Sunday, 2 December 2018

என் சமாதிக்கு முன் நீங்கள் வேண்டுவது கிடைக்கும்”.- ஷீரடி சாய்பாபா.!!

தான் வாழ்ந்த காலங்களிலும் சரி,தற்போது சமாதி நிலையிலும் சரி,தனது பக்தர்களின் தேவைகளையும், கோரிக்கைகளையும் நிறைவேற்றிய வண்ணம் இருக்கிறார் ஷீரடி மகான் ஸ்ரீ சாய் பாபா. தன்னை நம்பி ஷிரடி மண்ணை மிதித்தவர்களை என்றும் வெறுங்கையுடன் அனுப்பியதில்லை அந்த தெய்வம்.
பாபாவின் உபதேசங்கள் அழியாத வரம் பெற்றவை. குரு வாரமான இன்று சாய் மகானின் அற்புத மொழிகளை அறிவோம்.
 
" நீ எனக்கு முன்னால் விளக்கு ஏற்றினால் , உன் வாழ்வும் ஓளி மிக்கதாக ஆகும்.
நீ என்னுடைய வழிபாட்டு தலத்திற்கு வந்து என்னை வணங்கினால் பல பக்தர்கள் அங்கு வந்து வணங்கியதற்கு சமம் ஆக்குவேன்.
என்னை உன் வீட்டில் வைத்து வழிபட்டால் , உன்னுடைய அனைத்து வழிபாட்டிலும் என்னை நீ காணலாம் .
உனக்கு  ஷீரடிக்கு வர மனது இருந்தால்,மீண்டும் மீண்டும் ஷீரடிக்கு வர வரவழைப்பேன்

நீ என்மீது தூய பக்தி கொண்டு அன்பு செலுத்தினால் , என்னுடைய முழு அன்பும் உனக்கு கிடைக்கும்.
 நீ என்னை உன்னுடையவனாக நினைத்தால்,என்னை உன்னுள் நீயே காண முடியும்.
என்னுடைய சமாதியில் மிகுந்த பணிவோடு முன் தலையால் தொட்டு வணங்கினால்,அங்கு என்னையே நீ காணலாம்
என் சமாதிக்கு முன் வேண்டுவது கிடைக்கும்.

என் சமாதி முன் உன் இரு கைகளையும் நீட்டியபடி வேண்டும் பொழுது அந்த கைககள் நிறையும் அளவு அனைத்தும் நான் தருவேன்.
 என்னை உன்னால் பார்க்க முடியாத பொழுது அழுதால் அந்த கண்ணீரிலேயே இறைவனின் ஓளி கிடைக்கும்".
ஓம் சாய் ராம்....

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

Saturday, 1 December 2018

சங்கடங்கள் போக்கும் சனீஸ்வரர் காயத்ரி மந்திரங்கள்.!!

சனி திசை மற்றும் சனி புத்தி நடைபெறும் போது இந்த காயத்ரி மந்திரம் சொல்லி வரும் போது சனி பகவனால் ஏற்படும் திங்கு விலகி நன்மை உண்டாகும்.

கீழ்க்காணும் சனீஸ்வர காயத்ரி மந்திரங்களைச் சொல்லி, அருகில் உள்ள சிவன் கோயில்களில் உள்ள சனீஸ்வரர் சந்நிதியை வணங்குவது, அல்லது நவக்கிரகத்தில் உள்ள சனீஸ்வரரை வலம் வந்து வணங்குவது ஆகியவற்றை மேற்கொள்ளலாம். 
இதனை தந்த்ர காயத்ரி என்பார்கள்.  

ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி 
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்!

ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி 
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்!

ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி 
தன்னோ சனைச்சர ப்ரசோதயாத்!

ஓம் சனீஸ்வராய வித்மஹே சாயாபுத்ராய தீமஹி 
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்!

ஓம் சதுர்புஜாய வித்மஹே தண்டஹஸ்தாய தீமஹி 
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

திதிகளின் தெய்வங்கள்.!!

ஆலயங்களில் உள்ள இறைவனை வழிபடும் அதே வேளையில், நாம் பிறந்த திதிகளுக்கான தெய்வங்களையும் வழிபாடு செய்து கொள்வது சிறப்பான பலன்களைத் தரும்.

ஆலயங்களில் உள்ள இறைவனை வழிபடும் அதே வேளையில், நாம் பிறந்த திதிகளுக்கான தெய்வங்களையும் வழிபாடு செய்து கொள்வது சிறப்பான பலன்களைத் தரும். இங்கே திதிகளும், அவற்றுக்கான தெய்வங்களும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவற்றை அறிந்து உங்கள் வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள்.

சுக்லபட்சம் (வளர்பிறை)

1. பிரதமை - குபேரன் மற்றும் பிரம்மா
2. துவதியை - பிரம்மா
3. திரிதியை - சிவன் மற்றும் கவுரி மாதா
4. சதுர்த்தி - எமன் மற்றும் விநாயகர்
5. பஞ்சமி - திரிபுர சுந்தரி
6. சஷ்டி - செவ்வாய்
7. சப்தமி - ரிஷி மற்றும் இந்திரன்
8. அஷ்டமி - காலபைரவர்
9. நவமி - சரஸ்வதி
10. தசமி - வீரபத்திரர் மற்றும் தர்மராஜன்
11. ஏகாதசி - மகா ருத்ரன் மற்றும் மகாவிஷ்ணு
12. துவாதசி - மகா விஷ்ணு
13. திரயோதசி - மன்மதன்
14. சதுர்த்தசி - காளி
15. பவுர்ணமி - லலிதாம்பிகை

கிருஷ்ணபட்சம் (தேய்பிறை)

1. பிரதமை - துர்க்கை
2. துவதியை - வாயு
3. திரிதியை - அக்னி
4. சதுர்த்தி - எமன் மற்றும் விநாயகர்
5. பஞ்சமி - நாகதேவதை
6. சஷ்டி - முருகன்
7. சப்தமி - சூரியன்
8. அஷ்டமி - மகா ருத்ரன் மற்றும் துர்க்கை
9. நவமி - சரஸ்வதி
10. தசமி - எமன் மற்றும் துர்க்கை
11. ஏகாதசி - மகா ருத்ரன் மற்றும் மகாவிஷ்ணு
12. துவாதசி - சுக்ரன்
13. திரயோதசி - நந்தி
14. சதுர்த்தசி - ருத்ரர்
15. அமாவாசை - பித்ருக்கள் மற்றும் காளி,

அவரவர் பிறந்த திதிக்கான தேவதையை வழிபட வாழ்வில் வெற்றி கிட்டும், பிறப்பு தோஷம் நீங்கும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

தங்கைக்காக ஆற்றில் இறங்கும் அழகர்.!!

மதுரை மாவட்டத்தையும் தாண்டி தென் தமிழகமே திருவிழாக் கோலத்தில் திளைத்து காணப்படுகிறது. வைகை வறண்டு இருந்தாலும், மதுரை முழுக்க மக்கள் கூட்டம் கடல் போல  நிறைந்திருக்கிறது. 

மதுரையம்பதியில் அன்னை மீனாட்சியை தரிசிக்க எப்போதுமே பக்தர் கூட்டம் அலைமோதும். அந்த அன்னையை எம்பெருமான் சுந்தரேசருடன் திருமணக் கோலத்தில் பார்க்கும் வாய்ப்பு என்கிற போது நினைக்கும் தருணத்தில் மனதில் பரவசம் எழுகிறது . பார்க்கும் பக்தர்களின் மனநிலையை எழுத்தில்  சொல்லிவிட முடிவதில்லை.
அழகர் வைகையில் இறங்குவதன் பின்னனியில் இரண்டு தாத்ப்ரியத் தகவல்கள் சொல்லப்படுகிறது.

அழகர் மலையில் முனிவர் ஒருவர் வாழ்ந்து கொண்டிருந்தார். அங்குள்ள அழகர் தீர்த்தத்தில் அவர்    நீராடிக் கொண்டிருந்தார்.  அந்த நேரத்தில் அங்கு  வந்தார் துர்வாச  முனிவர். குளியலில் மூழ்கியிருந்த , துர்வாசரை கவனிக்கத் தவறிவிட்டார். இதனால் வெகுண்டெழுந்த துர்வாசர் , முனிவர் தம்மை அவமதித்தார் என்று கூறி  மண்டூகமாக (தவளையாக) உருமாறுமாறு  சாபமிட்டு விட்டார். இந்த சாபத்தால் பதறிப்போன அழகர் மலை முனிவர் , உடனடியாக துர்வாச முனிவரிடம் மன்னிப்பு கேட்டு  தனக்கு சாப விமோசனத்தை அருள வேண்டினார்.
 மனமிறங்கிய துர்வாசர், “ கொஞ்ச காலம் வைகை  ஆற்றில் தவளையாக வசித்து அழகரை பிரார்த்தனை செய், சாப விமோசனம் உண்டு என்றார்.தவளையாக  ஆற்றில் வசித்து வந்த மண்டூக முனிவர்  அழகரை வணங்கியபடியே இருந்தார். அவரது பிரார்த்தனை அழகரை சென்றடைந்தது.
மண்டூக முனிவரின்  பிரார்த்தனைக்கு செவி சாய்த்த அழகர் வைகையில் மண்டூக முனிவருக்கு தச அவதாரக் காட்சிகளுடன் காட்சி தந்தார். இந்நிகழ்வு, வைகை  ஆற்றில் அழகர் எழுந்தருளி முனிவருக்கு பாபவிமோசனம் வழங்குவதாக  முதல் முதலாக சோழவந்தானில் கொண்டாடப்பட்டது. அழகர் ஆற்றில் இறங்குவதன் பின்னனியில் இப்படி ஒரு தகவல் இருந்தாலும் , இன்றைக்கு வைகையில் அழகர் இறங்குவதன் பின்னனியில் அன்னை மீனாட்சியின் திருமணம் உள்ளது.

உள்ளூர் பிரமுகர் திருமணம் என்றாலே மதுரை போன்ற நகரங்களில் களை கட்டும். அகில உலக நாயகி அன்னை மீனாட்சியின் கல்யாணம் என்றால் ..... தெருவுக்கு தெரு பந்தலும் தோரணங்களும் என அழகுற காட்சி தரும் மதுரை பல வரலாற்று நிகழ்வுகளின் சாட்சியாக நிலைத்து நிற்கிறது.
 பாண்டிய நாட்டின்  இளவரசி தடாகை  என்னும் மீனாட்சி போர்கலைகளில் கொடி கட்டி  விளங்கி சென்ற இடமெல்லாம்  பாண்டிய நாட்டின் வெற்றிக் கொடியை ஏற்றி வந்தாள். வெற்றித் தொடரின்  இறுதியில் திருகைலாயம் சென்றபோது சிவனை எதிர்த்து போரிட்டவள்  அவர்  மீதான  காதலில் தன் மனம் இழந்தாள். இந்த போரும் வெற்றி தான். ஆம் பாண்டிய நாட்டு மருமகனாக எம்பெருமான் சிவனை கொண்டு வந்தது மாபெரும் வெற்றிதானே. 
 போர்க்காயங்களை வெற்றித்தழும்புகளை சிவனின் காதல் மடை மாற்றியது. மாறாத காதலுடன்  மதுரை திரும்பிய தடாகை அன்னை மீனாட்சியானாள்.
 அன்னை மீனாட்சியை மதுரையில்  கரம் பிடித்து திருமணக்கோலம் கண்டார் சுந்தரேசர். தமக்கை மீனாட்சியின் திருமண  வைபவத்தில்  கலந்து கொள்ள சகோதரர்  அழகர்,  மதுரையிலிருந்து 25கிமீ தொலைவில் உள்ள அழகர் மலையிலிருந்து புறப்பட்டார்.

 அந்த கால கட்டத்தில் அழகர் மலைப் பகுதியில்  கள்ளர்கள் (திருடர்கள்) அதிகம்.  எனவே  அழகர் கள்ளர் வேடமிட்டு கள்ளழகராக மாறி  தங்கை மீனாட்சிக்கு  சீர் கொண்டு வந்த பொருட்களை பாதுகாத்து வைகை ஆற்றின் அருகே வந்தடைந்தார். அதற்குள்  மீனாட்சி கல்யாணம் நடந்து முடிந்தது என்பதை அறிந்த அழகர்  பெருங்கோபம்  கொண்டு வைகை ஆற்றில் இறங்கினார்.

தமது சகோதரர் அழகரின் கோபம் அறிந்த மீனாட்சி தனது  கணவரான சுந்தரேஸ்வரருடன்  வைகை ஆற்றிற்கே சென்று  ஆசி பெற்று சீர் பொருள்களை பெற்றார். இன்றைக்கும் இந்த சடங்குகள் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.
 இதைப்போலவே மதுரையின் மூன்று மாவடியிலிருந்து தல்லாகுளம் வரை அழகரை வரவேற்று எதிர்சேவை என்ற நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடத்தப்படுகிறது. இந்நிகழ்சியில் ஏராளமானோர் கோவிந்தா கோஷம் விண்ணதிர பங்கேற்று அழகரை வரவேற்கின்றனர்.

 சித்திராப் பவுர்ணமி தினத்தில் தமக்கை மீனாட்சியின்  கல்யாணத்திற்கு சீராக கொண்டு வந்த  பொருட்களுடன் மதுரை வைகை ஆற்றில்,ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையுடன் தங்க குதிரை வாகனத்தில் இறங்குகிறார் அழகர். இந்த வைபவத்தில் அழகர் அணிந்திருக்கும் பட்டாடையின் நிறத்தைக் கொண்டு அடுத்து வரும்  ஆண்டின் வளமானது கணிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.இதே நாள் இரவு பூப்பல்லக்கில் வைத்து அழகருக்கு உற்சவம் நடத்தப்படுகிறது. மறுநாள் காலை அழகர் கோவில் நோக்கி அழகர் புறப்பாடு செய்கிறார்.

மதுரையில் நடக்கும் சித்திரைத் திருவிழாவை வாழ்க்கையில் ஒரு முறையேனும் சென்று பார்ப்போம். அன்னை மீனாட்சியின் அருள் பெறுவோம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

ஆசை மட்டும் இருக்கு ,அம்பாளுக்கு பண்ணணும்னு ...ஆனா, என்ன பண்ணறதுன்னு தெரியலையே!'

காஞ்சிபுரம் அன்னை காமாட்சி அம்மன் சன்னதியில், அம்பாள் வீற்றிருக்கும் கருவறைக்கு மேலே உள்ள விமானம் பொன்னால் ஆனது. அது எதோ இன்று நேற்று வேயப்பட்டது இல்லை. அந்தக் காலத்திலேயே தங்க  ரேக் சாத்தப்பட்ட விமானம். ஆனால்,காலப்போக்கில் அந்த தேவியின் பொன் மய விமானம் கொஞ்சம் கொஞ்சமாகப் பொலிவிழந்து காணப்பட்டது. அதன் மேல் பதிந்திருந்த தங்கமெல்லாம் அழிந்து, வெறும் செம்பாக, அழுக்கேறி காட்சி தந்தது.


ஸ்ரீமடத்தில் அப்போது பெரிதாகப் பண வசதி இல்லாத காரணத்தால்,அன்பர்களும்,பக்தர்களும் கொடுப்பதை வைத்துதான் மடம் நடந்து கொண்டிருந்தது. பல நாட்கள் பிட்சா வந்தனத்துக்கு, யார் வரப் போகிறார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருந்ததும் உண்டு. சந்நியாச தர்மப்படி அந்த பிட்சாவந்தனத்தை வைத்துத்தான் பெரியவாளுக்கு பிட்சையே நடக்கும்.

இந்த மாதிரியான சூழலில் ஒரு நாள் மகா பெரியவா, காமாட்சி அம்மன் கோயிலில் அம்பாள் விமானம் செம்பாகக் காட்சி அளிப்பது குறித்து பேச ஆரம்பித்துவிட்டார்."அம்பாள் சன்னதி விமானம் இப்படி இருக்கே....இதை மாத்த வேண்டாமோ?!" அவர் சொன்னபோது மடத்தின் மேனேஜர், வசதி இன்மையை சுட்டிக் காட்டினார்.
பெரியவா யோசனை பண்ணினார்."சரி நாம முயற்சிப்போம்.அவளே செஞ்சுப்பா..!" என்று அம்பாள் மீது பாரத்தைப்  .போட்டுவிட்டு, ஒரு ஆசாரியை வரவழைத்து,"மொத்த விமானத்துக்கும் தங்க ரேக் பதிக்க மொத்தமாக எவ்வளவு ஸ்வர்ணம் தேவைப்படும்" என்று கேட்டார்
வந்தவர் பரிசோதித்து,. அளந்தெல்லாம் பார்த்துவிட்டு,குறிப்பிட்ட அளவைச் சொன்னார்.

"இவ்வளவு பவுனுக்கு எங்கே போவது?" என்ற கேள்விக்குறி பெரியவா முகத்தில். 'ஆசை மட்டும் இருக்கு  ,அம்பாளுக்கு பண்ணணும்னு ...ஆனா, என்ன பண்ணறதுன்னு தெரியலையே!' என்று மகாபெரியவா யோசித்துக் கொண்டிருந்த சமயத்துல, அந்தக் காலத்தில் பிரபல சங்கீத வித்வானான மகாராஜபுரம் விஸ்வநாதய்யர், ஆசார்யாளை தரிசனம் பண்ண வந்தார்.
அவரைப் பார்த்ததும் மகாபெரியவா மனதுக்குள் ஏதோ நினைத்தவராக, "உனக்கு கனகதாரா ஸ்தோத்ரம் தெரியுமோ?" என்று கேட்டார்.
"சுமாராகத் தெரியும்" என்றார் விஸ்வநாதய்யர்.
"அப்படின்னா, நீ அதைப்பாடு. யாருக்கெல்லாம் தெரியுமோ,அவாளும் சேர்ந்து பாடுங்கோ!" என்று சொன்னார், மகாபெரியவா.

அதைத் தொடர்ந்து, மகாராஜபுரம் அவர்கள் கனகதாரா ஸ்துதியைப்பாட, அங்கே இருந்த பெண்கள் பலரும் அந்த ஸ்துதியை சேர்ந்து சொல்ல ஆரம்பித்தார்கள்.

சுமார் அரை மணிநேரம் முழுமையாகச் சொல்லி முடித்ததும்,அங்கே ஓர் ஆச்சரியம் நடந்தது.
அங்கேயிருந்த அத்தனை பெண்களும் தாங்கள் அணிந்து வந்திருந்த நகைநட்டுகளைக் கழற்றி மகாபெரியவா முன்னால் இருந்த ஒரு பெரிய மூங்கில் தட்டிலில் வைத்தனர்.

"மகாபெரியவா இந்த நகைகளை எல்லாம் உருக்கி ஸ்வர்ணத்தை எடுத்துக்கணும். காமாட்சி விமானத்துக்கு தங்கரேக் பதிக்கறதுல எங்க பங்கும் இருக்கணும்!" கோரஸாக எல்லோரும் வேண்டினார்கள்.
"ஆசார்யாளோட ஸ்லோகத்தை இன்றைக்குச் சொன்னாலும் ஸ்வர்ண மழை பொழிகிறதே!" என்று மகா பெரியவா புளகாங்கிதம் அடைந்தார்.
"கனகதாராவைக் கேட்டுட்டு அன்னிக்கு மகாலக்ஷ்மி தங்கமழை பெய்ய வைச்சா. இன்னிக்கு இத்தனை பெண்கள் சாட்சாத் அம்பாள் ரூபத்துல கனகமழை பெய்ய வைச்சிருக்கா!" என்று மகாபெரியவா சொல்ல, அத்தனை பெண்கள் முகத்திலும் ஆனந்தப் பரவசம்.
மூங்கில் தட்டுல இருந்த நகைகளை அப்படியே ஆசாரி கிட்டே அள்ளிக் கொடுத்து எடை போடச் சொன்னார்.

அதை எடை போட்டுப் பார்த்தபோது, தான் கேட்ட பவுனுக்கு ஒரு குந்துமணி கூடவுமில்லை.குறையவுமில்லை என்று அதிசயப்பட்டார் அந்த ஆசாரி.
அடுத்த வாரமே விமானத்துக்கு தங்கரேக் பதித்து,கும்பாபிஷேகமும் அமோகமாக நடந்தது.
ஸ்ரீமடத்தில் பொருளாதாரக் கஷ்டம் நிலவியபோதும், காமாட்சி அம்மனுக்கு பொன்விமானம் அமைக்க வேண்டும் என்று மகாபெரியவா தீர்மானித்து அதை அம்பாளிடமே சொல்லி வேண்ட, தன் அம்சமான பெண்கள் மூலமாகவே அதைச் செய்வதற்கான அனுகிரஹத்தை அம்பாள் அப்போதே தந்துவிட்டாள்.

இதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை என்பது அந்த காஞ்சி மாமுனியின் அற்புதங்களை நேரில் பார்த்தவர்களுக்கும், தங்கள் வாழ்வில் உணர்ந்தவர்களுக்கும் தெரியும். ஈஸ்வரனின் அம்சமாகவே திகழ்ந்த மகாபெரியவாளின் மகிமை இருக்கும் போது, ஏது  குறை.

ஜெய ஜெய சங்கர .....ஹர ஹர சங்கர

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

என்னைப் பார்க்கணும்னு வந்துட்டு,பார்க்காமலே போனால் என்ன அர்த்தம் ?”

தெய்வத்தை வணங்குவதில் ஆத்மார்த்தம் இருப்பின், நம்முடைய பிரார்த்தனைகளில் நாம் வணங்கும் தெய்வத்தை நேரில் காண முடியும் என்பதற்கு நிறைய உதாரணங்களை சொல்ல முடியும். எவன் ஒருவன் தனது கடமைகளில் உண்மையாக இருக்கிறானோ அவனுடைய அருகில்  தெய்வம் நிற்கும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சியாக நிற்கிறது.

திருச்சியில் காஞ்சி பெரியவரின் பக்தர்  ஒருவர்  போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்தார். அவருடைய பூஜையறையில் காஞ்சி மகானின் படம் பிரதானமாக இருக்கும். அவருடைய நித்ய கடமையே, தினமும் காலையில் எழுந்து குளித்த பிறகு, ஏதாவது ஒரு நைவேத்யத்தை மகாபெரியவர் படத்துக்கு முன் வைத்து வணங்குவது தான். இந்த கடமைகளை முடித்து விட்டுத்தான் தன் வேலையை ஆரம்பிப்பார். வேலைக்கு நடுவிலும் பெரியவாளின் நாமத்தை அவரது உதடுகள் சதா உச்சரித்துக்கொண்டே இருக்கும்.
ஒரு தடவை பெரியவா, ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்நூலுக்கு விஜயம் செய்திருந்தார். ஏற்கனவே அது உஷ்ணப் பிரதேசம் ஆதலால், வெயில் கடுமையாக வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது. நம்முடைய திருச்சி பக்தருக்கும் பெரியவாளைத் தரிசிக்க வேண்டும் என்று மனதில் ஆசை. அன்று காலை ரயிலில் புறப்படும்முன் வழக்கம்போல் பெரியவா படத்துக்கு முன்னால் நைவேத்யமாக பாலை காய்ச்சி ஒரு டம்ளரில் ஊற்றி வைத்துவிட்டுப் போனார்.

கர்நூலில் பக்தர்கள்  கூட்டம் நிரம்பி வழிந்தது. எங்கு திரும்பினாலும் மக்கள் வெள்ளம். நமது  போட்டோகிராபர் எந்தப் பக்கமும் உள்ளே செல்ல முடியவில்லை. சற்றுத் தூரத்தில் இருந்த மணற் குவியல் ஒன்றின்மீது ஏறி நின்று மகாப் பெரியவாளைத் தரிசிக்க முயன்றார். வெயிலின் கொடுமையால் கால் ஒரு பக்கம் சுட்டது. அவரால் சிறிது நேரத்திற்குப் பின் தாக்குப் பிடிக்க முடியவில்லை.கும்பல் குறைந்தவுடன் மாலையில் வந்து பார்த்துக்கொள்ளலாம் என்று மனதில் கவலையோடு புறப்பட்டார். இவ்வளவு தூரம் வந்தும் மகானை உடனடியாகப் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் அவருக்கு.
சற்றுத் தூரம்தான் நடந்திருப்பார். யாரோ அவரைக் கூப்பிடுவதுபோல் தோன்றவே, திரும்பிப் பார்த்தார். காஞ்சி மடத்தில் வேலை பார்க்கும் சிப்பந்தி ஒருவர் வேகமாக போட்டோகிராபரிடம் ஓடி வந்தார். “நீங்க திருச்சியிலிருந்துதானே வந்திருக்கீங்க?”
“ஆமாம்”
“பெரியவா உங்களை அழைத்துக் கொண்டு வரச் சொன்னார்.”

“என்னையா ?” நம் பக்தருக்கு ஒரே வியப்பு.
“நீங்க போட்டோகிராபர் தானே ?” சிப்பந்தி கேட்டார்.
“ஆமாம்”
“அப்படியென்றால் உங்களைத்தான் அழைச்சுண்டு வரச் சொன்னார், வாருங்கள்”

விடாப்பிடியாக அவரை அழைத்துக் கொண்டுபோய் பெரியவா முன் நிறுத்தினார், அந்தச் சிஷ்யர். கைகளைக் கூப்பியவாறு, கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓட, புகைப்பட நிபுணர் தன்னை மறந்து அங்கே பெரியவரின் முகத்தைப் பார்த்த வண்ணம் நின்றார்.
அவரை ஒரு தடவை ஏற இறங்கப் பார்த்த மகான், “என்னைப் பார்க்கணும்னு இவ்வளவு தூரம் கிளம்பி வந்திருக்கே… கடைசியில் பார்க்காமலே போனால் என்ன அர்த்தம் ?” என்றார்.
“கும்பல் நிறைய இருந்தது, அதான் கொஞ்சம் குறைஞ்சவுடனே வரலாம்னு” என்று தடுமாற்றத்துடன் இழுத்தார் போட்டோகாரர்.
“சரி. சரி.. சாப்பிட்டியோ?” தாயன்புடன் கேட்டார் அந்த தயாபரன்.

“சாப்பிட்டேன்” என்றார் பக்தர்.
சில விநாடிகள் தாமதத்துக்குப் பின் மகான் பேசினார். “ என் வாயைப் பார்த்தியோ?”
நாக்கை வெளியே நீட்டுகிறார். சூடுபட்டது போல் சிவந்திருக்கிறது. பிறகு கேட்டார். “உதடெல்லாம் கூடப் புண்ணாகி விட்டது, ஏன் தெரியுமா?”
போட்டோகாரருக்கு என்ன சொல்றதுன்னு புரியவில்லை.பெரியவரையே பார்த்துக்கொண்டு நின்றார்.

“நீ பாலைச் காய்ச்சி கொதிக்க கொதிக்க சூடா வச்சிட்டு அவசரம் அவசரமாக் கிளம்பி வந்துட்டே இல்லியா… அதான்! “
திருச்சிக்காரருக்குப் புறப்படும்போது தான் சூடாக அவர் படத்தின் முன்பு பாலைக்காய்ச்சி வைத்துவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது.
சாஷ்டாங்கமாக மகானின் திருவடியில் விழுந்து, “மஹா பிரபு, என்னை மன்னியுங்கள் “ என்று கதறினார்.
நாம் எந்த அளவுக்கு உள்ளன்போடு பக்தியை செலுத்துகிறோமோ,அந்த அளவுக்கு காஞ்சி மகானும் பக்தர்கள் அளிப்பதை விரும்பி ஏற்றுக் கொள்வார் என்பதற்கு இதைவிட சான்று வேண்டுமா?. 
ஜெய ஜெய சங்கரா .... ஹர ஹர சங்கரா!

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

வாழ்க்கைக்கு வழிகாட்டும் பகவான் ஸ்ரீரமண மகரிஷி.!!

திருவண்ணாமலை - அருணாச்சலம்  பஞ்சபூதங்களில் அக்னிஸ்தலம். தீமைகளை தீ எரித்து விடுகிறது. தீய எண்ணங்களை எரித்து அகற்றி நமது ஞானக்கண்களை திறக்கச் செய்யும் பல ஆன்மிக அற்புதர்களை அடையாளம் காட்டிய பூமி திருவண்ணாமலை.

திருவண்ணாமலையில் இருந்து அகிலமெங்கும்  பேரொளி தரும் மகா ஞானி பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி, 1950 வது வருடம் இதே ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி இரவு 8.47 மணிக்கு தனது உடலை விட்டு நீங்கினார். இன்றைக்கும் பகவான் ஸ்ரீ  ரமணர் நம்மை சூட்சுமமாக வழி நடத்தி வருகிறார். ஸ்ரீ ரமணர் சித்தியடைந்த 50 வது வருடத்தை நெருங்கும் இந்த காலகட்டத்தில் அவரது அற்புதமான பொன்மொழிகளை இங்கு பகிர்கிறோம். இது நமது மன அழுக்கை , துயரத்தை முற்றிலும் நீக்கும் மூல மந்திரங்கள்.

மகிழ்வு நிறை வாழ்விற்கு பகவான் ஸ்ரீ  ரமணர் அருளிய அருட்கருத்துகள் .
1.  மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. அது ஒரு விரதம் தான். ஆனால் வாயை மட்டும் மூடிக் கொண்டு மனம் அலைபாய்ந்து கொண்டிருக்குமானால் அது மௌனமாகாது. அதனால் எந்தப் பயனும் இல்லை.

2.  சாதனைக்கு தேவை சத்துவ உணவும் நல்ல சத் சங்கமுமே!. மாமிச உணவு கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். மற்றபடி வேறு விதிகள் என்று எதுவும் இல்லை.

3. கடவுளை ஒவ்வொருவரும் அவர்களுடைய இதயத்தில் தேடினால், கடவுள் அருளும் அவர்களை நிச்சயம் தேடும்.

4.கர்த்தா ஒருவன். நாமெல்லாம் அவன் ஏவலுக்கு ஆட்பட்ட  கருவிகளே! இதனை ஒவ்வொருவரும் உணர்ந்தால் பணிவு வராமல் போகாது.

5. தீமைகளைச் செய்யாதீர்கள். புதிய வாசனைகளைச் சேர்த்துக் கொள்ளாதீர். தேவையற்ற சுமைகளைச் சுமக்காமல் இருங்கள்.

6. மனதை எண்ணங்களிலிருந்து விடுவிப்பதே சாதனையின் நோக்கமாகும்.

7.  குருவே ஈசுவரன். ஈசுவரனே குரு. கடவுளே குருவாய் வரும் நிலையும் உண்டு.

8.  தியானத்தில் ஆன்ம தியானம் எனப்படுவதே சிறந்தது. அது சித்தியானால் மற்ற தியானங்கள் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. ஒவ்வொருவருடைய மனப் பக்குவத்திற்கு ஏற்றவாறு தியான முறைகளைக் கை கொள்ள வேண்டும்.

9. உணர்வு ஒருமைப்பட்ட தியானத்தின் போது சில வகை ஒலிகள் கேட்கும். காட்சிகள் தெரியும். ஓர் ஒளி ஊடுருவது போல் தோன்றும். ஆனாலும் இவற்றில் மயங்கி தன்னிலை இழந்து விடாமல் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்.

10. மந்திரங்களை இடைவிடாது சொல்வதால் மனம் அடங்கும். பின் மந்திரம், மனம், மூச்சு என எல்லாம் ஒன்றே என்று ஆகும்.

11. ஆத்ம விசாரமே தவம், யோகம், மந்திரம், தவம் எல்லாம்.  ஒருவன் தான் யார் என்று அறிந்து கொள்ளத்தான். அதுவே மிகவும் முக்கியம்.

12. இறைவனை, ஞானத்தை ஒவ்வொருவரும் முயன்றுதான் அடைய வேண்டும். 

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡