மதுரை மாவட்டத்தையும் தாண்டி தென் தமிழகமே திருவிழாக் கோலத்தில் திளைத்து காணப்படுகிறது. வைகை வறண்டு இருந்தாலும், மதுரை முழுக்க மக்கள் கூட்டம் கடல் போல நிறைந்திருக்கிறது.
மதுரையம்பதியில் அன்னை மீனாட்சியை தரிசிக்க எப்போதுமே பக்தர் கூட்டம் அலைமோதும். அந்த அன்னையை எம்பெருமான் சுந்தரேசருடன் திருமணக் கோலத்தில் பார்க்கும் வாய்ப்பு என்கிற போது நினைக்கும் தருணத்தில் மனதில் பரவசம் எழுகிறது . பார்க்கும் பக்தர்களின் மனநிலையை எழுத்தில் சொல்லிவிட முடிவதில்லை.
அழகர் வைகையில் இறங்குவதன் பின்னனியில் இரண்டு தாத்ப்ரியத் தகவல்கள் சொல்லப்படுகிறது.
அழகர் மலையில் முனிவர் ஒருவர் வாழ்ந்து கொண்டிருந்தார். அங்குள்ள அழகர் தீர்த்தத்தில் அவர் நீராடிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அங்கு வந்தார் துர்வாச முனிவர். குளியலில் மூழ்கியிருந்த , துர்வாசரை கவனிக்கத் தவறிவிட்டார். இதனால் வெகுண்டெழுந்த துர்வாசர் , முனிவர் தம்மை அவமதித்தார் என்று கூறி மண்டூகமாக (தவளையாக) உருமாறுமாறு சாபமிட்டு விட்டார். இந்த சாபத்தால் பதறிப்போன அழகர் மலை முனிவர் , உடனடியாக துர்வாச முனிவரிடம் மன்னிப்பு கேட்டு தனக்கு சாப விமோசனத்தை அருள வேண்டினார்.
மனமிறங்கிய துர்வாசர், “ கொஞ்ச காலம் வைகை ஆற்றில் தவளையாக வசித்து அழகரை பிரார்த்தனை செய், சாப விமோசனம் உண்டு என்றார்.தவளையாக ஆற்றில் வசித்து வந்த மண்டூக முனிவர் அழகரை வணங்கியபடியே இருந்தார். அவரது பிரார்த்தனை அழகரை சென்றடைந்தது.
மண்டூக முனிவரின் பிரார்த்தனைக்கு செவி சாய்த்த அழகர் வைகையில் மண்டூக முனிவருக்கு தச அவதாரக் காட்சிகளுடன் காட்சி தந்தார். இந்நிகழ்வு, வைகை ஆற்றில் அழகர் எழுந்தருளி முனிவருக்கு பாபவிமோசனம் வழங்குவதாக முதல் முதலாக சோழவந்தானில் கொண்டாடப்பட்டது. அழகர் ஆற்றில் இறங்குவதன் பின்னனியில் இப்படி ஒரு தகவல் இருந்தாலும் , இன்றைக்கு வைகையில் அழகர் இறங்குவதன் பின்னனியில் அன்னை மீனாட்சியின் திருமணம் உள்ளது.
உள்ளூர் பிரமுகர் திருமணம் என்றாலே மதுரை போன்ற நகரங்களில் களை கட்டும். அகில உலக நாயகி அன்னை மீனாட்சியின் கல்யாணம் என்றால் ..... தெருவுக்கு தெரு பந்தலும் தோரணங்களும் என அழகுற காட்சி தரும் மதுரை பல வரலாற்று நிகழ்வுகளின் சாட்சியாக நிலைத்து நிற்கிறது.
பாண்டிய நாட்டின் இளவரசி தடாகை என்னும் மீனாட்சி போர்கலைகளில் கொடி கட்டி விளங்கி சென்ற இடமெல்லாம் பாண்டிய நாட்டின் வெற்றிக் கொடியை ஏற்றி வந்தாள். வெற்றித் தொடரின் இறுதியில் திருகைலாயம் சென்றபோது சிவனை எதிர்த்து போரிட்டவள் அவர் மீதான காதலில் தன் மனம் இழந்தாள். இந்த போரும் வெற்றி தான். ஆம் பாண்டிய நாட்டு மருமகனாக எம்பெருமான் சிவனை கொண்டு வந்தது மாபெரும் வெற்றிதானே.
போர்க்காயங்களை வெற்றித்தழும்புகளை சிவனின் காதல் மடை மாற்றியது. மாறாத காதலுடன் மதுரை திரும்பிய தடாகை அன்னை மீனாட்சியானாள்.
அன்னை மீனாட்சியை மதுரையில் கரம் பிடித்து திருமணக்கோலம் கண்டார் சுந்தரேசர். தமக்கை மீனாட்சியின் திருமண வைபவத்தில் கலந்து கொள்ள சகோதரர் அழகர், மதுரையிலிருந்து 25கிமீ தொலைவில் உள்ள அழகர் மலையிலிருந்து புறப்பட்டார்.
அந்த கால கட்டத்தில் அழகர் மலைப் பகுதியில் கள்ளர்கள் (திருடர்கள்) அதிகம். எனவே அழகர் கள்ளர் வேடமிட்டு கள்ளழகராக மாறி தங்கை மீனாட்சிக்கு சீர் கொண்டு வந்த பொருட்களை பாதுகாத்து வைகை ஆற்றின் அருகே வந்தடைந்தார். அதற்குள் மீனாட்சி கல்யாணம் நடந்து முடிந்தது என்பதை அறிந்த அழகர் பெருங்கோபம் கொண்டு வைகை ஆற்றில் இறங்கினார்.
தமது சகோதரர் அழகரின் கோபம் அறிந்த மீனாட்சி தனது கணவரான சுந்தரேஸ்வரருடன் வைகை ஆற்றிற்கே சென்று ஆசி பெற்று சீர் பொருள்களை பெற்றார். இன்றைக்கும் இந்த சடங்குகள் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இதைப்போலவே மதுரையின் மூன்று மாவடியிலிருந்து தல்லாகுளம் வரை அழகரை வரவேற்று எதிர்சேவை என்ற நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடத்தப்படுகிறது. இந்நிகழ்சியில் ஏராளமானோர் கோவிந்தா கோஷம் விண்ணதிர பங்கேற்று அழகரை வரவேற்கின்றனர்.
சித்திராப் பவுர்ணமி தினத்தில் தமக்கை மீனாட்சியின் கல்யாணத்திற்கு சீராக கொண்டு வந்த பொருட்களுடன் மதுரை வைகை ஆற்றில்,ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையுடன் தங்க குதிரை வாகனத்தில் இறங்குகிறார் அழகர். இந்த வைபவத்தில் அழகர் அணிந்திருக்கும் பட்டாடையின் நிறத்தைக் கொண்டு அடுத்து வரும் ஆண்டின் வளமானது கணிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.இதே நாள் இரவு பூப்பல்லக்கில் வைத்து அழகருக்கு உற்சவம் நடத்தப்படுகிறது. மறுநாள் காலை அழகர் கோவில் நோக்கி அழகர் புறப்பாடு செய்கிறார்.
மதுரையில் நடக்கும் சித்திரைத் திருவிழாவை வாழ்க்கையில் ஒரு முறையேனும் சென்று பார்ப்போம். அன்னை மீனாட்சியின் அருள் பெறுவோம்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment