Tuesday, 30 June 2020

உண்மையான காணிக்கை.!!

வட தேசத்தில் சோம்நாத் அருகில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் எழுந்தருளியிருக்கும் ஒரு ஷேத்திரத்தில் ஒரு பூக்காரி வசித்து வந்தாள்.அவள் கிருஷ்ண பரமாத்மாவிடம் மிகுந்த பக்தி கொண்டவள். அவள் பிரதி தினம் வாசனை மிகுந்த பூக்களைப் பறித்து தன் கூடையை நிரப்பிக் கொண்டு ஸ்ரீ கிருஷ்ணரின் ஆலயத்திற்கு வந்து, அங்கு நுழை வாசலில் இருக்கும் படியில் கூடையை வைத்து விட்டு பகவானை வணங்கி பிரார்த்தனை செய்து விட்டு வியாபாரம் செய்யச் செல்வாள். அந்த ஆலயத்தின் சன்னதித் தெருவில் தன் கடையில் அமர்ந்து,தான் பறித்து வந்தபூக்களை மாலையாகக் கட்டி, கடை வாசலில் தொங்க விடுவாள். அவளுடைய மாலைகள் அழகுடனும், நறுமணத்துடனும் காணப் படும். அதனால் அவை வெகு விரைவில் விற்பனையாகி விடும்.

அந்த பூக்காரி , அனுதினமும், ஆலயம் மூடப்படுவதற்கு முன், ஒரு பூமாலையைக் கட்டி எடுத்துக் கொண்டு பகவானின் முன்னால் போய் நின்று விடுவாள். அர்ச்சகர் அந்த மாலையை வாங்கி பகவானுக்கு அணிவித்து தீபாராதனை செய்து, துளசி தீர்த்தம் கொடுப்பார். அனேகமாக பகவான் தரிசனத்திற்கு கடைசியாக வருபவள் அவளாகத்தான் இருக்கும். அவள் சென்ற பிறகு தான் ஆலயம் மூடப்படும்.

அன்று விசேஷ தினம். வழக்கத்தை விட பூ வியாபாரம் அதிகமாக இருந்தது. மும்மரமாக வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்தபடியால் அவளுக்கு நேரம் போனதே தெரியவில்லை. ஆலயத்திலிருந்து திடீரென்று வந்த மணி யோசையிலிருந்து விரைவில் ஆலயம் மூடப்படப் போகிறது என்பதை உணர்ந்தாள்.

“வியாபாரத்தில் கவனமாக இருந்து பகவானின் காணிக்கையை மறந்து விட்டோமே” என்று பரபரப்புடன், ஒரு மாலை கட்டினாள். அவள் சிறிதும் எதிர்பார்க்காதவாறு அந்த மாலை மிகவும் அழகாக அமைந்து விட்டது. அதை எடுத்துக் கொண்டு ஆலயத்திற்கு ஓடினாள் பூக்காரி. அர்ச்சகர்கள் இரவு பூஜையை முடித்துக் கொண்டு பகவானின் சன்னதியை மூடிவிட்டு வாசல் பக்கம் வந்து விட்டனர்.

ஸ்வாமி, இன்று எதிர்பாராத வகையில் தாமதமாகி விட்டது. வழக்கம் போல் இந்த மாலையை பகவானுக்கு அணிவித்து தீபாராதனை செய்யுங்கள்” என்று வேண்டினாள்.

” பூஜை முடிந்து யதாஸ் தானம் செய்து விட்டோம். இனிமேல் சன்னதியைத் திறக்க முடியாது. நாளை காலையில் கொண்டு வா, உன் விருப்பப்படியே பகவானுக்கு சாத்துகிறோம்” என்றார் அர்ச்சகர் .

“ஸ்வாமி, காலைக்குள் இந்த மாலை வாடிவிடும். தயவு செய்து இதை இன்றே பகவானுக்கு அணிவியுங்கள்” என்று மன்றாடினாள்.

” இதை யாருக்காவது விற்பனை செய்துவிடு. நாளை வேறு ஒரு மாலை கட்டிகொண்டு வா” என்றார் அர்ச்சகர் .

“பகவானுக்கு என்று படைக்கப்பட்ட ” காணிக்கை” இது. அவருக்கே போய்ச் சேர வேண்டும். தயவு செய்து மறுக்காதீர்கள்” என்று வேண்டினாள் பூக்காரி. அர்ச்சகர்கள் மறுத்துவிட்டு ஆலயத்தின் முன் வாசலை மூடிக் கொண்டு சென்று விட்டனர். பூக்காரி வாசல்படியில் அமர்ந்து கண்ணீர் விட்டாள். தன் மாலையை அணிவித்து தரிசனம் செய்ய முடியாமல் போய் விட்டதே என்று வருந்தினாள். மூடப்பட்ட ஆலயத்தின் கதவுகளில் ஸ்ரீ கிருஷ்ண பகவானின் திருவுருவங்கள் செதுக்கப்பட்டிருந்தன. பூக்காரி , பகவானைப் பிரார்த்தனை செய்து விட்டு தான் கொண்டு வந்த மாலையை கதவில் இருக்கும் பகவானின் மீது அணிவித்து விட்டுத் தன் இருப்பிடம் சேர்ந்தாள்.

மறுநாள் விடியற்காலையில் அர்ச்சகர்கள் ஆலயத்திற்கு வந்து வழக்கம் போல் தங்கள் பணிகளை செய்ய ஆரம்பித்தனர். ஒரு அர்ச்சகர் தீர்த்தம் கொண்டு வரச் சென்றார். மற்றொருவர் முன் தினம் திருமேனிச் சிலையில் அணிவித்த மாலைகளை எடுக்க ஆரம்பித்தார். அநேகமாக எல்லா மாலைகளையும் எடுத்து விட்டார். கடைசியாக ஒரே ஒரு மாலை மட்டும் பகவானின் திருக்கழுத்தில் இருந்தது. அர்ச்சகர் அதை எடுக்க முயன்றார். ஆனால் முடியவில்லை.இழுத்துப் பார்த்தார். அந்த மாலை அசைந்து கொடுக்கவில்லை.

” மாலையைக் கழற்றி, வஸ்திர, ஆபரணங்களை அகற்றிவிட்டு பிறகு தானே அபிஷேகம் செய்ய முடியும். ஆனால் ஒரு மாலையை மட்டும் கழற்ற முடியவில்லையே” என்று அர்ச்சகர் தவத்தார். தீர்த்தம் கொண்டு வரச் சென்ற அர்ச்சகரும் திரும்பி வந்து விவரம் அறிந்து செய்வதொன்றும் புரியாமால் நின்றார். அதற்குள் ஸ்வாமி தரிசனத்திற்குப் பக்தர்கள் பலர் ஆலயத்திற்கு வர ஆரம்பித்தனர்.

அபிஷேகம் தடைபட்டிருப்பதற்கான காரணத்தை அறிந்து அவர்கள் அதிசயத்தார்கள்.”ஏதோ அபசாரம் நடந்து இருக்கிறது. அதனால் தான் பகவான் சோதனை செய்கிறார். என்று எண்ணினார்கள். அர்ச்சகர்களுக்கு முதல் நாள் இரவு, காலதாமதம் செய்து வந்த பூக்காரியின் நினைவு வந்தது.

“அவள் நேற்று கொண்டு வந்த மாலையல்லவா இது? நாம் கதவை மூடிக் கொண்டு சென்று விட்டோமே, எப்படி இது பகவானின் திருக்கழுத்தில் வந்தது? என்று புரியாமல் தவித்தனர்.

ஆலயத்திற்கு வந்த பக்தர்கள், “அந்தப் பூக்காரியை உடனே அழைத்து வாருங்கள்” என்றனர். அர்ச்சகர் பூக்காரியை தேடிக் கொண்டு சென்றார். வழக்கம் போல் அவள் பூந்தோட்டத்தில் பூக்களைப் பறித்து கொண்டிருந்தாள். அர்ச்சகர் அவளைச் சந்தித்து, நடந்தவற்றைக் கூறி, “நீ உடனே ஆலயத்திற்கு வர வேண்டும். இல்லாவிட்டால் பகவானின் பூஜை அப்படியே நின்று விடும். என்றார்.

பூக்காரி ஆலயத்திற்கு ஓடி வந்து சன்னதியில் நின்றாள். முதல் நாள் இரவு ஆலயத்தின் வாசல் கதவில் மாட்டிவிட்டுப் போன மாலை எப்படி உள்ளே இருக்கும் பகவானின் திருக்கழுத்திற்கு வந்தது என்று புரியவில்லை.

” உண்மையான பக்தியுடன் செலுத்தப்படும் காணிக்கையை பகவானே தானே ஏற்றுக் கொண்டு விடுவார். அதை யாரலும் தடுக்க முடியாது” என்று அங்கு குழுமியிருந்த பக்தர்கள் கூறினார்கள். அர்ச்சகர் பகவானுக்கு அர்ச்சனை செய்தார். கற்பூரம் ஏற்றினார். அதன் ஒளியில் பகவானின் மார்பில் இருந்த மாலை மேலும் அழகாக ஜ்வலித்தது.தீபாராதனை செய்து பூக்காரிக்கு துளசி தீர்த்தம் கொடுத்தார்.

“பகவனே, இனிமேலாவது தடையின்றி அபிஷேகம் செய்ய அனுக்கிரகம் செய்” என்று அர்ச்சகர் பிரார்த்தித்தவாறு பகவானின் திருக்கழுத்தில் இருந்த மாலையைக் கழற்றினார். அது சுலபமாக அவர் கைக்கு வந்து விட்டது. பூக்காரியின் உண்மை பக்தியைக் கண்டு அனைவரும் பாராட்டினார்கள்.

உண்மை பக்தி எங்கு, எவரிடத்தில் இருந்தாலும் பகவான் அதை ஏற்றுக் கொள்வார் என்பதற்கு இந் நிகழ்வு சான்றாகும்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

Monday, 29 June 2020

கண்ணன் ஏன் காப்பாற்றவில்லை?

பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து, தேரோட்டி, பல்வேறு சேவைகள் புரிந்தவர், உத்தவர். இவர் தனது வாழ்நாளில், தனக்கென நன்மைகளோ வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை. துவாபர யுகத்தில், தமது அவதாரப் பணியை முடித்துவிட்ட நிலையில், உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர், ”உத்தவரே, இந்த அவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர். ஆனால், நீங்கள் எதுவுமே கேட்டதில்லை. ஏதாவது கேளுங்கள், தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே, எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன்” என்றார்.

தனக்கென எதையும் கேட்காவிட்டாலும், சிறு வயது முதலே கண்ணனின் செயல்களைக் கவனித்து வந்த உத்தவருக்கு… சொல் ஒன்றும், செயல் ஒன்றுமாக இருந்த கண்ணனின் லீலைகள், புரியாத புதிராக இருந்தன. அவற்றுக்கான காரண, காரியங்களைத் தெரிந்துகொள்ள விரும்பினார்.

”பெருமானே! நீ வாழச் சொன்ன வழி வேறு; நீ வாழ்ந்து காட்டிய வழி வேறு! நீ நடத்திய மகாபாரத நாடகத்தில்… நீ ஏற்ற பாத்திரத்தில்,
நீ புரிந்த செயல்களில், எனக்குப் புரியாத விஷயங்கள் பல உண்டு. அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக இருக்கிறேன். நிறைவேற்றுவாயா?” என்றார் உத்தவர்.
”உத்தவரே! அன்று குருக்ஷேத்திரப் போரில் அர்ஜுனனுக்காக நான் சொன்னது, ‘பகவத் கீதை’. இன்று உங்களுக்குத் தரும் பதில்கள், ‘உத்தவ கீதை’. அதற்காகவே உங்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தைத் தந்தேன். தயங்காமல் கேளுங்கள்” என்றான் பரந்தாமன்.
உத்தவர் கேட்க ஆரம்பித்தார்: ”கண்ணா! முதலில் எனக்கு ஒரு விளக்கம் வேண்டும். உண்மையான நண்பன் யார்?””நண்பனுக்கு ஏற்படும் துயரத்தைத் தீர்க்க, உடனே அழைப்பு இல்லா மலேயே வந்து உதவி செய்பவனே உற்ற நண்பன்” என்றான் கண்ணன்.

”கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன். உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக, பரிபூரணமாக நம்பினார்கள். நடப்பதை மட்டுமல்ல; நடக்கப் போவதையும் நன்கறிந்த ஞானியான நீ… ‘உற்ற நண்பன் யார்’ என்பதற்கு நீ அளித்த விளக்கத்தின்படி… முன்னதாகவே சென்று, ‘தருமா! வேண்டாம் இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன் அப்படிச் செய்யவில்லை? போகட்டும். விளையாட ஆரம்பித்ததும், தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து, வஞ்சகர்களுக்கு நீதி புகட்டியிருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. தருமன் செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை விட்டிருக்கலாம். தம்பி களை அவன் பணயம் வைத்த போதாவது, நீ சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. ‘திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம் வைத்து ஆடு. இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன்’ என்று சவால் விட்டான் துரியோதனன். அப்போதாவது, உனது தெய்வீக சக்தியால், அந்தப் பொய்யான பகடைக் காய்கள் தருமனுக்குச் சாதகமாக விழும்படி செய்திருக்கலாம். அதையும் செய்யவில்லை.
மாறாக, திரௌபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போதுதான் சென்று, ‘துகில் தந்தேன், திரௌபதி மானம் காத்தேன்’ என்று மார்தட்டிக் கொண்டாய். மாற்றான் ஒருவன், குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து, சூதர் சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு,
எஞ்சிய மானம் என்ன இருக்கிறது? எதனைக் காத்ததாக நீ பெருமைப்படுகிறாய்? ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத் பாந்தவன்? இந்த நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ செய்தது தருமமா?” என்று கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.

இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று; மகாபாரதம் படித்துவிட்டு நாம் அனைவருமே கேட்கும் கேள்விகளே இவை. நமக்காக இவற்றை அன்றே கண்ணனிடம் கேட்டிருக்கிறார் உத்தவர்.

பகவான் சிரித்தார். ”உத்தவரே… விவேகம் உள்ளவனே ஜெயிக்க வேண்டும் என்பது உலக தர்ம நியதி. துரியோதனனுக்கு இருந்த விவேகம் தருமனுக்கு இல்லை. அதனால்தான் தருமன் தோற்றான்” என்றான் கண்ணன். உத்தவர் ஏதும் புரியாது திகைத்து நிற்க, கண்ணன் தொடர்ந்தான்: ”துரியோ தனனுக்கு சூதாடத் தெரியாது. ஆனால், பணயம் வைக்க அவனிடம் பணமும், ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. ‘பணயம் நான் வைக்கிறேன். என் மாமா சகுனி, பகடையை உருட்டிச் சூதாடுவார்’ என்றான் துரியோதனன். அது விவேகம். தருமனும் அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு, ‘நானும் பணயம் வைக்கிறேன். ஆனால், என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன் பகடைக்காயை உருட்டுவான்” என்று சொல்லியிருக்கலாமே?

சகுனியும் நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள்? நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா? அல்லது, அவன் கேட்கும் எண்ணிக்கைளை என்னால்தான் போட முடியாதா? போகட்டும். தருமன் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான் என்பதையாவது மன்னித்து விடலாம். ஆனால், அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவற்றையும் செய்தான். ‘ஐயோ… விதிவசத் தால் சூதாட ஒப்புக்கொண்டேனே! ஆனால், இந்த விஷயம் ஸ்ரீகிருஷ்ணனுக்கு மட்டும் தெரியவே கூடாது. கடவுளே! அவன் மட்டும் சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டான்; என்னை மண்டபத்துக்குள் வர முடியாத வாறு, அவனே கட்டிப் போட்டுவிட்டான். நான் அங்கு வரக்கூடாதென என்னிடமே வேண்டிக்கொண்டான். யாராவது தனது பிரார்த்தனையால் என்னைக் கூப்பிட மாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக்கொண்டு நின்றேன்.

பீமனையும், அர்ஜுனனையும், நகுல- சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது, அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும், தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர, என்னைக் கூப்பிட மறந்துவிட்டார்களே!
அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன் சென்று, திரௌபதியின் சிகையைப் பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா? இல்லை. அவளும் தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து, வாதங்கள் செய்து கொண்டிருந்தாளே ஒழிய, என்னைக் கூப்பிடவில்லை! நல்லவேளை… துச்சாதனன் துகிலுரித்தபோதும் தனது பலத்தால் போராடாமல், ‘ஹரி… ஹரி… அபயம் கிருஷ்ணா… அபயம்’ எனக் குரல் கொடுத்தாள் பாஞ்சாலி. அவளுடைய மானத்தைக் காப்பாற்ற அப்போதுதான் எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. அழைத்ததும் சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன். இந்தச் சம்பவத்தில் என் மீது என்ன தவறு?” என்று பதிலளித்தான் கண்ணன்.
”அருமையான விளக்கம்
கண்ணா! அசந்துவிட்டேன். ஆனால், ஏமாறவில்லை. உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா?” என்றார் உத்தவர். ”கேள்” என்றான் கண்ணன்.

”அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ வருவாயா? நீயாக, நீதியை நிலை நாட்ட, ஆபத்துகளில் உன் அடியவர் களுக்கு உதவ வரமாட்டாயா?”
புன்னகைத்தான் கண்ணன். ”உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்து வதும் இல்லை; அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் ‘சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே! அதுதான் தெய்வ தர்மம்” என்றான்.

”நன்றாயிருக்கிறது கிருஷ்ணா! அப்படியானால், நீ அருகில் நின்று, நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படித்தானே?” என்றார் உத்தவர்.

”உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாக உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை நீங்கள் உணரும் போது, உங்களால் தவறுகளையோ தீவினை களையோ நிச்சயமாகச் செய்ய முடியாது. அதை நீங்கள் மறந்துவிடும்போதுதான், எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்துவிடலாம் என்று எண்ணுகிறீர்கள். பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நிகழ்வதும் அப்போதுதான். எனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே, அதுதான் அவனது அஞ்ஞானம். நான் சாட்சி பூதமாக எப்போதும், எல்லோருடனும் இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும் அல்லவா?” என்றான் ஸ்ரீகிருஷ்ணன்.

உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார். ஆகா… எத்தனை ஆழமான தத்துவம்! எத்தனை உயர்ந்த சத்யம்!

பகவானைப் பூஜிப்பதும், பிரார்த்தனை செய்வதும், அவனை உதவிக்கு அழைக்கும் ஓர் உணர்வுதானே! ‘அவனின்றி ஓர் அணுவும் அசையாது’ என்ற நம்பிக்கை வரும்போது, அவன் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க முடியும்? அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்ற முடியும்? இந்த தத்துவத்தைதான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்தான். அர்ஜுனனுக்காகத் தேரைச் செலுத்தி வழிநடத்தினானே தவிர, அர்ஜுனன் இடத்தில் தானே நின்று அவனுக்காகப் போராடவில்லை...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

சுமங்கலி பூஜை எப்படி செய்வது?

சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவனின் நீண்ட ஆயுள் ஆரோக்யத்திர்க்காகவும், இல்லத்தின் அமைதி சந்தோஷத்திர்க்காகவும் அவசியம் சுமங்கலி பூஜை செய்யவேண்டும்.

மிகுந்த செலவுகள் செய்து தான் இந்த பூஜையை செய்ய வேண்டுமென்பதுக் கிடையாது, அவரவர் வசதிக்கு ஏற்பார் போல் செய்யலாம்.

சுமங்கலி பூஜை எப்படி செய்வது?

இல்லத்தை தூய்மைப்படுத்தி, மாக்கோலமிட்டு, மாவிலை தோரணம் கட்டி அழகுபடுத்த வேண்டும்.

சுவாமி படங்களுக்கு பூ, தூபம் போட்டு விளக்கேற்ற வேண்டும்.

சுமங்கலி பூஜைக்கு 1,3,5,7,9 என்ற எண்ணிக்கையில் அவரவர் வசதிக்கு ஏற்றவகையில் பெண்களை அழைக்கலாம் .

நம் வீட்டிற்கு வரும் பெண்களை நல்ல முறையில் அழைக்க வேண்டும் .

தேவியின் வடிவங்கள் அவர்கள் என எண்ணி வரவேற்க வேண்டும்.

தாம்பாள தட்டில் நிற்க வைத்து இல்லத்தலைவி பாத பூஜை செய்யவேண்டும் .

சந்தனம், குங்குமம், மலர்கள் கொடுத்து பெண்களை மனையில் மரியாதையுடன் அமர செய்ய வேண்டும்.

ஒவ்வொரு பெண்ணையும் பராசக்தியாக கருதி , தீபாராதனை செய்து வழிபட வேண்டும்.

தனித்தனியாக நமஸ்காரம் செய்து, அவர்களுக்கு புடவை , ரவிக்கை, மஞ்சள், குங்கும சிமிழ், கண்ணாடி, வெற்றிலை, பாக்கு, பூ, பழம், தட்சனை கொடுக்க வேண்டும்.

இதில் எவை உங்களால் முடியுமோ அதை வாங்கி கொடுக்கலாம் .

ஆனால் தாம்பூலம் அவசியம் கொடுக்க வேண்டும் .

பூஜைக்கு வரும் பெண்களுக்கு உணவு கொடுக்க வேண்டும்.

வந்த பெண்கள் சாப்பிட்ட பிறகே இல்லத்தலைவி சாப்பிட வேண்டும்.

மீண்டும் ஒரு முறை, வந்த அனைத்து பெண்களையும் வணங்கி விட்டு வழியனுப்ப வேண்டும்.

இந்த பூஜை செய்ய உகந்த நாட்கள் திங்கள், புதன், வெள்ளி இந்த தினங்களில் ராகு காலம் இல்லாத எந்த நேரமும் நல்ல நேரமே.

இந்த பூஜை செய்யப்படும் வீட்டில் வறுமை, நோய், துன்பம், தோஷம் நீங்கி கணவனுடன் ஆயுள் ஆரோக்யத்தொடு வளமோடு வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

வாழ்க வளமுடன்….

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

ஸ்ரீரங்கத்து சதங்கை அழகர்.!!

ஸ்ரீரங்கத்து சித்திரை வீதியில் பல வருடங்களுக்கு முன், ஒரு வைணவ பக்தர் வசித்து வந்தார்.

அவருக்கு மிகவும் அதிகமான கிருஷ்ண பக்தி! அவரது இல்லத்தில் ஒரு சிறிய கிருஷ்ண விக்ரஹம் இருந்தது. அதற்கு மிகவும் ஈடுபாட்டோடு அவர் தினமும் அலங்காரம் செய்வது, திருமஞ்சனம் ( அபிஷேகம்) செய்வது, மலர்களைக்கொண்டு பூஜிப்பது, முதலியன செய்து மகிழ்வார் ! அந்த விக்ரஹத்துக்கு ” சதங்கை அழகர் ” என்று பெயரிட்டு நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போது, “இன்று சதங்கை அழகருக்கு மல்லிகை மாலை அணிவித்தோம், ரோஜா மாலை அணிவித்தோம், பாலபிஷேகம் செய்தோம், தேனபிஷேகம் செய்தோம் “, என்றெல்லாம் பக்திமேலிட கூறி மகிழ்வார் அந்த பக்தர் !

ஒருமுறை அவர்கள் வீட்டிலிருந்து நான்கு வீடுகள் தள்ளி இருந்த ஒரு வீட்டிற்கு, ஊரிலிருந்து உறவினர்கள் வந்திருந்தனர். அவர்களில் ஒருவர் நன்கு உறங்கி கொண்டிருக்கும்போது, அவரது கனவில் ஒரு அழகான குழந்தை, தெய்வீக களையுடன் தோன்றியது ! அவரை பார்த்து அழகாக சிரிக்கவும் செய்தது. அவர் அந்த குழந்தையை அருகே அழைத்து ” நீ யார் ?” என்று கேட்க, “சதங்கை அழகர்” என்று சொல்லி, சிரித்தபடியே ஓடிவிட்டது !

இந்த அற்புத கனவை அவர் மறுநாள் அந்த வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவிக்க, அவர்கள் வியப்புடன் நான்கு வீடுகள் தள்ளி இருந்த அந்த பக்தர் பற்றி சொல்ல, யாவரும் மெய் சிலிர்த்து, அந்த பக்தரிடமே இந்த நிகழ்வை சொன்னார்கள்.

அவரோ கண்களில் நீர் மல்க ” ஆஹா ! நான் ஏதோ எனக்கு பிடித்த பெயரை சூட்டி பெருமானை தொழுதால், அதை தாம் ஏற்று கொண்டது மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கும் தெரியபடுத்தியுள்ளார் !! என்ன வாத்சல்யம் என்று உருகினாராம்!!

பொய்கையாழ்வார் தமது முதல் திருவந்தாதியில்,

” தமருகந்ததெவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமருகந்தது எப்பேர், மற்று அப்பேர் – தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமயாதிருப்பரே
அவ்வண்ணம் ஆழியானாம் ! “

என்ற பாசுரத்தில் ” தன் அடியார்கள் எந்த பேரால் அழைக்கிறார்களோ அந்த பேரை இறைவன் ஏற்றுக்கொள்கிறான் ! எந்த உருவத்தில் வழிபடுகிறார்களோ அந்த உருவத்தை ஏறிட்டுகொள்கிறான் ! பக்தர்கள் எப்படி நினைக்கிறார்களோ அப்படியே தோன்றுகிறான் ஆழியானாகிய கண்ணன் !! ” என்று கூறியிருப்பது உண்மைதானே !

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

ஸ்ரீ ஆண்டாளின் பெருமையை உணர்த்த கோதா ஸ்துதி.!!

ஸ்ரீ மான் வேங்கடநாதார்ய : கவிதார்க்கிக கேஸரீ |
வேதாந்தசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

ஸ்ரீகோதா ஸ்துதி
———————————-
1. ஸ்ரீ விஷ்ணு சித்த குலநந்தன கல்பவல்லீம்
ஸ்ரீ ரங்கராஜ ஹரி சந்தன யோக த்ருச்யாம் |
ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமி வாந்யாம்
கோதாமநந்ய சரண : சரணம் ப்ரபத்யே ||

ஸ்ரீ பெரியாழ்வாரின் குலத்தில் தோன்றிய கற்பகக்கொடி ; அழகிய மணவாளனாகிய ஹரி சந்தன மரத்தைத் தழுவி விளங்கும் கொடி ;; பூமிப் பிராட்டியின் அவதாரம்; கருணையே உருவாகி, பெரிய பிராட்டியைப் போல இருப்பவள்; இப்படிப்பட்ட கோதா பிராட்டியை ,எந்தப் புகழும் இல்லாத அடியேன் சரண் அடைகிறேன் ஸ்லோகத்தின் முதல் வரி, ஸ்ரீ ஆண்டாளின் அவதாரத்தையும் ,இரண்டாவது வரி, அவளது திருக் கல்யாண விசேஷத்தையும் ,மூன்றாவது வரி, ஸ்ரீ மஹா லக்ஷ்மியைப்போலக் கருணையே உருவானவள் என்றும், அப்படிப்பட்ட கோதா தேவியைப் புருஷகாரமாகப் பற்றி சரணம் அடைகிறேன் என்று நாலாவது வரியிலும் சொல்கிறார்.

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

Sunday, 28 June 2020

நாகலிங்க மரம் மகிமை.!!

1.”நாகம் குடை பிடிக்க உள்ளே லிங்கம்” இருக்கும் அதியற்புத வடிவில் நாகலிங்கப் புஷ்பம் பூக்கும் .பூவுலகின் மகத்தான .நாம் வாழும் காலத்திலேயே நாகலிங்க மரம் இன்றும் தென்படுவது ,நாம் பெற்ற புன்னியப் பேறே. தினசரி நாகலிங்க மர தரிசனமே நம் உள்ளுள் காலசக்தியையும், கால உணர்வையும் இயங்க வைப்பதாகும்

2.நாகலிங்க புஷ்பத்தை ஆலயபூஜைக்கு அளித்தல் மிகப்பெரிய புண்ணிய காரியம் ஆகும்.

3.பல பிரதோஷ வழிபாட்டுப் பலன்களை ஒருங்கே தர வல்லதே இறைவனுக்கு நாகலிங்க பூவால் ஆற்றும் பூசனை

4.நாகலிங்கப் பூவை வைத்து பூஜிப்பதின் முழுபலன்களையும் அடைய, பூஜிக்கப்படும் ஒவ்வொரு பூவிற்கும் ஒருவருக்கேனும் அன்னதானம் அளிக்க வேண்டும்.

5.நாகலிங்க மரம் இயற்கையான யோக அக்னியைப் பூண்டது ,நாகலிங்கப் பூவை மரத்தில் இருந்து பறிக்கும்போது கைக்கு இதமான , உஷ்ணமாய் இருப்பதை உணர்ந்திடலாம் .

6.ஒவ்வொரு நாகலிங்கப் பூவும் உள்சூட்டுடன் இருக்கும் இதுவே யோகபுஷ்ப தவச்சூடு ஆகும் .இதன் ஸ்பரிசம் மனித மூளைக்கு மிகவும் நல்லது

7.ஒவ்வொரு நாகலிங்க பூவும் சூரிய ,சந்திர கிரணங்களின் யோக சக்தியை கொண்டு மட்டுமே மலர்கின்றது என்ற அறிய விடயத்தை நாகசாலிச் சித்தரும், நாகமாதா சித்தரும் பூவுலகிற்கு மீண்டும் உணர்த்தினார்கள்.

8. மிகவும் சுலபமாக ரூபாய் 100க்கு இப்போது அநேக nursery ல் கிடைக்கிறது. தங்கள் அருகிலினில் உள்ள சிவாலயங்களில் முன் அனுமதி பெற்று நாகலிங்க செடியை நெட்டு நீர் ஊற்றி நன்கு பராமரித்து வாருங்கள் . மிகவும் சக்தி வாய்ந்த இந்த பரிகாரத்தை செய்து சிவ பரம் பொருளின் அருளுக்கு பாத்திரர் ஆகுங்கள்.

இவ்வாறு கண்ணுக்குத் தெரிந்த நாகலிங்க பூவின் மகிமையை இனிமேலாவது உணர்ந்து நாகலிங்க பூவைக்கொண்டு இறைவனை வாங்குங்கள். ,நாகலிங்க மரத்தை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சிவாலயங்களில் நட்டு பராமரியுங்கள்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

வாராஹி தேவியின் அருளை உடனடியாக பெறக்கூடிய அந்த 4 நபர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

வாராஹி தேவி இயல்பாகவே உக்கிரமானவள் என்பதால், இந்த அம்மனை வணங்குவதற்கு அனைவருக்குமே மனதில் பயம் இருக்கும். வீட்டில் வாராகி திருவுருவப் படத்தை வைத்து வணங்குவதற்கு அஞ்சுவார்கள். ஆனால் நாம் எல்லோரும் நினைக்கும் அளவிற்கு வாராஹி தேவி கோப குணத்தை கொண்டவள் இல்லை. குழந்தை மனம் கொண்ட வாராஹி தேவியை தன்னலம் பாராமல், கெட்ட எண்ணங்களை மனதில் வைத்துக்கொள்ளாமல் வணங்கினால் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உதவி செய்யும் தெய்வம் தான் இந்த வாராஹி அம்மன். வாராஹி அம்மனை தொடர்ந்து வழிபட்டு வந்தால் நமக்கு இருக்கும் எப்பேர்பட்ட பெரிய கஷ்டங்கள் கூட, சுலபமாக விரைவாக தீர்ந்துவிடும் என்பது உண்மை. ஆனால் நம்மில் பலர் வாராஹி அம்மனை வழிபடுவது ஆபத்து என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம். நிச்சயமாக இல்லை.

வாராஹி அம்மன் வேண்டிய வரத்தை, நம் கையில் கொடுக்கும் சக்தி வாய்ந்தவள் என்பதை மறந்துவிடாதீர்கள். நமக்கு காவல் தெய்வமாக நின்று, நம்மை கெட்ட சக்திகளிலிருந்து பாதுகாத்து அருள் பாவிப்பால் என்பதும் உண்மை. வராஹி அம்மனை எப்படி வழிபட்டால் தீராத கஷ்டங்கள் கூட, விரைவாக, சுலபமாக தீர்ந்துவிடும் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். பொதுவாகவே கிருத்திகை, பூரம், மூலம், ரேவதி இந்த 4 நட்சத்திரங்களை கொண்டவர்கள் வாராஹி அம்மனை மனதார வழிபட்டாலே போதும். அவர்களுக்கு உடனடியாக பலன் கிடைத்துவிடும். இந்த நட்சத்திரம் இல்லாதவர்கள், இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் வாராஹி அம்மனை வழிபடுவது சிறந்தது.

நமக்கு இருக்கும் தீராத கஷ்டமாக இருந்தாலும், தீராத நோயாக இருந்தாலும், தீராத மன கஷ்டம், பணக்கஷ்டம், எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் வாராஹி அம்மனை நினைத்து, தலைவாழை இலை விரித்து, அதில் பச்சரிசியை கொட்டி பரப்பி, அதன் மேல் ஒரு தேங்காயை உடைத்து இரண்டுமுடிகளாக வைத்து, அதில் இலுப்ப எண்ணெய் ஊற்றி, சிவப்பு திரி போட்டு, தீபம் ஏற்றினால் போதும். இந்த பரிகாரத்தை உங்கள் வீட்டின் அருகில் வாராஹி அம்மன் கோவில் இருந்தால் அங்கு செய்யலாம். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே சிறிய வாராகி அம்மன் திருவுருவப் படத்தை வைத்து அதன்முன் செய்து வரலாம். எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் அந்த கஷ்டம் கூடிய விரைவில் நீங்குவதை நீங்கள் கண்கூடாக பார்க்க முடியும். இந்தப் பரிகாரத்தைச் செவ்வாய்க்கிழமை எமகண்ட வேளையில் செய்ய வேண்டும். தொடர்ந்து 5 வாரம் செய்து பாருங்கள். பலனை நிச்சயம் உங்களால் உணர முடியும். வாராஹி அம்மனுக்கு சிவப்பு மலர் மிகவும் விருப்பமானது அதிலும் சிவப்பு தாமரை மிகவும் பிடிக்கும். பஞ்சமி திதி அன்று வராகியை மனதார நினைத்து வழிபடுவது நல்ல பலனைத்தரும். வராகி அம்மனை மாதம்தோறும் வரும் பஞ்சமி திதி அன்று சிவப்பு மலர் சூட்டி, அவளுக்கு பிடித்த பிரசாதத்தை நைவேத்தியமாக செய்து வைத்து தொடர்ந்து வழிபட்டு வந்தால் நம்மை எந்த விதமான கெட்ட சக்தியும் அண்டாது.

நம்முடைய வாக்கு வன்மையும், தைரியமும் அதிகரிக்கும். .வராகி அம்மனுக்கு பூண்டு கலந்து தோல் நீக்கப்படாத உளுந்து வடை, நவதானிய அடை, மிளகு சேர்த்த வடை, வெண்ணை நீக்காத தயிர்சாதம், நவதானிய அடை தோசை இவைகள் அனைத்தும் மிகவும் பிடிக்கும். இதில் உங்களால் முடிந்த ஏதாவது ஒன்றை நைவேத்தியமாக படைப்பது மிகவும் சிறந்தது. வாராஹி அம்மன் வழிபாட்டில் ஒருபோதும் அடுத்தவர் கெட்டு போக வேண்டும் என்ற எண்ணத்தோடு வழிபடவே கூடாது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அனைவரின் நலனுக்காக மட்டுமே வரம் கொடுப்பவள் வராஹியம்மன். தவறான எண்ணத்தோடு வாராஹி அம்மனை வழிபடுவது தண்டனையை நாமே தேடிக் கொள்வதற்கு சமம்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

தஞ்சை பெரிய கோயில கட்டினது யாரு?

தஞ்சை பெரிய கோயில கட்டினது யாரு?’ன்னு கேட்டா….

எல்லோரும் யோசிக்காமல் “ராஜ ராஜ சோழன்னு…” பதில் சொல்லிடுவாங்க.

ஆனா, ராஜ ராஜ சோழனோ, ‘அந்த கோயில கட்டினது நான் இல்லை…’ன்னு சொல்றாரே!

தஞ்சை பெரிய கோயில் கட்டி முடிக்க பட்டு குட முழுக்கு கும்பாபிஷேகத்துக்கு நாளும் குறிக்கப்பட்டு விட்ட நேரம் அது…

கோயில் எதிர்பார்த்தபடி நல்லபடியாய் கட்டி முடிக்க பட்ட சந்தோசத்துல ராஜ ராஜ சோழன் நிம்மதியா தூங்கும் போது… கனவுல இறைவன் ஆன பரமசிவன் அவன் முன்னே எழுந்தருளினார்.

‘ராஜா ராஜா!’ என்றழைக்க…

ராஜ ராஜ சோழன், “இறைவா என் பாக்கியம் என்னவென்று சொல்வது… தாங்கள் எனக்கு காட்சி தந்தது நான் செய்த பாக்கியம்…

தங்களுக்கு நான் கட்டிய கோயில் எப்படி இருக்கிறது?… இந்த ஊரிலே எல்லோரும் வியந்து பார்க்கும் மிக பெரிய கோயிலாக கட்டியுள்ளேன்…

அதற்க்கு *’தஞ்சை பெரிய கோயில்’* என்று பெயர் சூட்ட போகிறேன்… மகிழ்ச்சி தானே தங்களுக்கு?” என்று கேட்டான் ஆனந்தமாக.

இறைவன் சிரித்து கொண்டே, “ம்ம்ம் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம்… ஒரு இடைச்சி மூதாட்டியின் காலடி நிழலின் கீழ் யாம் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம்…” என்று கூறி மறைந்தார்.

ராஜ ராஜனின் கனவும் கலைந்தது.

விழித்தெழுந்த ராஜராஜன் தான் கண்ட கனவை பற்றி மறுநாள் அரசவையில் கூறி அந்த கனவுக்கு விளக்கம் கேட்டான்.

யாருக்கும் பதில் தெரியவில்லை.

பின் நேராக கட்டி முடிக்க பட்ட தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்றான்.

கோயில் சிற்பியிடம் தான் கண்ட கனவை கூறி விளக்கம் கேட்டான்.

சிற்பி தயங்கியவாறே, “அரசே கடந்த மூன்று மாதங்களாக மோர் விற்கும் வயதான ஒரு ஏழை இடைச்சி மூதாட்டி தினமும் மத்திய வேளையில் இங்கு வருவார்…

ஏழ்மை நிலையில் இருந்தாலும் தன் பங்குக்கு இந்த கோயிலுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணி தான் விற்கும் மோரில் பாதியை காசுக்காகவும்,

பாதியை இந்த கோயிலுக்காக வேலை செய்யும் எங்களுக்கு குடிக்க இலவசமாக கொடுப்பார்…

நாங்கள் காசு கொடுத்தாலும் வாங்க மறுத்து விடுவார்.

எதோ இந்த ஏழை இடைச்சியால் இந்த கோயிலுக்கு செய்ய முடிந்த தொண்டு என்று கூறி காசு வாங்க மறுத்திடுவார்.

இப்படி இருக்கும் போது போன வாரத்தில் ஒரு நாள், ஆலய சிற்பங்களின் எல்லா வேலையும் முடித்த எங்களுக்கு இறைவனின் கருவறையின் மேலிருக்கும் கல்லை மட்டும் சரி செய்யவே முடியவில்லை…

நாங்களும் அதன் அளவை எவ்ளவோ முயற்சி செய்து அளவெடுத்து வைத்தாலும் ஒன்று கல் அளவு அதிகமாக இருந்தது அல்லது குறைவாக இருந்தது.

எங்கே ஆலய பணி நடக்காமல் போய்விடுமோ என்று நாங்கள் கவலையுடன் இருந்தோம்…

அப்பொழுது இந்த மோர் விற்கும் இடைச்சி மூதாட்டி வந்து மோர் கொடுத்து கொண்டே, ‘ஏன் கவலையாய் இருக்குறீர்கள்?’ என்று கேட்டார்கள்.

நாங்களும் கல் சரி ஆகாத விசயத்தை சொன்னோம்.

அதற்க்கு அவர்கள் என் வீட்டு வாசற்படியில் பெரிய கல் ஒன்று உள்ளது… நான் அதை தான் என் வீட்டுக்கு வாசற்படி போல் வைத்துள்ளேன்.

அதை வேண்டுமானால் எடுத்து பொருத்தி பாருங்கள் என்றார்.

நாங்களும் நம்பிக்கை இல்லாமல் அந்த இடைச்சி மூதாட்டி சொன்ன கல்லை எடுத்து வந்து பொருத்தினோம்…

என்ன ஆச்சிரியம்! கருவறையின் மேற் கூரைக்கு அளவெடுத்து வைத்தது போல் மிக சரியாக இருந்தது.

அதைதான் இறைவன் தாங்களுக்கு உணர்த்தி இருப்பார் என்று அடியேன் நினைக்கிறன்… என்றான் சிற்பி.

இதை கேட்டதும் ராஜ ராஜனுக்கு எல்லாம் புரிந்தது…

எவ்வளவு பொருள் செலவு செய்து கோயில் கட்டினாலும் இறைவன் நேசிப்பது அன்பான ஒரு ஏழையின் பக்தியை தான்.

ஆரவாரமாக பொருள் செலவு செய்து நான் கோயிலை கட்டினாலும், அமைதியாக ஏழ்மை நிலையிலும் அந்த இடைச்சி விற்க இருந்த மோரை கோயில் திருப்பணி செய்வோருக்கு அர்ப்பணித்தாரே…” என்று கண்ணீர் மல்கி…

பின் சுதாரித்து தன் அமைச்சரை அழைத்து, “அமைச்சரே கும்பாபிஷேகம் நடக்கும் நன்னாளில் அந்த இடையர்குல மூதாட்டியை அரண்மனைக்கு அழைத்து வாருங்கள்… நான் வெண்குடை ஏந்தி அந்த அம்மையாரை வைத்து கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யுங்கள்…

இந்த கோயில் கட்டியது அந்த மூதாட்டி இடைச்சி தான்… நான் அல்ல…
இதற்கு இறைவனே சாட்சி என்றான்…

குறிப்பு:இடைச்சி என்றால் எந்த ஜாதி குறிப்படவில்லை..அது ஒரு சங்க காலச் சொல்.

இடைச்சி கல்”.. தஞ்சை பெரிய கோயிலின் உச்சியில் இருக்கும் கல்லே “இடைச்சி கல்”.
தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்தது. அழகி என்னும் இடையர் குல மூதாட்டி சிவத்தொண்டு செய்ய விரும்பினார். ஏழை மூதாட்டி தன்னால் இயன்ற தொண்டாக கோவில் கட்டி முடிக்கும் வரை கோவில் கட்டும் சிற்பிகளின் தாகத்தை போக்கும் பொருட்டு தினமும் அவர்களுக்கு தயிர், மோர் வழங்கி வந்தார். இதனை அறிந்த மன்னர் அருள்மொழிவர்மன் (ராஜராஜசோழன்) இடையர் குல மூதாட்டியின் சிவத்தொண்டை அனைவரும் அறியும் வண்ணம் 80டன் எடை கொண்ட கல்லில் அழகி என்று பெயர் பொறித்து, அதனை ராஜகோபுரத்தின் உச்சியில் இடம் பெற செய்தார். அந்த கல் இடைச்சிக் கல் என்று அழைக்கப்படுகிறது. அந்த கல்லின் நிழலே பிரகதீஸ்வரர் மேல் விழுகிறது...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

Saturday, 27 June 2020

எலுமிச்சம்பழத்தில் தீபம் ஏற்றுவது நல்லதா? கெட்டதா?

★ கனிகளில் ராஜகனி என்று போற்றப்படுவது எலுமிச்சம்பழம். மதிப்புக்குரியவர்களை காணும்போது அவர்கள் கைகளில் எலுமிச்சம்கனியை அளிப்பது இன்றும் வழக்கில் உள்ள செயலாகும்.

★ இறைவியான துர்க்கைக்கு நிகரானதாக கருதப்படும் எலுமிச்சம்பழம், தனது பிஞ்சு, காய், பழம், ஊறுகாய் போன்ற எந்த நிலையிலும் தனது புளிப்புத்தன்மையை மாற்றிக் கொள்ளாது. (இறைவனும் எந்த நிலையிலும் தன் இறைத்தன்மை மாறாதவன்). ஆகையால் அதை மாலையாய் கட்டி போடலாம்

★ இப்படி எல்லா வகையிலும் உயர்ந்த கனியை ஸ்ரீதுர்க்கைக்கு முன்பாகவே வைத்து இருதுண்டாக்கி, அதனை பிதுக்கி திருப்பி அதில் எண்ணையை ஊற்றி விளக்கேற்றினால் அதனால் நிச்சயமாக எந்த நற்ப் பலனும் ஏற்படாது. மேலும் தீய பலன்கள் நடைபெறத்தான் வழியுள்ளது. அதுமட்டுமல்ல எலுமிச்சம்பழ விளக்கினால் கர்ப்பப்பையில் கோளாறுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன, அதிலுள்ள சிட்ரிட் எனும் அமிலம் நமது சுவாசத்தில் கலந்து உள்சென்று தீங்கினை செய்கின்றது.

★ அதாவது ஒருவர் வைத்து விட்டுப் போன எலுமிச்சம்பழ விளக்கு எரிந்து கொண்டிருக்கும்போது மற்றொருவர் தனக்காக சில எலுமிச்சம்பழ விளக்குகளை ஏற்றுவார் அல்லவா? அப்போது இவருக்கு முன்னர் ஏற்றப்பட்ட விளக்கிலிருந்து எலுமிச்சம்பழத்தின் ஓரங்கள் கருகி எரியும் போது அதிலிருந்து வெளிப்படும் சிட்ரிட் அமிலப் புகையானது நமது உள்சென்று கர்ப்பப் பையினை அரித்து குழந்தையினை தாங்கும் வலிமையை இழந்து விடுவதாகவும் அதனால் புத்திரபாக்கியமே கிடைக்காது எனவும் தெரிவிக்கின்றார்கள் ஆய்வாளர்கள்.
அதனால் தான் நிறைய பெண்களுக்கு கர்ப்பபை வாய் திறந்து தையல் போடும் நிலை ஏற்படுகிறது.

அப்படியென்றால் எலுமிச்சம்பழத்தில் தீபம் ஏற்றக்கூடாதா?

✤ எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றக்கூடாது அக விளக்கு பிரகாசிக்க அகல் விளக்குதான் ஏற்றவேண்டும்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

பதினான்கு ஆண்டுகள் அரியணை எரிய மர காலனி.!!

மித்ரபந்து அதிக ஆசை இல்லாத ஒரு மனிதன். தனது பொருள்களுக்கு குறைந்த அளவே லாபம் வைத்து அதுவும் அவனது குறைந்தபட்ச தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கே வியாபாரம் செய்து வந்தான். அதனால்தான் அவனிடம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பணமோ உடமையோ கிடையாது. இருந்தாலும் ராமன் மேல் கொண்ட அன்பினால் தன்னிடம் இருந்த ஒரு உயர் ஜாதி மரத்தை கொண்டு நேர்த்தியான காலணி ஜோடியை செய்து மிக பவ்யமாக எடுத்து சென்று ஸ்ரீ ராமனுக்கு அர்பணிக்க வரிசையில் காத்திருந்தான் வரிசை மெதுவே நகர முன்னும் பின்னும் உள்ளோர் ஏராளாமான விலை மதிக்க முடியாத பொருள்களை சமர்பிக்க உள்ளதை கண்டான்.

அவன், எல்லோரும் பல நல்ல நல்ல அருமையான பொருள்களை வழங்க தான் மட்டும் ஒரு காலணியை போயும் போயும் ஒரு மர காலணியை கொடுக்க வேண்டியுள்ளதே என்று மனம் வருந்தினான். அவன் ஸ்ரீ ராமனின் மேடையை அணுக இருந்த சமயம் தனது முடிவை மாற்றிக் கொண்டு வரிசையில் இருந்து விலக எத்தனித்தான்.

அதை கண்ட எல்லோரது தாபங்களையும் போக்குவதற்கே அவதாரம் எடுத்த அண்ணல் ஸ்ரீ ராமபிரான், மித்ரபந்துவை அன்புடன் அழைத்து, ‘ என்ன! உனது அன்பளிப்பை ஏற்க அடியேனுக்கு தகுதி இல்லையா? ஏன் மேடை வரை வந்து திரும்புகிறாய்? என மதுரமான குரலில் கேட்டார்.

உடனே, மித்ரபந்து மிகவும் பதறியவனாய் “அண்ணலே, பரம்பொருளே “என்ன அபாச்சரம் செய்துவிட்டேன் தங்களிடமிருந்து இப்படி ஒரு வார்த்தை வர. எல்லோரும் விலையுயர்ந்த அன்பளிப்பை கொடுக்கும் போது நான் மட்டும் போயும் போயும் ஒரு காலனியை கொண்டு வந்தேனே என்றுதான் வெட்கி திரும்பினேன் என்றான்.

உடனே ஸ்ரீ ராமன், ‘எங்கே காட்டு அந்த காலணியை என்றவாறு அதை தன் கரங்களில் வாங்கி அதை பார்த்தார். சீதே! பார்த்தாயா எப்படி ஒரு நேர்த்தியான அழகான காலணி என்று சீதையிடம் காட்டினார். சீதையும் அகம் மகிழ்ந்து இது போன்ற ஒரு காலணியை மிதிலையிலும் பார்த்ததில்லை என்றாள். மித்ரா இதையா அற்ப பொருள் என்றாய். “உண்மையான உழைப்பில் உதித்த உன் பரிசுதான் உயர்ந்தது’ எனக் கூறி பாதுகைகளை ஏற்றுக்கொள்ள, மித்ரபந்து மகிழ்ந்து போனான்.

மயன் போன்ற தேவனாலும் இதை இவ்வளவு அழகாக செய்ய முடியாது. இதை நான் இப்போதே அணிந்து கொள்கிறேன் என்று அணிந்து கொண்டார்.
அண்ணல், மித்ரபந்துவை கூப்பிட்டு, மித்ரா வருந்தாதே! நீ கொடுத்து நான் அணிந்திருக்கும் இந்த காலணி ஒரு நாள் உலக புகழ் பெரும் என்று சொல்லி அவன் வாட்டத்தை போக்கி அனுப்பி வைத்தான்.

ராமன் வாக்கு என்றும் பொய்த்ததில்லையே! சத்தியமே உருவானவன் அல்லவா அண்ணல். மரவுரி ஏற்ற ராமன் நகரத்தை விட்டு கிளம்புகிறான். ராமன் கானகம் செல்லுகிறான் என்ற செய்தியை கேட்ட நகர மாந்தார் எல்லோரும் ராமன் செல்லவிருக்கும் வீதியில் கவலை தோய்ந்த முகத்துடனும் துக்கத்துடனும் காத்திருக்கின்றனர். அதில் நம் மித்ரபந்துவும் ஒருவன். அண்ணலின் பாதங்களில் அவன் அளித்த அந்த காலணி . துக்கம் தாங்காமல் அண்ணலே! தாங்கள் கானகம் செல்லவா இந்த துர்பாக்கியசாலியின் காலணி பயன்பட வேண்டும் என விம்புகிறான்.

கண்ணீருடன் நின்ற மித்ரபந்துவை பார்த்து, “விலை உயர்ந்த பரிசுகள் எனக்குப் பயன்படவில்லை. உன்னுடைய பாதுகைகள்தான் கல்லும், முள்ளும் குத்தாமல் காக்கப் போகிறது’ என்றார் அண்ணலும் மெளனமாக அன்றலர்ந்த தாமரை மலர் போன்ற முகத்துடன் சீதை லக்ஷ்மனனுடன் கானகம் ஏகினான்.

பரதன் கேகேய நாட்டிலிருந்து திரும்பி வந்து அரசுரிமை ஏற்க மறுத்ததை இவையகம் அறிந்த ஒன்றுதானே . பரதனும் குல குரு வஷிஸ்டர், மற்றும் மறை ஓதும் வேதியர் சூழ கானகம் சென்று ராமனை மீண்டும் அயோத்தி வர விண்ணப்பிக்கிறான். அண்ணலும் தனது தாய் தந்தையின் கட்டளையை மதிக்க உள்ள சூழ்நிலையை எடுத்துக் கூற, பரதன் ‘”என் உயிருனும் மேலான அண்ணலே நீரே என் தந்தை, நீர் பதினான்கு ஆண்டுகள் காலம் வனவாசம் முடித்து அயோத்தி திரும்பும் வரை தங்களின் பாதுகையை சிம்மாசனத்திலே அமர்த்தி அதன் பிரதிநிதியாய் அயோத்தியின் வெளியில் உள்ள நந்தி கிராமத்தில் ஆட்சி புரிவேன் என்று அண்ணலின் பாதுகையை தனது சிரத்திலே தாங்கி ஊர் திரும்பினான். அந்த பாதுகைதான் 14 ஆண்டுகள் இவ்வுலகை ஆண்டது. அதுதான் மித்ரபந்துவின் அன்பளிப்பாக கொடுத்த காலணி .

அன்பர்களே! ஆண்டவன் என்றுமே ஆடம்பரத்தை விரும்புபவன் அல்ல ! அவன் விரும்புவதல்லாம் தூய பக்தியுடன் கூடிய உள்ளமே. நீவிர் கொடுக்கும் ஒரு துளசி தளமோ அல்லது ஒரு உத்தரணி நீரோ போதும். தூய உள்ளத்தை சமர்ப்பியுங்கள் அவன் உமது இதய சிம்மாசனத்திலே நிச்சயம் அமர்வான்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

Friday, 26 June 2020

பணக்கஷ்டத்தை விரட்டும் அஷ்டமங்கல வழிபாட்டு ஸ்லோகம்.!!

ஒரு வீட்டில் தீராத பணக்கஷ்டமோ, மனக்கஷ்டமோ ஏற்பட்டிருந்தால் மகாலட்சுமி அந்த வீட்டில் இல்லை என்று அர்த்தம். அத்தகைய வீடுகளில் அஷ்டமங்கல வழிபாடு செய்ய வேண்டும்.

ஒரு வீட்டில் தீராத பணக்கஷ்டமோ, மனக்கஷ்டமோ ஏற்பட்டிருந்தால் மகாலட்சுமி அந்த வீட்டில் இல்லை என்று அர்த்தம். அத்தகைய வீடுகளில் அஷ்டமங்கல வழிபாடு செய்ய வேண்டும். இதற்கு 8 வகைப் பொருட்களை ஒரு பாட்டிலில் (மிட்டாய் டின் போன்ற சீசா) போட்டு அதன் அருகில் கமலதீபம் இரண்டை ஏற்றி வைத்து மனமுருகி வழிபட்டால் கஷ்டங்கள் மறைந்து வளம் உண்டாகும்.

அஷ்டமங்கலப் பொருட்கள் விவரம் வருமாறு:-

1.குண்டு மஞ்சள்-3, 

2.குங்குமம், 

3.மரப்சீப்பு, 

4.தர்ப்பணம் என்ற கண்ணாடி, 

5.சந்தனம், 

6.தாம்பூலம், 

7.தீபம், 

8.ரவிக்கைத் துணி (பச்சை நிறம்).
இரண்டு பக்கங்களிலும் கமலதீபங்களை ஏற்றி நடுவில் ஒரு தட்டில் சீசாவை வைத்து

ஓம் லட்சுமி நம
ஓம் ஸ்ரீதேவி நம
ஓம் கமலாசனி நம
ஓம் பத்ம பூஜனி நம
ஓம் மகாதேவி நம
ஓம் சங்கமாதா நம
ஓம் சக்ர மாதா நம
ஓம் கதா மாதா நம
ஓம் ஐஸ்வர்னய நம

ஆகிய ஒன்பது திருமகள் நாமங்களை எட்டு தடவைகள் கூற வேண்டும். பிறகு ஆத்ம பிரதட்சிணம் (தன்னைத் தானே சுற்றிக் கொள்ளுதல்) செய்து நமஸ்காரம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் பணக்கஷ்டம் தீரும். லட்சுமியின் பார்வை பட்டு குடும்பத்தில் செல்வம் பெருகும்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

சாம்பிராணி தூபங்களும்… தீரும் பிரச்சனைகளும்.!!

தினமும் வீட்டில் இறைவனை நினைத்து தூபமிட்டாலே அவ்விடத்தில் அமைதியும் நற்சூழலும் அமையும். எந்த தூபம் போட்டால் எந்த வகையான பிரச்சனைகள் தீரும் என்று பார்க்கலாம்.

சந்தனதத்தில் தூபமிட – தெய்வ கடாட்சம் உண்டாம்.

சாம்பிராணியில் தூபமிட -கண் திருஷ்டி பொறாமை நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.

ஜவ்வாது தூபமிட -திடீர் அதிர்ஷ்டம் கிட்டும்.

அகிலி தூபமிட -குழந்தை பாக்கியம் உண்டாகும்.

துகிலி தூபமிட -குழந்தைகளுக்கு நற்ஆயுள் அழகு ஆரோக்கியத்தினை உண்டாகும்.

துளசி தூபமிட – காரியத்தடை திருமணத்தடை நீங்கி விரைவில் நடந்தேறும்.

தூதுவளை தூபமிட -எந்நாளும் வீட்டில் தெய்வங்கள் அருள் புரியும்.

வலம்புரிக்காய் தூபமிட -பன்னிரண்டு வகையான பூத கணங்களும் நீங்கும்.

வெள்ளைகுங்கிலியம் தூபமிட -துஷ்ட அவிகள் இருந்தவிடம் தெரியாது நீங்கிவிடும்.

வெண்கடுகு தூபமிட -பகைமை எதிர்ப்புகள் விலகும்.

நாய்கடுகு தூபமிட -துரோகிககள் நம்மை கண்டு ஓடுவர்.

மருதாணிவிதை தூபமிட -சூனிய கோளாறுகளை நீக்கும்.

கரிசலாங்கன்னி தூபமிட -மகான்கள்அருள்கிட்டும்.

வேப்பம்பட்டை தூபமிட -ஏவலும் பீடையு நீங்கும்.

நன்னாரிவேர் தூபமிட -இராஜவசியம் உண்டாக்கும்.

வெட்டிவேர் தூபமிட -சகல காரியங்களும் சித்தியாகும் .

வேப்பஇலைதூள் தூபமிட – சகலவித நோய் நிவாரணமாகும்.

மருதாணிஇலைதூள் தூபமிட -இலட்சுமி கடாட்சம் உண்டாகும்.

அருகம்புல்தூள் தூபமிட – சகல தோஷமும் நிவாரணமாகும்.

மேலே குறிப்பிட்டுருக்கும் அனைத்து பொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

தினமும் வீடு, கடை, தொழிற்சாலை, பாடசாலை, அலுவலகம் போன்ற இடங்களில் இறைவனை நினைத்து தூபமிட்டாலே அவ்விடத்தில் அமைதியும் நற்சூழலும் அமைந்து அங்கு நடக்கும் நடைபெறும் செயல்கள் யாவும் சிறப்பாக அமையப்பெறும்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

ஆதி சங்கரரும் மூகாம்பிகையும்.!!

ஜோதிர் லிங்கம் முன்னாள் அமர்ந்து ஆதிசங்கரர் தியானம் செய்து கொண்டிருந்த போது ஒரு நாள் அவர் முன் ஜெகஜோதியாக அம்பிகையின் உருவம் ஒளிர்ந்து காட்சி அளித்தது.

கேரளாவில் காலடியில் பிறந்த ஆதிசங்கரருக்கு எத்தனையோ பகவதி கோவில்கள் இருந்தும் கலைவாணிக்கு ஒரு கோவில் இல்லையே என்ற ஏக்கம் இருந்தது.

அவர் மைசூர் சமுண்டீஸ்வரி தாயை நோக்கி தவம் இருந்தார்.

மகனின் தெய்வீக தாகத்தைத் தீர்க்க அன்னை ஆதிசங்கரருக்கு காட்சியளித்தாள்.

தேவியின் திவ்ய ரூபம் கண்டு ஆதிசங்கரருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. ஆனந்தக் கூத்தாடினார்.

தேவியோ, ”நீ எங்கு என்னை குடி வைக்க விரும்புகிறாயோ அங்கு கொண்டுபோ.

ஆனால் ஒரு நிபந்தனை.

நான் உன்னைப் பின் தொடர்வேன். நீ என்னை திரும்பி பார்க்கக் கூடாது.

அப்படி திரும்பிப் பார்த்தால் அந்த இடத்திலேயே நின்று விடுவேன்” என்றாள்.

ஆதிசங்கரர் தேவியின் நிபந்தனையை ஒத்துக் கொண்டு தேவியின் கொலுசு ஒலியைக் கேட்டபடி நிம்மதியாக நடந்து சென்றார்.

எப்பொழுதுமே தேவி சித்தாடல் புரிவது தானே இயற்கை. போகும் வழியில் கோல மகரிஷி வழிபட்டு வந்த சுயம்பு லிங்கத்தைப் பார்த்து நின்று விட்டாள்.

கொலுசு ஒலி கேட்டுக் கொண்டே முன்னே நடந்து சென்று கொண்டிருந்த ஆதிசங்கரர் கொலுசு ஒலி நின்று விட்டதே எனத் திரும்பிப் பார்க்கிறார்.

அன்னை அருள்வாக்குபடி நீ திரும்பி பார்த்தால் நான் அங்கேயே நின்று விடுவேன் என்ற வரிகள் நினைவுக்கு வந்தன.

எனவே அங்கு ஜோதிர் லிங்கத்தில் தேவி அந்த இடத்திலேயே ஐக்கியமாகிவிட்டாள்.

அவள் குடியேறிய இடம்தான் கொல்லூர் என்ற சக்தியின் புண்ணியத்தலம் ஆகும்.

அடர்ந்த காடு, மலை, ஆறுகள் அமைந்த இடத்தில் சுயம்புவான ஜோதிர்லிங்கம் மட்டும் தான் இருந்தது. அதிலே அரூபமான முப்பெரும் தேவியரும் உடனுறைகிறார்கள்.

ஆதிசங்கரர் வந்தபோது கோல மகரிஷி பூஜித்து வந்த தங்க ரேகை மின்னும் சுயம்புலிங்கம் மட்டுமே இருந்தது.

அம்பாள் சிலை ஏதும் இல்லை. எனினும் அரூபரூபமாய் அந்த லிங்கத்தில் இருப்பதாக எத்தனையோ காலமாய் நம்பப்பட்டு வந்த ஸ்ரீமூகாம்பிகை தேவி என்ற அம்பாளின் முகம் அப்போது எப்படி இருக்கும் என்று யாரும் கற்பனை செய்து கூட அறிய முடியவில்லை.

மூகாம்பிகை தேவியின் புகழினையும், பெருமைகளையும், மகிமைகளையும் கூறும் பல நிகழ்ச்சிகளையும், கதைகளையும் பக்தியுடன் பேசிவந்த ஊர் மக்கள் மன்தில் இது ஒரு பெருங்குறையாக இருந்தது.

இந்நிலையில் ஆதிசங்கரர் கொல்லூர் வந்திருப்பது ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.

சக்தியை வழிபடும் சாக்தமார்க்கத்தை வழிபட அருளிய மகான் ஆதிசங்கரர் அரூபரூபமாய் உள்ள ஸ்ரீமூகாம்பிகையின் திரு உருவத்தைக் காட்டுவார் என ஊர்மக்கள் பரவசமடைந்தார்.

கொல்லூரில் ஆதிசங்கரர் தங்கியிருந்து தினமும் தியானம் செய்தது மூலவரின் சன்னதிக்கு நேர் பின்புறம் அமைந்துள்ள
ஒரு மேடை ஆகும்.

ஏகாந்த வெளியில் ஜோதிர் லிங்கம் முன்னாள் அமர்ந்து ஆதிசங்கரர் தியானம் செய்து கொண்டிருந்தபோது ஒருநாள் அவர் முன் ஜெக ஜோதியாக அம்பிகையின் உருவம் ஒளிர்ந்து காட்சி அளித்தது.

ஆதிசங்கரர் தரிசித்த அம்பிகையின் உருவத்தை மனதில் கண்டார்.

அவ்வுருவம் சங்கு சக்கரம் அபயக்கரம் ஏந்திய சாந்த சொரூபியாக பத்மாசனத்தில் அமர்ந்து அருட்கடாச்சம் தந்ததைக் கண்டார்.

அன்னை தானே இத்தனை காலமாக இந்த சொர்ணரேகை மின்னும் சுயம்பு லிங்கத்தில் அரூபரூபமாய் முப்பெருந்தேவி மூகாம்பிகா என அடையாளம் காட்டிக் கொண்டாள்.

ஆதிசங்கரர் மனம் மகிழ்ந்து அம்பாளை துதித்தார். அக்காட்சி அவர் இதயத்தில் தத்ரூபமாக பதிந்தது.

உடனே இச்செய்தியை உரியவர்களிடம் கூறினார். விக்கிரகக் கலையில் விஸ்வகர்மா பரம்பரையில் கைதேர்ந்த ஸ்தபதி ஒருவரை அழைத்து விக்கிரகம் செய்ய ஏற்பாடு செய்தார்கள்.

மூலவரின் சிலையும் பஞ்சலோகத்தில் உருவானது. அம்மாளை பிரதிஷ்டை செய்வதற்காக தொடர்ந்து ஒரு வருடம் உட்கார்ந்த நிலையிலேயே பூஜை செய்ததால் ஆதிசங்கரரால் எழ முடியவில்லை.

தவிக்கும் தன் பக்தனைப் பார்த்த அன்னை
தன் கையாலேயே கஷாயம் செய்து சங்கரருக்குக் கொடுத்தாள்.

இன்றும் இந்த தலத்தில் இரவு நேரத்தில்
கஷாயம் காய்ச்சி பக்தர்களுக்கு பிரசாதமாகக்_
கொடுக்கிறார்கள்.

தியானத்திலே கண்ட திவ்ய சொரூபம் ஆதிசங்கரர் கண் முன் நின்று காட்சியளித்துக் கொண்டிருந்தது. விக்கிரகத்தை பார்த்தார். மெய் சிலிர்த்தது!

பத்மாசன தோற்றம் நான்கு கைகள், சங்கு சக்கரம், ஒரு கை அருளையும் ஒரு கை தன் மலர் பாதத்தை சரணடையத் தூண்டும் வகையிலும் இருந்தன.

சாந்த சொரூபியாக சகல கலைகளையும் ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்குபவளாக காட்சி தந்தார்.

சுயம்பு லிங்கத்தின் பின்னால் சிறிது இடைவெளி விட்டு மூகாம்பிகா சிலையை பிரதிஷ்டை செய்தார்.

அதனடியில் சக்தி மிகுந்த ஸ்ரீசக்கரத்தை
ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்தார்.

அச்சக்கரத்தில் ஒன்பது சக்கரம் அடக்கம்
அறுபத்து நான்கு கோடி தேவதைகளை ஆவாஹனம் செய்தார்.

ஸ்ரீ சக்கரத்தின் மீது அன்னையின் விக்கிரக ரூபத்தை நிறுவினார்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

பிதுர் பக்தியின் பயன்.!!

ஸனத்குமார முனிவர், பீஷ்மரை நோக்கி, ‘இராஜ சிரேஷ்டரே! பிதுர்த் தேவர்கள் எழுவர்! கவ்வியவாஹன் அனலன் சோமன், யாமன், அரியமான், அக்நிஷ்வாத்தன். பர்ஹிஷிதன் என்ற அவர்கள் சுவர்க்கத்தில் இருக்கிறார்கள். அவர்களில் நால்வர் தேகத்தோடும் மூவர் தேகம் இல்லாமலும் விளங்குவார்கள் இவர்களில் மூவரைத் தேவர்களும் ஏனைய நால்வரை அந்தணர் முதலான நாற்குலத்தாரும் வழிபடுகிறார்கள். பிதுர்க்களுக்குச் சிரார்த்த காலத்தில் வெள்ளிப்பாத்திரத்தினால் சிரார்த்தஞ் செய்யவேண்டும் மனைவியோடு கூடிய அக்நிமானாயின் சுதா என்னும் சப்தத்தினால் ஹோமம் செய்ய வேண்டும் அல்லது ஜலத்திலோ அல்லது பிராமணனின் கையாலோ ஹோமஞ் செய்ய வேண்டும் அவ்வாறு செய்பவர்கள் இகலோக சவுக்கியத்தையும் பரலோகத்தில் சுவர்க்க லோகத்தையும் அடைவார்கள். தேவகாரியத்தைக் காட்டிலும் பிதுர்க் காரியஞ் சிறந்தது. அதை அதிக பக்தியுடன் செய்யவேண்டும். பிதுர்க் காரியத்தினால் அடையுங்கதியை யோக பலத்தினாலும் அடைய முடியாது!’ என்று கூறி திவ்வியமான ஞானத்தை உபதேசித்து விண்வழியே சென்றார். பீஷ்மரே இனி முன்பு நடந்த ஒரு சரிதத்தைச் சொல்லுகிறேன்.

பரத்வாஜ முனிவரின் மைந்தர்கள் யோக தர்மத்தை அடைந்தும் தம் துர்நடத்தையால் பிரஷ்டர்களானார்கள். வாக்துஷ்டன் குலோதனன், ஹிம்சிரன், பிசுனன் (கோனன்), கபி (குரங்கு) பிதுர்வர்த்தி, என அவர்கள் நடத்தை காரணமாக அப்பெயர்களை பெற்றார்கள். ஸ்வஸ்ரூபன் (தங்கையைரட் சித்தவன்) என்று ஓர் புத்திரனும் இருந்தான். இவர்கள் எழுவரும் பிரஷ்டர்களாகவே இருந்து அப்பிறவிகளை ஒழித்து கவுசிக முனிவருக்கு புதல்வர்களாகத் தோன்றி கர்க்க முனிவரின் சீடர்களாகி குருக்ஷேத்திரத்தில் தங்கள் ஆசிரியருக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தார்கள்.

அப்போது கர்க்க முனிவர் அவர்களை நோக்கி வேறோர் ஆசிரமத்திலிருந்து பசுவுங்கன்றும் ஓட்டிக்கொண்டு வரும்படிச் சொன்னார். அவர்கள் எழுவரும் அவ்வாறே சென்று பசுவைக் கன்றுடன் பிடித்துக் கொண்டு வரும் போது அவர்களில் சிலருக்குப் பசியினாலும் அறியாமையானாலும் பாவத்தினாலும் அந்தப் பசுவைக் கொன்று புசிக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. அவர்கள் அதைக்கூறவே அப்போது கபி ஸ்வஸ்ரூபன் என்பவர்கள் அது பாபம் அவ்வாறு செய்யக் கூடாது! என்று தடுத்தார்கள். பிதுர்வர்த்தி என்பவர் பிதுர்பக்தியுடையவனாக இருந்ததனால் நீங்கள் இதைக் கொல்வதானால் பிதுர்ப் பிரீதி செய்து இதைக்கொன்று புசிக்கலாம் என்றான். அதையே யாவரும் ஆமோதித்து அந்தப் பசுவைக் கொன்று சிரார்த்தத்துக்கு உபயோகித்து எழுவருமாக அதைச் சாப்பிட்டு விட்டார்கள், பிறகு அவர்கள் கன்றை மட்டும் குருவிடம் கொண்டு சேர்த்து சுவாமீ! பசுவைப் புலியொன்று கொன்றுவிட்டது! என்று பொய் கூறினார்கள். முனிவர் கபடமின்றி அதை ஒப்புக் கொண்டார். அவர்கள் எழுவரும் குலாசார தர்மத்தை கைவிட்டு கோவதை செய்து அதைச் சாப்பிட்ட பாவத்தாலும் குருவினிடம் பொய் சொன்ன பாவத்தாலும் தசார்ணம் என்னும் இடத்தில் வேடுவகுலத்தில் சகோதரர்களாகப் பிறந்தார்கள். கீழ் குலத்தில் பிறந்தும் அந்தக் குலத்து ஆசாரப்படி நடந்தும் பிதுர் பக்தியுடையவர்களாக இருந்ததாலும் அவர்களுக்கு முற்பிறவியின் ஞானம் உண்டாக்கிச் சிலகாலம் மனவருத்தத்துடன் காலம் கழித்தார்கள்.

காலஞ்சரம் என்னும் மலையில் மிருகங்களாகப் பிறந்தார்கள் அப்பொழுது பூர்வஜன்ம நினைவுடன் இந்தப் பிறவியை ஒழித்துவிட வேண்டும் என்று நினைத்து சரத்தீபத்தில் சக்ரவாகப் பறவைகளாகப் பிறந்தார்கள். அப்போது ஜன்மாந்தர ஞானத்துடன் குருவிடம் பொய் கூறினும் பணிவிடையை முறைப்படி செய்ததால் கோவதை செய்த பாவத்தை ஒழிக்க வேண்டும் என்னும் கருத்துடையவர்களாக இருந்தார்கள். சுமனஸ் சுவாக் சுத்தன் பஞ்சாலன் சித்திரத்ரிசகன் சுநேத்திரன் சுதந்த்ரன் என்னும் பெயர் பெற்று அவர்கள் சக்கரவாகப் பறவைகளாகச் சஞ்சரித்துக் கொண்டிருக்கும்போது நீபதேசத்தரசன் வேட்டையாட வந்தான். சுதந்திரன் என்னும் பறவை அவனுடைய செல்வத்தைக் கண்டு பொறாமை கொண்டு நான் இவனைப் போல ராஜாவாகப் பிறக்கும்படிப் பூர்வஜனன புண்ணியம் ஏதேனும் இருக்குமோ? என்று ஆசையுற்றுக் கூறியது அதைக் கேட்டுக் கொண்டு அருகிலிருந்த உடன் பிறப்பான இரண்டு பறவைகள் நீ அரசனாகப் பிறந்தால் நாங்கள் அமைச்சர்களாகிறோம் என்றன. அப்போது சுவாக் என்னும் பறவை நீங்கள் ஞானத்தையடைய விரும்பாமல் இராஜ்ய செல்வத்தை விரும்பினீர்கள் ஆகையால் அவன் அரசனாகவும் நீங்கள் மந்திரிகளாகவும் சிவகாலத்தில் காம்பிலிய தேசத்தை அடைவீர்கள் என்று கூறியது அப்போது அம்மூன்று பறவைகளும் சுவாக் என்னும் சகோதரனை நோக்கி நாங்கள் போகத்தை அடைந்தால் எப்போது எங்களுக்கு ஞானம் தோன்றும்! அது எப்படி வரும்? என்று கேட்டான் அதற்கு சவாக், பிதுர் பக்தியுடையவர்களாகையால் மற்றொரு பிறவியில் நாம் எல்லோரும் ஒன்று கூடி மானிடப்பிறவியை அடைந்து ஞானவான்களாவோம் என்று கூறியது...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள ரகசியங்களை அறிந்து கொள்ளலாம்.!!

நகரின் மையத்தில், மலையடிவாரத்தில் அண்ணாமலையார் ஆலயம் 24 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது. ஆலயத்தில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. கோபுரங்கள் மலிந்த ஆலயம் இது. இவ்வாலயத்தின் உள்ளே ஆறு பிராகாரங்கள் உள்ளன. 142 சந்நிதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1,000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (பால ரமணர் தவம் செய்த இடம்), 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என அமைந்த ஆலயம்.

ஆலயத்தின் உள்ளேயே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன. கொடிக்கம்பம் அருகே செந்தூர விநாயகர் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார். பஞ்ச லிங்கங்களும், நான்கு முகங்கள் கொண்ட பிரம்ம லிங்கமும் உள்ளன. காலபைரவர் சந்நிதியும் உண்டு. இங்கே முருகப்பெருமான் இளையனார் என்னும் பெயரில் மூன்று இடங்களில் வணங்கப் பெறுகிறார்.

அருணகிரியுடன் சவால் விட்டான் சம்பந் தாண்டான். அதற்காக முருகன் அருணகிரிக்கு கம்பத்தில் காட்சி தந்தார். இவர்தான் கம்பத்திளையனார் என்ற பெயரில் வளைகாப்பு மண்டபத் தூணில் காட்சி தருகிறார். அருணகிரி வல்லாள கோபுரத்தின் மீதேறி கீழே குதித்து உயிர்விட முயன்றபோது, தடுத்தாட்கொண்டு அருள்புரிந்து திருப்புகழ் பாட வைத்தவர் கோபுரத்திளையனார். கோபுரம் அருகிலேயே சந்நிதி. பிச்சை இளையனார் சந்நிதி கிளிகோபுரம் அருகேயுள்ளது.
காமதகனம் நடக்கும் சிவாலயம் இது ஒன்றுதான். ஆடிப்பூரத்தன்று மாலை, ஆலயத்தின் உள்ளேயே உண்ணாமுலையம்மன் சந்நிதிமுன் தீமிதி விழா நடத்தும் ஆலயமும் இது ஒன்றுதான். திருவிழா நாட்களில் திட்டிவாசல் வழியே உற்சவமூர்த்திகள் வெளிவருவதும் இவ்வாலயத்தில் மட்டும்தான். அருணகிரிக்கு விழா எடுக்கும் ஆலயமும் இதுதான்.

சிவபெருமானே அண்ணாமலையாகக் காட்சி தருகிறார். இதை காந்த மலை என்பர். காரணம், இம்மலையை தரிசிக்க வருவோரை மீண்டும் மீண்டும் காந்தம்போல கவர்ந்து இங்கு வரவழைக்கும். கிருத யுகத்தில் இது அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும், இக்கலியுகத்தில் கல் மலையாகவும் திகழ்கிறது.

திருக்கயிலாயத்தில் ஆழ்நிலை தியானத்தில் இருந்த சிவபெருமானின் கண்களை அன்னை பராசக்தி விளையாட்டாக மூடியதால் இப்பிரபஞ்சமே இருண்டது. அனைத்து ஜீவராசிகளும் துன்பத்திற்கு ஆளாகி தவித்தன. இதனால் ஏற்பட்ட பாவத்தை போக்க பூவுலகில் காஞ்சிபுரம் கம்பை நதிக்கரையில் அன்னை காமாட்சியாக தவம் இருந்தாள். ஒருநாள் கம்பை நதி வெள்ளத்தில் தான் அமைத்த சிவலிங்கம் கரையாமல் இருக்க மார்போடு சேர்த்து அணைத்தார் அன்னை காமாட்சி. இதனால் அன்னையின் பாவத்தை சிவபெருமான் நீக்கினார். அய்யனே நீங்கள் எப்போதும் என்னை பிரியாதிருக்க தங்கள் திருமேனியில் எனக்கு இடபாகம் தந்தருள வேண்டும் என சக்தி வேண்டினார். அதற்கு சிவபெருமான், அண்ணாலை சென்று தவம் செய் என உத்தரவிட்டார்.

அவ்வாறே உமையும் தவம் செய்தாள். கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியும், கிருத்திகையும் சேரும் நாளில் மலையின்மீது பிரகாசமான ஒளி ஒன்று உண்டானது. அப்போது ‘மலையை இடதுபுறமாக சுற்றிவா’ என அசரீரி ஒலித்தது. அதன்படி கிரிவலம் சென்ற அன்னையை அழைத்து தனது மேனியில் இடபாகத்தை அளித்து ஆட்கொண்ட சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக காட்சியளித்தார். இதையும் நினைவுகூர்ந்தே அண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. மகாதீப தரிசனம் கண்டால், அவர்களின் 21 தலை முறையினருக்கும் புண்ணியம் கிட்டும்.திருவண்ணாமலைத் தலம் நடுநாட்டுத் தலங்களுள் முதன்மையானது. பஞ்சபூதத் தலங்களுள் இது அக்னித் தலம். நால்வராலும் பாடப்பட்ட தலம். எங்கிருந்து நினைத்தாலும் முக்தி கொடுக்கும் தலம் இதுதான். இத்தலத்தில்தான் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகை சிறப்புகள் கொண்ட தலம் இது. பிரம்மன், திருமாலின் ஆணவம் அழிந்த தலம். அர்த்தநாரீஸ்வரர் கோலம் கொண்ட தலம். கார்த்திகை தீபத்தின் மூலத் தலம். ஆதாரத் தலங்களுள் இது மணிப்பூரகத் தலம். இத்தல மலையுச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தால், இது உலகப் புகழ்பெற்ற தலம்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

பைரவர் அவதாரம் எப்போது நிகழ்ந்தது?

அந்தகாசுரன் என்னும் அசுரன் ஒருவன் தேவர்களையெல்லாம் துன்புறுத்தி இன்பம் கண்டான். தேவர்களை மட்டுமல்லாமல் எப்போதும் சிவ சிந்தனையில் இருக்கும் முனிவர்களையும் விட்டு வைக்கவில்லை.

தேவர்களையும் தன்னையே நினைத்திருக்கும் முனிவர்களை துன்புறுத்தும் அந்தகாசுரனை அழிக்க திருவுள்ளம் கொண்ட சிவபெருமான், தம்முடைய திருமுகங்களில் ஒன்றான தத் புருஷத்தில் இருந்து மகா பைரவ மூர்த்தியைத் தோற்றுவித்தார். அவரே அந்தகாசுரனை வதம் செய்து தேவர்களையும் முனிவர்களையும் காப்பாற்றினார். மேலும் கர்வம் கொண்ட பிரம்மதேவரின் தலையைக் கொய்தவரும் பைரவர்தான்.

ஒருமுறை தாருகாவனத்து முனிவர்களின் ஆணவத்தை அழிக்க நினைத்த சிவன், பிட்சா டன மூர்த்தியாக வடிவம் ஏற்றுச் சென்றார். அவரால் தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தைத் தாங்கிக்கொள்ள முடியாத முனிவர்கள் சிவபெருமானை அழிக்க முயற்சித்தனர். கடும் கோபம் கொண்ட சிவன் காலாக்னியால் தாருகாவனத்தை அழித்தார்.

உலகம் முழுக்க இருள் பரவி சூரியனும் மறை ந்து போனது. அப்போது பைரவ மூர்த்தியே எட்டுத் திசைகளிலும் தோன்றி ஒளியை உண்டாக்கினார். எட்டு விதமாகத் தோன்றிய பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் என்று பூமியில் வணங்கப் படுகிறார்கள். அவர்கள் ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், சம்ஹார பைரவர், பீக்ஷன பைரவர், கபால பைரவர் என எட்டு பைரவர் மட்டுமின்றி ஆதிசைவர்கள் அறுபத்தி நான்கு விதமான பைரவர்களையும் வணங்கி வந்துள்ளார்கள் என புராணங்கள் கூறுகின்றன.

அஷ்டமி வழிபாடு, ஆபத்திலிருந்து காக்கும் என்பார்கள். அஷ்டமி வழிபாடு பைரவருக்கு இஷ்டமானது. அதிலும் தேய்பிறை அஷ்டமி என்பது மரண பயத்தை நீக்கும் அற்புதமான வழிபாடு.

பைரவர் சிவனின் 64 வடிவங்களில் மகா ஞானியான, ரௌத்ர தோற்றம் கொண்டவர். எல்லா சிவாலயங்களிலும் பைரவர் இருப்பார். இன்னும் சொல்லப் போனால் பைரவரே கோயிலின் காவல் தெய்வமாகவும் இருப்பவர். எல்லா சிவாலயங்களிலும் ஆலயம் திறந்தவு டனும், இரவு கோயில் மூடப்படும் போதும் பைரவ பூஜை செய்வார்கள்.

சிவன் சொத்துக்களை காவல் காக்கும் அதிகாரியும் இவரே. நாயை வாகனமாகக் கொண்டு அனேகமாக திகம்பரராக காட்சி தருபவர். கால பைரவர், கோர பைரவர், உக்ர பைரவர், சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், ஜுர பைரவர் என பலவாறு ரூபம் கொண்டவர்.

சனீஸ்வரனின் குருவாகவும், காலத்தை கட்டு ப்டுத்திடும் தேவனாகவும் இருப்பவர் பைரவர். பன்னிரண்டு ராசிகள், அஷ்ட திக்குகள், பஞ்ச பூதங்கள், நவகிரகங்கள் என எல்லாவற்றை யும் கண்காணிக்கும் ஆதி தெய்வம் பைரவர். காசி நகரமே பைரவரின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும், அதனால் தான் அங்கு இறப்ப வருக்கு மோட்சம் கிடைப்பதாகவும் சொல்லப் படுகிறது.

நீலநிற மேனியரான பைரவர் பாம்பை முப்புரி நூலாகத் தரித்தவர். மண்டை ஓட்டு மாலை அணிந்தவர். சூலம், பாசம், மழு, கபாலம் ஏந்தியவர். திருமுடியில் பிறைநிலவு சூடியவர். பிரம்ம சிரச்சேதர், க்ஷேத்திரபாலகர், வடுகர், ஆபத்துதாரணர், காலமூர்த்தி, கஞ்சுகன், திகம்பரன் என்று பல பெயர்கள் பைரவருக்கு இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.

அகங்காரத்தை அழிக்கும் கடவுளாகவும், சுக்கிர தோஷத்தை நீக்கும் இறைவனாகவும் பைரவர் விளங்குகிறார். அஷ்டமி நாளில் இவரை வணங்கினால் எண்ணியது நடக்கும். தடைகள் யாவும் விலகும். ஏழரை சனி, அஷ்டம சனியாவும் பைரவரை வணங்கினால் நன்மை யாக முடியும். தாமரை, வில்வம், தும்பை, செவ் வந்தி, சந்தனம் பைரவருக்கு விருப்பமானவை பரணி நட்சத்திரத்தில் பைரவர் அவதரித்தார். எனவே அந்த நட்சத்திரக்காரர்கள் இவரை வணங்கினால் நல்லது. பைரவருக்கு நள்ளிரவு பூஜையே உகந்தது எனப்படுகிறது. எனினும் உச்சி காலம் எனப்படும் நண்பகல் பூஜை சிறப்பானது.

அஷ்டமியன்று பகல் உச்சி வேளையில் பைரவருக்கு சிவப்பு ஆடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, மாலை சூட்டி, சிவப்பு நிற மலர்களால் அர்ச்சித்து, வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கி நல்ல வாழ்வு கிட்டும். எலுமிச்சம்பழத்தை பைரவமூர்த்தியின் காலில் வைத்து அர்ச்சித்து வீட்டுக்கு கொண்டு போனால் தீராத வியாதிகள் தீரும். வீட்டை சூழ்ந்திருக்கும் பீடைகள் ஒழியும். கெட்ட அதிர்வுகள் விலகும் என்று சொல்லப் படுகிறது.

மன அமைதி இல்லாதவர்களுக்கு பைரவரே நல்ல துணை. செல்வவளம் பெருக சொர்ண ஆகர்ஷன பைரவரை வணங்கலாம். எட்டு தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவரை வழிபாடு செய்தால் எந்தத் துன்பமானாலும் விலகி வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும் என்பது ஆன்றோர்கள் வாக்கு. இன்று தேய் பிறை அஷ்டமி நாள். துக்கங்களை மாற்றி நிம்மதியை அருளும் பைரவ வழிபாட்டை இன்று மேற்கொள்ளலாமே?

பைரவர் ஸ்லோகம்::
“”””””'””””””””””””””””””””””””
ரக்த ஜ்வால ஜடாதரம் ஸுவிமலம் ரக்தாங்க தேஜோமயம்
த்ருத்வா சூல கபால பாச டமருத் லோகஸ்ய ரக்ஷாகரம்
நிர்வாணம் கந வாஹனம் த்ரிநயனம் ஆனந்த கோலாஹலம் வந்தே ஸர்வ பிசாசநாத வடுகம் க்ஷேத்ரஸ்ய பாலம் சிவம்.

பொருள் :சிவந்த சிகையும் ஒளிமிகுந்த தேகத்தையும் கொண்ட பைரவரே, நமஸ்கா ரம். சூலம், கபாலம், உடுக்கை தரித்து உலகத் தை காப்பவரே நன்றியின் வடிவமான நாயை வாகனமாகக் கொண்டவரே, முக்கண்கள் கொண்டவரே, ஆனந்த வடிவினராக பூத, பிரேத, பிசாசு கூட்டங்களைக் கட்டுப்படுத்தும் தலைவரே, அனைத்து புண்ணிய க்ஷேத்ரங்க ளையும் ரக்ஷிப்பவரே, பைரவரே, நமஸ்காரம்.

தேய்பிறை அஷ்டமி தினத்தன்று இத்துதியை பாராயணம் செய்து பைரவரை தரிசித்தால் எல்லா வகையான ஆபத்துகளும் நீங்கும்; கண் திருஷ்டிகள் அகலும்…

ஓம் நமசிவாய..
ஓம் ஸ்ரீ காலபைரவா போற்றி…

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

Thursday, 25 June 2020

எதற்காக இராமன் கானகம் போக வேண்டும் ?

எதற்காக இராமன் கானகம் போக வேண்டும் ? பேசாமல் பரதன் மற்றும் குல குரு வசிட்டர் பேச்சை கேட்டுக் கொண்டு அயோத்தியிலேயே இருந்திருக்கலாமே. அங்கிருந்து கொண்டே இராவணன் மேல் போர் தொடுத்து இருக்கலாமே என்றெல்லாம் பல கேள்விகள் வரும்.

இதற்கு இரண்டு விடைகள் தரலாம்.

ஒன்று சாதாரணமான விடை. செய்திருக்கலாம். அப்படியும் ஒரு கதை எழுதலாம். இன்னமும் கூட வேறு விதமாக யோசிக்கலாம். எதற்காக இராவணன் மேல் சண்டை போட வேண்டும் ? அவன் போரிட்டு எதிரிகளை வென்றான் (தேவர்களை). கைதிகளை , கைதிகள் போல் நடத்தினான். அவ்வளவுதானே. அது ஒரு பெரிய குற்றமா ? அவன் பாட்டுக்கு அந்த பக்கம் இருக்கட்டும். நாம் பாட்டுக்கு இந்த பக்கம் நாட்டை ஆளுவோம் என்று கூட சிலர் சிந்திக்கலாம்.

பொதுவாகவே, உயர்ந்த நூல்களை படிக்கும் போது , அவற்றை படிப்பதன் மூலம் நம்மை நாம் எப்படி உயர்திக் கொள்ளலாம் என்று சிந்திக்க வேண்டுமே தவிர, எப்படி அந்த நூல்களை நம் தரத்துக்கு கீழே கொண்டு வருவது என்று சிந்திக்கக் கூடாது.

இராமாயணம் போன்ற உயர்ந்த நூல்களை படித்து விட்டு சிலர் அதை பரிகசித்து வேறு மாதிரி நூல்கள் எழுதினார்கள். இராமாயணத்தை கொளுத்த வேண்டும், அதை அடியோடு அழிக்க வேண்டும் என்று சில இயக்கங்கள் புறப்பட்டன.

இவை எல்லாம், உயர்ந்த நூல்களை நம் தரத்துக்கு கீழே இறக்கும் முயற்சி.

அதை விடுத்து, அதில் உள்ள உயர்ந்த கருத்துகளை தேடிப் பிடித்து , அந்த கருத்துகளை நம் வாழ்வில் கடை பிடித்து நாம் உயர என்ன வழி என்று சிந்திக்க வேண்டும்.

சரி, இன்னொரு காரணம் என்ன ?

வள்ளுவர் கூறினார், வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவன் வானில் உள்ள தேவர்களுக்கு சமமாவான் என்று.

இந்த உலகில் வாழும் முறைப்படி வாழ்ந்தால் , இந்த உலகிலேயே அவன் தேவனாக மதிக்கப் படுவான் என்றார்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்.

சரி. வாழ்வாங்கு என்றால் வாழும் முறைப்படி என்று அர்த்தம். அது என்ன முறை ? அந்த முறை எங்கே எழுதி இருக்கிறது ? யாரிடம் கேட்டு தெரிந்து கொள்வது ?

அப்படி வாழ்ந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா ?

இந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை இராமாயணம்.

இங்கே நல்லபடி வாழ்ந்து , தேவர்களைப் போல ஆனவர்கள் யார் என்று சொன்னாலும், அவர்கள் வாழ்வில் உள்ள சில குறைகளை கண்டு பிடித்து , இதுவா வாழ்வாங்கு வாழும் முறை என்று சிலர் ஆரம்பித்து விடுவார்கள்.

எனவே, கம்பர் என்ன செய்தார் தெரியுமா, வானில் உள்ள ஒருவனை பூமிக்கு கொண்டு வந்தார். அங்குள்ள ஒருவன் இங்கு வந்தால் எப்படி வாழ்வான் என்று படம் பிடித்து காட்டுகிறார்.

திருமாலையே நேராகக் கொண்டு வந்து , அவனை சாதாரண மானிடன் போல வாழ வைக்கிறார்.

திருமால் , மனித வாழ்க்கையை வாழ்ந்தால் எப்படி வாழுவார் என்று காண்பிக்கிறார்.

இராமன் என்னென்ன செய்தான் என்று தெரிகிறது.

ஏன் செய்தான் என்று நாம் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம். இராமனின் சில காரியங்களுக்கு நமக்கு காரணம் விளங்காமல் இருக்கலாம். அதனால் அவை தவறு என்று ஆகி விடாது.

ஒரு கடவுளே இங்கு வந்து வாழ்ந்தால் எப்படி வாழ்வான் என்று காண்பிக்கும் முயற்சி தான் இராமாயணம்.

வேண்டாம், எனக்கு இராமன் போல வாழ வேண்டாம். இராமன் செய்த செயல்களில் எனக்கு உடன்பாடு இல்லை என்று சிலர் சொல்லலாம்.

சரி. வேறு வழியில் வாழ்வாங்கு வாழத் தெரியும் என்றால், முடியும் என்றால் அந்த வழியிலேயே போகலாம்.ஒரு தவறும் இல்லை.

இது இராமன் + அயனம் (பாதை; உத்தராயணம், தட்சிணாயனம் என்று கூறுவது போல).

வாழ்வாங்கு வாழ இராமன் காட்டிய வழி.

முடிந்தவரை அந்த வழியில் செல்வோம்.

ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

தினசரி வாழ்வில் செய்யக்கூடியவை.!!

1. தினசரி காலையும், மாலையும் தூய மனதுடன் சில நிமிடங்களாவது கடவுள் பெயரை உச்சரித்தல் வேண்டும்.

2. தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில், கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள், மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம், கன்றுடன் பசு, உள்ளங்கை, மனைவி, குழந்தைகள்.

3. நம் வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி, வேப்ப மரம் இருக்க வேண்டும். அதனால் எந்தவித நோயும் வராது. விஷ ஜந்துக்களும் நம்மை அண்டாது. தூய்மையான காற்றும் கிடைக்கும்.

4. வீடுகளில் பூஜை அறை என்று தனியாக வைத்துக் கொண்டிருந்தால் அங்கு தேவை இல்லாத உடைந்த பொருட்களைச் சேர்த்து வைக்காதீர்கள். இது இறை சக்தியைக் குறைக்கும். அங்கு ஆன்மீக அதிர்வுகள் ஏற்படாது. மிகக் குறைந்த பூஜைக்கு பொருட்களை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்.

5. சிவன், பார்வதி, விநாயகர், முருகர் உள்ள படம் ஒன்றை கிழக்குப் பார்த்து மாட்டி வைத்தால், அது வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளை சிறிது சிறிதாக நீக்கும்.

6. செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் பூறை அறையை தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும். மார்பிள், கிரானைட் தரைகளாக இருந்தால் ஈரத்துணியால் துடைக்க வேண்டும். அமாவாசை, பவுர்ணமி, வருடப்பிறப்பு போன்ற பண்டிகை நாட்களுக்கு முதல் நாளும் இவ்வாறு செய்ய வேண்டும்.

7. நமது வலது உள்ளங்கையில் மகாலட்சுமி இருப்பதால் காலை எழுந்தவுடன் வலது உள்ளங்கையை பார்க்க வேண்டும். இது துவாதசன தரிசனம் எனப்படும்.

8. அமாவாசை, திவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.

9. அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, ஜன்ம நட்சத்திரம் ஆகிய தினங்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க கூடாது.

10. பொதுவாக நெற்றிக்கு திலகமிடாமல் பூஜை செய்யக்கூடாது.

11. பெண்கள் பூசணிக்காய் உடைத்தல் கூடாது. இரு கைகளால் தலையை சொரிதல் ஆகாது.

12. கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைத்தல் கூடாது. மற்றவர்கள் தேங்காய் உடைக்கும் இடத்தில் இருக்கவும் வேண்டாம்.

13. சாமி படங்களுக்கு வாசனை இல்லாத பூக்களைக் சூடக்கூடாது.

14. வீட்டின் நிலைகளில் குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும். இதனால் தீய சக்திகளும், விஷப்பூச்சிகளும் வீட்டிற்குள் வராது.

15. வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவது தான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது.

16. அதிகாலை நாலரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும், மாலை ஐந்தரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் நிறைவான வளமும், பலன்களும் நிச்சயம் கிடைக்கும். எக்காரணம் கொண்டும் எவர்சில்வர் விளக்குகளைப் பூஜை அறையில் விளக்கேற்றப் பயன்படுத்தக் கூடாது.

17. நெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை ஐந்தும் கலந்து ஊற்றி 48 நாட்கள் விளக்கேற்றி பூஜை செய்தால், தேவியின் அருளும், மந்திர சக்தியும் கிடைக்கும்.

18. ஏற்றிய விளக்கில் இருந்து கற்பூரத்தையோ ஊதுபத்தியையோ ஏற்றக்கூடாது.

19. விளக்கேற்றும் போது மற்றவர்கள் ஏற்றி வைத்த விளக்கின் மூலமாக நம் விளக்கை ஏற்றக்கூடாது. தீப்பெட்டி மூலமாக தான் விளக்கேற்ற வேண்டும்.

20. ஓம் என்ற மந்திரத்தை பூஜை அறையில் பத்மாசனத்தில் அமர்ந்து ஒருவர் தொடர்ந்து கூறி தியானம் செய்து வந்தால் அவரை எப்பேர்ப்பட்ட வினைப்பயனும், வியாதியும் நெருங்காது.

21. வீட்டில் பூஜை அறையில் தெய்வப் படங்களுடன் மறைந்த மூதாதையர் படத்தை சேர்க்காமல் தனியாக வைத்து வணங்கினால், சிறந்த பலன் கிடைக்கும்.

22. சனி பகவானுக்கு வீட்டில் எள்விளக்கு ஏற்றக் கூடாது.

23. ருத்ரம், சமகம் போன்றவற்றை வீட்டில் காலையில் தினமும் கேட்பது நல்லது.

24. நாம் வீட்டில் கடவுளை வணங்கும்போது நின்றவாரே தொழுதல் குற்றமாகும். அமர்ந்தபடி தான் தொழுதல் வேண்டும்.

25. யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்போது காலை, மாலை வேளைகளில் விளக்கேற்றக்கூடாது. தூங்குபவர்கள் எழுந்த பிறகுதான் விளக்கேற்ற வேண்டும். தூங்குபவர்களின் தலைக்கு நேராக தேங்காய் உடைக்கக் கூடாது.

26. பூஜையின்போது விபூதியை நீரில் குழைத்து பூசக் கூடாது. தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்து பூசலாம்.

27. பூஜை அறையில் வழிபாடு முடிந்ததும் இடது நாசியில் சுவாசம் இருக்கும்போது பெண்கள் குங்குமம் இட்டுக் கொண்டால் மாங்கல்ய விருத்தி ஏற்படும்.

28. பூஜை அறையில் தெய்வப்படங்களை வடக்குப் பார்த்து வைத்தால் சாபமுண்டாகும்.

29. விரத தினத்தில் தாம்பூலம் தரித்தல், பகல் உறக்கம், தாம்பத்திய உறவு, சண்டையிடுதல் கூடாது.

30. ஈர உடையுடனும், ஓராடையுடனும், தலைகுடுமியை முடியாமலும், தலையிலும், தோளிலும் துணியை போட்டுக் கொண்டோ, கட்டிக் கொண்டோ வழிபாடு செய்யக் கூடாது.

31. ஈர ஆடையுடன் வழிபட நேருமானால் ஈர உடையை, ஓம் அஸ்த்ராய பட் என்ற 7 முறை கூறி உதறி உதடுத்தலாம்.

32. சுப்ரபாதத்தை தினமும் காலை வேளையில் மட்டுமே கேட்க வேண்டும். அவ்வாறு கேட்க முடியாத நிலையில் மாலையில் கேட்பது அவ்வளவு உசிதமானதில்லை எனப்படுகிறது.

33. பகவானின் மந்திரத்தை சொல்லி பிரார்த்திக்க தெரிந்தவர்களுக்கு எப்போதும் எல்லாமே வெற்றிதான். காலையில் விழித்தவுடன் நாராயணனையும் இரவு தூங்கு முன் சிவபெருமானையும் நினைக்க வேண்டும்.

34. கஷ்டங்கள் நீங்க நினைத்தது நடக்க எளிய வழி தீபம் ஏற்றுவதுதான் தீப ஒளி இருக்குமிடத்தில் தெய்வ அணுக்கள் நிறைந்திருக்கும். வீட்டில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தீபம் ஏற்றி வைக்கலாம்.

35. தீபத்தில் உள்ள எண்ணெய் தான் எரிய வேண்டுமே தவிர திரி அல்ல. திரி எரிந்து கருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

36. விளக்கை ஏற்றும்போது வீட்டில் பின் வாசல் இருந்தால் அதன் கதவை சாத்தி விட வேண்டும்.

37. காலையில் நின்று கொண்டு செய்யும் ஜெபத்தால் இரவில் செய்த பாவமும், மாலையில் உட்கார்ந்து கொண்டு செய்யும் ஜெபத்தால் பகலில் செய்த பாவமும் தொலைகிறது.

38. விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போது கைவிரலால் எண்ணெய்யிலுள்ள தூசியை எடுப்பதோ திரியை தூண்டுதோ கூடாது. 39. எரிந்து கொண்டிருக்கும் தீபத்தை ஆண்கள் அணைக்கக் கூடாது.

40. ஆண்கள் தெய்வங்களை வழிபடும்போது தையல் உள்ள உடைகளை அணியக் கூடாது.

41. ஈரத்துணியை உடுத்திக் கொண்டு பூஜைகள், ஜபங்கள் செய்யக்கூடாது.

42. வாழைப் பழத்தில் பத்தியை சொருகி வைக்கக் கூடாது.

43. தேங்காய் இரண்டுக்கு மேற்பட்ட துண்டுகளாக உடைந்தால் அதை தெய்வத்திற்கு நிவேதனம் செய்யக்கூடாது.

44. புழுங்கல் அரிசியால் சமைக்கப்பட்ட உணவை தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது.

45. மா இலை கட்டுவதால் பல தோஷங்கள் நீங்கும். மா இலை தோரணங்களுக்கு பதிலாக பிளாஸ்டிக், பித்தளை முதலியவற்றால் மாவிலை போன்று தோரணம் கட்டலாகாது.

46. தெய்வப் படம், குத்து விளக்குளில் மின் வயரால் அலங்காரம் செய்யக்கூடாது.

47. தினசரி பிரார்த்தனை என்பது வீட்டு வாசலில் ஓடி வரும் தெளிந்த ஆறு போன்றது. யார் ஒருவர் அதில் தன்னை சுத்தி செய்து கொள்கிறானோ அவர் தன்னை நிர்மலமாக்கிக் கொள்கிறார்.

48. வீட்டில் பூஜை செய்து முடித்ததும் துளசியை கையில் வைத்துக் கொண்டு என் பக்தன் எங்கு சென்றாலும் நான் அவனைப்பின் தொடர்ந்து செல்வேன் என பகவான் கூறியுள்ளார். அதனால் ஒருவர் கையில் துளசி இருக்கும் வரை விஷ்ணுவின் துணை அவருக்கு உண்டு.

49. தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யும்போது வெற்றிலை மற்றும் பாக்குகளை இரட்டைப்படை எண்ணிக்கையில் (2, 4, 6, 8, 10) வைக்க வேண்டும்.

50. பூஜைக்கு உபயோகிக்கும் பாக்கு, வெற்றிலை அனைத்து வகை பழங்கள், பூக்கள், தர்ப்பங்கள், ஸ்மித்துகள் போன்றவற்றை பூமியில் நேரடியாக வைக்கக் கூடாது. தட்டு போன்ற பொருட்களின் மீது வைக்க வேண்டும்.

51. வலம்புரிச் சங்கு வைத்திருக்கும் வீட்டில் வற்றாத செல்வம் வந்து சேரும். ஏனெனில் வலம்புரிச் சங்கிலே மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது மகான்களின் கூற்று. பல மகோன்னதம் ஒரு வலம்புரிச் சங்கிற்கு உண்டு.

52. நிர்மால்யம் என்பது பூஜையின் முதல் நாள் போட்டு வாடிய புஷ்பங்களை குறிக்கும். நிர்மால்யங்களை காலில் படாமல் கண்களில் ஒற்றிக் கொண்டு தாம்பாளம், கூடையில் போட்டு வைத்திருந்து ஓடும் தண்ணீரில் விட வேண்டும்.

53. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் வெண்ணை உருக்கக் கூடாது. காரணம் மேற்படி கிழமைகளில் லட்சுமிக்கு உகந்தவை ஆதலாலும் வெண்ணையில் மகாலட்சுமி இருப்பதாலுமே வெண்ணை உருக்கக் கூடாது என்பார்கள்.

54. உறவினர்களை வெளியூர் செல்ல வழியனுப்பிய பிறகு பூஜை, முதலியவைகளை செய்யக் கூடாது.

55. பெரியவர்களும், சிறுவர்களும் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் ஆகியவற்றை வாய்விட்டுத் தினமும் படிக்க வேண்டும். வாய்விட்டு படிப்பதால் குரல் உறுப்புகள் பலம் கொள்ளும். அதனால் மார்பு ஆரோக்கியம் பெறும். சுவாசப் பைகளுக்கும் நல்லது.

56. பூஜை செய்யும் நேரத்திலாவது பெண்கள் ஸ்டிக்கர் போட்டு அணியாது குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும்.

57. பெண்கள் வகிடு ஆரம்பத்தில் குங்குமப் போட்டு கட்டாயம் வைக்க வேண்டும். ஸ்ரீமகாலட்சுமியும், அம்பாளும் வகிட்டில்தான் நிரந்தர வாசம் செய்வதால் சுமங்கலிகளுக்கு சகல சவுபாக்கியங்களையும், மங்கலத்தையும் அளிப்பார்கள்.

58. வெள்ளியன்று குத்து விளக்கிற்கு குங்குமம், சந்தனம் பொட்டிட்டு, பூ சார்த்தி, குங்குமம், புஷ்பம், மஞ்சள் அட்சதையால் குத்து விளக்கு பூஜை செய்வது குடும்ப நலத்திற்கு நல்லது.

59. வீட்டில் துளசியை வளர்ப்பது மிகச் சிறப்பு. காலையில் எழுந்ததும் துளசியைத் தரிசிப்பதால் நம் தீவினைகள் மறையும். தானம் கொடுக்கும்போது சிறிது துளசியுடன் தானம் கொடுக்க வேண்டும். துளசியோடு தரப்படாத தானம் வீண்.

60. பூஜை அறையில் தெய்வங்களுக்குப் படைப்பதற்கு வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும். சீவல் பொட்டலத்தை வைக்கக் கூடாது. வெற்றிலையை இரட்டைப் படை எண்களில்தான் வைக்க வேண்டும். இரண்டு வெற்றிலைக்கு ஒரு பாக்கு என்ற கணக்கில் எவ்வளவு வெற்றிலை வைக்கிறோமோ அந்த அளவு பாக்கு வைக்க வேண்டும்.

61. வெற்றிலை நுனியில் லட்சுமியும், மத்தியில் சரவஸ்தியும், காம்பில் மூதேவியும் வாசம் செய்வதாக ஐதீகம். எனவே வெற்றிலைக் காம்பை கிள்ளி விட்டு வெற்றிலையைக் கழுவிய பின் பூஜைக்கு வைக்க வேண்டும்.

62. வெற்றிலையின் நுனிப்பாகம் சுவாமிக்கு இடது புறம் வருமாறு வைக்க வேண்டும். அப்போது வெற்றிலையின் காம்புப் பகுதி சாமிக்கு வலதுபுறம் இருக்கும்.

63. சாமிக்கு படைக்கும்போது வாழை இலை போட்டு படைக்கிறோம். அப்படி வாழை இலை போடும் போது வாழை மரத்திலிருந்து நறுக்கப்பட்ட பகுதி சுவாமி படத்திற்கு வலது பக்கம் வரவேண்டும்.

64. மாலையில் வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு முன் தான தருமம் செய்வதென்றால் செய்து விடுங்கள். விளக்கு ஏற்றிய பின் தான தருமம் செய்யாதீர்கள்.

65. குழந்தைகளுக்கு ஆன்மிக வழிகாட்டும் ஸ்லோகங்களும், நமது நீதி நூல்களில் உள்ள நல்ல பழக்க வழக்கங்களும் கற்றுத் தர வேண்டும்.

66. பெண்கள் தலைமுடியை வாரி முடிந்து முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும். தலையை விரித்து போட்டு இருந்தால் லட்சுமி தேவி தங்க மாட்டாள்.

67. பூஜை செய்யும்போது கடவுள் உருவங்களின் பாதங்கள் மற்றும் முகத்தைப் பூக்களால் மறைத்து விடக்கூடாது. முகமும், பாதமும் திறந்து நிலையில் இருக்க வேண்டும்.

68. செல்வத்திற்குரிய தெய்வங்களான வெங்கடாஜலபதி, லட்சுமி, குபேரன் ஆகியோர் படங்களை வீட்டின் வெளிப்புறம் பார்த்து இருக்குமாறு மாட்டக்கூடாது.

69. பூஜை அறையிலோ, வீட்டிலோ தெய்வப் படங்களை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். வணங்குபவர் தெற்குப் பகுதியில் வடக்குத் திசையைப் பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம். தெற்கு நோக்கி தெய்வப் படங்களை வைக்கக் கூடாது. கிழக்குப் பக்கம் முடியாவிட்டால் தெற்குப் பக்கத்தைத் தவிர பிற திசைகளைப் பார்த்து படங்களை வைக்கவும்.

70. பூஜை செய்பவர் தெற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளைப் பார்த்து கொண்டு உட்கார்ந்து பூஜை செய்யக்கூடாது.

71. பூஜை அறையில் அதிக படங்களையும், தெய்வச் சிலைகளையும் வைக்கிறோம் என்பதற்காக அவற்றை நெருக்கமாக வைக்கக் கூடாது. ஒவ்வொரு தெய்வச் சிலைக்கும் இடையில் போதிய இடம் விட்டு வைக்க வேண்டும்.

72. நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.

73. அன்னம் முதலியவற்றை எவர்சில்வர் பாத்திரங்களில் நேரடியாக வைத்து தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது. பாத்திரத்தில் இலை வைத்து அதில் உணவை வைத்து நிவேதனம் செய்யலாம்.

74. திங்கட்கிழமையன்று பஞ்சால் செய்யப்பட்ட விளக்கு திரியை கையால் தொடக்கூடாது.

75. தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.

76. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.

77. சாமி படங்களில் உலர்ந்த பூக்களை விட்டு வைக்கக் கூடாது.

78. விஷ்ணுவை வணங்கி வீடு திரும்புபோது லட்சுமி தேவியும் நம்முடன் நம் வீட்டுக்கு வருகிறாள் என்பது ஐதீகம். ஆகவே விஷ்ணு கோவிலிலிருந்து வீடு திரும்புமுன் அங்கே உட்காரக் கூடாது.

79. ஸ்வஸ்திக், ஸ்ரீ சக்கரம், ஓம் மற்றும் திரிசூலம் சின்னங்களை வாசல் கதவிலோ அல்லது வாசலின் உள்ளே நேர் எதிரேயோ ஒட்டி வைப்பது பாதுகாப்பிற்கும், அதிர்ஷ்டத்திற்கும் உதவும். வெளியே செல்லும்போது சட்டைப் பையிலும் வைத்துக் கொள்ளலாம்.

80. வாசலுக்கு நேர் எதிரே வாசலைப் பார்த்து சிரிக்கும் புத்தரை வைப்பது வளமை, வெற்றி, தனலாபம் ஆகியவை அளிக்க வல்லது...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

நினைத்தது உடனே நிறைவேற, கோடி நன்மைகள் பெற காமதேனு வழிபாட்டை இப்படி செய்து பாருங்கள்.!!

கடன் வாங்காமல் வாழ்க்கையின் சக்கரமே ஓடாது என்ற நிலையில் தான் இன்று பலரும் ஓடிக் கொண்டிருக்கிறோம். இந்த ஓட்டம் எப்போது ஓயுமோ? என்ற பயமே! மனிதனின் ஆயுளை குறைத்து விடுகிறது என்பது அதிர்ச்சி தரும் சர்வே ரிப்போர்டாக இருக்கிறது. எதற்காக ஓடிக்கொண்டிருக்கிறோம்? ஏன் ஓடிக் கொண்டிருக்கிறோம்? என்று தெரியாமலே எதிர்கால நன்மைகள் என்று கூறிக்கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறோம். இப்படியே சென்று கொண்டிருந்தால், எப்போது தான் நம்முடைய வாழ்க்கையை வாழ்வோம்? என்பது கேள்விக்குறி தான். அதற்காக இந்த ஓட்டத்தை நிறுத்தவும் முடியாது என்பதே வேதனைக்குரிய ஒரு விஷயமாக இருக்கிறது.

உங்களின் எல்லா பிரச்சனைகளுக்கும் இந்த காமதேனு வழிபாடு சிறந்த தீர்வு தரும். காமதேனு வழிபாட்டையும், அதை எப்படி செய்ய வேண்டும் என்பதையும் இப்பதிவில் இனி காணலாம். காமதேனு படமோ அல்லது விக்ரஹமோ வங்கி வைத்து கொள்ளுங்கள். காமதேனு வழிபாடு, நினைத்ததை நினைத்தபடி நடத்திக் காட்டும் அற்புத வழிபாடு. காமதேனு வழிபட்டால் உங்களது வீடு சுபீட்சம் பெறும். மஹாலக்ஷ்மி கடாட்சம் நிறைந்து காணப்படும். பூஜை அறையில் சில விஷயங்களை வைத்து வழிபடுவதால் உங்களுடைய வேண்டுதல்கள் எளிதில் நிறைவேறக் கூடிய வரம் கிட்டும். அவ்வகையில் காமதேனு விக்ரஹம் வைத்து வழிபடுவதால் கேட்ட வரம் உடனே கிடைக்கும். எவ்வளவோ கஷ்டதிற்கு தீர்வு காண நாம் முறையிடும் ஒரே இடம் நம் பூஜை அறை தான். பூஜை அறையில் காமதேனு விக்ரஹம் இருப்பது நல்ல அதிர்வலைகளை உண்டு பண்ணும். விக்ரஹம் இல்லாதவர்கள் காமதேனு படத்தை வைத்து பூஜை செய்யலாம்.

காமதேனு விக்ரஹம் கன்றுடன் கூடியதாக கட்டாயம் இருக்க வேண்டும். விக்ரஹம் வைத்திருப்பவர்கள் தினமும் காமதேனுவை வழிபட்டு வந்தால், சகல சௌபாக்கியங்களும் பெறுவீர்கள். காமதேனு விக்ரஹம் வைத்திருப்பவர்கள் அந்த விக்ரஹத்திற்கு தினமும் பாலாபிஷேகம் செய்ய வேண்டும். இவ்வாறு தினமும் பாலாபிஷேகம் செய்து வருவதன் மூலம் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் படிப்படியாக முற்றிலுமாக நீங்கிவிடும். காமதேனு விக்ரஹத்தின் கொம்பு பகுதியில், நெற்றிப் பகுதியில், கால்களில், மடியில் என மஞ்சள், குங்குமம் இட வேண்டும். பசுவின் கன்றிற்கும் இது போல் மஞ்சள், குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும். காமதேனுவிற்கு மல்லிகைப்பூ சாற்ற வேண்டும். பின்னர் உங்களின் இரு கரங்களாலும் காமதேனுவை தொட்டபடி, உங்களுக்கு இருக்கும் குறைகளை, கோரிக்கைகளை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். அவ்வாறு வேண்டி கொண்டபின் அப்படியே கைகளை எடுக்காமல், கீழே உள்ள மந்திரத்தை 54 முறை உச்சரிக்க வேண்டும்.

காமதேனு மந்திரம்: ஓம் சுபகாயை வித்மஹே! காமதாத்திரியை, சதீமஹி தந்னோ தேனு ப்ரசோதயத். இந்த காமதேனு மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து, பாலாபிஷேகம் செய்து வந்தால் எல்லா செல்வங்களும், பணவரவும் பெற்று குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். கடன் தொல்லைகள் நீங்கும். பசுவை தெய்வமாக நினைத்து போற்றுபவர்களுக்கு எந்த விதமான கஷ்டங்களும் வாழ்வில் ஏற்படாது. பசுவிற்கு தானம் அளிப்பது ஏழேழு ஜென்மத்தில் செய்த பாவங்களையும் போக்கி விடும். கர்ம பலன்கள் குறைய தொடர்ந்து பசுவிற்கு அகத்திக்கீரை மற்றும் வாழைப்பழம் கொடுக்க வேண்டும். பசுவின் கோமியத்தை வீட்டை சுற்றி தெளித்து வர எந்த கெட்ட சக்தியும் உங்களது குடும்பத்தையே நெருங்கவிடாமல் செய்யும். நோய் தொற்று ஏற்படாமலும் பாதுகாக்கும்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

Wednesday, 24 June 2020

பூரி ஜெகன்னாதர் கோவிலின் நடக்கும் 8 அதிசயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.!!

1. கோவிலின் கொடி காற்றடிக்கும் திசைக்கு எதிர் திசையில் பறக்கும்.

2. கோவில் இருக்கும் பூரி என்ற ஊரின் எந்த இடத்தில், எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும் கோவிலின் உச்சியில் இருக்கும் சுதர்சன சக்கரம் நம்மை பார்ப்பது போலவே இருக்கும்.

3. பொதுவாக காலையிலிருந்து மாலை வரையான நேரங்களில் காற்று கடலில் இருந்து நிலத்தை நோக்கியும் மாலை முதல் இரவு முழுவதும் நிலத்திலிருந்து கடலை நோக்கியும் வீசும். ஆனால் பூரியில் இதற்கு நேர் எதிராக நடக்கும்.

4. இக்கோவிலின் முக்கிய கோபுரத்தின் நிழல் பகலில் எந்த நேரத்திலும் கண்களுக்கு தெரிவதில்லை.

5. இந்த கோவிலின் மேல் விமானங்களோ அல்லது பறவைகளோ மறப்பதில்லை.

6. இந்த கோவிலின் உள்ளே சமைக்கப்படும் உணவின் அளவு வருடத்தின் அனைத்து நாட்களிலும் ஒரே அளவாகவே இருக்கும். ஆனால் வருகின்ற பக்தர்கள் எண்ணிக்கை இரண்டு லட்சமானாலும் சரி இருபது லட்சமானாலும் சரி சமைக்கப்பட்ட உணவு பத்தாமல் போனதும் இல்லை. மீந்து போய் வீணானதும் இல்லை.

7. இந்த கோவிலின் சமையலறையில் ஒன்றன் மேல் ஒன்றாக ஏழு பாத்திரங்கள் அடுக்கப்பட்டு விறகு அடுப்பில் உணவு சமைப்பார்கள் அப்படி சமைக்கும்போது அடியில் உள்ள பானையில் உணவு வேகும் முன் மேலே உச்சியில் உள்ள முதல் பானையில் உணவு வெந்து விடும் அதிசயம் நடக்கிறது.

8. சிங்கத் துவாராவின் முதல் படியில் கோவிலின் உட்பறமாக காலெடுத்து வைத்து நுழையும் போது கடலில் இருந்து வரும் எந்த விதமான சப்தமும் நமக்கு கேட்காது.

ஆனால் … அதே சிங்கத்துவராவின் முதல் படியில் கோவிலின் வெளிப்புறமாக நுழையும் போது கடலில் இருந்து வரும் அனைத்து சப்தமும் நமக்கு கேட்கும். இதை மாலை நேரங்களில் தெளிவாக உணர முடியும்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

குலம் காக்கும் குலதெய்வ வழிபாடு; பெளர்ணமியில் வழிபட்டால் வம்சம் தழைக்கும்.!!

குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வமும் குலதெய்வம்தான்! குலதெய்வமே நமக்கு எளிதில்அருளைத் தந்தருளும். மேலும் மற்ற தெய்வவழிபாடுகளின் பலன்களும் வேண்டுமெனில், குலதெய்வ வழிபாடு முக்கியம்.

குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவேத் திகழும் என்பது ஐதீகம். ஆனால் அதன் சக்தியை அளவிடமுடியாது.சிறு தெய்வம் என்று அலட்சியப்படுத்தக்கூடாது.

எமன் கூட ஒருவரது குலதெய்வத்தின் அனுமதி பெற்றுதான் உயிரை எடுக்கமுடியும்.

குலதெய்வம் என்பது நம் முன்னோர்களில் தெய்வமாக மாறி விட்ட புண்ணிய ஆத்மாக்கள் என்கிறார்கள் முன்னோர்கள். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினைச் சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவர்கள். எனவேதான், அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன.

குலதெய்வங்கள், கர்மவினைகளை நீக்க வல்லவை. யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாகஇருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு என்கின்றன ஞானநூல்கள்.

மற்ற நாட்களில் குல தெய்வத்தை வழிபடுவதை விட, பெளர்ணமி தினத்தன்று விரதமிருந்து வழிபடுவதுதான் நூறு சதவீத பலனை பெற்றுத் தரும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை.

மேலும் வருடத்தின் முதல் நாளன்று அதாவது சித்திரைத் திருநாளின் முதல்நாளில், குலதெய்வத்திற்கு அபிஷேகம் செய்துவர குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும் என்பது உறுதி.

பொதுவாக ஒவ்வொரு மாத பெளர்ணமிக்கும் ஒரு சிறப்பு உண்டு. அந்த வகையில் பங்குனி பெளர்ணமி, குடும்ப ஒற்றுமையை வலுப்படுத்துகிற விசேஷமான நன்னாள்!

எனவே அன்று குலதெய்வத்தை தேடிச் சென்று வழிபட வேண்டியது மிகமிக அவசியம். மற்ற நாட்களில் குலதெய்வத்தை வழிபடுவதை விட பெளர்ணமி தினத்தன்று வழிபடுவதுதான் நூறு சதவீத பலனை பெற்றுத் தரும்.

அன்று குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தால், நம் குலம் சிறக்கும். குடும்பமும் மேன்மை பெறும். குலதெய்வங்கள் மனம் மகிழ்ந்து நம்மை ஆசீர்வதிப்பதால், பல்வேறு துன்பங்கள், துயரங்கள், இடையூறுகளில் இருந்து நம் குடும்பமும் வம்சமும் காக்கப்படும். குலதெய்வம் என்பது ஒவ்வொரு குடும்ப வகையறாவைப் பொருத்தது.

அண்ணன்,தம்பி குடும்பத்தினர் எல்லாரும் ஒற்றுமையாக நின்று படையல் போட்டு வழிபாடு செய்யும்போது குலதெய்வங்கள் மட்டுமின்றி மறைந்த மூதாதையர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றனர். இதனால் பித்ருக்களின் பரிபூரண ஆசி நமக்கு எளிதாக வந்து சேரும். கிராமங்களில் இருப்பவர்களுக்கு அவர்கள் அருகிலேயே குலதெய்வக் கோயில் இருக்கும்.

எனவே எளிதாக வழிபாடுகளை செய்து கொள்வார்கள். பலருக்கும் குலதெய்வம்… காடு, மலை, வயல்வெளி, சாலை வசதி இல்லாத இடம் என்றே இருக்கிறது. அதனால் எப்போதும் சென்றுவர முடியாது.

ஆனால் குலதெய்வ வழிபாடு என்பது முக்கியம். வருடத்துக்கு இரண்டு முறையாவது அவரவர்களுடைய குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வருவது நல்லது.

பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குலதெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான். அதாவது, பிறந்தவீட்டில் ஒரு தெய்வம் புகுந்த வீட்டில் ஒரு தெய்வம். திருமணத்திற்கு முன்பு பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவன் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்குகின்றனர்.

பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வருடத்திற்கு ஒரு முறை செய்யும்வழிபாடு அவர்களை ஆண்டு முழுவதும் காப்பாற்றும். புகுந்த வீட்டில் எந்தபிரச்சினையும் சமாளிக்ககூடிய ஆற்றலை தரும்.

இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால் பிறந்தவீட்டின் குலதெய்வத்திற்கு திரு விழாக் காலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்றவேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிகமிக முக்கியம்.

குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுக்கிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும்,ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் கிடைப்பது என்பது ஐம்பது சதவீதம்தான்.

எனவே உங்கள் குலதெய்வத்தின் கோயிலுக்கு அடிக்கடி செல்லுங்கள். அபிஷேகஆராதனைகள் செய்யுங்கள். அந்தக் கோயிலுக்கு முடிந்த அளவுக்கு உதவுங்கள். பூஜைகள் நடைபெற ஏற்பாடு செய்யுங்கள்.

கிராமங்களில் இருந்து வெளியேறி நகர்ப்பகுதிகளில் குடியேறியவர்களுக்கு குலதெய்வக் கோயிலுக்குச் செல்ல முடியாத சூழல் இருக்கலாம். அதற்காக, அவர்கள் கவலைப்படத் தேவையில்லை.

உங்கள் வீட்டிலேயே குலதெய்வப் படத்தை அலங்கரித்து, உங்கள் வீட்டுக்குப் பாரம்பரியமான முறையில், வழக்கமான வகையில் படையலை வைத்து மனம் உருக வழிபாடு செய்யுங்கள். நிச்சயமாக உங்கள் குலதெய்வத்தின் அருளாசி உங்கள் குடும்பத்துக்கு கிடைக்கும்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

Tuesday, 23 June 2020

மனசஞ்சலம் விலக அனுமன் ஸ்லோகம்.!!

அனுமனின் இத்துதியை மனமார பாராயணம் செய்து அனுமனுக்கு வெண்ணெய், வடைமாலை, வெற்றிலை மாலை சாத்தி வழிபட மனசஞ்சலம், பலவீனம் அகன்று மன அமைதி, ஆத்மஞானம் அனைத்தும் கிட்டும்.

“ஆஞ்சநேய மதி பாடலானனம்
காஞ்சநாத்ரி கமநீய விக்ரஹம்
பாரிஜாத தருமூலவாஸிநம்
பாவயாமி பவமான நந்தனம்”

மூலமந்திரம்:

ஓம் நமோ பகவதே
ஹனுமதே மம மதநக்ஷோபம்
ஸம்ஹர ஆத்மதத்வம் ப்ரகாஸய
ஹூம்பட் ஸ்வாஹா.

அனுமனின் இத்துதியை மனமார பாராயணம் செய்து அனுமனுக்கு வெண்ணெய், வடைமாலை, வெற்றிலை மாலை சாத்தி வழிபட மனசஞ்சலம், பலவீனம் அகன்று மன அமைதி, ஆத்மஞானம் அனைத்தும் கிட்டும்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

ஒளவையார் அருளிச்செய்த விநாயகர் அகவல்.!!

விநாயகரின் வடிவம் ஓம் எனும் குறியினை கொண்டுள்ளது. இது இந்து மதத்தின் ஆணி வேராகவும் திகழ்கின்றது. ஒளவையார் அருளிச்செய்த விநாயகர் அகவலை பார்க்கலாம்.

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலஇசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்

வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்

மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழ்ஒளி மார்பும்
சொற்பதங் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!

முப்பழம் நுகரும் மூஷிக வாகன
இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டி
தாயாய் எனக்குத் தானெழுந் தருளி
மாயப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதல்ஐந் தெழுத்தும் தெளிவாய்ப்

பொருந்தவே வந்தென் உளந்தனிற் புகுந்து
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறம்இது பொருள்என
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளி
கோடா யுதத்தாற் கொடுவினை களைந்தே

உவட்டா வுபதேசம் புகட்டிஎன் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து

இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
தலம்ஒரு நான்கும் தந்தெனக் கருளி
மலம்ஒரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அதைப்பதும் காட்டி

ஆறா தாரத்து அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழிமுனைக் கபாலமுங் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்

நான்றுஎழு பாம்பின் நாவில் உணர்த்திக்
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட வுரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்புங் கருத்தறி வித்து

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையுங் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டி
சண்முக தூலமும் சதுர்மிக சூக்கமும்

எண்முக மாக இனிதெனக் கருளிப்
புரியெட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரிஎட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினிற் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதெனக் கருளி

என்னை அறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டுக்கு ஒன்றிடம் என்ன

அருள்தரும் ஆனந்தத்து அழுத்திஎன் செவியில்
எல்லை யில்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தி னுள்ளே சதாசிவங் காட்டிச்
சித்தத்தி னுள்ளே சிவலிங்கம் காட்டி

அணுவிற்க்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை

நெஞ்சக் கருத்தின் நிலை அறிவித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴