Tuesday, 14 May 2019

மகா சிவராத்திரிக்கு செய்யவேண்டிய 4 பூஜைகள்! எந்தெந்த நேரத்தில் செய்யனும் தெரியுமா?

நாளைய மகா சிவராத்திரியின் மகிமை சொல்லில் அடங்காதது. இரவெல்லாம் கண் விழித்து இறைவன் நாமம் சொல்பவர்களுக்கு உடற்பிணியும், மனப்பிணியும் நெருங்கவே செய்யாது. முழு இரவும் கண் விழிக்க இயலாதவர்கள் குறிப்பிட்ட நேரங்களில் நான்கு பூஜைகள் செய்தால் போதுமானது.


பூஜை என்றதும் மிகப்பெரிய சாஸ்திர சம்பிரதாயங்கள் தேவையில்லை. இறைவனுக்கு திருவிளக்கு ஏற்றி, பூ போட்டு கற்பூர ஆரத்தி எடுத்து மனம்  உருக வழிபடுதலே போதுமானது.
முதல்  பூஜை   இரவு 7 : 30 மணிக்கு : இந்த முதல் பூஜையானது பிரம்மதேவன் சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாக கருதப்படுகிறது. விளக்கில் நெய் விட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த பூஜை செய்பவர்கள் பூர்வ கர்மாவினால் வரும் துன்பங்களில் இருந்து விடுபட்டு நல்லவண்ணம் வாழ முடியும். 

இரண்டாம்  பூஜை இரவு 10:30 மணிக்கு : இந்த இரண்டாவது பூஜை, இறைவன் சிவபெருமானுக்கு மகாவிஷ்ணு செய்யும் பூஜையாக கருதப்படுகிறது. இந்த பூஜையின் போது நல்லெண்ணெய் தீபம் ஏற்றினால் நல்லது. இந்த பூஜையினால் குடும்பத்துக்கு வேண்டிய செல்வம் வந்துசேரும். கடன் பிரச்னைகள் தீரும். விபத்துகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும். 
மூன்றாவது பூஜை நள்ளிரவு 12 மணிக்கு : இறைவன் பரமேஸ்வரனை, இறைவி பரமேஸ்வரி பூஜிக்கும் காலமாக இது கருதப்படுகிறது. இலுப்பை எண்ணெய் அல்லது நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இது லிங்கோத்பவ காலம் என்று கூறப்படுகிறது.  இந்த காலத்தில் சிவபெருமானின் அடி முடியைக் காண வேண்டி பிரம்மா அன்ன ரூபமாக மேலேயும், மகாவிஷ்ணு வராக ரூபமாக பாதாள லோகத்தையும் தேடினார்கள்.
அதனால் இந்த நேரம் மனதார பூஜை செய்பவர்களுக்கு உடற்பிணிகள், மனத்தடைகள் நீங்கும். திருமணம், குழந்தைப்பேறு போன்ற தடைகள் விலகும்.  தீய சக்திகள் குடும்பத்தை நெருங்காமல் அம்பாள் காப்பாற்றுவாள். 
நான்காவது  பூஜை அதிகாலை, 4:30 மணிக்கு : இதுதான் மனிதர்கள் இறைவனை வழிபடும் நேரம். இந்த நேரத்தில்  முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறது. விளக்கெண்ணெய் ஊற்றி வழிபட வேண்டும்.
மூன்று பூஜையையும்முடித்து, இந்த நான்காவது பூஜையையும் வெற்றிகரமாக முடிப்பவர்கள் வாழ்வில் என்றென்றும் இன்பம் தங்கும். இறைவன் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பதால் வெற்றி கிடைக்கும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment