ஒரு குடும்பம் செழித்து மேன்மை அடைய,அந்த இல்லத்தில் இருக்கும் பெண்களின் பங்கு அளவிட முடியாதது. வீடு எந்த அளவிற்கு தூய்மையாகவும், மங்களகரமாகவும் இருக்கிறதோ,அந்த அளவிற்கு திருமகளின் அருளும் அந்த இல்லத்தில் நிறைந்திருக்கும்.
வீட்டில் மங்களம் நிலைத்திருக்க என்ன செய்யலாம்,என்ன செய்யக் கூடாது என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டியவை
வீட்டுப் பெண்கள் காலையில் 4.30 லிருந்து 6.00 மணிக்குள் வீட்டு வாசலில் சாணம் தெளித்து அரிசி மாவினால் கோலம் போட வேண்டும்.
காலையிலும், மாலையில் இருட்டுவதற்கு முன்பாக வீட்டில் விளக்கேற்ற வேண்டும். மாலையில் விளக்கு ஏற்றிய உடன் வெளியே செல்லக் கூடாது.
நெற்றியில் எப்பொழுதும் குங்குமம் இருக்க வேண்டும்.
வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுக்கும் முன் குடும்பத் தலைவி தான் முதலில் குங்குமம் இட்டுக் கொண்டு பிறகு அவர்களுக்குக் கொடுக்கவேண்டும்.
வெள்ளிக்கிழமை அன்று வீட்டிற்கு உப்பு வாங்குவது நமக்கு எல்லாவித செல்வங்களையும் கொடுக்கும் என்பது நம்பிக்கை. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.
வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ ஆகியவற்றைக் கொடுப்பது நமக்கு சுபிக்ஷத்தைக் கொடுக்கும்.
வெள்ளிக்கிழமைகளில் செய்யக்கூடாதவை
வெள்ளிக்கிழமைகளில் பணம் கடன் கொடுப்பது, அரிசி வறுப்பது, புடைப்பது ஆகியவை
பெண்கள் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது.
பால் பொங்கி வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
விளக்கு வைத்த பிறகு தலைவாருதல், பேன் பார்த்தல், முகம் கழுவுதல் போன்றவை செய்யக்கூடாது.
விளக்கு வைத்த பிறகு குப்பை, கூளங்களை வெளியே வீசக்கூடாது.
பால், தயிர், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றை இரவில் கடன் வாங்குதல், கடன்கொடுத்தல் கூடாது...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment