Tuesday, 4 December 2018

யார் இந்த நந்தி தேவர்?

நந்தி தேவர் பற்றி சில தெரியாத தகவல்கள் பொதுவாகவே யாராவது நம்முடைய வேலைகளில் குறுக்கீடு செய்தால் , நந்தி மாதிரி என்று நாம் சொல்வது வழக்கம். ஆனால் உண்மையில் நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள். நந்தியின் அனுமதி பெறாமல் ஈசன் உறையும் இடங்களுக்குள் செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது. ஆதலால் ஈசனை வழிபடும் முன் நந்தியை வழிபட்டு, `சிவனடியில் சரணம் புகுந்து சிவத் தியானத்தில் ஆழ்ந்திருக்கும் மகா புண்ணியம் பெற்ற நந்திகேசுவரரே! சன்னிதிக்குச் சென்று உமையோடு கூடிய ஈஸ்வரனைத் தரிசிக்க எனக்கு உத்தரவு தருக' என்று பிரார்த்திக்க வேண்டும் என்கிறார்கள். இவ்வளவு அதிகாரம் பெற்ற இந்த நந்தி தேவர் யார்? பிறப்பில் எம்பெருமானாகிய சிவபெருமானே நந்திகேசுவரராகப் பிறந்து சிவா கணங்களின் தலைவரானார் என்கிறது லிங்க புராணம். முனிவர்களுக்கும் சித்தர்களுக்கும் யோகிகளுக்கும் நந்திதேவரே ஆதி குரு.மேலும் சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமார், பதஞ்சலி, சிவயோக மாமுனி, வியாக்கிரமர், திருமூலர் ஆகிய எட்டு பேரும் நந்தி பெருமானின் மாணவர்களாவர். பிரதோஷ காலம் மட்டுமின்றி எல்லாக் காலங்களிலும் நாம் சிவபெருமானிடம் வைக்கும் வேண்டுதல்களை நந்தி தேவரிடம் வைத்தால் போதும். அவர் அதைப் பரமேஸ்வரனிடம் கொண்டு சேர்த்துவிடுவார் என்பது தொன்றுதொட்டு நிலவிவரும் ஐதீகம். தானும் நந்தியும் வேறல்ல, ஒருவரே என்று சிவபெருமான் நந்தி புராணத்தில் கூறுயுள்ளதால், நந்தியைத் தொழுவது சாட்சாத் சிவபெருமானைத் தொழுவதற்கு சமம் ஆகும். ஆலயத்திற்கு சென்றுவிட்டு நந்தியை மட்டுமே தொழுதுவிட்டு திரும்பிவிட்டால் கூட சிவபெருமானை வணங்கியதன் முழுபலனும் கிட்டும் என்றால் எம்பெருமான் அவருக்கு கொடுத்துள்ள முக்கியத்துவம் நமக்கு புரியும். சிவாலயங்களைக் காவல் காக்கும் அதிகாரம் உள்ள நந்தி தேவருக்கு, சிவ பெருமானைப் போலவே நெற்றிக்கண்ணும் நான்கு புஜங்களும், கையில் பிரம்பும், உடைவாளும், இருபுஜங்களில் மான் மழுவும் உண்டு. மானும் மழுவும் வேதத்தைக் குறிக்கிறது. மழு வீரத்தை அல்லது ஆண்மையைக் குறிக்கிறது எனவும் கூறுவர். ஈசன் நந்திதேவருக்கு அளித்துள்ள வரங்கள் `நீயும் ஆனந்தமாக இரு, பிறரையும் ஆனந்தமாக வைத்திரு!' என்பது சிவபெருமான் நந்திக்கு அளித்த வரம் . நந்திக்கு இவ்வுலகத்தின் எதையும் கண்டிக்கவும் தண்டிக்கவும் அதிகாரம் வழங்கியுள்ளார் பரமேஸ்வரன். எல்லா உயிர்களையும் ஒரு காலத்தில் ஓய்வு படுத்துதல் மகாசங்காரம் எனப்படும். இந்த அதிகாரத்தை சிவபெருமான் நந்தி தேவருக்கு வழங்கியிருக்கிறார். இவை எல்லாவற்றையும்விட, சிவபெருமானின் முக்கண்ணின் பார்வைக்கு எதிரில் நிற்க நந்திதேவரைத் தவிர வேறு யாராலும் இயலாது. இது சிவபெருமானே நந்தி தேவருக்கு அளித்த வரமாகும். வெவ்வேறு இடங்களில் உள்ள விசேஷமான நந்தி தேவர்! ஆந்திர மாநிலம் லேபாட்சியில் உள்ள கருங்கல்லில் வடிக்கப்பட்ட நந்தியே இந்தியாவில் உள்ள கல் நந்திகளில் பெரிய நந்தியாகும். தஞ்சை பெரிய கோவில் நந்தி ஒரே கல்லால் ஆனது. மதுரை ஆவணி மூல வீதியில் "மாக்காளை" எனப்படும் சுதையால் அமைக்கப்பட்ட பிரமாண்ட நந்தி பிரசித்திப் பெற்றது. இத்தகைய மாக்காளை நந்திகளை நெல்லை, சுசீந்திரம், ராமேஸ்வரம், திருவிடை மருதூர் ஆலயங்களிலும் காணலாம். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருந்து பார்த்தால், மலையானது, நந்தி ஒன்று படுத்து இருப்பது போன்ற தோற்றத்தில் காட்சித்தரும். அந்த இடத்தை "நந்திமுக தரிசனம்'' என்கிறார்கள். மைசூர் சாமுண்டி மலை மீதுள்ள கண்கவர் அழகான நந்தி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பிரதோஷ காலத்தில் பிரபஞ்சத்தில் உள்ள தீர்த்தங்கள் எல்லாம் பீஜத்தை வந்தடைகின்றன என்பது ஐதீகம். அதனால் நந்தியின் பீஜத்தைத் தொட்டு வணங்கிய பிறகே சிவதரிசனம் காணவேண்டும். பிறகு வாலைத் தொட்டு வணங்க வேண்டும். நந்திதேவருக்கு அருகம்புல் மாலையும், சிவப்பு அரிசி நிவேதனமும் நெய்விளக்கும் படைத்து நம் குறைகளை சொல்லி வழிபட , நமக்காக நந்தி தேவர் இறைவனிடம் பிரத்திப்பார்.


ஓம் நமச்சிவாய...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment