செய்வது தானம். அதில் இடது கையாக இருந்தால் என்ன? வலது கையாக இருந்தால் என்ன? என்று அனைவரின் மனதிலும் கட்டாயம் இந்த கேள்வி எழும். முதலில் தானம், தர்மம் ஏன் செய்கிறோம்? புண்ணியம் கிடைக்கும் என்பதற்காக செய்யலாம், அல்லது பாவம் என்று இரக்கப்பட்டு நாமாகவே முன் வந்து செய்து விடுகிறோம். தானம் அளிப்பது நம்முடைய பாவங்களை குறைக்க உதவும் என்றும் செய்வோம். நாம் எப்படி நினைத்து தானம் செய்கிறோம் என்பது இங்கு முக்கியமில்லை. தானம் என்பதே புண்ணிய காரியம் தான். அதில் மாற்றுக் கருத்து ஒன்றும் இல்லை. ஆனால் ஏன் வலது கையால் தானம், தர்மம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தபடுகின்றது? இடது கையால் தெரியாமல் தானம் செய்து விட்டாலும் இதெல்லாம் நடக்குமா? இந்த கேள்விகளுக்கெல்லாம் ஆச்சரியமூட்டும் விடைகள் உள்ளன. அதை பற்றி விரிவாக இப்பதிவில் காணலாம் வாருங்கள்.
இந்த காலகட்டத்தில் பாவம் பார்த்து தானம் செய்பவர்களை விட, தானம், தர்மம் செய்தால் நமக்கு புண்ணியம் கிடைக்கும் என்று எண்ணியே பெரும்பாலானோர் தானம் செய்கிறார்கள். இது வருத்தப்பட கூடிய ஒரு விஷயம் என்றாலும், எப்படியோ நல்லது செய்தால் சரிதான் என்று தோன்றிவிடுகிறது. ஒரு சிலர் தான், கேட்டவுடன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தானம் செய்து வருகின்றனர். இருப்பவர்கள் கொடுத்தால் என்ன குறைந்து விட போகிறது என்று தான் அனைவருக்கும் இருக்கும் நியாயமான கேள்வி. இதனால் அவர்களுக்கு புண்ணியம் கிடைக்க வேண்டும் என்றாலும் இறைவன் அதை செய்விக்க வேண்டுமே!!
பொதுவாக சுப கிரகங்களான குரு பகவான், சுக்கிரன், சந்திரன், சூரியன், செவ்வாய் இவர்களின் ஆதிக்கம் வலது கையில் இருக்கும். இந்த கிரகங்கள் அனைத்தும் சுபத்தன்மையை ஈர்க்கக்கூடிய கிரகங்கள். ஒருவர் கேட்டு கொடுப்பது தர்மம் ஆகிறது. தானம் என்பது அப்படி அல்ல, நாமாகவே முன்வந்து கொடுப்பது. அதனால் தான் தர்மத்தை விட தானமே சிறந்ததாகிறது.
தானம் செய்தாலும் சரி, தர்மம் செய்தாலும் சரி, நீங்கள் ஒருவருக்கு வலது கையால் கொடுக்கும் பொழுது அதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ளும் நபரிடம் இருக்கும் புண்ணியங்கள் உங்களுக்கு வந்து சேரும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். சுபக்கிரகங்கள் வீற்றிருக்கும் வலது கரத்தால் நீங்கள் தானமும், தர்மமும் செய்யும் பொழுது அதை பெறுபவர்களிடம் இருக்கும் புண்ணியங்கள் தான் உங்களுக்கு வந்து சேரும். தானம் பெற்றவர்கள் உங்களுக்கு பிரதிபலனாக அவர்களின் புண்ணியத்தை தருவார்கள். இதுவே இறை தத்துவம். இது வலது கரத்தினால் செய்யப்படும் தானத்திற்கு பொருந்தும். இதனால்தான் வலதுகரத்தில் தானம் செய்ய வலியுறுத்தப்படுகின்றது. ஒருவேளை அவர் பாவம் செய்திருந்தால் என்ன பலன் என்று கேட்கலாம். அவரின் பாவங்கள் எதுவும் உங்களை பாதிக்காது. ஆனால் புண்ணியம் உங்களுக்கு கட்டாயம் வந்து சேரும் என்பதில் சந்தேகம் இல்லை.
இதையே நீங்கள் இடது கையால் தான, தர்மம் செய்தால் தானம் பெறுபவர்களின் பாவத்தில் பங்கு வரும். இடது கரத்திற்குரிய கிரகங்களாக அசுப கிரங்கங்களான ராகுவும், கேதுவும் இருக்கிறார்கள். இவர்களின் வேலையே பாவத்தை ஈர்த்து தருவது தான். ராகு, கேது ராசிக்கற்கள் இடது கைகளில் அணியுமாறு கூறுவதும் இதனால் தான். இதில் சுவையான தகவல் என்னவென்றால் சனி பகவான் எந்த கரத்திற்கும் உரியவர் இல்லை. அவர் நியாயத்தை வழங்குபவர் ஆயிற்றே!! அதனால் நடுநிலையாக தான் எப்போதும் செயல்படுவார். உதாரணத்திற்கு தானத்திற்கு பெயர்போன தர்மர் ஒரு முறை யாசகம் கேட்டு வந்தவரிடம் இடது கையால் தானம் அளித்து விட்டார். அவர் அப்போது ஸ்நானம் செய்வதற்கு தலையில் எண்ணெய் தடவிக் கொண்டு இருந்தார். யாசகம் கேட்டதும் எண்ணெய் வைத்து இருந்த தங்க கிண்ணத்தை கொடுத்துவிட்டார்.
இடது கையால் தானம் அளித்தால் பாவம் வந்து சேரும் என்று அறிந்த ஒருவர் இதை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் தர்மரிடம் இதைப் பற்றிக் கூறியபோது தர்மரோ எண்ணங்கள் மாறுவதற்குள் தர்மம் கொடுத்தாக வேண்டும். சிந்தித்துக் கொண்டிருந்தால் எண்ணம் மாறிவிடும் அல்லவா? அதனால் தான் எந்த கரத்தால் கொடுத்தேன் என்பதை பார்க்கவில்லை என்றார். இங்கு சனீஸ்வரர் நடுநிலையாக செயல்பட வேண்டும் அல்லவா? இடது கையால் தர்மம் கொடுத்தாலும், கொடுத்தவரின் மனம் நல்ல எண்ணத்தோடு செயல்பட்டிருக்கிறது. எனவே அந்தப் பாவங்கள் அவர்களை ஒன்றும் செய்வதில்லை. நல்ல எண்ணங்களோடு, வேறு வழியே இல்லாத சமயத்தில் இடது கரத்தால் தானம் செய்வதில் பாவங்கள் பங்கு பெறுவதில்லை என்கிறது சாஸ்திரம். அதே போல் இருகைகளால் தானம் செய்தாலும் நன்மை தான். புண்ணியங்கள் வராவிட்டாலும் பாவங்கள் வந்துவிடக்கூடாது. அதனால் தான் வலது கையால் தானம் செய்வது நல்லது என்றார்கள் நம் முன்னோர்கள்...
🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔
🎪 *ஓம் நமசிவாய* 🎪
🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
_ என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
🕉️ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ 🕉️
🙆🏻♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻♂️
🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴
No comments:
Post a Comment