Tuesday, 14 May 2019

மகா சிவராத்திரிக்கு கண் விழிக்க முடியாத நிலையா? கவலை வேண்டாம் இதை செய்ங்க போதும்?

அம்பிகைக்கு உரியது நவராத்திரி என்றும் அம்பிகேஸ்வரனுக்கு உரியது மகாசிவராத்திரி என்றும் அழைக்கப்படுகிறது


சிவனுக்கு உரிய இரவு என பொருள்படும் மகாசிவராத்திரி என்பது  மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசி திதியன்று வருகிறது. வேதங்களில் சாமவேதமும், நதிகளில் கங்கையும், மலைகளில் இமயமும்,  ஸ்தலங்களில்  சிதம்பரமும் எப்படி உயர்ந்ததோ அதே போல விரதங்களில் உயர்ந்தது மஹா சிவராத்திரி விரதம் என சாஸ்திரங்கள் போற்றுகின்றன.
சிவனுக்குரிய விரதங்களாக நித்ய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பக்ஷசிவராத்திரி, யோக சிவராத்திரி, மஹா சிவராத்திரி என்று வருடம் முழுவதும் கொண்டாடப்பெற்று வந்தாலும் மஹா சிவராத்திரி விரதம் எல்லா சிவராத்திரிகளிலும் சிறப்பானது .

மகா சிவராத்திரி தினத்தன்று இருக்கக்கூடிய கோள்களின் அமைப்பு இயற்கையாகவே உங்கள் உயிர்சக்தியை மேல்நோக்கி எழும்பச் செய்கிறது. அதனால் அன்றிரவு முழுவதும், ஒருவர் விழிப்புடன், முதுகுத் தண்டை நேர்நிலையில் வைத்திருந்தால் அவருக்குள் இயற்கையாகவே சக்தி மேல்நோக்கி நகர்ந்திடும். பல யோகிகள், முனிவர்கள் இந்நாளை பயன்படுத்தி முக்தி அடைந்திருக்கிறார்கள்.
எல்லோருக்கும் கண் விழித்து சிவபெருமானை வழிபடுவதற்கு ஆசையும் ஆர்வமும் உண்டு. ஆனால், சிறுவர்கள், நோயாளிகள், முதியவர்கள் மற்றும் நித்ய கர்மாக்களில் பாதிக்கப்பட்டவர்களால் முழு இரவும் கண் விழிக்க இயலுவதில்லை. இந்த நிலையில் இருப்பவர்கள் முதல் மூன்று கால பூஜை வரை விழித்திருந்தால் போதுமானது அர்த்தஜாம பூஜை வரை கண் விழித்து இறை நாமம் ஜெபித்து, சிவபுராணம் படித்தபடி தூங்குவது சாலச் சிறந்தது.
அதேபோன்று நான்கு நேர பூஜையும் செய்ய இயலாதவர்கள் மூன்று நேர பூஜையை மட்டும் செய்து, காலையில் எழுந்ததும் கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டு வருவது போதுமானது.
மாலை தொடங்கி மறுநாள் காலை வரை விரதம் இருப்பதும் எல்லோராலும் முடிவதில்லை. அப்படிப்பட்டவர்கள் பழம், காய்கள், பால் போன்றவற்றை மட்டும் இறைவனுக்கு படைத்து, அதனை பிரசாதமாக எடுத்துக்கொள்ளலாம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment