Saturday, 2 May 2020

3 ) சுடலைமாடன் மலையாள நாடு செல்லல்.!!

கொட்டாரக்கரை (கேரளா)

தில்லைவனத்திலிருந்த சுடலைமாடன்,  கேரளம் வருகிறார். கொட்டாரக்கரை வந்து சேருகிறார். அங்கு அன்னை பகவதியம்மன் ஆலயத்தில் தேர் திருவிழா மிக விமர்சையாக நடக்கிறது.  தான் வந்ததை தாய் அறிய வேண்டும். அதை எப்படி செய்வது என்று அவர் யோசித்தார்.  மாயங்கள் புரியும் மாயாண்டிக்கு கற்றுக்கொடுக்கவா வேண்டும். ஈயாக சென்றார். தேரின் சக்கரத்தில் அமர்ந்தார். தேரின் அச்சாணி முறிந்தது. தேர் வீதியில் நின்றது. அந்தி நேரம் ஆனது அச்சாணியை சரிசெய்ய முடியவில்லை, அர்த்த சாமம் ஆனது அர்ச்சகர் வந்து அச்சாணிக்கு பூஜை போட்டார். அப்போது பின்னால் நின்று அர்ச்சகருக்கு ஒரு அடி கொடுத்து விட்டு மறைந்து நின்று கொண்டார். மாயாண்டி.

உடனே அர்ச்சகர் பயந்தார். நேராக அம்மனிடம் சென்று முறையிட்டார். அன்னை பகவதி வந்து பார்க்கிறார். அன்னை கோபத்தோடு வரும் போது, தான் எதிர்நிற்பது சரியில்ல என்றுணர்ந்த சுடலைமாடன், தாயின் மனதை ஈர்க்கும் பொருட்டு, தேர் நின்ற இடத்தின் அருகே குவிக்கப்பட்டிருந்த மணல் மேட்டில் பச்சிளம் பாலகனாக நின்றார். பகவதி கேட்டார். ‘‘ஆரடா நீ, இ ராத்திரியில் இவிட வந்து நிக்கினுது. எந்தடா வேணும்? பரஞ்சோடா செறுக்கா!  (யாருடா நீ, இந்த ஜாமத்தில், இளம் வயதில் இங்கு வந்து நிற்கிறாயே என்னடா வேண்டும் சொல் பாலகனே)’’ என்று. கேட்டதற்கு, மாடசாமி பதில் சொன்னார் ‘‘அம்மா நான் கயிலையில் பிறந்தவன். பெற்ற அன்னை பார்வதி, இருந்தது தில்லைவனம், இப்போது வளர்ப்போர்க்கு பிள்ளையாய் அன்னையே உன்னிடம் வந்திருக்கிறேன்’’ என்று கூறியதும். தாய் பகவதி கூறினாள்.

‘‘பேடிக்கன்டம் மொவனே, பார்வதி பெற்றாலும் ஒன்றுதன்னே, பகவதி பெற்றாலும் ஒன்றுதன்னே, என் கொட்டாரத்தில் காவலுக்கு நில்லோடா, எனக்கி முதல் பூஜா, நினக்கு பின் பூஜா, நின்ட பேரு எந்தாயாலும் இருக்கட்ட, என்ட நாட்டு மக்கள் நின்னை மாடன் தம்புரான்னே விழிக்கும் அறிஞ்சோடா, மொவனே நீ என்ட ராசாகுட்டியாக்கும்.’’

‘‘(கலங்க வேண்டாம் என் மகனே என் கோட்டையில் காவலில் இருக்கும் ஏழுகிடாரம் திரவியத்தை காத்து வா. உனக்கு என்ன வேண்டுமோ கேள் நான் செய்கிறேன். எனக்கு முன் பூஜை, உனக்கு பின் பூஜை, உனக்கு எந்த பெயர் வேண்டுமானாலும் இருக்கட்டும். என் மக்கள் உன்னை மாடன் தம்புரான் என்று அழைப்பார்கள். தாய் நான் இருக்கிறேன். கவலை வேண்டாம் மகனே நீ என் ராஜாமகன்) என்றாள் அன்னை பகவதி.

அம்மா எனக்கு ஏணி வைத்து மாலை சாத்தும் அளவிற்கு எட்டாத பீடம் போட்டு, அசைவ படையல் எனக்கு வேண்டும். ஒரு படையல் என் பசியை போக்காது. எனக்கு பல நாமங்கள். அதில் வெவ்வேறு நாமங்களில் 21 பீடம் அமைத்து படையல் வைக்க வேண்டும். எத்தனை பீடம் அமைத்து படையல் வைத்தாலும் அதை நான் ஏற்றுக்கொள்வேன். என்றார் சுடலைமாடன். சரி மகனே உனது விருப்பப்படியே ஆகட்டும். என் கோட்டைக்குள் நீ தம்புரான் குட்டி என்ற நாமத்தோடு அழைக்கப்பெற்று காவலனாக இரு. என்று உத்தரவிட்டார். அன்னையின் கட்டளைக்கு இணங்கி இந்திர கோட்ட வாசலில் ஏழுகிடாரம் திரவியத்தை சுடலைமாடன் காத்து வருகிறார்.

கொட்டாரக்கரை பஸ் நிறுத்தத்திலிருந்து கணபதியம்பலம் செல்லவேண்டும். அங்கிருக்கும் விநாயகர் கோயிலுக்கு பின்னால் கொட்டாரக்கரை இயில் நிலையம் உள்ளது. அதற்கு மேற்கு திசையில் உள்ளது. அன்னை பகவதி ஆலயம். இந்த கோயில் 800 ஆண்டுகளுக்கு முன்பு கணபதியம்பலத்தில் பெரிய அளவில் இருந்ததாக கூறப்படுகிறது. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு தான் மூலஸ்தானமாக முன்பு விளங்கிய இடத்தில் (தற்போது கோயில் உள்ள இடம்)இந்த ஆலயம் நிறுவப்பட்டுள்ளது. இந்த கோயில் தற்போது தேவி கோயில் என்றும், தேவி பத்ரா கோயில் என்றும் அங்குள்ளவர்கள் கூறுகின்றனர். மூலவராக தேவி பகவதி இருந்த நிலையில் அருள் பாலிக்கிறாள். தேவியின் தெற்கு பக்கம் கன்னி விநாயகர் வீற்றிருக்கிறார். தேவி சந்நதிக்கு பின்னால் ஆலயத்தின் கன்னி மூலையில் இந்த ஆலயத்தில் தலவிருட்சமான அரச மரம் உள்ளது. அதன் அருகே தம்புரான், என்ற நாமத்தில் சுடலைமாடன் வீற்றிருக்கிறார். இவர் அப்பாசாமி, மாடன்தம்புரான், மாடசாமி ஆகிய நாமங்களிலும் அழைக்கப்படுகிறார். நான்கு அடி கொண்ட நட்டு வைக்கப்பட்ட கல்லில் முருக்கு மீசை முகத்தோடு, மார்பளவு வடிவத்தில் புடைப்புச் சிற்பமாக வீற்றிருக்கிறார். அவருக்கு வலது பக்கம் 3 நாகர் சிலைகள் உள்ளது. ஆலயத்தின் வடக்கு பகுதியில் பிருந்தவனம் உள்ளது. அங்கு சந்நதி இல்லாமல் திறந்த வெளிப்பிரகாரத்தில் பத்துக்கும் மேற்பட்ட நாகர் சிலைகள் உள்ளது. நடு நாயகமாக கிருஷ்ணன் சிலையும் உள்ளது. அதன் பின்னால் மந்திரமூர்த்தி நாமத்தில் சுடலைமாடன் வீற்றிருக்கிறார். இவருக்கு உருவம் கொடுக்கப்பட வில்லை. 3 அடி உயரத்தில் நட்டு வைக்கப்பட்ட கல்லில் மஞ்சள் ஆடை அணிவித்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறார். அருகே வாள் போன்ற கத்தி வைக்கப்பட்டுள்ளது.  கோயிலின் வலது பக்கம் தனிச்சந்நதியில் நவகிரகங்கள் உள்ளன. இந்த ஆலயத்தில் இருக்கும் தம்புரானுக்கும், மந்திரமூர்த்திக்கும் அசைவ படைப்பு இல்லை. தேவிக்கு படைக்கும் அதே வகை நைவேத்தியம் தான் இப்போது படைக்கப்படுகிறது.

இவ்வாலயம் கொட்டாரக்கரை ரயில் நிலையத்திலிருந்து மேற்கு திசையில் அரை கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

No comments:

Post a Comment