பொதுவாகவே பௌர்ணமி தினம் என்றால் திருவண்ணாமலையில் கிரிவலம் வருவது சிறப்பு. அதிலும் சித்திரா பவுர்ணமி கிரிவலத்திற்கு இன்னும் அதிகப்படியான மகத்துவம் உள்ளதை எவராலும் மறுக்க முடியாது. இந்த வருடம், கூட்டம் கூட கூடாது என்ற தடை உள்ளதால், கிரிவலம் செல்ல முடியாத சூழ்நிலை அமைந்துவிட்டது. இந்த வருடம் கிரிவலம் செல்ல வேண்டும் என்று நினைத்தவர்களுக்கும், அண்ணாமலையாரை தரிசிக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் வீட்டிலிருந்தபடியே, மனதார ஈசனை கிரிவலம் வரலாம். வீட்டிலிருந்தபடியே கிரிவலமா? அது எப்படி முடியும்? மனமிருந்தால் மார்க்கம் உண்டு. என்பதை மறந்து விடாதீர்கள். வீட்டிலிருந்தபடி சித்ராபவுர்ணமி கிரிவலத்தை, ஈசனை நினைத்து எப்படி வலம் வரலாம் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த முறையை பின்பற்றி தங்களுடைய வேண்டுதல்களை வைத்தால், நிச்சயம் நிறைவேறும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
நம்மில் பலபேர் வீட்டின் பூஜை அறையில் சிறிய அளவு சிவலிங்கத்தை வைத்து வழிபடும் பழக்கத்தை வைத்து இருப்போம். உங்கள் வீட்டில் இருக்கும் எந்த உலோகத்தில் இருக்கும், எவ்வளவு சிறிய சிவலிங்கமாக இருந்தாலும், சரி. அதை எடுத்துக்கொள்ளுங்கள். லிங்கத்துடன் கட்டாயம் நந்திதேவரும் அவசியம் தேவை. இந்த இரண்டு சிலைகளையும் மஞ்சள் நீரால் அபிஷேகம் செய்து கொள்ளுங்கள். வீட்டின் வரவேற்பறையில் அதாவது ஹாலை சுத்தம் செய்துகொண்டு, அந்த இடத்தில் நடுப்பகுதியில் உங்கள் வீட்டில் இருக்கும் மேஜையையோ, மரப்பலகையையோ எதுவாக இருந்தாலும் சரி. அதன் மேல் ஒரு விரிப்பை விரித்து வைத்து, அதன் மேல் ஒரு தாம்பூலத்தை வைத்து, தாம்பூலத்தில் சிறிதளவு பச்சரிசியை அல்லது சிறிதளவு பூ பரப்பி அதன் மேல் சிவலிங்கத்தை வைத்து, சர்க்கரை பொங்கலை நைவேத்யமாக படைத்து, தேங்காய் உடைத்து தீப தூப ஆராதனை காட்டி, உங்கள் வீட்டு பூஜை முறைப்படி, அந்த ஈசனை உங்கள் வீட்டிலேயே கிரிவலத்திற்க்காக தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
வீட்டில் சிவலிங்கம் இல்லாதவர்கள் என்ன செய்வது? திருவண்ணாமலை என்பது அக்னிக்குரிய ஸ்தலம். ஈசன் இருக்க வேண்டிய இடத்தில் ஒரே ஒரு அகல் தீபத்தை ஏற்றி வைத்தாலே போதும். அந்த தீபத்தை சுற்றி வலம் வந்து கொள்ளலாம்.
உங்கள் வீட்டில் நீங்களே தயார் செய்து வைத்திருக்கும் லிங்கமாக இருந்தாலும், தீபமாக இருந்தாலும் அதற்கான தீப தூப ஆராதனைகள் செய்து முடித்துவிட்டு அதன்பின்பு அந்த ஈசனை வலமிருந்து இடமாக, ‘ஓம் அஷ்ட லிங்கங்களே போற்றி’ என்ற மந்திரத்தை சொல்லி 11 முறை வலம் வரவேண்டும். அதன்பின்பு ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை உச்சரித்து மீண்டும் 11 முறை வலம் வரவேண்டும். இந்த கிரிவலத்தை தனி ஒருவராக நீங்கள் மட்டும் வலம் வந்தாலும் சரி அல்லது உங்கள் குடும்பத்தோடு வலம் வந்தாலும். மனதார செய்யக்கூடிய இந்த கிரி வலத்திற்கு அதிக பலனுண்டு என்பதை மறந்துவிடாதீர்கள்.
அந்த காலத்தில் சித்தர்கள் எல்லாம் எந்த சிவலிங்கத்தை வைத்தும் எந்த ஒரு சுவாமி சிலையை வைத்தும் தியானம் செய்யவில்லை. சித்தர்கள் தங்கள் மனதார நினைத்து, மானசீகமாக வேண்டிய வேண்டுதல் களுக்காக கிடைத்த வரங்களே அதிகம் என்பதையும் மறந்து விடாதீர்கள். நாமும் எந்த ஒரு சிலையும் வைக்காமல் மானசீகமாக வெறும் இடத்தையே சுற்றி வரக் கூடாதா? என்ற விதண்டாவாத கேள்வியெல்லாம் கேட்காதீர்கள். நாம் ஒன்றும் சித்தர்கள் இல்லை. மனிதர்கள் என்ன செய்யவேண்டுமோ அந்த முறையை பின்பற்றலாம். எடுத்துக்காட்டாக சொல்லப்பட்டது தான் சித்தர்கள் பெற்ற வரம். மானசீகமாக வேண்டிக் கொள்ளும் பிரார்த்தனைக்கு பலன் அதிகம் என்பதை உணர்த்துவதற்காகவே.
இந்த கிரிவலத்தை வீட்டிலிருந்தே எந்த நேரம் செய்வது என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கும். நாளை மாலை அதாவது 6.5.2020 மாலை 7.30 மணியிலிருந்து 7.5.2020 சூரிய உதயத்திற்கு முன்பாக எப்போது வேண்டுமென்றாலும் இந்த முறைப்படி உங்கள் வீட்டிலிருந்தபடியே கிரிவலத்தை செய்து, அந்த அண்ணாமலை ஈஸ்வரனின் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளலாம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் நம்பிக்கையோடு செய்து பாருங்கள். உங்கள் மனதார வைக்கப்படும் அந்த வேண்டுதல்கள் கூடிய விரைவில் நிறைவேறும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்...
🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔
🎪 *ஓம் நமசிவாய* 🎪
🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
_ என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
🕉️ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ 🕉️
🙆🏻♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻♂️
🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴
No comments:
Post a Comment