Monday, 4 May 2020

5 ) கழுதைகளுக்கு இறக்கம் காட்டிய சுடலைமாடன்கழுதருட்டி, கேரளா.!!

மாந்த்ரீகவாதி மாகாளி பெரும்புலையனை வதம் செய்த பின்னர். மாயாண்டி சுடலைமாடன், மாஇசக்கியுடன் கழுத உருட்டி வருகிறார். அதாவது ஆரியங்காவுக்கு முன்புள்ள மலையடிவாரப்பகுதி. இங்குள்ள மலையில் எண்ணற்ற பயிர்கள் பயிடப்பட்டிருந்தது. எஸ்டேட்களும் இருந்தது. இங்கு வசிக்கும் மக்கள் தங்களுக்கு தேவையான தானியங்களை கீழே இருந்து கழுதைகளுக்கு மேல் பொதி மூட்டையாக கட்டி, மலைக்கு கொண்டு செல்வார்கள். இந்த மலையில் இருந்த இன்னொரு புலையனான மாந்த்ரீக வாதி, தானியம் மற்றும் பண்டங்கள் கொண்டு வரும் விவசாயி, பொதுமக்கள் என எல்லோரிடமும் நான்கில் ஒரு பங்கை தனக்கு இனமாக  கொடுத்துச் செல்ல வேண்டும். என்று கட்டளையிட்டான். அப்படி கொடுக்க மறுக்கும் நபர்களின் தானிய பொதி மூட்டையை சுமந்து வரும் கழுதையை, மலை உச்சி ஏறிவரும் போது, தனது மாந்த்ரீக சக்தியால் கீழே உருட்டி விடுவான். கீழே உருண்டு விழும் கழுதைகள், கல்லடையாற்றில் விழுந்து இறந்துவிடும்.
 
இதனால் மாந்த்ரீக வாதிக்கு அஞ்சி, அம்மக்கள் தானியங்களை கொடுத்து வந்தனர். இருப்பினும் கழுதை உருளும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்ததே தவிர குறையவில்லை, காரணம் கொடுத்தவன் பொதி மூட்டைகள், கொடுக்காதவன் பொதி மூட்டைகள் என வேறுபாடு தெரியாமல் மாந்த்ரீகவாதி செய்த செயலால் மலைவாசிகள் அவதிப்பட்டு வந்தனர். இதனை அவ்வழியே வந்த மாடனும், மாஇசக்கியும் அறிகின்றனர். மாடன், மாந்த்ரீகவாதியை துவம்சம் செய்து வதம் செய்ய முயலும் போது, அவன் சரணடைந்து, தன்னை அடியவனாக ஏற்றுக்கொள்ளுமாறு பணிகிறான். சுடலையும் அவனை மன்னித்து அடியவனாக ஏற்றுக்கொள்கிறார். புலயனாக இருந்தவன் மாடனால் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் புலமாடன் என்று அழைக்கப்பட்டான்.
கழுதைகள் தவறியும் கூட கல்லடை ஆற்றில் விழுந்து விடக்கூடாது என்பதற்காக, ஆற்றின் கரையோரம் சுவாமியும், அம்மனும் நிலையம் கொண்டுள்ளனர். கழுதையை புலையன் உருட்டியதால் இந்த இடம் கழுதருட்டி என்று அழைக்கப்படுகிறது.

இங்குள்ள ஆலயத்தில் சுடலைமாடன், கருப்பண்ணசாமி என்ற நாமத்தில் அழைக்கப்படுகிறார். தலைமுடியை ஒரு சேர கொண்டையிட்டு, வலது கையில் வீச்சருவா தாங்கி, இடது கையில் கதாயுதம் கொண்டு நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். வலது பக்கம் தனிக்கோயிலில் கணபதியும், எதிரில் நடு கல்லாக தனிச்சந்நதியில் இசக்கியம்மனும், அடுத்த சந்நதியில் புலமாடனும் அருள்பாலிக்கின்றனர்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

No comments:

Post a Comment