தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள நவதிருப்பதி கோயில்களில் 9வது திருப்பதியாகவும் குரு தலமாகவும் 108 திவ்ய தேசங்களில் 58வது திவ்யதேசமாகவும் அமைந்துள்ளது.
ஆழ்வார் திருநகரியில் உள்ள ஆதிநாத ஆழ்வார் திருக்கோயில். இக்கோயிலுக்கு ஆதி ஷேத்திரம், தாந்த ஷேத்திரம், திரு சங்கணித்துறை, சேஷ ஷேத்திரம், வராக ேஷத்திரம் என்ற பெயர்களும் உள்ளன.
பன்னிரு ஆழ்வார்களுள் நம்மாழ்வார் அவதாரம் ெசய்த புண்ணிய பூமி இதுவாகும்.
நவதிருப்பதிகளில் மிக சிறப்பு வாய்ந்தது. இந்திரன் தனது தாய், தந்தையை காப்பாற்ற தவறியதால் சாபம் பெற்றான், பின்னர் இத்திருத்தலம் வந்து ஆதிநாதனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றதாக வரலாறு கூறுகிறது.
பூமியில் உள்ள ஹரிஷேத்திர தலங்களுள் மகாவிஷ்ணு முதல்முதலாக வாசம் செய்ததால் இத்தலம் ஆதிஷேத்திரம் என அழைக்கப்படுகிறது.
ஊழிக்காலத்தில் வெள்ளத்தில் அழிக்கப்பட்ட பூமியை விஷ்ணு வராக ரூபம் எடுத்து மீட்ட தலமாவதால் வராக ஷேத்திரம் எனவும் அழைக்கப்படுகிறது.
கோயிலில் உள்ள மகா மண்டபத்திலும் நம்மாழ்வார் சன்னதி பிரகாரங்களிலும் கல்வெட்டுகள் உள்ளன.
இவை சுந்தரபாண்டியன் காலத்தவையாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 12 ஆழ்வார்களுடன் திருக்குருகூர் என்ற ஆழ்வார்திருநகரியில் அவதரித்த நம்மாழ்வார் இருந்த இடத்திலேயே 36 திவ்யதேச எம்பெருமான்களையும் வரவழைத்து மங்களாசாசனம் செய்தது இக்கோயில் சிறப்பாகும்.
நம்மாழ்வாரால் மங்களாசாசனம் பெற்ற இந்த திருக்கோயிலில் 5 ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த உறங்காப்புளி தல விருட்சமாக உள்ளது.
350 ஆண்டுகளுக்கு முன்னர் கிருஷ்ணப்ப நாயக்கரால் வழங்கப்பட்ட கல் நாதஸ்வரமும் இங்கு உள்ளது.
திருவரங்கம் அரங்கநாதர் திருக்கோயில் போல் இங்கு அரையர் சேவை நடைபெறுகிறது. கோயிலில் உள்ள நம்மாழ்வார் சன்னதி மூலவரான ஆதிநாதரின் விமானத்தைவிட உயரமாக உள்ளது.
மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி என 4 மாதங்களிலும் தேரோட்டம் நடைபெறுவதற்கான நான்கு மரத்தேர்கள் உள்ளன.
நெல்லை-திருச்செந்தூர் சாலையில் நெல்லையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.
*புளியமரத்தின் சிறப்பு*
நாராயணன் ராமபிரானாக அவதரிக்கையில் இலட்சுமணனாக உடன் வந்தவர் ஆதிசேஷன். தனது இறுதிக் காலத்தில், காலாந்தகனைச் சந்திக்கும் வேளை நெருங்குகையில் எவரையும் அனுமதிக்க வேண்டாம் எனத் தன் தம்பியான இலட்சுமணனிடம் ராம பிரான் கூறியிருந்தார்.
அவ்வேளை அங்கு துர்வாச மாமுனியை அனுமதிக்க இலட்சுமணன் தயங்கவே, அவர் அவரை புளிய மரமாக பிறப்பெடுக்கும்படி சபித்து விட்டார்.
அவ்வாறு, ஆழ்வார்திருநகரி என்னும் இத்திருத்தலத்தில் இலட்சுமணன் புளியமரமாகிவிட, அவர் வேண்டுகோளுக்கு இணங்கி ராமபிரான் பின்னாளில் தாமே நம்மாழ்வாராக அவதரித்து அப்புளிய மரத்தில் காட்சி அளித்ததாகவும், இலட்சுமணன் திருப்புளியாழ்வாராக இங்கு காட்சியளித்தமையால், இத்தலம் சேஷ ஷேத்திரம் என விளங்குவதாகவும் கூறுவர்.
மேலும் இப்புளியமரம் காய்்ப்பதில்லை. இதை உறங்கா புளியமரம் என்று அழைப்பார்கள்.
No comments:
Post a Comment