரணம் மிகவும் விசித்திரமானவை. இதுபோன்று வரிசையாக மாற்றி வைக்கும் புகைப்படங்களை தினமும் காணும் பொழுது, நம் உடலில் நேர்மறை சக்திகள் ஊடுருவும் வாய்ப்புகள் உருவாகும் என்கிறது ஆய்வுகள். இச்செயல் நம்முடைய சந்ததிகளை நாம் தெரிந்து கொள்ளவும் உதவிகரமாக இருக்கும். நம் முன்னோர்களின் ஆசியும் இதன் மூலம் நமக்கு பரிபூரணமாக கிட்டும்.

இதேபோல் குடும்பத்தில் இருக்கும் அனைவரது புகைப்படங்களையும், உங்களது மகிழ்ச்சியான தருணங்களையும் நினைவூட்டும் வகையில் புகைப்படங்களை அனைவரும் காணும் வண்ணம் எந்த திசையில் வேண்டுமானாலும் நீங்கள் மாட்டி வைக்கலாம். ஆனால் இதில் புகைப்படங்கள் மாட்ட கூடாத திசை என்பது தெற்கு திசையாக இருக்கிறது. தெற்கு திசையை நோக்கியபடி உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்களை கட்டாயம் மாட்டி வைக்கக் கூடாது என்கிறது சாஸ்திரம். உயிருடன் இருக்கும் நபரின் புகைப்படத்தை தெற்கு நோக்கியபடி மாட்டி வைப்பதால் வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் அமையும்.

இறந்தவர்களின் புகைப்படங்களை தான் தெற்கு திசையில் மாட்டி வைக்க வேண்டும் என்பது சாஸ்திரம் கூறும் முறையாக இருக்கிறது. இந்த காரணத்தினால் தான் அத்திசையில் உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்களை மாட்டி வைக்கக்கூடாது என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக திருமண புகைப்படங்களை எந்த காரணம் கொண்டும் தெற்கு திசையை நோக்கி மாட்டி வைக்காதீர்கள்.

தெற்கு திசையில் மாட்டக்கூடாது என்பது சரியா? அல்லது தெற்கு திசையை நோக்கியபடி மாட்டக்கூடாது என்பது சரியா? என்ற கேள்விகள் எழும். தெற்குத் திசையை நோக்கியபடி மாட்டக்கூடாது என்பதே சரியான பதில். முற்றிலுமாக தெற்கு திசையை தவிர்ப்பது உத்தமம். இருப்பினும் வேறு வழி இல்லாத பட்சத்தில் தெற்கு திசையை நோக்கியபடி மாட்டாமல் இருப்பது நல்லது. தெற்கு திசையை நோக்கியபடி தான் எங்களால் மாட்டி வைக்க முடியும் எனும் பட்சத்தில், நீங்கள் அந்தப் புகைப்படங்களை வேறு ஏதேனும் ஸ்டாண்டில் அல்லது செல்ஃப்களில் வைப்பதே நல்லது...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

5 ) கழுதைகளுக்கு இறக்கம் காட்டிய சுடலைமாடன்கழுதருட்டி, கேரளா.!!

மாந்த்ரீகவாதி மாகாளி பெரும்புலையனை வதம் செய்த பின்னர். மாயாண்டி சுடலைமாடன், மாஇசக்கியுடன் கழுத உருட்டி வருகிறார். அதாவது ஆரியங்காவுக்கு முன்புள்ள மலையடிவாரப்பகுதி. இங்குள்ள மலையில் எண்ணற்ற பயிர்கள் பயிடப்பட்டிருந்தது. எஸ்டேட்களும் இருந்தது. இங்கு வசிக்கும் மக்கள் தங்களுக்கு தேவையான தானியங்களை கீழே இருந்து கழுதைகளுக்கு மேல் பொதி மூட்டையாக கட்டி, மலைக்கு கொண்டு செல்வார்கள். இந்த மலையில் இருந்த இன்னொரு புலையனான மாந்த்ரீக வாதி, தானியம் மற்றும் பண்டங்கள் கொண்டு வரும் விவசாயி, பொதுமக்கள் என எல்லோரிடமும் நான்கில் ஒரு பங்கை தனக்கு இனமாக  கொடுத்துச் செல்ல வேண்டும். என்று கட்டளையிட்டான். அப்படி கொடுக்க மறுக்கும் நபர்களின் தானிய பொதி மூட்டையை சுமந்து வரும் கழுதையை, மலை உச்சி ஏறிவரும் போது, தனது மாந்த்ரீக சக்தியால் கீழே உருட்டி விடுவான். கீழே உருண்டு விழும் கழுதைகள், கல்லடையாற்றில் விழுந்து இறந்துவிடும்.
 
இதனால் மாந்த்ரீக வாதிக்கு அஞ்சி, அம்மக்கள் தானியங்களை கொடுத்து வந்தனர். இருப்பினும் கழுதை உருளும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்ததே தவிர குறையவில்லை, காரணம் கொடுத்தவன் பொதி மூட்டைகள், கொடுக்காதவன் பொதி மூட்டைகள் என வேறுபாடு தெரியாமல் மாந்த்ரீகவாதி செய்த செயலால் மலைவாசிகள் அவதிப்பட்டு வந்தனர். இதனை அவ்வழியே வந்த மாடனும், மாஇசக்கியும் அறிகின்றனர். மாடன், மாந்த்ரீகவாதியை துவம்சம் செய்து வதம் செய்ய முயலும் போது, அவன் சரணடைந்து, தன்னை அடியவனாக ஏற்றுக்கொள்ளுமாறு பணிகிறான். சுடலையும் அவனை மன்னித்து அடியவனாக ஏற்றுக்கொள்கிறார். புலயனாக இருந்தவன் மாடனால் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் புலமாடன் என்று அழைக்கப்பட்டான்.
கழுதைகள் தவறியும் கூட கல்லடை ஆற்றில் விழுந்து விடக்கூடாது என்பதற்காக, ஆற்றின் கரையோரம் சுவாமியும், அம்மனும் நிலையம் கொண்டுள்ளனர். கழுதையை புலையன் உருட்டியதால் இந்த இடம் கழுதருட்டி என்று அழைக்கப்படுகிறது.

இங்குள்ள ஆலயத்தில் சுடலைமாடன், கருப்பண்ணசாமி என்ற நாமத்தில் அழைக்கப்படுகிறார். தலைமுடியை ஒரு சேர கொண்டையிட்டு, வலது கையில் வீச்சருவா தாங்கி, இடது கையில் கதாயுதம் கொண்டு நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். வலது பக்கம் தனிக்கோயிலில் கணபதியும், எதிரில் நடு கல்லாக தனிச்சந்நதியில் இசக்கியம்மனும், அடுத்த சந்நதியில் புலமாடனும் அருள்பாலிக்கின்றனர்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

நினைத்தது உடனே நிறைவேற, கோடி நன்மைகள் பெற காமதேனு வழிபாட்டை இப்படி செய்து பாருங்கள்.!!

கடன் வாங்காமல் வாழ்க்கையின் சக்கரமே ஓடாது என்ற நிலையில் தான் இன்று பலரும் ஓடிக் கொண்டிருக்கிறோம். இந்த ஓட்டம் எப்போது ஓயுமோ? என்ற பயமே! மனிதனின் ஆயுளை குறைத்து விடுகிறது என்பது அதிர்ச்சி தரும் சர்வே ரிப்போர்டாக இருக்கிறது. எதற்காக ஓடிக்கொண்டிருக்கிறோம்? ஏன் ஓடிக் கொண்டிருக்கிறோம்? என்று தெரியாமலே எதிர்கால நன்மைகள் என்று கூறிக்கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறோம். இப்படியே சென்று கொண்டிருந்தால், எப்போது தான் நம்முடைய வாழ்க்கையை வாழ்வோம்? என்பது கேள்விக்குறி தான். அதற்காக இந்த ஓட்டத்தை நிறுத்தவும் முடியாது என்பதே வேதனைக்குரிய ஒரு விஷயமாக இருக்கிறது. உங்களின் எல்லா பிரச்சனைகளுக்கும் இந்த காமதேனு வழிபாடு சிறந்த தீர்வு தரும். காமதேனு வழிபாட்டையும், அதை எப்படி செய்ய வேண்டும் என்பதையும் இப்பதிவில் இனி காணலாம்.

காமதேனு படமோ அல்லது விக்ரஹமோ வங்கி வைத்து கொள்ளுங்கள். காமதேனு வழிபாடு, நினைத்ததை நினைத்தபடி நடத்திக் காட்டும் அற்புத வழிபாடு. காமதேனு வழிபட்டால் உங்களது வீடு சுபீட்சம் பெறும். மஹாலக்ஷ்மி கடாட்சம் நிறைந்து காணப்படும். பூஜை அறையில் சில விஷயங்களை வைத்து வழிபடுவதால் உங்களுடைய வேண்டுதல்கள் எளிதில் நிறைவேறக் கூடிய வரம் கிட்டும். அவ்வகையில் காமதேனு விக்ரஹம் வைத்து வழிபடுவதால் கேட்ட வரம் உடனே கிடைக்கும். எவ்வளவோ கஷ்டதிற்கு தீர்வு காண நாம் முறையிடும் ஒரே இடம் நம் பூஜை அறை தான். பூஜை அறையில் காமதேனு விக்ரஹம் இருப்பது நல்ல அதிர்வலைகளை உண்டு பண்ணும். விக்ரஹம் இல்லாதவர்கள் காமதேனு படத்தை வைத்து பூஜை செய்யலாம்.

காமதேனு விக்ரஹம் கன்றுடன் கூடியதாக கட்டாயம் இருக்க வேண்டும். விக்ரஹம் வைத்திருப்பவர்கள் தினமும் காமதேனுவை வழிபட்டு வந்தால், சகல சௌபாக்கியங்களும் பெறுவீர்கள். காமதேனு விக்ரஹம் வைத்திருப்பவர்கள் அந்த விக்ரஹத்திற்கு தினமும் பாலாபிஷேகம் செய்ய வேண்டும். இவ்வாறு தினமும் பாலாபிஷேகம் செய்து வருவதன் மூலம் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் படிப்படியாக முற்றிலுமாக நீங்கிவிடும்.

காமதேனு விக்ரஹத்தின் கொம்பு பகுதியில், நெற்றிப் பகுதியில், கால்களில், மடியில் என மஞ்சள், குங்குமம் இட வேண்டும். பசுவின் கன்றிற்கும் இது போல் மஞ்சள், குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும். காமதேனுவிற்கு மல்லிகைப்பூ சாற்ற வேண்டும். பின்னர் உங்களின் இரு கரங்களாலும் காமதேனுவை தொட்டபடி, உங்களுக்கு இருக்கும் குறைகளை, கோரிக்கைகளை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். அவ்வாறு வேண்டி கொண்டபின் அப்படியே கைகளை எடுக்காமல், கீழே உள்ள மந்திரத்தை 54 முறை உச்சரிக்க வேண்டும்.

காமதேனு மந்திரம் : ஓம் சுபகாயை வித்மஹே! காமதாத்திரியை, சதீமஹி தந்னோ தேனு ப்ரசோதயத்.

இந்த காமதேனு மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து, பாலாபிஷேகம் செய்து வந்தால் எல்லா செல்வங்களும், பணவரவும் பெற்று குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். கடன் தொல்லைகள் நீங்கும். பசுவை தெய்வமாக நினைத்து போற்றுபவர்களுக்கு எந்த விதமான கஷ்டங்களும் வாழ்வில் ஏற்படாது. பசுவிற்கு தானம் அளிப்பது ஏழேழு ஜென்மத்தில் செய்த பாவங்களையும் போக்கி விடும். கர்ம பலன்கள் குறைய தொடர்ந்து பசுவிற்கு அகத்திக்கீரை மற்றும் வாழைப்பழம் கொடுக்க வேண்டும். பசுவின் கோமியத்தை வீட்டை சுற்றி தெளித்து வர எந்த கெட்ட சக்தியும் உங்களது குடும்பத்தையே நெருங்கவிடாமல் செய்யும். நோய் தொற்று ஏற்படாமலும் பாதுகாக்கும்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

4 ) பெரும்புலையனை வதம் செய்தல்சாலியக்கரை.!!

(கேரளா)

கொட்டாரகரையிலே அன்னை பகவதி வாசலிலே ஏழுகிடாரம் திரவியத்தை சுடலை ஈசன் காத்துவரும் வேளையில் மலையாள நாட்டில் என்ன நடக்கிறது என்றால்……
மலைகளின் அரசி என்று வர்ணிக்கப்படும் மாநிலம் கேரளாவில் மாந்த்ரீகம் வளர்ந்தோங்கி இருந்த நேரம். இதில் மலையடிவாரப் பகுதிகளில் ஒன்றான நந்தன்புனலூர் தற்போது புனலூர் என அழைக்கப்படுகிறது.இங்கு வசித்து வந்த புலையன்மார்கள் தான் மாந்த்ரீகத்தில் பெருமளவில் ஈடுபட்டு வந்தனர். மாந்த்ரீகம் செய்து எதிரிகளை பழிவாங்கும் நிலை அதிகமாக இருந்தது. தெய்வ சக்தியை மிஞ்சி இருந்தது. இந்த மாந்த்ரீக வாதிகளுக்கு தலைவனாக மாகாளிப் பெரும் புலையன் இருந்தான். அவன் இதில் அதிக திறன் பெற்று திகழ்ந்தான். அதிக நிலம் வைத்திருந்த நிலச்சுவந்தார்கள்,  பயிரிடப்பட்ட நிலங்களில் தன்னுடைய மாந்த்ரீக சக்தியால் விளைச்சலின்றி செய்து விடுவான். பின்னர் தனது ஆதரவாளர்களை அனுப்பி, இதுக்கெல்லாம் காரணம் கெட்ட ஆவிகளும், ஏவல் பிரச்சனைகளும் என கூறி அதை மாற்ற சரியான ஆள் பெரும்புலையன் என்று மாந்த்ரீகவாதி இருப்பதாக கூறி வரச்செய்வான். அதை நம்பி வரும் நிலச்சுவந்தார்களிடம், அவருக்கு குடும்ப உறுப்பினர்கள், அல்லது பங்காளிகள், அல்லது பக்கத்து நிலத்துகாரர்கள் என எவர் ஒருவரை அடையாளம் காட்டி அவர்தான் இந்த ஏவல், செய்வினை உனக்கு வைத்திருக்கிறார் என்றும், அதை நான் மாற்றி தருகிறேன். என ஆறுதல் வார்த்தை கூறி அவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விளைச்சல் தோறும், பொன்னும், பொருளும் சன்மானமாக பெற்று விடுவான். இப்படி பல நிலச்சுவான்களையும், மன்னர் பரம்பரை ஆட்களையும் தன்வசப்படுத்தி வைத்திருந்தான். மாகாளிப் பெரும்புலையன்.

மாகாளிப்பெரும்
புலையனுக்கு குழந்தை இல்லை, அதனால் பிள்ளை இல்லையே என்று மாகாளிப்பெரும்புலையனின் மனைவி மிகவும் கவலையுற்றாள். இந்நிலையில் அவ்வையார் நோன்பு இருந்த சப்த கன்னியர்கள், செய்து வைத்திருந்த மா உருண்டையை காகம் ஒன்று எடுத்து வந்தது. மாந்த்ரீகன் வீட்டு துளசி மாடத்தின் அருகே தியானத்தில் இருந்த மாகாளிப்பெரும்புலையன் மடியில் போட்டது. அப்போது ஆகாயத்திலிருந்து ஒரு அசரிரீ கேட்டது. '' பெரும்புலையா!  இந்த மா உருண்டையை உன் மனைவியிடத்தில் கொடு. இதை உண்ட பின் அவளுக்கு அழகான பெண் பிள்ளை பிறக்கும்.'' என்றது. அதன்படி அந்த மா உருண்டையை தன் மனைவியிடத்தில் கொண்டு கொடுத்தான் மாகாளிப்பெரும்புலையன். அந்த மாஉருண்டையின் மகிமையால் கர்ப்பம் தரித்த மாந்த்ரீக வாதியின் மனைவி அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தாள். அந்த குழந்தைக்கு பாலூட்டி, அமுதூட்டி, அன்பாய் வளர்த்தெடுத்தார்கள்.  மாகாளிப்பெரும்புலையனின் குலதெய்வம் இசக்கியம்மன்(இசக்கியம்மனுக்கு நீலி என்றும் பெயர் உண்டு), மா உருண்டை உண்டதினால் பிறந்த குழந்தை என்பதாலும், தனது முதன்மை எழுத்து மா என்பதையும் சேர்த்து, குழந்தைக்கு, மாஇசக்கி என்று பெயரிட்டு அழைத்து வந்தனர். பருவம் அடைந்த மாஇசக்கி அறிவுடனும், அழகுடனும் திகழ்ந்தார்.
  மாந்த்ரீகவாதி, மகள் மாஇசக்கி, பருவம் அடைந்தாள். அவளுக்கு வகை, வகையான தங்க, வைரம், வைடூரியத்திலான நகைகளால் அலங்கரித்து பார்க்க எண்ணினான். எவரிடத்தில் விலை உயர்ந்த தங்க நகைகள் இருக்கிறது என்று வெற்றிலையில் மைபோட்டு பார்க்கிறான். அப்போது அவனுக்கு கொட்டாரக்கரையில் வீற்றிருக்கும் அன்னை பகவதியின் கோயிலுக்கு உட்பட்ட இந்திர கோட்டத்தில் சுடலைமாடன் காவலில் இருக்கும் ஏழுகிடாரம் திரவியம் தெரியவருகிறது. அதை எப்படி கவர்ந்து வரலாம் என திட்டமிட்டான். வெள்ளிக்கிழமை சுடலைமாடன் நடுநிசியில் நகர்வலம் செல்வார். அப்போது திரவியத்தை இரவோடு இரவாகச்சென்று களவாட நினைத்தான்.

திட்டமிட்டது போல் வெள்ளிக்கிழமை மாடன் நடுநிசியில் நகர் வலம் செல்கிறார். அந்த நேரம் மாகாளிப்பெரும்புலையன் தனது ஏவலர்களான பூதங்களை அனுப்பி அந்த திரவியங்களை கவர்ந்து செல்கிறான். நகர்வலம் முடிந்து சுடலைமாடன் வந்து பார்க்கிறார். பூதங்கள் வந்து சென்றது தெரிய வருகிறது. திரவியங்களை பார்க்கிறார். அவைகள் காணாமல் போயிருந்தது தெரிந்தது. உடனே தாயை அழைத்தார். நடந்ததை கூறினார். தாய் பகவதி கூறினாள்.
‘‘அவன் எடுத்துக் கொண்டு போக்கொட்டே, அத நீ தெறைக்கண்டா மோனே, அவன் ஒரு பயங்கர ஆளு’’ என்றாள் தேவி பகவதி.
மந்திரவாதி புலையன் எடுத்திட்டு போகட்டும். அவன் மோசமானவன், நீசன். நீ அவனை தேடி போகவேண்டாம்.

மாடன் கூறினார். ‘‘அம்மா நான் சென்று, அவனை வென்று திரவியத்தை மீட்டு வருகிறேன். வாழ்த்தி வரம் கொடுங்கள்’’ என்றார். சிறிது நேரம் யோசித்த தேவி, வாழ்த்தி வரம் கொடுத்தாள், வல்லயத்தை கையில் கொடுத்தாள். (வல்லயம் - ஐந்து மணிகள் இடம் பெற்றிருக்கும் வேல் கம்பு). தாய் பகவதியின் ஆசி பெற்று வெள்ளை குதிரையின் மீதேறி, வருகிறார் மாடன். புலையன்மார்கள் பெருமளவில் வசிக்கும் அடர்ந்த வனப்பகுதி நந்தன் புலையனூர். (இப்போது புனலூர் என்று அழைக்கப்படுகிறது).

புலையன்கள் இருக்கும் இடத்திற்கு வந்த சுடலைமாடனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. எப்படி நாம் புலையன் வீட்டை அடையாளம் காண்பது என்று, பிறகு வனத்திற்கு சென்று பாம்புகளுடன் பாம்பாட்டியாய் புனலூர் வந்தார். அங்கு நான்கு வீதிகள் சந்திக்கும் பகுதியில் உயர்ந்த கம்பு நட்டு அதிலிருந்து பாம்பு வித்தை காட்டுகிறார். அப்போது அவரின் காவலில் இருந்த ஏழு கிடாரம் திரவியத்திலுள்ள ஆபரணம் ஒன்று வீட்டின் மாடியில் நின்று கொண்டிருந்த இளம் பெண்ணின் கழுத்தில் மின்னுவதை கண்டார். புரிந்து கொண்டார். இவள் தான் பெரும்புலையன் மகள் என்பதை அறிந்து கொண்டார். மறுநிமிடம் சுடலைமாடன், மாகாளிப்பெரும்புலையன் வீட்டிற்கு பிச்சைக் கேட்டு வயது முதிர்ந்த பண்டாரம் வேடம் தரித்து செல்கிறார்.

‘‘அம்மே தர்மம்’’  கத்துகிறார். குரல் கேட்டு பிச்சையிட மாஇசக்கி, சீவி முடித்த நீண்ட கருங்கூந்தலில் நுனியில் சிறிதாய் ஒரு முடிச்சிட்டு அதில் மல்லிகை மலர் சூடியிருந்தாள். சந்தனகலரில் சிகப்பு பட்டை கொண்ட சேலை கட்டி, பொன்னிற மேனியில் பொன்நகை அணிந்து பேரழகுடன் வருகிறாள். வாசலில் யாருமில்லை. பின்வாசலில் இருந்து குரல் வருகிறது. பின்வாசலுக்கு மா இசக்கி வந்த போது, மீண்டும் முன் வாசலுக்கு வந்த சுடலைமாடன்,
"அம்மே எனக்கி நன்ன பசியாய் இருக்கி, ஆகாரம் எந்தயிங்கிலும் தா என்றார்". அவரைப்பார்த்து மாஇக்கி
‘‘பிச்சை எடுக்க வந்தவன் பிச்சை எடுத்திட்டு போனும், அவிடயும், இவிடயும் வர அவசியம் இல்லா’’
"நான் தர்மம் சோதிச்சு வந்தில்லா, நின்ன கல்யாணம் கழிக்க பெண்ணை காண வந்ததானு" என்றார் சுடலைமாடன்.
நான் பிச்சை கேட்டு வரலம்மா உன்னை பெண் கேட்டு வந்திருக்கிறேன் என்றார்.
‘‘ஓ... தலைமுடி நரைச்சு, தன்னை நடக்க ஜீவனில்ல, என்னை கல்யாணம் கழிக்க சோதிச்சு இல்ல. ம்... இ, விவரம் என்ட அச்சன் அறிஞ்சிங்கில், நின்னை கண்ட துண்டமாய் வெட்டிகளையும். அதில் ஏதொரு மாற்றமில்லா.’’ என்று எச்சரித்தாள் மாஇசக்கி.
அப்போது அவளின் கழுத்தில் மின்னிக் கொண்டிருந்த நகைகளை பார்த்து,
" ஏ... பெண்குட்டி, நிண்ட அச்சன், என்ட அம்மையோட ஆபரணம் முழுவன் மோசிச்சு கொண்டு போயி, அந்த ஆபரணமெல்லாம் எவிட இருக்கின்னு, எனக்கி காணுச்சு தா, ஞான் கொண்டு போயிக்கெலாம். ம்.. நின்ட அச்சன் மோசிச்ச ஆபரணம் திருச்சி தரணும். பரையனும் குட்டி,
இது வரைக்கும் நான் சாந்தமாய் ஆளு, என்ட ஆபரணம் தந்தில்லங்கில் ஞான், பயங்கர ஆளாய் மாறும். இன்ன எட்டு தெவச்சத்தினுள்ளில் நின்ன பலாசங்கம் செய்யும், நின்ட அச்சனை கொல்லும். நின்ட வீட்டை சர்வநாசம் பண்ணும்."
களவாடிய திரவியம் இருக்கும் இடத்தை நீ காட்டவில்லை என்றால் உன்னை
எட்டு நாளைக்குள்
கற்பழிப்பேன்.
என்று எச்சரித்து விட்டு என் அப்பன் சுடலைமாடன் செல்கிறார்.

சுடலைமாடன் வந்ததையும், அவர் சொன்னதையும் மாஇசக்கி, தன் தந்தை மாகாளிப்பெரும்புலையனிடம் கூறுகிறாள். உடனே மாந்த்ரீகவாதி, மாளிகை எழுப்பி அதனுள் மகளை தங்க வைத்தான். சுடலைமாடன் கூறிய எட்டாவது நாள், பல்லி ரூபம் கொண்டு, திறவுகோல் இடும் துவாரத்தின் வழியாக மாளிகைக்குள் சென்ற மாடன், எலுமிச்சை கனியாக மாறினார். தன் முன் எலுமிச்சம் கனி உருண்டு வருவதை கண்ட மாஇசக்கி, அதை கையில் எடுத்து முகர்ந்தாள். அதன் பயனாக கர்ப்பம் தரித்தாள். மாதங்கள் ஓடியது. மகள் கர்ப்பம் ஆனதை மாந்த்ரீகவாதி அறிந்தான்.

இந்த நிலையில் என் அப்பன் மாயாண்டி  சுடலைமாடன், மாகாளி பெரும்புலையனின் கட்டுப்பாட்டில் இருக்கும் விவசாய நிலங்களுக்குள் யானையாக சென்று அவைகளை நாசம் செய்தார். அதனால் அவதிப்பட்டவர்கள் மாந்த்ரீகவாதியிடம் வந்து முறையிட்டனர். அவன் மைபோட்டு பார்க்கிறான். அதில் இவற்றிற்கெல்லாம் காரணம் சுடலைமாடன் தான் என்பது தெரிகிறது. மாகாளிபெரும்புலையன் கொடுக்க வேண்டியதை கொடுத்து தனக்கு எதிரான சக்திகளை தன்னகத்தே கொண்டு வந்துவிடுவான். அப்படி கைதேர்ந்த மாந்த்ரீகவாதி, சுடலைமாடனை தன் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பூஜை போட தயாரானான். பூஜையின் உக்கிரத்தில் சுடலைமாடன் அவன் முன் காட்சி கொடுத்தார். "ம்...ம்.. ஹாய் பரஞ்சோட" என்றார். அப்போது மாந்த்ரீகவாதி கேட்டான். ‘‘நினக்கு எந்த வேணும், யான் கொடுக்கும், எனக்கி நீ ஒத்துப்போணும் மனசிலாயோ’’ உடனே சுடலைமாடன், "நினக்கு நான் கட்டுப்பட்டு நீ பறையுன்ன ஜோலிகள் செய்யுனுமங்கில் ஞான் பறையுன்ன பலி நினக்கு தரணும்." என்றார். தன் தந்தை சிவனார், சிறு தொண்ட நாயனாரிடம் பிள்ளைக்கறி கேட்டது போல, மாந்த்ரீகவாதியிடம் கேட்டார். எனக்கு எட்டடுக்கு பீடம் அமைத்து, பத்தடுக்கில் பரனும் கட்டி, ஆடு, கோழியோடு, தலைப்பிள்ளை சூலி பலி வேண்டும். அதுவும் அவள் வீட்டிற்கு ஒரு மகளாக இருக்க வேண்டும், அதுவும் தலை மகளாக இருக்க வேண்டும், மணமுடியாமல் கர்ப்பம் தரித்திருக்க வேண்டும் என்றார். அதற்கு மாந்த்ரீகவாதி, “இப்படி ஒரு பெண்ணை ஞான் எங்கு தெறட்டும்’’ என்றான்.

அப்போது சுடலைமாடன் கூறினார், அதான் உன் மகள் மாஇசக்கி இருக்கிறாளே என்று, உடனே மாந்த்ரீகவாதி, என்னது எனது மகளா? என்று கேட்க, நான் கேட்ட படி கொடுத்தால் உனக்கு மூன்றே முக்கால் நாளிகைக்கு நான் உனக்கு கட்டுப்படுவேன் என்றார். உடனே மாகாளிபெரும்புலையன் தனது மகள் மாஇசக்கியை தனது குல தெய்வ கோயிலில் சிறப்பு வழிபாடு இருப்பதாக கூறி அழைத்து வருகிறான். புனலூர் அடுத்திருக்கும் சாலியக்கரையிலுள்ள கானகப்பகுதிக்கு வருகிறார்கள். அங்கு சுடலைமாடனுக்கு பூஜை நடத்துகிறான். மாகாளிப்பெரும்புலையன். அப்போது மாஇசக்கி கூறுகிறாள்
" என் அச்சனே பெரும் புலையா, என்ன மோசம் செய்யப்போற, சண்டாள தேவாதைக்கு என்னை பலி கொடுக்கப்போறே, நீ கொள்ளிக்கு பிள்ளை அற்று கொடி முடிந்து போவாயடா என்று சபித்தாள்.
சுடலையின் மைந்தன்
சு.இளம் கலைமாறன்.
அதை பொருட்படுத்தாமல் புலையன்
மகள் நிறைமாத சூலியான மாஇசக்கியை பலியிடுகிறான். உயிர் துறக்கும் முன் துடித்துக்கொண்டிருந்த மாஇசக்கி, தன் வயிற்றில் இருந்த குழந்தையின் அழுகுரல் கேட்டு கண்விழித்து, அந்த குழந்தையை தன் கையினால் தன் வயிற்றை தானே கிழித்து எடுத்து தன் இடுப்பில் வைத்துக்கொண்டு மயங்கி விழுந்து மாண்டாள்.

சுடலைமாடன் மாந்த்ரீகவாதிக்கு கொடுத்த வாக்கின்படி அவனுக்கு கட்டுப்பட்டார். பெரும்புலையா கட்டளையிடு நிறைவேற்றி தருகிறேன் என்றார். அவன் கட்டளையிட்டான். மாடனே நீ இந்த சிமிழுக்குள் செல் என்றான். சிமிழுக்குள் ரூபம் மாறி சுடலைமாடன் சென்றார். மாந்த்ரீகவாதி இது தான் சந்தர்ப்பம் என்று எண்ணியவர், உடனே அவரை சிமிழுக்குள் வைத்து அடைத்தான். அடைப்பட்ட சிமிழுக்குள்ளே மாடன் அல்லல் பட்டார். செய்வதறியாது திகைத்தார். அங்குமிங்கும் ஓடுகிறார். யானை போல கதறுகிறார்.
புலி பாய்ச்சல் பாயலானார்.
பூனை போல பதுங்கலானார் பின்னர் மூன்றே முக்கால் நாழிகை முடியும் வரை காத்திருந்தார். ஆனால் மாந்த்ரீகவாதி, அந்த சிமிழை மண்ணுக்குள் புதைத்து விட்டு சென்று விட்டான்.

இடி, மின்னலுடன் கடும் மழை பெய்தது. மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்ட சிமிழ் வெளியே வந்தது. அது மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லபட்டு, கல்லடையாற்றில் கலந்தது.  ஆற்றின் வழியே மிதந்து வந்து கொண்டிருந்தது சிமிழ்.  கோயில் பூஜை முடிந்து வரும் தனது கணவன், மற்றும் மகள் பாதங்களை ஆற்று நீரில் கழுவ வேண்டும். என்பதற்காக புனலூரில் மங்கையர்களோடு மங்கையராய் நீர் எடுக்க வந்த மாந்த்ரீக வாதி மாகாளிப்பெரும்
புலையன் மனைவியின் குடத்திற்குள் நீரோடு நீராக சென்றது சிமிழ். வீட்டிற்கு கொண்டு வந்து  வைக்கிறாள். மகள் மாஇசக்கி எங்கே என்று கேட்டபடியே, கணவனின் பாதங்களை கழுவ முற்படும் போது சிமிழ் வெளிப்பட்டது. அந்த சிமிழை கையில் எடுத்த மாந்த்ரீக வாதியின் கையில் இருந்து கீழே நழுவி விழுந்தது. விழுந்த வேகத்தில் திறந்தது. அதிலிருந்து வெளிப்பட்ட சுடலைமாடன் மாகாளிப்பெரும்
புலையனை வதம் செய்தார். அவனது பூதங்களின் மூலம் ஏழு கிடாரம் திரவியத்தை மீ்ட்டு, அன்னை பகவதியின் இந்திர கோட்ட காவலில் வைத்தார். மாண்டு போன, மாஇசக்கியை உயிர் கொடுத்து எழ வைத்து தன்னோடு இணைத்துக் கொண்டார்.

மாஇசக்கியை பலி வாங்கிய அந்த இடம் தான் சாலியக்கரை. இங்கு சிறிய அளவில் கோயில் இருக்கிறது. சுடலைமாடன்  தனிக்கோயிலில் வலது கையில் வீச்சருவாவும், இடது கையில் பொந்தன் தடியும் கொண்டு நின்ற படி அருள்பாலிக்கிறார். கோயில் கூரை தகடுகளால் வேயப்பட்டிருக்கிறது. வெள்ளிக்கிழமை மட்டுமே இங்கு பூஜை நடக்கிறது. மேலும் ஆவணி, தை, மாத பிறப்புகளின் போது சிறப்பு பூஜை நடக்கிறது. சேவல் மட்டுமே இங்கு பலியிடப்படுகிறது. படையலின் போது சுருட்டு, மதுபானம் வைப்பதாகவும் இக்கோயில் பூசாரிகள் கிருஷ்ணபிள்ளை மற்றும் அவரது சகோதரர் செல்லப்பன் ஆகியோர் கூறினர்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

பிரம்ம முகூர்த்தத்தில் கண் விழிப்பவர்கள் எல்லோருக்கும் கோடீஸ்வரராகும் யோகம் வருவதில்லையே! அது ஏன்?

பிரம்ம முகூர்த்த நேரத்தில் கண்விழித்தால் நன்மை நடக்கும் என்பது எல்லோருடைய கூற்று. அது உண்மையும் கூட. இந்த உலகத்தில் கோடீஸ்வர யோகத்தை, பெற்றிருப்பவர்கள் அனைவருமே பிரம்ம முகூர்த்த நேரத்தில் கண்விழித்து தங்களுடைய பணிகளை தொடங்குகிறார்கள் என்பது பலருடைய கருத்தாக இருந்து வருகிறது. ஆனால், பிரம்ம முகூர்த்த நேரத்தில் எந்திரிக்கும் எல்லோருக்குமே இந்த அதிர்ஷ்டம் கிடைக்கிறதா? என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. அது ஏன், என்பதை பற்றிய ஒரு விரிவான விளக்கத்தையும், பிரம்ம முகூர்த்த நேரத்தில், குறிப்பாக எந்த கிழமையில், எந்த கடவுளை வழிபட்டால் கோட்டீஸ்வர யோகம் கிடைக்கும் என்பதைப் பற்றியும், பிரம்ம முகூர்த்த நேரத்தில் கண்விழிக்க முடியாதவர்களை எப்படி கண் விழிக்க வைப்பது என்பதை பற்றியும் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

முதலில் பிரம்ம முகூர்த்தத்தில் கண் விழிப்பவர்கள் அனைவராலும் கோடீஸ்வரராக முடியவில்லையே! இந்த கேள்விக்கு பதிலை பார்த்துவிடுவோம். தினம்தொரும் டீக்கடையில் வேலை செய்பவர் அதிகாலை 3 மணிக்கே கண்விழித்து வேலைக்கு செல்கிறார். அவர் தினந்தோறும் பிரம்ம முகூர்த்தத்தில், தன் வேலையை தொடங்குகிறார். அவர் கேட்கிறார்? என்னால் மட்டும் ஏன் கோடீஸ்வரராக முடியவில்லை? என்று. சரியான கேள்வி தானே!

தன்னுடைய பணியை பிரம்ம முகூர்த்த நேரத்தில் தொடங்கும் இவருடைய மனநிலை எப்படி இருக்கிறது? என்பதை பாருங்கள். ‘என்னடா இது வாழ்க்கை? தினந்தோறும் இவ்வளவு காலையிலேயே எழுந்து வேலைக்கு செல்ல வேண்டுமா? என்ற சலிப்போடு தான் செல்வார். அதிகாலை செய்யக்கூடிய வேலை நமக்கு கிடைத்திருக்கிறது. ஆக, காலையில் தீபம் ஏற்றி வைத்து இறைவனை முழுமையாக வழிபட்டு விட்டு, சந்தோஷமாக செல்கிறாரா? அப்படி சந்தோஷமாக சென்றால் கட்டாயம் அவரது வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும்.

உங்களுடைய எண்ணம் தான் வாழ்க்கை. நல்லெண்ணத்தோடு மனதை சந்தோஷமாக வைத்துக் கொண்டு, எவரொருவர் நேர்மறை எண்ணத்தோடு, பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து தன் பணிகளைத் தொடங்குகிறாரோ அவர்களுக்கு மட்டுமே பலன். சலிப்போடு எழுந்து செய்யும் வேலைக்கு பலன் கிடைக்கவே கிடைக்காது என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களுடைய நல்ல எண்ணங்கள் தான் பிரபஞ்சத்திலுள்ள கடவுளின் சக்தியையும், சித்தர்களின் சக்தியையும் பெற்று தரும். அந்த எண்ணம் தான் நல்ல உறவினர்களையும் நல்ல நண்பர்களையும் உங்களுக்குப் பெற்றுத் தரும். பிரம்ம முகூர்த்த நேரத்தில் தயவுசெய்து முன்னோர்கள் எல்லாம் சொல்வார்களே, ‘மூக்காலஅழுது கொண்டு’ எந்திரித்து நீங்கள் ஒரு வேலையை செய்தால் அதன் மூலம் உங்களுக்கு பலன் கிடைக்கவே கிடைக்காது. மனநிறைவோடு, மனத் திருப்தியோடு செய்து பாருங்கள் நீங்களும் கோடீஸ்வரர் தான்.

அடுத்ததாக பிரம்ம முகூர்த்த வேளையில் மனநிறைவோடு கண்விழித்து வியாழக்கிழமை அன்று, பெருமாளுக்கு ஒரு நெய் தீபம் ஏற்றி வைத்து, மனதார பெருமாளை வழிபட்டு வந்தால், உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. இது ஒரு சூட்சும ரகசியம்.

தொடர்ந்து 48 வாரங்கள் முயற்சி செய்து பாருங்கள். நல்ல பலன் உண்டு. உங்கள் வாழ்க்கையை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல என்னென்ன வழிமுறைகள் எல்லாம் இருக்கிறதோ, அதோடு சேர்த்து, இந்த ஆன்மிக வழிபாட்டையும் விடாமல் முயற்சி செய்து கொண்டு வந்தால் நிச்சயமாக பலன் உண்டு.

அடுத்ததாக சில பேரால் பிரம்ம முகூர்த்த நேரத்தில் கண்விழிக்க முடியவே முடியாது. என்னதான் மனதில் ‘காலையில் எந்திரிக்க வேண்டும்! எந்திரிக்க வேண்டும்!’ என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தாலும், காலையில் தூங்கி விடுவார்கள். இதை நம் முன்னோர்கள் மூதேவி உள்ள வீட்டில்தான் இப்படி நடக்கும். மூதேவி படிந்த முகத்தில்தான் தூக்கம் வந்து கொண்டே இருக்கும் என்று சொல்லுவார்கள்.

இந்த மூதேவியை விரட்ட ஒரு சிறந்த வழி உள்ளது. இதை எத்தனை பேர் செய்வார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இதை நம் முன்னோர்கள் செய்து வந்தார்கள். எல்லோருக்கும் தெரிந்திருக்க கூட வாய்ப்பு இருக்கலாம். அது கோமியம். இரவு தூங்கும் முன்பு கோமியத்தை சுள்ளென்று முகத்தில் அடித்து கழுவவேண்டும். காலை கண் விழித்த உடன், அந்த கோமியத்தை முகத்தில் சுழற்றி அடித்து கழுவவேண்டும்.

சரி. இது உங்களால் முடியவில்லை என்றால், நீங்கள் முகம் கழுவும் தண்ணீரில் ஒரு சொட்டு கோமியத்தை விட்டு உங்கள் முகத்தை கழுவிக் கொண்டு, உங்கள் வீடு முழுவதும் அந்த கோமியம் கலந்த தண்ணீரை தெளித்து விடுங்கள். வீட்டிலிருந்த மூதேவி விலகி விட்டால், நிச்சயம் பிரம்ம முகூர்த்த வேளையில் உங்களால் உறங்க முடியாது. சந்தோஷமாக கண் விழிக்கும் சூழ்நிலை உண்டாகும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவை நிறைவு செய்து கொள்ளலாம்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

Sunday, 3 May 2020

எதிர்பாராமல் ஏற்பட்ட தடைகளையும், சுலபமாக தகர்த்தெறியும் மந்திரம்! இன்றைய சூழ்நிலைக்கு இது அவசியம் தேவை.!!

இன்றைக்கு உலகம் இருக்கும் சூழ்நிலையில் எதிர்பாராமல் ஏற்படும் பிரச்சினைகளால், எதிர்பாராமல் பல இன்னல்களை நம் வாழ்க்கையில் சந்திக்க நேரிடுகிறது. அதாவது வருமானத்தில் தடை, வியாபாரத்தில் தடை, ஆரோக்கியத்தில் தடை, இப்படி கடந்த இரண்டு மாதமாக எதிர்பாராத பல தோல்விகளை சந்தித்து வந்து கொண்டிருக்கின்றோம். இந்த சூழ்நிலையில் ஏதாவது ஒரு வகையில் விடிவுகாலம் கிடைத்துவிடாதா என்று வீட்டிலிருந்தே சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள் ஏராளமானோர்.

இறைவனை வேண்டிக்கொண்டு இன்னல்கள் தீர வேண்டும் என்ற பிரார்த்தனை ஒரு பக்கம் இருக்க, எதிர்பாராத தடைகளை தகர்த்தெறிய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கும் மந்திரங்களை உச்சரிப்பது இன்னும் சிறப்பானது. அப்படிப்பட்ட ஒரு மந்திரத்தை பற்றியும், அந்த மந்திரத்தை எந்த நேரத்தில் உச்சரிக்க வேண்டும் என்பதைப் பற்றியும், இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

இந்த மந்திரத்தை இந்தக் கடவுளை நினைத்துத் தான் உச்சரிக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. இந்த நேரத்தில் தான் உச்சரிக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. முடிந்தவரை உச்சிகால பொழுதான மதியம் 12 மணி நேரத்தில் உச்சரிப்பதை மட்டும் தவிர்த்துக்கொள்ளுங்கள். அதிகாலை மற்றும் மாலை வேளையில் உச்சரிப்பது மிகவும் நல்லது. இத்தனை முறை தான் உச்சரிக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. 11 முறையிலிருந்து, 1008 முறை வரை இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம்.

நீங்கள் மந்திரத்தை உச்சரிக்கும் இந்த கணக்கு எவ்வளவு கூடிக்கொண்டே போகிறதோ, உங்களது கஷ்டங்கள் அவ்வளவு விரைவாக தீரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. சுத்தமாக குளித்து முடித்து விட்டு பூஜையறையில் ஒரே ஒரு தீபத்தை மட்டும் ஏற்றி வைத்து, கிழக்கு பக்கம் பார்த்தவாறு, மனபலகையின் மீதோ, பாயின் மீதோ அமர்ந்து இந்த மந்திரத்தை உச்சரித்தால் போதும். உங்களுக்கு வெற்றியை தேடித்தரும் அந்த மந்திரம் இதோ!

ஓம் ஹ்லீம் சர்வகார்ய சித்திம் ஹ்லீம் ஓம் ஃபட்

முடிந்தவர்கள் வரப்போகும் பதினைந்து நாட்களும் தொடர்ந்து 1,008 முறை இந்த மந்திரத்தை உச்சரித்து பார்த்தால், அதிசயமான மாற்றம் உங்களுடைய வாழ்க்கையில் நிகழ்வதை கட்டாயம் உணரமுடியும். முடிங்கிபோன தொழிலாக இருந்தாலும் சரி, வராத வருமானமாக இருந்தாலும் சரி, கிடைக்கப்பெறாத நிம்மதியாக இருந்தாலும் சரி, ஆரோக்கிய குறைபாடாக இருந்தாலும் சரி, அதற்கான ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. வெற்றியைத் தேடித் தரும் மந்திரத்தை நம்பிக்கையோடு உச்சரித்து வெற்றி பெற வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

மலருக்காக கண்ணை வைத்து ஈசனை பூஜித்த திருமால்.!!

காக்கும் கடவுளான திருமால், ஈசனுக்காக தன் கண்ணை அர்ப்பணித்ததோடு, ஈசனை வணங்கும் வகையில் அவர்முன் கை கூப்பி நின்ற வண்ணம் அருளும் அற்புதத் தலம், திருமால்பூர். சுமார் 1500 ஆண்டு பழமையான திருத்தலம் இது. 

குபன் என்னும் அரசனுக்கு உதவுவதற்காக திருமால், ததீசி முனிவர் மீது தம் சக்ராயுதத்தை ஏவினார். அது அவரது வஜ்ரம் போன்ற உடலைத் தாக்கமுடியாமல் சிதைந்தது. அதனால் திருமால் இத்தலத்தை அடைந்து, அம்பிகை பூஜித்த மணலால் ஆன மணிகண்டேஸ்வரரை தினமும் ஆயிரம் தாமரைப்பூக்களால் அர்ச்சித்து தன் சக்ராயுதத்தை மீட்டு அருள வேண்டினார். அவரின் பக்தியை சோதிக்க எண்ணிய ஈசன், ஒரு நாள் அந்த ஆயிரம் தாமரை மலர்களில் ஒன்றை மறைந்துபோகச் செய்தார். 

வழக்கப்படி அர்ச்சனை செய்தபோது ஒரு மலர் குறைவதைக் கண்ட திருமால், மலர் போன்ற தன் கண்ணை அப்படியே அகழ்ந்து எடுத்து ஈசனை அர்ச்சித்தார். ஈசன் அவரை, ‘செந்தாமரைக் கண்ணா’ என்றழைத்து மகிழ்ந்தார். திருமாலின் சக்ராயுதத்தையும் மீட்டுத் தந்தார். தனக்கு அருள்புரிந்தது போல் இத்தலத்தை தரிசிப்பவர் அனைவருக்கும் அருள் புரிய ஈசனை திருமால் கேட்டுக் கொண்டார். பிறகு, ஈசன் கருவறையின் முன் நந்தியின் பின்னால் ஈசனை நோக்கி கை கூப்பிய நிலையில் நிலை கொண்டார் என காஞ்சிப்புராணம் கூறுகிறது. 

ஹரியான திருமால் பேறு பெற்றதால் திருமால்பேறு என்றும், ஹரிசக்ரபுரம் என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது. கண் நோய்களை நீக்கும் நிகரற்ற தலம் இது. கருவறையில் அருளும் ஈசன், மணலால் ஆன லிங்கம். ஒரு முறை ஈசனின் கோபத்துக்கு ஆளான அம்பிகை, பூவுலகில் இத்தலம் வந்து மணலால் லிங்கம் பிடித்து ஈசனை வழிபட ஆரம்பித்தாள். அம்பிகையை சோதிக்க, ஈசன் தன் தலையிலிருந்த கங்கையை பாலாற்றில் கலந்து ஓடச்செய்ய, பார்வதி எங்கே தன் மணல் லிங்கம் கரைந்து விடுமோ என பயந்து தன் அண்ணனான திருமாலை உதவிக்கு அழைத்தாள். 

திருமால் இத்தலம் அருகே உள்ள திருப்பாற்கடல் எனும் இடத்தில் படுத்துக் கொண்டு அந்த வெள்ளத்தைத் தடுத்தார். அங்கேயிருந்து பாலாறு காஞ்சிக்கு தெற்கே ஓட ஆரம்பித்தது. அம்பிகை ஈசன் வழிபாட்டை நிறைவாக முடித்து அவருடன் இணைந்தாள். ராஜகோபுரத்தைக் கடந்தவுடன் அம்பிகையான அஞ்சனாட்சி இடது புறம் தனிக்கோயிலில் அருள்கிறாள். கருவறையில் தெற்கு நோக்கி அருளே வடிவமாய் பாசம், அங்குசம், வரதம், அபயம் தரித்து திருமுகத்தில் புன்னகை துலங்க, ‘அஞ்சாதே, இந்த அஞ்சனாட்சி இருக்கும் வரையில்’ என கூறுவது போல் சாந்நித்யமாக தேவி தரிசனம் தருகிறாள். 

வியாபாரத்தில் நஷ்டம், திருமணத்தடை, திருமண உறவில் பிரச்னை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த அன்னையை தரிசித்து வேண்டினால் அந்த பிரச்னைகளை இல்லாமல் செய்து விடுவாளாம் இந்த அஞ்சனாட்சி. நினைத்ததை நிறைவேற்றித் தருவதால் இந்த அன்னை கருணை நாயகி என்றும் பக்தர்களால் போற்றப்படுகிறாள். பௌர்ணமி அன்று ஊஞ்சல் உற்சவமும், வெள்ளிக்கிழமைகளில் விசேஷ வழிபாடுகளும் இந்த அன்னைக்கு நடக்கின்றன. அன்னை சந்நதியின் அர்த்த மண்டபத்தில் மீன் உருவங்கள் நிறையக் காணப்படுகின்றன. மீன ராசி அன்பர்களின் பரிகாரத்தலமாக இந்த சந்நதி போற்றப்படுகிறது. 

சந்நதியின் வெளியே நவகிரக நாயகர்கள் அருள்கின்றனர். ஆலயத்தில் பூஜைகள் அனைத்தும் ஈசன், நடராஜப்பெருமான், திருமால் மூவருக்கும் சேர்த்தே நடைபெறுகின்றன. பிராகார வலம் வரும்போது இந்த ஆலயத்தைக் கட்டிய பராந்தகசோழனின் நினைவாக சோழீஸ்வர லிங்கம், நால்வர், சப்த மாதாக்களில் கௌமாரியும் ஐந்த்ரீயும் நீங்கலாக மற்ற ஐந்து மாதர்கள், வல்லப கணபதி, உச்சிஷ்ட கணபதி, பால கணபதி, சிதம்பரேஸ்வரர், மகாலக்ஷ்மி, வள்ளி - தேவசேனா சமேத சுப்ரமண்யர், வீரபத்திரர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் பிராகாரத்திலும்; மாம்பழம் ஏந்திய விநாயகர், தட்சிணாமூர்த்தி, திருமால், நான்முகன், வித்தியாசமான அஷ்டபுஜ துர்க்கை ஆகியோர் கோஷ்டங்களிலும் அருள்கின்றனர்.

பொதுவாக சிவாலயங்களில் பூஜை மணியில் நந்தி வீற்றிருக்கும். இங்கு சங்கு-சக்ரம் உள்ளது. ஹரியும் சிவனும் ஒன்று என்பதை இந்த ஆலயத்தின் ஒவ்வொரு அமைப்பிலும் காண முடிகிறது. செங்கல்பட்டு, அரக்கோணம் ரயில் பாதையில் திருமால்பூர் ரயில்நிலையத்திலிருந்து தென்மேற்கே நான்கு கி.மீ தொலைவில் உள்ளது இத்தலம். காஞ்சிபுரத்திலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

Saturday, 2 May 2020

3 ) சுடலைமாடன் மலையாள நாடு செல்லல்.!!

கொட்டாரக்கரை (கேரளா)

தில்லைவனத்திலிருந்த சுடலைமாடன்,  கேரளம் வருகிறார். கொட்டாரக்கரை வந்து சேருகிறார். அங்கு அன்னை பகவதியம்மன் ஆலயத்தில் தேர் திருவிழா மிக விமர்சையாக நடக்கிறது.  தான் வந்ததை தாய் அறிய வேண்டும். அதை எப்படி செய்வது என்று அவர் யோசித்தார்.  மாயங்கள் புரியும் மாயாண்டிக்கு கற்றுக்கொடுக்கவா வேண்டும். ஈயாக சென்றார். தேரின் சக்கரத்தில் அமர்ந்தார். தேரின் அச்சாணி முறிந்தது. தேர் வீதியில் நின்றது. அந்தி நேரம் ஆனது அச்சாணியை சரிசெய்ய முடியவில்லை, அர்த்த சாமம் ஆனது அர்ச்சகர் வந்து அச்சாணிக்கு பூஜை போட்டார். அப்போது பின்னால் நின்று அர்ச்சகருக்கு ஒரு அடி கொடுத்து விட்டு மறைந்து நின்று கொண்டார். மாயாண்டி.

உடனே அர்ச்சகர் பயந்தார். நேராக அம்மனிடம் சென்று முறையிட்டார். அன்னை பகவதி வந்து பார்க்கிறார். அன்னை கோபத்தோடு வரும் போது, தான் எதிர்நிற்பது சரியில்ல என்றுணர்ந்த சுடலைமாடன், தாயின் மனதை ஈர்க்கும் பொருட்டு, தேர் நின்ற இடத்தின் அருகே குவிக்கப்பட்டிருந்த மணல் மேட்டில் பச்சிளம் பாலகனாக நின்றார். பகவதி கேட்டார். ‘‘ஆரடா நீ, இ ராத்திரியில் இவிட வந்து நிக்கினுது. எந்தடா வேணும்? பரஞ்சோடா செறுக்கா!  (யாருடா நீ, இந்த ஜாமத்தில், இளம் வயதில் இங்கு வந்து நிற்கிறாயே என்னடா வேண்டும் சொல் பாலகனே)’’ என்று. கேட்டதற்கு, மாடசாமி பதில் சொன்னார் ‘‘அம்மா நான் கயிலையில் பிறந்தவன். பெற்ற அன்னை பார்வதி, இருந்தது தில்லைவனம், இப்போது வளர்ப்போர்க்கு பிள்ளையாய் அன்னையே உன்னிடம் வந்திருக்கிறேன்’’ என்று கூறியதும். தாய் பகவதி கூறினாள்.

‘‘பேடிக்கன்டம் மொவனே, பார்வதி பெற்றாலும் ஒன்றுதன்னே, பகவதி பெற்றாலும் ஒன்றுதன்னே, என் கொட்டாரத்தில் காவலுக்கு நில்லோடா, எனக்கி முதல் பூஜா, நினக்கு பின் பூஜா, நின்ட பேரு எந்தாயாலும் இருக்கட்ட, என்ட நாட்டு மக்கள் நின்னை மாடன் தம்புரான்னே விழிக்கும் அறிஞ்சோடா, மொவனே நீ என்ட ராசாகுட்டியாக்கும்.’’

‘‘(கலங்க வேண்டாம் என் மகனே என் கோட்டையில் காவலில் இருக்கும் ஏழுகிடாரம் திரவியத்தை காத்து வா. உனக்கு என்ன வேண்டுமோ கேள் நான் செய்கிறேன். எனக்கு முன் பூஜை, உனக்கு பின் பூஜை, உனக்கு எந்த பெயர் வேண்டுமானாலும் இருக்கட்டும். என் மக்கள் உன்னை மாடன் தம்புரான் என்று அழைப்பார்கள். தாய் நான் இருக்கிறேன். கவலை வேண்டாம் மகனே நீ என் ராஜாமகன்) என்றாள் அன்னை பகவதி.

அம்மா எனக்கு ஏணி வைத்து மாலை சாத்தும் அளவிற்கு எட்டாத பீடம் போட்டு, அசைவ படையல் எனக்கு வேண்டும். ஒரு படையல் என் பசியை போக்காது. எனக்கு பல நாமங்கள். அதில் வெவ்வேறு நாமங்களில் 21 பீடம் அமைத்து படையல் வைக்க வேண்டும். எத்தனை பீடம் அமைத்து படையல் வைத்தாலும் அதை நான் ஏற்றுக்கொள்வேன். என்றார் சுடலைமாடன். சரி மகனே உனது விருப்பப்படியே ஆகட்டும். என் கோட்டைக்குள் நீ தம்புரான் குட்டி என்ற நாமத்தோடு அழைக்கப்பெற்று காவலனாக இரு. என்று உத்தரவிட்டார். அன்னையின் கட்டளைக்கு இணங்கி இந்திர கோட்ட வாசலில் ஏழுகிடாரம் திரவியத்தை சுடலைமாடன் காத்து வருகிறார்.

கொட்டாரக்கரை பஸ் நிறுத்தத்திலிருந்து கணபதியம்பலம் செல்லவேண்டும். அங்கிருக்கும் விநாயகர் கோயிலுக்கு பின்னால் கொட்டாரக்கரை இயில் நிலையம் உள்ளது. அதற்கு மேற்கு திசையில் உள்ளது. அன்னை பகவதி ஆலயம். இந்த கோயில் 800 ஆண்டுகளுக்கு முன்பு கணபதியம்பலத்தில் பெரிய அளவில் இருந்ததாக கூறப்படுகிறது. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு தான் மூலஸ்தானமாக முன்பு விளங்கிய இடத்தில் (தற்போது கோயில் உள்ள இடம்)இந்த ஆலயம் நிறுவப்பட்டுள்ளது. இந்த கோயில் தற்போது தேவி கோயில் என்றும், தேவி பத்ரா கோயில் என்றும் அங்குள்ளவர்கள் கூறுகின்றனர். மூலவராக தேவி பகவதி இருந்த நிலையில் அருள் பாலிக்கிறாள். தேவியின் தெற்கு பக்கம் கன்னி விநாயகர் வீற்றிருக்கிறார். தேவி சந்நதிக்கு பின்னால் ஆலயத்தின் கன்னி மூலையில் இந்த ஆலயத்தில் தலவிருட்சமான அரச மரம் உள்ளது. அதன் அருகே தம்புரான், என்ற நாமத்தில் சுடலைமாடன் வீற்றிருக்கிறார். இவர் அப்பாசாமி, மாடன்தம்புரான், மாடசாமி ஆகிய நாமங்களிலும் அழைக்கப்படுகிறார். நான்கு அடி கொண்ட நட்டு வைக்கப்பட்ட கல்லில் முருக்கு மீசை முகத்தோடு, மார்பளவு வடிவத்தில் புடைப்புச் சிற்பமாக வீற்றிருக்கிறார். அவருக்கு வலது பக்கம் 3 நாகர் சிலைகள் உள்ளது. ஆலயத்தின் வடக்கு பகுதியில் பிருந்தவனம் உள்ளது. அங்கு சந்நதி இல்லாமல் திறந்த வெளிப்பிரகாரத்தில் பத்துக்கும் மேற்பட்ட நாகர் சிலைகள் உள்ளது. நடு நாயகமாக கிருஷ்ணன் சிலையும் உள்ளது. அதன் பின்னால் மந்திரமூர்த்தி நாமத்தில் சுடலைமாடன் வீற்றிருக்கிறார். இவருக்கு உருவம் கொடுக்கப்பட வில்லை. 3 அடி உயரத்தில் நட்டு வைக்கப்பட்ட கல்லில் மஞ்சள் ஆடை அணிவித்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறார். அருகே வாள் போன்ற கத்தி வைக்கப்பட்டுள்ளது.  கோயிலின் வலது பக்கம் தனிச்சந்நதியில் நவகிரகங்கள் உள்ளன. இந்த ஆலயத்தில் இருக்கும் தம்புரானுக்கும், மந்திரமூர்த்திக்கும் அசைவ படைப்பு இல்லை. தேவிக்கு படைக்கும் அதே வகை நைவேத்தியம் தான் இப்போது படைக்கப்படுகிறது.

இவ்வாலயம் கொட்டாரக்கரை ரயில் நிலையத்திலிருந்து மேற்கு திசையில் அரை கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

தடைபட்டு கொண்டிருக்கும் திருமண யோகம் விரைவில் பெற, இந்த எளிய மந்திரத்தை தினமும் உச்சரித்தாலே போதும்.!!

என்ன தான் முயற்சி செய்தாலும் சிலருக்கு திருமணம் என்பது கைகூடி வராது. அப்படியே கைகூடி வந்தாலும் ஏதாவது இடையூறு ஏற்பட்டு தடைபட்டுவிடும். அவர்கள் கோவில் கோவிலாக சென்று பூஜைகள், பரிகாரங்கள் செய்தாலும் ஒன்றும் பலன் அளிக்காது. திருமண யோகம் தடைபட ஜாதகத்தில் பிரச்சனைகள் இருக்கலாம். குரு நீசம் அடைந்திருக்கலாம். தோஷங்கள் இருக்கலாம். முன் ஜென்ம சாபம் இருக்கலாம். இப்படி சில காரணங்களால் திருமணம் தொடர்ந்து தடைபடும். திருமண குறை நீங்க ஆண்கள் இந்த மந்திரத்தை தினமும் கூறி வந்தால் போதும். விரைவில் நல்ல தகவல் வந்து சேரும். அந்த சக்தி வாய்ந்த மந்திரம் பற்றி இப்பதிவில் காணலாம்.

திருமணம் தடைபடும் ஜாதக காரர்களுக்கு இருக்கும் கவலையை விட அவர்களது பெற்றோருக்கு மன வேதனை அதிகமாக இருக்கும். தங்கள் பிள்ளைக்கு வயதாகிக் கொண்டே போகிறதே!! இன்னும் திருமண யோகம் கூடி வரவில்லையே!! என்று வேதனைபடும் பெற்றோர்கள், தங்கள் மகனுக்கு எப்படியாவது நல்ல நேரம் வந்துவிடாதா? என்று பார்த்து கொண்டிருப்பார்கள். அவர்களின் மனவலி சொல்லில் அடங்காதவை.

அவர்களின் குறை நீங்க இறைவனை சரண் அடைவதை தவிர வேறு வழி இல்லை. நீங்கள் எப்போதும் செய்யும் வழிபாடுகள், பூஜைகள், பரிகாரங்கள் இவற்றை தொடர்ந்து செய்து வாருங்கள். அதனை நிறுத்த தேவையில்லை. எந்த பரிகாரமும் முழு பக்தியுடன், நம்பிக்கையுடன் செய்தால் தான் பலன் கிடைக்கும்.

உங்கள் செல்ல மகனின் திருமணம் எந்த தடையும் இன்றி நிறைவேற அவரை இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரிக்க செய்யுங்கள். முழு நம்பிக்கையுடன் இந்த மந்திரத்தை உச்சரித்து வந்தால் விரைவில் உங்கள் துயர் நீங்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த மந்திரம் காலை, மாலை என இரு வேளையிலும் திருமணம் நடக்க வேண்டிய ஆண் மகன் பக்தியுடன் உச்சரிக்க வேண்டும். எந்த அளவிற்கு பக்தி சிரத்தையுடன் அவர்கள் உச்சரித்து வருகிறார்களோ அந்த ஆளவிற்கு பலனும் விரைவில் கிடைக்கும்.

மந்திரம்: விதேஹி தேவி கல்யாணம் விதேஹி விபுலாம் ச்ரியம் ரூபம் தேஹி ஜயம் தேஹி யசோ தேஹி த்விஷா ஜஹி!!

பத்னீம் மனோரமாம் தேஹி மானோவ்ருத்தனு ஸாரீனீம் தாரினீம் துர்கஸம்ஸார ஸாகரஸய குலோத்பவாம்!!

விதேஹி தேவி கல்யாணம் விதேஹி விபுலாம் ச்ரியம் ரூபம் தேஹி ஜயம் தேஹி யசோதேஹி த்விஷா ஜஹி!!

சிலர் மந்திரம், விரதம் என்றாலே மூட நம்பிக்கை என்று கூறுவார்கள். அப்படி நம்பிக்கை இல்லாமல் கூறினால் எந்த பலனும் கிடைக்காது என்பதை மனதில் நிறுத்துங்கள். இறைவனை ஒருவனே நம் கவலைகளுக்கு மருந்து அளிப்பவன். மந்திரங்கள் மன வலிமையை அதிகரிக்க செய்யும். இறை நெறியில் ஈடுபாடு அதிகரிக்க செய்து ஆத்ம பலம் மேலோங்க செய்யும்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴