Monday, 13 April 2020

நம்முடைய கஷ்டங்கள் தீர, இந்தத் தமிழ் வருடப் பிறப்பை எப்படி வரவேற்பது நல்லது தெரியுமா?

தமிழ் புத்தாண்டு 14.4.2020 சித்திரை ( 1 ) செவ்வாய்க்கிழமை

நமக்கு இருக்கும் இன்றைய சூழ்நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும், வரப்போகும் சார்வரி  வருட தமிழ் புத்தாண்டை கட்டாயமாக சந்தோஷமாகத்தான் வரவேற்க வேண்டும். சந்தோஷமாக தொடங்கும் எந்த ஒரு செயலும், வெற்றியில் போய் முடியும் என்பதை நாம் எல்லோரும் அறிந்திருப்போம். அதன்படி, இன்றைக்கு நமக்கு இருக்கும் கஷ்டங்கள் அனைத்துமே, வரப்போகும் தமிழ்ப்புத்தாண்டில் கட்டாயமாக நம்மை விட்டு விலகும் என்ற நம்பிக்கையோடு, இந்த வருடத்தை வரவேற்போம். யாரும் வெளியில் செல்ல முடியாத நிலை, புத்தாண்டிற்கு தேவையான பூஜை பொருட்களை வாங்க முடியாத நிலை, இறைவனுக்கு நைவேத்தியமாகப் படைக்க, பிரசாதம் செய்வதற்கு கூட சிலருக்கு பொருட்கள் கிடைக்காத சூழ்நிலையும் இன்று உள்ளது. இருந்தாலும் தமிழ் புத்தாண்டை சுலபமாக, சிறப்பாக எப்படிக் கொண்டாடலாம் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

எப்பவும் போல் பண்டிகை என்றால், பண்டிகைக்கு முந்தைய தினமே, நம்முடைய வீட்டையும், பூஜை அறையையும் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழ் புத்தாண்டு அன்று பிரம்ம முகூர்த்த வேளையிலேயே கண்விழித்து, சுத்தபத்தமாக குளித்து முடித்துவிட்டு, உடல் தூய்மையோடு சேர்ந்த மன தூய்மையையும் கொண்டு இறைவனை இருகரம் கூப்பி இந்த உலகுக்கு இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் நீங்க வேண்டும் என்று பொது நலத்தோடு ஒரு கோரிக்கையை வைத்தாலே போதும். உங்களுக்கு எது தேவையோ, அதை அந்த ஆண்டவனே உங்களுக்காக தந்துவிடுவார். ஏனென்றால் சுயநலமில்லாமல் சிந்திக்கும் மனதில் அந்த இறைவனே வந்து குடி கொள்வார் என்பதை மறந்து விடாதீர்கள். 

சரி. வழிபாட்டு முறைக்கு செல்லலாமா? தமிழ் புத்தாண்டு என்றாலே அறுசுவை உணவை சமைத்து இறைவனுக்கு படைத்து, அதன் பின்பு நாமும் சாப்பிட வேண்டும் என்பதுதான் நம்முடைய வழக்கம். ஆனால் இந்த சூழ்நிலையில் அறுசுவை உணவை எல்லாம் சமைக்க முடியுமா என்பது தெரியவில்லை? பிரசாதம் செய்வதற்காக உங்கள் வீட்டில் என்ன பொருள் இருக்கின்றதோ, அதை வைத்து ஒரு நைவேத்தியத்தை தயார் செய்து கொள்ளுங்கள். சர்க்கரை பொங்கல், பாயசம், கேசரி எதுவாக இருந்தாலும் இறைவன் முழுமனதோடு ஏற்றுக் கொள்வார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. கற்கண்டு வைத்து நைவேத்தியம் செய்தால் கூட போதும். 

பிரசாதத்தோடு சேர்த்து உங்கள் வீட்டில் இருக்கும் தன தானியத்திற்கு  எந்த ஒரு குறைபாடும் இருக்கக்கூடாது என்று மனதார வேண்டிக்கொண்டு, ஒரு தாம்புல தட்டில் ஒரு கைப்பிடி அளவு உப்பு, ஒரு கைப்பிடி அளவு துவரம்பருப்பு, ஒரு கைப்பிடி அளவு பச்சரிசி, மஞ்சள், குங்குமம் இவைகளை வைத்து மனதார இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள். 

இந்த வழிபாடுடானது, இன்றைக்கு நமக்கு இருக்கும் சூழ்நிலையானது விரைவாக மறைந்து, நம் வீட்டில் தன தானியத்திற்கு என்றைக்கும் தட்டுப்பாடு ஏற்பட கூடாது. அரிசி, பருப்பு, உப்பு போன்ற மற்ற உணவு சம்பந்தப்பட்ட அனைத்து பொருட்களும் நிரம்பி வழிய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வேண்டுதல். 

அடுத்ததாக இன்றைய சூழ்நிலையில் தொழில் முடக்கம் காரணமாக, வருமானத்திற்கு அவரவருக்கு தகுந்த வகையில் பிரச்சினைகள் கட்டாயம் இருக்கத்தான் செய்கிறது. பலபேர் இன்று, அன்றாட பிழைப்பை கூட இழந்துவிட்டு, வருமானத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருப்பவர்கள் ஏராளமானோர் உள்ளார்கள். 

எல்லோருக்கும் பண தட்டுப்பாடு நீங்க வேண்டும் என்று, லக்ஷ்மி தேவியை மனதார வேண்டிக்கொண்டு தமிழ்வருடப்பிறப்பு அன்று காலையில் உங்கள் வீட்டு வாசலில் ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி இரண்டு ஏலக்காயை அதில் போட்டு மகாலட்சுமியை மனதார வேண்டி தீபம் ஏற்றுங்கள். இந்த தீபத்தை அதிகாலை வேளை 6 மணிக்கு முன்பாக ஏற்றி வைத்துவிடுங்கள். சூரியன் உதயமாவதற்கு முன்பு. இந்த தீபம் ஏற்றுவதன் மூலம் நமக்கு இருக்கும் பண கஷ்டமானது விரைவாக தீர்வதற்க்கு ஒரு நல்ல வழி கிடைக்கும் என்று நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. 

மேற்குறிப்பிட்டுள்ள பிரச்சினைகள் எல்லாம் தீர வேண்டுமென்றால், நாம் நோய் நொடியற்ற வாழ்க்கையை வாழ வேண்டும். இதனால் கண்ணுக்கு தெரியாத இந்த கிருமி, கண்ணுக்கு தெரியாமலேயே போய் விட வேண்டும், என்ற வேண்டுதலையும் அந்த இறைவனிடம் வைத்து, மனமுருகி வேண்டி இந்த புத்தாண்டை வரவேற்போம்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

No comments:

Post a Comment