Monday, 4 May 2020

4 ) பெரும்புலையனை வதம் செய்தல்சாலியக்கரை.!!

(கேரளா)

கொட்டாரகரையிலே அன்னை பகவதி வாசலிலே ஏழுகிடாரம் திரவியத்தை சுடலை ஈசன் காத்துவரும் வேளையில் மலையாள நாட்டில் என்ன நடக்கிறது என்றால்……
மலைகளின் அரசி என்று வர்ணிக்கப்படும் மாநிலம் கேரளாவில் மாந்த்ரீகம் வளர்ந்தோங்கி இருந்த நேரம். இதில் மலையடிவாரப் பகுதிகளில் ஒன்றான நந்தன்புனலூர் தற்போது புனலூர் என அழைக்கப்படுகிறது.இங்கு வசித்து வந்த புலையன்மார்கள் தான் மாந்த்ரீகத்தில் பெருமளவில் ஈடுபட்டு வந்தனர். மாந்த்ரீகம் செய்து எதிரிகளை பழிவாங்கும் நிலை அதிகமாக இருந்தது. தெய்வ சக்தியை மிஞ்சி இருந்தது. இந்த மாந்த்ரீக வாதிகளுக்கு தலைவனாக மாகாளிப் பெரும் புலையன் இருந்தான். அவன் இதில் அதிக திறன் பெற்று திகழ்ந்தான். அதிக நிலம் வைத்திருந்த நிலச்சுவந்தார்கள்,  பயிரிடப்பட்ட நிலங்களில் தன்னுடைய மாந்த்ரீக சக்தியால் விளைச்சலின்றி செய்து விடுவான். பின்னர் தனது ஆதரவாளர்களை அனுப்பி, இதுக்கெல்லாம் காரணம் கெட்ட ஆவிகளும், ஏவல் பிரச்சனைகளும் என கூறி அதை மாற்ற சரியான ஆள் பெரும்புலையன் என்று மாந்த்ரீகவாதி இருப்பதாக கூறி வரச்செய்வான். அதை நம்பி வரும் நிலச்சுவந்தார்களிடம், அவருக்கு குடும்ப உறுப்பினர்கள், அல்லது பங்காளிகள், அல்லது பக்கத்து நிலத்துகாரர்கள் என எவர் ஒருவரை அடையாளம் காட்டி அவர்தான் இந்த ஏவல், செய்வினை உனக்கு வைத்திருக்கிறார் என்றும், அதை நான் மாற்றி தருகிறேன். என ஆறுதல் வார்த்தை கூறி அவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விளைச்சல் தோறும், பொன்னும், பொருளும் சன்மானமாக பெற்று விடுவான். இப்படி பல நிலச்சுவான்களையும், மன்னர் பரம்பரை ஆட்களையும் தன்வசப்படுத்தி வைத்திருந்தான். மாகாளிப் பெரும்புலையன்.

மாகாளிப்பெரும்
புலையனுக்கு குழந்தை இல்லை, அதனால் பிள்ளை இல்லையே என்று மாகாளிப்பெரும்புலையனின் மனைவி மிகவும் கவலையுற்றாள். இந்நிலையில் அவ்வையார் நோன்பு இருந்த சப்த கன்னியர்கள், செய்து வைத்திருந்த மா உருண்டையை காகம் ஒன்று எடுத்து வந்தது. மாந்த்ரீகன் வீட்டு துளசி மாடத்தின் அருகே தியானத்தில் இருந்த மாகாளிப்பெரும்புலையன் மடியில் போட்டது. அப்போது ஆகாயத்திலிருந்து ஒரு அசரிரீ கேட்டது. '' பெரும்புலையா!  இந்த மா உருண்டையை உன் மனைவியிடத்தில் கொடு. இதை உண்ட பின் அவளுக்கு அழகான பெண் பிள்ளை பிறக்கும்.'' என்றது. அதன்படி அந்த மா உருண்டையை தன் மனைவியிடத்தில் கொண்டு கொடுத்தான் மாகாளிப்பெரும்புலையன். அந்த மாஉருண்டையின் மகிமையால் கர்ப்பம் தரித்த மாந்த்ரீக வாதியின் மனைவி அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தாள். அந்த குழந்தைக்கு பாலூட்டி, அமுதூட்டி, அன்பாய் வளர்த்தெடுத்தார்கள்.  மாகாளிப்பெரும்புலையனின் குலதெய்வம் இசக்கியம்மன்(இசக்கியம்மனுக்கு நீலி என்றும் பெயர் உண்டு), மா உருண்டை உண்டதினால் பிறந்த குழந்தை என்பதாலும், தனது முதன்மை எழுத்து மா என்பதையும் சேர்த்து, குழந்தைக்கு, மாஇசக்கி என்று பெயரிட்டு அழைத்து வந்தனர். பருவம் அடைந்த மாஇசக்கி அறிவுடனும், அழகுடனும் திகழ்ந்தார்.
  மாந்த்ரீகவாதி, மகள் மாஇசக்கி, பருவம் அடைந்தாள். அவளுக்கு வகை, வகையான தங்க, வைரம், வைடூரியத்திலான நகைகளால் அலங்கரித்து பார்க்க எண்ணினான். எவரிடத்தில் விலை உயர்ந்த தங்க நகைகள் இருக்கிறது என்று வெற்றிலையில் மைபோட்டு பார்க்கிறான். அப்போது அவனுக்கு கொட்டாரக்கரையில் வீற்றிருக்கும் அன்னை பகவதியின் கோயிலுக்கு உட்பட்ட இந்திர கோட்டத்தில் சுடலைமாடன் காவலில் இருக்கும் ஏழுகிடாரம் திரவியம் தெரியவருகிறது. அதை எப்படி கவர்ந்து வரலாம் என திட்டமிட்டான். வெள்ளிக்கிழமை சுடலைமாடன் நடுநிசியில் நகர்வலம் செல்வார். அப்போது திரவியத்தை இரவோடு இரவாகச்சென்று களவாட நினைத்தான்.

திட்டமிட்டது போல் வெள்ளிக்கிழமை மாடன் நடுநிசியில் நகர் வலம் செல்கிறார். அந்த நேரம் மாகாளிப்பெரும்புலையன் தனது ஏவலர்களான பூதங்களை அனுப்பி அந்த திரவியங்களை கவர்ந்து செல்கிறான். நகர்வலம் முடிந்து சுடலைமாடன் வந்து பார்க்கிறார். பூதங்கள் வந்து சென்றது தெரிய வருகிறது. திரவியங்களை பார்க்கிறார். அவைகள் காணாமல் போயிருந்தது தெரிந்தது. உடனே தாயை அழைத்தார். நடந்ததை கூறினார். தாய் பகவதி கூறினாள்.
‘‘அவன் எடுத்துக் கொண்டு போக்கொட்டே, அத நீ தெறைக்கண்டா மோனே, அவன் ஒரு பயங்கர ஆளு’’ என்றாள் தேவி பகவதி.
மந்திரவாதி புலையன் எடுத்திட்டு போகட்டும். அவன் மோசமானவன், நீசன். நீ அவனை தேடி போகவேண்டாம்.

மாடன் கூறினார். ‘‘அம்மா நான் சென்று, அவனை வென்று திரவியத்தை மீட்டு வருகிறேன். வாழ்த்தி வரம் கொடுங்கள்’’ என்றார். சிறிது நேரம் யோசித்த தேவி, வாழ்த்தி வரம் கொடுத்தாள், வல்லயத்தை கையில் கொடுத்தாள். (வல்லயம் - ஐந்து மணிகள் இடம் பெற்றிருக்கும் வேல் கம்பு). தாய் பகவதியின் ஆசி பெற்று வெள்ளை குதிரையின் மீதேறி, வருகிறார் மாடன். புலையன்மார்கள் பெருமளவில் வசிக்கும் அடர்ந்த வனப்பகுதி நந்தன் புலையனூர். (இப்போது புனலூர் என்று அழைக்கப்படுகிறது).

புலையன்கள் இருக்கும் இடத்திற்கு வந்த சுடலைமாடனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. எப்படி நாம் புலையன் வீட்டை அடையாளம் காண்பது என்று, பிறகு வனத்திற்கு சென்று பாம்புகளுடன் பாம்பாட்டியாய் புனலூர் வந்தார். அங்கு நான்கு வீதிகள் சந்திக்கும் பகுதியில் உயர்ந்த கம்பு நட்டு அதிலிருந்து பாம்பு வித்தை காட்டுகிறார். அப்போது அவரின் காவலில் இருந்த ஏழு கிடாரம் திரவியத்திலுள்ள ஆபரணம் ஒன்று வீட்டின் மாடியில் நின்று கொண்டிருந்த இளம் பெண்ணின் கழுத்தில் மின்னுவதை கண்டார். புரிந்து கொண்டார். இவள் தான் பெரும்புலையன் மகள் என்பதை அறிந்து கொண்டார். மறுநிமிடம் சுடலைமாடன், மாகாளிப்பெரும்புலையன் வீட்டிற்கு பிச்சைக் கேட்டு வயது முதிர்ந்த பண்டாரம் வேடம் தரித்து செல்கிறார்.

‘‘அம்மே தர்மம்’’  கத்துகிறார். குரல் கேட்டு பிச்சையிட மாஇசக்கி, சீவி முடித்த நீண்ட கருங்கூந்தலில் நுனியில் சிறிதாய் ஒரு முடிச்சிட்டு அதில் மல்லிகை மலர் சூடியிருந்தாள். சந்தனகலரில் சிகப்பு பட்டை கொண்ட சேலை கட்டி, பொன்னிற மேனியில் பொன்நகை அணிந்து பேரழகுடன் வருகிறாள். வாசலில் யாருமில்லை. பின்வாசலில் இருந்து குரல் வருகிறது. பின்வாசலுக்கு மா இசக்கி வந்த போது, மீண்டும் முன் வாசலுக்கு வந்த சுடலைமாடன்,
"அம்மே எனக்கி நன்ன பசியாய் இருக்கி, ஆகாரம் எந்தயிங்கிலும் தா என்றார்". அவரைப்பார்த்து மாஇக்கி
‘‘பிச்சை எடுக்க வந்தவன் பிச்சை எடுத்திட்டு போனும், அவிடயும், இவிடயும் வர அவசியம் இல்லா’’
"நான் தர்மம் சோதிச்சு வந்தில்லா, நின்ன கல்யாணம் கழிக்க பெண்ணை காண வந்ததானு" என்றார் சுடலைமாடன்.
நான் பிச்சை கேட்டு வரலம்மா உன்னை பெண் கேட்டு வந்திருக்கிறேன் என்றார்.
‘‘ஓ... தலைமுடி நரைச்சு, தன்னை நடக்க ஜீவனில்ல, என்னை கல்யாணம் கழிக்க சோதிச்சு இல்ல. ம்... இ, விவரம் என்ட அச்சன் அறிஞ்சிங்கில், நின்னை கண்ட துண்டமாய் வெட்டிகளையும். அதில் ஏதொரு மாற்றமில்லா.’’ என்று எச்சரித்தாள் மாஇசக்கி.
அப்போது அவளின் கழுத்தில் மின்னிக் கொண்டிருந்த நகைகளை பார்த்து,
" ஏ... பெண்குட்டி, நிண்ட அச்சன், என்ட அம்மையோட ஆபரணம் முழுவன் மோசிச்சு கொண்டு போயி, அந்த ஆபரணமெல்லாம் எவிட இருக்கின்னு, எனக்கி காணுச்சு தா, ஞான் கொண்டு போயிக்கெலாம். ம்.. நின்ட அச்சன் மோசிச்ச ஆபரணம் திருச்சி தரணும். பரையனும் குட்டி,
இது வரைக்கும் நான் சாந்தமாய் ஆளு, என்ட ஆபரணம் தந்தில்லங்கில் ஞான், பயங்கர ஆளாய் மாறும். இன்ன எட்டு தெவச்சத்தினுள்ளில் நின்ன பலாசங்கம் செய்யும், நின்ட அச்சனை கொல்லும். நின்ட வீட்டை சர்வநாசம் பண்ணும்."
களவாடிய திரவியம் இருக்கும் இடத்தை நீ காட்டவில்லை என்றால் உன்னை
எட்டு நாளைக்குள்
கற்பழிப்பேன்.
என்று எச்சரித்து விட்டு என் அப்பன் சுடலைமாடன் செல்கிறார்.

சுடலைமாடன் வந்ததையும், அவர் சொன்னதையும் மாஇசக்கி, தன் தந்தை மாகாளிப்பெரும்புலையனிடம் கூறுகிறாள். உடனே மாந்த்ரீகவாதி, மாளிகை எழுப்பி அதனுள் மகளை தங்க வைத்தான். சுடலைமாடன் கூறிய எட்டாவது நாள், பல்லி ரூபம் கொண்டு, திறவுகோல் இடும் துவாரத்தின் வழியாக மாளிகைக்குள் சென்ற மாடன், எலுமிச்சை கனியாக மாறினார். தன் முன் எலுமிச்சம் கனி உருண்டு வருவதை கண்ட மாஇசக்கி, அதை கையில் எடுத்து முகர்ந்தாள். அதன் பயனாக கர்ப்பம் தரித்தாள். மாதங்கள் ஓடியது. மகள் கர்ப்பம் ஆனதை மாந்த்ரீகவாதி அறிந்தான்.

இந்த நிலையில் என் அப்பன் மாயாண்டி  சுடலைமாடன், மாகாளி பெரும்புலையனின் கட்டுப்பாட்டில் இருக்கும் விவசாய நிலங்களுக்குள் யானையாக சென்று அவைகளை நாசம் செய்தார். அதனால் அவதிப்பட்டவர்கள் மாந்த்ரீகவாதியிடம் வந்து முறையிட்டனர். அவன் மைபோட்டு பார்க்கிறான். அதில் இவற்றிற்கெல்லாம் காரணம் சுடலைமாடன் தான் என்பது தெரிகிறது. மாகாளிபெரும்புலையன் கொடுக்க வேண்டியதை கொடுத்து தனக்கு எதிரான சக்திகளை தன்னகத்தே கொண்டு வந்துவிடுவான். அப்படி கைதேர்ந்த மாந்த்ரீகவாதி, சுடலைமாடனை தன் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பூஜை போட தயாரானான். பூஜையின் உக்கிரத்தில் சுடலைமாடன் அவன் முன் காட்சி கொடுத்தார். "ம்...ம்.. ஹாய் பரஞ்சோட" என்றார். அப்போது மாந்த்ரீகவாதி கேட்டான். ‘‘நினக்கு எந்த வேணும், யான் கொடுக்கும், எனக்கி நீ ஒத்துப்போணும் மனசிலாயோ’’ உடனே சுடலைமாடன், "நினக்கு நான் கட்டுப்பட்டு நீ பறையுன்ன ஜோலிகள் செய்யுனுமங்கில் ஞான் பறையுன்ன பலி நினக்கு தரணும்." என்றார். தன் தந்தை சிவனார், சிறு தொண்ட நாயனாரிடம் பிள்ளைக்கறி கேட்டது போல, மாந்த்ரீகவாதியிடம் கேட்டார். எனக்கு எட்டடுக்கு பீடம் அமைத்து, பத்தடுக்கில் பரனும் கட்டி, ஆடு, கோழியோடு, தலைப்பிள்ளை சூலி பலி வேண்டும். அதுவும் அவள் வீட்டிற்கு ஒரு மகளாக இருக்க வேண்டும், அதுவும் தலை மகளாக இருக்க வேண்டும், மணமுடியாமல் கர்ப்பம் தரித்திருக்க வேண்டும் என்றார். அதற்கு மாந்த்ரீகவாதி, “இப்படி ஒரு பெண்ணை ஞான் எங்கு தெறட்டும்’’ என்றான்.

அப்போது சுடலைமாடன் கூறினார், அதான் உன் மகள் மாஇசக்கி இருக்கிறாளே என்று, உடனே மாந்த்ரீகவாதி, என்னது எனது மகளா? என்று கேட்க, நான் கேட்ட படி கொடுத்தால் உனக்கு மூன்றே முக்கால் நாளிகைக்கு நான் உனக்கு கட்டுப்படுவேன் என்றார். உடனே மாகாளிபெரும்புலையன் தனது மகள் மாஇசக்கியை தனது குல தெய்வ கோயிலில் சிறப்பு வழிபாடு இருப்பதாக கூறி அழைத்து வருகிறான். புனலூர் அடுத்திருக்கும் சாலியக்கரையிலுள்ள கானகப்பகுதிக்கு வருகிறார்கள். அங்கு சுடலைமாடனுக்கு பூஜை நடத்துகிறான். மாகாளிப்பெரும்புலையன். அப்போது மாஇசக்கி கூறுகிறாள்
" என் அச்சனே பெரும் புலையா, என்ன மோசம் செய்யப்போற, சண்டாள தேவாதைக்கு என்னை பலி கொடுக்கப்போறே, நீ கொள்ளிக்கு பிள்ளை அற்று கொடி முடிந்து போவாயடா என்று சபித்தாள்.
சுடலையின் மைந்தன்
சு.இளம் கலைமாறன்.
அதை பொருட்படுத்தாமல் புலையன்
மகள் நிறைமாத சூலியான மாஇசக்கியை பலியிடுகிறான். உயிர் துறக்கும் முன் துடித்துக்கொண்டிருந்த மாஇசக்கி, தன் வயிற்றில் இருந்த குழந்தையின் அழுகுரல் கேட்டு கண்விழித்து, அந்த குழந்தையை தன் கையினால் தன் வயிற்றை தானே கிழித்து எடுத்து தன் இடுப்பில் வைத்துக்கொண்டு மயங்கி விழுந்து மாண்டாள்.

சுடலைமாடன் மாந்த்ரீகவாதிக்கு கொடுத்த வாக்கின்படி அவனுக்கு கட்டுப்பட்டார். பெரும்புலையா கட்டளையிடு நிறைவேற்றி தருகிறேன் என்றார். அவன் கட்டளையிட்டான். மாடனே நீ இந்த சிமிழுக்குள் செல் என்றான். சிமிழுக்குள் ரூபம் மாறி சுடலைமாடன் சென்றார். மாந்த்ரீகவாதி இது தான் சந்தர்ப்பம் என்று எண்ணியவர், உடனே அவரை சிமிழுக்குள் வைத்து அடைத்தான். அடைப்பட்ட சிமிழுக்குள்ளே மாடன் அல்லல் பட்டார். செய்வதறியாது திகைத்தார். அங்குமிங்கும் ஓடுகிறார். யானை போல கதறுகிறார்.
புலி பாய்ச்சல் பாயலானார்.
பூனை போல பதுங்கலானார் பின்னர் மூன்றே முக்கால் நாழிகை முடியும் வரை காத்திருந்தார். ஆனால் மாந்த்ரீகவாதி, அந்த சிமிழை மண்ணுக்குள் புதைத்து விட்டு சென்று விட்டான்.

இடி, மின்னலுடன் கடும் மழை பெய்தது. மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்ட சிமிழ் வெளியே வந்தது. அது மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லபட்டு, கல்லடையாற்றில் கலந்தது.  ஆற்றின் வழியே மிதந்து வந்து கொண்டிருந்தது சிமிழ்.  கோயில் பூஜை முடிந்து வரும் தனது கணவன், மற்றும் மகள் பாதங்களை ஆற்று நீரில் கழுவ வேண்டும். என்பதற்காக புனலூரில் மங்கையர்களோடு மங்கையராய் நீர் எடுக்க வந்த மாந்த்ரீக வாதி மாகாளிப்பெரும்
புலையன் மனைவியின் குடத்திற்குள் நீரோடு நீராக சென்றது சிமிழ். வீட்டிற்கு கொண்டு வந்து  வைக்கிறாள். மகள் மாஇசக்கி எங்கே என்று கேட்டபடியே, கணவனின் பாதங்களை கழுவ முற்படும் போது சிமிழ் வெளிப்பட்டது. அந்த சிமிழை கையில் எடுத்த மாந்த்ரீக வாதியின் கையில் இருந்து கீழே நழுவி விழுந்தது. விழுந்த வேகத்தில் திறந்தது. அதிலிருந்து வெளிப்பட்ட சுடலைமாடன் மாகாளிப்பெரும்
புலையனை வதம் செய்தார். அவனது பூதங்களின் மூலம் ஏழு கிடாரம் திரவியத்தை மீ்ட்டு, அன்னை பகவதியின் இந்திர கோட்ட காவலில் வைத்தார். மாண்டு போன, மாஇசக்கியை உயிர் கொடுத்து எழ வைத்து தன்னோடு இணைத்துக் கொண்டார்.

மாஇசக்கியை பலி வாங்கிய அந்த இடம் தான் சாலியக்கரை. இங்கு சிறிய அளவில் கோயில் இருக்கிறது. சுடலைமாடன்  தனிக்கோயிலில் வலது கையில் வீச்சருவாவும், இடது கையில் பொந்தன் தடியும் கொண்டு நின்ற படி அருள்பாலிக்கிறார். கோயில் கூரை தகடுகளால் வேயப்பட்டிருக்கிறது. வெள்ளிக்கிழமை மட்டுமே இங்கு பூஜை நடக்கிறது. மேலும் ஆவணி, தை, மாத பிறப்புகளின் போது சிறப்பு பூஜை நடக்கிறது. சேவல் மட்டுமே இங்கு பலியிடப்படுகிறது. படையலின் போது சுருட்டு, மதுபானம் வைப்பதாகவும் இக்கோயில் பூசாரிகள் கிருஷ்ணபிள்ளை மற்றும் அவரது சகோதரர் செல்லப்பன் ஆகியோர் கூறினர்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

No comments:

Post a Comment