Monday, 30 July 2018

அர்ச்சாவதாரம் என்னும் ஆனந்த விரத வழிபாடு

அவரவர் சூழல் மற்றும் மனநிலைக்கு ஏற்ப தெய்வங்களையும், விரத வழிபாடுகளையும் உருவகப்படுத்தி, அவற்றை பெரும் நம்பிக்கையுடனும் விதிகளுடனும் பின்பற்றியும் வருகிறோம்.

இந்து சமயத்தில் சைவம், வைணவம் என பல பிரிவுகளில், அவரவர் சூழல் மற்றும் மனநிலைக்கு ஏற்ப தெய்வங்களையும், விரத வழிபாடுகளையும் உருவகப்படுத்தி, அவற்றை பெரும் நம்பிக்கையுடனும் விதிகளுடனும் பின்பற்றியும் வருகிறோம். ஒவ்வொரு தெய்வத்திற்கும் சில நியதிகளை வகுத்து வைத்துள்ளது ஆன்மிகம். அதன்படி வைணவத்தில் வணங்கப்படும் தெய்வமான பெருமாள், ‘பரம், வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம், அர்ச்சாவதாரம்’ எனும் ஐந்து நிலைகளைக் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அவற்றைப் பற்றி இங்கு காண்போம்.

பரம்

மனிதர் காண முடியாத தேவலோகம் எனப்படும் பரம பதத்தில், முக்தி பெற்ற முக்தர்கள், கருடன், இந்திரன், நாரதர் போன்ற தேவாதி தேவர் களுக்கு மட்டுமே காட்சியளிக்கக் கூடிய அற்புத நிலைதான் ‘பரம்’ என்றழைக்கப்படும் முதல் நிலை. இந்த தெய்வீக தரிசனத்தை சாதாரண மனிதப்பிறவிகளாகிய நாம் காண முடியாது. இந்நிலையானது அண்டத்தின் வெளியே உற்பத்தியாகும் நீர் போன்று, நம் சிந்தனைக்கும் பார்வைக்கும் எட்டாமல் இருக்கக்கூடியது.

வியூகம்

கடவுளாகிய பெருமாள், உலகைக் காக்கும் தலைவனாக பாற்கடலில் ஆதிசேஷன் மீது, மனைவி லட்சுமியுடன் பள்ளி கொண்டிருக்கும் பரவச நிலையே இரண்டாம் நிலையான ‘வியூகம்’ எனப்படுவது. இந்த நிலையும் முன்னோர் களால் நமக்கு வழிவழியாக சொல்லப்பட்ட ஆதர்ச நிலை என்பதால், இதையும் நம்மால் காணவோ, வணங்கவோ முடியாது. இது எப்படி என்றால், அதிக நீர் தாகம் உள்ளவன், செல்ல முடியாத பெருங்கடல் போன்றதே என்பதால் நம்மால் எளிதில் அணுக முடியாது.

விபவம்

உலகில் அதர்மம் தலையெடுக்கும் போதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட பகவான், பல்வேறு அவதாரங்களை எடுத்துள்ளதாக நமக்கு புராணங்கள் சொல்கின்றன. மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமன், ராமன், கிருஷ்ணன், பலராமன், கல்கி போன்ற இந்த அவதாரங்களின் போது பூமியில் பிறவியெடுத்தவர்கள் மட்டுமே, அவர்களைப் பற்றிய பெருமையை அறிந்து அவர்களை சேவிக்கும் பாக்கியம் பெறுவார்கள். அந்த நிலையே ‘விபவம்’ எனப்படும். இதையும் நாம் அனுபவிக்க இயலாது. இந்நிலை கடுமையான மழைக்காலத்தில் பெருக்கெடுத்து ஓடும் காட்டாற்று வெள்ளம் போன்றது. தாகம் தணிக்க உதவாது.

அந்தர்யாமித்துவம்

‘பகவான் தூணிலும் இருப்பான்.. துரும்பிலும் இருப்பான்’ என்று சொன்ன பிரகலாதனைப் போல், காணும் எல்லா உயிர்களிலும் இறைவனை உணர்ந்து, தன்னிலும் உள்கலந்து நிற்கும் பெருமாளை மட்டுமே நினைத்து பற்றற்றவராக கடுந்தவம் செய்பவர்கள் ஞானியர்கள். அவர்கள் தங்கள் மனக்கண்ணால் கண்டு தரிசித்து ஆனந்திக்கும் நிலையே ‘அந்தர்யாமித்துவம்' எனப்படும் நான்காம் நிலை. அனைத்தும் அவனே என பசி, தாகம் துறந்து, பல ஆண்டுகள் தவத்தில் மூழ்கி, அவனுள் ஒன்றி அவனின் தரிசனத்தைக் கண்ட நம்மாழ்வார் போன்றவர்கள் மட்டுமே அனுபவிக்கும் உன்னத நிலை இது. நிலத்தடியில் உள்ள நீர் ஊற்றைக் கண்டுபிடித்து தாகம் தீர்க்கும் வழி போன்றது. இது சாதாரண மனிதர்களால் எட்ட முடியாத கடினமான நிலை.

அர்ச்சாவதாரம்

எளிதில் அணுகக்கூடிய யாவரும் கண்டு இன்புற்று தங்கள் இல்லங்களிலும், மனதிலும், ஆலயங்களிலும் நம் விருப்பத்திற்கு ஏற்ற உருவங்களில் அலங்காரங்களில் எழுந்தருளியிருப்பதுதான் அர்ச்சை அல்லது உருவ வழிபாடு எனப்படும் ‘அர்ச்சாவதாரம்’ நிலை. பக்தர்கள் ஆசைப்பட்டபடி காண்பதற்கு எளிமையாய், கண்ணுக்கு நிறைவாய் திருத்தலங்களில் வீற்றிருக்கும் பெருமாளின் அழகை ரசிக்கும் அருமையான நிலைதான் இது. நம் தாகத்தை தணிக்கும் தேங்கிய மடுநீர் போல, நம் ஆன்மிக தாகத்தைத் தணிக்கும் ஆபத்பாந்தவ நிலை. இது மற்ற நிலைகளைப் போல அல்லாமல் நாம் அறிய திருக்கோவில்களில் குடிகொண்டு நம் கண்ணுக்கும், மனதுக்கும் நெருக்கமாய் நாம் உணரும் தெய்வீக நிலை இதுவே என்கின்றனர் நமது முன்னோர்கள்

நிலை எப்படி இருப்பினும் நாம் நம்பிக்கையுடன் விரதம் இருந்து வணங்கும்போது பெருமாளும் நம் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து நமக்கு நல்வாழ்வைத் தருவார்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

திருவண்ணாமலை சித்தர்களின் சரணாலயம்

சித்தர் மலை, சித்தர்களின் சரணாலயம் என்றெல்லாம் திருவண்ணாமலை புகழ்ந்து சொல்லப்படுகிறது. அந்த அளவுக்கு திருவண்ணாமலையில் சித்தர்கள் குவிந்துள்ளனர்.

சித்தர் மலை, சித்தர்களின் சரணாலயம் என்றெல்லாம் திருவண்ணாமலை புகழ்ந்து சொல்லப்படுகிறது. அந்த அளவுக்கு திருவண்ணாமலையில் சித்தர்கள் குவிந்துள்ளனர். கால ஓட்டத்தில் பல்லாயிரக்கணக்கான சித்தர்களின் பெயர்களும், அற்புதங்களும் மறைந்து விட்டன.

சில சித்தர்களுக்கு அண்ணாமலையார் புரிந்த அருள் மட்டுமே நம்மிடம் வரலாறாக உள்ளது. அவர்களில் குகை நமசிவாயர் பற்றி காணலாம்.....

குகை நமசிவாயரின் சீடர் குரு நமசிவாயர். இவர் ஒரு சிறந்த தவயோகி. ஒருநாள் குகை நமசிவாயமும் குரு நமசிவாயமும் அருகருகே அமர்ந்து தவத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குரு நமசிவாயர் கலகலவென சிரித்தார்.

‘‘என்னடா? ஏன் சிரிக்கிறாய்?’’ என்று குகை நமசிவாயர் கேட்டார். ‘‘ஐயனே! திருவாரூர் தியாகேசன் தேரில் வருகிறார். தேவதாசி பரதமாடுகிறாள். கால் வழுக்கிவிடவே அதையும் அபிநயமாக அப்படியே மறைத்தாள்’’ அதுதான் சிரித்தேன் என்றார். 

மற்றொரு நாள், தன் அறையில் இருந்த உடையை குரு நமசிவாயர் திடீரென்று தேய்த்தார். ‘‘என்னடா? என்ன விஷயம்?’’ என்றார் குகை நமசிவாயர். 
‘‘தில்லையில் விளக்கு போடுபவன் அஜாக்கிரதையால் திரைச்சீலையில் தீ பற்றிக் கொண்டது. யாரும் கவனிக்கவில்லை. அதைத்தான் அணைத்தேன்” என்றார் குரு நமசிவாயர். 

குகை நமசிவாயர் உடனே இனி உனக்கு இங்கு வேலையில்லை. தில்லையிலே நீ செய்ய வேண்டிய பணி இருக்கிறது போ!’’ என்றார். குருநாதனை வணங்கி குரு நமசிவாயர் வலம் வந்தார். ‘‘குருநாதா! தங்கள் சித்தம்’’ என்றார். புறப்பட்டார். மரத்தடியில் வழியிலே களைப்புடன் தங்கினார். இரவு அர்த்தஜாம மணியோசை ‘ஓம் ஓம்’ என்று எங்கும் ரீங்காரம் செய்தது. பசியோடு அமர்ந்து,

அண்ணாமலையார் அகத்திற்கு இனியாளே
உண்ணாமுலையே உமையே தண்ணா
நினைதோறும் போற்றிசெயும் நின்னடியார் உண்ண
மனைதோறும் சோறுகொண்டுவா? 

- என்று அன்னையை நினைத்துப் பாடினார். 

குரு நமசிவாயர் தவிப்பதைக் காணச் சகியாத தாய் உண்ணாமுலைநாயகி தங்கத் தாம்பாளத்தில் தனக்கு நிவேதனமாக வைத்த அர்த்த ஜாம சர்க்கரைப் பொங்கலை அப்படியே எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள். பசியாற அந்த உணவை சாப்பிட்டு விட்டு தங்க தாம்பளத் தட்டை குரு நமசிவாயர் தூக்கி வீசி எறிந்தார். 

கோவிலில் ‘தங்கத் தாம்பாளம் களவுபோய் விட்டது. அர்ச்சகர் கத்தினார். ஆனால் அவரை நம்பாமல் முன் பின் யோசியாமல் திருட்டுப் பட்டம் கட்டி அவரைத் தண்டிக்க முடிவு செய்தனர். உடனே அன்னை ஆவேசமாகி ‘என் பக்தன் பசியோடு இருந்தான். அவனுக்கு அந்தத் தங்கத் தாம்பாளத்தில் உணவளித்தேன். மரத்தடிக்குப் போனால் உங்கள் தட்டு கிடைக்கும்’ என்று கூறினாள். 

‘அண்ணாமலைக்கு அரோகரா’ என்று முழங்கியபடி சென்று அடியாரின் அடிகளைப் போற்றி தாம்பாளத்துடன் திரும்பினார்கள். இது வரலாற்றுச் சிறப்பு. இதே போன்று இன்னும் பல சித்தர்கள் உள்ளனர். ராஜாவின் இறந்த குதிரையை உயிர்த்தெழச் செய்து, திருவண்ணாமலை ஆதீனத்தின் முதல் குருவாகி, குன்றக்குடி ஆதீனத்தை உருவாக்கிய ஸ்ரீலஸ்ரீ தெய்வசிகாமணி தேசிகர்.

தீர்த்தக்குளத்து நீரையே திரட்டிக் குடமாக்கி (1290) அதில் தண்ணீரை எடுத்துச் சென்று, அண்ணாமலையாரை அபிஷேகம் செய்த சித்தமகா சிவயோகி, பாணிபத்திர சுவாமி. திருவண்ணாமலையில் ஏற்பட்ட பஞ்சத்தைப்போக்க, ஏரியை அமைத்து, உண்ணாமல், தவமிருந்து மழையைப் பொழிய வைத்து, ஊரையே செழிக்கவைத்த மங்கையர்க்கரசியார்.

தொண்ணூறு வயது வரை தினமும், மலையைத் தவறாமல் வலம் வந்து அந்தப் புண்ணியத்தால் அண்ணாமலையானையே நேரில் கண்டு, பரவசப் பேறு பெற்ற சோணாசலத்தேவர். யாழ்ப்பாணத்திலே பிறந்து, திருவண்ணாமலையில் குளமும், மடமும் அமைத்து நல்லறங்களை நாளெல்லாம் கூறி மக்களைக் காத்த ஞானப்பிரகாசர்.

மக்களை திருத்துவதற்காக... பழுக்கக் காய்ச்சிய இரும்புச் செருப்பை அணிந்து நடந்தவர், படுபாவிகளின் கொடுவாளால் இருதுண்டுகளான பசுவை, உயிர்ப்பித்த பெருஞ்சித்தர் வீர வைராக்கியமூர்த்தி சுவாமிகள். ஐநூறு சீடர்ளைப் பாடுபட்டு உருவாக்கி, அண்ணாமலையின் புகழைப் பரப்பியவர். ஆதார நூல்கள் பலவற்றை எழுதி, சைவசமயப் பெருமைகளை உலகறியச் செய்தவர், வேதாகம, சமயசாத்திர வித்தகரான அப்பைய தீட்சிதர்.

காவிரியாற்றின் நீரையே எண்ணையாக்கித் தீபம் ஏற்றியவர். கல்லாலான நந்திக்குக் கடலையைக் கொடுத்து உண்ணச் செய்தவர். பூமியிலிருந்து தீ ஜூவாலையை வரவழைத்து தனது திருமேனியையே... அக்னி தேவனுக்கு ஆஹ¨தியாக்கிய ஆதி சிவப்பிரகாசர். ஊமையாய்ப் பிறந்து, அண்ணாமலையாரின் பேரருளால், பாடும் திறனைப் பெற்றவர். விராலிமலை முருகப் பெருமான் கையால் பகலுணவு கொண்டவர். சிதம்பரத்தில் வாழ்ந்து திருவாரூரில் தியாகேசர் சன்னிதி முன்னால் சிவனடிச் ஜோதி கண்டு அதிலே கலந்து ஒளியான, தட்சிணாமூர்த்தி சுவாமிகள்.

காணாமல்போன பூஜைப் பேழையை, அண்ணாமலையாரின் திருக்கரங்களால் பெறும் பேறு பெற்றவர். 16-ம் நூற்றாண்டில் குருதேவர் மடத்தில் தீட்சைபெற்று, ‘சிவப்பிரகாசர்’ எனும் ஞானியைக் கண்ட ஞானஞானி, குமாரசாமிப் பண்டாரம். கரிகால்சோழனின் காலத்திய பாதாள லிங்கமூர்த்தியை 16-ம் நூற்றாண்டு இறுதியிலே பூஜித்தவர். அதே இடத்தில் விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர், ஆயிரம்கால் மண்டபம் கட்டியபோது, பாதாள லிங்கத்தை மாற்றி விடாமல் பாதுகாத்த ஞானயோகி, அழியா விரதம் கொண்ட தம்பிரான்.

தனது மரணத்தைத் தானே உணர்ந்து “ஜீவசமாதி” கண்டவர். ஜில்லா கலெக்டர் ஐடன்துரையின் தீராத வியாதியைத் தீர்த்து வைத்தவர்.இருபுறமும் வரிப்புலிகள் காவலிருக்க ஞானத்தவம் செய்தவர். (ஈசான்ய மடாலயத்தின் ஆதிகுரு. ஸ்ரீலஸ்ரீ ஈசான்ய ஞானதேசிகர். கேரள மாநிலத்தில் பிறந்து, இந்தியா முழுவதும் பாதயாத்திரை சென்று தியானத்திற்கு தகுந்த மலை, திருவண்ணாமலைதான் எனத் தீர்வு கண்டவர். மக்களிடம் தொடர்ந்து ஈடுபாடு கொண்டு, பக்தியை வளர்க்கப்பாடுபட்ட சற்குரு சுவாமிகள்.

பழனியிலிருந்து திருவண்ணாமலை வந்து ஆலயத்துள் உழவாரப் பணி (தேவையற்ற செடி, கொடி, முட்களை நீக்குதல்) புரிந்தவர். அன்னக்காவடி சுமந்து, அடியார்களுக்கு உணவளித்தவர். பாதாள லிங்கக் குகையிலே பாலரமணரைப் பலகாலம் பாதுகாத்த பழனிச்சுவாமிகள். நெல்லையிலே அவதரித்துத் திருவண்ணாமலையில் முருக தரிசனம் கண்டவர். எல்லையில்லா தமிழ் வண்ணப் பாக்களோடு, கம்பத்து இளையனாருக்கு (திருவண்ணாமலை முருகனுக்கு) வேல்கொடுத்து வாழ்த்திய இசைஞானி, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்.

கார்த்திகை தீபப் பரவச நிலையிலே காவல் தலைவரால் கன்னத்தில் அறையப்பட்டவர். ஊரார் கிளர்ந்தெழ, “அனைத்தும் என் முன்வினை” என்றவர். சித்தாந்த, வேதாந்தத் தத்துவங்களை அனைவருக்கும் புரியும் வகையில் விளக்குவதிலே சிம்மமாய்த் திகழ்ந்த காரியானூர் நடேச சுவாமிகள். திருவண்ணாமலை கிரிவலப் பாதையிலே, அங்கம்புரள உருண்டு அன்றாடம் வலம் வருவதையே லட்சியமாகக் கொண்டவர். நாயன்மார்களின் வாழ்வையே வேதமெனக் கண்டவர். 

திருவண்ணாமலையிலுள்ள அறுபத்துமூவர் மடாலயத்தின் ஆரம்பகால ஞானகுரு “அங்கப்பிரதட்சண” அண்ணாமலை சுவாமிகள். எல்லாம் “சிவா”, எப்போதும் “சிவா” எனச் சொல்லிச் சொல்லியே... அண்ணாமலையானின் திருவருள் பெற்று சிவஞான எல்லையிலே ஒளிகண்ட சிவா சுவாமிகள். திருவண்ணாமலைத் தேரடி வீதியிலே - புரண்டபடி கிடந்து, அருவுருவான அண்ணாமலையே, உமா மகேஸ்வரனாகக் கண்டு, தியானித்தபடி வருவோர்க்கெல்லாம் பேரருள் புரிந்து பார்புகழ் பெற்ற பத்ராசல சுவாமிகள்.

காஞ்சியில் பிறந்து, திருவண்ணாமலைத் தெருக்களிலே... புரண்டு, உருண்டு, சாக்கடைச்சகதி நீரிலே அளைந்து, நனைந்து... பார்வைக்கு எளியனாய், பல தெய்வ ஒளியனாய்..... அகில உலகையும் திருவண்ணாமலைத் தெருவில் நின்றபடியே மனக்கண்ணால் காணும் பேராற்றல் பெற்ற...ஞானச்சித்தர் சேஷாத்திரி சுவாமிகள்.
திருச்சுழி கிராமத்திலே பிறந்து, மதுரையிலே கல்வி பயின்று, திருவண்ணாமலையின் நினைவால் மகரிஷியாகி உலகப் புகழ் பெற்ற பிறவித் துறவி, ரமண மகரிஷி.

“அண்ணாமலையார்க்கே என்னை ஆளாக்குவேன்” என்று கன்னிப்பருவம் வரை காத்திருந்தவர். அண்ணாமலையார் அவர் கனவிலே வந்தார். கண் விழித்ததும், தலைமுடி சடையாகி விட்டிருந்தது. திருவண்ணாமலைக்குச் சென்று இறுதிவரை ஆலயத் திருப்பணி செய்த சடைச்சியம்மாள்.

திருவண்ணாமலையில் ஓரடிக்கு 1008, லிங்கங்கள் உண்டு என்பதை உலகுக்கு உணர்த்தியவர். பஞ்சாட்சர ‘நமசிவாய’ 1008 ஜபத்துடன் “திருவண்ணாமலை”யை ஒவ்வொரு அடியாக நடந்து, கடந்து வலம்வந்து, பேரின்ப ஞான நலம் கண்டு பிறவிப் பிணி தீரப் பெற்ற இறை சுவாமிகள்.

1917-ல் பிறந்து, ஆயிரத்து எட்டு முறை அண்ணாமலையையை அங்கப் பிரதட்சணம் கண்டவர். திருவண்ணாமலையில் உள்ள 360 தீர்த்தங்களையும் கண்ட கருணைவள்ளல். தேவரும், சித்தர்களும் கிரிவலம் செல்வதை ஞானக் கண்களால் அறிந்து கூறிய இசக்கி சுவாமிகள்.

விரட்டுவதற்காக வீசிய கல், பறவையின் உயிரையே வாங்கி விட்டதால், கங்கைக் கரையிலே பிறந்த அவர், அமைதியைத் தேடி, காவிரிக்கரை வரை அலைந்தார். இறுதியில் திருவண்ணாமலையில் அமைதி பெற்ற விசிறி சாமியார் எனப்படும் சிவயோகி ராம் சுரத்குமார்.

சாக்கடையில் புரண்டு திரிந்தவர் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள், ஆனால் அவரது திருமேனியில் சந்தனம் மணக்குமாம். இப்படி திருவண்ணாமலை தலத்தில் இருந்த இருக்கும் சித்தர்களின் எண்ணிக்கை அளவிட முடியாததாகும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

பயத்தை போக்கும் த்வரிதா நித்யா தேவி மந்திரம்

பக்தர்களுக்கு சீக்கிரமாய் அருள்பாலிப்பதால் ‘த்வரிதா’ என்று வணங்கப்படுகிறாள். இவளுக்கு உகந்த மந்திரதை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் எல்லா பயங்களும் போகும். பூரண ஆயுள் கிட்டும்.

இந்த நித்யா தேவிக்கு தோதலா தேவி என்ற பெயரும் உண்டு. பக்தர்களுக்கு சீக்கிரமாய் அருள்பாலிப்பதால் ‘த்வரிதா’ என்று வணங்கப்படுகிறாள். தழைகளை ஆடையாக அணிந்தவள். எட்டு நாகங்களை தன் உடலில் சூடியுள்ளாள்.

கருநீலநிறமான இவள் முக்கண்களுடனும் நான்கு கரங்களோடும் புன்முறுவல் பூத்த திருமுக மண்டலத்துடன் காட்சி யளிக்கிறாள். மேலும் சலங்கை, இடைமேகலை, ரத்னாபரணங்களுடன், மயில்பீலிகளைச் சூடிக்கொண்டு அலங்கார தரிசனமளிக்கிறாள்.

மந்திரம் :

ஓம் த்வரிதாயை வித்மஹே
மஹாநித்யாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்:

சுக்ல பட்சஅஷ்டமி, கிருஷ்ண பட்ச அஷ்டமி.

பலன்கள்: எல்லா பயங்களும் போகும். கலைகளில் தேர்ச்சி பெற முடியும். பூரண ஆயுள் கிட்டும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

வேடன் உருவில் முருகன் பெருமான்

கொல்லிமலை அடுத்த பேளுக்குறிச்சி கிராமத்தில் உள்ள கூவ மலையில் தண்டாயுதபாணியாக முருகப்பெருமான் குடிகொண்டுள்ளார். இங்கு முருகர் வேடன் கோலத்தில் காட்சி தருகிறார்.

கொல்லிமலை அடுத்த பேளுக்குறிச்சி கிராமத்தில் இருக்கிறது கூவ மலை. இங்கு தண்டாயுதபாணியாக முருகப்பெருமான் குடிகொண்டுள்ளார். இந்த ஆலயத்தில் இருந்து முருகன் சிலையை, பழனியாண்டவரின் நவபாஷாண சிலையை செய்வதற்கு முன்பாக, போகர் சித்தர் செய்து பிரதிஷ்டை செய்தது என்று கூறப்படுகிறது. 

கூவ மலையை கூர்ந்து கவனித்தால் ஒரு பாறையை கூட பார்க்க முடியாது. புற்களால் கம்பளம் நெய்து மலை மேல் போர்த்தி விட்டதுபோல இருக்கும். இந்த மலையின் பின்புறப் பகுதி, கயிலாயத்தை நினைவுபடுத்தி, ‘எல்லாமே இங்கு அடக்கம்’ என்பதைச் சொல்வதாக இருக்கிறது. இங்கு முருகர் வேடன் கோலத்தில் காட்சி தருகிறார்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

போகர் அமைத்த ஆலயம் ?

ரத உற்சவத்துக்கு பெயர் பெற்ற இடம், பூரி ஜகன்னாதர் ஆலயம். ஆனால் நிறைய பேருக்கு தெரியாத ஒரு விஷயம் அங்கு உண்டு. இது குறித்து அறிந்து கொள்ளலாம்.

ரத உற்சவத்துக்கு பெயர் பெற்ற இடம், பூரி ஜகன்னாதர் ஆலயம். ஆனால் நிறைய பேருக்கு தெரியாத ஒரு விஷயம் அங்கு உண்டு. அந்தக் கோவிலின் கருவறை தான், துவார யுகத்தில் வாழ்ந்த கிருஷ்ணனின் ஆயுள் முடிவுற்ற இடம் என்று நம்பப்படுகிறது. 

கிருஷ்ணர் அவதார முடிவில், அந்த உடலை விட்டு நாராயணர் சென்ற பின்னர், யாதவ குலத்தினர், அவர் உடலுக்கு மரியாதை செய்து, கங்கையில் விட்டனர். கிருஷ்ணரோ இயற்கையான ‘வாசி யோகி’. ஒரு வாசி யோகியின் உடலுக்கு அழிவு கிடையாது. 

அது எப்போதும் நல்ல சக்தியை பரப்பிக்கொண்டிருக்கும். கங்கையில் கிருஷ்ணரின் உடல் விடப்பட்டதை கண்டுகொண்டிருந்த ஒருவர், அந்த உடலை மீட்டு, அதை சமாதி வைத்து ஒரு ஆலயமாக எழுப்பினார். ஆலய கருவறையை ‘சங்கு’ வடிவில் அமைத்தார். கோவிலை அமைத்தவர் போகர் சித்தர் என்று சொல்கிறார்கள்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

நவக்கிரக தோஷம் நீக்கும் பரிகாரம்.!!

எப்படிப்பட்ட தோஷங்களையும் நீக்கும் பரிகாரம் ஒன்று உண்டு. அதன்படி நவக்கிரகங்களில் எந்தெந்த கிரக தோஷத்திற்கு எப்படிப்பட்ட எளிய பரிகாரத்தைச் செய்யலாம் என்பதைப் பார்ப்போம்.

நவக்கிரக சுழற்சியைக் கொண்டே, ஒரு மனிதனின் வாழ்க்கை நிர்ணயிக்கப்படுவதாக ஜோதிட நூல்களும், புராணங்களும் தெரிவிக்கின்றன. அதனால் தான் நவக்கிரக வழிபாடு என்பது நம்மிடையே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. எப்படிப்பட்ட தோஷங்களையும் நீக்கும் பரிகாரம் ஒன்று உண்டு. அதனை நம் முன்னோர்கள் சொல்லி வைத்துச் சென்றுள்ளனர். சிலர் விலங்குகளுக்கு உண்ணும் பொருட்களை வழங்குவதால் சில தோஷங்கள் விலகும் என்று சொல்லி வைத்துள்ளனர். அதன்படி நவக்கிரகங்களில் எந்தெந்த கிரக தோஷத்திற்கு எப்படிப்பட்ட எளிய பரிகாரத்தைச் செய்யலாம் என்பதைப் பார்ப்போம்.

ஒருவரது ஜாதகத்தில் சூரிய பகவானால் கிரக பாதிப்பு ஏற்பட்டு, தோஷம் உண்டாகிறது என்றால், அந்த ஜாதகர் குதிரைக்கு உணவளிப்பதன் மூலம் அந்த தோஷம் நிவர்த்தியாகும்.

குரு பகவானால் ஒரு சிலருக்கு பிரச்சினைகளும், தோஷங்களும் உருவாகலாம். இதனால் அந்த நபர்களுக்கு திருமணம் தள்ளிப்போகும். கல்வியும் பாதிக்கப்படலாம். அதை நிவர்த்தி செய்வதற்கு, பசு அல்லது யானைக்கு உணவு அளிக்கலாம்.

சந்திர பகவானின் பார்வை உங்கள் ஜாதகத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தால், அதைச் சரி செய்ய நீர்வாழ் உயிரினங்களுக்கு உணவு வழங்க வேண்டும். அதன்படி கோவில் குளங்களில் இருக்கும் மீன்களுக்கு பொரி போடலாம்.

செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைபடும். அதுபோன்ற நேரத்தில் வெள்ளாடு அல்லது செம்மறி ஆட்டுக்கு உணவு கொடுப்பதன் மூலம் கெட்ட வினைகள் குறையும். மேலும், குரங்குகளுக்கும் தானியங்கள், பழ வகைகளை வழங்கலாம்.

ஒருவரது ஜாதகத்தில் புதன் அதிபதியாக இருக்கும் பட்சத்தில், அவர் மிகச்சிறந்த பேச்சாளராக இருப்பார். அதே நேரம் புதன் திசை பிரச்சினையாக உள்ளவர்கள், கிளி களுக்கு உணவு வைப்பது சிறந்தது. இல்லாவிட்டால் தங்கள் வீட்டின் மேல் கூரையில் பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வைக்கலாம்.

சுக்ரன் உச்சம் பெற்றால் அந்த நபரின் வாழ்க்கையே செல்வச் செழிப்பாக மாறும் வாய்ப்பு உண்டு. அதே நேரம் சுக்ர தோஷம் ஏற்பட்டால், அதன் விளைவும் கடுமையாக இருக்கும். சுக்ரனால் ஏற்படும் பிரச்சினைகள் நீங்க புறா உள்ளிட்ட பறவைகளுக்கு தானியங்களை உணவாக வைக்கலாம்.

நம்மில் அதிகம் பேர் அச்சப்படுவது சனியால் ஏற்படும் தோஷத்திற்குத் தான். சனி திசை சிறப்பாக இல்லாத காலகட்டத்தில், சனி பகவானின் அருளைப் பெற கருப்பு நிற விலங்குகள், பறவைகளுக்கு உணவளிக்கலாம். உதாரணமாக எருமை, கருப்பு நிற நாய், காகம் போன்றவை.

ராகு - கேதுவால் ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து நீங்கள் தப்பிக்க வேண்டும் என்றால், நாய்களுக்கு உணவளிப்பது, எறும்புகளுக்கு சர்க்கரை, மாவுப்பொருட்களை உணவாக அளிப்பது நல்ல பலன்களைத் தரும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡