சக்தி வாய்ந்த கடவுளான ஆஞ்சநேயரை ஒவ்வொரு வகை உருவத்தில் வழிபட ஒவ்வொரு வகை பலன் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
சீதாராம வழிபாடு
இராமரையும், சீதையையும் தலைவணங்கி வழிபடும் ஆஞ்சநேயர் உருவத்தை வைத்து தினமும் வழிபடுவது வாழ்க்கையில் அனைத்து துரதிர்ஷ்டத்தையும் விரட்டும்.
வெள்ளை பின்புறம்
பின்புறம் வெள்ளையாக இருக்கும் ஆஞ்சநேயர் எதிர்காலத்தை பாதுகாப்பவராக இருக்கிறார். நல்ல வேலை, பதவி உயர்வு, அதிக சம்பளம் வேண்டுபவர்கள் இந்த ஆஞ்சநேயரை வழிபடலாம்.
இராம வழிபாடு
ஆஞ்சநேயர் இராமரை பக்தியோடு வழிபடும் உருவத்தை வீட்டில் வைத்து வழிபடுவது வாழ்வில் அமைதியை ஏற்படுத்தும். வாழ்க்கையில் சரியான முடிவெடுக்கும் ஆற்றலையும் வழங்கும்.
மகாபலி அனுமன்
சஞ்சீவி மலையையே தூக்கும் அதி சக்திசாலியான ஆஞ்சநேயர் தன் உடல்வலிமையை காட்டும் உருவத்தை வழிபடுவது உடல் - மனவலிமையை வழங்கும்.
சூரிய வழிபாடு
சூரிய பகவானின் சீடரான அனுமன், சூரியனை வழிபடுவது போன்ற உருவத்தை வழிபடுவது ஆரோக்கியத்தையும், படிப்பாற்றலையும் மேம்படுத்துவதும்.
தியானம்
ஆஞ்சநேயர் வடக்கு திசை நோக்கி அமர்ந்து தியானம் செய்வது போன்ற உருவத்தை வழிபடுவது அனைத்து கடவுள்களின் ஆசீர்வாதத்தையும் பெற்றுத்தரும். - தெற்கு திசை நோக்கி தியானத்தில் இருக்கும் அனுமனை வழிபடுவது மரணம் குறித்த பயத்தை போக்கும்.
கிழமை
ஆஞ்சநேயரை அனைத்து நாட்களிலும் வழிபடலாம் என்ற போதும், செவ்வாய், சனிக்கிழமைகளில் கோவிலுக்கு சென்று ஆஞ்சநேயரை வழிபடும் போது அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுவார்.
பயத்தை போக்குவது
அனுமன் பயம் என்பதே அறியாதவர் . பயம், பதட்டம் ஏற்படும்போது அனுமனின் நாமத்தை கூறுவது பயத்தை விரட்டியடிக்கும்.
எள்
எள் ஆஞ்சநேயருக்கு மிகவும் பிடித்தது. சனிக்கிழமையன்று குளிக்கும் நீரில் சிறிது எள்ளை கலந்து குளிப்பதும், கோவிலுக்கு சென்று ஆஞ்சநேயருக்கு எள் விளக்கு ஏற்றி வழிபடுவதும் வேண்டுதல்கள் நிறைவேறும் வாய்ப்பை அதிகரிக்கும்.
படுக்கையறை
பிரம்மச்சாரி கடவுளான அனுமனை படுக்கையறையில் வைத்து வழிபடக் கூடாது. அது குடும்பத்தில் பல பிரச்சினைகளை உண்டாக்கும். ஆஞ்சநேயரை பூஜையறையில் வைத்து மட்டுமே வழிபட வேண்டும்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment