Saturday, 31 August 2019

விநாயகர் வழிபாட்டில் அறிவியல்.!!

விநாயகர் சதுர்த்திக்கு, களிமண்ணால் விநாயகர் திருவுருவம் செய்து விநாயகர் சதுர்த்தி நாளிலிருந்து பத்து நாள் வரை ஊர் பொது இடத்தில் வைத்து அதற்கு இயற்கைப் பூக்கள் மற்றும் மூலிகைகளால் அர்ச்சனை செய்து,  10வது  நாளில் திருவுருவத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று குளத்தில் கரைத்து விடுவர்.

களிமண், குளத்து நீரில் உள்ள கலங்கலை ஈர்த்து, குடிநீரைத் தெளிவடையச் செய்யும் தன்மையுள்ளது.மூலிகைகள் மற்றும் இயற்கைப் பூக்கள் குடிநீரில் கலந்து மருத்துவத் தன்மையை உண்டாக்கும் தன்மையுள்ளது. இக்குடிநீரானது ஆவணி மாத பருவகால மாற்றத்தால் ஏற்படும் தொற்று நோய்களைத் தடுக்கும் தன்மை வாய்ந்ததாக இருந்தது.
நெற்றியின் இரு பொட்டுகளிலும் குட்டிக்கொள்வதால் மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி நன்கு சுரக்கும்.தோப்புக்கரணம் போடுவது மூட்டு மற்றும் கால்களுக்கு வலிமை உண்டாகும்.
விநாயகர்,அரசமரத்தடியில் வீற்றிருக்கிறார்.  
கிருஷ்ண பரமாத்மா, மரங்களில் நான் அரச மரமாக இருக்கிறேன்  என, பகவத் கீதையில் கூறியுள்ளான்.  கிராமங்களில், ஊர்ப்பஞ்சாயத்து, அரசமரத்தின்கீழ் நடப்பது வழக்கம். 
ஹோமங்களின் போது, அரசமர குச்சிகள் தான் பயன்படுத்தப்படுகின்றன. 

திருமண வீடுகளில் அரசாணிக்கிளை மணமேடைகளில் கட்டப்படுகிறது. மரங்களை நடுவது  மழைக்காக மட்டுமல்ல.  ஆக்சிஜனை அதிகமாகஅவை வெளிவிடும் என்பதால்தான்.  
அரசமரத்திற்கு 95 சதவீதமும்,  வேப்பமரத்திற்கு 90  சதவீதமும் ஆக்சிஜனை வெளியிடும் சக்தி இருக்கிறது. எனவேதான் அரசும் வேம்பும் இணைந்த நிலையில், விநாயகர் சிலைகளை அதன்  அடியில் வைப்பதுண்டு. மேலும் அரசமர பட்டையில், ‘செனட்டோனியம்’ என்ற ரசாயனப் பொருள் உள்ளது. இப்பொருள் கர்ப்பம் தரிக்கும்  ஆற்றலை  வளர்க்கும்.
இதன் காரணமாகத்தான் குழந்தை இல்லாத பெண்களை, அரசமரத்தை சுற்றிவரச் சொல்கிறார்கள்.
விநாயகர் சதுர்த்தி மற்றும் வீட்டு விசேஷங்களில்,  மாவிலை தோரணம் கட்டுகிறார்கள். மாமரத்திற்கு கார்பன்  டை ஆக்சைடை உறிஞ்சும் திறன் உண்டு. 
ஒரு கோவிலுக்குள் கூட்டமாக மக்கள் நிற்கும்போது, சுவாசத்தின் காரணமாக கார்பன்டை  ஆக்சைடை அதிகமாக வெளியிடுவார்கள். இதையே திரும்பத்திரும்ப சுவாசிப்பதால் உடலுக்கு கேடு உண்டாகும். மாவிலைகள்  கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சி விடும்.  

மங்களகரமான வீடுகளில் மட்டுமின்றி, துக்கவீட்டிலும் மாவிலை தோரணம் கட்டுவதுண்டு.  அடையாளம் தெரிவதற்காக மாவிலையின் நுனியை துக்கவீடுகளில் மேல்நோக்கி கட்டுவார்கள். சுபகாரியம் நடக்கும் வீடுகளில்  கீழ்நோக்கி கட்டுவார்கள்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

ஞான குருவான மஹாகணபதி.!!

பிறப்பிலேயே சகல ஞானங்களையும் பெற்ற கணபதிக்குக் குரு என்று எவருமே இல்லை. அவரே ஞான உருவானவர். அதனால்தான்  கல்வியில் சிறந்து விளங்கவும், தேர்வில் வெற்றி பெறவும் எல்லாக் குழந்தைகளுக்கும் கணபதி அருளுகிறார்.


மாணிக்க விநாயகர்

திருச்சியில் அருளும் ,தாயுமானவ ஸ்வாமியைப்போலவே சுகப் பிரசவத்துக்கு அருள்கிறார் மலையின் கீழுள்ள மாணிக்க விநாயகர். கர்ப்பிணிப் பெண்கள் பலரும் இங்கே வந்து, மாணிக்க விநாயகரை வேண்டி, தியானம் இருப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது. 
இங்கு கணபதி சிவ வடிவமாக அருளுகிறார். 

கற்பக விநாயகர்

தன்னை நாடி வரும் பக்தர்களின் செல்வநிலையை உயர்த்தி, அவர்களுக்கு வேண்டியதெல்லாம் அருளும் கற்பகத் தருவாக, பிள்ளையார்பட்டியில் கோயில் கொண்டிருக்கும் கற்பக விநாயகர், யோக கணபதியாக திருமகளின் அம்சம் கொண்டு அருள்கிறார்.

தலையில் குட்டிக் கொள்வது ஏன்?

தன்னை மதிக்காமல் சென்ற பிரம்ம தேவரின் கர்வத்தை அடக்க நினைத்த விநாயகர், அவருக்குத் தன் சுயரூபத்தைக் காட்டி அனுக்கிரகம் செய்தார். தன் கர்வம் அடங்கிய பிரம்மதேவர், நெற்றிப்பொட்டில் குட்டிக்கொண்டு வணங்கினார். அதுவே இன்றும் தொடர்கிறது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

யுகங்கள் தோறும் விநாயகர்.!!

விநாயகர், கிருதயுகத்தில், தேஜஸ்வி என்ற பெயரில், சிம்மவாகனத்திலும், த்ரேதா யுகத்தில், மயில் வாகனத்திலும், துவாபர யுகத்தில், மூஞ்சூறு வாகனத்திலும் ,கலியுகத்தில், எலி வாகனத்திலும் தோன்றியுள்ளதாக, புராணங்கள் கூறுகின்றன. 

படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய பஞ்ச கிருத்தியங்களையும் அவர் தனது ஐந்து கரங்களால் இயற்றுகின்றார் எனப்படுகின்றது. ஐந்து காரியங்களுக்கும் அவரே அதிபதி என்பதனால் அவருக்கு `ஐங்கரன்' என்ற நாமம் விளங்குகின்றது. அவரை `பஞ்சகிருத்திகள்' என்றும் கூறுவர். 
இவ்வளவு சிறப்பு மிக்க விநாயகரை அவரது பிறந்த நாளான விநாயகர் சதுர்த்தி அன்று விஷேஷ பூஜைகளுடன் வழிபட்டால், அத்தனை செல்வங்களுடன், இப்பிறப்பில் சூழ்ந்த தீவினைகள் அகன்று மறுமையிலும் நன்மையே நடக்கும் என்பது சான்றோர் வாக்கு...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

பிள்ளையார் சுழி போடுவது எதற்கு தெரியுமா?

சிவ சக்தியின் இணைப்பு பிள்ளையார். எந்த செயலை செய்யத் தொடங்கும் முன்,பிள்ளையார் சுழி எழுதப்படுகிறது. பிள்ளையார் சுழி ஒரு வட்டமும், ஒரு கோடும் இணந்து 'உ' என்று எழுதுவார்கள். 

இதற்கு ஒரு தத்துவம் உண்டு, வட்டத்தை பிந்து என்றும், தொடர்ந்துவரும் கோட்டினை,நாதம் என்றும் கொள்கின்றனர். 
எனவே பிள்ளையார் சுழியை `நாதபிந்து' என்பர். 
பிள்ளையாருடன் சிவசக்தியின் இணைப்பை இது உணர்த்துவதாக கூறப்படுகின்றது. சிவனும் பார்வதியும் இணைந்து அர்த்தநாரீஸ்வர வடிவமாய் காட்சியளித்து, இவ்வுலகில் ஆணும், பெண்ணும் சமம் என்பதை உணர்த்துகின்றனர். 
அந்த நாதன், நாயகியின் மகனான விநாயகர், தன்னை குறிக்கும் குறியீடான பிள்ளையார் சுழியிலேயே இந்த தத்துவத்தை உணர்த்துகிறார். எந்த செயலை துவங்கும் முன்னரும் பிள்ளையார் சுழி போட்டு அதை துவங்கினால், செய்யும் செயலில் நான் என்ற மமதை இருக்காது.

கடவுளின் படைப்பின் அனைத்தும் சமம் என்ற எண்ணம் தோன்றுவதால் அச்செயல் இனிதே நிறைவடையும். இதனால் தான் பிள்ளையார் சுழி போட்டு அனைத்தையும் துவங்க சொன்னார்கள் நம் முன்னோர்கள்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

விநாயகர் சதுர்த்தி பூஜை செய்வது எப்படி.!!

விநாயகர் சதுர்த்தியன்று வீட்டை சுத்தம் செய்து கோலம்போட்டு அலங்கரிக்க வேண்டும். வாழை மரம், மாவிலை தோரணம் கட்ட வேண்டும். பூஜை அறையில் சுத்தமான பலகையில் கோலம் போட வேண்டும். அதன் மீது தலை வாழை இலையை போட வேண்டும். 


நுனி பாகம் வடக்கு முகமாக இருக்க வேண்டும். அந்த இலைமீது பச்சரிசியை பரப்ப வேண்டும். அந்த அரிசியின் மீது களிமண்ணில் செய்துள்ள விநாயகர் விக்ரகத்தை எழுந்தருள செய்ய வேண்டும். விநாயகர் சதுர்த்திக்கு,களிமண் பிள்ளையார் தான் விசேஷம்.
 
விநாயகருக்கு வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம் எனும் முக்கனிகள், கரும்பு, எள், கடலை, அப்பம், மோதகம், பொரி உருண்டை போன்றவற்றை நிவேதித்து,கணேச அஷ்டகம் கூறி பூஜைசெய்து வழிபடவேண்டும். விநாயகர் புராணம் படித்து மங்கள ஆரத்தி எடுக்க வேண்டும். 

மறுநாள் புனர்பூஜையை கொண்டாட வேண்டும். தயிர்சாதம் நிவேதனம் செய்ய வேண்டும். பின்னர்,ர் பூஜைக்கு அருகம்புல்லும், எருக்கம்பூவும் விசேஷமான ஒன்றாகும். விநாயகர் சதுர்த்தி விரதம் இருப்பவர்கள் விநாயகரின் அருள்பெற்று அனைத்து நலன்களையும், சுகங்களையும் பெறுவர். வாழ்க்கையில் துன்பம், இடையூறு வராது...


🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

சதுர்த்தியில் விநாயகரை வணங்க இந்த ஸ்லோகம் சொல்லலாம்.!!

சதுர்த்தி அன்று, காலையில் குளித்துவிட்டு, அருகிலுள்ள ஆலயத்துக்குச் செல்ல வேண்டும்.  பிள்ளையாரை 11 முறை வலம் வர வேண்டும். அறுகம்புல் கொடுத்து, விநாயகருக்கு அர்ச்சனை செய்து, நெற்றிப்பொட்டில் குட்டிக்கொண்டும், தோப்புக்கரணம் போட்டும் விநாயகரை வணங்க வேண்டும்.


கோயிலுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்ததும், ஆழாக்குப் பச்சரிசியை ஊறவைத்து, அத்துடன் சிறிது வெல்லத்தூளும் ஒரு வாழைப்பழமும் சேர்த்துப் பிசைந்து, பசுவுக்குக் கொடுக்க வேண்டும். கணபதியோடு பசு வழிபாடு செய்வது, கூடுதல் நன்மை தரும்.
வீட்டிலேயே மோதகம், சித்திரான்னங்கள், பால், தேன், கொய்யா, வாழை, நாவல்,  கொழுக்கட்டை, சுண்டல் என்று தயாரித்து விநாயகருக்கு நிவேதனம்செய்து வழிபடலாம்.
 சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை,
'மூஷிக வாகன மோதக ஹஸ்த 
சாமர கர்ண விளம்பித சூத்ர 
வாமன ரூப மஹேஸ்வர புத்ர 
விக்ன விநாயக பாத நமஸ்தே...’
என்ற ஸ்லோகத்தைச் சொல்லி வணங்கினால் எல்லாச் சங்கடங்களும் நீங்கி, சகல சௌபாக்யங்களையும் பெறலாம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

தோப்புக்கரணம் போடுவது ஏன் ?

விநாயகருக்கு தோப்புகரணம் போடுவது, வழிபாடுகளில் மிகவும் முக்கியமான ஒன்று. உண்மையின், இதன் உண்மையான உச்சரிப்பு,’தோர்பிக்கரணம்’ என்பதாகும்.

தோ என்றால், இரண்டு. கரணம் என்றால் காது. இரண்டு கைகளாலும், காதுகளை பிடித்துக் கொண்(டு, உட்கார்ந்து எழுவதே தோர்ப்பிகரணம் ஆகும்.
இதுவே, பேச்சு வழக்கில் தோப்பிக்கரணமாகிவிட்டது. ஒரு முறை மகாவிஷ்ணு, தனது மருமகன் விநாயகரிடம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, விஷ்ணுவின் ஆயதமான சக்கரத்தை எடுத்து தனது வாயில் போட்டு மறைந்துக் கொண்டார் விநாயகரிடம், விநாயகரிடம் அதை வாங்க, மகாவிஷ்ணு, தனது இரண்டு கைகளால், காதுகளை பிடித்துக் கொண்டு ஆடினார்.  அதை பார்த்து விநாயகர் சிரித்தார்.
அப்போது விஷ்ணுவின் சங்கடம் நீங்கும் வகையில் சக்கரமும் கைக்கு வந்து சேர்ந்தது. எனவே விநாயகருக்கு தோப்புக்கரணம் போட்டால் நம் சங்கடங்கள் தீரும் என்பது ஐதீகம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

விநாயகருக்கு பிடித்த வன்னி இலை.!!

விநாயகருக்குப் பிடித்த இலை, வன்னி இலை. வன்னி இலைகளால் விநாயகரைப் பூஜிப்பது சிறப்பான பலன்களைத் தரும். அதிலும் வன்னி மரத்தடியே உறையும் கணபதி ஆனந்தமயமானவர். நினைத்த காரியம் தடையில்லாமல் நடக்க விரும்புபவர்கள், இந்த வன்னி விநாயகரை வலம் வந்து வேண்டினால், வேண்டியது கிடைக்கும் என்பது ஐதீகம்.

மரத்தடி, குளக்கரை, ஆற்றங்கரை ஆகிய இடங்களில் இருக்கும் கணபதி விசேஷமானவர். வெட்டவெளியில் வீற்றிருக்கும் கணபதியை நீராட்டி வணங்குவது நமது தொன்றுதொட்ட வழிபாடாக இருந்து வந்திருக்கிறது. 'நீராட்டி, பூச்சூட்டி, தூப தீபமிட்டு தெருப் பிள்ளையாரை  வணங்கினால் தீராத வினையெல்லாம் தீரும்’ என்பார்கள்.  
ஒருமுறை பிரம்மனால் தொழுநோய் பெற்ற நவகிரகங்கள், கணபதியை பூஜித்து குணம் பெற்றார்கள். மனிதர்கள் மட்டுமன்றி சகல தேவர்களுக்கும் அருளியவர் கணபதிப் பெருமான். 

ஆனை முகனுக்கு கொழுக்கட்டை நெய்வேத்தியம் 

விநாயகர் வடிவத்துக்குள் பிரபஞ்சமே வியாபித்து நிற்பதைக் காட்டும்விதமாக, அரிசி மாவுக்குள் தேங்காயும் வெல்லமும் கலந்த இனிப்பான பூரணத்தை வைத்து, முதன்முதலில் விநாயகருக்குப் படைத்து அவரின் அருளைப் பெற்றார் ரிஷிபத்தினி அருந்ததி. 

அருகம்புல்

அனலாசுரனை விழுங்கியதால், கணபதிக்கு ஏற்பட்ட வயிற்றுத் தீயின் உஷ்ணத்தைக் குறைப்பதற்காக சப்த ரிஷிகளால் விநாயகருக்கு அருகம்புல் சமர்ப்பிக்கப்பட்டது. அதையே நாம் இன்றும் கடைப்பிடிக்கிறோம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

ஞான குருவான மஹாகணபதி.!!

பிறப்பிலேயே சகல ஞானங்களையும் பெற்ற கணபதிக்குக் குரு என்று எவருமே இல்லை. அவரே ஞான உருவானவர். அதனால்தான்  கல்வியில் சிறந்து விளங்கவும், தேர்வில் வெற்றி பெறவும் எல்லாக் குழந்தைகளுக்கும் கணபதி அருளுகிறார்.


மாணிக்க விநாயகர்

திருச்சியில் அருளும் ,தாயுமானவ ஸ்வாமியைப்போலவே சுகப் பிரசவத்துக்கு அருள்கிறார் மலையின் கீழுள்ள மாணிக்க விநாயகர். கர்ப்பிணிப் பெண்கள் பலரும் இங்கே வந்து, மாணிக்க விநாயகரை வேண்டி, தியானம் இருப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது. 
இங்கு கணபதி சிவ வடிவமாக அருளுகிறார். 

கற்பக விநாயகர்

தன்னை நாடி வரும் பக்தர்களின் செல்வநிலையை உயர்த்தி, அவர்களுக்கு வேண்டியதெல்லாம் அருளும் கற்பகத் தருவாக, பிள்ளையார்பட்டியில் கோயில் கொண்டிருக்கும் கற்பக விநாயகர், யோக கணபதியாக திருமகளின் அம்சம் கொண்டு அருள்கிறார்.

தலையில் குட்டிக் கொள்வது ஏன்?

தன்னை மதிக்காமல் சென்ற பிரம்ம தேவரின் கர்வத்தை அடக்க நினைத்த விநாயகர், அவருக்குத் தன் சுயரூபத்தைக் காட்டி அனுக்கிரகம் செய்தார். தன் கர்வம் அடங்கிய பிரம்மதேவர், நெற்றிப்பொட்டில் குட்டிக்கொண்டு வணங்கினார். அதுவே இன்றும் தொடர்கிறது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

Friday, 30 August 2019

விநாயகர் சதுர்த்தி எங்கெல்லாம் பிரசித்தி?

விநாயகர் சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக, இந்த பண்டிகை விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.

இவ்விழா, மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி ஆட்சிக் காலத்திலேயே நடத்தப்பட்டிருக்கிறது. விநாயகர் சதுர்த்தியை தேசிய விழாவாகவும்,  கலாச்சார விழாவாகவும், மாமன்னர் சிவாஜி   கொண்டாடியுள்ளார். 

 பின்னர், அது மகாராஷ்டிரா  மக்களின் குடும்ப விழாவாக மாறிவிட்டது. மக்கள் தங்கள் வீடுகளிலும் பிள்ளையார் சிலைகளை வைத்து வழிபட்டனர்.
சுதந்திர போராட்டக் காலத்தில் தான், அன்றைக்கு இருந்த , இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான, பாலகங்காதர திலகர். இதை  பொதுமக்கள் இணைந்து நடத்தும் திருவிழாவாக மாற்றினார்.
அதன் பிறகு தான், மகாராஷ்டிரா மாநிலத்தில்,எல்லோரும் தங்கள் வசதிக்கேற்ப, உயரமான விநாயகர் சிலைகளை செய்து, தங்கள் பகுதி மக்கள் சேர்ந்து கொண்டாடும் விழாவாக நடத்தினர். 
விநாயகர் சதுர்த்தியின் போது, பக்தர்களால்,ஊரெங்கும் பந்தல்கள் அமைக்கப்பட்டு, தற்காலிகமாக விநாயகர் சிலைகள் நிறுவி, பூஜைகள் செய்யப்படுகின்றன. இங்கே நிறுவப்படும் விநாயகர் சிலைகள் முக்கால் அடியில் இருந்து, 70அடி வரை. விதவிதமாக செய்யப்படுகின்றன.
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும் பத்து நாட்களும் மலர்கள், மாலைகள், மோதகங்கள் என விநாயகருக்கு பிடித்தமான 16 பொருட்கள் கொண்டு,அர்ச்சனை செய்யப்படுகிறது. 
10ம் நாளன்று,.இந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன.
மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக விநாயகர் சதுர்த்தி விழா, சிறப்பாக கொண்டாடப்படுவது, ஆந்திராவில் தான். 

இங்கே  மக்கள், தங்கள் வீடுகளில், களி மண்ணினாலும், மஞ்சளாலும் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து பூஜிக்கின்றனர். 
பொது வெளியில் பந்தல்களில் வைத்து பூஜிக்கப்படும் விநாயகர் சிலைகள், ஐதராபாத் நகரின் முக்கிய ஏரியான ஹுசைன் சாகர் ஏரியில் கரைக்கப்படுகின்றன. 
 2013ம் ஆண்டு, ஐதராபாதில், '59அடி உயர விநாயகர் சிலை நிறுவப்பட்டது. இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக செய்யப்பட்ட மிக உயரமான விநாயகர் சிலையாக இந்த சிலை சொல்லப்படுகிறது. 
கோவா : கோவா மாநிலத்தில் ஹிந்துக்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக விநாயகர் சதுர்த்தி திகழ்கிறது. கொங்கனி மொழியில் 'சாவத்' என்றழைக்கப்படும் இந்த விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கான ஏற்பாடுகள், ஒரு மாதம் முன்பே துவங்கிவிடுகின்றன. 
இங்கே விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களின் போது தினமும் வான வேடிக்கைகள், பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் என, களைகட்டுகின்றன. மேலும் இங்கே விநாயகர் சதுர்த்திக்கு அடுத்த நாள் 'நவ்யசி பஞ்சம்' எனப்படும் அறுவடை திருநாள் கொண்டாடப்படுகிறது. 
தமிழகம், கர்நாடகா, குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்தியாவுக்கு, வெளியே ஹிந்துக்கள் அதிகம் வாழும் நேபாளம், அமேரிக்கா, மொரீசியஸ், கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும். இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

விநாயகர் சதுர்த்தி பிறந்த கதை.!!

முன்னொரு காலத்தில் சிவபெருமானின் பக்தனான கஜமுகாசுரன் என்பவன் வரம் பல பெற்றமையால் இறுமாப்புக் கொண்டு தேவர்களைப் பல வழிகளிலும் துன்புறுத்தி வந்தான். அவன் தன்னை மனிதர்களாலோ, விலங்குகளாலோ, ஆயுதங்களாலோ யாரும் கொல்ல முடியாதபடி வரம் பெற்று இருந்ததால் தேவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறினர்.

எனவே அனைத்து தேவர்களும் ஒன்றாக திரண்டு சிவபெருமானிடம் சரண் அடைந்தனர். இதனால் அவர் ஆவணி மாத சதுர்த்தி அன்று விநாயகரை யானை முகத்தோடும், மனித உடலோடும் படைத்து கஜமுகாசுரனை அழிக்க அனுப்பி வைத்தார்.

விநாயகருக்கும் கஜமுகாசுரனுக்கும் கடும்போர் நடந்தது. முடிவில் விநாயகர் பெருமான் தனது கொம்புகளில் ஒன்றை ஒடித்து அவனை அழிக்க ஏவினார்.
அசுரனோ, மூஞ்சுறாய் வந்து எதிர்த்து நின்றான். விநாயகப் பெருமான் அவனை சம்ஹாரம் செய்தார்.

பின்னர் அவர் மூஞ்சுறைத் தனது வாகனமாக்கிக் கொண்டு அருளினார். இதன்மூலம் அனைவரும் சுபிட்சம் பெற்றனர். அன்று முதல் ஆவணி மாத சதுர்த்தி விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விநாயகரை வழிபட்டால் தீராதவினைகள் தீரும். சகல பாக்கியங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡