ஞான ஒளி தரும் இரவே சிவராத்திரி.. நமசிவாய மந்திரம் சொல்லி சிவன் அருள் பெறுவோம்
அகங்காரம் அனைவருக்கும் வரக்கூடியது. இதில் பிரம்மனும் விஷ்ணுவும் விதிவிலக்கல்ல. காத்தல் கடவுளாகிய விஷ்ணுவுக்கும் படைத்தல் கடவுளாகிய பிரம்மாவுக்கும் இடையில் யார் பெரியவர் என்ற கேள்வி உருவானது தங்களிடம் இருக்கும் சக்தியைக் கொண்டு யார் பெரியவர் என்பதைக் காண முற்பட்டனர்.
இருவரும் இறைவன் சிவனிடம் தங்கள் வாதத்தை முன்வைத்தனர். சின்னப்பிள்ளை விளையாட்டு போன்று இதனை எடுத்து சிரித்தார் இறைவன். உடனே வளரத் தொடங்கினார். அடி, முடி காணமுடியாதவாறு ஒளிப்பிழம்பாக சிவன் காட்சியளித்தார்.
அப்பொழுது இந்த ஒளியின் அடியையும், முடியையும் காண்பவர் எவரோ அவரே பெரியவர் என ஓர் அசரீரி கேட்டது. உடனே பிரம்மன் மேல் நோக்கிச் செல்ல, விஷ்ணு பாதம் நோக்கி பயணம் செய்தார். போகப்போக போய்க்கொண்டே இருந்த இரவு அது. அதன்பிறகுதான் அடி முடிகாண முடியாது ஆணவம் அடங்கி இருவரும் ஞான ஒளி பெற்றனர். இறைவர்களுக்கே ஞான ஒளி தந்த இரவே சிவராத்திரி எனப் படுகிறது.
இதைவிட உமாதேவியார் சிவமூர்த்தியின் திருநேர்த்திரங்களையும் ஒரு முறை மூட உலகங்கள் இருண்டன. உடனே பயந்துபோன ருத்திரர்கள் இறைவனை தஞ்சமடைந்து வணங்கினார்கள். அக்காலமே சிவராத்திரி என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் முழு உபவாசம் இருப்பது தான் உகந்தது. முடியாதவர்கள் ஒரு வேளை உணவுடன் விரதத்தை மேற்கொள்ளலாம்.
சிவன் கோயிலுக்குச் சென்று நான்கு வேளை பூஜையையும் கண்ணார கண்டு களித்தால் எஞ்சிய நாளெல்லாம் இன்பமாகிப் போகும்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment