Saturday, 1 December 2018

வாழ்க்கைக்கு வழிகாட்டும் பகவான் ஸ்ரீரமண மகரிஷி.!!

திருவண்ணாமலை - அருணாச்சலம்  பஞ்சபூதங்களில் அக்னிஸ்தலம். தீமைகளை தீ எரித்து விடுகிறது. தீய எண்ணங்களை எரித்து அகற்றி நமது ஞானக்கண்களை திறக்கச் செய்யும் பல ஆன்மிக அற்புதர்களை அடையாளம் காட்டிய பூமி திருவண்ணாமலை.

திருவண்ணாமலையில் இருந்து அகிலமெங்கும்  பேரொளி தரும் மகா ஞானி பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி, 1950 வது வருடம் இதே ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி இரவு 8.47 மணிக்கு தனது உடலை விட்டு நீங்கினார். இன்றைக்கும் பகவான் ஸ்ரீ  ரமணர் நம்மை சூட்சுமமாக வழி நடத்தி வருகிறார். ஸ்ரீ ரமணர் சித்தியடைந்த 50 வது வருடத்தை நெருங்கும் இந்த காலகட்டத்தில் அவரது அற்புதமான பொன்மொழிகளை இங்கு பகிர்கிறோம். இது நமது மன அழுக்கை , துயரத்தை முற்றிலும் நீக்கும் மூல மந்திரங்கள்.

மகிழ்வு நிறை வாழ்விற்கு பகவான் ஸ்ரீ  ரமணர் அருளிய அருட்கருத்துகள் .
1.  மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. அது ஒரு விரதம் தான். ஆனால் வாயை மட்டும் மூடிக் கொண்டு மனம் அலைபாய்ந்து கொண்டிருக்குமானால் அது மௌனமாகாது. அதனால் எந்தப் பயனும் இல்லை.

2.  சாதனைக்கு தேவை சத்துவ உணவும் நல்ல சத் சங்கமுமே!. மாமிச உணவு கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். மற்றபடி வேறு விதிகள் என்று எதுவும் இல்லை.

3. கடவுளை ஒவ்வொருவரும் அவர்களுடைய இதயத்தில் தேடினால், கடவுள் அருளும் அவர்களை நிச்சயம் தேடும்.

4.கர்த்தா ஒருவன். நாமெல்லாம் அவன் ஏவலுக்கு ஆட்பட்ட  கருவிகளே! இதனை ஒவ்வொருவரும் உணர்ந்தால் பணிவு வராமல் போகாது.

5. தீமைகளைச் செய்யாதீர்கள். புதிய வாசனைகளைச் சேர்த்துக் கொள்ளாதீர். தேவையற்ற சுமைகளைச் சுமக்காமல் இருங்கள்.

6. மனதை எண்ணங்களிலிருந்து விடுவிப்பதே சாதனையின் நோக்கமாகும்.

7.  குருவே ஈசுவரன். ஈசுவரனே குரு. கடவுளே குருவாய் வரும் நிலையும் உண்டு.

8.  தியானத்தில் ஆன்ம தியானம் எனப்படுவதே சிறந்தது. அது சித்தியானால் மற்ற தியானங்கள் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. ஒவ்வொருவருடைய மனப் பக்குவத்திற்கு ஏற்றவாறு தியான முறைகளைக் கை கொள்ள வேண்டும்.

9. உணர்வு ஒருமைப்பட்ட தியானத்தின் போது சில வகை ஒலிகள் கேட்கும். காட்சிகள் தெரியும். ஓர் ஒளி ஊடுருவது போல் தோன்றும். ஆனாலும் இவற்றில் மயங்கி தன்னிலை இழந்து விடாமல் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்.

10. மந்திரங்களை இடைவிடாது சொல்வதால் மனம் அடங்கும். பின் மந்திரம், மனம், மூச்சு என எல்லாம் ஒன்றே என்று ஆகும்.

11. ஆத்ம விசாரமே தவம், யோகம், மந்திரம், தவம் எல்லாம்.  ஒருவன் தான் யார் என்று அறிந்து கொள்ளத்தான். அதுவே மிகவும் முக்கியம்.

12. இறைவனை, ஞானத்தை ஒவ்வொருவரும் முயன்றுதான் அடைய வேண்டும். 

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment