Saturday, 2 May 2020

எப்படிப்பட்ட கண் திருஷ்டியையும் இழுத்தெடுத்து வெளியே தள்ளும் சக்தி இந்த 3 பொருட்களுக்கு உள்ளது. நீங்கள் அறிந்திடாத ஒரு ரகசியக் குறிப்பு.!!

கண்ணுக்கு தெரியாத இந்த கண் திருஷ்டியானது, ஒருவரை வாழ்க்கையின் அதலபாதாளத்திற்கு கூட தள்ளி விடும் என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை. கண்திருஷ்டியை நம்பாதவர்கள் கூட, அவர்களுக்கு ஏற்பட்ட, எதிர்பாராத சில கசப்பான அனுபவத்தின் மூலம், கடைசியில் நம்ப வேண்டிய சூழ்நிலைக்கு வந்துள்ளார்கள், என்றால் அது நிச்சயம் பொய்யாகாது. கடவுளை நம்பாதவர்கள் கூட, கண் திருஷ்டியை நம்பித்தான் ஆகவேண்டும். ஏனென்றால் அத்தனை பாதிப்புகளை நமக்கு ஏற்படுத்தும் சக்தி கொண்டது இந்த கண் திருஷ்டி. இதை விரட்டுவதற்கு ஆன்மீகத்தில் பலவகையான வழிமுறைகள் சொல்லப்பட்டிருந்தாலும், சில குறிப்புகள், சில பேருக்கு தெரியாமல் தான் இருந்துவருகிறது. அப்படிப்பட்ட, யாரும் அறிந்திராத சக்தி வாய்ந்த ஒரு குறிப்பை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

குறிப்பை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பாக, இந்த திருஷ்டி பரிகாரத்தை கர்ப்பிணிப்பெண்கள் செய்யக்கூடாது. அதாவது கர்ப்பிணி பெண்களுக்கு இதை சுற்றி போடலாம். கர்ப்பிணிப் பெண்கள் தங்களுடைய கையால் அடுத்தவர்களுக்கு இந்த முறையை பயன்படுத்தி திருஷ்டியை கழிக்கக்கூடாது. மாதவிலக்கான பெண்கள் இந்த முறையை பின்பற்றி அடுத்தவர்களுக்கு திருஷ்டி கழிக்க கூடாது என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

திருஷ்டியை கழிக்க தேவையான பொருட்கள். ஒரு எலுமிச்சை பழம், முகத்தில் பூசிக் கொள்ளும் மஞ்சள்தூள், கல் உப்பு, வால் மிளகு தூள். அதாவது சாதாரண மிளகு கிடையாது. வால் மிளகை வாங்கி நீங்களே பொடிசெய்து வைத்துக் கொள்வது நல்லது. ஆனால் கட்டாயம் இந்த வால்மிளகு தூள் இருக்க வேண்டும். முதலில் எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும். இரண்டு பாகங்களாக பிரிய வேண்டுமே தவிர, இரண்டு துண்டுகளாக பிரித்து விடக் கூடாது. எலுமிச்சை பழத்தின் ஒரு முனையை மட்டும் வெட்டாமல் ஒட்டி இருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டும்.

அதாவது எலுமிச்சை பழத்தின் உள் பகுதியில் மேற்குறிப்பிட்ட பொருட்களை எல்லாம் தடவும் அளவிற்கு, இரண்டு பாகங்களாக பிரிக்க வேண்டும். லேசாக வெட்டிய எலுமிச்சை பழத்தின் உள் பகுதியில் உள்ள இரண்டு பக்கத்திலும், முதலில் மஞ்சள் பொடியை நன்றாக தடவிக் கொள்ளுங்கள். அதன் பின்பு வால் மிளகு தூளை இரு பக்கமும் நன்றாக தடவிக் கொள்ளுங்கள். ஒரு சிட்டிகை கல் உப்பை எடுத்து நடுவே வைத்து, எலுமிச்சை பழத்தை உங்கள் உள்ளங்கைகளில் வைத்து கொள்ள வேண்டும்.

வீட்டில் உள்ளவர்கள் அனைவரையும் ஒன்றாக கிழக்குப்பக்கம் பார்த்தவாறு உட்காரவைத்து, ஒன்பது முறை எல்லோரையும் சேர்த்து சுற்றியபடி திருஷ்டி கழிக்க வேண்டும். அதன் பின்பு கையிலிருக்கும் எலுமிச்சை பழத்தை ஒரு பேப்பரில் வைத்து வெளியே தெரியாமல், மடித்து கால் படாத இடத்தில் கொண்டுபோய் தூர வீசி விடுங்கள். இது மிகவும் ஒரு நல்ல வழியாக சாஸ்திர குறிப்புகளில் சொல்லப்பட்டுள்ளது.

சில பேருக்கு கண் திருஷ்டியின் மூலம் தீராத பல பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். எப்படிப்பட்ட பிரச்சனைகளையும் ஒரே முறையில் நீக்கக்கூடிய திருஷ்டி பரிகாரம் தான் இது என்பது குறிப்பிடத்தக்கது. முடிந்தவரை இந்த பரிகாரத்தை அமாவாசை, ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமை தினங்களில் செய்யலாம். மாலை 6 மணிக்கு மேல், முடிந்தால் இரவு 9 மணிக்கு செய்தாலும் நல்ல பலனை தரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

தினம்தோறும் இந்த 3 பொருட்களை புதியதாக தான் பயன்படுத்த வேண்டும். இல்லை என்றால், எதிர்மறை ஆற்றல் உங்கள் வீட்டை சுற்றிக் கொண்டே இருக்கும்.!!

நம்முடைய வீட்டில் சில பொருட்களை தினம்தோறும் கண்டிப்பாக, புதிதாக மாற்ற வேண்டியது நம்முடைய கடமை. ஏனென்றால் இந்த பொருட்களில் எல்லாம் கெட்ட ஆற்றல் நிறைந்திருக்கும். அதாவது கெட்ட ஆற்றலை ஈர்த்துக்கொள்ளும் தன்மையானது இந்த பொருட்களுக்கு உண்டு. இந்த வரிசையில் எந்தெந்த பொருட்களை நம்முடைய வீட்டில் தினம்தோறும் மாற்ற வேண்டும்! அந்த குறிப்பிட்ட பொருட்களில் முதல் மூன்று பொருட்களை இன்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

முதலில் பெண்கள் நெற்றியில் வைக்கும் ஸ்டிக்கர் பொட்டு. பொதுவாக ஸ்டிக்கர் பொட்டு வைத்தாலும், குங்குமப்பொட்டு வைத்துக்கொள்வது சுமங்கலிப் பெண்களுக்கு மிகவும் நல்லது. ஸ்டிக்கர் பொட்டு வைத்துக்கொள்ளும் பெண்களாக இருந்தாலும், நீங்கள் அந்தப் பொட்டை தினம்தோறும் புதியதாக மாற்ற வேண்டும். ஏனென்றால் பொதுவாகவே நம்முடைய நெற்றிப்பொட்டை தாக்கக்கூடிய கெட்ட சக்திகளை, நம் உடலுக்குள் செல்ல விடாமல் தடுப்பது, நம் நெற்றியில் இருக்கும் குங்குமப்பொட்டு.

நீங்கள் நெற்றியில் வைத்திருக்கும் ஸ்டிக்கர் பொட்டும், கெட்ட விஷயங்களை ஈர்த்து வைத்திருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில், தினம்தோறும் அந்த கெட்ட ஆற்றலை, எதிர்மறை ஆற்றலை உங்கள் நெற்றியிலேயே வைத்திருந்தாள்! அந்த எதிர்மறை சக்தியானது உங்களை சுற்றிக் கொண்டே தான் இருக்கும். இப்படி இருக்க, சில பேர் நெற்றியிலிருந்து குளிக்கும் போது கூட, அந்த ஸ்டிக்கர் பொட்டை எடுக்கமாட்டார்கள். குங்குமபொட்டு என்றால் குளிக்கும்போது தானாக போய்விடும். குளித்து முடித்து விட்டு பெண்கள் புதிதாக வைத்துக் கொள்வார்கள். ஸ்டிக்கர் பொட்டிற்க்கும் மட்டும் இது விதிவிலக்காக அமைந்திருக்கிறது. இதனால் தினந்தோறும் உங்கள் நெற்றியில் இருக்கும் ஸ்டிக்கர் பொட்டை மாற்றுவது உங்களுக்கு மிகவும் நல்லது. உங்கள் குடும்பத்திற்கும் நல்லது.

அடுத்ததாக வீட்டு வாசலில் வைக்கும் எலுமிச்சை பழம். இந்த எலுமிச்சை பழத்தை சில பேர் வெள்ளிக்கிழமை அன்று ஞாயிற்றுக்கிழமை அன்று அமாவாசை அன்று வைத்து விட்டு அப்படியே, அடுத்த வாரம் வரை கூட மாற்றாமல் பழைய எலுமிச்சை பழத்தை வைத்து வைப்பார்கள். இது மிகவும் தவறு. வெள்ளிக்கிழமை அன்று அந்த எலுமிச்சை பழத்தை காலை நேரத்தில், இரண்டாக அறுத்து ஒரு பக்கம் மஞ்சளும், ஒரு பக்கம் குங்குமமும் தடவி வைத்துவிட்டால், சனிக்கிழமை அன்று, மறுநாள் காலை குளிப்பதற்கு முன்பாகவே அந்த எலுமிச்சை பழங்களை நாம் தூக்கி தூரப் போட்டு இருக்க வேண்டும்.

ஏனென்றால் ஒரு நாள் முழுவதும் உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை அது உறிஞ்சு வைத்திருக்கும். மறுநாள் காலை அந்த இடத்தில் பழைய எலுமிச்சை பழம் இருந்தால், அந்தக் கெட்ட ஆற்றலானது திரும்பவும் நம் வீடு முழுவதும் பரவ வாய்ப்பு இருக்கிறது. தினம்தோறும் எலுமிச்சை பழத்தை வைக்கிறீர்களோ இல்லையோ, முதல் நாள் வைத்த எலுமிச்சை பழத்தை அடுத்த நாள் குளிப்பதற்கு முன்பாகவே தூக்கி தூரம்வீசி விடுங்கள். குளித்து முடித்து விட்டு திரும்பவும் வந்து புதிதாக ஒரு எலுமிச்சை பழத்தை அறுத்து மஞ்சள் குங்குமம் தடவி வாசலின் இரண்டு பக்கத்திலும் வைப்பதுதான் சரியான முறை.

மூன்றாவதாக ஒரு விஷயம் உள்ளது. தினம் தோறும் வீட்டில் தீபம் ஏற்றுபவர்கள், காலை தீபம் ஏற்றும்போது பழைய விளக்கு திரியை நீக்கி விட்டு புதிய திரியில்தான் தீபமேற்ற வேண்டும். இதே போல் உங்கள் வீட்டு பூஜை அறையில், பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் வைத்து இருந்தாலும், அல்லது பித்தளை சொம்பில் தண்ணீர் வைத்திருந்தாலும், அது இரண்டையும் தினம்தோறும் புதியதாக மாற்றும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். பழைய தண்ணீரில் இருக்கும் கெட்ட ஆற்றலோடு தீபத்தை ஏற்றினால் அதன் மூலம் நமக்கு எந்த ஒரு நல்ல பலனும் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. முடிந்தவரை சுவாமி படங்களில் இருக்கும் பழைய பூக்களையும் எடுத்துவிட்டு தினம்தோறும் புதிய பூ போடுவது மிக மிக நல்லது...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

பார்த்து, பேசி, புரிந்து திருமணம் செய்தாலும் நல்ல துணை அமையவில்லை என்று புலம்புபவர்களை பார்த்திருக்கிறீர்களா? உங்களுக்கும் அந்த நிலை வராமல் இருக்க என்ன செய்யலாம்?

பெற்றோர்கள் பார்த்து முடித்து வைத்த திருமண பந்தமோ அல்லது காதல் திருமணமோ! எதுவாக இருந்தாலும் திருமணம் என்பது இறைவனால் நிச்சயிக்கப்படுகிறது என்பது தான் உண்மை. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. நீங்கள் தலை கீழாக நின்றாலும் இறுதியில் உங்களுக்கென படைக்கபட்டவர்கள் தான், உங்களுக்கு வந்து அமைவார்கள். விருப்பம் இல்லாமல் திருமண பந்தத்தில் இணையும் இருவர் மணமானதும் நாளைடைவில் மனம் மாறி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கின்றனர். ஆனால் விரும்பி ஏற்கும் அன்பான உறவுகள் சிலர் நாளைடைவில் சதா சண்டை போட்டு இறுதியில் பிரிந்து விடுகின்றனர். இதற்கு காரணம் என்ன? உங்களுக்கென சிறந்த வாழ்க்கை துணை அமைய என்ன செய்யலாம்? என்ற கேள்விகளுக்கு இப்பதிவில் பதில் காணலாம் வாருங்கள்.

எந்த ஒரு விஷயத்திலும் இறைவன் துணையின்றி நீங்கள் வெற்றி பெறுவதில்லை. இதில் தெளிவாக இருப்பது நிச்சயம் அவசியமாக இருக்கும். ஆணவம், செருக்கு, அகம்பாவம் இவற்றால் கிட்டுவது ஒன்றும் இல்லை. ஆனால் இழப்பது உங்கள் வாழ்க்கையை, என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். இறைவன் இருக்கிறாரா? இல்லையா? என்ற வாதத்திற்கு இங்கு இடமே இல்லை. உங்களை மீறிய ஒரு சக்தி இருக்கிறது என்பதை உணர்கிறீர்களா? உணர்ந்தால் அதுவே போதும்.

திருமண வாழ்க்கைக்குள் நுழைவதற்கு முன் நீங்கள் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். இறைவன் இருப்பதை மறந்து நீங்கள் உங்கள் இஷ்டப்படி வாழ்க்கையை வாழ்ந்தால் உங்களுக்கு நிச்சயம் சிறந்த துணையை பெறுவது என்பது சாத்தியமில்லை. அது நியாயமும் இல்லை. நாம் 6 அறிவுள்ள மனிதன். அதை மறந்து கீழான காரியங்கள் செய்தால் உங்களுக்கு சிறந்த வாழ்க்கை எப்படி அமையும்?

கடவுள் இருக்கின்றார்! அவரை நம்பினால் நல்லது நடக்கும் என்று உங்கள் மனதில் வேரூன்றி வையுங்கள். சிலர் கோவில் வரை செல்வார்கள் ஆனால் கோவிலுக்குள் அழைத்தால் வரமாட்டார்கள். அது மிகவும் தவறான விஷயம். ஆலயம் வரை சென்றபின் உள்ளே செல்லாமல் இருப்பது நல்ல பலனை தந்துவிடாது. ஒவ்வொருவரின் குணநலன் ஒவ்வொரு மாதிரியான கருத்துக்களை கொண்டிருக்கும். நீங்கள் சரியென நினைக்கும் விஷயத்தை சிலர் தவறென கூறுவார்கள். உங்கள் கருத்துகளுக்கு ஏற்ற துணை அமைவது வரம். எதிராக கருத்து கூறுபவர்கள் துணையாக அமைந்தால் அது சாபம். நீங்கள் ஆணோ, பெண்ணோ இந்த விஷயங்களை தொடர்ந்து செய்து வாருங்கள். நிச்சயம் உங்கள் மனதிற்கு ஏற்ற துணை அமையும்.

1. நீங்கள் ஆணாக இருந்தால், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் கட்டாயம் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து வர வேண்டும். பெண்ணாக இருந்தால், செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து வர வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வர வேண்டும். இது காலம் காலமாக பின்பற்றி வந்த காலாச்சாரம் தான்.

2. திருமணம் செய்ய முடியாமல் கஷ்டப்படும் குடும்பத்திற்கு உங்களால் முடிந்த உதவிகள் செய்து தர வேண்டும். இலவச திருமணங்களுக்கும் உதவி செய்யலாம்.

3. பசு மாடுகளுக்கு அகத்திக்கீரையை மாதம் ஒரு முறையாவது கொடுத்து வர வேண்டும். இதே போல் எருமை மாடுகளுக்கு தண்டுக் கீரை கொடுத்து வர வேண்டும்.

4. தானாக எழுந்தருளிய சுயம்பு லிங்கம் பிரதிஷ்டை செய்யபட்ட கோவில்களில் அடிக்கடி சென்று பிரகாரத்தை சுற்றி 108 முறை வலம் வர வேண்டும்.

5. தினமும் விநாயகப் பெருமானுக்கு 108 முறை தோப்புக்கரணம் போட வேண்டும். காலை, மாலை என இரு வேளையும் போட வேண்டும். இதனால் உடலும் ஆரோக்கியம் பெறும். உள்ளமும் தூய்மை அடையும்.

இந்த 5 விஷயங்களை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் உள்ளத்தில் நல்ல மாற்றம் உண்டாகும். ஆன்மீக ஈடுபாடு அதிகரித்து உங்களின் மனபலம் கூடுவதை நீங்களே கண்கூடாக காண்பீர்கள். நல்ல வாழ்க்கை துணை அமைய ஆன்மீக ரீதியாக சொல்லபட்ட சூட்சம வழிகள் இவை. உளவியல் ரீதியாக ஒரு சின்ன அறிவை தெரிந்து கொள்ளுங்கள். உங்களின் கருத்துகளுக்கு எதிர்கருத்து கூறும் நபரை நீங்கள் சற்று தள்ளியே வையுங்கள். அதற்காக தவறான கருத்துகளை நீங்கள் கொண்டிருக்க கூடாது. இருவரும் நியாயமான கருத்தை முன் வைத்தாலும், இரண்டும் முரண்பாட்டால் அவர்கள் உங்களுக்கு சரியானவர் இல்லை என்பது தான் உண்மை. நீங்கள் திருமண பந்தத்தில் இணைந்தால் அது வெற்றி அடையாது. அறிவோடும், இறைவனின் துணையோடும் உங்களுக்கான துணையை சரியாக தேர்ந்தெடுங்கள். வாழ்க்கையில் வெற்றி அடையுங்கள்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

அக்னி நட்சத்திரம் வரப்போகிறது. தோஷமானது உங்களை தாக்காமல் இருக்க, தினந்தோறும் உங்கள் வீட்டில் கட்டாயம் இத செஞ்சுடுங்க.!!

அக்னி நட்சத்திரம் வரப்போகிறது என்றால் எல்லோருடைய மனதிலும் ஒருவிதமான பயம் ஏற்பட்டு விடும். இதற்கு காரணம் சுட்டெரிக்கும் சூரியனின் தாக்கத்தை எப்படி தாங்கப் போகிறோமோ? என்ற கவலைதான். இந்த வருடம் அக்னி நட்சத்திரமானது மே 4-5.2020ம் தேதி தொடங்கி, மே 28-5.2020ஆம் தேதி வரை வரவிருக்கிறது. இந்த நாட்களில் எந்த விதமான பாதிப்பும் நம்மை நெருங்காமல், இருக்க ஆன்மீக ரீதியாக என்ன செய்வது என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

இந்த அக்னி நட்சத்திர காலத்தில் உடல் மிகவும் சூடாக ஆரம்பித்துவிடும். தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நம்மை விடாமல் பிடித்துக் கொள்ளும். சூட்டு கொப்பளம், கட்டி, வயிற்றுவலி வியர்க்குரு, வியர்வை போன்ற எல்லா வகையான பிரச்சனையில் இருந்தும் நம்மால் தப்பிக்க முடியாது. முடிந்தவரை வாரத்திற்கு இரண்டு நாட்கள் எண்ணெய்க் குளியல் போடுவதும் மிக மிக அவசியம். அதிலும் குறிப்பாக நல்லெண்ணெய் குளியல் போட்டால் பல விதமான நோய் பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். முடிந்தவரை தண்ணீர் பருகி கொண்டே இருக்கவேண்டும். உடலில் நீர்ச்சத்து குறைய அதிக வாய்ப்புகள் உள்ளது. இது எல்லோருக்கும் தெரிந்திருக்க கூடிய விஷயமாக இருந்தாலும், நினைவு கூறுவதற்காக தருணமிது. 

அடுத்ததாக, இன்றைய சூழ்நிலையில் நம்மை சுற்றி இருக்கும் பிரச்சனைகளும் நோய்த்தொற்றும் மிகமிக அதிகமாக உள்ளது. அவை அனைத்தும் இந்த அக்னி நட்சத்திர கால கட்டத்தில் எப்படி மாறப்போகிறது என்பதை நம்மால் அறிய முடியாது. எது எப்படியாக இருந்தாலும், ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ள ஒரு சின்ன குறிப்பை நாம் எல்லோரும் பின்பற்றுவது நல்லது. அது என்ன குறிப்பு? என்பதை பின்வருமாறு தெரிந்துகொள்ளலாம். 

உங்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு குடத்தில் தண்ணீரை வைத்து, அதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து வைத்துவிடுங்கள். கட்டாயம் அந்த குடத்தில் தண்ணீர் குறைவாக இருக்கக்கூடாது. நிறைகுடமாக வைக்கவேண்டும். அக்னி நட்சத்திரம் தொடங்கும் நாளுக்கு முந்தைய நாளே உங்கள் வீட்டு பூஜை அறையில் இதை வைத்து விடுங்கள். மறுநாள் காலை அந்த தண்ணீரை எடுத்துக்கொண்டு போய், உங்கள் வீட்டு வாசலில் தெளித்து கோலமிடுங்கள். 

அதன் பின்பு மறுபடியும் ஒரு நிறை குடம் தண்ணீரை ஊற்றி, மஞ்சள் தூளை கலந்து உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். ஒரு நாள் முழுவதும் அந்த தண்ணீர் உங்கள் வீட்டு பூஜை அறையிலேயே இருக்கட்டும். மறுநாள் காலை மீண்டும் வாசல் தெளிக்க அந்த தண்ணீரை பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களால் இதை செய்ய முடியாவிட்டால் ஒரு சின்ன பாத்திரத்திலாவது மஞ்சள் தண்ணீரை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விட்டு, அதன் பின்பு, அந்த தண்ணீரை நீங்கள் வாசல் தெளிக்கும் தண்ணீரில் கலந்து தெளித்து விடுங்கள். 

உங்களையும் உங்கள் வீட்டையும் அக்னி நட்சத்திர தோஷம் பாதிக்காமல் இருக்க, இது மிகவும் பாதுகாப்பாக இருக்கும். அதாவது, உங்கள் வீட்டு பூஜை அறையில் மஞ்சள் தண்ணீர் இல்லாமல் இருக்கவே கூடாது. அக்னி நட்சத்திரம் முடியும் வரை இதை மட்டும் கவனமாக வைத்துக் கொள்ளுங்கள். இது ஒரு சாதாரண குறிப்பு போல் தெரிந்தாலும், இதில் அடங்கியிருக்கும் ரகசியம் மிகப் பெரியது. பிரச்சினைகளுக்கு சுலபமான தீர்வை கொடுக்கும் இந்த முறையை பின்பற்றி இந்த அக்னி நட்சத்திரத்தை எந்த வித பாதிப்பும் இல்லாமல் கடப்போம் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

அக்னி நட்சத்திரம் வரப்போகிறது. தோஷமானது உங்களை தாக்காமல் இருக்க, தினந்தோறும் உங்கள் வீட்டில் கட்டாயம் இத செஞ்சுடுங்க.!!

அக்னி நட்சத்திரம் வரப்போகிறது என்றால் எல்லோருடைய மனதிலும் ஒருவிதமான பயம் ஏற்பட்டு விடும். இதற்கு காரணம் சுட்டெரிக்கும் சூரியனின் தாக்கத்தை எப்படி தாங்கப் போகிறோமோ? என்ற கவலைதான். இந்த வருடம் அக்னி நட்சத்திரமானது மே 4-5.2020ம் தேதி தொடங்கி, மே 28-5.2020ஆம் தேதி வரை வரவிருக்கிறது. இந்த நாட்களில் எந்த விதமான பாதிப்பும் நம்மை நெருங்காமல், இருக்க ஆன்மீக ரீதியாக என்ன செய்வது என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

இந்த அக்னி நட்சத்திர காலத்தில் உடல் மிகவும் சூடாக ஆரம்பித்துவிடும். தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நம்மை விடாமல் பிடித்துக் கொள்ளும். சூட்டு கொப்பளம், கட்டி, வயிற்றுவலி வியர்க்குரு, வியர்வை போன்ற எல்லா வகையான பிரச்சனையில் இருந்தும் நம்மால் தப்பிக்க முடியாது. முடிந்தவரை வாரத்திற்கு இரண்டு நாட்கள் எண்ணெய்க் குளியல் போடுவதும் மிக மிக அவசியம். அதிலும் குறிப்பாக நல்லெண்ணெய் குளியல் போட்டால் பல விதமான நோய் பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். முடிந்தவரை தண்ணீர் பருகி கொண்டே இருக்கவேண்டும். உடலில் நீர்ச்சத்து குறைய அதிக வாய்ப்புகள் உள்ளது. இது எல்லோருக்கும் தெரிந்திருக்க கூடிய விஷயமாக இருந்தாலும், நினைவு கூறுவதற்காக தருணமிது. 

அடுத்ததாக, இன்றைய சூழ்நிலையில் நம்மை சுற்றி இருக்கும் பிரச்சனைகளும் நோய்த்தொற்றும் மிகமிக அதிகமாக உள்ளது. அவை அனைத்தும் இந்த அக்னி நட்சத்திர கால கட்டத்தில் எப்படி மாறப்போகிறது என்பதை நம்மால் அறிய முடியாது. எது எப்படியாக இருந்தாலும், ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ள ஒரு சின்ன குறிப்பை நாம் எல்லோரும் பின்பற்றுவது நல்லது. அது என்ன குறிப்பு? என்பதை பின்வருமாறு தெரிந்துகொள்ளலாம். 

உங்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு குடத்தில் தண்ணீரை வைத்து, அதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து வைத்துவிடுங்கள். கட்டாயம் அந்த குடத்தில் தண்ணீர் குறைவாக இருக்கக்கூடாது. நிறைகுடமாக வைக்கவேண்டும். அக்னி நட்சத்திரம் தொடங்கும் நாளுக்கு முந்தைய நாளே உங்கள் வீட்டு பூஜை அறையில் இதை வைத்து விடுங்கள். மறுநாள் காலை அந்த தண்ணீரை எடுத்துக்கொண்டு போய், உங்கள் வீட்டு வாசலில் தெளித்து கோலமிடுங்கள். 

அதன் பின்பு மறுபடியும் ஒரு நிறை குடம் தண்ணீரை ஊற்றி, மஞ்சள் தூளை கலந்து உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். ஒரு நாள் முழுவதும் அந்த தண்ணீர் உங்கள் வீட்டு பூஜை அறையிலேயே இருக்கட்டும். மறுநாள் காலை மீண்டும் வாசல் தெளிக்க அந்த தண்ணீரை பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களால் இதை செய்ய முடியாவிட்டால் ஒரு சின்ன பாத்திரத்திலாவது மஞ்சள் தண்ணீரை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விட்டு, அதன் பின்பு, அந்த தண்ணீரை நீங்கள் வாசல் தெளிக்கும் தண்ணீரில் கலந்து தெளித்து விடுங்கள். 

உங்களையும் உங்கள் வீட்டையும் அக்னி நட்சத்திர தோஷம் பாதிக்காமல் இருக்க, இது மிகவும் பாதுகாப்பாக இருக்கும். அதாவது, உங்கள் வீட்டு பூஜை அறையில் மஞ்சள் தண்ணீர் இல்லாமல் இருக்கவே கூடாது. அக்னி நட்சத்திரம் முடியும் வரை இதை மட்டும் கவனமாக வைத்துக் கொள்ளுங்கள். இது ஒரு சாதாரண குறிப்பு போல் தெரிந்தாலும், இதில் அடங்கியிருக்கும் ரகசியம் மிகப் பெரியது. பிரச்சினைகளுக்கு சுலபமான தீர்வை கொடுக்கும் இந்த முறையை பின்பற்றி இந்த அக்னி நட்சத்திரத்தை எந்த வித பாதிப்பும் இல்லாமல் கடப்போம் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

குழப்பமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண 1 எலுமிச்சை பழம் போதும்.!!

பொதுவாகவே குழப்பமான பிரச்சனைகள் என்றாலும், தீர்க்கவே முடியாத பிரச்சனைகள் என்றாலும், கடவுள் மீது நம்பிக்கை உள்ளவர்கள் இறைவனின் பாதங்களை போய் சரணடைவது தான் இயல்பு. சில பேருக்கு வாழ்வில் ஏற்படும் குழப்பமான பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காமல் இருப்பதனாலேயே தோல்வியை சந்திக்கும் நிலை ஏற்படும். இப்படிப்பட்ட மன குழப்பத்தினால் இரவில் தூக்கம் சரியாக வராது. இரவில் நன்றாக தூக்கம் வரவில்லை என்றால், பகலில் செய்யும் வேலையில் ஆர்வம் காட்ட முடியாது. ஆர்வம் இல்லாமல் செய்யும் எந்த வேலையும் வெற்றியை தொடாது. இப்படி இருக்க, இந்தப் பிரச்சினைக்குச் சுலபமான ஒரு தீர்வு உள்ளது. அது என்ன என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

பொதுவாகவே கல் உப்புக்கும், எலுமிச்சை பழத்திற்க்கும் கெட்ட சக்தியை ஈர்த்துக் கொள்ளும் சக்தி அதிகமாக உள்ளது என்பதை நம்மில் பலர் அறிவோம். எலுமிச்சை பழம் என்றால் குறிப்பாக அம்மனுக்கு மிகவும் உகந்தது. முடிந்தவரை உங்களுடைய குலதெய்வம் அம்மனாக இருந்தால், அது எந்த அம்மனாக இருந்தாலும் சரி. அந்த குலதெய்வத்தின் மடியில் ஒரு எலுமிச்சை பழத்தை வைத்து உங்களுக்கு இருக்கக்கூடிய மனக் குழப்பங்கள் அனைத்தும் தீர வேண்டும். நிம்மதியான தூக்கம் வேண்டும். மன அமைதி வேண்டும் என்றவாறு வேண்டிக்கொண்டு, அந்த எலுமிச்சம் பழத்தை அர்ச்சனை செய்து பெண்களாக இருந்தால் உங்கள் முந்தானையில் அந்த பழத்தை வாங்கவேண்டும். ஆண்களாக இருந்தால் மேலே போடும் அங்கவஸ்திரம் துணியில் வாங்கிக் கொள்ள வேண்டும். 

உங்களுடைய குலதெய்வம் அம்மனாக இல்லை என்றால் பரவாயில்லை. உங்கள் வீட்டு அருகில் இருக்கும் ஏதாவது அம்மன் கோவிலுக்கு சென்று இப்படி செய்து வரலாம். வாங்கிய எலுமிச்சை பழத்தை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். குறிப்பாக செவ்வாய்க்கிழமை செய்தால் நல்ல பலன் உண்டு. அன்று சுத்தபத்தமாக இருக்க வேண்டியது மிக அவசியம். அசைவம் சாப்பிடக்கூடாது. பூஜை அறையில் எலுமிச்சை பழத்தை தரையில் படும்படி வைக்கக்கூடாது. எக்காரணத்தைக் கொண்டும் கைநழுவி அந்த எலுமிச்சை பழத்தை தரையில் விட்டுவிடக்கூடாது. 

செவ்வாய்க்கிழமை இரவு நீங்கள் தூங்க செல்வதற்கு முன்பு, நீங்கள் தூங்கும் அந்த அறையில் நான்கு திசைகளிலும் நான்கு வெள்ளை காகிதங்களை வைத்து, அந்த காகிதத்தின் மேல் ஒரு கைப்பிடி அளவு உப்பை வைத்து, அந்த உப்பின் மேல் பக்கத்தில், அம்மன் கோவிலில் இருந்து வாங்கி வந்த எலுமிச்சம்பழத்தை நான்காக வெட்டி, குங்குமம் தடவி, நான்கு திசைகளிலும் நீங்கள் வைத்திருக்கும் பேப்பர் கல் உப்பின் மேல் இந்த பழத்தை, வைத்துவிட வேண்டும். 

மறுநாள் காலை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கட்டி, கால் படாத இடத்தில் தூரமாக போட்டுவிட வேண்டும். பரிகாரம் இவ்வளவுதான். இதை நம்பிக்கையாக செய்யும் பட்சத்தில் மிக மிக நல்ல பலன் உண்டு. உங்களுக்கு அந்த தினம், அதாவது பரிகாரத்தை செய்யும் அந்த இரவு கெட்ட கனவுகள் வரலாம். அல்லது வித்தியாசமான உணர்வினை நீங்கள் அடையலாம். 

எப்படியாக இருந்தாலும் உங்களுக்கு பிடித்த கஷ்டம் உங்களை விட்டு நீங்கி விட்டது என்பதைக் குறிப்பதாக தான் அர்தம். இந்த பரிகாரத்தை செய்த மறுதினமே எந்தவித மன கஷ்டமும் இல்லாமல் நிம்மதியான தூக்கம் உங்கள் கண்களை தழுவும். உடனடியாக பலன் தரக்கூடிய பரிகாரம் இது. பிரச்சினைகளுக்கான தீர்வினை எடுப்பதற்கான மன தைரியமும் அதிகரிக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

Friday, 1 May 2020

மாதா, பிதா, குரு இவர்கள் மூவருக்கும் இந்த எண்ணம் மட்டும் வரவே கூடாது! மீறி வந்தால் உங்கள் தகுதியை, நீங்கள் இழந்து விட்டீர்கள் என்று தான் அர்த்தம்.!!

நம்முடைய முன்னோர்கள் தாய், தந்தை, ஆசான் இவர்கள் மூவருக்கு பின்புதான், தெய்வத்தையே வைத்துள்ளார்கள். இப்படிப்பட்ட முதல் மூன்று இடத்தில் இருக்கும் இவர்கள் மூவருக்கும், வரவே கூடாத எண்ணங்கள் என்ன என்பதைப் பற்றி, நம் முன்னோர்கள், சாஸ்திர குறிப்புகளில் சொல்லிவிட்டுச் சென்றுள்ளனர். அப்படிப்பட்ட எண்ணம் தாய்க்கோ, தந்தைக்கோ அல்லது குருவுக்கு இருந்தால் அதை நீங்கள் கட்டாயம் மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம். இது தவறு என்று தெரிந்த பின்பும், நீங்கள் அதை திரும்பத் திரும்ப செய்து கொண்டே இருந்தால், உங்களுக்கான தாய், தந்தை, குரு என்ற தகுதியை நீங்கள் கட்டாயம் இழுந்து விட்டதாகத்தான் அர்த்தம் என்று நம்முடைய சாஸ்திர குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அது என்ன என்பதைப் பற்றிய விரிவான தொகுப்பினை இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

முதலில் தாய்க்கு வரவே கூடாத எண்ணம் என்பது, மகளைப் பார்த்து போட்டி போடுவது.  பொறாமைபடுவது. சில தாய்மார்கள் மகளுக்கு இணையாக போட்டி போடும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். மகளுக்கு இணையாக துணி உடுத்துவதும், மகளுக்கு இணையாக தன்னை அழகு படுத்திக்கொள்வது, அதாவது வயது வரம்பு என்ன என்பதை அறியாமல் மகளிக்கு சமமாக போட்டி போடும் எண்ணம், எந்த தாய்க்கு உள்ளதோ அவர் தாய் தகுதியை முழுமையாகப் பெற்றவர் இல்லை என்றுதான் சாஸ்திர குறிப்புகள் கூறியுள்ளது. இது எவர் மனதையும் புண்படுத்துவதற்காக கூறப்படும் கூற்று அல்ல. அதாவது தாய் தன்னை அழகுபடுத்திக் கொண்டால் அது தவறா? என்ற கேள்வியை சிலர் எழுப்பலாம். இருப்பினும் வயது வரம்பு என்று ஒன்று இருக்கிறது.

தன்னுடைய மகள், தன்னுடைய தோளுக்கு சமமாக வளர்ந்த பின்பு அலங்காரத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லை. அந்த அலங்காரத்தினை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று தான் சொல்லப்பட்டுள்ளது. நன்றாக புரிந்து கொள்ளுங்கள்! வயதுக்குத் தகுந்த உடையும், அலங்காரமும் மிக மிக முக்கியம். இது தாய்க்கும் சொல்லப்பட்டுள்ள வரக்கூடாத எண்ணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது தந்தை. தந்தையாகப்பட்டவர் என்றைக்கும் தன்னுடைய மகனைப் பார்த்து போட்டி பொறாமை கொள்ளக்கூடாது. எல்லா தாய்மார்களும், தந்தைமார்களும் தங்களுடைய குழந்தையைப் பார்த்து போட்டி பொறாமை படமாட்டார்கள். ஆனால் சில பேர் உள்ளார்கள். அவர்களுக்குக சொல்லப்பட்டுள்ள சாஸ்திர குறிப்புகள் தான் இவை.

சில தந்தையர் தன்னுடைய மகனைப் பார்த்து போட்டியும் பொறாமையும் கொள்வார்கள். தன் மகனைப் போல ஜீன்ஸ் டி-ஷர்ட் போட்டுக்கொள்ள வேண்டும். தன் மகனைப் போல கூலர்ஸ் அணிந்துகொள்ள வேண்டும். என்றெல்லாம் நினைப்பார்கள். இதை தவறு என்று சொல்ல வரவில்லை. உங்களுக்கு ஆசை இருந்தால் நீங்கள் அதை அணிந்து கொள்ளலாம். இருப்பினும் உங்கள் மகன் அணியும் போது அதை பார்த்து அதை பிரதிபலிப்பது என்பது தவறு என்று சொல்கிறது. முடிந்தவரை இந்த குணம் உங்களிடம் இருந்தால் அதை மாற்றிக் கொள்ள பழகுங்கள். தன்னுடைய மனைவி, தன் மகனுக்கு சமைத்து வைக்கும் உணவைப் பார்த்து கூட பொறாமைப்படும் சில தந்தைமார்கள் இந்த உலகத்தில் உள்ளவர்கள் என்று சொன்னால் அது பொய்யாகாது. எல்லோரையும் குறை கூறவில்லை. தவறு செய்யும் சில பேர்கள் உள்ளார்கள் அல்லவா? அவர்களுக்காகத் தான்.

மூன்றாவதாக சொல்லப்படுவது குரு. குரு ஸ்தானத்தில் உள்ளவர்கள் தெய்வத்தை விட மேலானவர்கள் என்பதை நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த வரிசையில் உள்ள சிலர் தன்னுடைய மாணவனின் அதீத திறமையைப் பார்த்து பொறாமை அடைவார்கள். குருவிற்கு தெரியாத கேள்வியை ஒரு மாணவன் கேட்டுவிட்டால், அவனை திட்டி அடக்கி விடுவார்கள். ‘இதுவரை நான் கூட இந்த கேள்வியை யோசித்ததே இல்லை. நீ யோசித்து உள்ளாய் என்ற எண்ணத்தில்’ அந்த மாணவனை திட்டி விடக் கூடாது.

அந்த மாணவனை பாராட்டி அந்த கேள்விக்கான விடையை, ஆசிரியர் தான் தேடி தரவேண்டும். ஆசிரியரை விட அதிகப்படியான ஆற்றல் உடைய ஒரு மாணவனைப் பார்த்து எந்த ஒரு ஆசிரியர் பெருமைப்பட்டுக் கொள்கிறோ, அவரே முழுமையான குரு ஸ்தானத்தை பெறுகின்றார். தன்னுடைய மாணவனின் அறிவு திறன் அதிகமாக இருக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டு, அவனை மேம்படுத்தும் குருவே சிறந்த குருவாக சொல்லப்படுகிறார். தயவுசெய்து குருமார்கள் தங்களுடைய மாணவர்களின் அறிவுத் திறமையை பாராட்ட வேண்டுமே தவிர, பழிக்கவே கூடாது என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ‘ஆசிரியரான என்னைவிட, நீ சிந்திப்பதில் மிகவும் திறமை உள்ளவனாக இருக்கின்றாய்’ என்று அந்த மாணவனை மனதார பாராட்டும் குருவே சிறந்த குரு.

இவை மூன்றும் நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ள சாஸ்திர குறிப்புகள். சற்று சிந்தித்து, ஆழ்ந்து யோசித்தால் இதில் உள்ள அர்த்தங்கள் எல்லோருக்கும் புரியும். இந்த தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் இன்றிலிருந்தே ஒரு உறுதிமொழியை உங்களுக்குள் எடுத்துக்கொண்டு, தவறுகளை திருத்திக் கொண்டால் உங்களுக்கான பாவங்கள் எதுவும் வந்து சேராது என்பது குறிப்பிடத்தக்கது. மாதா பிதா குரு இவர்கள் மூவருக்கும், இந்த குறிப்பிட்ட எண்ணங்கள் வரவே கூடாது என்று, நான்காவது இடத்தில் இருக்கும் அந்த தெய்வத்திடம் பிரார்த்தனை செய்துகொண்டு, இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

2 ) சுடலைமாட சுவாமி அவதரித்தல்.!!

தில்லைவனத்தில் வந்தமர்தல்

தில்லைவனம் (சிதம்பரம்)

61 மாடன்களை வழிநடத்த அவர்களுக்கு முதன்மை மாடனாக சிவனே, சுடலைமாடனாக அவதரித்தார்.

கயிலாய மலையில் வீற்றிருந்த சிவனிடம், பார்வதி தேவி  ‘‘சுவாமி, நீங்கள் படியளக்கச் சென்ற பின், நான் தனிமையில் இருப்பதை தவிர்க்க எனக்கு கொஞ்சி விளையாட குழந்தை ஒன்று வேண்டும். மூத்த பிள்ளை கணபதி, இளையவன் முருகன் இருவரும் பூலோகம் சென்று விட்டனர். ஆகவே என்னோடு கயிலையில் இருக்கும் வகையில் எனக்கு குழந்தை வேண்டும்.’’

"தேவி இனி உனக்கு குழந்தை வரம் தந்தால் அந்த குழந்தை கெட்ட ஆவிகளிடமிருந்து பூலோக மக்களை காக்கும் பொருட்டு, மாந்த்ரீக சக்திகளை தடுக்கும் பொருட்டும் அதன் பிறவி இருக்கும். மேலும் அந்த குழந்தைக்கு ஆவிகளை வெல்லும் வரம், கொல்லும் வரமும் இருக்கும். அதனால் அதற்கு கொடூர குணங்கள்தான் இருக்கும். அந்தக் குழந்தையால் இனி பெருமை இருக்காது, சிறுமைதான் இருக்கும்" என்றார். ‘‘எப்படி இருந்தாலும் பரவாயில்லை எனக்கு குழந்தை வரம் வேண்டும்.’’ என்றார் பார்வதி தேவி.

"சரி ஆகட்டும். கயிலாய மலையில் உள்ள முப்பத்திரண்டாவது மரகத தூணில் உள்ள மணி விளக்கில் தீபம் ஏற்றி அதன்முன், என் நாமம் சொல்லி தவம் இருந்தால் உன் வேண்டுதல் பலிக்கும்" என்றார் ஈசன்.

அதன்படியே தேவியும் தவத்தில் ஆழ்ந்தார். சிறிது நேரத்திற்கு பின் விளக்கில் ஒளிமங்கி இருள் சூழ்ந்தது. அப்போது சிவன் வந்து மணி விளக்கை தூண்டினார். விளக்கின் சுடரிலிருந்து மூன்று சுடர்கள் தேவியின் மடியில் விழுந்தன. முன் வந்த சுடர் முண்டமாக கை, கால்கள், கண், மூக்கு, செவிகள் இன்றி இருந்தது.

"அந்த முண்டத்தை எடுத்து தனியே வைத்து விட்டு மீண்டும் விளக்கின் முன் வந்து அமர்ந்து கொள்." என்றார். தேவியும் அதற்கிணங்க மீண்டும் மரகத விளக்கின் முன் வந்து அமர்ந்தார். விளக்கின் சுடரை சிவன் தூண்டினார். அப்போது சடைமுடியோடும், நீண்ட நாக்கோடும் சுடலை பேச்சி பிறந்தார். ‘‘சுவாமி என்ன இது? நான் பிள்ளை வரம் கேட்டதற்கு இப்படி செய்கிறீர்களே’’ என்று ஆதங்கத்துடன் கேட்டார் பார்வதி தேவி. மீண்டும் மரகத விளக்கின் சுடரை, சிவனார் தூண்ட ஓர் ஆண்குழந்தை அழகாகத் தோன்றியது. "இந்த குழந்தை சுடரில் பிறந்தமையால் சுடலை என்று அழைக்கப்படுவான்’’ என கூறினார்.

முன்பிறந்த முண்டனுக்கு பிரம்மனை வரவழைத்து  உருக்கொடுத்து, முண்டனையும், சுடலைபேச்சி இருவரையும் பூலோகம் செல்லுமாறு சிவன் ஆணையிட்டார். அதன்படி அவர்கள் பூலோகம் வந்தனர்.

கயிலாய மலையில் மாணிக்கத்தொட்டிலில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சுடலை, ஆங்கார ரூபம் கொண்டு காளை மாட்டை வாகனமாக்கி மயானம் சென்றார். அங்கு எரிந்து பிணத்தை தின்றுவிட்டு மீண்டும் வந்து தொட்டிலில் படுத்துக் கொண்டார். குழந்தை பசியோடு தூங்குகிறானே என்றெண்ணிய உமாதேவி,  குழந்தை சுடலையை தொட்டிலிலிருந்து கையில் எடுத்தார். அப்போது குழந்தையின் வாயில் மாமிச வாடை அடித்தது. அப்படியே தொட்டிலில் போட்டுவிட்டு, சிவனை நோக்கி சென்றார் தேவி. ‘‘சுவாமி நான் பிள்ளை வரம் கேட்டதற்கு மாமிசதின்னியை தந்து விட்டீர்களே!’’ என்று கேட்டுப் பதறினார்.

"குழந்தை இப்படித்தான் பிறக்கும் என்று நான்தான் அப்போதே கூறினேனே," என்றார் சிவன்.

‘‘அதற்காக இப்படியா? மாமிசம் சாப்பிடுகிற குழந்தை இனி ஒரு நிமிடம் கூட கயிலாயத்திற்கு ஆகாது,’’ என்று உறுதியாகச் சொன்னர் பார்வதி. ‘‘இப்படியா திருவிளையாடல் புரிவது?’’

சுடலையை அழைத்த சிவன், ''நீ பூலோகம் செல். கெட்ட ஆவிகளிடம் இருந்தும், மாந்த்ரீக சக்திகளிடமிருந்தும் மக்களை காத்து நில். அதற்கு உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்" என்றார்.

'இந்த வையகத்தில் என்னென்ன மலர்கள் உண்டோ அவற்றினால் என்னை அலங்கரித்து, ஒரு கோட்டை அரிசியில் உணவு சமைத்து ஒரே படையலாய் படைக்க வேண்டும். முட்டை முதல் முருங்கை வரை அதில் இருக்க வேண்டும். மேலும் எனக்கு கொல்லும் வரம், வெல்லும் வரம் என்னை நம்பி வரும் பக்தர்களை மேன்மையாக்கும் வரம், அவர்களுக்கு எல்லா வளங்களையும் அளிக்கும் வரம் வேண்டும். நானும் உங்கள் மைந்தன்தான் என்பதை வையகம் அறிய வேண்டும்.’’ என்றார் சுடலை. 

ஈசன் அவ்வாறே வரங்கள் அளித்த பிறகு, சுடலைமாடனுக்குக் கயிலையில் விழா நடந்தது. சிவன், பார்வதி, பிரம்மன், கலைமகள், மகாவிஷ்ணு, லெட்சுமி, இந்திரன் முதலான தேவர்களும் விழாவிற்கு வந்திருந்தனர்.  சிம்மாசனத்தில் சுடலைமாடனை அமர்த்தினார் சிவன். படையல்  விழா (கொடை விழா) நடந்தது. பாகற்காய் நீங்கலாக ஏனைய காய்கள் கொண்ட உணவு சமைக¢கப்பட்டு, படையல் செய்யப்பட்டது.

'நான் நின்றபடியே படையலை ஏற்கிறேன். எனக்கு ஆசனம் வேண்டாம்' என்றார் சுடலைமாடன். பிறகு சிவனிடம், 'அய்யனே படையலையும், விழாவையும் கண்டு மகிழ்கிறேன். வீணை முதலான இசைக் கருவிகள் வாசிப்பதை நிறுத்த சொல்லுங்கள். எனக்கு கரும்கொம்பு இசைக்க வேண்டும், தாரை தப்பட்டைகள் முழங்க வேண்டும், நையாண்டி மேளமும், நாதஸ்வரமும் இசைக்கவேண்டும். என் பிறப்பை குறித்து, என்னைப்போற்றி இசைபாடவேண்டும். அதுவும் வேகமாக பாடவேண்டும். அந்த இசையில் மணிஓசையே அதிகமாக ஒலிக்க வேண்டும். அதற்கு சிலர் ஆடவேண்டும். ஆடுபவர்கள் பெண் உருவாக இருக்க வேண்டும். ஆனால் பெண்ணாக இருக்ககூடாது' என்றார்.

"அப்படியே ஆகட்டும்." என்றார் சிவன்.

சுடலைமாடன் கேட்ட இசைக்கருவிகள் வரவழைக்கப்பட்டது. ஆனால் அதை தேவலோகத்தில் உள்ளவர்களால் இசைக்க முடியவில்லை, பூத கணங்கள் வரவழைக்கப்பட்டு இசைக்கப்பட்டது. மாடன் கேட்டபடி நடனம் புரியும் நபர்களை எங்கே தேடுவது என்று, சிவன், விஷ்ணுவை அனுகினார். என்னசெய்வது என்று யோசிக்கும் போது, பிரம்மன் கூறினார். ‘‘மகாவிஷ்ணு இருக்கிறாரே’’, என்றதும். மகா விஷ்ணு பெண் அவதாரம் கொண்டார். அப்போது சுடலைமாடன், மாமா நீங்கள் பெண்ணாக மாறிவிட்டீர்கள் இது கூடாது. பெண் உடல், ஆண் மனம் அப்படித்தான் இருக்க வேண்டும் என்றார். உடனே பெண்ணாக மாறியிருந்த விஷ்ணுவுடன், சிவன் இணைந்தார். சங்கரநாராயணன் மூன்றாம் பாலினத்தவராக உருமாறி ஆடினர். சுடலைமாடனும் அவர்களுடன் நடனம் ஆடினார். ஆட்டம் உச்சத்தில் மாடன் ஆங்கார ரூபத்துடன் ஆதாளி போடலானார். சற்றும் எதிர்பாராத சங்கரநாராயணன், சுடலைமாடனை சாந்தப்படுத்தவேண்டும் என்பதற்காக ஆங்காரமாக ஆடினார். ஆங்கார ரூபம் கொண்டு ஆடும்போது அய்யனின் கால் சலங்கையில் இருந்து முத்து ஒன்று சிதற, அதிலிருந்து உதித்தான் கணியான். அவன் தனது கையில் கீறி இரத்தம் மூன்று சொட்டு விட, சுடலையின் ஆங்காரம் தணிந்தது.

பின்னர் 'அய்யனே நான் பூலோகம் செல்கிறேன். எனக்கு இப்படி விழா எடுத்தால் நான் அந்த இடத்தில் பரிபூரணமாக வருவேன். மகிழ்வேன். முக்கியமான ஒன்று என் விழாக்களுக்கு நீங்கள் அனைவரும் வரவேண்டும். அப்போதுதான் நான் சாந்தமாவேன் என்றார் மாடன்.' 

"மாவீரன் நீ, அப்படி கூற கூடாது. பூலோகத்தில் உனக்கு நடக்கும் ஒவ்வொரு விழாவிற்கும் எங்களால் பங்கேற்க முடியாது. ஆனால் நிச்சயமாக நாங்கள் வருவோம்."

'அது எப்படி?' எனக்கேட்டார் சுடலைமாடன்.

"சொல்கிறேன். விழாவின்போது மணிக்கு ஒரு தரம் என்னிடம் பேசுவாய். ஆகவே நான் உன் முகத்தின் அருகே இருப்பதற்கு சமமாக என்னால் சபிக்கப்பட்ட தாழம்பூவை உன் இரு செவிகளோரம் உன்னை பூஜிப்பவர்கள் வைப்பார்கள். நீ மூலவனாக இருக்கும் இடங்களில் மட்டும் உன் படையலில் அந்த தாழம்பூ முக்கியத்துவம் பெறட்டும்,’’ என்றார்.

தன் முடியைக் கண்டதாக பிரம்மன் பொய் சொன்னதற்கு சாட்சியாக நின்றதால் தாழம்பூவை தன் பூஜைகளில் நிராகரித்தார் ஈசன். வேதனையுற்ற தாழம்பூவிடம் பிரம்மன் காஞ்சியில் அருள்பாலிக்கும் ஏகாம்பரஸ்வரரை தரிசித்து வந்தால் அதன் சாபம் தீரும் என ஆறுதல் அளித்தார். அதன்படி தாழம்பூ சிவனை பூஜிக்க, சிவன் தோன்றி எனது மற்றொரு அவதாரத்தில் நீதான் முக்கியத்துவம் வகிப்பாய் என்று அருளினார். அதன் படி சிவனின் மாடன் அவதாரத்தில் தாழம்பூ முக்கியத்துவம் பெறுகிறது.

‘‘பிரம்மன் நினைவாக வெட்டி வேரும், மகாவிஷ்ணுவின் நினைவாக துளசியும், உன் தாயின் நினைவாக வேப்பிலையும், மகாலெட்சுமியின் நினைவாக செந்தாமரையும், சரஸ்வதியின் நினைவாக வெண் தாமரையும், உனக்கு படைக்கப்படும். அதை வைத்து நாங்கள் அங்கே வந்திருக்கிறோம் என்று தெரிந்து கொள்,’’ என்று ஈசன் மாடனிடம் தெரிவித்தார்.

சிவனும், பெருமாளும் இணைந்து சிவனினைந்த பெருமாளாகவும், சிவனும், பிரம்மனும் இணைந்து பிரம்மராக்கு அய்யனாகவும், கலைமகள், அலைமகள், மலைமகள் மும்மகளும் ஒருமகளாக பிரம்மராக்கு சக்தியாகவும் உருமாறி பூலோகம் வந்தனர். பூலோகத்தில் தில்லைவன காட்டிற்கு சுடலைமாடன் வந்தார்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரமே முன்பு தில்லைவனம் என்று அழைக்கப்பட்டது. தில்லைச் செடிகள் நிறைந்த காடாக இருந்தமையால் இத்தலம் தில்லைவனம் எனப்பெயர் பெற்றது. இங்கு சக்தி ஆங்கார ரூபத்தில் காளியாக வீற்றிருக்கிறாள். தில்லைவன காட்டில் இருந்ததால் தில்லைக்காளி என்று அப்பகுதியினர் அழைத்தனர்.

தில்லை காளியம்மன் கோயிலில் தாயின் சந்நதியில் வெளிப்பிராகாரத்தில் காவல் தெய்வமாக வீரனார் என்ற பெயரோடு சுடலை மாடன் வந்தமர்ந்தார். இலுப்பை மரத்தின் கீழ் வீரனாருக்கு தனிக்கோயில் அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் அவருக்கு பூஜை ஏதும் இன்றி இருந்தது. இடைக்காலத்தில் புதிதாக சுற்றுச்சுவர் கட்டப்பட்டு, தகரத்தால் மேற்கூரை அமைத்து, சிறிய அளவில் ஆலயம் எழுப்பப்பட்டது. இங்கு மூலவராக உருவமற்ற கருங்கல்லாக வீரனார் கிழக்குப்பார்த்து வீற்றிருக்கிறார். அவரை 2 சிங்க முக புடைப்புச்சிற்பங்கள் தாங்குகின்றன. கருவறை இல்லை, வீரனாரின் வலது பக்கம் 3, இடது பக்கம் 5 என நாகர்சிலைகள் உள்ளன. வடக்குப் பார்த்த சிமென்டால் ஆன சுதை சிலை. அமர்ந்த நிலை. தலையில் கிரீடம் அணிந்து வலது கையில் வாள், இடது கையில் கேடயமும் கொண்டு இடது காலை மடித்து, வலது காலை தொங்க விட்டபடி வீரம் செறிந்த உடலோடும், வெற்றிப் புன்னகையோடும் அருள்பாலிக்கிறார். இடுப்பில் வேட்டி. காலில் தண்டை அணிந்திருக்கிறார். அருகில் நாய் ஒன்று படுத்திருக்கிறது. நுழைவாசலில் வீரனாரின் வாகனமான இரு வெள்ளைக் குதிரை சுதை சிற்பங்கள் ஒன்றையொன்று பார்த்தபடி நிற்கின்றன. சத்ருக்களின் பகை நீங்கவும், வீண்பயம் மறையவும், எதிர்மறை எண்ணங்கள் அகலவும் வீரனாருக்கு எலுமிச்சை மாலை சாத்தி வெள்ளிக்கிழமை வழிபடுகிறார்கள். 

வீரனார் கோயில் சிதம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து ஒன்றரை கி.மீ. தூரத்தில் உள்ள தில்லைக்காளியம்மன் கோயில் அருகே அமைந்துள்ளது...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

1 ) சுடலைமாடன் அவதாரம் ஏன்? எப்படி?அறுபத்தோரு மாடன்கள் பிறப்பு.!!

பூலோகத்தில் மீண்டும் மந்திர சக்தியின் ஆதிக்கம் மேலோங்கியது. இதை கவனித்த தேவர்கள் பிரம்மனிடமும், மகாவிஷ்ணுவிடமும் முறையிட்டனர். அவர்கள் சிவனிடம் கூறினர். ‘‘சுவாமி, பூலோகத்தில் துர் மரணம் அடைந்தவர்களின் துஷ்ட ஆவிகள் ஆதிக்கம் செலுத்துகிறது. அதுமட்டுமன்றி மீண்டும் மந்திர சக்தி மேலோங்குகிறது. இதை உடனே தடுக்காவிட்டால் படைத்த உயிர்களை எப்படி காப்பது?’’ என்று கேட்டபோது,  ‘மாந்த்ரீக சக்திகளுக்கு முடிவு கட்டவும், துஷ்ட ஆவிகளின் கொட்டம் அடக்கவும், விரைவாக தீர்வு காண்போம்’ என்று கூறிய சிவன்,  மந்திர மூர்த்தியாக அவதாரம் எடுக்க முடிவு செய்தார். அதன் காரணமாக சிவன் 61 மாடன்களையும், மாடத்திகளையும் உருவாக்கினார். அவர்கள் தான் சிவனின் இயக்கியர்களாக (சேவர்களாக) செயல்பட்டனர். அவர்களே சிறு தெய்வங்களில் முதன்மையானவர்களாக திகழ்ந்தனர்.

61 மாடன்கள்
1. அருவாமாடன், 2. அத்திமாடன், 3. அகழிமாடன், 4. அக்னி மாடன், 5. அடுப்படிமாடன், 6. அன்னமாடன், 7. அரிமுத்து மாடன், 8. அரகுலமாடன், 9. அரையடிமாடன், 10. அரசடி மாடன், 11.ஆண்டிமாடன், 12. ஆவேசமாடன், 13. ஆகாச மாடன், 14. ஆலடிமாடன், 15. இசக்கிமாடன், 16. ஈனமாடன், 17. ஈனமுத்துமாடன், 18. உடுக்கைமாடன், 19. உறிமாடன், 20. உதிரமாடன், 21. ஊசிக்காட்டுமாடன், 22. எசமாடன், 23. ஏறுமாடன், 24. ஒளிமுத்துமாடன், 25. ஒய்யாரமாடன், 26. ஓங்காரமாடன், 27. கசமாடன், 28. கரடிமாடன், 29. சக்தி மாடன், 30. சிவமாடன், 31. பன்றிமாடன், 32. பரன்மாடன், 33. படித்துறைமாடன், 34. தேரடிமாடன், 35. குளக்கரை மாடன், 36. கிணத்தடிமாடன், 37. வேம்படிமாடன், 38. பனையடிமாடன், 39. மடையடிமாடன், 40. கரையடிமாடன், 41. செக்கடிமாடன், 42. தெப்பக்குளத்துமாடன், 43. வயக்கரை மாடன், 44. வாழைமரத்தடிமாடன், 45. சுடுகாட்டுமாடன், 46. நல்லமாடன், 47. நடுக்காட்டுமாடன், 48. வண்டிமாடன், 49. முச்சந்திமாடன், 50. சந்தையடிமாடன், 51. வண்ணாரமாடன், 52. வெள்ளாவிமாடன், 53. அணைக்கரைமாடன், 54. சப்பாணிமாடன், 55. கொம்புமாடன், 56. கொடிமரத்து மாடன், 57. தூசிமுத்துமாடன், 58. குதிரமாடன், 59. பிச்சிப்பூ மாடன், 60. பூக்குழிமாடன். 61. பேச்சி மாடன் என 61 மாடன்கள் பிறவி எடுக்கச் செய்தார் சிவன். தளவாய் மாடன், புல மாடன் இந்த இருவரும் 61 மாடன்களில் இல்லை.

தக்கராஜன் தளவாய் மாடனாகவும், புலையன் மகன் புல மாடனாகவும் வணங்கப்படுகின்றனர்.
ஒரு முறை கயிலாயத்தில் உமா தேவி, பக்தனின் இசைக்கு தன்னையறியாமல் நடனமாடினார். இதை கண்ட சிவபெருமான். உலகையே அடக்கி ஆளும் உமையவள் தன்னை அடக்கிக் கொள்ளாமல் இசைக்கு மயங்கி ஆடியதால் இசக்கி என்ற பெயரோடு மானிட பிறவி எடுக்க வேண்டும் என்று சபித்தார். உடனே தேவி உங்களது உடலில் பாதியை பெற்றதன் காரணமாக எனக்கும் சக்தி உண்டென்பதை அறியாமல் வார்த்தைகளை விதைக்கிறீர்கள். அவ்வாறு நான் பிறவி எடுக்கும் போது. சுடலை வனத்தை காக்கும் மாடனாக தாங்கள் பிறவி எடுத்து சுட்ட பிணத்தையும் திங்கும் பிறவியாக திரிய வேண்டும் என்று பதிலுக்கு சபித்தார். தேவி.
அதன்படியே சுடலைமாடன் அவதாரம்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

உங்கள் சம்பாத்தியத்தை பார்த்து உங்களை சுற்றி உள்ளவர்கள், கண்திருஷ்டி வைக்கிறார்களா? அந்த திருஷ்டியை போக்க 5 மிளகு போதும்.!!

மிகவும் கஷ்டப்பட்டு நேர்மையான முறையில் உழைத்து சம்பாதித்தாலும் கூட, அந்த பணமானது சில பேர் கையில் தங்காது. இதற்கு காரணம் அவர்களை சுற்றி இருப்பவர்கள் வைக்கும் கண் திருஷ்டி தான். அந்த பணத்தை சம்பாதிக்க நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்போம் என்பது, நமக்கு மட்டும்தான் தெரியும். ஆனால் பார்ப்பவர்களுக்கு நாம் பட்ட கஷ்டங்கள் கண்ணுக்குத் தெரியாது. நம் கையில் இருக்கும் பணம்தான் பளிச்சென்று தெரியும். இதன் மூலம் வரக்கூடிய வருமானத்தை முழுமையாக அனுபவிக்கும் சூழ்நிலை கூட சிலருக்கு ஏற்படாது.

அதாவது அந்த வருமானத்தை வைத்து, புதிய பொருட்கள் ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ முடியாமல், யாருக்கும் தெரியாமல் பொத்தி பொத்தி வைப்பார்கள். எவ்வளவு நாள் தான் இப்படியே இருப்பது என்று எண்ணி, அந்த பணத்தை வைத்து ஏதாவது ஒரு பொருளை வாங்கி விட்டால் அவ்வளவுதான். சுற்றியிருப்பவர்கள் கண்களாலேயே சுட்டு விடுவார்கள். பெரிய பெரிய பணக்காரர்கள் எல்லாம் வாழவில்லையா? என்ற கேள்வி சிலருக்கு எழலாம். ஆனால், அவர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள பரிகாரம் செய்கிறார்களா? இல்லையா? என்பதை நாம் சென்று ஆராய்கிறோமா? இல்லையே! அவரவர் பாதுகாப்பிற்காக அவரவர் சில பரிகாரங்களை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால் சில பரிகாரங்களை செய்து தான் ஆக வேண்டும். அடுத்தவர்களின் வயிற்றெரிச்சல் நம் மீது படாமல் இருக்க என்ன செய்யலாம் என்பதைப் பற்றிய ஒரு சுலபமான பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

முதலில் 5 மிளகை உங்களது உள்ளங்கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டும். உங்கள் வீட்டு வாசலுக்கு சென்று, கிழக்கு நோக்கியவாறு நின்று, உங்களுடைய தலையை ஏழு முறை இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும், சுற்ற வேண்டும். இறுதியாக மேலும் கீழுமாக 7முறை ஏற்றி இறக்க வேண்டும். அதன்பின்பு கையில் இருக்கும் 5 மிளகில், நான்கு மிளகுகளை 4 திசைகளிலும் தூக்கி வீச வேண்டும். கிழக்குப் பக்கம் ஒரு மிளகு, மேற்குப் பக்கம் ஒரு மிளகு, வடக்கு பக்கம் ஒரு மிளகு, தெற்கு பக்கம் ஒரு மிளகு. மீதம் உள்ள ஒரு மிளகை வானத்தை நோக்கி மேல் பக்கமாக தூக்கி வீசிவிட வேண்டும்.

இந்த மிளகை எவ்வளவு தூரமாக தூக்கி எறிகிறார்களோ அவ்வளவு தூரம் கண்திருஷ்டி உங்களை விட்டு விலகி ஓடி விடும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இந்த பரிகாரத்தை அமாவாசை அன்றோ அல்லது ஞாயிற்றுக்கிழமை அன்றோ செய்யலாம். மாலை 6.30 மணிக்கு மேல் எப்போது வேண்டுமென்றாலும் செய்து கொள்ளலாம். வீட்டு வாசலுக்கு வெளியே, சென்று செய்யக்கூடிய பரிகாரம் என்பதால், உங்கள் தெருவில் ஜன நடமாட்டம் அடங்கிய பின்பு கூட, இரவு 10 மணிக்கு மேல் செய்து கொள்ளலாம்.

வீட்டில் மட்டும்தான் இந்த பரிகாரம் செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் கண் திருஷ்டி இருந்தால் கூட, தொழில் செய்யும் அந்த நபர், இந்த பரிகாரத்தை அவர் கடை வாசலிலோ, அலுவலக வாசலிலோ செய்வதில் தவறில்லை. கடையை அடைக்கும் போது அந்த கடையின் உரிமையாளர் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

குழந்தைகளுக்கும் கண் திருஷ்டியின் மூலம் பிரச்சினைகள் வரும். அப்படி இருக்கும் பட்சத்தில் குழந்தையின் தாய், இந்த பரிகாரத்தை குழந்தைக்கு செய்தாலும் நல்ல பலன் உண்டு. நம்பிக்கையுள்ளவர்கள் நம்பிக்கையாக ஒரே ஒரு முறை இந்த பரிகாரத்தை செய்து பலனை அனுபவித்துப் பார்த்தால் மட்டுமே பலனை உணர முடியும்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

ஐயப்பன் வரலாறு(வல்லரக்கன் கதை) இந்த கதையை பாடிய பின்னர்தான் சுடலை கதையை பாட வேண்டும் என்பது வில்லிசை, மகுட கலைஞர்களின் மரபு. அதற்கு காரணம் உண்டு அடுத்த பதிவில் சந்திப்போம் இப்போது கலியுக தெய்வம் ஐயப்பன் வரலாறை பார்ப்போம்.!!

அரக்க வம்சத்தின் மன்னன் சகன். இவனுக்கு மகனாக பிறந்தான், ஸ்ரீ பத்மன். இவன் தான் வல்லரக்கன் என்று அழைக்கப்பட்டான்.சிறுவயது முதல் அவன் மனதில் பெரும் தாக்கம் எழுந்தது. அது தமது அரக்கர் வம்சம் பல வழிகளில் திறமைகொண்டு உயர்ந்தாலும் இறுதியில் தேவர்களால் தாக்குண்டு அவர்கள் அழிக்கப்படுவதை கண்டும், கேட்டும் அறிந்த அவன், எந்த தேவர்களாலும், இறைவனே வந்தாலும் தன்னை அழிக்க கூடாது என்ற வரத்தை நாம் பெற வேண்டும்.

மூவுலகையும் நாம் ஆளவேண்டும் என்றெண்ணினான்; சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தான். அவன் தவத்தால் மகிழ்ந்த ஈசன் அவன் முன் தோன்றினார். ‘என்ன வரம் வேண்டும் கேள்?’ என்றார். ஸ்ரீபத்மன் கூறினான்: “நான், யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் எரிந்து சாம்பலாக வேண்டும். எவர் கையாலும் நான் சாகக் கூடாது!’’ சிவனும் அவன் விருப்பப்படியே வரம் அளித்தார். வரம் பெற்ற பத்மன். உண்மையிலேயே இந்த வரம் பலிக்குமா என்று கேட்டபடி சிவனார் தலையிலேயே கையை வைக்க முற்பட்டான். சிவனை அழிக்க முடியாது. இருப்பினும் தான் அழியவில்லை என்றால் அவர் கொடுத்த வரம் பொய்யாக கூடும். அதனால் அந்த சூழ்நிலையில் இருந்து தப்பித்துக்கொள்ள சிவன், அரளிக்காயினுள் சென்று மறைந்து கொண்டார்.

ஸ்ரீபத்மன், தனக்கு பயந்து சிவன் மறைந்து கொண்டிருக்கிறார் என்று கர்வம் கொண்டு அவரைத் தேடி அலைந்து திரிந்து கொண்டிருந்தான்.
அந்த வேளையில் மஹாவிஷ்ணு, அழகிய மோஹினி உருவமெடுத்து, ஸ்ரீபத்மன் முன் தோன்றினார். மோஹினியின் அழகில் மயங்கிய அசுரன் ஸ்ரீபத்மன், சிவனை தேடுவதை விட்டு, மோஹினியை அடைய ஆவல் கொண்டான். தான் பெற்ற வரத்தைப் பற்றி மோஹினியிடம் கூறி தற்பெருமை கொண்டிருந்தான். உடனே மோஹினி “மன்னா, வரம் பெற்றால் மட்டும் பயன் தருமா, அதற்கு மந்திரத்தை கூறியபடி நியாசம் செய்ய வேண்டும்,’’ என்றாள். நியாசம் என்றால், உடல் அங்கங்களைத் தொட்டபடி அதற்கு உரிய மந்திரத்தை உச்சரித்தல்.

‘‘அப்படியா! இப்போதே செய்கிறேன்,’’ என்று கூறி கம்பீரமாக அமர்ந்து நியாசம் செய்யத் தொடங்கினான் அசுரன். அப்படிச் செய்யும் போது ‘சிரஸே ஸ்வாஹா’ என்று கூறி தன் தலையில் கையை வைத்துக்கொண்டான். அடுத்த கணம் அவன் உடம்பு எரிந்து சாம்பலானது. ஸ்ரீபத்மன் என்ற பத்மாசுரன் பஸ்மமாக போனான். அதனாலேயே பஸ்மாஸுரன் என்றும் அழைக்கப்பட்டான். அசுரன் அழிந்ததை அறிந்து, சிவன் அரளி காயிலிருந்து வெளியே வந்தார். அப்போது அழகிய மோஹினி வடிவில் நின்ற மகாவிஷ்ணுவை கண்டார்.

அவள் அழகில் மயங்கி அவளை நெருங்கினார். ஓட முற்பட்ட மோஹினியின் கரம் பற்றி இழுத்து மார்போடு அணைத்துக் கொண்டார். ஹரிஹர சக்திகள் ஒன்றாகியதன் காரணமாக ஹரிஹரன் ஐயப்பன் பிறந்தான்.

கழுத்தில்- கண்டத்தில் மணி இருந்தமையால் மணிகண்டன் என அழைக்கப்படலானார். மஹாவிஷ்ணு தசவதாரம் எடுத்தாலும் அவர் ஒருவரே. ஆனால், இங்கு சாஸ்தா, அய்யனார், ஐயப்பன் மூவரும் ஒரே சக்திதான் என்றாலும் அந்த அவதாரங்கள் பூலோகத்திலுள்ள அக்கிரமங்களை ஒடுக்கவும், மக்களை காக்கவும் எடுக்கப்பட்டவைதான்.  மூன்று அவதாரமும் வெவ்வேறு நிகழ்விலே உருவானது. சாஸ்தா யானை வாகனத்துடன் கையில் சாட்டையுடன் இருப்பார். அய்யனார் குதிரை வாகனத்தில் கையில் அரிவாள் கத்தியுடன் காட்சி தருவார். ஐயப்பன் புலி வாகனத்தில் கையில் வில் அம்புடன் எழுந்தருள்வார்.

மூவரும் நினைத்த இடத்தில் நினைத்த நேரம் வந்தருளும் தெய்வங்களாக மக்களோடு மக்களாய் இருந்து, அவர்களது வாழ்வில் அங்கம் வகிக்கும் நம்மூரு சாமிகளாய் அருளாட்சி செய்து வருகின்றனர். பலருக்கும் குல தெய்வமாக இருப்பது சாஸ்தா மற்றும் அய்யனார்தான். அதை விட பூலோக தெய்வ சக்திகளுக்கு தலைவனாகவும், அவர்களை வழிப்படுத்தி, சாந்தப்படுத்தி, நெறிப்படுத்தி மக்களை காக்கும் பொருட்டு வழிவகை செய்யும், ஆசானாக இருப்பதும் மஹா சாஸ்தாவும், அய்யனாரும் தான்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

ஒருவருக்கு கெடுதல் வரப்போகிறது, என்பதை முன்கூட்டியே தெரியப்படுத்தும் அறிகுறிகள் என்னென்ன?

சில பேர் கஷ்டத்தை நன்றாக அனுபவித்த பின்பு, தங்களுடைய ஜாதகத்தை கொண்டு போய், ஜோதிடரிடம் காட்டி, கெட்ட நேரம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வார்கள். பில்லி, சூனியம், ஏவல் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பின்புதான் நமக்கு ஏதோ ஒரு செய்வினை இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வார்கள். இதையெல்லாம் கஷ்டத்தை அனுபவித்த பின்பு தான் நாம் உணர்வோம். ஆனால் கஷ்டம் வருவதற்கு முன்பாகவே, சில அறிகுறிகள் மூலம், நமக்கு ஏதோ ஒரு கெடுதல் நடக்கப்போவது என்பதை தெரிந்து கொள்ள முடியும். இது எவரையும் பயமுறுத்த வேண்டும் என்பதற்காக சொல்லப்படக் கூடிய விஷயம் அல்ல. பிரச்சனை வரப்போகிறது என்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்டால், உஷாராக இருந்து கொள்ளலாம் அல்லவா? அதற்காகத்தான். பிரச்சினையை முன் கூட்டியே தெரியப்படுத்தும் அந்த அறிகுறிகள் என்னென்ன என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம். 

தினம்தோறும் எவரொருவர் தன் வீட்டு குல தெய்வத்தை மறக்காமல் வழிபடுகிறார்களோ, அவருக்கு வரப்போகும் கஷ்டமானது முன்கூட்டியே தெரிந்து விடும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. எந்த ஒரு ரூபத்திலாவது, உங்கள் வீட்டு குல தெய்வமே வந்து உங்கள் குலத்தை காக்கும். வருடத்திற்கு ஒருமுறையோ அல்லது இருமுறையோ குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபடுவது என்பது வேறு. தினம்தோறும் உங்களின் குலதெய்வம் பெயரை வீட்டில் தீபம் ஏற்றும்போது சொல்லி, அந்த குல தெய்வத்தை மறக்காமல் வழிபடுவது என்பது வேறு. குலதெய்வத்தின் அருள் ஒருவருக்கு இருந்தால் மட்டுமே எதிர்காலத்தில் வரக்கூடிய கஷ்டத்தை சுலபமாக சந்திக்க முடியும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. 

நடக்கப்போகும் கெட்டதை முன்கூட்டியே சொல்லும் அறிகுறிகள் என்னென்ன என்பதை சில சாஸ்திர குறிப்புகள் கூறியுள்ளது அவை பின்வருமாறு: என்றைக்கும் இல்லாமல் சில சமயங்களில் கருவண்டு ஒருவரது வீட்டை வலம் வந்து கொண்டே இருக்கும். எவ்வளவுதான் விரட்டி அடித்து கொண்டே இருந்தாலும், சில நேரம் கழித்து, திரும்பவும் வந்து அந்த வீட்டில் வட்டமிட்டுக் கொண்டே இருக்கும். இப்படி இருக்கும் பட்சத்தில் கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு கெட்டது நடக்கப் போகிறது என்பதை அறிவுறுத்துகிறது. அதன்பின்பு அந்த வண்டானது, வேகமாக அங்கு இருக்கும் ஏதோ ஒரு சுவற்றில் முட்டி அதே இடத்தில் கீழே விழுந்து கூட இறக்க நேரிடலாம். இப்படி ஒரு சம்பவம் உங்கள் வீட்டில் நேரிட்டால் நீங்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். 

அடுத்ததாக வௌவால்கள். இந்த வௌவால்கள் உங்கள் வீட்டில் அடிக்கடி வலம் வந்தாலும், கூடு கட்டினாலும் கட்டாயம் உங்களுக்கு மறைமுகமான எதிரிகள் மூலம் ஏதோ ஒரு ஆபத்து இருக்கிறது என்பதை குறிக்கிறது. அதாவது உங்கள் எதிரிகள் உங்களுக்கு செய்வினை வைக்க போகிறார்கள் அல்லது வைத்துள்ளார்கள் என்பதை அறிவுறுத்து வதற்கான சகுனம் இது. 

பொதுவாகவே, கழுதையை பார்த்தால் நல்ல சகுனம் என்று சொல்லுவார்கள். முந்தைய காலங்களில் எல்லாம் என்னைப்பார் யோகம் வரும் என்ற வாசகத்தோடு இரண்டு கழுதை உருவம் இருப்பதை நாம் பார்த்திருப்போம். அது நல்ல சகுனம் தான். ஆனால், நீங்கள் எதேர்ச்சியாக செல்லும்போது, உங்கள் முன்பு கால் உடைந்த நொன்டி கழுதை வந்தால் அது உங்களுக்கு வரக்கூடிய பெரிய ஆபத்தை முன்கூட்டியே சொல்லுவதாக அர்த்தம். அதாவது  உங்கள் வாழ்க்கையை கெடுப்பதற்கு ஏதோ ஒரு சதி நடந்து கொண்டிருக்கிறது என்பதை குறிப்பதாக சில சாஸ்திர நூல்களில் குறிப்புகள் சொல்லப்பட்டுள்ளது. 

அஷ்டமி திதியன்று அல்லது உங்களின் ஜென்ம நட்சத்திரத்தன்று அண்டங்காக்கா உங்கள் வீட்டில் கத்திக்கொண்டு இருந்தால் இதுவும் ஒரு அபசகுணம் தான். இந்த அறிகுறி உங்களுக்கு மறைமுகமாக ஏதோ ஒரு பிரச்சினை காத்துக் கொண்டிருக்கிறது என்பதை வலியுறுத்துகிறது. 

இவ்வாறாக சில குறிப்புகளில் சொல்லப்பட்டுள்ள சகுனங்கள் யாவும், யாரையும் பயமுறுத்துவதற்காக சொல்லப்பட்டது அல்ல. உங்களுக்கு வரப் வரப்போகும் கெடுதலை முன்கூட்டியே தெரிந்து கொள்வதன் மூலம், உங்கள் ஜோதிடரையோ அல்லது உங்களுக்கு தெரிந்த மாந்திரீகர்களையோ வைத்து என்ன கெட்டது இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டு, அதற்கான பரிகாரங்களை செய்வதற்காகத்தான் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

பாம்பு யாருடைய வீடுகளில் வரும் தெரியுமா? பாம்பை அடித்து கொன்றால் பழிவாங்க வரும் என்பது உண்மையா?

பாம்பு புற்றுக்கு பால், முட்டை எல்லாம் ஊற்றி வழிபாடு செய்தாலும் பாம்பு உங்கள் வீட்டில் வந்தால் அடித்து துரத்த தான் செய்வீர்கள். எது எது எங்கு இருக்க வேண்டுமோ? அங்கு இருந்தால் தான் அதற்கு மதிப்பு. மனிதர்கள் வாழும் வீடுகளில் பாம்பு நுழைவது சாதாரணமான விஷயம் அல்ல. உங்கள் வீட்டை சுற்றி காடுகளோ, காலி இடங்களோ, புதர்களோ மண்டிக் கிடந்தால் பாம்பு வருவது இயற்கையான விஷயம் தான். அதை தவிர்க்க முடியாது. நீங்கள் தான் அதற்கான பாதுகாப்புகளுடன் இருந்து கொள்ள வேண்டும். ஆனால் காரணம் இல்லாமல் பாம்பு வருகிறது என்றால் யாருடைய வீட்டில் எல்லாம் வரும் என்று இப்பதிவில் காணலாம். 

பாம்புகள் அடிக்கடி நுழையும் இது போன்ற வீடுகளில் நீங்கள் இருந்தால், சிறியா நங்கை, பெரியா நங்கை, ஆடு தீண்டாப்பாளை, நாகதாளிக் கிழங்கு, ஆகாச கருடன் கிழங்கு போன்ற நாகங்களுக்கு ஒவ்வாத செடிகளை கட்டாயம் வளர்த்து வருவது நல்லது. ஒரு நேரம் போல், ஒரு நேரம் இருப்பதில்லை. எப்போதும் நாம் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க முடியாது. குழந்தைகள் இருந்தால் வீட்டை சுற்றிலும் இருக்கும் தேவையற்ற புதர்களை அகற்றிவிடுவது நல்லது. மேலும் வீட்டை சுற்றி சுத்தமாக வைத்து, வேலி அமைத்துக்கொள்வது பாதுகாப்பானது. அதே போல் ஒரு வீட்டில் பாம்புகள் வருவதற்கு வேறு கரணங்களும் உண்டு. அந்த வீட்டை சுற்றி அதன் இரையான எலிகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதால் வரலாம். எங்கோ சென்று கொண்டிருக்கும் பாம்பு, ஏதோ இடையூறு ஏற்பட்டு பாதுகாப்பிற்காக அருகில் இருக்கும் வீடுகளுக்குள் நுழையலாம். இவை இயற்கையான காரணங்கள் தான். 

காரணங்கள் இல்லாமல் ஒருவரது வீட்டில் பாம்பு ஏன் வருகிறது? ஒருவரது வீட்டில் பாம்பு வருவதற்கு குலதெய்வ குற்றமும் காரணமாக இருக்கிறது. உங்கள் குலதெய்வத்தை நீங்கள் மறந்திருப்பது, வேண்டிய வேண்டுதல்களை நிறைவேற்ற மறப்பது போன்ற காரணங்களால் அதனை நினைவுப்படுத்த சர்ப ரூபத்தில் வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக முன்னோர்கள் கூறியுள்ளனர். வழி வழியாக சந்ததி மாறாமல் செய்து வரும் ஏதேனும் வழிபாடு இடையில் நிறுத்தபட்டு இருந்தால் அதனை நியாபகப்படுத்த இது போன்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. கனவில் பாம்பு வருவதும் இந்த காரணங்களினால் தான். 

தேவையற்ற தீய சிந்தனைகளை கொண்டிருப்பவர்கள் வீட்டில் பாம்புகள் வரலாம். நீங்களோ, உங்களது முன்னோர்களோ வாங்கிய நிலம், மனை போன்றவற்றிக்கு அருகே கிணறு ஏற்படுத்தவோ, சுவர் எழுப்பவோ அங்கிருக்கும் புற்றை அகற்றி, அழிக்க நேர்ந்து இருந்தால், உங்களது வீட்டில் பாம்புகள் வரலாம். மனதில் பக்தி இருந்தும் ஒருவித குழப்பம் ஆட்கொண்டு இருப்பவர்கள் இல்லத்தில் பாம்புகள் வரும். கிராமங்களில் வசித்து வந்தவர்கள் வீடுகளில் பாம்புகள் வந்தால், அதை அவர்கள் அடித்து கொன்று விடுவார்கள். அவர்களின் அடுத்த அடுத்த சந்ததியினர் வீடுகளில் பாம்புகள் வரும். 

மனிதர்கள் இல்லாத பாழடைந்த வீட்டை பாதுகாப்பிற்காகவும், உணவிற்காகவும் பயன்படுத்தி வரும் பாம்பை காட்டிக் கொடுத்து அடித்தாலும், காட்டிக் கொடுத்தாலும் அவர்களது வீட்டிலும் பாம்புகள் வரும். காக்கை இடது புறத்தில் அடிக்கடி வந்து சத்தம் போட்டால் பாம்பு வரும். பல்லி அடிக்கடி சத்தம் போட்டு கொண்டிருந்தாலும் பாம்பு வரும். இரவில் ஆந்தையின் அலறல் ஒலிக்கும் வீடுகளில் பாம்பு வரும். நீங்கள் பிறக்கும் நேரத்தில் ராகு, கேது உச்சமோ, நீச்சமோ அடைந்திருந்தால் அல்லது சரியான இடத்தில் இல்லாமல் இருந்தால் உங்கள் வீட்டில் பாம்பு காரணமின்றி வரும். இது போன்ற ஜோதிட காரணங்களால் அடிக்கடி பாம்புகள் வரும் வீட்டில், நாகதந்தி வேரை வாங்கி செம்பு கம்பியில் கட்டி வீட்டின் நுழைவு வாயிலில், மற்றும் வீட்டை சுற்றிலும் கட்டித் தொங்கவிட்டால் போதும், தோஷங்கள் நீங்கி பாம்புகள் வருவது தடைபடும். 

பாம்பை அடித்து கொன்றால் பழிவாங்க வரும் என்பது உண்மையா? மேற்கூறிய ஜோதிட ரீதியான பழம்பெரும் காரணங்கள் ஒருபுறம் தள்ளி வையுங்கள். இப்போது அறிவியல் ரீதியான காரணங்களை பார்ப்போம். பாம்பை அடித்து கொன்றால், திரும்பவும் அதே வீட்டிற்கு வரும் என்பது அறிவியல் ரீதியாகவும் உண்மை தான். ஆனால் அது நீங்கள் நினைப்பது போல் பழி வாங்க அல்ல. பாம்பை அடித்து கொல்லும்போது அதன் கழிவுப் பாதையில் இருந்து ஒரு விதமான திரவம் வெளியேறி தரையில் சிந்துகின்றன. இந்த நாற்றம் அடிபட்ட பாம்பின் எதிர்பாலின பாம்புகளால் கவரபட்டு அந்த இடத்திற்கு வருகின்றன. பார்ப்பதற்கு பெரிய வித்தியாசம் தெரியாது. அதே போன்ற உருவத்தில் தான் இதுவும் இருக்கும். இதை அறியாத பலர் அதே பாம்பு தான் பழிவாங்க வந்திருக்கிறது என்று நினைத்து கொண்டு விடுகின்றனர். 

இது போன்று பழி வாங்குவதற்கு பாம்பின் நினைவு பெட்டகத்தில் எந்த சக்தியும் கிடையாது. காற்றில் பரவும் வாசத்தை தன் நாவினால் நுகர்ந்து உள்ளிழுத்து உணரும் திறனை கொண்டே இரையையும், எதிரிகளையும் அடையாளம் காணும். பாம்பு என்றாலே ஸ்வாரஸ்யம் தான். பாம்புகள் பற்றிய ஆய்வுகளும், கட்டுக்கதைகளும் மக்களுக்கு பிடித்த கருத்து பொருளாக இருப்பதற்கு காரணங்கள் இதுவரை கண்டுப் பிடிக்கபடவில்லை...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴