சிவனைப் பற்றி அறிந்து கொள்ள நினைப்பவர்கள் முதலில் சிவனடியார்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்கிறார்கள் ஆன்மிக பெரி யோர்கள். சிவனடியார்களின் புராணத்தை அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் சேக்கிழார் இயற்றிய பெரிய புராணம்.
திருக்கடவூரில் பிறந்தவர் காரிய நாயனார். செந்நாப் புலவரான இவர் தமிழை ஆராய்ந்து தெளிந்து கவி பாடும் திறத்தினைக் கொண்டிருந்தார்.
நாவில் சரஸ்வதியையும், சிந்தையில் சங்கரரையும் கொண்டிருந்த காரிய நாயனார் சிவபெருமான் மீது பக்தியும் அடியார்கள் மீது அன்பும் கொண்டு இருந்தார். சிவாலயங்களுக்கு திருத்தொண்டு செய்வதைத் தம்முடைய பேறாக கருதினார்.
சொல் விளங்கி பொருள் மறையுமாறு பாடத்கள் புனைவதில் வல்லவர். சொல் விளங்கப் பெருமான் மறைந்து நிற்கும் வண்ணம் தமது பெயரால் காரிக் கோவை என்னும் தமிழ் நூலை இயற்றினார். சேர, சோழ, பாண்டிய மன்னர்களிடம் இந்நூலின் தெள்ளிய உரையை நயம்பபடக் கூறி மூவேந்தர்களின் அன்பை பெற்று பொன்னும் பொருளும் பரிசாக பெற்றார்.
இவரது தமிழ் புலமையில் மகிழ்வுற்ற அரசர்களிடம் இருந்து எண்ணற்ற பொருள்களையும், செல்வங்களையும் பரிசாக பெற்றார். கொண்டு வந்த அத்தனை செல்வங்களையும் வைத்து ஆலயங்களைப் புதுப்பித்தார். பராமரிப்பார். குளங்கள் அமைத்து மகிழ்ந்தார். எந்நேரமும் கயிலைநாதனை மட்டுமே நினைத்து மூழ்கி இருந்தார். திருக்கடவூரில் கோயில் கொண்டுள்ள அமிர்தகடேஸ்வரரையும் அபிராமவல்லியையும் எந்நேரமும் வணங்கிவந்தார்.
அடியார்களுக்குத் தொண்டு செய்து மகிழ்ந்த காரியார் நாயனார் கயிலையில் சிவபெருமானின் பாதம் பற்றினார். சிவாலயங்களில் காரியார் நாய னாரின் குருபூஜை மாசி மாதம் பூராடம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment