ஸ்ரீமாதா என்றால் தாயை குறிப்பிடுவது. தாய் இல்லாமல் உலகம் இல்லை. ’கோ’ என்ற சொல் பூமி, தாயார், வாக்கு, பசு முதலான பல பொருள்களுடைய சொல். ஆனால் ’கோ’ என்றால் பசுவையே குறிப்பதாக கொள்கிறோம்.
பசுவானவள் பரமேஸ்வரனுக்கு தாயாகவும்,வஸுக்களுக்குப் பெண்ணாகவும்,ஆதித்யர்களுக்கு சகோதரியாகவும் நாபியில்அமிர்தத்தை வைத்துக் கொண்டவளாகவும்இருக்கிறாள். பசுவை அடிக்கவோ,விரட்டவோ கூடாது. பூஜிக்க வேண்டும்என்று வேதம் சொல்கிறது. இன்றைக்கும்காசியில் போய் பார்த்தால் தெருவெல்லாம்சுதந்திரமாக திரிந்து கொண்டும், படுத்துக்கொண்டும் பசுக்கள் இருப்பதைக்காணலாம். ஒருவரும் அதை அடிக்கவோ,விரட்டவோ மாட்டார்கள். ஒதுங்கிப்போய்விடுவார்கள்.
பிரும்ம சிருஷ்டியில் உலகம் உய்ய முதலில்பசுவை படைத்து அதன் உடலில் பதினான்குஉலகையும் முப்பத்து முக்கோடிதேவர்களையும் இருக்கச் செய்தான்.அதனால் இன்றைக்கும் பசுவின்பின்புறத்தில் லட்சுமியும் கங்கையும்இருப்பதாக சாஸ்திரம். அதனால் பசுவின்சாணமும் கோமூத்திரமும் சகலபாபங்களையும் போக்கி லக்ஷ்மி கடாக்ஷம்அளிக்கக் கூடியது என்கிறது சாஸ்திரம். பாற்கடலைக் கடையும் போது காமதேனுபிறந்தது என்பார்கள். ஆயினும்வைகுண்டம், சத்தியலோகம் என்பது போலகோலோகம் என்று இருக்கிறது. அதில்ராதையுடன் ஸ்ரீகிருஷ்ணன் பக்த ரக்ஷகனாகஇருக்கிறார். அங்கு காமதேனுவைப்படைத்து அதன் கன்றுகளை கோலோகம்முழுவதும் வைத்து கிருஷ்ணனும் ராதையும்பூஜை செய்வதாக தேவி பாகவதத்தில்இருக்கிறது. இந்திர பூஜையை விட கோபூஜையே மேலானது என்று ஸ்ரீகிருஷ்ணர்சொல்லியிருக்கிறார்.
பசுவானது தன் கன்றுக்குகூட கொடுக்காமல்பாலை மனிதனுக்கு அளிக்கிறது.தாயானவள் குழந்தைக்கு அதிக பட்சம் ஒருவருஷம் தான் பால் கொடுக்கிறாள்.பசுவானது எந்த வயதினருக்கும்எத்தனையோ ஆண்டுகளுக்கு பால்கொடுத்து போஷிக்கிறது/ இதனால் தாயைவிட பசு உயர்ந்தது.
பசுவை தினமும் குளிப்பாட்டி முன்புறம்பின்புறம் மஞ்சள் குங்குமம் இட்டு புஷ்பம்எடுத்து அர்ச்சனை செய்ய வேண்டும். வீட்டில் கழுநீர், காய்கறிக் கழிவுகள்முதலியவற்றை பசுவுக்கு கொடுக்கலாம். பசுஈன்று கொண்டிருக்கும் சமயம் முன்னும்பின்னும் இரு முகமாக இருக்கும் போதுபிரதக்ஷிணம் செய்து தீபாராதனை செய்துநமஸ்கரித்தால் அளவிடமுடியாத புண்ணியம்என்று சொல்லப்பட்டுள்ளது. பசுவைப்பூஜித்தால் சகல தெய்வங்களையும் பூஜித்தபலன் கிட்டும்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment