Friday, 30 August 2019

விநாயகர் சதுர்த்தி எங்கெல்லாம் பிரசித்தி?

விநாயகர் சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக, இந்த பண்டிகை விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.

இவ்விழா, மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி ஆட்சிக் காலத்திலேயே நடத்தப்பட்டிருக்கிறது. விநாயகர் சதுர்த்தியை தேசிய விழாவாகவும்,  கலாச்சார விழாவாகவும், மாமன்னர் சிவாஜி   கொண்டாடியுள்ளார். 

 பின்னர், அது மகாராஷ்டிரா  மக்களின் குடும்ப விழாவாக மாறிவிட்டது. மக்கள் தங்கள் வீடுகளிலும் பிள்ளையார் சிலைகளை வைத்து வழிபட்டனர்.
சுதந்திர போராட்டக் காலத்தில் தான், அன்றைக்கு இருந்த , இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான, பாலகங்காதர திலகர். இதை  பொதுமக்கள் இணைந்து நடத்தும் திருவிழாவாக மாற்றினார்.
அதன் பிறகு தான், மகாராஷ்டிரா மாநிலத்தில்,எல்லோரும் தங்கள் வசதிக்கேற்ப, உயரமான விநாயகர் சிலைகளை செய்து, தங்கள் பகுதி மக்கள் சேர்ந்து கொண்டாடும் விழாவாக நடத்தினர். 
விநாயகர் சதுர்த்தியின் போது, பக்தர்களால்,ஊரெங்கும் பந்தல்கள் அமைக்கப்பட்டு, தற்காலிகமாக விநாயகர் சிலைகள் நிறுவி, பூஜைகள் செய்யப்படுகின்றன. இங்கே நிறுவப்படும் விநாயகர் சிலைகள் முக்கால் அடியில் இருந்து, 70அடி வரை. விதவிதமாக செய்யப்படுகின்றன.
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும் பத்து நாட்களும் மலர்கள், மாலைகள், மோதகங்கள் என விநாயகருக்கு பிடித்தமான 16 பொருட்கள் கொண்டு,அர்ச்சனை செய்யப்படுகிறது. 
10ம் நாளன்று,.இந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன.
மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக விநாயகர் சதுர்த்தி விழா, சிறப்பாக கொண்டாடப்படுவது, ஆந்திராவில் தான். 

இங்கே  மக்கள், தங்கள் வீடுகளில், களி மண்ணினாலும், மஞ்சளாலும் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து பூஜிக்கின்றனர். 
பொது வெளியில் பந்தல்களில் வைத்து பூஜிக்கப்படும் விநாயகர் சிலைகள், ஐதராபாத் நகரின் முக்கிய ஏரியான ஹுசைன் சாகர் ஏரியில் கரைக்கப்படுகின்றன. 
 2013ம் ஆண்டு, ஐதராபாதில், '59அடி உயர விநாயகர் சிலை நிறுவப்பட்டது. இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக செய்யப்பட்ட மிக உயரமான விநாயகர் சிலையாக இந்த சிலை சொல்லப்படுகிறது. 
கோவா : கோவா மாநிலத்தில் ஹிந்துக்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக விநாயகர் சதுர்த்தி திகழ்கிறது. கொங்கனி மொழியில் 'சாவத்' என்றழைக்கப்படும் இந்த விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கான ஏற்பாடுகள், ஒரு மாதம் முன்பே துவங்கிவிடுகின்றன. 
இங்கே விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களின் போது தினமும் வான வேடிக்கைகள், பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் என, களைகட்டுகின்றன. மேலும் இங்கே விநாயகர் சதுர்த்திக்கு அடுத்த நாள் 'நவ்யசி பஞ்சம்' எனப்படும் அறுவடை திருநாள் கொண்டாடப்படுகிறது. 
தமிழகம், கர்நாடகா, குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்தியாவுக்கு, வெளியே ஹிந்துக்கள் அதிகம் வாழும் நேபாளம், அமேரிக்கா, மொரீசியஸ், கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும். இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment