இன்றைய சூழ்நிலையில் யாரைப் பார்த்தாலும் பித்ரு சாபம் இருக்கிறது. பித்ரு தோஷம் இருக்கிறது. பரிகாரம் செய்ய வேண்டும். ‘எந்த ஜென்மத்தில் செய்த என்ன பாவமோ! இந்த ஜென்மத்தில் தீர்க்க முடியாத பல பிரச்சினைகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்! என்ற புலம்பலை நம்மில் பல பேர் பல பேரிடம் கேட்டிருப்போம். முதலில் பித்ரு தோஷம், பித்ரு சாபம் என்றால் என்ன என்பதைப் பற்றிய சந்தேகத்தை தீர்த்துக் கொள்வோம். அதன்பின்பு இதற்கான பரிகாரத்தை பார்க்கலாம்.
ஒருவருடைய ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 3, 5, 9 ஆம் இடங்களில் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால் அவருக்கு கட்டாயம் பித்ரு தோஷம், பித்ரு சாபம் இருக்கிறது என்பதை குறிக்கிறது. ராகு இருந்தால் அப்பா வழி முன்னோர்களால் பித்ரு சாபம். கேது இருந்தால் அம்மா வழி முன்னோர்களால் பித்ரு சாபம் இருக்கிறது என்பதை குறிக்கும்.
ஒவ்வொரு தலைமுறையிலும் தற்கொலைகளும், கொலைகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஒரு தலைமுறையில் இயற்கையான மரணத்தை அடையாதவர்களின் ஆத்மா, மறுபிறவி அடையாமல் இந்த பூலோகத்திலேயே திரிந்து கொண்டிருக்கும். அந்த ஆத்மாவானது நான்காம் ஐந்தாம் தலைமுறையினரை பிடிக்கும். அதாவது நான்கு தலைமுறைக்கு முன்னாள் நடந்த அகால மரணத்திற்கான சாபத்தை, அனுபவிக்கப் போவது நான்கு தலைமுறைக்கு தள்ளியிருக்கும் சந்ததியினரே.
அதாவது பாட்டன் பூட்டன் சொத்தோடு சேர்த்து, அந்தப் பாவங்களையும் சுமக்கப் போவது நான்காவது தலைமுறை தான். உதாரணத்திற்கு, என்னேடைய அப்பாவுடைய தாத்தாவின் சகோதரனுக்கு அவருடைய ஜாதகப்படி 80 வயது வரை வாழ வேண்டும். ஆனால் அந்த நபர் தனது 20ஆம் வயதிலேயே தற்கொலையினாலோ அல்லது கொலையானாலோ உயிரை இழந்துவிட்டார்.
இப்படியாக அல்பாயிசில் தன்னுடைய உயிரை இழந்த, அந்த நபர், எந்த இடத்தில் இறந்தாரோ! அவர் தன்னுடைய 80 வயதுவரை ஆவியாக அதே இடத்தில்தான் இருப்பார். அவருடைய ஆயுள் எப்போது முழுமையாக முடிகிறதோ அப்போது தான் அவரால் எமலோகத்திற்கு செல்ல முடியும்.
அவர் இறந்த நாளிலிருந்து தனது 80 வயது வரை எந்த ஒரு நல்லது, கெட்டதையும் அனுபவிக்காமல் ஆவியாக சுற்றித்திரிந்ததால், அவர் எமலோகத்திலும் ஒதுக்கப்பட்டவராகத்தான் இருப்பார். இப்படிப்பட்ட சம்பவமானது ஒருவருடைய பரம்பரையில் நான்கு நபரையோ, ஐந்து நபரையோ தாண்டினால் அது நான்காம் தலை முறைகோ, ஐந்தாம் தலைமுறைக்கோ பித்ரு தோஷமாக வந்துவிடுகிறது இன்று நம்முடைய பழமையான நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.
இப்படியாக ஒருவருக்கு அப்பா வழியில் பித்ருதோஷம் இருக்கிறது என்றால் அப்பா உடன் பிறந்தவர்களுக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும் பித்ரு தோஷம் இருக்கும் என்பதே உண்மை. இந்த தோஷமானது நீங்கள் எவ்வளவுதான் நல்ல காரியத்தில் ஈடுபட்டாலும் அதற்கான பலனை உங்களுக்கு கொண்டுவந்து சேர்க்கவே சேர்க்காது.
இந்த பித்ரு தோஷமானது நீங்க, நெல்லை மாவட்டத்தில், ராமநாதபுரம் அருகில் இருக்கும் ‘விஜயாபதி’ என்கின்ற கிராமத்தில் ‘ஸ்ரீ விசுவாமித்திர மகாலிங்க சுவாமி’ திருக்கோவில் ‘நவகலசயாகம்’ செய்ய வேண்டும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இது ஒரு கடலோர கிராமம்.
இந்த கோவிலுக்கு ஒருமுறை சென்று இந்த நவகலச யாகத்தை குடும்பத்தோடு செய்தால், 100 நாட்களுக்குள் உங்கள் குடும்பத்திற்கு இருக்கும் நீண்டகால பிரச்சனையான பித்ரு தோஷம் நீங்கும் என்று நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. இப்படியாக இந்த யாகத்தை செய்துவிட்டு வந்தாலும், அதன்பின்னர் ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் உங்களது வீட்டின் அருகில் இருக்கும் பழமையான சிவாலயங்களுக்கு சென்று, 9 ஏழைகளுக்கு அன்னதானம் செய்யவேண்டும்.
இப்படியாக 12 அமாவாசை அன்றும் தொடர்ந்து செய்து வந்தால் உங்களுக்கு இருக்கும் பித்ரு தோஷம் நீங்கி, உங்களுடைய வாழ்க்கை வளமாக மாறும் என்பது நம்பிக்கைக்குரிய ஒன்று. பித்ரு தோஷத்தால் பிரச்சனையை எதிர் கொள்வார்கள் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம்...
🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔
🎪 *ஓம் நமசிவாய* 🎪
🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
_ என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
🕉️ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ 🕉️
🙆🏻♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻♂️
🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴
No comments:
Post a Comment