Tuesday, 14 May 2019

ஸ்ரீசாயி பாபாவுக்கு பிரியமானவை என்னவென்று தெரியுமா?

குழந்தைக்கு தாயிடம் முழுமையான நம்பிக்கை உண்டு. தாயின் இடுப்பில் அமர்ந்திருக்கும்போது, குழந்தை முழு சுதந்திரத்துடன் இருக்கும். தான் அசைந்தாலும், துள்ளினாலும் தாய் கீழே போட்டுவிட மாட்டாள் என்ற நம்பிக்கை உண்டு. அதனால்தான் எந்தக் குழந்தையும் தாயை இறுக்கக் கட்டிக்கொள்வதில்லை. அத்தகைய நம்பிக்கையைத்தான் பாபா தன்னுடைய பக்தர்களிடம் எதிர்பார்க்கிறார்.


துன்பம், சோதனை போன்றவைஒவ்வொரு மனிதனுக்கும் ஏதேனும்காலகட்டத்தில் ஏற்படவே செய்யும்.அந்த காலகட்டத்திலும், பாபாவின்மீது திட நம்பிக்கை இருக்கவேண்டும். தன்னுடைய பக்திக்குசோதனை காலம் என்றும், இந்தசோதனையில் இருந்து பாபாகாப்பாற்றுவார் என்றும்நம்பவேண்டுமே தவிர, சாயி ஏன்இப்படிப்பட்ட சோதனை தந்தார், அவர்உண்மையில் இருக்கிறாரா என்றசந்தேகம் எழுந்துவிடவே கூடாது.

அதனால்தான் தன்னுடையபக்தர்களிடம் பாபா இரண்டேஇரண்டு மட்டும்தான்எதிர்பார்க்கிறார். அவை, சிரத்தாஎனப்படும் நம்பிக்கையும், சபூரி என்றபொறுமையும்தான். இந்தநம்பிக்கையும் பொறுமையும்தான்இந்த வாழ்க்கைப் பெருங்கடலைகடப்பதற்கு துணையாக நிற்கும்.அசைக்க முடியாத நம்பிக்கையானது,அனைத்து பாவங்களையும்,துன்பங்களையும், வாழ்க்கைஇடர்ப்பாடுகளையும்விரட்டியடித்துவிடும்.
நம்பிக்கை என்பதுமுழுமையானதாக, ஒப்பீட்டுக்குஅப்பாற்பட்டதாக, அளவுஇல்லாததாக இருக்கவேண்டும்என்கிறார் சாயிநாதர். அதே போன்றுபொறுமை என்பது நமக்கு நாமேஉருவாக்கிக்கொள்ளும் மனோதிடம்.ஒரு கதவு திறக்கவில்லை என்றதும்பொறுமை இழந்துவிடக் கூடாது.நமக்காக பாபா வேறு ஒரு கதவைத்திறப்பார் என்று பொறுமையுடன்காத்திருக்க வேண்டும். கேள்வி,சந்தேகம், புகார் இல்லாமல் பாபாவைபூரணமாக சரண் அடைந்துவிட்டால்,பாபாவின் இதழ்களில் வழியும்புன்னகையின் மகிமையைவாழ்விலும் தரிசிக்க முடியும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment