Tuesday, 14 May 2019

மஹா சிவ ராத்திரி முழு இரவு கண் விழிப்பது ஏன்? கண் விழித்தால் கிடைக்கும் பலன் என்ன தெரியுமா?

ராத்திரி எனப் பெயரோடு அழைக்கப்படும் விரதங்களில் சிவனை துதித்து வணங்கப்படும் விரதமே சிவராத்திரியாகும்.


அம்பிகைக்கு கொண்டாடப்படுவது நவராத்திரி. மகாவிஷ்ணுவுக்காகக் கொண்டாடப்படுவது வைகுண்ட ஏகாதசி. சிவராத்திரியானது  நித்ய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மகா சிவராத்திரி, யோக சிவராத்திரி என்றெல்லாம் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அலைகடல்போன்று பாய்ந்து அவதிப்படும் மனிதனது ஐம்புலன்களும் ஓரிடத்தில் ஒடுங்கி பரமாத்மாவாகிய பரம் பொருளிடம் ஒடுங்கும் இந்த `ராத்திரி' மங்கலமான ஒளி சிந்தும் ராத்திரியாகும்.
நமது ஐம்புலன்களையும் அடக்கி இறைவனது சிந்தனையோடு இறையன்பில் மூழ்கியிருக்கும் போது இந்த உலகின் இடைறுகள் நம்மை எதுவும் செய்வதில்லை. உலகினில் உள்ள எல்லா பொருட்களுமே மாயையிடம் ஒடுங்கும். அப்படி மகா சக்தியிடம் ஒடுங்கும் காலம் இருள் நிறைந்த மகா பிரளய காலம்  என்று சொல்லப்படுகின்றது. 

உலகம் எத்தனை காலம் இருக்கின்றதோ அத்தனை காலமும் பிரளயமும் உண்டு. இந்த காலத்தில் தான் உமாதேவி நான்கு காலமும் சிவனைப் பூஜித்தார். சிவபெருமான் மனம் இறங்கி உமா தேவியை நோக்கி உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.
இந்த தினத்தில் உங்களை முழு மனதோடும் பயபக்தியோடும் பூஜிப்பவர்கள் தங்கள் அருளினால் சகல பாக்கியங்களையும் பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். இறைவனும் அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்டார். அதனால் தான் சிவராத்திரி சிவ பூஜைக்கு சிறந்த நாளாகக் கொள்ளப் படுகின்றது. 
இந்த ராத்திரியில் கண் விழித்து இறைவனை பூஜிப்பவர்கள் முப்பிறவியில் செய்த பாவங்களில் இருந்து விடுபடுகிறார்கள். எதிர்கால நன்மைக்கும் இறைவனிடம் உத்தரவாதம் கிடைக்கிறது.
வாழ்நாளெல்லாம் ஆனந்தம் கிடைக்க வேண்டும் என்றால், இந்த ஒரு நாளில் மட்டுவாது கண் விழித்து இறைவன் நினைவில் இருப்போம்.. குடும்பத்தினர் அனைவருடைய வெற்றிக்கும் இறைவனை பிரார்த்தனை செய்வோம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment