Friday, 30 November 2018

ஆதித்ய ஹிருதயம் படிக்க முடியவில்லையா .... இதையாவது சொல்லுங்கள் பலன் நிச்சயம்.!!

நம் கண் முன்னே தெரியும் நிதர்சனமான தெய்வங்களாக சந்திரனையும்,சூரியனையும் குறிப்பிட்டு சொல்வதுண்டு. ஆதித்ய ஹிருதயம் தினமும்  படித்தால் அளவிலா பலன்களைப் பெறலாம் என்பது நம்பிக்கை.

அப்படி படிக்க இயலாதவர்கள், சூரியனின்  இந்த 12 நாமங்களை சொல்வதனால், ஆதித்ய ஹிருதயம் படிப்பதனால் கிடைக்கக்கூடிய புண்ணியத்தைப் பெறலாம்.

ஓம் மித்ராய நம 
ஓம் ரவயே நம 
ஓம் சூர்யாய நம 
ஓம் பானவே நம 

ஓம் ககாய நம 
ஓம் பூஷ்ணே நம 
ஓம் ஹிரண்யகர்ப்பாய நம 
ஓம் மரீசயே நம 

ஓம் ஆதித்யாய நம 
ஓம் சவித்ரே நம 
ஓம் அர்க்காய நம 
ஓம் பாஸ்கராய நம

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

சனி பகவான் ப(ய)யோடேட்டா.!!

சனி பகவான் ப(ய)யோடேட்டா  

நவகோள்களில் ஈஸ்வரப்பட்டம் சனியைத் தவிர வேறு எந்தக் கிரகத்திற்கும் கிடையாது.இறைவனுக்கு அடுத்து மக்கள் பயப்படுவதே சனி பகவானுக்கு தான். அவரைப் பற்றிய குறிப்பு :

பெயர் - சனி பகவான், சனீஸ்வரன்,  முடவன், மந்தன்
தந்தை - சூரிய பகவான்
தாயார் - உஷா, சாயாதேவி
மனைவிகள் - நீலாதேவி,

சேஷ்டா   தேவி புத்திரர் - குளிகன் அல்லது மாத்தி
நண்பர்கள் - புதன், சுக்கிரன்
சின்னம்  - தராசு
மொழி - அந்நிய பாஷை

ஆசனம் - வில்வ வடிவம்
பாலினம் - அலி
சாஸ்திர பெயர் - மேற்கோள்
கோத்திரம் - காசியபர்

வடிவம் - குள்ளம்
நாடி - வாத நாடி
உடல்உறுப்பு - நரம்பு (தொடை)
உணவு - எள்ளு சாதம்

உடமை - ஆயுளுக்கு முழுப் பொறுப்பு
ரத்தினம் - கருநீலம், நீலம் பஞ்சபூதத்
தன்மை - ஆகாயம்
குணம் - குரூரர்

நன்மை அடையும் இடம் - 3, 6, 11 தசை
வருடம் - 19 வருடம் பலன் கொடுக்கும்
பார்வை - 3, 7, 10
ராசி சஞ்சாரம் - 2 வருடம்

பிணி - வாதம், நரம்பு நோய்
பகைவர்கள் - செவ்வாய், சூரியன், சந்திரன்
கிழமை - சனிக்கிழமை
பூஜிக்கும் தேவதை - துர்க்கா, சாஸ்த்தா

பெற்ற பட்டம் - ஈஸ்வர பட்டம்
பரிகார தலங்கள் - 1. திருநள்ளாறு, 2. குச்சனூர்,   3. திருக்கொள்ளிக்காடு
திசை - மேற்கு
அதிதேவதை - எமன்

தேவதை  - பிரஜாபதி
தலம் - திருநள்ளாறு
இனம் - சூத்திரர்
நிறம் - கருமை

வாகனம்  - காகம்
தானியம் - எள்
மலர் - கருங்குவளை   மற்றும் வன்னி
ஆடை  - கருப்பு நிற ஆடை

ரத்தினம்  - நீலமணி
சுவை  - கசப்பு
சமித்து  - வன்னி
உலோகம் - இரும்பு

பயன் - நோய்,
வறுமை,   சிரமங்கள், நீங்குதல்
தீபம் - எள்ளு தீபம் ஆட்சி
வீடு - மகரம், கும்பம்

உச்ச வீடு - துலாம்
நீச்ச வீடு - மேஷம்
நட்பு வீடு - ரிஷபம், மிதுனம்,   கன்னி, தனுசு, மீனம்
சம வீடு - விருச்சிகம்

பகை வீடுகள் - கடகம், சிம்மம் 

சனீஸ்வர  ஸ்லோகம் 
சங்கடந் தீர்க்கும் சனி பகவானே

மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்!
சச்சரவின்றிச் சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா!!

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

இல்லத்தில் ஐஸ்வர்யம் நிலைக்க இதை செய்யுங்கள்.!!

ஒரு குடும்பம் செழித்து மேன்மை அடைய,அந்த இல்லத்தில் இருக்கும் பெண்களின் பங்கு அளவிட முடியாதது. வீடு எந்த அளவிற்கு தூய்மையாகவும், மங்களகரமாகவும் இருக்கிறதோ,அந்த அளவிற்கு திருமகளின் அருளும் அந்த இல்லத்தில் நிறைந்திருக்கும். 

வீட்டில் மங்களம் நிலைத்திருக்க என்ன செய்யலாம்,என்ன செய்யக் கூடாது என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்வோம். 
வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டியவை

வீட்டுப் பெண்கள் காலையில் 4.30 லிருந்து 6.00 மணிக்குள் வீட்டு வாசலில் சாணம் தெளித்து அரிசி மாவினால் கோலம் போட வேண்டும். 

காலையிலும், மாலையில் இருட்டுவதற்கு முன்பாக வீட்டில் விளக்கேற்ற வேண்டும். மாலையில் விளக்கு ஏற்றிய உடன் வெளியே செல்லக் கூடாது.

நெற்றியில் எப்பொழுதும் குங்குமம் இருக்க வேண்டும். 

வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுக்கும்  முன் குடும்பத் தலைவி தான் முதலில் குங்குமம் இட்டுக் கொண்டு பிறகு அவர்களுக்குக் கொடுக்கவேண்டும்.

வெள்ளிக்கிழமை அன்று வீட்டிற்கு உப்பு வாங்குவது நமக்கு எல்லாவித செல்வங்களையும் கொடுக்கும் என்பது நம்பிக்கை. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ ஆகியவற்றைக் கொடுப்பது நமக்கு சுபிக்ஷத்தைக் கொடுக்கும்.  
வெள்ளிக்கிழமைகளில் செய்யக்கூடாதவை 

வெள்ளிக்கிழமைகளில் பணம் கடன் கொடுப்பது, அரிசி வறுப்பது, புடைப்பது ஆகியவை 

பெண்கள் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது. 

பால் பொங்கி வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

விளக்கு வைத்த பிறகு தலைவாருதல், பேன் பார்த்தல், முகம் கழுவுதல் போன்றவை செய்யக்கூடாது. 

விளக்கு வைத்த பிறகு குப்பை, கூளங்களை வெளியே வீசக்கூடாது. 

பால், தயிர், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றை இரவில் கடன் வாங்குதல், கடன்கொடுத்தல் கூடாது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

'நீ எங்கிட்ட கைங்கர்யம் பண்ணிண்டு இருக்கே. நீ நன்னா இருக்கனும்னு நான் நினைக்க மாட்டேனா' - புண்னியம் சேர்த்த மகாப் பெரியவா.!!

அனைவரும் இறைவனிடம் , இதைச் செய்து கொடு, இந்த பிரார்த்தனையை நிறைவேற்று என பல  கோரிக்கைகளை வேண்டுகோளாக வைத்து வணங்கி வருகிறோம். பகவானின் குழந்தைகளான நமக்கு எதைத் தரவேண்டும் என்பதை இறைவனுக்கு தெரியாதா?

சில நேரங்களில் சிறு துன்பங்கள் ஏற்படும் போதும் இறைவனிடம் மிக உரிமையாக நம்மில் பலர் கோபித்துக் கொள்கிறோம், ஒரு சிலரோ  இந்த தெய்வமே பொய் என்று அலுத்துக் கொள்கிறோம். நிம்மதியில்லாமல் தவிக்கிறோம். இறை சக்தி தாய்மை குணம் கொண்டது. அது ஒரு நொடியும் நம்மை கை விடுவதில்லை. காஞ்சி கருணை தெய்வம் மகாப் பெரியவா தனது பக்தர் ஒருவருக்கு புண்ணியம் சேர்த்த சம்பவம் இது...
 ஒரு சமயம் ஸ்ரீமடத்தில் ஸஹஸ்ர போஜனம் செய்ய ஏற்பாடு நடந்தது. ஒரே நாளில் 1000 அந்தணர்களுக்கு போஜனமளிக்க வேண்டும். ஒரே நாளில் அவ்வளவு பேர் கிடைக்காவிடில் பல நாட்களில் கிடைக்கும் அந்தணர்களை வைத்து அன்னமிட்டு 1000 எண்ணிக்கையை நிறைவு செய்வதுண்டு. ஆனால் போஜனத்திற்கு வரிக்கப்படும் அந்தணர்கள் கட்டாயம் வேதவித்துக்களாகவும், ஆசார, அனுஷ்டானம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என்பது சாஸ்திர விதி.

அப்படி நெறி வழுவாமல் நடக்கும் ஸஹஸ்ரபோஜனத்திற்கு ஒருநாள் போதிய அந்தணர்கள் கிடைக்கவில்லை. அதனால் ஸ்ரீமடம் மேனேஜர் மஹாபெரியவாளை அணுகி விபரம் தெரிவிக்க, நிலைமையை உணர்ந்த மஹான் ஸ்ரீமடத்தில் கைங்கர்யம் செய்பவர்களில் சிலரை உபயோகித்துக் கொள்ளும்படி உத்தரவிட்டார். அதன்படி மேனேஜர் மடத்தில் உள்ள சிலரை அழைத்து மறுநாள் ஸஹஸ்ர போஜனத்திற்கு வரும்படி உத்தரவிட்டார். மறுநாள் குறிப்பிட்ட அனைவரும் ஸ்நானம் செய்து ஆசாரத்துடன் பெரியவாள் பூஜைக்கு வந்தனர். பூஜை முடிந்ததும் அனைவருக்கும் பெரியவாள் அபிஷேக தீர்த்தம் தருவார்.
ஒரு திரைக்கு பின்னால் ஸ்டூலில் பெரியவர் அமர்ந்து கொண்டு தீர்த்தம் தர, திரைக்கு மறுபுறம் வரிசையில் பக்தர்கள் நின்று கொண்டு சிறிய துவாரத்தின் வழியாக கையை நீட்டி தீர்த்தத்தை வாங்கிக் கொள்ள வேண்டும். ப்ரசாத விநியோகம் முதலில் ஸஹஸ்ர போஜனத்திற்கு வரிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்டது. அதில் வரிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவராக வந்து கையை நீட்ட, ப்ரசாதம் வழங்கினார் மஹான். 
இந்த நிகழ்ச்சி நாயகனான தொண்டர் வந்து கையை நீட்ட தீர்த்தத்தை அவர் கையில் விடாத பெரியவர் திரைக்கு உள்பக்கம் தன் அருகிலிருப்பவரிடம் 'கை நீட்டுவது யார்?" என்று வினவி 'அவனை சாப்பிட உட்காரவேண்டாம். பரிமாற சொல்' என்று உத்தரவிட்டு தீர்த்தத்தை கையில் விட்டார். இந்த உத்தரவு அந்த தொண்டரை கலங்க வைத்தது.
'மேனேஜர், பெரியவர் சொல்லித்தானே மடத்தில் பணிபுரிபவர்களையே இன்று ஸஹஸ்ர போஜனத்திற்கு நியமித்தார். அதன்படி தானே தனக்கும் இன்று வாய்ப்பு தரப்பட்டது. அப்படி இருக்க, சாப்பிட தயாராக வந்தவர்களில் தன்னைமட்டும் வேண்டாம் என்று பெரியவர் விலக்குவது எதனால்? தனக்கு என்ன தகுத் குறைவு? என்பது போன்ற பல எண்ணங்கள் அவர் மனதில் எழுந்து வாட்ட, மனம் ஒடிந்து கண்ணீர் சொரிய நின்றார். எனினும் தன்னை சாப்பிடவேண்டாம் என்று சொன்னாலும், பரிமாறும் கைங்கர்ய பாக்கியத்தையாவது கொடுத்தாரே என்று மனதைத் தேற்றிக்கொண்டு பணியில் ஈடுபட்டார்.

ஸஹஸ்ர போஜனம் நடந்து முடிந்தது. தொண்டருக்கு மன உளைச்சல் அடங்கவில்லை. கண்ணீரும் வற்றவில்லை. ஒரு ஓரமாய் அமர்ந்து தன் நிலைமையையும், தனக்கு ஏற்பட்ட அவமானத்தையும் எண்ணி எண்ணி வருந்தும் பொழுது மஹானின் அழைப்பு வந்தது.
மிகுந்த மனவருத்தத்துடன் வந்து நின்ற தொண்டரைப் பார்த்து 'ரொம்ப அழுதியோ? என்று வினவ அன்பருக்கு மேலும் தாங்க முடியாமல் கண்ணீர் வந்தது. 'நீ எங்கிட்ட கைங்கர்யம் பண்ணிண்டு இருக்கே. நீ நன்னா இருக்கனும்னு நான் நினைக்க மாட்டேனா' என்று மஹான் வினவியது அன்பரை மேலும் கரைத்தது. தன்னிடம் கைங்கர்யம் செய்பவர்கள் மட்டுமா, உலகமனைத்துமே நன்றாக இருக்க வேண்டும் என்று அனவரதமும் நினைக்கும் மஹாத்மா அல்லவா மஹாபெரியவர்.
மனவாட்டம் அடங்கும் முன்பே வந்தது அடுத்த வினா. 'நீ கோயில்களில் நடக்கும் தேர்த்திருவிழா பார்த்திருக்கியோ? அதில் எல்லோரும் கூடி வடம் பிடித்து தேர் இழுப்பார்கள் இல்லையா? அதில் விதவையான சில பாட்டிகளும் கூட வடம் இழுப்பா தெரியுமோ? பொதுவா விதவையானவா எந்த விழாக்களிலும் கலந்துக்க மாட்டா. ஆனா கோயில் ரதோத்ஸவத்தில் மட்டும் கலந்துப்பா. ரத உத்ஸவத்தில் கலந்து கொண்டு யார் தேர் வடம் பிடித்து இழுத்தாலும் அவர்களுக்கு, சொந்த செலவில் ஸ்வாமிக்கு ரதோத்ஸவம் செய்த பலன் வந்துவிடும் என்று தெரியுமோ'? என கேட்க, எதற்கு இந்த கேள்வி நம்மிடம் கேட்க வேண்டும் என்று தொண்டர் திகைக்க நேராக சம்பவ விஷயத்திற்கே வந்தார் பெரியவா.
'மடத்துல கைங்கர்யம் பண்றவாளையே ஸஹஸ்ர போஜனத்திற்கு உட்கார வைக்கும்படி சொன்னேன். உனக்கும் அழைப்பும் வந்தது. ஆனால் நீ தீர்த்தம் வாங்க வந்த பொழுது தான் தோணித்து. ஸஹஸ்ர போஜனத்தில் சாப்பிட உட்காருபவர்கள் கட்டாயம் வேதம் படித்து அனுஷ்டானங்களுடன் இருக்க வேண்டும் என்ற சட்டம். உன்னால் தவறாமல் சந்தியாவந்தனம் கூட செய்ய முடியரதோ இல்லையோ, செய்யக் கூடாதுங்கற எண்ணம் உனக்கில்லை. மடத்து வேலையா நீ வெளியே போக வேண்டி இருப்பதால், சில சமயம் தவறலாம். 

எனவே நீ சாப்பிட உட்கார்ந்தா உனக்கு தோஷம் வந்துடப் போதேன்னு நினைச்சேன். சும்மா இருந்த உனக்கு என்னால் பாபம் வந்துடக் கூடாதுன்னு ஞாபகம் வந்தது. அதனால் தான் உன்னை சாப்பிட உட்கார வேண்டாம் என்றேன். ஆனா சாப்பாடு போடற புண்ணியமாவது உனக்கு வரட்டுமேன்னு தான் உன்னை பரிமாறச் சொன்னேன். ரதோத்ஸ்வத்திற்கு சொன்னது தான் இதுக்கும். நீ ஸஹஸ்ர போஜனம் செய்பவர்களுக்கு பரிமாறினதாலே நீயே செலவழிச்சு ஸஹஸ்ர போஜனம் செய்த பலன் முழுக்க வந்துடுத்து, க்ஷேமமாய் இருப்பே' என்று அருள் வார்த்தை மழையாய் வர்ஷித்தார்.
இதைக் கேட்ட அடியவருக்கு தனக்கு பாபம் வரக் கூடாது என்ற கரிசனத்தோடு பரம புண்ணியமும் பைசா செலவில்லாமல் வரவேண்டும் என்று கருணை கொண்ட பெரியவரின் தாய் மனதை எண்ணி எண்ணி நெகிழ்ந்தார். இவ்வளவு நேரம் அவமானம் என்றெல்லாம் எண்ணி வாடிய மனது எவ்வளவு பெரிய வெகுமானம் அருளியுள்ளார் இந்த மஹாமுனி என எண்ணி மகிழ்ந்தது.
தன்னை சரண் அடைந்த அன்பர்களுக்கு வாரி வாரி அருளை வழங்குவது மட்டும் அவர் குணமல்ல. கடுகளவு பாபமும் அண்ட முடியாதபடி காத்து நிற்கும் அரண்தான் அந்த ஹரன்.
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

பிரம்மஞானம் என்ன கடைச்சரக்கா?

வியாழக் கிழமை அருள்மிகு சீரடி சாய் பாபாவிற்கு உகந்த நாள். சாய் பக்தர்கள் தங்கள் சத்குருவை மனதில் இருத்தி விரதம் இருக்கும்நாள். இன்றளவும் தனது அற்புதங்களை தன்னை உண்மையாக நேசிக்கும் பக்தர்களின்  வாழ்வில் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். ஏழை,பணக்காரன் என்ற பாகுபாடு அவரின் தர்பாரில் இல்லை.

ஒரு முறை பாபா ஷீரடியில் தனது தர்பாரில் மக்களோடு மக்களாக அமர்ந்து அவர்களுக்கு ஆசிகள் வழங்கிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு செல்வந்தர் பாபாவிடம், தமக்கு பிரம்மஞானம் அளிக்க வேண்டுமென மன்றாடினார். தாம் வெளியூரிலிருந்து வந்திருப்பதால் தமக்கு முன்னுரிமை கொடுத்து, உடனடியாக பிரம்ம ஞானத்தை அருளவேண்டும் என்று இடைவிடாமல் வற்புறுத்தினார்.

பாபாவுக்கு உள்ளூற நகைப்பு. பிரம்மஞானம் என்ன கடைச்சரக்கா? பணப்பித்துப் பிடித்த இவர் எவ்விதம் பிரம்மஞானத்தை அடைய இயலும்? பாபா அவர் முன்னிலையில் ஒரு நாடகம் நடத்தினார்!
ஒரு சிறுவனைக் கூப்பிட்டு, நந்து மார்வாடி என்பவரிடம் சென்று ஐந்து ரூபாய் கைமாற்று வாங்கிவரச் சொன்னார். சிறுவன் ஓடிப்போய்த் திரும்பி வந்து அவர் வீடு பூட்டியிருப்பதாகச் சொன்னான். அப்படியானால், மளிகைக்கடைக்காரர் பாலாவிடம் ஐந்து ரூபாய் வாங்கிவா, என்றார். என்ன சங்கடம்! பாலா வீடும் பூட்டியிருந்தது.
இப்படி எந்த வீடெல்லாம் பூட்டியிருக்கும் என்று தெரிந்த மாதிரி ஒவ்வொரு வீடாகச் சிறுவனை அனுப்பினார். அவன் வீடு பூட்டியிருக்கும் தகவலைச் சொல்லும்போதெல்லாம் பிரம்மஞானம் கேட்ட செல்வந்தரைப் பார்த்துக்கொண்டே இருந்தார் பாபா. அவரிடம் அசைவே இல்லை. தனக்கு பிரம்மஞானத்தை போதிக்குமாறு மீண்டும் கேட்கத் தொடங்கினார் அவர்! பாபா திடீரென்று அவரைப் பார்த்துச் சீறினார். 

உன் பையில் பத்து ரூபாய் நோட்டுகளாக இருபத்தைந்து நோட்டுகள் இருக்கின்றன அல்லவா? அதுவே உனது பிரம்மம். அதைக் கட்டிக்கொண்டு அழு. நான் ஐந்து ரூபாய் கைமாற்றாக வேண்டும் என்று பலரைக் கேட்டு வருகிறேன். உன் பையிலுள்ள 250 ரூபாயிலிருந்து ஓர் ஐந்து ரூபாய் எடுத்துக் கொடுக்க உனக்குத் தோன்றவில்லை. ஆனால், பிரம்மஞானம் வேண்டும் உனக்கு!
எவன் என்ன விரும்பினாலும், அவனுக்கு அதை என்னால் அளிக்க முடியும்! ஆனால், வாங்கிக் கொள்கிறவனுக்குப் பெறுகிற தகுதி இருக்கிறதா என்று நான் கவனிக்கவேண்டும். உனக்குப் பணமே பிரம்மம்! பாபாவின் சீற்றத்தைப் பார்த்த செல்வந்தர் திகைத்துப் போனார்.
தன்னிடம் இருநூற்றைம்பது ரூபாய் இருப்பதை அவர் மிகச் சரியாகக் கண்டறிந்து சொன்னது அவரைத் திகைப்பில் ஆழ்த்தியது. வெட்கத்துடன் விடைபெற்றார் அவர்....
இப்படி இன்னும் பாபா வாழ்வில் எத்தனை எத்தனையோ லீலைகள். அவர் நிகழ்த்திய லீலைகளுக்கு முடிவேது? தினந்தோறும் அவரின் பக்தர்கள் அதை உணர்ந்தவண்ணம் தான் இருக்கிறார்கள். 
ஓம் சாய் ராம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

நவக்கிரக தோஷமா... உங்களுக்கான மந்திரங்கள்.!!

நவக்கிரக தோஷங்கள் நீங்க இந்த மந்திரங்களை அந்தந்த கிரகத்தின் தசா புத்தி  நடக்கும்போது,அல்லது அவற்றிற்குரிய கிழமையில் ஜெபிக்க கை மேல் பலன் கிடைக்கும். மேலும் கிரகங்களின்  அதிதெய்வங்களைத் தெரிந்துக் கொண்டு அந்த ஆலயங்களுக்கு சென்று  ஜெபிக்க பன்மடங்கு பலன் தரும்.


சூர்யபகவான்:-

சுலோகம்:-
ஓம் ஜபாகுசும சங்காசம்|
காச்யபேயம் மகாத்யுதிம்||
தமோரிம் சர்வ  பாபக்னம்|

ப்ரனதோஸ்மி  திவாகரம்||

உகந்த நாள் :ஞாயிற்றுக்கிழமை .
அதி தெய்வம் :-சிவன்

சந்திரபகவான்:-
சுலோகம்:-
ததி ஷங்க துஷாராபம்|

க்ஷீரோ தார்ணவ சம்பவம்|
நமாமி சசினம் சோமம்|
சம்போர் மகுட  பூஷணம்||

உகந்த நாள் :-திங்கள்கிழமை
அதி தெய்வம் :-பார்வதி

செவ்வாய்பகவான்:-

சுலோகம்:-
தரணி கர்ப்ப சம்பூதம்|
வித்யுத் காந்தி சமப்ரபம்||
குமாரம் சக்தி ஹஸ்தம் தம்|

மங்களம் பிரணமாம்யஹம்||

உகந்த நாள் :-செவ்வாய்க்கிழமை
அதி தெய்வம் :-முருகன்

புதபகவான்:-
சுலோகம்:-
பிரியங்கு கலிகா ஷ்யாமம் |

ரூபேணா பிரதிமம் புதம்|
சௌம்யம் சௌம்ய குணோ பேதம்||
தம் புதம் பிரணமாம்யஹம்||

உகந்த நாள் :-புதன்கிழமை
அதி தெய்வம் :-விஷ்ணு

குரு பகவான்:-

சுலோகம்:-
தேவா நாம் ச ரிஷீனாஞ்ச||
குரும் காஞ்சன சந்நிபம்|
பக்திபூதம் த்ரிலோகேசம் ||

தம் நமாமி ப்ரஹஸ்பதிம்||

உகந்த நாள் :-வியாழக்கிழமை
அதி தெய்வம் :-தக்ஷிணாமூர்த்தி / பிரம்மா

சுக்ர பகவான்:-
சுலோகம்:-
ஹிமகுந்த ம்ருனாலாபம்|

தைத்யானம் பரமம் குரும் |
சர்வ சாஸ்திர ப்ரவக்தாரம் |
பார்கவம் ப்ரணமாம்யஹம்||

உகந்த நாள் :-வெள்ளிக்கிழமை
அதி தெய்வம் :-லக்ஷ்மி / இந்திரன்/ வருணன்

சனி பகவான்:-

சுலோகம்:-
நீலாஞ்சனா சமபாசம் |
ரவி புத்ரம் யமாக்ராஜம்|
சாயா மார்த்தாண்ட சம்பூதம்|

தம் நமாமி சனைச்சரம்||

உகந்த நாள் :-சனிக்கிழமை
அதி தெய்வம் :-யமன் /சாஸ்தா /சிவன்/பைரவர்

ராகு பகவான்:-
சுலோகம்:-
அர்த்த காயம் மஹா வீர்யம் |

சந்திராதித்ய விமர்த்தனம்|
சிம்ஹிகா கர்ப்ப சம்பூதம்|
தம் ராஹும் ப்ரணமாம்யஹம்||

உகந்த நாள் :-செவ்வாய்
அதி தெய்வம் :-காளி / துர்க்கை

கேது பகவான்:-

சுலோகம்:-
பலாச புஷ்ப சங்காசம்|
தாரகா க்ரஹ மஸ்தகம்|
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம்|

தம் கேதும் ப்ரணமாம்யஹம்||
உகந்த நாள் :-சனிக்கிழமை,ஞாயிற்றுகிழமை
அதி தெய்வம் :-விநாயகர் / சண்டிகேஸ்வரர்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

பிரம்மஞானம் என்ன கடைச்சரக்கா?

வியாழக் கிழமை அருள்மிகு சீரடி சாய் பாபாவிற்கு உகந்த நாள். சாய் பக்தர்கள் தங்கள் சத்குருவை மனதில் இருத்தி விரதம் இருக்கும்நாள். இன்றளவும் தனது அற்புதங்களை தன்னை உண்மையாக நேசிக்கும் பக்தர்களின்  வாழ்வில் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். ஏழை,பணக்காரன் என்ற பாகுபாடு அவரின் தர்பாரில் இல்லை.

ஒரு முறை பாபா ஷீரடியில் தனது தர்பாரில் மக்களோடு மக்களாக அமர்ந்து அவர்களுக்கு ஆசிகள் வழங்கிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு செல்வந்தர் பாபாவிடம், தமக்கு பிரம்மஞானம் அளிக்க வேண்டுமென மன்றாடினார். தாம் வெளியூரிலிருந்து வந்திருப்பதால் தமக்கு முன்னுரிமை கொடுத்து, உடனடியாக பிரம்ம ஞானத்தை அருளவேண்டும் என்று இடைவிடாமல் வற்புறுத்தினார்.

பாபாவுக்கு உள்ளூற நகைப்பு. பிரம்மஞானம் என்ன கடைச்சரக்கா? பணப்பித்துப் பிடித்த இவர் எவ்விதம் பிரம்மஞானத்தை அடைய இயலும்? பாபா அவர் முன்னிலையில் ஒரு நாடகம் நடத்தினார்!
ஒரு சிறுவனைக் கூப்பிட்டு, நந்து மார்வாடி என்பவரிடம் சென்று ஐந்து ரூபாய் கைமாற்று வாங்கிவரச் சொன்னார். சிறுவன் ஓடிப்போய்த் திரும்பி வந்து அவர் வீடு பூட்டியிருப்பதாகச் சொன்னான். அப்படியானால், மளிகைக்கடைக்காரர் பாலாவிடம் ஐந்து ரூபாய் வாங்கிவா, என்றார். என்ன சங்கடம்! பாலா வீடும் பூட்டியிருந்தது.
இப்படி எந்த வீடெல்லாம் பூட்டியிருக்கும் என்று தெரிந்த மாதிரி ஒவ்வொரு வீடாகச் சிறுவனை அனுப்பினார். அவன் வீடு பூட்டியிருக்கும் தகவலைச் சொல்லும்போதெல்லாம் பிரம்மஞானம் கேட்ட செல்வந்தரைப் பார்த்துக்கொண்டே இருந்தார் பாபா. அவரிடம் அசைவே இல்லை. தனக்கு பிரம்மஞானத்தை போதிக்குமாறு மீண்டும் கேட்கத் தொடங்கினார் அவர்! பாபா திடீரென்று அவரைப் பார்த்துச் சீறினார். 

உன் பையில் பத்து ரூபாய் நோட்டுகளாக இருபத்தைந்து நோட்டுகள் இருக்கின்றன அல்லவா? அதுவே உனது பிரம்மம். அதைக் கட்டிக்கொண்டு அழு. நான் ஐந்து ரூபாய் கைமாற்றாக வேண்டும் என்று பலரைக் கேட்டு வருகிறேன். உன் பையிலுள்ள 250 ரூபாயிலிருந்து ஓர் ஐந்து ரூபாய் எடுத்துக் கொடுக்க உனக்குத் தோன்றவில்லை. ஆனால், பிரம்மஞானம் வேண்டும் உனக்கு!
எவன் என்ன விரும்பினாலும், அவனுக்கு அதை என்னால் அளிக்க முடியும்! ஆனால், வாங்கிக் கொள்கிறவனுக்குப் பெறுகிற தகுதி இருக்கிறதா என்று நான் கவனிக்கவேண்டும். உனக்குப் பணமே பிரம்மம்! பாபாவின் சீற்றத்தைப் பார்த்த செல்வந்தர் திகைத்துப் போனார்.
தன்னிடம் இருநூற்றைம்பது ரூபாய் இருப்பதை அவர் மிகச் சரியாகக் கண்டறிந்து சொன்னது அவரைத் திகைப்பில் ஆழ்த்தியது. வெட்கத்துடன் விடைபெற்றார் அவர்....
இப்படி இன்னும் பாபா வாழ்வில் எத்தனை எத்தனையோ லீலைகள். அவர் நிகழ்த்திய லீலைகளுக்கு முடிவேது? தினந்தோறும் அவரின் பக்தர்கள் அதை உணர்ந்தவண்ணம் தான் இருக்கிறார்கள். 
ஓம் சாய் ராம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡