Tuesday, 29 May 2018

எந்த மலரை எந்த தெய்வத்துக்கு அர்ப்பணிக்ககூடாது

இறைவனுக்கு மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் அது பெற்றுத் தரும்.

ஆனால், இப்படி நாம் அர்ப்பணிக்கும் மலர்களில்கூட சில நியதிகள் உள்ளன. சில மலர்கள் கடவுளுக்கு உகந்தவை என்றும் சில மலர்கள் கடவுளுக்கு உகந்தவை அல்ல என்றும் சொல்லப்பட்டு உள்ளது. காலம்காலமாக நம் முன்னோர்களால் கடைப்பிடிக்கப்பட்டது. எந்த மலரை எந்த தெய்வத்துக்கு அர்ப்பணிக்கக்கூடாது என்பதை அறிந்துகொள்வோம்.

விநாயகர்

துளசி- பொதுவாக விநாயகருக்கு துளசியால் அர்ச்சனை செய்யக்கூடாது என்பார்கள். ஆனால் சதுர்த்தியில் மட்டும் விநாயகருக்கு துளசியால் அர்ச்சனை செய்யும் வழக்கம் உண்டு.

விஷ்ணு

ஊமத்தம்பூ - விஷ்ணுவுக்கு ஊமத்தம்பூ, எருக்கம்பூ ஆகியவற்றால் அர்ச்சனை செய்யக்கூடாது.

சிவன்

தாழம்பூ - சிவபெருமானை தாழம்பூவினால் அர்ச்சிக்கக் கூடாது. ஆனால் சிவராத்திரி தினத்தில் சிவனாருக்கு தாழம்பூவும் அணிவிப்பது உண்டு.

அம்பிகை

அறுகம்புல் -அம்பிகையை அறுகம்புல்லினால் அர்ச்சிக்கக் கூடாது.

லட்சுமி

தும்பை மலர் -லட்சுமிக்குத் தும்பைப் பூவினால் அர்ச்சனை செய்யக்கூடாது.

துர்கை - துர்கைக்கு அறுகம்புல்லால் அர்ச்சிக்கக் கூடாது.

சூரியன்

வில்வம் -சூரியனுக்கு வில்வத்தால் அர்ச்சிக்கக் கூடாது.

சரஸ்வதி

பவள மலர் - சரஸ்வதிக்கு பவள புஷ்பத்தால் அர்ச்சிக்கக் கூடாது

பைரவர்

மல்லிகை மலர் -பைரவருக்கு மல்லிகையால் அர்ச்சிக்கக் கூடாது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment