Thursday, 16 April 2020

வரும் அட்சய திருதியை நாளில் தங்கத்தை வாங்க தேவையில்லை இதை வாங்கினாலே செல்வம் குவியும்..!!

இந்த சார்வரி வருடத்தில் வருகின்ற ஏப்ரல் 26.4.2020 சித்திரை ( 13 ) ஆம் தேதி சித்திரை மாதத்தின் இறுதியில் ஞாயிற்று கிழமையில் அட்சய திருதியை நாள் வருகின்றது. அட்சய திருதியை என்றாலே கேட்டது அனைத்தும் கிடைக்கும், வாங்கிய அனைத்தும் பெருகும், எல்லா காரியங்களும் சுபமாக அமையும் என்பது அனைவரின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. விநாயகரிடம் வேதவியாசர் மகாபாரதத்தை எழுதுமாறு சொன்னது அட்சய திருதியை அன்று தான். மகாவிஷ்ணு பரசுராம அவதாரம் எடுத்ததும் அக்ஷய திருதியை நன்னாளில் தான்.. 

அட்சய திருதியை நாளில் மகா விஷ்ணுவிற்கு விரதமிருந்து நெல்லுடன் கூடிய அரிசியை நிவேதனம் வைத்து வழிபட்டால் சகல செல்வங்களும் பெருகும் என்பது ஐதீகம். மேலும் இந்நாளில் கங்கையில் நீராடினால் அனைத்து பாவங்களும் நீங்கும். இதே நாளில் தான் அன்னபூரணி தாயாரிடம், சிவபெருமான் ‘பவதி பிக்ஷாம் தேஹி’ என்று பிச்சை கேட்டதும் புராணத்தில் இடம் பெற்றுள்ளது. ‘அட்சய’ என்பதற்கு ”எப்போதும் குறையாது” என்பது தான் அர்த்தமாகும். இன்றைய சூழலில் வருகின்ற அட்சய திருதியை அன்று எதை வாங்கி பலன் அடைவது என்பதை பற்றி இப்பதிவில் காண்போம். 

இந்நாளில் எந்த பொருள் வாங்கினாலும், எதை வேண்டுதலாக முன்வைத்தாலும், பெருகிக் கொண்டே இருக்கும் என்று அனைவராலும் நம்பப்படுகிறது. துரியோதனன் சபையில் பாஞ்சாலி துகில் உரிக்கும் பொழுது கிருஷ்ண பகவான் துகிலை வளர செய்ததும் அட்சய திருதியை நன்னாளில் தான். இப்போது புரிகிறதா பாஞ்சாலி ஆடை ஏன் உருவ உருவ வளர்ந்துகொண்டே இருந்தது என்று? செல்வத்திற்கு அதிபதியான குபேரனும் அக்ஷய திரிதியை நன்னாளில் தவறாமல் லக்ஷ்மி தேவியை வழிபாடு செய்கின்றார் என்று லட்சுமி தந்திரம் என்னும் நூல் குறிப்பிட்டு கூறியுள்ளது. 

இந்நாளை தானம் செய்வதற்கு மிகவும் உகந்த நாளாக சொல்லப்பட்டுள்ளது. அட்சய திருதியை நாளில் தானம் அளிப்பது இரட்டிப்பு பலனை அளிக்கும் என்கிறது சாஸ்திரம். இந்நாளில் மக்கள் இயலாதவர்களுக்கு அரிசி, பருப்பு, புளி, உப்பு, சர்க்கரை, நெய், காய்கறிகள், பழங்கள், விசிறி இவற்றை தானம் அளிப்பதன் மூலம் மோட்சம் கிட்டும். தயிர் சாதம், எலுமிச்சை சாதம் போன்ற உடலை குளிர்விக்கும் அன்னத்தை தானம் அளித்தால் உங்கள் அடுத்த அடுத்த சந்ததியினருக்கு அன்னத்தால் பஞ்சம் ஏற்படாது என்று கூறப்படுகிறது. இந்த நாளில் பசிக்கும் வயிற்றுக்கு அன்னம் இட்டால் இப்பிறவியில் நீங்கள் செய்த புண்ணியம் இரண்டாக பெருகி அடுத்த பிறவியில் நல்ல வாழ்க்கையை வாழலாம். ஸ்படிகம் ருத்ராட்சம் முதலியவற்றை அணிவதற்கு இந்நாள் உகந்த நாளாக இருக்கும். முறையான வழிபாடுகள் செய்து இவற்றை இந்நாளில் அணிவதால் சகல உஷ்ண ரோகங்களும் நீங்கி, ஆரோக்கியம் விருத்தியாகும். 

அட்சய திரிதியை என்றாலே தங்கம், வெள்ளி, வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்கினால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. ஆனால் இக்காலகட்டத்தில் தங்கம் வாங்கும் நிலையில் நாம் இல்லை. தங்கத்தை விட பல மடங்கு உயர்ந்த சக்தியை பெற்று பெற்றிருப்பது மகாலட்சுமியின் அம்சமான கல்லுப்பு. மிகவும் சாதாரண ஒரு பொருள் தான் என்றாலும், இதற்குரிய மதிப்பு பலருக்கு புரிவதில்லை. அக்ஷய திருதியை நாளில் நீங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை மளிகைக் கடைக்கு சென்று கல் உப்பை, காசு கொடுத்து வாங்கி வந்து வீட்டில் அந்த உப்பை வைத்து சமையல் செய்தாலே போதுமானது. இந்நாளில் காசு கொடுத்து வாங்கப்படும் கல்லுபிற்கு மிகுந்த சக்தி உள்ளது. உங்கள் செல்வ வளம் மென்மேலும் பெருகி கொள்ள இந்த பரிகாரம் துணை புரியும். 

கல் உப்பை வாங்கி வந்ததும் அதை எவர் சில்வர் பாத்திரத்திலோ, பிளாஸ்டிக் டப்பாக்களிலோ போடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். கல் உப்புற்கு மகாலட்சுமிக்கு இணையான மரியாதை செலுத்த வேண்டும். பீங்கான் ஜாடியில் அல்லது மட்பாண்டத்தில் போட்டு வைக்கலாம். நீங்கள் தெய்வங்களுக்கு பூஜை செய்யும் பொழுது ஒரு ரூபாய் நாணயத்தை இந்த ஜாடியில் போட்டு கொண்டே வரவேண்டும். அக்ஷய திரிதியை நாளில் இருந்து தொடர்ந்து 108 நாட்கள் இவ்வாறு செய்து வந்தால் குடும்பத்தில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்வாள். நூற்றி எட்டு நாட்களில் சேகரித்த 108 ரூபாயை முடிந்து கோவில்களுக்கு செல்லும் பொழுது உண்டியலில் சேர்த்து விடலாம்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

தர்பணம்’ என்பது எதைக் குறிக்கிறது? ‘திவசம்’ என்பது எதைக் குறிக்கிறது?

நம் முன்னோர்களுக்காக கொடுக்கப்படும் தர்ப்பணமும், திவசமும் ஒன்றா? அல்லது வேறு வேறா? இதைப்பற்றிய தெளிவான விளக்கத்தை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ‘தர்பணம்’ என்பது வேறு. ‘திவசம்’ என்பது வேறு. தர்பணம் என்றால் ‘திருப்தி’ செய்வதை குறிப்பதாக பொருள். இதை தினம்தோறும் செய்யலாம். அது ஒரு புண்ணிய காரியம். அதாவது சூரியன், வருணன், அக்கினி எல்லா தேவர்களும் நீர்நிலைகளில் நின்று தண்ணீரை இரண்டு உள்ளங்கைகளிலும் எடுத்துக்கொண்டு, ‘ஆதித்யா தர்ப்பயாமி’ என ஒவ்வொரு தேவர்களுக்கும் செய்வதே தர்ப்பணம் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது தேவர்களுக்கு நீரை சமர்ப்பணம் செய்து அதன்மூலம் ஆசீர்வாதத்தை பெறுவது. 

ஆனால் அமாவாசை மற்றும் இறந்தவர்களின் திதி அன்று மட்டும் எள்ளும், நீரும் கலந்து இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம். இறந்தவர்களுக்காக தர்ப்பணம் செய்ய வேண்டிய தினம் ‘அம்மாவாசை, இறந்தவர்களின் திதி அன்று’ இந்த இரண்டு தினங்கள் மட்டுமே. அதையும் கட்டாயமாக ரத்த சம்பந்தம் உள்ளவர்கள் மட்டும் தான் செய்ய வேண்டும். இதைதான் தர்பணம் என்று சொல்லுவார்கள். 

அடுத்ததாக வருடத்திற்கு வரும் திவசம் என்பது, இறந்தவர்கள் எந்த மாதம் எந்த திதியில் இருந்தார்களோ அந்த மாதம் அந்தத் திதியில் தான் திவசம் கொடுக்கப்படவேண்டும். ஒருவர் உயிரோடு இருக்கும் போது நட்சத்திரம் என்று சொல்வார்கள். அதாவது அவரவர் பிறந்தநாளை அவரவர் பிறந்த நட்சத்திரத்தில் கொண்டாடினால் தான் இறைவனின் ஆசீர்வாதம் கிடைக்கும். 

இதேபோல் ஒருவர் இறந்துவிட்டால் அவருக்கு திவசம் கொடுப்பது, அவரது திதியில் தான் கட்டாயம் கொடுக்கப்படவேண்டும். இறந்த தேதியை வைத்து திவசம் கொடுத்தால் அது கட்டாயம் நம் முன்னோர்களால் ஏற்றுக்கொள்ளப்படாது. (சில பேர் பிறந்த தேதியை பார்த்து திதி கொடுக்கும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். அது தவறு) கட்டாயம் அவர்கள் இறந்த திதி அன்று தான் திவசம் கொடுக்கப்பட வேண்டும். 

ஏனென்றால் இறந்தவர்கள் இறந்த திதியில் தான் பூலோகத்திற்கு நம்மை தேடி வருவார்கள் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதேபோல் அமாவாசை அன்றும் பூலோகத்திற்கு வருகை தருவார்கள். ஆகவே, இந்த இரண்டு நாட்களை விட்டுவிட்டு அவர்கள் பூமிக்கு வராத நாட்களில் அவர்களுக்கு உணவளிப்பது எந்த ஒரு பயனும் இல்லை. 

இறந்தவர்களுக்கு ஒரு மாதம் என்பது ஒரு நாளாக கருதப்படுகிறது. அந்த ஒரு நாள் அவர்கள் மறைந்து போன திதி அல்லது அமாவாசை தினம் மட்டுமே அவர்கள் உணவை தேடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நாட்களில் மட்டுமே திவசம், தர்பணம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. 

இப்படியாக இறந்தவர்களின் ஆத்மா எப்படி தன்னுடைய யாத்திரையை மேற்கொள்கிறது? அந்த சமயத்தில் இறந்தவர்களுக்கு என்னென்ன காரியங்கள் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி கருடபுராணம் விளக்கமாக சொல்லியுள்ளது. ஆனால் இந்த கருட புராணத்தை வீட்டில் படிக்கக் கூடாது. இறப்பு ஏற்பட்ட வீட்டில் மட்டுமே படிக்க வேண்டும் என்பது ஐதீகம். இறந்தவர்களது ஆசியை முழுமையாக பெற வேண்டும் என்றால், தர்ப்பணத்தையும்,  திவசத்தையும் முறையாக செய்யப்படுவதே உத்தமம். 

இந்த சாஸ்திரங்களை முறையாக கடைபிடிக்காமல் விட்டால்தான் பித்ரு தோஷமும், பித்ரு சாபம் ஏற்படுகிறது. பித்ரு தோஷம் பித்ரு சாபம் என்றால் அவர்கள் நம்மை சபிப்பது கிடையாது. ஆனால், நமக்காக செய்யப்படும் காரியங்களை சரியாக செய்யவில்லையே, நமக்கான உணவு கிடைக்கவில்லையே என்று, இறந்தவர்களின் ஆத்மா ஒரு பெரு மூச்சு விட்டால்கூட அது நம்முடைய பரம்பரையே தாக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

காகத்தைப் பற்றி சாஸ்திரம் என்ன சொல்கிறது? இந்த 1 பொருளை தினம்தோறும் காகத்திற்கு உணவாக வைத்தால், பல காலமாக தீராத இருந்து வரும் கஷ்டங்கள் கூட தீரும்.!!

நம்முடைய பித்ருக்கள் தான் காகத்தின் ரூபத்தில் இந்த பூலோகத்தில் வலம் வருகிறார்கள் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு சாஸ்திரம். ஆனால் காகத்தைப் பற்றி நாம் அறியாத இன்னும் பல விஷயங்கள் உள்ளது. இந்த காகத்திற்கு முக்காலத்தையும் அறியக்கூடிய சக்தி இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்களா? ஒரு குடும்பத்தில் நடக்கக்கூடிய நல்லது கெட்டதை முன்கூட்டியே வலியுறுத்தும் சக்தியும் இந்த காகத்திற்கு உண்டு என்பதும் உண்மையான ஒன்று. 

அகத்தியர் கையில் வைத்திருக்கும் கமண்டலத்தில் இருந்த நதி நீரை, விநாயகர் எதற்காக காகத்தின் ரூபத்தில் வந்து தள்ளிவிட வேண்டும். நம்முடைய உலகத்தில் பறவைகளுக்காக பஞ்சம். வேறு ஏதாவது ஒரு பறவை ரூபத்தில் வந்து கூட தட்டி விட்டிருக்கலாமே! காகத்திற்கு இருக்கும் அபரிமிதமான சக்தியை விநாயகரும் உணர்ந்துள்ளார் என்பதுதான் இதற்கு அர்த்தம். 

மற்ற பறவைகளிடத்தில் இல்லாத ஒரு குணம் இந்த காகத்திற்கு உள்ளது. பொதுவாக மற்ற பறவைகள் தீட்டுகளை எல்லாம் பார்க்காது. ஆனால் மனிதர்களைப் போலவே காகம் தீட்டை அனுஷ்டிக்கும். ஒரு காகமானது  ஏதாவது ஒரு இடத்தில் இறந்து விட்டால், அந்த காகத்தை சுற்றி மற்ற காகங்கள் மொத்தமாக நின்று “கா கா கா” என்று குரலெழுப்பி இறந்த அந்த காகத்திற்கு துக்கத்தை அனுஷ்டிக்கும். அதன்பின்பு அந்த காகங்கள் எல்லாம் ஒரு நீர்நிலைக்கு சென்று தன்னுடைய தலையை நீரில் நனைத்து தீட்டை கழிக்கும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. நாம் கூட சில இடங்களில் இந்த காட்சியை கண்டிருப்போம். மனிதர்களுக்கு இணையாக தீட்டை கடைபிடிக்கும் வழக்கமும் காக்கைக்கு உண்டு என்பதை இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். 

இப்படிப்பட்ட மனிதனுக்கு இணையக பல சாஸ்திர சம்பிரதாயங்களை கடைப்பிடிக்கும் இந்த காகம், தீட்டான சாப்பாட்டை சாப்பிடாது என்பதும் சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு குறிப்பு தான். இப்படிப்பட்ட பல சிறப்புகளைக் கொண்ட இந்த காகத்திற்கு தினம்தோறும் உங்களது கைகளால் ‘உலர் திராட்சையை’ உணவாக வைக்க வேண்டும். இப்படி தொடர்ந்து வைத்து வந்தால், அந்தப் புண்ணியம் உங்களுக்கு ஏழேழு ஜென்மத்திற்கும் தொடரப்படும். அதாவது நீங்கள் பிறந்ததிலிருந்து, உங்களது வாழ்வு முடியும் வரை வாழ்க்கையில் எந்தவிதமான, தீர்க்க முடியாத துன்பங்களும் உங்களுக்கு வராது என்பது குறிப்பிடத்தக்கது. பிறந்ததிலிருந்து, சாகுற வரைக்கும் சந்தோஷமா வாழ வேண்டும் என்றால், இந்த சின்ன காரியத்தை நாம் கடை கடைபிடிப்பதில் என்ன கஷ்டம்! 

சில பேர் வீடுகளில் காகம் வந்து கத்திக்கொண்டே இருக்கும். அது சாப்பாட்டிற்காக கத்தி கொண்டிருந்தால், நீங்கள் உணவு வைத்ததும் அதை சாப்பிட்டுவிட்டு அமைதியாகச் சென்று விடும். சாப்பாடு வைத்தும், தொடர்ந்து காகம் கரைந்து கொண்டே இருந்தால் உங்கள் வீட்டில் சுப செலவுகள் வரப்போகிறது என்பதை குறிக்கிறது. 

இதேபோல் சிலருக்கு காகம் தன்னுடைய இறக்கை அல்லது கால்களில் வந்து தலையில் தட்டி விட்டுப் போகும் அல்லது அவர்கள் மேல் எச்சில் போடும். இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்தால் உங்களுக்கு உடல் ரீதியாக ஏதோ பிரச்சனை வரப் போகிறது என்பதை குறிக்கும். அதாவது மருத்துவ செலவு வரும். சிலபேருக்கு பெண்களினால் பிரச்சினை தேடிவரக்கூடும். உஷாராக இருந்து கொள்வது நல்லது. பெரியதாக ஆபத்து எதுவும் இல்லை. வரப்போகும் சின்ன சின்ன பிரச்சனைகளை முன் கூட்டியே வலியுறுத்தும் தன்மை இந்த காகத்திற்கு உண்டு என்று சொல்கிறது சாஸ்திரம். 

இதேபோல் நீங்கள் காகத்திற்கு சாதம் வைத்த பின்பு, வரும் ஒரு காகம் மட்டும் உணவை அருந்தாமல் அனைத்து காகங்களையும் அழைத்து, எல்லா காகங்களும் சேர்ந்து மொத்தமாக உணவு அருந்தினால், எல்லா பித்ருக்களின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைத்து விட்டது என்பதை குறிக்கிறது. 

காகத்திற்கு தினம்தோறும் உணவு அளிப்பதால் பித்ருக்களின் ஆசீர்வாதம், சனிபகவானின் ஆசீர்வாதமும் கிடைக்கும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. ஆனால் இவர்கள் இருவருடைய ஆசீர்வாதத்தோடு சேர்த்து எமதர்மனின் ஆசீர்வாதத்தையும், விநாயகர் ஆசீர்வாதத்தையும் நம்மால் காகத்திற்கு உணவு வைக்கும் போது பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இப்படிப்பட்ட பலவிதமான அதிசயங்களை உள்ளடக்கிய இந்த காகத்திற்கு பழைய சாப்பாட்டையும், கெட்டுப்போன சாப்பாட்டையும், எச்சில் சாப்பாட்டையும் தயவுசெய்து வைக்க வேண்டாம் என்பதையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

இடது கையால் தானம் செய்துவிட்டால் என்ன நடக்கும்? ஏன் வலது கையால் தானம் செய்ய வேண்டும்?

செய்வது தானம். அதில் இடது கையாக இருந்தால் என்ன? வலது கையாக இருந்தால் என்ன? என்று அனைவரின் மனதிலும் கட்டாயம் இந்த கேள்வி எழும். முதலில் தானம், தர்மம் ஏன் செய்கிறோம்? புண்ணியம் கிடைக்கும் என்பதற்காக செய்யலாம், அல்லது பாவம் என்று இரக்கப்பட்டு நாமாகவே முன் வந்து செய்து விடுகிறோம். தானம் அளிப்பது நம்முடைய பாவங்களை குறைக்க உதவும் என்றும் செய்வோம். நாம் எப்படி நினைத்து தானம் செய்கிறோம் என்பது இங்கு முக்கியமில்லை. தானம் என்பதே புண்ணிய காரியம் தான். அதில் மாற்றுக் கருத்து ஒன்றும் இல்லை. ஆனால் ஏன் வலது கையால் தானம், தர்மம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தபடுகின்றது? இடது கையால் தெரியாமல் தானம் செய்து விட்டாலும் இதெல்லாம் நடக்குமா? இந்த கேள்விகளுக்கெல்லாம் ஆச்சரியமூட்டும் விடைகள் உள்ளன. அதை பற்றி விரிவாக இப்பதிவில் காணலாம் வாருங்கள். 

இந்த காலகட்டத்தில் பாவம் பார்த்து தானம் செய்பவர்களை விட, தானம், தர்மம் செய்தால் நமக்கு புண்ணியம் கிடைக்கும் என்று எண்ணியே பெரும்பாலானோர் தானம் செய்கிறார்கள். இது வருத்தப்பட கூடிய ஒரு விஷயம் என்றாலும், எப்படியோ நல்லது செய்தால் சரிதான் என்று தோன்றிவிடுகிறது. ஒரு சிலர் தான், கேட்டவுடன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தானம் செய்து வருகின்றனர். இருப்பவர்கள் கொடுத்தால் என்ன குறைந்து விட போகிறது என்று தான் அனைவருக்கும் இருக்கும் நியாயமான கேள்வி. இதனால் அவர்களுக்கு புண்ணியம் கிடைக்க வேண்டும் என்றாலும் இறைவன் அதை செய்விக்க வேண்டுமே!! 

பொதுவாக சுப கிரகங்களான குரு பகவான், சுக்கிரன், சந்திரன், சூரியன், செவ்வாய் இவர்களின் ஆதிக்கம் வலது கையில் இருக்கும். இந்த கிரகங்கள் அனைத்தும் சுபத்தன்மையை ஈர்க்கக்கூடிய கிரகங்கள். ஒருவர் கேட்டு கொடுப்பது தர்மம் ஆகிறது. தானம் என்பது அப்படி அல்ல, நாமாகவே முன்வந்து கொடுப்பது. அதனால் தான் தர்மத்தை விட தானமே சிறந்ததாகிறது. 

தானம் செய்தாலும் சரி, தர்மம் செய்தாலும் சரி, நீங்கள் ஒருவருக்கு வலது கையால் கொடுக்கும் பொழுது அதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ளும் நபரிடம் இருக்கும் புண்ணியங்கள் உங்களுக்கு வந்து சேரும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். சுபக்கிரகங்கள் வீற்றிருக்கும் வலது கரத்தால் நீங்கள் தானமும், தர்மமும் செய்யும் பொழுது அதை பெறுபவர்களிடம் இருக்கும் புண்ணியங்கள் தான் உங்களுக்கு வந்து சேரும். தானம் பெற்றவர்கள் உங்களுக்கு பிரதிபலனாக அவர்களின் புண்ணியத்தை தருவார்கள். இதுவே இறை தத்துவம். இது வலது கரத்தினால் செய்யப்படும் தானத்திற்கு பொருந்தும். இதனால்தான் வலதுகரத்தில் தானம் செய்ய வலியுறுத்தப்படுகின்றது. ஒருவேளை அவர் பாவம் செய்திருந்தால் என்ன பலன் என்று கேட்கலாம். அவரின் பாவங்கள் எதுவும் உங்களை பாதிக்காது. ஆனால் புண்ணியம் உங்களுக்கு கட்டாயம் வந்து சேரும் என்பதில் சந்தேகம் இல்லை. 

இதையே நீங்கள் இடது கையால் தான, தர்மம் செய்தால் தானம் பெறுபவர்களின் பாவத்தில் பங்கு வரும். இடது கரத்திற்குரிய கிரகங்களாக அசுப கிரங்கங்களான ராகுவும், கேதுவும் இருக்கிறார்கள். இவர்களின் வேலையே பாவத்தை ஈர்த்து தருவது தான். ராகு, கேது ராசிக்கற்கள் இடது கைகளில் அணியுமாறு கூறுவதும் இதனால் தான். இதில் சுவையான தகவல் என்னவென்றால் சனி பகவான் எந்த கரத்திற்கும் உரியவர் இல்லை. அவர் நியாயத்தை வழங்குபவர் ஆயிற்றே!! அதனால் நடுநிலையாக தான் எப்போதும் செயல்படுவார். உதாரணத்திற்கு தானத்திற்கு பெயர்போன தர்மர் ஒரு முறை யாசகம் கேட்டு வந்தவரிடம் இடது கையால் தானம் அளித்து விட்டார். அவர் அப்போது ஸ்நானம் செய்வதற்கு தலையில் எண்ணெய் தடவிக் கொண்டு இருந்தார். யாசகம் கேட்டதும் எண்ணெய் வைத்து இருந்த தங்க கிண்ணத்தை கொடுத்துவிட்டார். 

இடது கையால் தானம் அளித்தால் பாவம் வந்து சேரும் என்று அறிந்த ஒருவர் இதை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் தர்மரிடம் இதைப் பற்றிக் கூறியபோது தர்மரோ எண்ணங்கள் மாறுவதற்குள் தர்மம் கொடுத்தாக வேண்டும். சிந்தித்துக் கொண்டிருந்தால் எண்ணம் மாறிவிடும் அல்லவா? அதனால் தான் எந்த கரத்தால் கொடுத்தேன் என்பதை பார்க்கவில்லை என்றார். இங்கு சனீஸ்வரர் நடுநிலையாக செயல்பட வேண்டும் அல்லவா? இடது கையால் தர்மம் கொடுத்தாலும், கொடுத்தவரின் மனம் நல்ல எண்ணத்தோடு செயல்பட்டிருக்கிறது. எனவே அந்தப் பாவங்கள் அவர்களை ஒன்றும் செய்வதில்லை. நல்ல எண்ணங்களோடு, வேறு வழியே இல்லாத சமயத்தில் இடது கரத்தால் தானம் செய்வதில் பாவங்கள் பங்கு பெறுவதில்லை என்கிறது சாஸ்திரம். அதே போல் இருகைகளால் தானம் செய்தாலும் நன்மை தான். புண்ணியங்கள் வராவிட்டாலும் பாவங்கள் வந்துவிடக்கூடாது. அதனால் தான் வலது கையால் தானம் செய்வது நல்லது என்றார்கள் நம் முன்னோர்கள்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

2 கைகளிலும் உப்பை வைத்துக் கொண்டு இந்த மந்திரத்தைச் சொல்லிப் பாருங்கள்! 21வது நாள் அதிசயம் நடக்கும்.!!

பொதுவாகவே கல்லுப்பில் நல்ல ஆற்றல் இருப்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். கல் உப்பில் மகாலட்சுமியின் அம்சம் இருக்கிறது என்பதை அறிந்த நீங்கள், அதே கல் உப்பிற்கு சந்திரனின் அருளைப் பெற்றுத்தரும் மகிமையும், சுக்கிரனின் அருளைப் பெற்றுத்தரும் மகிமையும் இருக்கிறது என்பதை அறிந்து உள்ளீர்களா? சந்திர கிரகத்தின் ஆற்றலையும், சுக்கிர கிரகத்தின் ஆற்றலையும் கல் உப்பின் மூலம் நாம் பெற போகின்றோம். நமது உடலானது 70 சதவீதம் தண்ணீரால் நிரப்பப்பட்டுள்ளது. தண்ணீருக்கு உரிய கிரகமாக சொல்லப்படுவது சந்திரன். 

ஆகவே, கல் உப்பின் ஆற்றலை நாம் உடலில் சேர்க்கும்போது சந்திரனின் பலம் அதிகரிக்கிறது. இதற்காக கல் உப்பை சாப்பாட்டில் அதிகமாக போட்டு சாப்பிடக்கூடாது. அதனுடைய ஆற்றலை மட்டும் தான் நாம் பெறப் போகின்றோம். ஏனென்றால் மன வலிமையை அதிகரிக்கும் சக்தியை தரக்கூடியவர் சந்திர பகவான். மன வலிமையோடு நாம் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு காரியமும் கட்டாயமாக வெற்றியடையும் அல்லவா? 

கல் உப்பின்னால் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையும் தீர்க்க முடியும் என்பதால் சுக்கிர பகவானையும் சேர்த்து வேண்டிக் கொள்வது அவசியம். சந்திரனின் ஆற்றலையும், சுக்கிரனின் ஆற்றலையும் ஒருசேர பெற்று விட்டால் நாம் நினைத்த காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம். இந்த இரண்டு கிரகங்களின் மனதையும் குளிர வைத்து, இரண்டு கிரகங்களின் ஆற்றலை பெற, கல் உப்பை வைத்து எந்த மந்திரத்தை சொன்னால் என்ன அற்புதம் நடக்கும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

இந்த பரிகாரத்திற்க்கு இரண்டு கைப்பிடி அளவு கல் உப்பு மட்டுமே போதும். சூரிய உதயத்திற்கு முன்பாகவே கண்விழித்து, உங்கள் இரண்டு கைகளிலும், கைப்பிடி அளவு கல் உப்பை எடுத்து கொள்ளுங்கள். சம்மணம் போட்டு அமர்ந்து கொள்ளலாம். முதுகு தண்டுவடம் நேராக இருக்க வேண்டும். தியானம் செய்வதுபோல் இரண்டு கைகளையும் உங்கள் இரண்டு தொடைகளின் மேல் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் இரண்டு உள்ளங்கைகளும் கல்லுப்பு மூடியவாறு இருக்கவேண்டும். அதன் பின்பு முதலில் சந்திர பகவானை மனதார நினைத்து கொண்டு, சந்திர பகவானின் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். நேரம் இல்லாதவர்கள் 11 முறை உச்சரிக்கலாம். 

சந்திர பகவானின் மந்திரம்: ஓம் ஷ்ராம் ஸ்ரீம் சஹ்ரும் சஹ் சந்திராய நமஹ. 

அதன் பின்பு சுக்கிர பகவானை நினைத்துக் கொண்டு, சுக்கிரனின் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். முடியாதவர்கள் 11 முறை உச்சரிக்கலாம். 

சுக்கிர பகவானின் மந்திரம்: ஓம் த்ராம் த்ரீம் த்ரௌம் சஹ் சுக்ராய நமஹ. 

இந்த இரண்டு மந்திரங்களையும் உச்சரித்த பின்பு உங்கள் மனதில் எந்த ஒரு கோரிக்கையாக இருந்தாலும், நேர்மறையோடு 5  நிமிடம் சொல்லி இறைவனை வேண்டிக் கொள்ள வேண்டும். அதாவது தொழில் சிறக்க வேண்டும் என்றாலோ, உங்களது வாழ்க்கைத் துணை உங்களிடம் அன்போடு நடந்து கொள்ள வேண்டும் என்றாலும், உங்களது பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் என்றாலும், பணவரவு சீராக வர வேண்டும் என்றாலும், நோய்நொடி இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கை வேண்டும் என்றாலும், எந்த கோரிக்கையை வேண்டுமானாலும் வைக்கலாம். ஆனால் அந்த கோரிக்கைகள் நேர்மறை எண்ணத்தோடு தான் வைக்கப்பட வேண்டும். நீங்கள் தியானம் செய்யும் 48 நாட்களும் ஒரே ஒரு கோரிக்கைதான் வைக்கப்பட வேண்டும். 

நீங்கள் உங்களது இந்த தியானத்தை தொடங்கிய 21ஆவது நாளிலேயே உங்களது இலக்கை பாதி அடைந்துவிட்டதாக உணரமுடியும். அதாவது, கட்டாயம் உங்களது குறிக்கோள் பாதி நிறைவேறி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நம்பிக்கையோடு செய்து பாருங்கள். வெற்றி நிச்சயம் உண்டு. 

பெண்களும் இந்த தியானத்தை செய்யலாம். தொடர்ந்து 48 நாட்கள் செய்யும் போது மாதவிடாய் நாட்களிலும் இந்த தியானத்தை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தியானத்தின் இறுதியில் கையிலிருக்கும் உப்பினை தண்ணீரில் கரைத்து விடுங்கள். அந்தத் தண்ணீரை சாக்கடையில் ஊற்றாமல், மண்ணில் ஊற்றி விடலாம்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

அடம் பிடிக்கும் சுட்டி குழந்தை சமத்தாக சாப்பிட வேண்டுமா? இதோ சூப்பரான 3 ஆன்மீக டிப்ஸ்.!!

பல தாய்மார்களுக்கு இன்று இருக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று குழந்தை சாப்பிட அடம் பிடிப்பது தான். என்ன செய்தாலும் சாப்பிட மட்டும் வாயை திறப்பதில்லை. சாப்பிடாமல் அடம் பிடித்துக் கொண்டே இருக்கும். என்னதான் வெளியே சென்று வேடிக்கை காட்டி ஊட்டினாலும் ஒரு பிரயோஜனமும் இருக்காது. சாப்பாடு காய்ந்து தான் போகுமே ஒழிய, அந்த குழந்தை அந்த சாப்பாட்டை சாப்பிட்டு முடிக்காது. இதனால் உங்களுக்கு கவலை தான் மிஞ்சும். இதற்கு நிறைய காரணங்கள் உண்டு. சில எளிய வழிமுறைகளை கடைபிடித்தாலே இந்த பிரச்சனையை தவிர்க்கலாம். அதைப் பற்றிய விரிவான தகவல்கள் இப்பதிவில் காணலாம். 

குழந்தைகள் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். நீங்கள் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டும் பொழுது பல பேரது கண் உங்கள் குழந்தையின் மீது விழும். இது உங்களுக்கும் தெரியும். ஆனால் வேறு வழி இல்லை. வெளியே வந்து வேடிக்கை காட்டி ஊட்டினாலும் சரியாக குழந்தைகள் சாப்பிடுவதில்லை. இதனால் தெருவில் வந்து தான் குழந்தைக்கு சோறூட்ட வேண்டிய நிலை உள்ளது. அதே போல் சிலர் மொபைல் போனை கையில் கொடுத்து சாப்பாடு ஊட்டி விடுவார்கள். இது மிகவும் தவறான செயலாகும். சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு மொபைல் போனில் இருந்து வரும் ஒளியானது நிச்சயம் பிஞ்சு கண்களை பாதிக்கும். அவர்களின் கவனமும் சாப்பிடுவதில் இருக்காது. அந்த மொபைல் போனிலேயே இருக்கும். இது மூளையும் பாதிக்கும். 

டிப்ஸ் 1: குழந்தைக்கு தட்டில் வெறும் சாதம் போட்டதும் அதிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக 5 உருண்டைகள் எடுத்து வைக்கவும். ஒரு உருண்டை மஞ்சள் கலந்தும், ஒரு உருண்டை குங்குமம் கலந்தும், ஒரு உருண்டை கரித்தூள் கலந்தும், கடைசி உருண்டை எழுமிச்சை சாற்றை கலந்தும் வையுங்கள். மீதமிருக்கும் ஒரு உருண்டை அப்படியே இருக்கட்டும். பகல் 12 மணிக்கு உச்சி வேலை ஆரம்பமானததும் கிழக்கு நோக்கிபடி வாசலின் நடுவில் குழந்தையை நிற்க வையுங்கள். இந்த ஒவ்வொரு உருண்டையையும் குழந்தைக்கு வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் மும்முறை சுற்றி திருஷ்டி கழிக்கவும். பின்னர் அந்த உருண்டைகளை ஒன்றாக கலந்து, நான்காக பிரித்து கொள்ளுங்கள். ஒவ்வொன்றையும் ஒவ்வொரு திசையில் தூக்கி எறியுங்கள். திருஷ்டி கழித்ததும் குழந்தையின் பாதங்களையும், உங்களின் பாதங்களையும் தண்ணீர் கொண்டு நன்கு கழுவிவிட்டு வீட்டிற்குள் சென்று விடவும். இதன் மூலம் குழந்தைகளுக்கு இருக்கும் திருஷ்டி கழியும் என்பது நம்பிக்கை. 

டிப்ஸ் 2: குழந்தைக்கு சாப்பாடு ஊட்டும் பொழுது ஒரு சிறு உருண்டையை சாப்பாடு ஊட்டும் கிண்ணத்தின் இடதுபுறம் ஓரமாக வைக்கவும். குழந்தை சாப்பிட்டு முடித்ததும், அந்த உருண்டையை குழந்தையின் தலையை சுற்றி மூன்று முறை திருஷ்டி கழிக்கவும். பின்னர் மீண்டும் அந்த உருண்டை கிண்ணத்தின் இடது ஓரத்தில் வைத்துவிடவும். குழந்தையின் கைகளை உருண்டையின் மேல் கழுவ வையுங்கள். அந்த சாதத்தை கரைத்து ஒரு ஓரமாக ஊற்றி விடுங்கள். பின்னர் தட்டையும் உங்களது கையையும் கழுவி விட்டு உள்ளே செல்லுங்கள். இதுபோன்று தொடர்ச்சியாக ஒரு வாரம் செய்யுங்கள் முதல் நாள் தவிர மற்ற நாட்களில் அந்த உருண்டைகளை காகத்திற்கு வைக்கவும். இதன் மூலம் குழந்தைக்கு இருக்கும் கெட்ட சக்திகள் நீங்கி நன்றாக சாப்பிட ஆரம்பிக்கும் என்பது நம்பிக்கை. 

டிப்ஸ் 3: குழந்தையை கிழக்கு நோக்கி நிற்க வைத்து, உங்களுக்கு தெரிந்த, வயதில் மூத்த பெண்மணியை அழைத்தோ, அல்லது குழந்தையின் தாயோ கூட இந்த பரிகாரத்தை செய்யலாம். சனி, ஞாயிறுகளில் இதை செய்வது நல்லது. குழந்தை வழக்கமாக சாப்பிடும் கிண்ணத்தில் நீர் நிரப்பி அருகில் வைத்துக் கொள்ளவும். இப்போது உங்கள் கைகளால் குழந்தையின் உச்சி முதல் பாதம் வரை வருடிக்கொண்டே இந்த மந்திரத்தை உச்சரிக்கவும். 

மந்திரம்: ஓம் உவ்வும் சவ்வும் ஐயும் கிலியும் ஸ்வாஹா!! சகலதிருஷ்டியும் நசிநசி ஸ்வாஹா!! 

ஸ்வாஹா.. என்று சொல்லும்போது அந்த தண்ணீரில் கையை நனைக்கவும். ஸ்வாஹா என்பது தீய சக்திகளை அந்த நீரில் இறக்குவதாக அர்த்தம். பின்னர் அந்த நீரை வாசலில் ஒரு ஓரமாக கொட்டி விடவும் கையை கழுவிவிட்டு உள்ளே செல்லவும். 

எப்போதும் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டும் பொழுது அனைவருக்கும் தெரியும்படி தட்டில் வைத்து ஊட்டுவதை விட ஒரு சிறிய கிண்ணத்தில் ஊட்டுவது தான் நல்லது. முதலில் சிறிதளவு அதில் எடுத்துக்கொண்டு ஊட்டவும். காலியானதும் மீண்டும் சிறிது போட்டு எடுத்து வரலாம். மொத்தமாக எடுத்துக் கொண்டு வருவதை தவிர்ப்பதன் மூலம் மற்றவர்களுக்கு குழந்தை எவ்வளவு சாப்பிடுகிறது என்று தெரியாது. இந்த பரிகாரங்களை நம்பிக்கையுடன் செய்து வாருங்கள். கட்டாயம் சாப்பிட அடம் பிடிக்கும் உங்கள் செல்ல குழந்தை மெல்ல மெல்ல நன்றாக சாப்பிட துவங்கும். உங்களின் கவலையும் நீங்கும்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

Wednesday, 15 April 2020

இன்று தேய்பிறை அஷ்டமி! தீராத கடன் பிரச்சனையை தீர்க்கும் அஷ்டமி வழிபாட்டை, வீட்டிலிருந்தே எப்படி நிறைவு செய்வது.!!

தேய்பிறை அஷ்டமி தினமான இன்று 15.4.2020 நம்மில் பலபேர் சிவாலயங்களுக்கு சென்று பைரவரை வழிபடுவதை வழக்கமாக வைத்திருப்போம். ஆனால், இன்று கோவில்களும் திறக்கப்படவில்லை. நாம் கோவிலுக்கு செல்ல கூடிய சூழ்நிலையிலும் இல்லை. இப்படி இருக்க காலபைரவரின் ஆசீர்வாதத்தை முழுமையாகப் பெற வீட்டிலிருந்தே எப்படி வழிபாடு செய்யலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்ளவே இந்த பதிவு. 

இந்த அஷ்டமி தினத்தில் பைரவருக்கு வடைமாலை சாத்தி, அரளி பூவால் அர்ச்சனை செய்து, மிளகு சாதம் அல்லது தயிர் சாதத்தை நைவேத்யமாக படைத்து வழிபடுவதை பக்தர்கள் வழக்கமாக வைத்திருப்பார்கள். இப்படி வேண்டிக் கொண்டால் நமக்கு இருக்கும் கடன் தொல்லைகள் நீங்கும் என்பது ஐதீகம். 

ஆனால் இந்த சூழ்நிலையில் என்ன செய்வது? வீட்டில் இருந்தபடியே உங்களுக்கு தெரிந்த பைரவரின் ஸ்லோகங்களை உச்சரியுங்கள். ஸ்லோகங்கள் எதுவும் தெரியவில்லை என்றாலும் ‘ஓம் பைரவாய நம’ என்ற மந்திரத்தையாவது உச்சரித்துக் கொண்டே இருங்கள். தெருவில் வரும் நாய்களுக்கு உணவாக பிஸ்கட்டை வழங்கலாம். 

வீட்டிலேயே மிளகு சேர்த்த வெண்பொங்கல் தயாரித்து, அல்லது தயிர்சாதம் இவை இரண்டில் ஏதாவது ஒன்றை தயாரித்து நான்கு ஏழைகளுக்கு தானமாக கொடுக்கலாம். இன்றைக்கு இப்படி செய்யும் பட்சத்தில் பைரவரின் முழுமையான ஆசீர்வாதத்தை நம்மால் பெற முடியும் என்று சொல்கிறது சாஸ்திரம். 

கோவிலுக்கு சென்று பைரவரை வழிபட முடியாத சூழ்நிலையிலும் இப்படி ஒரு பரிகாரத்தை நாம் செய்வதன் மூலம், நமக்கு இருக்கும் தீராத நோய் தீரும். கடன் பிரச்சனைகள் விலகும். ஆரோக்கியம் அதிகரிக்கும். ஜாதகத்தில் இருக்கும் தோஷங்கள் விலகும். 

எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விடுபடலாம். இப்படி நம் வாழ்க்கையில் இருக்கும் பலவகைப்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வினை தேடித்தரும் இந்த அஷ்டமி தினத்தை யாரும் தவறவிடாதீர்கள்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

சித்தர்களை தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆசை உங்களில் யாருக்காவது உள்ளதா! எளிமையான இந்த பயிற்சி போதும்.!!

மனிதர்களுக்கு விடையே தெரியாத இரண்டு கேள்விகள் இந்த உலகத்தில் உள்ளது. அது என்ன கேள்வி! என்பதை பற்றி முதலில் நாம் தெரிந்து கொள்வோம். கடவுள் இருப்பது உண்மையா? இறந்த பின்பு நம்முடைய உயிர் என்ன ஆகிறது? இந்த இரண்டு கேள்விகளுக்கும் பல மகான்கள், பல விதமான பதில்களை சொல்லி இருந்தாலும், மனிதனாக பிறவி எடுத்தவருக்கு, இந்த கேள்விக்கான சரியான பதில் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பதிலே தெரியாத இந்த கேள்விக்கான விடையை சொன்னாலும், அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குமானது சாதாரண மனிதர்களுக்கு உண்டா என்பதும் சந்தேகம்தான்!. அறிவியல் ரீதியாகவும், பொதுவான கருத்துகள் சொல்லப்பட்டுள்ளதை தவிர, இதற்கான சந்தேகங்கள் இன்றளவும் இருந்து கொண்டே தான் இருக்கின்றது. 

மேலே குறிப்பிட்டுள்ள இந்த இரண்டு கேள்விகளுக்கும், இந்த பதிவின் மூலம் கூட கட்டாயமாக பதில் சொல்ல முடியாது. ஆனால் இந்த உலகத்தில் கடவுள் என்பவர் இல்லை என்று முடிவு செய்து விட்டால், கட்டாயமாக தவறு செய்பவர்கள் தங்களுடைய தவறுகளை நிறுத்திக் கொள்ளாமல் மேலும் மேலும், பயமில்லாமல், தங்களுடைய தவறுகளை செய்து கொண்டே தான் இருப்பார்கள்.’ 

இரண்டாவதாக நம்முடைய உயிர் நம்மை விட்டு பிரிந்த பின்பு, ‘அடுத்த ஜென்மம் எடுக்கும்’ என்ற நம்பிக்கை நமக்கு இல்லாவிட்டால் இந்த ஜென்மத்தில் பாவங்கள் தலைவிரித்து ஆடும். ஆகவே, தவறு செய்தால் கடவுள் தண்டிப்பார் என்ற ஒரு நம்பிக்கையும், பாவங்கள் செய்தால் அடுத்த ஜென்மத்தில்லோ அல்லது நரக லோகத்திலோ தண்டனை இருக்கும் என்ற பயத்திலுமாவது, தவறுகள் இந்த பூமியில் குறைக்கப்படுகின்றன. இப்படியிருக்க, ‘கடவுள் இருக்கின்றார்’ என்பதை நம்புவதும், ‘அடுத்த ஜென்மம் உண்டு என்பதை நம்புவதிலும்’ எந்த ஒரு தவறும் இல்லை. என்று தான் கூற வேண்டும். இது நம்முடைய வாழ்க்கைக்கு நல்லது என்று, நம் முன்னோர்கள் சொல்லியிருக்கும் எந்த ஒரு கருத்தும் பொய்யாகாது என்பதையும், நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 

ஆனால் இந்த கேள்விகளுக்கெல்லாம் கட்டாயமாக பதிலை நம்மால் பெற முடியும். யாரிடமிருந்து பதிலை தெரிந்து கொள்வது? இன்றளவும் இந்த பூமியில் சாகாவரம் பெற்று உலாவி வரும் சித்த புருஷர்களின் மூலம், விடை தெரியாத கேள்விகளுக்கு கூட, பதில் கட்டாயம் இருக்கும். விடையே இல்லாத சில கேள்விகளுக்கும், பதிலைத் தெரிந்து கொள்ளலாம். 

சித்தர்களை சந்திப்பது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல. ஆனால் நம்முடைய முன்னோர்கள் சித்தர்களை தரிசனம் செய்வதற்காக ஒரு பயிற்சியை நமக்கு சொல்லிவிட்டுத்தான் சென்றுள்ளார்கள். அது என்ன பயிற்சி என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். 

நம்மில் பல பேருக்கு சித்தர்களை தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஒரு சித்தர்ரையாவது, ஒருமுறையாவது, வாழ்க்கையில் தரிசனம் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பயிற்சியை தாராளமாக செய்யலாம். 

18 சித்தர்களில் யாரை சந்திப்பது என்ற குழப்பம் கட்டாயம் எல்லோருக்கும் வரும். ‘ஞானக் கோவை’ என்னும் சித்தர்கள் பாடலை தொடர்ந்து படித்து வந்தால் எந்த சித்தரை காண வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு தோன்றிவிடும். எந்த சித்தரை நீங்கள் காண வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அவர் தான் உங்களின் ஜென்மம் பத்தின ரகசியத்தை உங்களுக்காக சொல்லப்போகும் சித்த புருஷர். 

இந்த பயிற்சிக்கு முதலில் ஒரு மண் அகல் தீபத்தில், பசு நெய் ஊற்றி, தாமரைதண்டு திரி போட்டு, நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் இருந்து 8அடி தூரத்தில் அந்த தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள். ஒரு செம்பு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரையும் எடுத்து அந்த விளக்கிற்கு பக்கத்தில் வைத்து விடுங்கள். 

ஒரு மரப்பலகையின் மீதோ அல்லது பாயின் மீதோ, நீங்கள் அமர்ந்து கொள்ளுங்கள்.(தீபத்திலிருந்து 8அடி தள்ளி அமர்ந்து கொள்ள வேண்டும்.) நீங்கள் ஏற்றி வைத்திருக்கும் தீபத்தின் ஒளி, உங்களது நெற்றியின் புருவ நேர்கோட்டில் இருக்கும்படி அமர வேண்டும். நீங்கள் எந்த சித்தரை சந்திக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அந்த சித்தர் பெயரை மனதார ஒருமுறை உச்சரித்து விட்டு, ஆசி பெற்றுக்கொண்டு, அதன்பின்பு 

‘ஓம் சிங் ரங் அங் சிங்’ 

என்ற இந்த மந்திரத்தை, தீபத்தின் ஜோதி சுடரை பார்த்தபடி, உங்கள் மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். இந்த மந்திரம் சித்தர்ரை உங்கள் வசம் ஈர்க்கக்கூடிய மந்திரமாக சொல்லப்பட்டுள்ளது. பிரபஞ்சத்தில் உலாவிக் கொண்டிருக்கும் சித்தர் பெருமக்களின் ஜீவாத்மாக்களை வசீகரிக்கும் தன்மையும் இந்த மந்திரத்திற்கு உண்டு. 

இந்த பயிற்சியை நீங்கள் ஆரம்பிக்கும் தினம் அமாவாசை அன்று இருக்க வேண்டும். தொடர்ந்து 90 நாட்கள் இந்த பயிற்சியை செய்து பாருங்கள். நீங்கள் இந்த பயிற்சியை செய்ய வேண்டிய நேரம் இரவு 8 மணியிலிருந்து 9 மணிவரை. மந்திரத்தை இத்தனை முறைதான் உச்சரிக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. ஒரு மணி நேரம் வரை உங்களால் எவ்வளவு முடியுமோ அத்தனை முறையும் உச்சரிக்கலாம். 

இந்தப் பயிற்சி முடித்த பின்பு, இரவு பழங்களை சாப்பிடலாம். அதன்பின்பு தீபத்தின் அருகில், செம்பில் வைத்துள்ள நீரை எடுத்து குடித்து விடவும். பழம் இல்லை என்றால், பால்சாதம் சாப்பிடலாம். முடிந்த வரை பயிற்சி செய்யும் இந்த 90 நாட்களுக்கும், உப்பு, புளி, காரம் இவைகளை குறைத்துக்கொள்வது அவசியம். அசைவ உணவு கட்டாயமாக சாப்பிடக்கூடாது. எந்த விதமான கெட்ட பழக்கத்திற்கும் செல்லக்கூடாது. 

இந்த பயிற்சியை மேற்கொண்டால் 90 நாட்களுக்குள் ஒரு சித்தரின் தரிசனம் உங்களுக்கு கிடைக்கும் என்று நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. அப்படி 90 நாட்களில் சித்தர் தரிசனம் கிடைக்கவில்லை என்றால் தொடர்ந்து இந்த பயிற்சியினை செய்து வரலாம். நிச்சயமாக அதிசயமான ஒரு காட்சியை கட்டாயமாக நீங்கள் காணப் போவது உறுதி என்பதில் மட்டும் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இதில் எந்த விதமான மாய மந்திர வித்தைகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

பித்ரு தோஷத்திற்கும் நிரந்தரத் தீர்வைத் தரும் ‘நவகலசயாகம்.!!

இன்றைய சூழ்நிலையில் யாரைப் பார்த்தாலும் பித்ரு சாபம் இருக்கிறது. பித்ரு தோஷம் இருக்கிறது. பரிகாரம் செய்ய வேண்டும். ‘எந்த ஜென்மத்தில் செய்த என்ன பாவமோ! இந்த ஜென்மத்தில் தீர்க்க முடியாத பல பிரச்சினைகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்! என்ற புலம்பலை நம்மில் பல பேர் பல பேரிடம் கேட்டிருப்போம். முதலில் பித்ரு தோஷம், பித்ரு சாபம் என்றால் என்ன என்பதைப் பற்றிய சந்தேகத்தை தீர்த்துக் கொள்வோம். அதன்பின்பு இதற்கான பரிகாரத்தை பார்க்கலாம். 

ஒருவருடைய ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 3, 5, 9 ஆம் இடங்களில் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால் அவருக்கு கட்டாயம் பித்ரு தோஷம், பித்ரு சாபம் இருக்கிறது என்பதை குறிக்கிறது. ராகு இருந்தால் அப்பா வழி முன்னோர்களால் பித்ரு சாபம். கேது இருந்தால் அம்மா வழி முன்னோர்களால் பித்ரு சாபம் இருக்கிறது என்பதை குறிக்கும். 

ஒவ்வொரு தலைமுறையிலும் தற்கொலைகளும், கொலைகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஒரு தலைமுறையில் இயற்கையான மரணத்தை அடையாதவர்களின் ஆத்மா, மறுபிறவி அடையாமல் இந்த பூலோகத்திலேயே திரிந்து கொண்டிருக்கும். அந்த ஆத்மாவானது நான்காம் ஐந்தாம் தலைமுறையினரை பிடிக்கும். அதாவது நான்கு தலைமுறைக்கு முன்னாள் நடந்த அகால மரணத்திற்கான சாபத்தை, அனுபவிக்கப் போவது நான்கு தலைமுறைக்கு தள்ளியிருக்கும் சந்ததியினரே. 

அதாவது பாட்டன் பூட்டன் சொத்தோடு சேர்த்து, அந்தப் பாவங்களையும் சுமக்கப் போவது நான்காவது தலைமுறை தான். உதாரணத்திற்கு, என்னேடைய அப்பாவுடைய தாத்தாவின் சகோதரனுக்கு அவருடைய ஜாதகப்படி 80 வயது வரை வாழ வேண்டும். ஆனால் அந்த நபர் தனது 20ஆம் வயதிலேயே தற்கொலையினாலோ அல்லது கொலையானாலோ உயிரை இழந்துவிட்டார். 

இப்படியாக அல்பாயிசில் தன்னுடைய உயிரை இழந்த, அந்த நபர், எந்த இடத்தில் இறந்தாரோ! அவர் தன்னுடைய 80 வயதுவரை ஆவியாக அதே இடத்தில்தான் இருப்பார். அவருடைய ஆயுள் எப்போது முழுமையாக முடிகிறதோ அப்போது தான் அவரால் எமலோகத்திற்கு செல்ல முடியும். 

அவர் இறந்த நாளிலிருந்து தனது 80 வயது வரை எந்த ஒரு நல்லது, கெட்டதையும் அனுபவிக்காமல் ஆவியாக சுற்றித்திரிந்ததால், அவர் எமலோகத்திலும் ஒதுக்கப்பட்டவராகத்தான் இருப்பார். இப்படிப்பட்ட சம்பவமானது ஒருவருடைய பரம்பரையில் நான்கு நபரையோ, ஐந்து நபரையோ தாண்டினால் அது நான்காம் தலை முறைகோ, ஐந்தாம் தலைமுறைக்கோ பித்ரு தோஷமாக வந்துவிடுகிறது இன்று நம்முடைய பழமையான நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. 

இப்படியாக ஒருவருக்கு அப்பா வழியில் பித்ருதோஷம் இருக்கிறது என்றால் அப்பா உடன் பிறந்தவர்களுக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும் பித்ரு தோஷம் இருக்கும் என்பதே உண்மை. இந்த தோஷமானது நீங்கள் எவ்வளவுதான் நல்ல காரியத்தில் ஈடுபட்டாலும் அதற்கான பலனை உங்களுக்கு கொண்டுவந்து சேர்க்கவே சேர்க்காது. 

இந்த பித்ரு தோஷமானது நீங்க, நெல்லை மாவட்டத்தில், ராமநாதபுரம் அருகில் இருக்கும் ‘விஜயாபதி’ என்கின்ற கிராமத்தில் ‘ஸ்ரீ விசுவாமித்திர மகாலிங்க சுவாமி’ திருக்கோவில் ‘நவகலசயாகம்’ செய்ய வேண்டும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இது ஒரு கடலோர கிராமம். 

இந்த கோவிலுக்கு ஒருமுறை சென்று இந்த நவகலச யாகத்தை குடும்பத்தோடு செய்தால், 100 நாட்களுக்குள் உங்கள் குடும்பத்திற்கு இருக்கும் நீண்டகால பிரச்சனையான பித்ரு தோஷம் நீங்கும் என்று நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. இப்படியாக இந்த யாகத்தை செய்துவிட்டு வந்தாலும், அதன்பின்னர் ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் உங்களது வீட்டின் அருகில் இருக்கும் பழமையான சிவாலயங்களுக்கு சென்று, 9 ஏழைகளுக்கு அன்னதானம் செய்யவேண்டும். 

இப்படியாக 12 அமாவாசை அன்றும் தொடர்ந்து செய்து வந்தால் உங்களுக்கு இருக்கும் பித்ரு தோஷம் நீங்கி, உங்களுடைய வாழ்க்கை வளமாக மாறும் என்பது நம்பிக்கைக்குரிய ஒன்று. பித்ரு தோஷத்தால் பிரச்சனையை எதிர் கொள்வார்கள் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

Tuesday, 14 April 2020

நீங்கள் உடுத்திய துணியை தானமாக மற்றவர்களுக்கு கொடுத்தால் இது தான் நடக்கும் தெரியுமா?

தானம் என்பது புண்ணிய காரியம் தான் என்றாலும் பழைய துணி மணிகளை தானம் அளிப்பதில் நிறைய சிக்கல்கள் உண்டு. அதனால் தான் நம் முன்னோர்கள் பழைய துணியை தானம் அளிக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர். நாம் அதை வைத்து என்ன செய்வது என்று தெரியாமல் தானமாகவோ, பாத்திரத்திற்கோ போட்டு விடுகிறோம். இல்லாதவர்களுக்கு தானே கொடுக்க போகிறோம்? அதில் என்ன வந்துவிட போகிறது என்று எண்ணி விடுகிறோம். இதில் ஜோதிட ரீதியாக, ஆன்மீக ரீதியாக சில தேவையற்ற இன்னல்களை சந்திக்க நேரிடும் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? ஒருவர் உடுத்திய துணியை அடுத்தவருக்கு வழங்குவது என்ன சிக்கல்களை வாழ்வில் உண்டாக்கும் என்று இப்பதிவில் காணலாம். 

முந்தைய காலங்களில் வசியம் செய்பவர்கள் பெருகி இருந்தனர். பல திறமை மிக்க மாந்திரீகர்களும், தாந்திரீகர்களும் வாழ்ந்த காலம் அது. அச்சமயத்தில் ஒருவரின் பழைய உபயோகப்படுத்திய துணிகள், காலடி மண், தலைமுடி, நகங்கள் போன்றவை கிடைத்தால் அதை வைத்து தவறான வழிமுறைகளை பயன்படுத்தி ஏவல்களில் ஈடுபட்டு வந்தனர். ஒருவரது ஆடை என்பது அவர்களின் மூச்சுக் காற்று, ஸ்பரிசம், உடலில் இருந்து வெளியேறும் கழிவுகள், வியர்வைத் துளிகள் என்று அனைத்தும் கலந்திருக்கும். நீங்கள் என்ன தான் துவைத்தாலும் நிச்சயம் எங்கேனும் ஓரிடத்தில் உங்களை சார்ந்த விஷயங்கள் அதில் ஒட்டி இருக்கும். இவற்றை அடுத்தவர்கள் பயன்படுத்தினால் தரித்திரம் ஏற்படும். 

நாம் ஒருவருக்கு மனமுவந்து இவற்றை வழங்குகிறோம். ஆனால் இவைகள் சேருமிடம் எப்படி இருக்கும் என்று நமக்கு தெரியாது அல்லவா? அந்தக் காலம் போல இந்தக் காலத்தில் பில்லி, சூனியம், ஏவல் என்பது பெரிதாக பார்க்கப்படவில்லை. அத்தகைய திறமை மிக்க மாந்திரீகர்கள் இக்காலகட்டத்தில் குறைவுதான். அதனால் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. இருப்பினும் உங்களின் வியர்வை பட்ட அந்த துணி யாருக்கு போய் சேர்கிறதோ, அவர்களிடத்தில் இருக்கும் தரித்திரம் உங்களையும் விட்டுவைக்காத நிலை ஏற்படலாம். உதாரணத்திற்கு உங்களுடைய துணி தரித்திரத்தை கொண்ட ஒருவரிடம் சேர்ந்து விட்டால் அதில் உங்களுக்கும் நிச்சயம் ஒரு பங்கு வந்து சேரும். அவரின் கர்ம வினைக்கு அவர் பரம ஏழையாகவும், மிகவும் துன்பத்தை அனுபவிப்பவராகவும் இருக்கலாம். அவர்களிடம் தரித்திரம், பீடை என்று சொல்லப்படுகின்ற துர் தேவதைகள் வாசம் செய்வார்கள். 

இது அவர்களின் கெட்ட நேரமாக இருக்கும். அதில் ஒரு பங்கு உங்களையும் ஆட்டி வைக்கும். உங்கள் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படலாம், எடுத்த காரியங்களில் தோல்விகளை தழுவலாம், முன்னேற்றத்தில் தடை ஏற்படலாம். நீங்கள் எந்த தவறும் செய்திருக்க மாட்டீர்கள். ஆனால் உங்களின் வியர்வை பட்ட துணியானது சேருமிடம் சரியான இடத்தில் இருந்து விட்டால் பிரச்சினை இல்லை. இல்லாதபட்சத்தில் உங்களுக்கும் அந்த கஷ்டத்தில் நிச்சயம் பங்கு வரும். இதனால் தான் நம் முன்னோர்கள் துணிமணிகளை தானமாக வழங்குவதை தவிர்த்து வந்தனர். ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்பதற்கிணங்க நம் முன்னோர்கள் போகி பண்டிகை அன்று பழைய துணிகளை அனைத்தும் போட்டு கொளுத்தி விடுவார்கள். இதுவே சரியான முறையாகும். 

ஒருவேளை தானம் கொடுப்பவர்களுக்கு கிரக நிலைகள் சரியாக இல்லாமல், அவர்களுக்கு கெட்ட நேரம் இருந்தால் நீங்கள் தானம் கொடுப்பவருக்கு அது பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஆக தானம் கொடுத்தாலும் சரி, வாங்குவதானாலும் சரி அவரவர்களின் கிரக நிலை, காலநிலை சரியாக இல்லாத பட்சத்தில் நிச்சயம் பிரச்சனைகளை உண்டாக்கும். இதனை தவிர்ப்பதே உத்தமம். பிறரால் நமக்கோ, நம்மால் பிறருக்கோ எந்தவிதமான துன்பமும் ஏற்பட்டுவிடக்கூடாது. தானம் என்பது நல்ல காரியம் தான். தானம் கொடுப்பதற்கு பல வகைகள் நம்மிடம் இருக்கின்றன. எவ்வளவோ பேர் நல்ல உபயோகப்படுத்தாத துணிமணிகளை கூட தானமாக வழங்குகின்றனர். நீங்கள் தானம் கொடுப்பதை தவறு என்று கூறவில்லை. இதற்கு மாற்று வழி ஒன்று உள்ளது. 

துணிமணிகள் நிறைய இருக்கிறது, வீணாக்குவதற்கு மனமில்லை, எனவே இல்லாத ஒருவருக்கு தானமாக கொடுக்கிறோம், அதில் என்ன தவறு இருக்கிறது என்று யோசிக்கும் பட்சத்தில், அதற்கு நல்ல வழி ஒன்று உள்ளது. நீங்கள் என்ன தான் சோப்பு போட்டு சுத்தமாக துவைத்து வைத்து கொடுத்தாலும் அதில் பிரயோஜனமில்லை. அதற்கு பதிலாக கடல்நீரில் இந்த துணிகளை எல்லாம் ஊறவைத்த பின்னர் துவைத்து காயவைத்தால் எத்தகைய மாந்திரீகர்களாலும் உங்களை ஒன்றும் செய்ய முடியாது. உங்களை சார்ந்த எந்த விஷயங்களும் அந்தத் துணியில் இருக்காது. கடல் நீருக்கு தேடி அலையவும் தேவையில்லை. வீட்டில் இருக்கும் கல் உப்பை சிறிதளவு தண்ணீரில் போட்டு ஊற வைத்தாலே போதும். கடல் நீரிலும் உப்பு தான் உள்ளது. இந்த உப்பு மிகவும் சக்தி வாய்ந்தது. நீங்கள் ரசாயன கலவை ஏற்றப்பட்ட சோப்புகளை பயன்படுத்தினாலும் தீராத தரித்திரம் மகாலட்சுமியின் அம்சமான கல் உப்பிற்கு உண்டு என்பது தான் உண்மை. உடுத்திய துணிகளை தானம் வழங்குவதை முடிந்த வரை தவிர்த்திடுங்கள். தவிர்க்க முடியாவிட்டால் உப்பு நீரில் ஊற வைத்து துவைத்து காயவைத்து பின்னர் தானம் அளியுங்கள். அதுவே தானம் கொடுப்பவர்களுக்கும், அதனை வாங்குபவர்களுக்கும் நல்லது...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

Monday, 13 April 2020

உங்களின் கால் பாதங்கள் இப்படி இருந்தால், கட்டாயம் லட்சுமிதேவி உங்கள் வீட்டில் தங்கவே மாட்டாள்.!!

நம்மில் பலபேர் நம்முடைய பாதங்களை ஒரு பொருட்டாகவே நினைப்பது கிடையாது. சொல்லப்போனால் லட்சுமி தேவி வாசம் செய்யும் இடமே நம்முடைய கால் பாதங்களில் தான் என்பது பலபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை. தேவையற்ற பொருட்களை கைகளால் எடுக்காமல், கால்களால் எட்டி உதைப்பது, தள்ளி விடுவது, போன்ற பழக்கம் உங்களிடம் இருந்தால் இன்றோடு அதை நிறுத்தி விடுங்கள். அது உங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தேடித் தரக் கூடிய ஒரு பழக்கம்.

நம்முடைய முன்னோர்கள் கால்களைக் கழுவும் போது சுத்தமாக தேய்த்து கழுவ வேண்டும். பின்னங்கால்களில் தண்ணீர் படாமல் இருக்கக் கூடாது. குதிகால்களில் அழுக்கு சேர்ந்து இருக்கக்கூடாது. என்பதை நமக்கு சொல்லித் தந்துள்ளார்கள். சரியாக பின்னங் கால்களை கழுவாமல் விட்டால், சனிபகவானால் பிரச்சனைகள் வரக்கூடும் என்ற ஒரு கருத்தும் உண்டு. இப்படியெல்லாம் சொல்லி நம்மை எதற்காக பயமுறுத்தி இருக்கிறார்கள், என்ற உண்மை உங்களுக்கு தெரியுமா? குதிகால்களில் லட்சுமி தேவி வாசம் செய்கிறாள். அந்த இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

புதியதாக திருமணமாகி வீட்டிற்குள் அடி எடுத்து வைக்கும் பெண், முதலில் வலது காலை எடுத்து வைக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். அதன்பின்பு ஒரு ‘படி நெல்லை’ வைத்து அந்த நெல்லினை, வீட்டிற்குள் வரக்கூடிய புதுப்பெண் வலது காலால் எட்டி உதைத்து விட்டு வர வேண்டும் என்ற ஒரு சம்பிரதாயமும் உண்டு. இது எதற்காக?

நம்முடைய வலது கால் பாதத்தில் லகட்சுமி தேவியும், நாராயணரும் வாசம் செய்வதாக ஐதீகம். இடதுகாலில் லட்சுமி தேவியும் மூதேவியும் வாசம் செய்வதாக ஐதீகம். இதனால்தான் லக்ஷ்மி வாசம் செய்யும் வலது காலை முதலில் உள்ளே எடுத்து வைக்க வேண்டும் என்றும், மகாலட்சுமி வாசம் கொண்டிருக்கும் பாதத்தை, வீட்டின் தன தானியத்தை சேர்க்கும் படி, நெல்லின் மீது படவேண்டும் என்பதற்காக தான் இந்த ஐதீகம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

உங்களது கால் பாதங்களை அதிர்ந்து கீழே வைக்கும்போது மூதேவியின் அம்சம் வெளிப்படும். அதே பாதங்களை மெதுவான முறையில் தரையில் வைத்து நடக்கும் போது மகாலக்ஷ்மியின் அம்சம் வெளிப்படும் என்பதுதான் உண்மை.

இதேபோல் நம்முடைய கால், தெரியாமல் யார் மீது பட்டுவிட்டால் கூட அவர்களை தொட்டு நம் கண்களில் கும்பிட்டுக் கொள்வோம். இது எதற்காக தெரியுமா? அப்படி அவர்களை தொட்டு கும்பிடாமல் விட்டு விட்டோமேயுனால், நம் பாதங்களில் வசிக்கும் மகாலட்சுமி, நம் கால் யார்மீது பட்டதோ அவர்களிடத்தில் சென்றுவிடுவார்கள். ‘உங்களது கால் பாதங்களில் வசிக்கும் மகாலட்சுமியை நீங்கள் அலட்சியப்படுத்துவதுதன் பொருள் இதில் அமைந்துள்ளது’.

கோமாதாவாக வழிபடும் பசுவின் பாதங்களில் லட்சுமி தேவி வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது. இதனால்தான் புதியதாக வீடு கட்டிய பின்பு, முதலில் பசுவை வீட்டிற்குள் வரவைக்கிறார்கள்.

பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என்றாலும், நம்முடைய தலையை கொண்டுபோய் பாதத்தில் தான் வைக்கின்றோம். பாதத்திற்கு அத்தனை மரியாதை உண்டு என்பதை நாம் இன்றுவரை சிந்தித்ததே இல்லை. சில ரிஷிகளின் பாதங்களை, சாதாரண மனிதர்கள் தொடுவதற்கு அனுமதி செய்ய மாட்டார்கள். காரணம் அவர்களது பாதங்களில் இருக்கும் அதீத சக்தியானது அடுத்தவர்களுக்கு சென்று விடக்கூடாது என்பதற்காகத்தான்.

குறிப்பாக குதிகாலில் யோகலட்சுமி  வாசம் செய்வதாகவும் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. முடிந்தவரை உங்களது கால் பாதங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். இதனால்தான் திருஷ்டி சுத்தி போட்டதை தாண்ட கூடாது. எந்த ஒரு பொருட்கள் நடுவில் இருக்கும் போதும், அதை தாண்டி செல்ல கூடாது. கெட்டதை மிதிக்கக் கூடாது. என்று சொல்லுவார்கள். ஏனென்றால் காலில் இருக்கும் லக்ஷ்மி தேவியானவள் நம்மை விட்டு விலகி சென்று விடுவாள் என்பதற்காகத்தான்.

முடிந்த வரை உங்களது பாதங்களை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அதை வேகமாக தரையில் வைத்து நடப்பது, கால்களை ஆட்டிக்கொண்டே இருப்பது, ஒரு கால் மீது மற்றொரு காலை போட்டு தேய்த்துக் கொண்டே இருப்பது, இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது. இந்த செயல்களில் எல்லாம் ஈடுபட்டால் கட்டாயமாக உங்களது பாதங்களில் லட்சுமி தேவி வாசம் செய்ய மாட்டாள். தரித்திரம் உண்டாகும் என்பது தான் உண்மை...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

எந்த பிரச்சனைக்கு, என்ன பரிகாரம் செய்யலாம்? உங்களின் எல்லா வகையான கஷ்டத்திற்கும் தீர்வு இந்த ஒரே பதிவில்.!!

மனிதனாக பிறந்து விட்டால் கஷ்டத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியாது. ஆனால் அதற்கான பரிகாரத்தை சுலபமாக கண்டுபிடித்து விடலாம். அப்படியிருக்க உங்களுக்கு என்ன கஷ்டம் இருக்கிறது? அதற்கான சுலபமான, இறைவனிடத்தில் செய்யக் கூடிய பரிகாரங்கள் என்ன என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

கொடுத்த கடன் விரைவாக வசூலாக வேண்டும் என்றால், தொடர்ந்து 8 செவ்வாய்க்கிழமைகளில் பைரவர் சந்நிதியில், 2 நெய்தீபம் ஏற்றி சஹஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும்.

தொழிலில் இருக்கும் பிரச்சனைகள் தீர, வழக்கு உங்களுக்கு சாதகமாக முடிய, பில்லி, சூனியம் ஏவல், போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட, தொடர்ந்து 48 நாட்கள் சக்கரத்தாழ்வார் சன்னதியில் 2 நெய் தீபம் ஏற்றி வைத்து, 12 முறை வலம் வந்து வழிபட வேண்டும். சக்கரத்தாழ்வார் சன்னதியில் தொடர்ந்து 27 செவ்வாய்க்கிழமைகள் 2 நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் கொடுத்த கடன் விரைவில் வசூலாகும்.

உங்களது வீட்டில் கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்திகளின் மூலம் பாதிப்புக்கள் இருப்பது தெரியவந்தால், வெள்ளெருக்கு விநாயகரை கைக்கு எட்டாத இடத்தில் மறைவாக வைத்து விடுங்கள்.

கண்திருஷ்டி உங்களை விட்டு விலக வேண்டும் என்றால், அம்மன் கோவில்களில் இருக்கும் சூலத்தில் மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து மூன்று எலுமிச்சை பழங்களை சூலத்தில் குத்தி வழிபட்டு வர விரைவில் கண் திருஷ்டி நீங்கும்.

தினம்தோறும் நரசிம்மர் சன்னிதிக்கு சென்று தீபம் ஏற்றி வழிபட்டு வர திருமணத்தடை நீங்கும். ஜாதகத்தில் திருமணத்தடை காண தோஷங்கள் இருந்தாலும் விரைவாக நல்ல வரன் அமையும்.

தீர்க்கவே முடியாத எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் அது ஸ்ரீயோக நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டால் தீர்ந்துவிடும். நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வரலாம்.

கணவன் மனைவி இருவருக்கும் இருக்கும் பிரச்சனைகள் தீர வெள்ளிக்கிழமைகளில் நவகிரக சன்னிதிக்கு சென்று நல்லெண்ணெய் தீபத்தில் இரண்டு கற்கண்டு போட்டு தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

சிவன் கோவில்களில் இருக்கும் வன்னி மரத்தையும், வில்வமரத்தின் ஐயும் 27 முறை வலம் வருவது நல்ல பலனை தரும். வழக்குகள் உங்கள் பக்கம் தீர்ப்பாகும். இந்த இரண்டு மரங்களுக்கும் நம் கஷ்டங்களை கேட்கும் சக்தி உள்ளதாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

பிரதோஷ தினத்தன்று ஈசானிய மூலையில் ஈசனுக்கு காட்டப்படும் தீபாராதனையை கண்ணார கண்டு, தரிசனம் செய்தால் தீர்க்க முடியாத நோய்களும் தீரும். வறுமை நீங்கி ஐஸ்வர்யம் பிறக்கும்.

ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றுவது சிறப்பு. அதிலும் குறிப்பாக கடைசி அரைமணி நேர அமிர்தகடிகை நேரத்தில், நெய் விளக்கு தீபம் ஏற்றுவது இன்னும் சிறப்பானது.

வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியிலிருந்து 12 மணிக்குள் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு தாமரை தண்டு திரி போட்டு, நெய் தீபமேற்றி வழிபட எப்படிப்பட்ட தோஷமாக இருந்தாலும், இருந்தாலும் அது விலகிவிடும். முன்னோர்களால் ஏற்பட்ட சாபம், நீங்கள் செய்த பாவத்திற்கான விமோர்சனம், இப்படி உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்திற்கும் சாபத்தை நீங்க இது ஒரு நல்ல பரிகாரம்.

ஹஸ்த நட்சத்திரத்தன்று துர்க்கை அம்மனுக்கு சிகப்பு பட்டுத்துணியை சாத்த வேண்டும். சிகப்பு தாமரை மலரை அணிவிக்க வேண்டும். 27 எலுமிச்சைப் பழங்களை கொண்ட மாலையை தயார் செய்து, குங்கும அர்ச்சனை செய்து அந்த குங்குமத்தை திருமணமாகாத பெண்கள் தொடர்ந்து நெற்றியில் வைத்து வந்தால் நல்ல கணவர் அமைவார் என்பது ஐதீகம்.

சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு எருக்கம் திரி போட்டு விளக்கு ஏற்றி வழிபட மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

இரட்டைப் பிள்ளையாருக்கு ரோகிணி நட்சத்திரத்தில் சந்தனகாப்பு செய்து வழிபட கடன் தொல்லை நீங்கும்.

வேலையில்லாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்கள் முருகப்பெருமானுக்கு செவ்வாய்க்கிழமை தோறும் 2 நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் விரைவில் உங்கள் கையில் வேலை கிடைத்துவிடும்.

வண்டியை எடுத்தாலே விபத்து நடக்கும் சிலருக்கு! இப்படிப்பட்டவர்கள் அவிட்ட நட்சத்திரத்தன்று முருகப் பெருமானுக்கு வேலில் எலுமிச்சை பழத்தை சொருகி அர்ச்சனை செய்து வாருங்கள்.

ருத்ராட்சம், துளசிச் செடி, வில்வமரம், சாளகிராமம், சங்கு, வலம்புரி சங்கு இவைகள் உள்ள இடத்தில் கெட்ட சக்திகள் அண்டாது.

குழந்தை வரம் வேண்டி இருப்பவர்கள் 6 தேய்பிறை அஷ்டமி தினத்தில் காலபைரவருக்கு சஹஸ்ரநாமம் அர்ச்சனை செய்து வர உடனடியாக நல்ல பலன் கிடைக்கும்.

குழந்தை வரம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தியை நினைத்து மனதார விரதமிருந்து, தொடர்ந்து நெய்தீபம் ஏற்றிவர 192 நாட்களில், கருத்தரிக்கலாம் என்ற ஐதீகம் நம் சாஸ்திரத்தில் உள்ளது.

எப்படிப்பட்ட கிரக தோஷமாக இருந்தாலும் தினம்தோறும் சுந்தரகாண்டம் படித்து வந்தால் அந்த தோஷத்திற்கான வீரியம் குறையும். குலதெய்வம் குற்றம் தீர தினம் தோறும் வீட்டில் வாழைத்தண்டு திரி தீபம் ஏற்றவேண்டும்.

வளமான வாழ்க்கையை பெற வேண்டுமென்றால் பவுர்ணமி தோறும் நடைபெறும் சத்தியநாராயண பூஜையில் கலந்து கொள்வது மிகவும் நல்லது.

சர்ப்ப தோஷம் நீங்க பெருமாள் கோவிலில் இருக்கும் கருடாழ்வார் சந்நிதியே மூன்று முறை வலம் வந்து 2 நெய் தீபமேற்றி வழிபடவேண்டும் கால சர்ப்ப தோஷம் நீங்கும்.

இந்த பரிகாரங்கள் அனைத்துமே பல பேருக்கு சொல்லப்பட்டு, பலனை தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நம்பிக்கையோடு இறைவனை நினைத்து செய்யப்படும் பரிகாரங்கள் எதுவுமே பொய்யாகாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

நம்முடைய கஷ்டங்கள் தீர, இந்தத் தமிழ் வருடப் பிறப்பை எப்படி வரவேற்பது நல்லது தெரியுமா?

தமிழ் புத்தாண்டு 14.4.2020 சித்திரை ( 1 ) செவ்வாய்க்கிழமை

நமக்கு இருக்கும் இன்றைய சூழ்நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும், வரப்போகும் சார்வரி  வருட தமிழ் புத்தாண்டை கட்டாயமாக சந்தோஷமாகத்தான் வரவேற்க வேண்டும். சந்தோஷமாக தொடங்கும் எந்த ஒரு செயலும், வெற்றியில் போய் முடியும் என்பதை நாம் எல்லோரும் அறிந்திருப்போம். அதன்படி, இன்றைக்கு நமக்கு இருக்கும் கஷ்டங்கள் அனைத்துமே, வரப்போகும் தமிழ்ப்புத்தாண்டில் கட்டாயமாக நம்மை விட்டு விலகும் என்ற நம்பிக்கையோடு, இந்த வருடத்தை வரவேற்போம். யாரும் வெளியில் செல்ல முடியாத நிலை, புத்தாண்டிற்கு தேவையான பூஜை பொருட்களை வாங்க முடியாத நிலை, இறைவனுக்கு நைவேத்தியமாகப் படைக்க, பிரசாதம் செய்வதற்கு கூட சிலருக்கு பொருட்கள் கிடைக்காத சூழ்நிலையும் இன்று உள்ளது. இருந்தாலும் தமிழ் புத்தாண்டை சுலபமாக, சிறப்பாக எப்படிக் கொண்டாடலாம் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

எப்பவும் போல் பண்டிகை என்றால், பண்டிகைக்கு முந்தைய தினமே, நம்முடைய வீட்டையும், பூஜை அறையையும் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழ் புத்தாண்டு அன்று பிரம்ம முகூர்த்த வேளையிலேயே கண்விழித்து, சுத்தபத்தமாக குளித்து முடித்துவிட்டு, உடல் தூய்மையோடு சேர்ந்த மன தூய்மையையும் கொண்டு இறைவனை இருகரம் கூப்பி இந்த உலகுக்கு இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் நீங்க வேண்டும் என்று பொது நலத்தோடு ஒரு கோரிக்கையை வைத்தாலே போதும். உங்களுக்கு எது தேவையோ, அதை அந்த ஆண்டவனே உங்களுக்காக தந்துவிடுவார். ஏனென்றால் சுயநலமில்லாமல் சிந்திக்கும் மனதில் அந்த இறைவனே வந்து குடி கொள்வார் என்பதை மறந்து விடாதீர்கள். 

சரி. வழிபாட்டு முறைக்கு செல்லலாமா? தமிழ் புத்தாண்டு என்றாலே அறுசுவை உணவை சமைத்து இறைவனுக்கு படைத்து, அதன் பின்பு நாமும் சாப்பிட வேண்டும் என்பதுதான் நம்முடைய வழக்கம். ஆனால் இந்த சூழ்நிலையில் அறுசுவை உணவை எல்லாம் சமைக்க முடியுமா என்பது தெரியவில்லை? பிரசாதம் செய்வதற்காக உங்கள் வீட்டில் என்ன பொருள் இருக்கின்றதோ, அதை வைத்து ஒரு நைவேத்தியத்தை தயார் செய்து கொள்ளுங்கள். சர்க்கரை பொங்கல், பாயசம், கேசரி எதுவாக இருந்தாலும் இறைவன் முழுமனதோடு ஏற்றுக் கொள்வார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. கற்கண்டு வைத்து நைவேத்தியம் செய்தால் கூட போதும். 

பிரசாதத்தோடு சேர்த்து உங்கள் வீட்டில் இருக்கும் தன தானியத்திற்கு  எந்த ஒரு குறைபாடும் இருக்கக்கூடாது என்று மனதார வேண்டிக்கொண்டு, ஒரு தாம்புல தட்டில் ஒரு கைப்பிடி அளவு உப்பு, ஒரு கைப்பிடி அளவு துவரம்பருப்பு, ஒரு கைப்பிடி அளவு பச்சரிசி, மஞ்சள், குங்குமம் இவைகளை வைத்து மனதார இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள். 

இந்த வழிபாடுடானது, இன்றைக்கு நமக்கு இருக்கும் சூழ்நிலையானது விரைவாக மறைந்து, நம் வீட்டில் தன தானியத்திற்கு என்றைக்கும் தட்டுப்பாடு ஏற்பட கூடாது. அரிசி, பருப்பு, உப்பு போன்ற மற்ற உணவு சம்பந்தப்பட்ட அனைத்து பொருட்களும் நிரம்பி வழிய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வேண்டுதல். 

அடுத்ததாக இன்றைய சூழ்நிலையில் தொழில் முடக்கம் காரணமாக, வருமானத்திற்கு அவரவருக்கு தகுந்த வகையில் பிரச்சினைகள் கட்டாயம் இருக்கத்தான் செய்கிறது. பலபேர் இன்று, அன்றாட பிழைப்பை கூட இழந்துவிட்டு, வருமானத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருப்பவர்கள் ஏராளமானோர் உள்ளார்கள். 

எல்லோருக்கும் பண தட்டுப்பாடு நீங்க வேண்டும் என்று, லக்ஷ்மி தேவியை மனதார வேண்டிக்கொண்டு தமிழ்வருடப்பிறப்பு அன்று காலையில் உங்கள் வீட்டு வாசலில் ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி இரண்டு ஏலக்காயை அதில் போட்டு மகாலட்சுமியை மனதார வேண்டி தீபம் ஏற்றுங்கள். இந்த தீபத்தை அதிகாலை வேளை 6 மணிக்கு முன்பாக ஏற்றி வைத்துவிடுங்கள். சூரியன் உதயமாவதற்கு முன்பு. இந்த தீபம் ஏற்றுவதன் மூலம் நமக்கு இருக்கும் பண கஷ்டமானது விரைவாக தீர்வதற்க்கு ஒரு நல்ல வழி கிடைக்கும் என்று நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. 

மேற்குறிப்பிட்டுள்ள பிரச்சினைகள் எல்லாம் தீர வேண்டுமென்றால், நாம் நோய் நொடியற்ற வாழ்க்கையை வாழ வேண்டும். இதனால் கண்ணுக்கு தெரியாத இந்த கிருமி, கண்ணுக்கு தெரியாமலேயே போய் விட வேண்டும், என்ற வேண்டுதலையும் அந்த இறைவனிடம் வைத்து, மனமுருகி வேண்டி இந்த புத்தாண்டை வரவேற்போம்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴