Saturday, 2 May 2020

எப்படிப்பட்ட கண் திருஷ்டியையும் இழுத்தெடுத்து வெளியே தள்ளும் சக்தி இந்த 3 பொருட்களுக்கு உள்ளது. நீங்கள் அறிந்திடாத ஒரு ரகசியக் குறிப்பு.!!

கண்ணுக்கு தெரியாத இந்த கண் திருஷ்டியானது, ஒருவரை வாழ்க்கையின் அதலபாதாளத்திற்கு கூட தள்ளி விடும் என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை. கண்திருஷ்டியை நம்பாதவர்கள் கூட, அவர்களுக்கு ஏற்பட்ட, எதிர்பாராத சில கசப்பான அனுபவத்தின் மூலம், கடைசியில் நம்ப வேண்டிய சூழ்நிலைக்கு வந்துள்ளார்கள், என்றால் அது நிச்சயம் பொய்யாகாது. கடவுளை நம்பாதவர்கள் கூட, கண் திருஷ்டியை நம்பித்தான் ஆகவேண்டும். ஏனென்றால் அத்தனை பாதிப்புகளை நமக்கு ஏற்படுத்தும் சக்தி கொண்டது இந்த கண் திருஷ்டி. இதை விரட்டுவதற்கு ஆன்மீகத்தில் பலவகையான வழிமுறைகள் சொல்லப்பட்டிருந்தாலும், சில குறிப்புகள், சில பேருக்கு தெரியாமல் தான் இருந்துவருகிறது. அப்படிப்பட்ட, யாரும் அறிந்திராத சக்தி வாய்ந்த ஒரு குறிப்பை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

குறிப்பை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பாக, இந்த திருஷ்டி பரிகாரத்தை கர்ப்பிணிப்பெண்கள் செய்யக்கூடாது. அதாவது கர்ப்பிணி பெண்களுக்கு இதை சுற்றி போடலாம். கர்ப்பிணிப் பெண்கள் தங்களுடைய கையால் அடுத்தவர்களுக்கு இந்த முறையை பயன்படுத்தி திருஷ்டியை கழிக்கக்கூடாது. மாதவிலக்கான பெண்கள் இந்த முறையை பின்பற்றி அடுத்தவர்களுக்கு திருஷ்டி கழிக்க கூடாது என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

திருஷ்டியை கழிக்க தேவையான பொருட்கள். ஒரு எலுமிச்சை பழம், முகத்தில் பூசிக் கொள்ளும் மஞ்சள்தூள், கல் உப்பு, வால் மிளகு தூள். அதாவது சாதாரண மிளகு கிடையாது. வால் மிளகை வாங்கி நீங்களே பொடிசெய்து வைத்துக் கொள்வது நல்லது. ஆனால் கட்டாயம் இந்த வால்மிளகு தூள் இருக்க வேண்டும். முதலில் எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும். இரண்டு பாகங்களாக பிரிய வேண்டுமே தவிர, இரண்டு துண்டுகளாக பிரித்து விடக் கூடாது. எலுமிச்சை பழத்தின் ஒரு முனையை மட்டும் வெட்டாமல் ஒட்டி இருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டும்.

அதாவது எலுமிச்சை பழத்தின் உள் பகுதியில் மேற்குறிப்பிட்ட பொருட்களை எல்லாம் தடவும் அளவிற்கு, இரண்டு பாகங்களாக பிரிக்க வேண்டும். லேசாக வெட்டிய எலுமிச்சை பழத்தின் உள் பகுதியில் உள்ள இரண்டு பக்கத்திலும், முதலில் மஞ்சள் பொடியை நன்றாக தடவிக் கொள்ளுங்கள். அதன் பின்பு வால் மிளகு தூளை இரு பக்கமும் நன்றாக தடவிக் கொள்ளுங்கள். ஒரு சிட்டிகை கல் உப்பை எடுத்து நடுவே வைத்து, எலுமிச்சை பழத்தை உங்கள் உள்ளங்கைகளில் வைத்து கொள்ள வேண்டும்.

வீட்டில் உள்ளவர்கள் அனைவரையும் ஒன்றாக கிழக்குப்பக்கம் பார்த்தவாறு உட்காரவைத்து, ஒன்பது முறை எல்லோரையும் சேர்த்து சுற்றியபடி திருஷ்டி கழிக்க வேண்டும். அதன் பின்பு கையிலிருக்கும் எலுமிச்சை பழத்தை ஒரு பேப்பரில் வைத்து வெளியே தெரியாமல், மடித்து கால் படாத இடத்தில் கொண்டுபோய் தூர வீசி விடுங்கள். இது மிகவும் ஒரு நல்ல வழியாக சாஸ்திர குறிப்புகளில் சொல்லப்பட்டுள்ளது.

சில பேருக்கு கண் திருஷ்டியின் மூலம் தீராத பல பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். எப்படிப்பட்ட பிரச்சனைகளையும் ஒரே முறையில் நீக்கக்கூடிய திருஷ்டி பரிகாரம் தான் இது என்பது குறிப்பிடத்தக்கது. முடிந்தவரை இந்த பரிகாரத்தை அமாவாசை, ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமை தினங்களில் செய்யலாம். மாலை 6 மணிக்கு மேல், முடிந்தால் இரவு 9 மணிக்கு செய்தாலும் நல்ல பலனை தரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

No comments:

Post a Comment