Tuesday, 14 May 2019

குலதெய்வ வழிபாடு என்றால் என்ன? குலதெய்வ வழிபாடு ஏன் அவசியம்?

தெய்வ வழிபாடுகளில் குலதெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு என இரண்டு வழிபாட்டு முறைகள் உண்டு.


குல தெய்வ வழிபாடு என்பதுஅவரவர்களுடைய முன்னோர்கள் பலதலைமுறைகளாய் வழிபட்டு வந்த தெய்வம்குல தெய்வம் எனப்படும். இஷ்ட தெய்வவழிபாடு என்பது அவரவர் தனிப்பட்டமுறையில் விரும்பி வழிபடும் தெய்வம்இஷ்ட தெய்வம் எனப்படும்.குலம் என்றால்குடும்ப பாரம்பரியம் என்று பொருள். நமதுகுடும்பத்திற்கென்று ஒரு வழிபாட்டுதெய்வத்தினை நமது முன்னோர்கள்வைத்திருக்கிறார்கள்.

தனது அடுத்த சந்ததியினர் நன்றாக இருக்கவேண்டும் என்பதே குலதெய்வ வழிபாட்டின்முக்கியக் குறிக்கோளாகும். இன்றைக்குப்பலரும் பல தெய்வங்களை இஷ்டதெய்வங்களாக வழிபடுகின்றனர். ஆனால்முதலில் விநாயகர் வழிபாடு, குலதெய்வவழிபாடு செய்த பிறகே இஷ்ட தெய்வவழிபாடு செய்ய வேண்டும் என்றுநெறிமுறைகளை நம் முன்னோர்கள்வகுத்துச் சென்றுள்ளனர்.
அதன்படியே ஒவ்வொருவரும் இஷ்டதெய்வத்தை உரிய வழிபாட்டு முறைகளுடன்வழிபடவேண்டும். இஷ்ட தெய்வ வழிபாடுஎன்பது, ஒரு வேண்டுதலுக்காக ஒருகுறிப்பிட்ட தெய்வத்தை வழிபட்டு வருவது.ஆனால், குல தெய்வ வழிபாடு என்பது மிகமுக்கியமானது.
குல தெய்வ வழிபாடு ஏன் அவசியம்?
ஒருவர் அனுபவிக்கும் எல்லா பலன்களும்நாமும் நம் முன்னோர்களும் செய்தபுண்ணியத்தின் அடிப்படையிலேயேகிடைக்கிறது. ஜாதகத்தில் உள்ள எல்லாதோஷங்களையும் பித்ரு பூர்வபுண்ணியஸ்தானத்தின் காவல் தெய்வங்களானஉங்கள் குல தெய்வம் தீர்க்கும். ஒருவரின்சந்தோஷமான சுபிட்சமான வாழ்க்கைக்குகுல தெய்வ ஆராதனையும், பித்ருக்களின்ஆசியும் மிக முக்கியம்.
குல தெய்வத்தை யார் ஒருவர் விடாமல்தொடர்ந்து வழிபாடு செய்கிறார்களோ,அவர்கள் வேண்டும் வரம் எல்லாம்கிடைக்கும். ஒருவர் எவ்வளவு பூஜைகள்செய்தாலும் எத்தனை பரிகாரங்கள்செய்தாலும் குலதெய்வ அனுக்கிரகம்இல்லை என்றால், எந்த தெய்வஅனுக்கிரகமும் இல்லை என்றும், குலதெய்வ வழிபாடு கோடி தெய்வ வழிபாடுஎன்றும் சொல்லப்படுகிறது.
பல தெய்வங்களை வழிபாடு செய்துவரலாம். ஆனால் அந்த தெய்வங்கள்,குலதெய்வங்கள் ஆகாது. அவை இஷ்டதெய்வங்கள் அல்லது இஷ்ட தேவதைகள்எனப்படும். இஷ்ட தெய்வமும்குலதெய்வத்திற்கு அடுத்ததுதான். மற்றதெய்வங்களும் குலதெய்வத்தின் அனுமதிபெற்றே அருளினை வழங்க முடியும்.
உங்கள் குல தெய்வத்தின் கோவிலுக்குஅடிக்கடி இயன்றபோது செல்லுங்கள்.அடிக்கடி செல்ல முடியாதவர்கள் உங்கள்வீட்டிலேயே குல தெய்வபடத்தைஅலங்கரித்து, பாரம்பரிய, வழக்கமானபடையலை வைத்து மனம் உருக வழிபாடுசெய்யலாம்.
பெண்கள் மட்டும் இரண்டுகுலதெய்வங்களை வணங்குகிறார்கள்.திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின்குலதெய்வத்தை வணங்குபவர்கள் மற்றும்திருமணம் முடிந்தவுடன் கணவரின் வீட்டில்உள்ள குலதெய்வத்தை வணங்கஆரம்பிக்கிறார்கள்.
பிறகு பிறந்த வீட்டின் குலதெய்வத்தைவணங்குவது கிடையாது. ஆனால் பிறந்தவீட்டின் குலதெய்வத்திற்கு வருடத்திற்கு ஒருமுறை வழிபாடு செய்து வந்தால் புகுந்தவீட்டில் எந்த பிரச்சனையையும்சமாளிக்ககூடிய ஆற்றல் கிடைக்கும்.
ஆன்மீக வாழ்வுக்கு பாரம்பரியவாழ்க்கைமுறை அவசியம் என்பதைஅனைவருக்கும் தெரியப்படுத்தி ஆன்மீகபாரதத்தை உருவாக்குவோம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment