Tuesday, 29 May 2018

விரதங்களில் மிகவும் சிறந்த விரதம் எது தெரியுமா

மனம் பொறி வழிபோகாது நிற்றல் பொருட்டு உணவை விடுத்தேனும் சுருக்கியேனும் இறைவனை மெய்யன்போடு வழிபடுதலே விரதம் ஆகும்.

விரதங்களில் பலவகை உள்ளன. அவையில் மிகவும் உயர்ந்ததாக கூறப்படுவது மௌனவிரதம் ஆகும்.

பேச்சு, எண்ணம், செயல் இவற்றை நிறுத்தி, மனதை இறை சிந்தனையில் செலுத்தி இருப்பதே, மௌன விரதமாகும். மௌன விரதம். உடலின் அனைத்துவகை இயக்கங்களை கட்டுப்படுத்துகின்றது

மௌன விரதம் என்றால் என்ன?

மௌனவிரதம் என்பது நம்மை நாம் அமைதியாக மனதை ஒடுக்கி, இறை சிந்தனை அல்லது சிந்தனையை ஒருநிலைப்படுத்துவதாகும். அமைதியாக ஓரிடத்தில் தரையில் தார் பாய் அல்லது கோரைப்பாய் விரித்து அமர்ந்து, அலைபாயும் மனதை ஒருமுகப்படுத்தி, சிந்திக்கும்போது, தினசரி வாழ்வில் நம்மை பாதிக்கும் அனைத்து செயல்களும் நம்முன் வந்துபோகும்.

இன்னும் சற்று ஆழமாக சிந்திக்க, அவையெல்லாம், நம்மாலேயே உண்டான பாதிப்புகள் என்பதையும் அறிந்து, அவற்றை எப்படி கடக்கவேண்டும் என்று சிந்திக்க, கண்டிப்பாக அதற்கான விடைகளும் கிடைத்துவிடும்.

மாதம் ஒரு முறை பழச்சாறு மற்றும் தண்ணீர் மட்டும் உட்கொண்டு, மௌன விரதம் கடைபிடிக்க, மனம் பொலிவாகி, எண்ணங்களும் செயலும், பேச்சும் வளமாகும். நம் பேச்சில் உள்ள உண்மை, தெளிவு, அடுத்தவரிடம் ஒரு ஈர்ப்பை உண்டாக்கும். தன்னை போல மற்ற உயிகளையும் நேசிக்கவேண்டும் என்கின்ற மனப்பக்குவம் வரும்.

பொதுவாக மௌன விரதம், ஞானிகளாலும், பல்வேறு சமய பெரியோர்களாலும், மௌன நிலையில் இறை நிலையை அடைய அனுஷ்டிக்கப்பட்டது. மௌன விரதம் , தவ ஞானிகளுக்கு சிறந்த ஆன்மீக அரணாக விளங்கியது,

இத்தகைய இறைவனை அடையும் மௌன விரதத்தி பகவான் இரமணரும், காஞ்சி பெரியவரும் அவ்வப்போது இருந்து இறையுடன் கலந்திருப்பார்கள் என்பதை புராணகதைகள் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

அதோடு திருச்செந்தூர் திருமுருகனின் கந்த ஷஷ்டி விழாவின் கடைசி நாளில், முருகனடியார்கள், ஒரு வார காலம் அனுஷ்டித்த விரதத்தை, மௌன விரதம் இருந்தே நிறைவு செய்வர். இதன் மூலம், தங்கள் கோரிக்கைகளை சீரிய முறையில் முருகப்பெருமான் நடத்தித் தருவார் என்பது நம்பிக்கை. இதில் இருந்தே மௌனவிரதம் எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment