Tuesday, 21 July 2020
சாம்பிராணியின் வகைகளும் அதனை தூபம் போடுவதால் உண்டாகும் பலன்கள்…!!
உடலில் விபூதி எந்தெந்த இடங்களில் அணிய வேண்டும்?
Monday, 20 July 2020
அமாசோம விரதம் 20.7.2020 திங்கட்கிழமை.!!
Sunday, 19 July 2020
தெரிந்தோ, தெரியாமலோ செய்த குற்றத்திற்கான சாபம் நீங்க பரிகாரம்.!!
எந்த தோஷமும் இன்றி சிலருக்கு திருமணம் தடைப்பட்டு கொண்டே இருக்கும். மேலும் சிலருக்கு எந்த வேலையை தொடங்கினாலும் அதில் சில தடைகள் வந்துகொண்டே இருக்கும். அது போன்றவர்களுக்கு தான் இந்த பரிகாரம்.
சிலருக்கு தெய்வ குற்றம் உண்டாகி இருக்கும். அது தெரியாமல் கூட இருக்கலாம். பக்தர்களுக்கு இருக்கும் பல்வேறு பிரச்சனைகளில் முக்கியமானது திருமண தடை. திருமண தடை நீக்க பரிகாரங்கள் ஏராளம் உள்ளன. திருமண தடைக்கு தெய்வ குற்றமும் ஒரு காரணமாக இருக்கலாம். இப்பிறவியில் தெரிந்தோ, தெரியாமலோ ஏதாவது தெய்வ குற்றம் செய்து இருப்பீர்கள். நீங்கள் என்று இல்லை. உங்கள் பெற்றோர் அல்லது முன்னோர்கள் செய்து இருப்பார்கள். அதன் விளைவாக தான் திருமணம் கைகூடி வராமல் தள்ளி சென்று கொண்டே இருக்கும். ஜாதகத்தில் தோஷம் என்பது பொதுவானது. ஆனால் எந்த தோஷமும் இன்றி சிலருக்கு திருமணம் தடைப்பட்டு கொண்டே இருக்கும். மேலும் சிலருக்கு எந்த வேலையை தொடங்கினாலும் அதில் சில தடைகள் வந்துகொண்டே இருக்கும். அது போன்றவர்களுக்கு தான் இந்த பரிகாரம்.
துர்கை அம்மனுக்கு இதை செய்வதால் தெய்வ குற்றம் நீங்கும். அதை பற்றிய விரிவான தகவல்களை இப்பதிவில் காணலாம் வாருங்கள். தெய்வக்குற்றம் மட்டும் இல்லை. சாபம் கூட திருமணம் மற்றும் தொழில் தடைக்கு காரணமாக இருக்கலாம். இந்த பிறவியிலோ அல்லது போன பிறவியிலோ யாருடைய சாபதிற்ககோ நீங்கள் ஆளாகி இருக்கலாம். சாபம் என்பது வழி வழியாக தொடர்கதையாக வருவது. ஒருவருக்கு இழைக்கபட்ட அநீதியானது சாபமாக மாறும் போது அது கட்டாயம் பலிக்கும். ஆனால் அதன் பலனை அனுபவிக்கும் போது அவர்களுக்கே தெரியாமல் போகலாம். அவர்களது சந்ததியினரும் கூட இந்த பலனில் பங்கு கொள்வார்கள். நீங்கள் கேட்டிருக்கலாம்.. சிலர், உன் குடும்பமே தழைக்காமல் போகும். உன் சந்ததியே துன்பமுறும் என்றெல்லாம் வயிற்றெரிச்சலுடன் சாபம் இடுவார்கள்.
அவையெல்லாம் பலிக்குமா? என்று கேட்டால் தெரியாது தான். ஆனால் சில சாபங்கள் மிகவும் கொடூரமான விதத்தில் இருக்கும். சாபம் பலிக்காது என்று கூற சான்றுகள் இல்லை. பலிக்கும் என்பதற்கு சில புராணங்கள் எடுத்துக்காட்டாக இருப்பது அனைவரும் அறிந்ததே. கண்ணகிக்கு இழைக்கபட்டது அநீதி. அதன் விளைவாக மதுரையே நிர்மூலமானது. அது போல் சபத்தினால் கூட தடைகள் ஏற்படக்கூடும். அந்த மாதிரியான தடைகளை நீக்கி நல்லது நடக்க இந்த வழிபாடு பெருமளவு துணை புரியும் என்பதில் சந்தேகம் இல்லை. 1. துர்க்கை அம்மன் சன்னதியில் வெள்ளிக்கிழமை தோறும் ராகு காலத்தில் காலை பத்தரை மணி முதல் பணிரெண்டு மணிக்குள்ளாக தாமரைத் தண்டினாலான திரி கொண்டு நெய் தீபம் ஏற்றி மனதார உங்கள் கோரிக்கைகளை வைத்து வழிபட்டு வந்தால் தெய்வக் குற்றம் நீங்கும். சாபத்தினால் ஏற்பட்ட தோஷங்களும் நீங்கும்.
மிகவும் சக்தி வாய்ந்த இந்த வழிபாட்டை செய்து அனைவரும் பலனடையலாம். தெய்வக்குற்றம் மற்றும் சாபம் நீங்குவதற்கான பரிகாரம் தான் இது. 2. தொடர்ந்து ஆறு வாரங்கள் இதை செய்து முடித்த பின்னர் அஸ்த நட்சத்திரம் வரும் நாளில் துர்க்கை சன்னதிக்கு சென்று சிகப்பு நிறத்தாலான பட்டு துணி ஒன்றை அம்மனுக்கு சாற்றி, சிகப்பு தாமரை பூவினை துர்க்கை அம்மனின் மலர் பாதங்களில் வைத்து 27 என்ற எண்ணிக்கையில் எலுமிச்சை பழங்களை மாலையாக கோர்த்து அந்த மாலையை அம்மனுக்கு சாற்றி குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை செய்த பின் தங்களால் முடிந்த அளவிற்கு பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்கலாம். அர்ச்சனை செய்த அந்த குங்குமத்தை வீட்டிற்கு கொண்டு வந்து தினமும் நெற்றியில் இட்டு வருவதன் மூலம் தடைகள் நீங்கும். விரைவில் நாம் எதிர்பார்ப்பது கைகூடி வரும்...
🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔
🎪 *ஓம் நமசிவாய* 🎪
🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
_ என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
🕉️ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ 🕉️
🙆🏻♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻♂️
🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴
Saturday, 18 July 2020
ஒரு உன்னதமான நிகழ்வு.!!
முன்னொரு சமயம், குருவாயூர் கோவிலில் பூஜை செய்து வந்த நம்பூதிரி,அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது.
கோவிலில் பூஜைகள் தடை இல்லாமல் நடக்க வேண்டும் என்பதால், சிறு பாலகனான தனது மகனிடம் கோவிலைக் கவனித்துக் கொள்ளும்படியும், பூஜைகளைத் தடையின்றி செய்ய வேண்டும் என்றும், குறித்த நேரத்தில் நைவேத்யம் செய்யுமாறும் கூறிச் சென்றார்.
அவனும் அரிசியை சமைத்து அப்பனுக்கு நைவேத்யம் செய்து, அப்பனிடம், “கண்ணா! சாப்பிடு.” என்று கூறினான்.
கண்ணன் அசையவில்லை. உடனே அவன், வெறும் சாதத்தை எவ்வாறு கண்ணன் சாப்பிடுவான், என நினைத்து, அருகில் உள்ள வீட்டில் இருந்து கொஞ்சம் தயிரும், வடுமாங்காயும் வாங்கி வந்தான்.
தயிரை சாதத்தில் கலக்கி, உப்பு மாங்காயை வைத்தான். அப்பொழுதும் கண்ணன் சாப்பிடவில்லை.
“சாப்பிடு கண்ணா!” என்று கெஞ்சினான்.
சாதம் அப்படியே இருந்தது.
“என்னுடைய அப்பா வந்தால், உனக்கு சாப்பிட ஒன்றும் தரவில்லையென்று திட்டுவார், சாப்பிடு!” என்று சொல்லிக் கெஞ்சி அழுதான்.
குழந்தையின் அழுகையைப் பொறுக்க முடியாத கண்ணன், காட்சி தந்தான்.
அன்னத்தை உண்டான்.
குழந்தையும் சந்தோஷமாக, காலித் தட்டுடன் வெளியே வந்தான். பொதுவாக, நைவேத்யத்தை கோவிலுள்ள பிஷாரடிக்குக் கொடுப்பது வழக்கம். காலித் தட்டுடன் வெளியே வந்த அவனைக் கண்ட அவருக்கு மிகுந்த கோபம் வந்தது.
“சாதம் எங்கே?” என்று கேட்டார்.
குழந்தையும், “கண்ணன் சாப்பிட்டு விட்டான்” என்று சொன்னான்.
நம்பூதிரி வந்ததும், பிஷாரடி, “நைவேத்தியத்தை உங்கள் மகன் சாப்பிட்டுவிட்டு, கண்ணன் சாப்பிட்டதாகச் சொல்கிறான்” என்று சொன்னார்.
நம்பூதிரி, “நைவேத்தியத்தை என்ன செய்தாய்?”என்றுகேட்டார். மறுபடியும் குழந்தை, “கண்ணன் நேரிலேயே வந்து சாப்பிட்டுவிட்டான்” என்று சொன்னான்.
அப்போது அருகில் உள்ள வீட்டில் இருந்தவர்கள், தங்கள் வீட்டிலிருந்து தயிரும், மாங்காயும் அவன் வாங்கிச் சென்றதைச் சொன்னார்கள்.
நம்பூதிரி மிகுந்த கோபத்துடன், “தினமும் பூஜை செய்யும் எனக்குக் காட்சி தராமல்,
கண்ணன் உனக்குக் காட்சி தந்து உணவை உண்டாரா? உன்னால் வெறும் சாதத்தைத் தின்ன முடியாது என்று தயிரும் மாங்காயும் வைத்து சாப்பிட்டுவிட்டு, கண்ணன் சாப்பிட்டு விட்டான் என்று பொய் சொல்கிறாயா?” என்று அடித்தார்.
குழந்தை இடத்தைவிட்டு நகரவில்லை.
குழந்தையை அடிப்பதைக் கண்ணனால் பொறுக்க முடியவில்லை.
நம்பூதிரி மீண்டும் அடிக்கக் கையை ஓங்கியபோது, “நான்தான் உண்டேன், குழந்தை குற்றமற்றவன்.” என்று சன்னிதியிலிருந்து அசரீரி ஒலித்தது. கூடியிருந்த அனைவரும் அதிசயித்தனர்.
நம்பூதிரி, கண்களில் நீர் வழிய, “என் மகனுக்குக் காட்சி தந்து, அவன் தந்த உணவையும் உண்டாயே!! என்னே உன் கருணை! என் மகன் பாக்யசாலி!” என்று கூறித் தன் மகனை வாரி அணைத்துக் கொண்டார்.
கிருஷ்ணா முகுந்தா முராரே….
குருவாயூரப்பனே உன் திருவடிகளே சரணம்…
🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔
🎪 *ஓம் நமசிவாய* 🎪
🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
_ என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
🕉️ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ 🕉️
🙆🏻♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻♂️
🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴
கருடனிடம் வரம் வாங்கிய திருமால்.!!
கண் திருஷ்டியை நீக்கும் கடல் நீர்.!!
தீராத நோயும், பகையும், கடனும் தீர முருகனுக்கு விரதம் இருங்க.!!
ஆண்டாளால் பெருமை பெற்ற ஆடி பூரம்.!!
கண்களை மூடிகொண்டு ஏன் இறைவனை வணங்ககூடாது.!!
Friday, 17 July 2020
எந்த பாவத்தையும் இந்த பாடல் போக்கும் என்கிறார் அகத்திய சித்தர்.!!
செல்வம் பெருக 18 குறிப்புகள்.!!
கலியுகமும் தற்போதைய சூழலும்.!!
ஆடி புண்ணியகாலம்.!!
கந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு.!!
Thursday, 16 July 2020
கந்த புராணத்தில் கருப்ப சாமி.!!
Wednesday, 15 July 2020
ஆடி மாதத்தின் சிறப்புகள் என்ன?
ஆடி மாதத்தை அடிப்படையாக வைத்துதான் பல சுப நிகழ்ச்சிகளை முன்னோர்கள் நடத்தினர். ஆடியை கற்கடக மாதம் என்றும் அழைக்கிறார்கள்.
மாதங்களைப் பொறுத்தவரை உத்ராயணம், தஷ்ணாயணம் என இரு பிரிவுகள் உள்ளது. இதில் தஷ்ணாயணம் புண்ணிய காலம் ஆடி மாதத்தில் துவங்குகிறது. ஆடி முதல் மார்கழி வரை தஷ்ணாயண காலமாகவும், தை முதல் ஆனி வரை உத்ராயணம் என பிரிக்கப்பட்டுள்ளது. சூரியனின் பாவன இயக்கத்தை (வடகிழக்கு, தென்கிழக்கு) வைத்து இது வரையறுக்கப்படுகிறது.
தஷ்ணாயணம் துவக்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும். வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்கள், மாந்த்ரீகம் ஆகியவற்றிற்கு ஆடி மாதம் சிறந்ததாக கருதப்படுகிறது. பிரணாய வாயு அதிகமாக கிடைப்பதும் ஆடியில்தான். ஜீவ ஆதார சக்தி அதிகம் உள்ள மாதமாகவும் இது கருதப்படுகிறது.
ஆடி மாதத்தை சக்தி மாதம் என்றும் பண்டைய ஜோதிட நூல்கள் குறிப்பிட்டுள்ளன. எனவே இந்த மாதத்தில் விதை விதைப்பதை முன்னோர்கள் மேற்கொண்டனர். ஆடிப் பட்டம் தேடி விதை என்ற பழமொழி உருவானதற்கும் இதுவே காரணம். உத்ராயண காலத்தில் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களை விட, தஷ்ணாயண காலத்தில் (ஆடி) சூரியனின் ஒளிக் கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும்.
சுற்றுப்புறத்தை தூய்மையாக்கி, தெய்வங்களை (அம்மன்) வழிபட்டு உள்ளுணர்வை மேம்படுத்திக் கொள்ளவும் ஆடி மாதம் பயன்படுகிறது. வேப்பிலையை அம்மனுக்கு சாத்தி வணங்குவதும், கூழ் ஊற்றும் விழா நடத்துவதும் ஆடி மாதத்தில் நடக்கிறது.
இதற்கு காரணம், ஆடி மாதத்தில் கிடைக்கும் வேப்பிலைக் கொழுந்துகளுக்கு அபார மருத்துவ, தெய்வீக குணம் உண்டு. ஆடி மாதத்தில் பொதுவாகவே காற்று அதிகமாக வீசும். அந்தக் காலத்தில் எளிதில் ஜீரணிக்கக் கூடிய வகையிலான உணவுகள் (கூழ்) சாப்பிடுவது நல்லது. இதனால் ஆரோக்கியம் மேம்படும்.
துர்க்கை, காளி உள்ளிட்ட பெண் தெய்வ வழிபாட்டுக்கு உரியதாகவும் ஆடி மாதம் கருதப்படுகிறது. இதேபோல் 18ஆம் பெருக்கு எனப்படும் ஆடி-18 விழா மிகவும் உன்னதமானது. அன்றைய தினம் எந்த நட்சத்திரம், திதியில் வந்தாலும், புதிய முயற்சிகளை அனைத்து தரப்பினரும் மேற்கொள்ளலாம்.
ஆடிப்பெருக்கு தினத்தில் நதியோரம் உள்ள கோயில்களில் கன்னிப் பெண்கள் வழிபாடு செய்தால் சிறப்பான கணவர் அமைவர். சுமங்கலிப் பெண்கள் இதுபோன்று வழிபாடு நடத்தினால் அவர்களின் துணைவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும். சப்த கன்னிகளை உருவாக்கி ஆடிப் பெருக்கு வழிபாடு மேற்கொள்வதும் நல்ல பலனைத் தரும்.
இதேபோல் ஆடிப் பூரம் விழா கேரளாவில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் மிக அருமையாக கொண்டாடப்படும். சுப நிகழ்வுகள் ஏராளமாக நடைபெறுவதால் ஆடி மாதம் பல வகையிலும் சிறந்தது...
🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔
🎪 *ஓம் நமசிவாய* 🎪
🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
_ என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
🕉️ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ 🕉️
🙆🏻♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻♂️
🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴
சகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீசுதர்சனர் மாலா மந்திரம்.!!
தேய்பிறை அஷ்டமி ஸ்பெஷல்.!!
Tuesday, 14 July 2020
அனைத்து வகை சனி தோஷங்களும் நீங்க அகத்தியர் சித்தர் கூறிய வழிபாடு முறை.!!
கருடன் பகவான் பற்றிய அரிய தகவல்கள்.!!
1. ஸ்ரீகருடன் மகாவிஷ்ணுவின் ‘சங்கர்சண’ அம்சமாகக் கருதுவதால் அவரை கண்டிப்பாக வணங்க வேண்டும்.
2. ஸ்ரீகருடனுக்கு சிவப்பு நிறமுள்ள பட்டு வேஷ்டியை அணிவித்து மல்லிகைப்பூ, மருக்கொழுந்து, கதிர்ப்பச்சை (தமனகம்), சம்பகப் பூக்களால் அர்ச்சனை செய்வது சிறந்தது.
3. ‘யுவதிஜனப்பிரியா நம’ என ஸ்ரீகருடனை துதித்து பெண்களும் மாலையில் குங்கும அர்ச்சனை செய்யலாம்.
4. காஞ்சியில் கருட சேவையை அதிகாலையில் தரிசிப்பது மிகவும் விசேஷம்.
5. கருட பெருமான் திருமாலின் இரண்டு திருவடிகளையும் தம் இரு கரங்களால் தாங்கி ஊர்வலமாக வரும் காட்சியே கருட சேவை எனப்படும். அப்போது பெருமான், கருடன் ஆகிய இருவரின் அருளும் ஒருங்கே கிடப்பதைப் பக்தர்கள் புனிதமாகக் கருதுகிறார்கள்.
6. ‘திருமாலும் கருடனும் ஒருவரே’ என்று மகாபாரதத்திலுள்ள அனுசாசன பர்வத்தில் காணப்படுகிறது.
7. ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீர்யம், அதீத சக்தி, தேஜஸ் என்ற ஆறு விதமான குணங்களுடன் கருடன் திகழ்கிறார்.
8. திருமாலைப் போல அணிமா, மகிமா, லகிமா, கரிமா, ஈஸித்வம், வசித்வம், பிராபதி – பிராகாம்யம் ஆகிய எட்டு விதமான சம்பத்துக்களாக இருந்து கொண்டு, பக்தர்களுக்கு அவற்றைத் தருபவராக ஸ்ரீ கருடன் விளங்குகிறார்.
9. கருடனுக்கு சார்பர்ணன் என்றொரு பெயருண்டு. கருடனுடைய மனைவியர் ருத்ரா, சுகீர்த்தி.
10. கருடனுடைய மகிமையை ஏகாதசி, திருவோணம் போன்ற புண்ணிய தினங்களில் படிப்பவர்களும், கேட்பவர்களும் கடும் நோய்களில் இருந்து விடுதலை பெறுவர்.
11. கேரள மன்னரான சுவாதி திருநாள் இசை வித்தகராக மட்டுமின்றி பல கலைகளிலும் வல்லவராக இருந்ததற்குக் கருடோபாசனையே காரணம்.
12. கொலம்பஸ் கடலில் திக்குதிசை தெரியாமல் தவித்த போது கருடன் வானத்தில் வட்டமிட்டு திசை காட்டியதாக சரித்திரம் சொல்கிறது.
13. கருடனுக்கு கருத்மான், சாபர்ணன், பந்தகாசனன், பதகேந்திரன், பகிராஜன், தார்ச்டயன், மோதகாமோதர், மல்லீபுஷ்யபிரியர், மங்களாலயர், சோமகாரீ, பெரிய திருவடி, விஜயன், கிருஷ்ணன், ஜயகருடன், புள்ளரசு, கலுழன், சுவணன்கிரி என்றும் ஓடும்புள் கொற்றப்புள் என்றும் பெயர்கள் உண்டு.
14. வைணவ ஆழ்வார்கள் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் 36 இடங்களில் கருடனை போற்றிப் புகழ்ந்து பாடியிருக்கிறார்கள்.
15. சிவகங்கை மாவட்டத்தில் -காரைக்குடியை அடுத்துள்ள அரியக்குடி. இங்கு எழுந்தருளி இருப்பவர் ஸ்ரீநிவாசப் பெருமாள். இங்கு மூலைக் கருடன் வழிபாடு சிறப்பானது. நல்லது நடக்கவும். தீமைகள் மறையவும் இங்கு மூலைக் கருடனுக்கு சிதறுகாய் உடைப்பது வழக்கம்.
16. மௌரியர்கள் கருடனை மிகவும் அதிர்ஷ்ட தெய்வம் என்று கருதினார்கள்.
17. குப்தர்காலத்தில் குமார குப்தன், சமுத்திர குப்தன் என்ற இரண்டு அரசர்கள் தங்கள் பொன் நாணயங்களில் கருடனைப் பொறித்தார்கள். கருட முத்திரை தங்கள் நாட்டிற்கு வளம் சேர்க்கும் என்று அவர்கள் நம்பிக்கைப்படி குப்தர்கள் காலம் வரலாற்றின் பொற்காலமாகத் திகழ்ந்தது.
18. சந்திரகுப்த விக்ரமாதித்தன் முதன் முதலில் நாட்டின் நலனைக் கருதி டெல்லியில் ஒரு கருட ஸ்தம்பத்தை ஸ்தாபித்தார்.
19. உலக வல்லரசாக அமெரிக்கா திகழக் காரணமாக இருப்பது அந்த நாட்டின் சின்னமான கருடனால்தான்.
20. பதினெட்டு நாட்கள் நிகழ்ந்த மகாபாரதப் போரில் கடைசி நாள் போர் கருட வியூக யுத்தமாக நடந்தது. இதுவே பாண்டவர்களுக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது.
21. நேபாள நாட்டில் கருட நாக யுத்தம் என்று ஒரு விழா நடைபெறுகிறது. அப்பொழுது கருடனுடைய திருமேனியில் வியர்வைத் துளிகள் தோன்றும். அதைத் துணியால் ஒற்றி எடுத்து அதை அரசருக்கு அனுப்புவார்கள். அந்தத் துணியின் நூலிழையை பாம்பு கடித்த மனிதனுக்கு சுற்றினால் பாம்பு கடி விஷம் உடன் இறங்கி விடும்.
22. கருடனால் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கொண்டு வரப்பட்ட வைரமுடி என்கிற அணிகலன் தற்பொழுது கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள மேல்கோட்டை என்னும் திருநாராயணபுரத்து பெருமாளுக்கு சூட்டப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி இன்றும் ஒவ்வொரு பங்குனி ஏகாதசியில் வைரமுடி சேவை என்று திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
23. வானத்தில் கருடனைப் பார்க்கும் போது கைகூப்பி வணங்கக் கூடாது. கன்னத்தில் போட்டுக் கொள்ளவும் கூடாது. மங்களானி பவந்து என மனதில் சொல்லிக் கொள்ள வேண்டும்.
24. பிரான்ஸ் சக்ரவர்த்தி மாவீரன் நெப்போலியனுடைய கொடி கருடக் கொடியாகும். எனவேதான் அவரால் பலவெற்றிகளை அடைய முடிந்தது.
25. ஸ்ரீவில்லிப்புத்தூரில் ரங்க மன்னர் ஆண்டாளுடனும் கருடனுடனும் ஒரே ஆசனத்தில் காட்சி தருவது வேறு எந்த தலத்திலும் இல்லாத சிறப்பு. இப்படி இங்கு கருடனுக்கு தனிமரியாதை கொடுப்பதன் காரணம் கருடன் பெரியாழ்வாராக அவதரித்ததால் மாமனார் ஸ்தானம் ஆகிறது.
26. எல்லா திவ்ய தேசங்களிலும் இரண்டு கரங்களையும் குவித்து வணங்கும் கருடாழ் வாரைத்தான் காணமுடியும். திருக்கண்ணங்குடி என்ற திவ்ய தேசத்தில் மட்டும் இரண்டு கைகளையும் காட்டிக் கொண்டு தரிசனம் தருகிறார். இந்தக் காட்சி வைகுண்டத்தில் கருடன் எழுந்தருளியுள்ள காட்சி என்று கூறுவார்கள்.
27. கும்பகோணத்திலிருந்து அருகில் உள்ள திருவெள்ளியங்குடி என்ற தலத்தில் கருடாழ்வார் நான்கு கரங்களுடன் கைகளில் சங்கு சக்கரங்களும் கொண்டதாகக் காட்சி தருவது வேறு எந்தத் தலத்திலும் கிடையாது. சங்கு சக்கரங்களைப் பெற்றதால் பெருமாளின் சக்தியே தன்னிடம் வரப்பெற்றவராய் கருடாழ்வார் இங்கு திகழ்கிறார்.
28. ஆழ்வார் திருநகரியில் நவ கருட சேவை மிக சிறப்பானது. வைகாசி விசாகம் இறுதியாக நம்மாழ்வாருக்கு பத்து நாள் திரு அவதார திருநாள் நடைபெறுகிறது. இதில் ஐந்தாவது நாள் நவதிருப்பதி எம்பெருமான்கள் ஆழ்வார் திருநகரிக்கு எழுந்தருளி அபிஷேக, ஆராதனைகள் கொண்டு இரவு ஒன்பது பெருமாளுக்கும் கருடாரூடர்களாக ஆழ்வாருக்கு சேவை சாதிக்கிறார்கள். இங்கு கருடன் சம்ஸரூபியாக இருக்கிறார்.
29. பாண்டி நாட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருத்தங்கல்லில் (திருத்தண்கால்) கோவிலில் கருடாழ்வார் சர்ப்பத்துடனும், அம்ருத கலசத்துடனும் காட்சியளிக்கிறார்.
30. நம்பாடுவான் என்ற ஹரிஜன வைணவ பக்தனுக்காக கருடாழ்வாரும், கொடி மரமும் சற்று விலகி உள்ள தலம் திருக்குறுங்கடி.
31. கருட தரிசனம் செய்வது பெருமாளே நேரில் வந்து நமக்கு வெற்றி வாழ்த்து சொல்வதற்கு சமம் ஆகும்.
32. நமது காரியம் வெற்றி பெறும் என்று இருந்தால் தான் மகா விஷ்ணுவாகிய ஸ்ரீ நாராயணன் கருடன் தரிசனம் கிடைக்கச் செய்வார் இல்லையெனில் கருட தரிசனம் கிட்டாது.
33. ஆயிரம் ஆயிரம் சுப சகுணங்கள் கிட்டினாலும் ஒரு கருட தரிசனத்திற்கு ஈடாகாது! தன்னிகரற்றது கருட தரிசனம்!
34. கெட்ட சகுணங்கள் துர்சேட்டைகள், துர் குறிகள் போன்ற அசுபங்கள் அனைத்தும் கருட தரிசனத்தால் சூரியனைக் கண்ட பனிபோல் பறந்தோடிவிடும்!
35. பறவைகளில் நான் கருடன் என்று கருடனைப்பற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது பகவத் கீதையில் கூறியுள்ளார்.
36. அழகிய கருட பகவானின் தரிசனத்தைக் கண்டாலே உள்ளத்தில் உற்சாகமும், ஊக்கமும் உண்டாவதை நிதர்சனமாக உணரலாம்.
37. கருடனில் இருந்து கிடைக்கப்பெறும் தெய்வீக ஒளிக்கதிர் வீச்சானது மனிதர்களின் உடலிலும் உள்ளத்திலும் ஒருவித நேர்மறை சக்திகளை உண்டாக்குகிறது என்று அறிவியல் ஆய்வில் கண்டு பிடித்துள்ளனர்.
38. எதிரிகளை முறியடிக்கின்ற நேர்மறையான அதிர்வலைகளை கருட தரிசனம் தருகிறது.
39. கருட தரிசனம் சிறந்த சமயோகித புத்தியையும், நல்ல சிந்தனைகளையும், நல்ல எண்ணங்களையும் அளிக்கிறது.
40. நல்ல தெய்வீக சக்திகள் சூழ்ந்த சூழ்நிலைகளில் கருட வாசம் நிச்சயம் இருக்கும்.
41. எதுவும் சரியாக இல்லாத போது என்ன தான் நாம் கருட தரிசனம் காண முற்பட்டாலும், கருட தரிசனம் கிட்டாது என்பது பலரது அனுபவமாகும்.
42. நவரத்தினங்களில் ஒன்றான பச்சை நிறமுள்ள மரகதத்திற்கு கருடோத்காரம் அல்லது காருடமணி என்று பெயர். கருடனால் விழுங்கி துப்பப்பட்ட பலாசுரன் என்ற அசுரனின் எலும்புகளே மரகதமாக மாறின. இதை அணிவதால் பாம்பு போன்ற விஷ ஜந்துக்களால் துன்பம் ஏற்படாது.
43. அமிர்தக் குடத்தை எடுத்துவர தேவலோகம் சென்ற கருடன், அங்குள்ள தர்பைப் புல்லையும் பூலோகத்திற்குக் கொண்டு வந்தார். அமிர்தத்துடன் தர்ப்பையையும் கொண்டு வந்ததால் அதனை அமிர்தவீர்யம் என்ற பெயரில் அழைக்கின்றனர்.
44. ஒரு காலத்தில் சுவேதத் தீவில் இருந்த பாற்கடலின் பால் கட்டிகளை தன்னுடைய சிறகு முழுவதும் அப்பிக்கொண்டு வந்து எங்கும் உதறினார் கருட பகவான். அவற்றையே ஸ்ரீ வைஷ்ணவர்கள் திருமண் என்று அணிந்து கொள்கின்றனர்.
45. கருடனுக்கு கஸ்தூரி, குங்குமப்பூ, புனுகுச்சட்டம் ஆகியவற்றை வாழைச்சாற்றில் கலந்து அவரது திருமேனியில் சாற்றி வேண்டிக் கொண்டால் அனைத்து இஷ்ட சித்திகளையும் எளிதில் அடையலாம்.
46. ஸ்ரீமந் நாராயணனின் அவசர காரியத்திற்காக, கருட பகவான் அவரைத் தாங்கிக்கொண்டு விரைந்து சென்று கொண்டிருப்பார். எனவே அவர் பறக்கும்போது கையெடுத்துக் கும்பிட்டால், அவரது வேகம் குறைந்து எம்பெருமானின் செயலுக்கு ஊறு நேரிடலாம் என்பதால் அப்படி சொல்லி உள்ளனர்.
47. கருடன் மட்டுமே இறக்கைகளை அசைக்காமல் பறக்கும் சக்தி உடையவர். எனவே உயர பறக்கும் போது இறக்கைகளை அசைக்காமல் இருந்தால் அது கருடன் என்று முடிவு செய்யலாம்.
48. ஜைன மதத்தினர் கருடனை சுபர்ணா என்ற பெயரில் வழிபட்டு வருகின்றனர். பவுத்தர்கள் உராசனா, பன்னகாசனா, நாகத்தகா ராஜநிர்ஹனா என்னும் பெயர்களில் கருடனை வழிபட்டு வருகின்றனர்.
49. கருடனின் நிழல்பட்ட நிலத்தில் நல்ல விளைச்சல் உண்டாகும். காரணம், வேத ஒலிகளுக்கு தாவரங்களை நன்கு வளர வைக்கும் சக்தி உண்டு.
50. சப்த மாதர்களில் ஸ்ரீவைஷ்ணவி கருட வாகனத்தைப் பயன்படுத்துகிறார். ஆனால் அவர் ஸ்ரீவிஷ்ணுவின் பிரிக்க முடியாத சக்தி என்பதால் அவரையும் ஸ்ரீவிஷ்ணுவாகவே கொள்ள வேண்டும்...
🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔
🎪 *ஓம் நமசிவாய* 🎪
🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
_ என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
🕉️ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ 🕉️
🙆🏻♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻♂️
🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴
ஒன்பது விதமான பக்திகள்.!!
பகவானிடம் பக்தி கொள்பவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதில்லை. பக்தி என்பது அவரவர் மனோபாவத்திற்கு ஏற்றதாக அமைகிறது. இப்படி பக்தியை ஒன்பது விதமாக வகைப்படுத்த முடியும்.
சிரவணம் – பகவானுடைய நாமங்களையும், அவனுடைய கல்யாண குணங்களையும் கேட்பது.
கீர்த்தனம் – பகவானின் பெருமைகளைப் பேசுவது.
ஸ்மரணம் – எப்பொழுதும் பகவானை நினைத்துக் கொண்டிருப்பது.
பாத சேவனம் – பகவான் கால்களில் விழுந்து வணங்குவது.
வந்தனம் – பகவானை வணங்குவது, அவனைப் போற்றுவது.
அர்ச்சனம் – பகவானுக்கு மலர்களையும், கனிகளையும் கொடுத்து மகிழ்வது.
தாஸ்யம் – பகவானின் வேலைக்காரனாக நடந்து கொள்வது.
ஸக்யம் – பகவானிடம் நட்பு கொள்வது.
ஆத்ம நிவேதனம் – பகவானுக்காகத் தன் உயிரையே தியாகம் செய்வது.
இராமாயணத்தில் இந்த ஒன்பது வகையான பக்திக்கும் சிலரை
உதாரணமாகக் கொள்ள முடியும்.
ச்ரவண பக்தி – அனுமார் – இராம நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருந்தவர்.
கீர்த்தன பக்தி – வால்மீகி – இராமாயணம் இயற்றியவர்.
ஸ்மரண பக்தி – சீதை – அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்ட சீதை இந்த பத்து மாதம் இராமனையே நினைத்திருந்தாள்..
பாதசேவன பக்தி – பரதன் – இராமனின் பாதுகையை இராமனாக நினைத்து வணங்கியவன்.
வந்தன பக்தி – வீபீஷணன் இராவணனின் தம்பியானவன்,
இராமனையே வணங்கி வந்தான்.
அர்ச்சன பக்தி – சபரி – இராமனுக்கு நல்ல பழங்களைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பழத்தையும் தானே கடித்துப்பார்த்து அளித்தவள்.
தாஸ்ய பக்தி – இலட்சுமணன் – இராமனுடனேயே இருந்து அவரதி
சொல்படி நடந்தவன்.
ஸக்ய பக்தி – சுக்ரீவன் – இராமனுடன் நட்பு கொண்டவன்.
ஆத்ம நிவேதனம் – ஜடாயு இராவணனிடமிருந்து சீதையைக்
காப்பாற்ற முயன்று தன் உயிரைக் கொடுத்தவர்.
இந்த ஒன்பது வகை பக்தியில் எது சிறந்ததாக கருதப் படுகிறது?
நமக்கு பார்க்க பிடிக்காத விஷயங்களை கண்ணை மூடிக்கொண்டு தவிர்க்கலாம்.
பேச பிடிக்கவில்லை என்றால், வாயை மூடிக் கொள்ளலாம்.
ஆனால் நல்ல விஷயங்களை எப்போதுமே கேட்கவேண்டும் என்பதற்க்காக தான் காது திறந்தே இருக்கிறது.
நடந்து கொண்டே இருந்தால், கால் வலிக்கும்.
பார்த்துக் கொண்டே இருந்தால் கண் வலிக்கும்.
பேசிக்கொண்டே இருந்தால் வாய் வலிக்கும்.
எழுதிக் கொன்டே இருந்தால் கை வலிக்கும்.
ஆனால் கேட்டுக்கொண்டே இருந்தால் காது வலிக்காது.
அதனால் எப்பொழுதும் நல்ல விஷயங்களை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்...
🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔
🎪 *ஓம் நமசிவாய* 🎪
🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
_ என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
🕉️ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ 🕉️
🙆🏻♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻♂️
🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴