வியாழக் கிழமை அருள்மிகு சீரடி சாய் பாபாவிற்கு உகந்த நாள். சாய் பக்தர்கள் தங்கள் சத்குருவை மனதில் இருத்தி விரதம் இருக்கும்நாள். இன்றளவும் தனது அற்புதங்களை தன்னை உண்மையாக நேசிக்கும் பக்தர்களின் வாழ்வில் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். ஏழை,பணக்காரன் என்ற பாகுபாடு அவரின் தர்பாரில் இல்லை.
ஒரு முறை பாபா ஷீரடியில் தனது தர்பாரில் மக்களோடு மக்களாக அமர்ந்து அவர்களுக்கு ஆசிகள் வழங்கிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு செல்வந்தர் பாபாவிடம், தமக்கு பிரம்மஞானம் அளிக்க வேண்டுமென மன்றாடினார். தாம் வெளியூரிலிருந்து வந்திருப்பதால் தமக்கு முன்னுரிமை கொடுத்து, உடனடியாக பிரம்ம ஞானத்தை அருளவேண்டும் என்று இடைவிடாமல் வற்புறுத்தினார்.
பாபாவுக்கு உள்ளூற நகைப்பு. பிரம்மஞானம் என்ன கடைச்சரக்கா? பணப்பித்துப் பிடித்த இவர் எவ்விதம் பிரம்மஞானத்தை அடைய இயலும்? பாபா அவர் முன்னிலையில் ஒரு நாடகம் நடத்தினார்!
ஒரு சிறுவனைக் கூப்பிட்டு, நந்து மார்வாடி என்பவரிடம் சென்று ஐந்து ரூபாய் கைமாற்று வாங்கிவரச் சொன்னார். சிறுவன் ஓடிப்போய்த் திரும்பி வந்து அவர் வீடு பூட்டியிருப்பதாகச் சொன்னான். அப்படியானால், மளிகைக்கடைக்காரர் பாலாவிடம் ஐந்து ரூபாய் வாங்கிவா, என்றார். என்ன சங்கடம்! பாலா வீடும் பூட்டியிருந்தது.
இப்படி எந்த வீடெல்லாம் பூட்டியிருக்கும் என்று தெரிந்த மாதிரி ஒவ்வொரு வீடாகச் சிறுவனை அனுப்பினார். அவன் வீடு பூட்டியிருக்கும் தகவலைச் சொல்லும்போதெல்லாம் பிரம்மஞானம் கேட்ட செல்வந்தரைப் பார்த்துக்கொண்டே இருந்தார் பாபா. அவரிடம் அசைவே இல்லை. தனக்கு பிரம்மஞானத்தை போதிக்குமாறு மீண்டும் கேட்கத் தொடங்கினார் அவர்! பாபா திடீரென்று அவரைப் பார்த்துச் சீறினார்.
உன் பையில் பத்து ரூபாய் நோட்டுகளாக இருபத்தைந்து நோட்டுகள் இருக்கின்றன அல்லவா? அதுவே உனது பிரம்மம். அதைக் கட்டிக்கொண்டு அழு. நான் ஐந்து ரூபாய் கைமாற்றாக வேண்டும் என்று பலரைக் கேட்டு வருகிறேன். உன் பையிலுள்ள 250 ரூபாயிலிருந்து ஓர் ஐந்து ரூபாய் எடுத்துக் கொடுக்க உனக்குத் தோன்றவில்லை. ஆனால், பிரம்மஞானம் வேண்டும் உனக்கு!
எவன் என்ன விரும்பினாலும், அவனுக்கு அதை என்னால் அளிக்க முடியும்! ஆனால், வாங்கிக் கொள்கிறவனுக்குப் பெறுகிற தகுதி இருக்கிறதா என்று நான் கவனிக்கவேண்டும். உனக்குப் பணமே பிரம்மம்! பாபாவின் சீற்றத்தைப் பார்த்த செல்வந்தர் திகைத்துப் போனார்.
தன்னிடம் இருநூற்றைம்பது ரூபாய் இருப்பதை அவர் மிகச் சரியாகக் கண்டறிந்து சொன்னது அவரைத் திகைப்பில் ஆழ்த்தியது. வெட்கத்துடன் விடைபெற்றார் அவர்....
இப்படி இன்னும் பாபா வாழ்வில் எத்தனை எத்தனையோ லீலைகள். அவர் நிகழ்த்திய லீலைகளுக்கு முடிவேது? தினந்தோறும் அவரின் பக்தர்கள் அதை உணர்ந்தவண்ணம் தான் இருக்கிறார்கள்.
ஓம் சாய் ராம்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment