Thursday, 30 April 2020

கருநாகம் தீண்டி உயிர்விட வேண்டியவன் துளசி இலையால் உயிர் தப்பிய புராண கதையை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டாமா?

சில சமயங்களில் நாம் செய்த புண்ணியங்கள் நமக்கே தெரியாமல் நமக்கு நல்லதை செய்துவிட்டு சென்று விடும். இறைவனுக்கு தேவை அவரிடம் ஆழ்ந்த பக்தி ஒன்று மட்டுமே அன்றி வேறு எதுவுமே இல்லை. இதை உணர்ந்தவர்கள் சிலர். உணராமல் தவிப்பவர்கள் பலர். துளசி இலையால் உயிர் வரம் பெற்ற ஏழை விவசாயி ஒருவரின் கதையை படித்தால் நீங்களே வியந்து போவீர்கள். இறைவன் மீது உங்களுக்கே அன்பு அதிகரித்துவிடும். வாருங்கள் கதைக்குள் போகலாம்.

ஒரு கிராமத்தில் தினமும் வயலுக்கு சென்று கீரைகளை கிள்ளிக்கொண்டு அதை சந்தையில் விற்று பிழைப்பு நடத்தும் ஏழைக் குடியானவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அதிலிருந்து வரும் வருமானத்தில் தான் அவன் தன் பிழைப்பை ஓட்டிக் கொண்டிருந்தான். தன் வயலுக்கு கீரை பறிக்க போகும் பொழுது, அவ்வழியே முனிவர் ஒருவர் துளசி இலைகளால் மகா விஷ்ணுவிற்கு அர்ச்சனை செய்து பூஜை செய்து கொண்டிருப்பார். அதை வேடிக்கை பார்த்துக் கொண்டே செல்வது அவனுக்கு வழக்கமாக இருந்து வந்தது.

ஒரு முறை இதேபோல் அந்த முனிவர் மகாவிஷ்ணுவிற்கு பூஜை செய்வதை பார்த்துக் கொண்டே தன் வயலுக்குச் நடந்து சென்று கொண்டிருந்தான். வயலை அடைந்ததும், கீரை பறித்து கொண்டிருக்கும் போது இடையே துளசி இலைகளை கண்டான். அப்போது அவனுக்கு அந்த முனிவரின் நினைவு வரவே, அவன் எண்ணத்தில் இந்த யோசனை உதயமாகியது. நாமும் முனிவரை போல் மனித பிறப்பு தானே? ஆனால் இதுவரை கடவுளுக்கு நாம் எந்த பூஜையும் செய்தது இல்லையே என்று வருந்தினான். நம்மால் அந்த முனிவரை போல் விஷ்ணு விக்ரஹம் வைத்து வழிபட முடியாவிட்டாலும், நம்மால் முடிந்த துளசி இலைகளை பறித்து அந்த முனிவரின் பூஜைக்கு உதவி செய்வோமே!! என்று எண்ணினான்.

தன் வயலில் இருக்கும் துளசி செடியிலிருந்து துளசி இலைகளை பறித்து தான் பறித்த கீரை கட்டுகளுடன் சேர்த்து, கூடையை தலையில் சுமந்தவாறு நடக்க ஆரம்பித்தான். அவ்வழியே முனிவரின் குடிலை நோக்கி நடக்கலானான். தன் தலை மேல் இருக்கும் கீரை கூடையில் கருநாகம் ஒன்று இருப்பதை அவன் அப்போது அறியவில்லை. முனிவரின் குடிலை அடைந்ததும் அந்தக் கீரைகாரன் மகாமுனிவரை அணுகினான். முனிவர் இவனை கண்டவுடன் சற்று அதிர்ந்து போய் நின்றார். இந்த வியப்பிற்கு காரணம், கீரைக்காரனுக்கு பின்னால் நிழல் போன்று அருவமாக ஒரு உருவம் அவருக்கு தென்பட்டது தான். அதன்பின் அவருடைய ஞான திருஷ்டியில் அதைப்பற்றி அறிய நினைத்தார். அப்போது அவருக்குப் புலப்பட்டது, அவ்வுருவம் நிழல் உருவமான ராகுவின் உருவம் என்பது தெரியவந்தது. கீரை கூடையில் இருந்த கருநாகம் வேறு யாருமில்லை நிழல் கிரகமான நாகத்தின் அம்சமாக விளங்கும் ராகு பகவான் தான்.

உடனே அந்த மகாமுனி அந்தக் கீரைக்காரரிடம், ஐயா! உங்கள் தலை மேல் இருக்கும் கீரை கூடையை இறக்கி வைத்து விடாதீர்கள். இதோ 5 நிமிடத்தில் வந்து விடுகிறேன் என்று அவசரமாக தன் குடிலுக்குள் சென்றார். குடிலுக்குள் சென்ற முனிவர் சில மந்திர உச்சாடனம் செய்து அந்த ஏழை கீரைக்காரருக்கு பின்னால் இருக்கும் ராகுவை தன் சக்தியால் அழைத்தார். ராகு பகவானும் அம்முனிவரை நோக்கி அருள்புரிந்து என்னை அழைத்ததன் காரணம் என்னவோ? என்று வினவினார். அதற்கு முனிவர், ராகுபகவானே எதற்காக இந்த ஏழை விவசாயியை பின்தொடர்ந்து வருகிறீர்கள் என்று கேட்டார்.

ராகு பகவானும் அதற்கு விடை அளித்தார். முனிவரே!! விதிப்படி அந்த விவசாயியை நான் இன்று தீண்டி, அவன் ஆயுளை முடிக்க வேண்டும். ஆனால் எப்போதும் இல்லாமல் இன்று இந்த கீரைக்காரர் துளசி இலைகளுடன் பயணிக்கிறார். இதனால் என்னால் அவரை தீண்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினார். மேலும், உங்களிடம் தன் தலையில் சுமந்து இருக்கும் துளசி இலைகளை கொடுத்த மறுகணமே அவனைத் தீண்டி உயிரை பறித்துவிட்டு பின்னர் நான் இங்கிருந்து சென்று விடுவேன் என்று கூறினார்.

முனிவருக்கு அந்த ஏழை விவசாயியின் மேல் கருணை ஏற்பட்டது. தான் செய்யும் பூஜைக்காக மிகுந்த ஆசை கொண்டு துளசி இலைகளை பறித்து வந்த அவனை எப்படியாவது காக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. எனவே ராகு பகவனிடன், ராகுவே இதற்கு பரிகாரம் ஏதேனும் உள்ளதா? என்று கேட்டார்.

ராகு பகவானும் முனிவரிடம், முனிவரே!! இத்தனை காலம் நீங்கள் செய்து வந்த பூஜையின் பலன்களை எல்லாம் அவனுக்கு கொடுத்துவிட்டால், அவனுக்கு இருக்கும் கால சர்ப்பதோஷம் விலகிவிடும். நானும் அவனை தீண்டாமல் சென்று விடுவேன் என்று கூறினார். என்னால் இந்த ஏழையின் உயிரை காப்பாற்ற முடியும் என்றால், நான் கட்டாயம் இதை செய்ய தயாராக இருக்கிறேன். என் பூஜை பலன்கள் முழுவதையும் அவனுக்கு தந்துவிடுகிறேன் என்றார். முனிவரின் பரந்த மனப்பான்மையை எண்ணி வியந்து ராகுபகவான் அங்கிருந்து மறைந்து சென்றார். கீரை கூடையில் இருந்த கருநாகமும் அக்கணம் காணாமல் போனது.

நிகழ்ந்ததை ஏதுமறியாத அந்த ஏழை விவசாயி வெளியில் காத்துக் கொண்டிருந்தார். அவரை அணுகிய முனிவர், ஐயா! நீங்கள் இதுபோல் இனி தினமும் பூஜைக்காக துளசி இலைகளை பறித்துக் கொண்டுவந்து கொடுப்பீர்களா? என்று கேட்டார். அந்த ஏழை விவசாயி தன்னால் பூஜை செய்ய முடியாவிட்டாலும் முனிவர் அளித்த இந்த வரத்தை எண்ணி பெரும் மகிழ்ச்சி அடைந்தான். பின்னர் அதை மகிழ்வுடன் ஏற்று, தன் இல்லம் நோக்கி நடந்து சென்றான்.

பார்த்தீர்களா? இறைவன் நம்மிடம் எதுவும் கேட்பதில்லை. நம்மால் முடிந்தவற்றை வைத்து முழு நம்பிக்கையுடன், பக்தியுடன் இறைவன் பால் அன்பு கொண்டு பூஜை செய்து வந்தாலே போதும். நமக்கு வரும் துன்பங்கள் அனைத்தும் நீங்கி நிம்மதியான வாழ்க்கை அமையும். அன்பே இறைவன். அன்பே சிவம். அன்பே சகலமும் இதை உணர்ந்தவர்கள் எப்போதும் துன்பக்கடலில் மூழ்கி வருந்த தேவை இல்லை...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

கேட்கும் வரத்தை கொடுக்கும் 5 அரச இலைகள்.!!

இன்றைய சூழ்நிலையில், எல்லோருடைய வீட்டிலேயும் பொருளாதார பிரச்சனை இருந்துதான் வருகிறது. ஊரடங்கு உத்தரவும் இதற்கு ஒரு காரணம். வீட்டில் இருக்கும் பொருளாதார பிரச்சனைக்கு எந்த வகையிலாவது ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்று அந்த ஆண்டவனை வேண்டிக் கொண்டு, குறிப்பாக விநாயகப் பெருமானை வேண்டிக் கொண்டு இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் ஒரு நல்ல பலனை நம்மால் பெற முடியும்.

தொழில் பிரச்சனையாக இருந்தாலும் சரி, பண பிரச்சினையாக இருந்தாலும் சரி, ஆரோக்கிய பிரச்சனையாக இருந்தாலும் சரி, விநாயகரை மனதார வேண்டிக்கொண்டு இந்த அரச இலைகளுடன் என்ன பொருளைச் சேர்த்து, பரிகாரத்தை செய்வதன் மூலம் நம்மால் விரைவாக நல்ல பலனை பெற முடியும் என்பதைப் பற்றியும், பரிகாரத்தை வீட்டிலிருந்தே எப்படி செய்யலாம் என்பதைப் பற்றியும் இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

இதற்கு முக்கியமாக தேவைப்படும் பொருள். ஐந்து அரச இலைகள், இதை மட்டும் எப்படியாவது மரத்திலிருந்து பறித்து வந்து வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த அரச இலைகளுக்கு விநாயகரின் உருவம் இருக்கிறது. உற்று நோக்கிப் பாருங்கள் உங்களுக்கே தெரியும். அரச மரத்தடி பிள்ளையாருக்கு எவ்வளவு சக்தி இருக்கிறதோ அதே அளவுக்கு சக்தி, இந்த அரச இலைகளுக்கு உண்டு என்பதில் சந்தேகமில்லை.

வெள்ளிக்கிழமை அன்று விநாயகர் உருவத்தை பெற்றிருக்கும் இந்த அரச இலைகளை, மஞ்சள் தண்ணீரில் கழுவி லேசாக உளர்த்தி விட்டு, ஐந்து அரச இலைகளையும் ஒன்றன் கீழ் ஒன்றாக வைத்து அடுக்கிக் கொண்டு, அதன் மேல் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து, ஒரு கிழங்கு மஞ்சளையும் வைத்து, நூலால் கட்டிக்கொள்ள வேண்டும். அதன் பின்பு உங்கள் வீட்டில் இருக்கும் பித்தளை சொம்பு இருந்தாலும் சரி, செப்பு சொம்பாக இருந்தாலும் சரி, மண்பானையாக இருந்தாலும் சரி, இதில் ஏதாவது ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பச்சை அரிசியை நிரப்பி, அதன் மேல் நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் அரசியலை முடிச்சை வைத்து விடுங்கள்.

உங்கள் பூஜை அறையில் வெள்ளிக்கிழமை அன்று நீங்கள் தயார் செய்து வைத்துள்ள சொம்பை வைத்து, விநாயகப் பெருமானை மனதார நினைத்து உங்களுக்கு தெரிந்த விநாயகப்பெருமானின் மந்திரத்தை உச்சரித்து, வீட்டில் இருக்கும் பிரச்சினைகள் அனைத்தும் தீர வேண்டும் என்று மனதார வேண்டிக்கொள்ளுங்கள். அடுத்த வெள்ளிக்கிழமை அன்று இந்த பொருட்களை எல்லாம் புதியதாக மாற்றிக் கொள்ளுங்கள். அதில் இருக்கும் ஒரு ரூபாய் நாணயத்தை மட்டும் தனியாக எடுத்து வைத்துவிட்டு, உங்களால் எப்போது முடிகிறதோ அப்போது விநாயகர் கோவில் உண்டியலில் கொண்டு போய் சேர்த்துவிட வேண்டும்.

பச்சரிசியை சமையலுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். மஞ்சளை முகத்தில் பூசி தேய்த்து குளித்து கொள்ளலாம். இந்த பரிகாரத்தை தொடர்ந்து 21 வாரங்கள் செய்யும்பட்சத்தில் உங்கள் வீட்டில் இருக்கும் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைப்பதை கண்கூடாக பார்க்க முடியும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. நம்பிக்கையுள்ளவர்கள் செய்து பார்க்கலாம்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

மஹாலக்ஷ்மியின் வாகனம் ஆந்தையா? முட்டை கண் ஆந்தையாரை வழிபட்டால் நடக்கும் அதிசயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.!!

பார்ப்பதற்கே அச்சுறுத்தலாக இருக்கும் ஆந்தையை பல்வேறு கோணங்களில் மக்கள் பார்க்கின்றனர். முந்தைய காலங்களில் ஆந்தையை மரணத்தின் அறிகுறியாக பார்த்து வந்தனர். ஆந்தையின் அலறல் சத்தம் கேட்டாலே அந்த ஊரில் யவரேனும் இறக்க நேரிடும் என்று அவர்கள் கருதினர். இதனால் சிலர் ஆந்தையை வெறுத்தனர். ஆந்தையை கண்டால் கல்லை கொண்டு எரிந்து விரட்டி அடித்தனர். ஆந்தை சொந்தமாக கூடு கட்டுவதைவிட மற்ற பறவைகளின் ஆதரவற்ற கூட்டை அதிகம் விரும்புகின்றன. தேவி மஹாலக்ஷ்மியின் வாகனமாக இருப்பது ஆந்தை தான். வட இந்திய மக்கள் ஆந்தையை வாகனமாக கொண்ட லக்ஷ்மியை அதிகளவு வழிபாடு செய்கின்றனர். இதை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இப்பதிவில் காணலாம்.

விவசாயிகளின் உற்ற நண்பனாக ஆந்தை கருதப்படுகிறது. வயல்களை சேதபடுத்தும் எலிகளை சாப்பிட்டு விவசாயத்திற்கு பெரிதும் உதவி செய்கின்ற ஆந்தையை அபசகுணமாக கருதவும் செய்கின்றனர். லட்சுமி மகாவிஷ்ணுவிற்கு வாகனமாக கருடன் உள்ளது போல் லக்ஷ்மிக்கென்று பிரத்யேகமாக ஆந்தை வாகனமாக இருக்கின்றது. இது பலரும் அறியாமல் இருக்கலாம். வட இந்திய மக்கள் தங்களின் வீட்டு கூரையில் ஆந்தை கூடு கட்டி அலறல் சத்தம் கொடுத்து கொண்டே இருந்தால் சுப சகுணமாக கருதுகின்றனர்.

சுபகாரியம் நடத்தவிருக்கும் வீட்டில் ஆந்தை சத்தம் கேட்டால் லக்ஷ்மியின் சம்மதம் கிடைத்து விட்டதாகவே அவர்கள் எண்ணுகின்றனர். வெளியில் கிளம்பும் போது ஆந்தையை காண நேர்ந்தால் உறுதியாக போகும் காரியம் அமோக வெற்றி தான் என்கின்றனர். தென்னிந்திய மக்களோ இதை அபசகுணமாக கூறுகின்றனர். வடக்கே ஆந்தை அலறினால் சுபமாகவும், மற்ற திசைகளில் ஆந்தை குரல் கேட்டால் அபசகுனம் என்றும் ஆருடம் பார்க்கின்றனர்.

ஆந்தையின் பார்வை திறன் அதிகம் என்பதால் அதனால் வெகு தொலைவில் இருக்கும் இரையை கூட தெள்ள தெளிவாக பார்க்க முடியும். ஆனால் அதன் முட்டை வடிவ கண்கள் பெரிதாக இருப்பதால் மற்ற திசைகளை பார்க்க அதன் மொத்த தலையையும் 270 டிகிரி கோணம் வரை திருப்பி பார்க்கும் ஆற்றல் பெற்றிருக்கிறது. பகல் முழுவதும் தூங்கி இரவில் வேட்டையாடும் ஆந்தை வலுவான நகங்களால் வேட்டையாடி வாழ்கிறது. இதற்கு மூன்று இமைகள் உள்ளன. இமைக்க, தூங்க, கண்களை சுத்தம் செய்ய என்று தனித்தனியே 3 இமைகள் கொண்டுள்ளது. அதன் இறக்கை மென்மையானதாக இருப்பதால் இரையை நெருங்கும் வரை இரையால் அதனை உணர முடிவதில்லை.

இரவில் ஆந்தை அலறினால் சுப பலன்கள் கிட்டும் என்று நிச்சயமாக நம்புகின்றனர். எந்த வீட்டின் அருகே அமர்ந்து ஆந்தை அலறுகிறதோ அந்த வீட்டில் பொருளாதார நிலை உயருமாம். செல்வா வளமும் பெருகுமாம். கோவில் மரங்களில் இது போல் ஆந்தை அலறினால் அங்கிருக்கும் மக்களுக்கு நல்லது நடக்குமாம். ஆந்தை சத்தம் போடாமல் அமைதியாக இருந்தால் வேதனை படுவார்கள். ஆந்தை அலறும் எண்ணிக்கைக்கு ஏற்ப பலன்களும் கூறுகின்றனர். நவ கிரங்கங்களின் அடிப்படையில் ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்ணிக்கையில் ஆந்தை அலறும் பலன்கள் கூறப்படுகின்றன.

இத்தகைய பெருமை வாய்ந்த ஆந்தையாரை கிரக்கர்கள், ஐரோப்பிய மக்கள் அறிவின் கடவுளாக கருதுகின்றனர். ஆந்தை புத்திக் கூர்மையுள்ள பறவை என்றும் குறிப்பிடுகின்றனர். இரவின் அரசன், விவசாய நண்பன், லக்ஷ்மியின் வாகனம், செல்வம் தரும் பறவை என்று மக்களுக்கு நல்லதை செய்கின்ற ஆந்தையை அதன் விசித்திர முகம் காரணமாக வெறுப்பது சரியா? நீங்களே கூறுங்கள்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

கேட்கும் வரத்தை கொடுக்கும் 5 அரச இலைகள்.!!

இன்றைய சூழ்நிலையில், எல்லோருடைய வீட்டிலேயும் பொருளாதார பிரச்சனை இருந்துதான் வருகிறது. ஊரடங்கு உத்தரவும் இதற்கு ஒரு காரணம். வீட்டில் இருக்கும் பொருளாதார பிரச்சனைக்கு எந்த வகையிலாவது ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்று அந்த ஆண்டவனை வேண்டிக் கொண்டு, குறிப்பாக விநாயகப் பெருமானை வேண்டிக் கொண்டு இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் ஒரு நல்ல பலனை நம்மால் பெற முடியும்.

தொழில் பிரச்சனையாக இருந்தாலும் சரி, பண பிரச்சினையாக இருந்தாலும் சரி, ஆரோக்கிய பிரச்சனையாக இருந்தாலும் சரி, விநாயகரை மனதார வேண்டிக்கொண்டு இந்த அரச இலைகளுடன் என்ன பொருளைச் சேர்த்து, பரிகாரத்தை செய்வதன் மூலம் நம்மால் விரைவாக நல்ல பலனை பெற முடியும் என்பதைப் பற்றியும், பரிகாரத்தை வீட்டிலிருந்தே எப்படி செய்யலாம் என்பதைப் பற்றியும் இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

இதற்கு முக்கியமாக தேவைப்படும் பொருள். ஐந்து அரச இலைகள், இதை மட்டும் எப்படியாவது மரத்திலிருந்து பறித்து வந்து வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த அரச இலைகளுக்கு விநாயகரின் உருவம் இருக்கிறது. உற்று நோக்கிப் பாருங்கள் உங்களுக்கே தெரியும். அரச மரத்தடி பிள்ளையாருக்கு எவ்வளவு சக்தி இருக்கிறதோ அதே அளவுக்கு சக்தி, இந்த அரச இலைகளுக்கு உண்டு என்பதில் சந்தேகமில்லை.

வெள்ளிக்கிழமை அன்று விநாயகர் உருவத்தை பெற்றிருக்கும் இந்த அரச இலைகளை, மஞ்சள் தண்ணீரில் கழுவி லேசாக உளர்த்தி விட்டு, ஐந்து அரச இலைகளையும் ஒன்றன் கீழ் ஒன்றாக வைத்து அடுக்கிக் கொண்டு, அதன் மேல் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து, ஒரு கிழங்கு மஞ்சளையும் வைத்து, நூலால் கட்டிக்கொள்ள வேண்டும். அதன் பின்பு உங்கள் வீட்டில் இருக்கும் பித்தளை சொம்பு இருந்தாலும் சரி, செப்பு சொம்பாக இருந்தாலும் சரி, மண்பானையாக இருந்தாலும் சரி, இதில் ஏதாவது ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பச்சை அரிசியை நிரப்பி, அதன் மேல் நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் அரசியலை முடிச்சை வைத்து விடுங்கள்.

உங்கள் பூஜை அறையில் வெள்ளிக்கிழமை அன்று நீங்கள் தயார் செய்து வைத்துள்ள சொம்பை வைத்து, விநாயகப் பெருமானை மனதார நினைத்து உங்களுக்கு தெரிந்த விநாயகப்பெருமானின் மந்திரத்தை உச்சரித்து, வீட்டில் இருக்கும் பிரச்சினைகள் அனைத்தும் தீர வேண்டும் என்று மனதார வேண்டிக்கொள்ளுங்கள். அடுத்த வெள்ளிக்கிழமை அன்று இந்த பொருட்களை எல்லாம் புதியதாக மாற்றிக் கொள்ளுங்கள். அதில் இருக்கும் ஒரு ரூபாய் நாணயத்தை மட்டும் தனியாக எடுத்து வைத்துவிட்டு, உங்களால் எப்போது முடிகிறதோ அப்போது விநாயகர் கோவில் உண்டியலில் கொண்டு போய் சேர்த்துவிட வேண்டும்.

பச்சரிசியை சமையலுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். மஞ்சளை முகத்தில் பூசி தேய்த்து குளித்து கொள்ளலாம். இந்த பரிகாரத்தை தொடர்ந்து 21 வாரங்கள் செய்யும்பட்சத்தில் உங்கள் வீட்டில் இருக்கும் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைப்பதை கண்கூடாக பார்க்க முடியும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. நம்பிக்கையுள்ளவர்கள் செய்து பார்க்கலாம்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

சங்கு தீர்த்த மந்திரம் சொன்னால் போதும், எந்த கடனும் நீங்கி செல்வம் பெருகும் என்பது நிச்சயம்.!!

சங்கு வகைகளில் சில வகை சங்குகள் தெய்வீக தன்மை கொண்டது. அதில் வலம்புரி சங்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக இருந்து வருகிறது. இறைவனின் ஆசி பெற பிறந்த குழந்தைகளுக்கு வலம்புரி சங்கில் பால் புகட்டும் நடைமுறை சம்பிரதாயம் நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்துள்ளனர். இத்தகைய சக்தி வாய்ந்த வலம்புரி சங்கு சிறிய அளவில் உங்களிடம் இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த மந்திரத்தை உச்சரித்து பரிகாரம் செய்தால் எந்தவிதமான கடனும் நீங்கி விடும். உங்களது உழைப்பு வீணாவது தடுக்கப்படும். செல்வம் சேரும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்று இப்பதிவில் காணலாம்.

உங்களிடம் இருக்கும் சிறிய அளவில் உள்ள வலம்புரி சங்கை சுத்தமான நீர் கொண்டு நிரப்பி கொள்ளுங்கள். அதில் இரண்டு துளசி இலைகளை பறித்து போட்டுக் கொள்ளுங்கள். ஸ்ரீமன் நாராயணன் துளசியில் இருந்தும், வலம்புரி சங்கில் மகாலட்சுமியும் அமர்ந்தும் அருள் புரிவார்கள். இந்த சங்கை உங்களது இடது கையில் வைத்துக் கொண்டு வலது கையால் மூடிக் கொள்ளவும். பின்னர் கண்களை மூடிக் கொண்டு இந்த மந்திரத்தை 108 முறை அல்லது 1008 முறை உச்சரிக்க வேண்டும்.

மந்திரம்: ஓம் சுதர்சனாய நமஹ| ஓம் மஹாவிஷ்ணவே நமஹ|

முழு மனமும் தியான நிலையில் இந்த மந்திரத்தை உச்சரித்த பின்னர் சங்கில் இருக்கும் நீர் புனிதமாகிறது. இந்த புனித தீர்த்தத்தை அப்படியே வலது கையில் சிறிது ஊற்றி தலையில் தெளித்து கொள்ளுங்கள். மீண்டும் சிறிது இதே போல் ஊற்றி தீர்த்தமாக அருந்த வேண்டும்.

இந்த சங்கு தீர்த்த பரிகாரத்தை தினமும் செய்யலாம். பிரம்ம முகூர்த்தத்தில் செய்தால் சிறப்பான பலன் பெறலாம். இயலாதோர் 7:30 மணிக்குள்ளாக செய்துவிடுவது நல்லது. தினமும் செய்ய முடியாவிட்டாலும், சனிக்கிழமை அல்லது வெள்ளிக் கிழமைகளிலும் தொடர்ந்து செய்து வரலாம்.

இந்த மந்திரம் உச்சரிக்கும் பொழுது உங்கள் மனம் ஒருநிலைப்படும். எண்ண அலைகளில் நேர்மறை ஆற்றல் பெருகும். புத்திக் கூர்மை அடையும். சங்கு தீர்த்தம் அருந்துவதால் தெய்வீக சக்தி பெறுவீர்கள். ஆன்மீக பலம் அதிகரிக்கும். ஆன்ம பலம் கூடும். சிந்தை மாசு நீங்கி நல்லொழுக்கம் உண்டாகும். வீட்டில் நிம்மதி நிலைக்கும். கடன் பிரச்சனைகள் நீங்கி செல்வ வளம் பெருக செய்யும் அற்புத சக்திகள் நிறைந்த பரிகார முறை. முழு நம்பிக்கையுடன் செய்து பலன் பெறுங்கள்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

வீட்டுவாசலில் துணி காய போடும் பழக்கம் உங்களிடம் உள்ளதா? அப்படினா இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க.!!

வளர்ந்து வரும் நவீன காலகட்டத்தில், அடுக்குமாடி குடியிருப்புகள், வீட்டை சுற்றி இடம் இல்லாத சூழ்நிலை, மொட்டை மாடிக்கு செல்ல முடியாத சூழ்நிலை, இப்படி இருக்கும் பட்சத்தில் வீட்டில் இருக்கும் பெண்கள் துணிகளை எந்த இடத்தில்தான் உலர்த்துவது. வீட்டு வாசலிலோ அல்லது பால்கனியிலோ உலர்த்தலாம? வீட்டு வாசலில் உலர்த்தக் கூடிய சூழ்நிலை இருந்தால், அந்த வீட்டுப் பெண்கள் என்ன விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்? இப்படிப்பட்ட கேள்விகளுக்கான பதிலைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பொதுவாகவே விளக்கு வைத்த பின்பு, அதாவது மாலை 6 மணிக்கு மேல் வீட்டில் உள்ள அழுக்குத் துணிகளை துவைக்க கூடாது என்பது சாஸ்திரம். காலையிலேயே அழுக்குத் துணிகளை துவைக்கும் பழக்கத்தை பெண்கள் வைத்துக் கொள்வது நல்லது. அந்த காலத்தில், நம் முன்னோர்கள் துணிகளை வீட்டு வாசலில் எல்லாம் காய வைக்க மாட்டார்கள். காரணம் அவர்களுக்கு எந்த ஒரு இடம் பற்றாக்குறையும் இல்லை. புழக்கடை என்று சொல்லப்படும் பின் பக்கத்திலோ அல்லது காலி இடங்களிலோ துணிகளை உலத்திக் கொள்ளும் வசதி அவர்களுக்கு இருந்தது.

இந்த கால கட்டத்தில் இடப் பற்றாக்குறை காரணமாகவும், மொட்டை மாடிக்குச் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளவர்கள் வீட்டு வாசலிலோ அல்லது பால்கனியில் துணியை காய வைக்க வேண்டிய கட்டாயம் இருந்து வருகிறது. வேறு வழி இல்லாதவர்கள் வீட்டு வாசலில் துணிகளை காய வைத்துக் கொள்ளலாம். ஆனால், அந்தத் துணியை மாலை 4 மணி அளவிலேயே வீட்டு வாசலில் இருந்து எடுத்து மடித்து வைத்து விடுங்கள். விலக்கு வைத்த சமயத்தில் ஈரத் துணியோ, காய்ந்த துணியோ வீட்டு வாசலின் முன்பாக தொங்கிக் கொண்டு இருக்கக் கூடாது. அது நம் வீட்டிற்குள் வரக்கூடிய லக்ஷ்மியை தடுத்துவிடும் என்று சொல்லப்பட்டுள்ளது. மொட்டை மாடியில் காய வைத்திருக்கும் துணியாக இருந்தாலும் கூட 6 மணிக்கு முன்பாகவே அதை வீட்டிற்குள் எடுத்து வரவேண்டும்.

அடுத்ததாக ஒரு முக்கியமான விஷயம் உள்ளது. நீங்கள் வாஷிங் மிஷினில் துணி துவைத்து, டிரையரில் போட்டு காய வைப்பவர்களாக இருந்தால் பிரச்சனை இல்லை. சில துணிகளை கைகளில் துவைக்கும் கட்டாயம் இருக்கும் பட்சத்தில், அந்தத் துணிகளில் உள்ள ஈரத்தை உதரக்கூடாது. அந்தத் தண்ணீர் அடுத்தவர்கள் மீது படுவது தவறு என்று சொல்கிறது சாஸ்திரம்.

அதாவது துணியை உதறும் போது தண்ணீர் தெளிக்கும் அல்லவா? மற்றவர்கள் உதறிய துணியின் தண்ணீர் நம் மீது படக்கூடாது. நாம் உதறிய துணியின் தண்ணீர், மற்றவர்கள் மீதும் படக் கூடாது. என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். துணிகளின் சொந்தக்காரர்களுக்கு இருக்கும் தோஷம், அந்தத் தண்ணீரின் மூலம் அடுத்தவர்களை தாக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் உங்கள் வீட்டு வாசலில் நீங்கள் செடிகளை வளர்த்து வரலாம். கட்டாயம் அந்த செடிகளின் மீது நீங்கள் காயவைக்கும் துணியின் தண்ணீர் சொட்ட கூடாது. உதறும்போது தெளிக்கவும் கூடாது. குறிப்பாக துளசிச் செடி, கற்பூரவள்ளி, தொட்டாசினுங்கி, எல்லா செடிகளுக்குமே பொருந்தும் என்று வைத்துக் கொள்ளுங்களேன். துணியை காய வைப்பதில் கூட இத்தனை சட்டங்களால் என்று கேட்பவர்களுக்கு பதில் இல்லை. ஆனால் இந்த சின்ன சின்ன விஷயங்கள் கூட நம் வீட்டிற்கு தரித்திரத்தை கொண்டுவரும் என்பதற்காகத்தான் இந்த பதிவு. நம்பிக்கை உள்ளவர்கள் இந்த தவறுகளை திருத்திக் கொள்ளலாம்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

இன்று 30.4.2020 சித்திரை அஷ்டமி! மனக் கஷ்டம் தீர இந்த மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்யுங்கள்.!!

சித்திரை மாதத்தில் வரும் ஒவ்வொரு நாளுமே விசேஷமான நாட்கள்தான் இந்த வரிசையில் இன்று சித்திரை அஷ்டமி. இந்த தினத்தில் எந்த இறைவனை நினைத்து, எந்த மந்திரத்தை உச்சரித்தால், வாழ்வு வளம் பெறும் என்பதை பற்றியும், அந்த மந்திரத்தை குறிப்பாக எந்த நேரத்தில் மட்டுமே உச்சரிக்க வேண்டும் என்ற ஒரு ரகசிய சூட்சுமத்தையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

காலை உங்களது இறைவழிபாடு எப்பவும் போல் முடிந்து இருந்தாலும், பரவாயில்லை. இந்த மந்திரத்தை காலை உச்சரிக்க வேண்டாம். மாலை நேரம் 6 மணியிலிருந்து 7 மணிக்குள் ஒரு நெய் தீபத்தை உங்கள் வீட்டு பூஜை அறையில் ஏற்றி வைத்துவிட்டு, கிருஷ்ண பகவானுக்கு உங்கள் வீட்டில் இருக்கும் பொருளை நைவேத்தியமாக படைத்து, அதன் பின்பு கிழக்குப்பக்கம் அமர்ந்தவாறு, 108 முறை இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

ஓம் மதுசூதனா போற்றி போற்றி!

இந்த மந்திரத்தை குறிப்பிட்ட இந்த சித்திரை அஷ்டமியில் உச்சரிக்கும்போது கிருஷ்ண பகவானின் ஆசீர்வாதத்தை நம்மால் முழுமையாகப் பெற முடியும். திருமணத்தடை, கடன் பிரச்சனை, குழந்தை இல்லாதவர்கள் அனைவரும் இந்த மந்திரத்தை  மாலைநேரம் உச்சரித்து கிருஷ்ண பகவானை மனதார வழிபட்டு வந்தால், மிகவும் சிறப்பானது. உங்கள் வீட்டில் துளசி செடி இருந்தால் இரண்டு துளசி இலைகளை கிருஷ்ணருக்கு சூட்டி இந்த பூஜையை நிறைவு செய்வது மேலும் சிறப்பு சேர்க்கும்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

Wednesday, 29 April 2020

உங்கள் வீட்டில் குலதெய்வம் வாசம் செய்யவில்லையா? குலதெய்வம் வீட்டிற்குள் வந்துவிட்டது என்பதை நீங்களே தெரிந்துக் கொள்ளலாம். இந்த பரிகாரத்தை செய்தால்.!!

ஒரு சில பேரது வீட்டில் குலதெய்வ குறை இருக்கும். அதாவது குலதெய்வத்தின் ஆசிர்வாதம் கிடைக்காமல் போனால், வீட்டில் சுப காரிய தடை உண்டாகும். குழந்தைபேறு தள்ளிப் போகும். நோய் நொடிகள் வந்து கொண்டே இருக்கும். தேவையில்லாத பல சண்டை சச்சரவுகள் வரும். குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது. குறிப்பாக ரத்தசம்பந்தப்பட்ட உறவுகளுக்கு இடையே, கைகலப்பு வரை போகும் அளவிற்கு கூட பிரச்சனைகள் வரலாம்.

இப்படிப்பட்ட பிரச்சனைகள் தொடர்ந்து ஒரு வீட்டில் இருக்கிறது என்றால், அந்த வீடு நிம்மதி இழந்து, களையிழந்து, ஒரு தீபம் ஏற்றி வைத்தால் கூட அந்த தீபம் பிரகாசமாக ஒளிர்ந்து, உங்கள் குடும்ப தலைவரின் ஜாதக கட்டத்தில் குலதெய்வத்தின் கோபமும் சாபமும் உள்ளது என்பதையும், உங்கள் வீட்டில் குலதெய்வம் வாசம் செய்யவில்லை என்றும், உங்கள் குடும்ப ஜோசியர் சொல்லி இருக்கலாம். எப்படியோ ஒரு வழியில் குலதெய்வத்தின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கப் பெறவில்லை என்பது தெரிந்திருந்தால், இந்த பரிகாரத்தின் மூலம் ஒன்பது வாரங்களில் குலதெய்வத்தின் ஆசீர்வாதத்தை உங்களால் பெற்றுவிட முடியும். அது என்ன பரிகாரம் என்பதை பற்றி இந்தப் பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

முதலில் 9 மட்டை தேங்காய்களை வாங்கி உங்கள் வீட்டில் வைத்துக் கொள்ளவும். உறிக்காத தேங்காயை தான் மட்டைத் தேங்காய் என்று சொல்வார்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் இந்த பரிகாரத்தை செய்யப் போகின்றோம். வழக்கமாக உங்கள் வீட்டில் செய்யும் வெள்ளிக்கிழமை பூஜையை முடித்துவிட்டு, காலை நேரம் என்றால், ஒன்பது மணி அளவில், நீங்கள் வாங்கிய வைத்திருக்கும் தேங்காயில் இருந்து ஒரு மட்டைத் தேங்காயை, பூஜை அறையில் வைத்து, இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.

ஓம் என் குலதெய்வம் வர வர
ஓம் வம் வம் உம் உம்
என் படி ஏறி வா வா
என் குல தெய்வமே!

வெள்ளிக்கிழமை பூஜை என்றால் கட்டாயம் உங்கள் வீட்டில் தீபம் ஏற்றி வைத்து இருந்தீர்கள். அந்த தீபத்தின் முன்பாகவே இந்த மந்திரத்தை உச்சரிப்பதால், தவறில்லை. காலை வேளையில் இதை செய்ய முடியாதவர்கள் மாலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் செய்யலாம். ஆனால் முதல் வாரம் காலையில் தொடங்கினால் தொடர்ந்து ஒன்பது வாரம் காலை நேரத்தில் மட்டும் தான் செய்ய வேண்டும். அதேபோல் மாலை நேரத்தில் தொடங்கினால், தொடர்ந்து ஒன்பது வாரங்கள் மாலை நேரத்தில் செய்ய வேண்டும் என்பது அவசியம்.

ஒவ்வொரு வாரம் முடியும்போது, அந்த மட்டை தேங்காயை எடுத்து ஒரு பையில் போட்டு பூஜை அறையிலேயே பத்திரமாக எடுத்து வைத்துவிடுங்கள். பிளாஸ்டிக் பையில் போட்டு தேங்காயை எடுத்து வைக்க வேண்டாம். தேங்காயின் மீது காற்று படும்படி எடுத்து வைக்க வேண்டும். 9 வாரமும் இதேபோல் பூஜை செய்து, மந்திரம் சொல்லி தேங்காய்கள் சேகரிக்கப்பட வேண்டும். 9 வார முடிவில் அந்த தேங்காய்களை உறிந்து, தேங்காய்க்கு மஞ்சள் பூசி, 3 குங்குமப் பொட்டு வைத்து, உங்கள் குலதெய்வத்தை நினைத்து வேண்டிக்கொண்டு, குலதெய்வம் வீட்டிற்கு வர வேண்டும் என்று விநாயகர் கோவிலுக்கு சென்று அந்த ஒன்பது தேங்காயையும் சூறை விட்டுவிடுங்கள்.

இப்போது ஒன்பது வாரம் பரிகாரம் முடிந்துவிட்டது. வீடு ஒரு பிரகாசமாக இருப்பதை உங்களால் உணர முடியும். நீங்கள் ஏற்றிவைக்கும் தீபத்தில் ஒரு ஒளிச்சுடர் மின்னுவதை உங்களால் உணர முடியும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. வீட்டில் இருள் நீங்கியது போல ஒரு சூழல் உண்டாகும். உங்கள் வீட்டில் நீங்கள் சுவாசிக்கும் அந்தக் காற்றில் கூட ஒரு வித்தியாசம் உங்களுக்கு தெரியும்.

குல தெய்வத்தை வேண்டிக்கொண்டு நீங்கள் உச்சரித்த மந்திரம், நிச்சயம் உங்களுடைய குலதெய்வத்தை உங்கள் வீட்டிற்குள் கொண்டு வந்து சேர்க்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நம்பிக்கை உள்ளவர்கள் இதை செய்து பார்க்கலாம். மட்டை தேங்காய் வாங்குவதை கடையில் பார்த்து வாங்கி கொள்ளவும் தேங்காய் கெட்டுப் போகக் கூடாது...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

அய்யனார் வரலாறு.!!

பூலோகத்தில் தாருகா வனம் என்னும் பகுதியில் தவ முனிவர்கள், தங்கள் பத்தினியருடன் வாழ்ந்து வந்தனர். இந்த முனிவர்களுக்கு தங்கள் தவத்தின் வலிமையே உயர்ந்தது, அபார சக்தி கொண்டது என்ற கர்வம் இருந்தது. அவர்களின் பத்தினிகளோ, கற்பு நெறியில் தங்களுக்கு இணை எவரும் இல்லை என்று இறுமாப்புடன் இருந்தார்கள். நாம் செய்யும் கர்மமே அதற்குண்டான பலனை தானே கொடுக்கும். அதற்கு இறைவன் என்ற ஒரு சக்தி தேவையில்லை என்று எண்ணிய அவர்கள் பரமனையோ, பரந்தாமனையோ வணங்க மறுத்து பெரும் ஆணவம் கொண்டு வாழ்ந்திருந்தார்கள். ஆணவத்தின் மிகுதியால் அறிவிழந்த முனிவர்களுக்கு நல்லறிவு புகட்ட, மகாதேவனும், மகாவிஷ்ணுவும் முடிவு செய்தனர். 

சுடலையின் மைந்தன்
சு.இளம்கலைமாறன்
ஆணழகனாக, வாலிப பருவம் கொண்டு, காண்பவரை கவர்ந்து இழுக்கும் அழகனாக, பிட்சாடனர் திருக்கோலத்தை சிவனார் கொண்டார். பொன்னிற மேனியாக, பேரழகுடன் மோஹினி அவதாரம் எடுத்தார் திருமால். இருவரும் தாருகாவனம் வந்தனர். தாருகாவனத்தில் மரங்கள் சூழ்ந்திருக்கும் சோலையில் அமைதியான சூழலில் புல்வெளிகள் மெத்தை விரிப்பாய் இருக்க, தெளிந்த பன்னீராய் ஓடும் நீரோடையின் அந்த மெல்லிய சப்தம் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது. இடையிடையே பட்சிகளின் ஓசைகளும் அவ்வப்போது எழும்பியது. அத்தகைய அழகும், அமைதியும் நிறைந்த வனத்தில் இருந்த தவ முனிவர்களின் யாக சாலைக்குச் சென்றாள் மோஹினி. அவளது கால் கொலுசு ஓசைகேட்டு திரும்பிய முனிவர்கள் வியப்புற்றனர்.

பெண்ணினத்தின் பேரழகி இங்கே நடை பயில்கிறாளே என்றெண்ணி சகலத்தையும் மறந்தார்கள். யாகத்தை விட்டெழுந்தார்கள். மோஹினி, யாக சாலையினுள் நடைபயிலும் போதும், அதை விட்டு வெளியே வந்து அங்கிருந்த மலர்வனத்தில் உலா வரும் போதும் அவளை வியப்போடு பார்த்த வண்ணம், அழகினை ரசித்தபடி அந்த மோஹினியை முனிவர்கள் பின் தொடர்ந்தனர். இங்கே இப்படி இருக்க, முனிவர்களின் வசிப்பிடம் அமைந்த பகுதிக்கு கட்டிளம் காளையாக, கரம் தனில் வீணையை ஏந்தியபடி, தேவகானம் இசைத்தபடி, முனிவர்களின் இல்ல வாசலில் நின்று பிச்சை கேட்டார் உலகத்திற்கே படியளக்கும் எம்பெருமானான சிவபெருமான் பிட்சாடனார் ரூபத்தில்! முனிவரின் பத்தினி வெளியே வந்து பார்த்தார்.

என்ன அழகு, இப்படி ஒரு இளைஞனை இதுவரை யான் கண்டிலேன், என வியந்தார். அடுத்தடுத்த இல்லங்களில் இருந்த ரிஷி பத்தினிகளிடம் எடுத்து இயம்பினாள். அவர்களும் அந்த ஆச்சரியத்தை காண விரைந்து வந்தனர். அவரவர் இல்ல வாயிலில் நின்ற ரிஷி பத்தினிகள் ஒன்றாக கூடி பிட்சாடனரின் தேவகானத்தை ரசித்து கேட்டபடி, அவரைப் பின் தொடர்ந்தனர். மன்மதனுக்கே தலைவனவன் அழகை கண்டு மயங்கி, ரிஷி மனைவிகள் தங்கள் மேலாடை நழுவி விழுவதுகூடத் தெரியாமல் வருவதை, எதிரே மோஹினியின் அழகில் மோகப்பித்து பிடித்து பின் தொடர்ந்து வந்த முனிவர்கள் கண்டு மனம் வெதும்பினர். அந்த காட்சியை கண்டதும், கோபம் பொங்கிட இயல்பு நிலைக்கு வந்தனர்.

ரிஷிகளாகிய நமது தவத்தை அழித்து, தமது மனைவிமார்களின் கற்பு கெடும் விதத்தில், அவர்களை மயக்கியது இந்த பிச்சைக்காரன்தான். இவன் சதி வேலையின் காரணமாகத்தான் இந்த பெண்ணும் நம்மை மயக்க வந்திருக்கிறாள் என்று எண்ணிய அவர்கள் பிட்சாடனரை நோக்கி, “யேய் பிச்சைக்காரனே, உனக்கு என்ன தைரியம் இருந்தால், ரிஷிகள் நிறைந்திருக்கும் இந்த வனத்திற்குள் வந்து எங்கள் பத்தினிகளை தேவகானம் இசைத்து மயக்கியிருப்பாய், எங்கள் கற்பு நெறி வாழ்வில் மாசு ஏற்பட காரணமாய் இருந்திருப்பாய்! உன்னை சும்மா  விடப்போவதில்லை’’ என்று சினம் கொண்டு பிட்சாடனருக்கு எதிராக வேள்வி ஒன்றை நடத்தினர். அதன் மூலம் பல ஆயுதங்களை உருவாக்கி பிட்சாடனர் மீது ஏவினர்.

அந்த ஆயதங்களை தடுத்து தகர்த்தெறிந்தார் பிட்சாடனார். அடுத்து புலியை ஏவினர் ரிஷிகள். அதை மடக்கி, அடக்கி, ஆயுளை முடக்கி அதன் தோலை தனது ஆடையாக அணிந்து கொண்டார் சிவன். தொடர்ந்து முனிவர்களால் அனுப்பப்பட்ட மழுவையும், மானையும் தனக்கு ஆயுதங்களாக தன் கைகளில் ஏந்திக்கொண்டார். பின்னர் கொடும் பாம்புகளை ஏவினர் ரிஷிகள். நஞ்சைக் உமிழ்ந்தபடி வந்த பாம்புகளை தன் உடலில் ஆபரணமாக்கி அணிந்து கொண்டார் நாகாபரணனார் சிவபெருமான். கடைசியாக முனிவர்களால் அனுப்பப்பட்ட அக்னியையும், டமருகத்தையும் தனது கைகளில் வாங்கிக்கொண்டார் பிட்சாடனார். தங்கள் முயற்சிகள் யாவும் பலனற்றுப் போனதைக் கண்ட முனிவர்கள் தலை குனிந்து நின்றார்கள்.

மேலும் அவர்களை சோதிக்க வேண்டாம் என்று எண்ணிய ஈசன் தனது விஸ்வரூபத்தை காட்டியருளினார். சிவனாரின் தரிசனம் கண்டு, சிந்தை தெளிந்த ரிஷிகள் தங்கள் அறியாது நிகழ்த்திய தவறினை மன்னிக்கும்படி மன்றாடி வேண்டினார்கள். ‘‘கயிலையில் உறையும் கங்காளனே! ஆதி அந்தம் இல்லாத அருட்பெரும் ஜோதியே! தங்களை யாரென்று அறியாமல் தவறிழைத்து விட்டோம். எங்களை மன்னித்து தாங்கள் அருள வேண்டும்.’’ என்று இறைஞ்சினார்கள். ஈஸ்வரன் பேசலானார்: “ரிஷிகளே! நீங்கள் கடவுளை விட கர்மா தான் பெரிது என்று எண்ண முற்பட்டதனால், கர்மாவை விட, எல்லாவற்றையும் விட கடவுள் எனும் ஆத்மா, சக்தி மிகப்பெரியது என்ற உண்மையை உணர்த்தவே நாம் இந்த நாடகமாடினோம்.

நீங்கள் அறியாது செய்த தவறினை மன்னித்தோம். இனி வேத நெறி வழுவாமல் எம்மை ஆராதித்து நற்கதியடையுங்கள்,’’ என்று  வரமளித்து அவ்விடம் விட்டு ஈஸ்வரன் அகன்றார்.
சுடலையின் மைந்தன்
சு.இளம்கலைமாறன்
தாருகா வனம் விட்டு வெளியேறிய பின் மோஹினியாக இருந்த மகாவிஷ்ணு, சிவனாரை நோக்கி, “சுவாமி, கற்பு நெறியில் கர்வம் கொண்ட முனி பத்தினிகளைக் கூட மயக்கி விடும்படி அமைந்த அந்த பிட்சாடனர் கோலத்தை நான் மீண்டும் காண விரும்பு கிறேன். எனவே அக்கோலத்தை காட்டியருள வேண்டும் என்று வேண்டினாள். சிவனாரும் அந்த அழகு தேக வடிவான பிட்சாடனர் கோலம் கொண்டார். ஈசனின் கோலம் கண்டு, அந்த அழகில் மயங்கிய மோஹினி, “அழகேசனே! உங்களின் பேரழகு என்னை மயக்குகிறது.

நான் உங்களின் ஆதிபரமேஸ்வரியான அந்த சக்தியின் ஒரு வடிவம் தானே, நீங்கள் ஹரன், நான் உங்களுக்கு இணையான ஹரி,’’ என்று கூறி தாவி அணைத்தாள். இரு சக்திகளும் சங்கமம் ஆகின. பெண் வடிவில் இருந்த அய்யனும், அரனாரும் இணைந்திருக்க அய்யனார் அவதரித்தார்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து தீபம் ஏற்றும் போது, இந்த தவறை மட்டும் கட்டாயம் செய்து விடாதீர்கள்! பண கஷ்டம் வந்து விடும்.!!

ஆன்மீக ரீதியாக இன்று சொல்லப்படும் முக்கியமான விஷயங்களில், பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து தீபமேற்ற வேண்டும் என்ற ஒரு வழிபாட்டு முறையும் முக்கியமாக இருந்து வருகிறது. அந்த சமயம் கட்டாயம் வீட்டில் இருக்கும் பெண்கள் இந்த ஒரு தவறை செய்யவேக் கூடாது. அது என்ன தவறு! என்பதைப் பற்றியும், பிரம்ம முகூர்த்த நேரத்தில் என்ன செய்தால் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும் என்பதைப் பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

சில பேர் வீடுகளில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் தீபமேற்றும் பழக்கம் இருந்தால், விளக்கு ஏற்றுவதற்கு முன்பு, அவர்கள் வீட்டை கூட்டி சுத்தம் செய்வது கூடாது. அதாவது தேவர்களும், தேவதைகளும், மகாலட்சுமியும், உலா வரக் கூடிய சமயம் அது. அந்த சமயத்தில் வீட்டைக் கூட்டி கழிவுகளை வெளியே போடும் பழக்கம் உங்களிடம் இருந்தால், தயவு செய்து அதை விட்டு விடுங்கள்.

வீட்டை கூட்டாமல் தீபம் ஏற்றலாமா? என்ற கேள்வி எல்லோருக்கும் வரும். முடிந்தவரை முந்தைய நாளே உங்களது வீட்டை சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள். பிரம்ம முகூர்த்த காலை வேளையில் வீட்டு வாசலை மட்டும் கூட்டி கோலமிடுவது தான் சரியான முறை. தவிற எக்காரணத்தைக் கொண்டும் வீட்டை கூட்டி குப்பைகளை வெளியே கொட்டுவது மிக மிகத் தவறு. குறிப்பாக காலை 4.00 மணியிலிருந்து 5.30 மணி வரை வீட்டை கூட்டக் கூடாது. இந்த நேரத்தில் கட்டாயம் வாசல் தெளித்து கோலம் போடலாம்.

சிலபேருக்கு வீட்டை கூட்டி சுத்தம் செய்யாமல் தீபமேற்ற பிடிக்காது. இப்படிப்பட்டவர்கள் பூஜை அறையில் மட்டும் ஒரு துணியால் துடைத்து சுத்தம் செய்துவிட்டு தீபம் ஏற்றிக் கொள்ளலாம். தனியாக பூஜை அறை இல்லாதவர்கள், பூஜை அலமாரிக்கு கீழ் பகுதியை மட்டும் ஈரத்துணியால் துடைத்து விட்டு தீபமேற்றுவது உத்தமம்.

அடுத்ததாக பிரம்மமுகூர்த்தத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய ஒரு வேலை உள்ளது. வாசல் தெளித்து கோலம் போடும், அந்த சமயம் உங்கள் வீட்டு அருகில் ஏதாவது ஒரு நாய் வந்தாலோ அல்லது பூனை வந்தாலோ அதற்கு உங்களால் முடிந்த பிஸ்கட்டை அல்லது ஏதாவது தின்பண்டங்களை உணவாக வைக்கலாம். உங்களது வீட்டு பக்கத்தில் மாட்டுக்கொட்டகை இருந்தால் இன்னும் சிறப்பு. அங்கு இருக்கும் மாடுகளுக்கு உங்களால் முடிந்தது ஒரு வாழைப்பழத்தையாவது பிரம்ம முகூர்த்த நேரத்தில் கொடுப்பது சிறப்பு.

சில பேர் வீடுகளில், விடியற்காலை சமயத்திலேயே, மொட்டை மாடியிலோ வெளிப்பகுதியிலோ அல்லது வீட்டின் அருகில் இருக்கும் மரத்திலோ காக்காய், குருவிகள், பறவைகள் எல்லாம் எழுந்திருக்கும் சத்தம் கேட்கும். அவைகளுக்கு உணவு தானியங்களை போடலாம். சூரிய உதயத்திற்கு முன்பு வாயில்லா ஜீவனுக்கு கொடுக்கப்படும் உணவு, நம்முடைய செல்வ வளத்தை அதிகரிப்பதாக சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தினந்தோறும் கட்டாயம் செய்ய வேண்டுமா? என்ற சந்தேகம் வேண்டாம். உங்களால் எப்போதெல்லாம் முடியுமோ அப்போது இந்த புண்ணிய செயலை செய்து வாருங்கள்.

பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து இறைவழிபாடு செய்வதே பெரும் புண்ணியமான காரியம் தான். அதிலும் குறிப்பாக மேற்குறிப்பிட்ட ஒரு தவறை கட்டாயம் செய்யாதீர்கள். மேற்குறிப்பிட்ட ஒரு நல்ல காரியத்தை செய்வதன்மூலம் உங்களின் புண்ணிய பட்டியலில், மேலும் புண்ணியம் சேரும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

வேப்பமரம் வீட்டில் வளர்த்தால் என்ன நடக்கும் தெரியுமா? வேப்பமரத்தை வேரோடு வெட்டும் முன் இதை செய்வது நல்லது.!!

வேப்ப மரத்தை தெய்வீக மரமாகவே இந்திய மக்கள் போற்றி வழிபடுகின்றனர். மருத்துவ குணங்களை தன்னுள் அதிகமாக தக்க வைத்து கொண்டிருக்கும் வேப்ப மரம் தனித்துவம் மிக்க ஒரு மரமாக தான் இருக்கிறது. வேப்பம் நல்ல கிருமி நாசினியாகவும் செயல்படுகின்றது. முருங்கை, வாழை, தென்னை என்று அனைத்து மரங்களும் மருத்துவ குணம் கொண்டைவை தான். ஆனால் அதில் இருந்து வேப்பம் சற்றே வேறுபட்டவை. ஏனெனில் வேப்ப மரத்தில் இருக்கும் பட்டை, பூ, காய், பழம், இலை, கொளுந்து, வேர் என்று ஒவ்வொரு பகுதிக்குள்ளுமே மருத்துவ குணங்கள் ஏராளம் அடங்கி இருக்கிறது. அத்தகைய வேப்ப மரத்தை வீட்டில் வளர்க்கலாமா? வளர்த்தால் நல்லதா? கெட்டதா? என்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

வேப்ப மரத்தை நமது முன்னோர்கள் வீட்டின் முன் வாசல் பகுதியிலும், முருங்கை மரத்தை வீட்டின் பின்னால் இருக்கும் இடங்களிலும் வளர்த்து வந்தனர். இதற்கு காரணங்கள் உண்டு. வீட்டை நோக்கி காற்று மூலமாக வரும் கிருமிகளும், தீய ஆற்றல்களும் உள்ளே நுழைவதை தடுக்கும் சக்தி வேப்ப மரத்திற்கு உண்டு. இதனால் தான் வீட்டு முன் வாசலில் வேப்ப மரத்தை நட்டு வளர்த்து வந்தனர்.

வேப்ப மரத்தில் இருந்து வெளிவரும் காற்றை நாம் சுவாசிக்கும் போது நம் உடல் புத்துணர்ச்சி பெறுகிறது. நுரையீரல் சுத்தம் அடைகிறது. காலையில் எழுந்து வேப்ப மரத்தின் பசுமையை கண் குளிர பார்க்கும் வழக்கத்தை ஏற்படுத்தி கொண்டால் கண்களுக்கு சிறந்த பயிற்சியாக இருக்கும். கண் பிரச்சனைகள் குறையும்.

வேப்ப மரத்தை வீட்டில் கட்டாயம் வளர்க்க வேண்டும். இன்றைய சூழலில் வேப்ப மரம் வளர்க்க தயங்குவதன் காரணம் ஒன்றே ஒன்று தான். வேப்ப மரத்தின் வேர் படர்ந்து சென்று வீட்டின் சுவற்றை பாதிக்கும். இந்த பாதிப்பில் இருந்து தப்பிக்க நிறைய இடம் தேவைப்படும். இப்போது இருக்கும் இடப் பற்றாக்குறையால் இது சாத்தியம் இல்லை. எனினும் வேப்ப மரத்தின் பயனை அனைவரும் பெறுவது கட்டாயமாக இருக்க வேண்டும்.

உங்கள் வீட்டில் வளர்க்க முடியாவிட்டாலும் உங்கள் பகுதியை சுற்றி இருக்கும் பூங்கா, விளையாட்டு திடல் போன்ற பொது இடங்களில் வளர்த்து பராமரித்து நீங்களும், உங்களால் பலரும் பயன் பெறலாம். மாலை வேளையில் வேப்ப மரத்தின் அடியில் அமர்ந்து காற்று வாங்குவதால் எண்ணற்ற நன்மைகள் உடலுக்கும் மனதிற்கும் கிடைக்கும். தீவிர மன அழுத்தத்தில் இருப்பவர்கள் தினமும் மாலை வேளையில் இது போன்று வேப்ப மர நிழலில் அமர்ந்து சுவாசம் செய்வது நல்ல பலன் தரும். மன இறுக்கம் தளர்ந்து மன அமைதி உண்டாக்கும்.

தெய்வ சக்தியும், மருத்துவ சக்தியும் கொண்ட வேப்ப மரத்தை வீட்டில் வளர்ப்பது மிகவும் அவசியமான ஒன்று. ஆனால் இந்த மரத்தை வீட்டில் வைத்திருப்பவர்கள் ஏதோ காரணத்திற்காக வெட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் உடனே வெட்டி விடாதீர்கள். உங்கள் குல தெய்வத்தை வேண்டிக் கொண்டு வெட்ட வேண்டிய வேப்ப மரத்திற்கு பொங்கல் படையல் இட்டு முறையாக வழிபட்டு அதன் பின்னால் வெட்டுவது நல்லது. இதனால் தெய்வகுற்றத்தில் இருந்து பாதுகாக்கப்படுவீர்கள். வேப்ப மரத்தை வேரோடு வெட்டுவது என்பது சாதாரண விஷயம் இல்லை. உடல் நிலை பாதிப்புகள், உடலில் கட்டிகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். குல தெய்வ வழிபாடு செய்துவிட்டு முற்றிலும் அகற்றுவதால் இந்த பாதிப்புகள் நீங்கும்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

தினம்தோறும் குருவிற்கு நன்றி தெரிவிக்க, குருவின் ஆசீர்வாதத்தை பெற, சொல்ல வேண்டிய மந்திரம்.!!

ஒருவர் குருவை சந்திக்கச் செல்வதாக இருந்தாலும், அல்லது மடாதிபதி, ஆச்சாரியார் ஆன்மீக குரு இப்படி குரு ஸ்தானத்தில் இருப்பவர்களை சந்திக்கச் செல்வதாக இருந்தால், கட்டாயம் அவர்களுக்கு உண்டான மரியாதையை செலுத்த வேண்டும் என்பது அவசியமான ஒன்று. இப்படிப்பட்ட குருமார்களை சந்திக்கும் போது நமக்கு பெரிய பெரிய பலன்கள் ஏற்படும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அந்த பலன்கள் என்ன என்பதைப் பற்றியும், தினம் தோறும் நாம் வீட்டில் இருந்தே நம்முடைய குருவுக்கு நன்றி தெரிவிக்க என்ன மந்திரத்தை உச்சரிக்கலாம்? என்பதை பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஒருவருக்கு குரு காட்டிய வித்தை என்பது வெற்றிகரமான வித்தையாகத்தான் இருக்கும். ‘குரு இல்லா வித்தை குருட்டு வித்தை’ என்ற ஒரு கூற்றும் உள்ளது. அதாவது, அந்த வித்தைக்கு எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதுதான் இதற்கு அர்த்தம். இப்படிப்பட்ட குருமார்களை நீங்கள் சந்திக்க செல்லும்போது, குறிப்பாக வியாழக்கிழமை அன்று சந்திப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதிலும் புனர்பூசம், விசாகம், பூராட்டாதி இந்த குறிப்பிட்ட நட்சத்திரங்களில் செல்வதும் மிக அற்புதமான பலனை தேடித்தரும்.

குருமார்களை சந்திக்கும்போது ஒரு தாம்பாளத்தில் வெற்றிலை பாக்கு பழம் இவைகளை கொண்டு செல்வது அவசியம். அவர்களைப் பார்த்தவுடன் ஆண்களாக இருந்தால், சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்துகொள்ளவேண்டும். பெண்களாக இருந்தால் நமஸ்காரம் செய்வது ஆசீர்வாதத்தை பெற்றுக் மிகவும் நல்லது. பொதுவாக எந்த பெரியவர்களை பார்த்தாலும் ஆசிர்வாதம் பெற்றுக் கொள்வது மிகவும் நல்ல ஒரு விஷயம்தான்.

ஜாதகத்தில் இருக்கும் குரு தோஷத்தை கூட, குருவின் ஆசீர்வாதத்தால் போக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட பல மகத்துவங்களைக் கொண்ட உங்களுடைய, குருவிற்கு நீங்கள் தினந்தோறும் நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தால், இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிக்கலாம். உங்களுக்கான குரு மந்திரம் இதோ..

ஓம் நமோ வந்தே குரு பரம்பராம்!

தினம்தோறும் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, நெய்தீபம் ஏற்றி வைத்து உங்களுடைய குருவை மனதார நினைத்து, இந்த மந்திரத்தை உச்சரித்து, குருவிற்கு நன்றி தெரிவித்து, அந்த நாள் பொழுதை தொடங்கிப் பாருங்கள்! குருவின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைத்து, அந்த நாள் முழுவதும் சிறப்பாக செல்வதை உணர முடியும்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

Tuesday, 28 April 2020

உங்கள் வீட்டில் மணிபிளான்ட் செடி இருக்கா? இன்று புதன்கிழமை இதை மட்டும் செஞ்சுதான் பாருங்களேன்.!!

வீட்டில் மணி பிளாண்ட் செடியை வைத்திருப்பவர்கள் எல்லாம் இந்த பதிவின் தலைப்பை பார்த்து சிந்திக்க தொடங்கி இருப்பீர்கள்! மணிபிளான்ட் செடியை புதன்கிழமை அன்று என்ன செய்ய வேண்டும்? என்ற சந்தேகம் எல்லோருடைய மனதிலும் எழுந்திருக்கும். சின்ன தந்திர வழிதான் இது. இதை நம்பிக்கையோடு செய்து பாருங்கள் நிச்சயம் பலன் கிடைக்கும். 

உங்கள் வீட்டில் மணி பிளாண்ட் வைத்திருக்கும் செடி தொட்டியானது எந்த நிறத்தில் இருக்க வேண்டும்? புதன் கிழமை அன்று அந்த செடியை எந்த திசையில் கொண்டு வைக்க வேண்டும்? அதன்பின்பு அந்த செடியின் வேரை எடுத்து என்ன செய்வது? என்பதைப் பற்றிய விரிவான தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொண்டு, அதன்படி செய்து பாருங்கள் நிச்சயம் அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. 

உங்கள் வீட்டில் இருக்கும் மணிபிளான்ட் செடியின் தொட்டி கட்டாயம் பச்சை நிற வண்ணத்தில் இருக்க வேண்டும். வேறு வண்ணத்தில் இருக்கக் கூடாதா என்ற சந்தேகம் வேண்டாம். பச்சை நிற வண்ணத்தில் இருந்தால் அதற்கு சக்தி அதிகம். உங்கள் வீட்டு மணிபிளான்ட் செடி தொட்டியை முதலில் பச்சை நிற வண்ணத்திற்கு மாற்றங்கள். அதன் பின்பு இந்த புதன்கிழமை அன்று, அந்தத் தொட்டியை உங்கள் வீட்டின் வடக்கு திசையில் வைக்க வேண்டும். உங்க வீட்ல வடக்கு பக்கம் எதுவோ அந்த இடத்தில் கொண்டுபோய் இந்த மணிபிளான்ட் செடி தொட்டியை வைத்து விடுங்கள். 

செடியைப் வைத்த இந்த புதன் கிழமையை விட்டுவிட்டு, அடுத்த புதன் கிழமை அன்று அந்த மணிபிளான்ட் செடியின் வேர் பகுதியில் இருந்து, சிறு துண்டை கத்தி படாமல், விரல்களால் கிள்ளி எடுக்க வேண்டும். வேரை எடுப்பதற்கு முன்பு, செடியிடம் மானதார மன்னிப்பு கேட்டுக் கொள்ளுங்கள். என்னுடைய நலனுக்காகத்தான் இந்த வேர் எடுக்கப்படுகிறது என்றவாறு சொல்லுவது நல்லது. 

செடிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு மண்ணைத் தோண்டி, செடியிலிருந்து வேரை எடுத்துக்கொண்டு, அந்த வேரை சிறிது மஞ்சள் தண்ணீர் ஊற்றி கழுவி, ஒரு சிகப்பு துணியில் கட்டி புதன்கிழமை அன்று நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்துக் கொள்ளலாம். பணம் ரீதியாக உங்களுக்கு இருக்கும் பல சிக்கல்களுக்கான தீர்வினை இந்த வேர் கொடுக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. நம்பிக்கையுள்ளவர்கள் நம்பிக்கையோடு தான் செய்து பாருங்களேன்! 

இந்தப் பரிகாரத்தை புதிய மணிபிளான்ட் செடியை வாங்கி வைத்து தான் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் வெளியில் சென்று செடி வாங்க முடியாது என்ற காரணத்தினால், உங்கள் வீட்டில் இருக்கும் பழைய மணிபிளான்ட் செடியை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நிலைமை சரியான பின்பு ஒருமுறை, புதிய மணி பிளான்ட் செடியை வாங்கி வைத்து அந்த பழைய வேரை புதுப்பித்துக் கொள்ளலாம்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

பைரவ வாகனமான நாயை வைத்து சகுன சாஸ்திரம் மனிதர்களுக்கு கூறுவது என்ன? ஸ்வாரஸ்யமான ஆருட பலன்கள்.!!

பொதுவாக பூனையை சகுன சாஸ்திரத்தில் அபசகுணமாக கூறப்படுகிறது. ஒரு நல்ல காரியத்திற்காக வெளியே செல்லும் போது பூனை குறுக்கே வந்துவிட்டால் போகிற செயலில் தடை ஏற்படும் என்று காலம் காலமாக நம்பப்பட்டு வந்துள்ளது. அதே போல் பைரவரின் வாகனமாக விளங்கக் கூடிய நாய், சகுன சாஸ்திரம் படி, சுபசகுணமாக கூறப்படுகிறது. இவ்வகையில் நாய், மனிதர்களுக்கு எந்த மாதிரியான ஆருடத்தை பலனாக கூறும் என்ற ஸ்வாரஸ்ய தகவல்களை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களது ஜாதகப்படி நீங்கள் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும் என்று இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த சமயத்தில் உங்களை நாய் கடித்துவிட்டால் அந்த தோஷம் நீங்கி விடுமாம். பைரவரின் அருள் கிடைக்கப் பெற்று அந்த கண்டத்தில் இருந்து நீங்கள் தப்பித்து கொள்வீர்கள். இந்த காலத்தில் நாய் கடித்தால் மிகவும் ஆபத்தான விளைவுகள் ஏற்படும். ரேபிஸ் போன்ற கொடிய தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆனால் அக்கால ஆருடத்தில் இது நல்ல பலன் சொல்கிறது.

நீங்கள் நல்ல காரியத்திற்காக சென்று கொண்டிருக்கும் போது மனதில் ஒரு எண்ணம் தோன்றும். செல்லும் காரியம் வெற்றி பெறுமா? இல்லை தோல்வியுறுமா? என்று. அப்போது கட்டப்படாத நாய் உங்கள் கண்களில் பட்டால் அந்த நாயை பாருங்கள். அது உங்களை பார்த்து 7 முறை குறைத்தால் நீங்கள் செல்லும் காரியம் அமோக வெற்றி தான். 7 க்கு மேலே குறைத்தால் தோல்வி அடையும் என்கிறது சகுன சாஸ்திரம். 7 க்கு கீழே குறைத்தால் ஆருடம் பலிக்காது.

அதுவே நீங்கள் பார்க்கும் நாய் கட்டப்பட்டு குறைத்தால் இந்த கணக்கு எல்லாம் பொருந்தாதாம். இந்த நாய் வால் ஆட்டினால் நடக்கும் செயல் நன்மையில் முடியுமாம். நாயின் உருவப்படம் கூட ஆருடம் சொல்லுமாம். ஒரு காரியம் நடக்குமா? நடக்காதா? என்று குழப்பமான மன நிலையில் இருக்கும் போது நாய் உருவ படம் எங்கேனும், ஏதோ ஒரு இடத்தில் நீங்கள் பார்க்க நேர்ந்தால் கட்டாயம் வெற்றி தானாம். தொலைகாட்சி, தொலைபேசி, கணினி, புத்தகம் என்று எந்த ரூபத்திலும் நாயை நீங்கள் பார்த்தால் உங்கள் கேள்விக்கு பதில் கிடைத்தது போல தான்.

நீங்கள் பெண் பார்க்க செல்கிறீர்கள் என்றால் போகிற வழியில் நாய்கள் கூட்டமாக குறைத்து கொள்ளாமல் விளையாடி கொண்டு இருப்பதை பார்க்க நேர்ந்தால் பெண் அமைந்து விடும் என்கிறது ஆருடம். அதே போல் கொடுத்த கடன் வசூலிக்க செல்லும் போது இரு நாய்கள் காதல் கொண்டிருந்தால் வாராக் கடனும் எளிதில் வசூலாகிவிடும் என்கிறது சகுன சாஸ்திரம். நாய் தன் குட்டியுடன் எதிரில் வருகிறது என்றால் நீங்கள் புதியதாக வாங்க நினைத்திருக்கும் பொருள் கட்டாயம் வாங்கி விடுவீர்கள் என்று அர்த்தமாம்.

வீட்டில் விரும்பி வளர்க்கப்படும் நாய் நன்றாக இருந்தால் உங்கள் வீடு வறுமையின் பிடியில் என்றும் சிக்காதாம். வளமுடன் எப்போதும் இருக்க முடியும். அந்த நாய் சில நேரத்தில் திடீரென வித்யாசமாக செயல்பட்டால் அதாவது குரலில் மாற்றம் காணுதல், சரியாக சாப்பிடாமல் இருப்பது, மேலே உத்திரத்தை அடிக்கடி பார்ப்பது போன்றவற்றை செய்தால் வீட்டில் யாருக்காவது நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் பேச்சை கேட்கும் செல்ல நாய் திடீரென கேட்காமல் அடம் பிடித்தால் உங்களுக்கு சோதனை வரும் காலம் நெருங்குவதை உணர்த்துகிறது. அதே போல உங்கள் நாய் வீட்டை விட்டு சென்று விட்டால் கடன் தொல்லையில் சிக்க போகிறீர்கள் என்று அர்த்தம்.

வழக்கு, பஞ்சாயத்து என்று எதிரிகளை பார்க்க செல்லும் போது நாய்கள் கூட்டமாக சண்டை இட்டு கொண்டிருந்தால் கண்டிப்பாக உங்கள் எதிரிகள் தொல்லை ஓயும். நாய் என்பது பைரவருக்கு உரிய அம்சமாகும். பாதுகாப்பிற்கு மனிதனை நம்புவதை விட நாயை நம்புவது மேல். அந்த அளவிற்கு நன்றி மறவா தெய்வீக அம்சம் பொருந்திய நாய் ஆருடத்திலும் பங்கு கொள்கிறது என்பது வியக்கத் தக்க விஷயம் தான். நாயை வைத்து ஆருடம் பார்க்க வேண்டும் என்றால் நீங்கள் பார்க்கும் நாய்க்கு 3 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். 3 வயதிற்குட்பட்ட குட்டி நாய் ஆருடதிற்கு பொருந்தாது என்கிறது சகுன சாஸ்திரம்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

தீவினைகளை வேரறுப்பாள் தீக்குதித்த அம்மன்.!!

தாமரங்கோட்டை, திருத்துறைப்பூண்டி, தஞ்சாவூர்.

தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தாமரங்கோட்டை கிராமத்தில் காவல் தெய்வமாக அருட்பாலிக்கிறாள் நல்லம்மா. தாமரங்கோட்டை கிராமத்தில் சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அவைய வேளாளர், அவரது மனைவி அமிர்தம் இருவருக்கும் திருமணமாகி  ஐந்து ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. பல கோயில்கள் சென்றும் பயனற்று போக, சக்தியின் அவதாரமான லலிதாம்பிகைக்கு பல்வேறு விரதம் இருந்து பயபக்தியுடன் அமிர்தம், அம்பாளை மனமுருகி வழிபட்டதன் காரணமாக கர்ப்பமுற்றாள். இதையறிந்த அவரது கணவர் மகிழ்ச்சி அடைந்தார். உறவினர் மற்றும் ஊராரை அழைத்து விருந்து நடத்தினார். அம்பாள் அருளால் அமிர்தம் அழகான பெண் குழந்தை பெற்றெடுத்தாள். அவைய வேளாளர் தன் தந்தையின் பெயரான நல்லதம்பியின் பெயரை நினைவூட்டும் விதமாக மகளுக்கு நல்லம்மா என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தார். பெயருக்கேற்றபடி நல்லம்மா, நல்ல மனதுடன் திகழ்ந்தார்.
நல்லம்மாவுக்கு வயது பத்து நடந்துகொண்டிருக்கும் போது அவரது உறவுக்காரரான கட்டைய வேளாளர் மகன் வீரனுக்கு மண முடித்து வைத்தனர். அவரது பெற்றோர்கள். அப்போது பால்ய விவாகம் வழக்கத்தில் இருந்தது. நல்லம்மாவுக்கு பன்னிரெண்டு வயது முடியும் தருவாயில் பூப்பெய்தினாள். சடங்கு முறைகள் ஊரே வியக்கும் வண்ணம் இரு வீட்டாரும் செய்திருந்தனர். விருந்து உபசரனைகள் முடிந்தது. மறுநாள் பதிமூன்று வயது தொடங்கியது. குழந்தை பருவம் மாறி குமரியானாள் நல்லம்மா. நல்வாழ்வு மலரும் என நம்பி இருந்தாள். வாழ்க்கை நெறிமுறைகளையும், கணவனிடத்தும், புகுந்த வீட்டிலும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினர் அவளது பெற்றோர். சடங்கு நடந்த பிறகு அடுத்து வந்தது ஆடி மாதம் இதனால் இரண்டு மாதங்கள் தாய் வீட்டில் இருந்தாள் நல்லம்மா.
ஆடி மாத இறுதி அன்று மகளுக்கும், மருமகனுக்கும் விருந்து கொடுத்து முறுக்கு, சீடை, அதிரசம் உள்ளிட்ட பலகாரங்கள் கொடுத்து குதிரை வண்டி பிடித்து நல்லம்மாவின் மாமனார் வீட்டுக்கு அவளது பெற்றோர்கள் கொண்டு விட்டனர். அன்று முன்னிரவு பொழுதில் நல்லம்மாவின் கணவன் பதினேழு வயது கொண்ட வீரன் நெஞ்சு வலி ஏற்பட்டு துடித்தான். தண்ணீர் கேட்ட வீரனுக்கு ஓடி சென்று தண்ணீர் எடுத்து கொடுத்து விட்டு, அவனது பெற்றோரை அழைத்து வந்தாள் நல்லம்மா. அதற்குள் வீரன் இறந்து போனான். குடித்த தண்ணீர் தொண்டைக்குள் இறங்கும் முன்னே, உயிரை விட்டு விட்டான் வீரன். இரவு முழுதும் அவனது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் அழுகையும் ஒப்பாரியுமாய் தொடர்ந்தது. பொழுது விடிந்தது. வெளியூரிலிருந்தும் உள்ளூரிலிருந்தும் உறவினர்கள், ஊர்க்காரர்கள் என வீட்டுமுன் பெரும் கூட்டமே கூடியது.
எல்லோரும் கண்ணீர் முகத்துடன் நிற்க, எந்த வித சஞ்சலமும் இன்றி எதையோ இழந்ததை போல அழாமல், கண்ணீர் சிந்தாமல் அமைதியாக வெளித் திண்ணையில் தன் தாயின் அருகே அமர்ந்திருந்தாள் நல்லம்மா. அவளது தந்தையின் அண்ணன் மனைவி, நல்லம்மாவின் பெரியம்மா வந்தாள். ‘‘அடிப்பாவி மகளே… உனக்கு புருஷன் செத்த சோகம் புரியலையோ… வெள்ளாந்தியா இருக்காளே…’’ என்று ஒப்பாரி வைத்தாள். அப்போது வீரனின் உடல் குளிப்பாட்டி மயானம் கொண்டு செல்லத் தயாரானது. மாண்ட சிறுவனுக்கு மாலையிட்டு அழகு படுத்திக்கொண்டிருந்தனர். மயானம் கொண்டு சென்றனர். ஆண்கள் மட்டுமே மயானம் செல்ல வேண்டும். என்ற எழுதப்படாத விதியின்படி அவர்கள் சென்று கொண்டிருக்க, குளித்து முடித்து நீராட்டி அழகுபடுத்தி பட்டு உடுத்தினர்.
மணக்கோலத்தில் கூட இந்தளவுக்கு அழகுபடுத்தவில்லை. கணவன் பிணக்கோலம் கண்ட பிறகு அளவுக்கு அதிகமாக அழகுபடுத்தியிருந்தனர் கன்னியவள் நல்லம்மாவை. அவளை, அவளது அப்பாவோடு பிறந்த அத்தையும், கணவரின் தாய்மாமன் மனைவியும் மயானத்துக்கு அழைத்து வந்தனர். மயானத்தில் வீரனின் உடலுக்கு அவனது தந்தை தீ மூட்டினார். அருகே புதுப்பெண்ணாக இருந்த நல்லம்மா நடக்கப்போகும் நிகழ்வை எண்ணாமல், என்ன நடக்கிறதே என்று தெரியாமல் கணவன் வீரன் மீது எரியும் நெருப்பை இமை மூடாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். அருகே நின்றவர்கள் முணுமுணுத்துக் கொண்டதை அவள் கேக்கலானாள். ஆம்…..‘‘உடன் கட்டை ஏறச் சொன்னா எங்க ஏறுவா, யாராவது பின்னாடி இருந்து தள்ளி விடுவோம்மா… அப்போது அவளது தந்தை வந்து என் பொண்ணுக்கு யாதும் அறியா வயசு, அவள அப்படியே கூட்டிட்டு போங்க… சம்பிராதயம் எல்லாம் எப்படியாம் இருந்துட்டு போட்டும்.
எனக்கு எதுவும் வேண்டாம். என் உசுரு இருக்கிற வரை என் மகள சாவு நெருங்கக் கூடாது’’ என்றார். முடிவில் அனைவரும் ஒரு மித்த கருத்துக்கொண்டு அவளையும் அழைத்துக்கொண்டு அவ்விடம் விட்டு புறப்படலானார்கள். ‘‘அப்போது நீங்க போங்க இப்ப வந்திடுறேன்’’ என்று வாய் திறந்தாள் நல்லம்மா. உடனே அவர்கள் திரும்பி இரண்டு எட்டு எடுத்து வைத்திருக்கும் நிலையில் வெட்டியான் கத்தினான். ‘‘ஐயோ… போச்சே... போச்சே…’’ என்று நல்லம்மா வீரனின் உடலில் பற்றி எரிந்த நெருப்பில் பாய்ந்தாள். தன் உயிரை மாய்த்தாள். அவளது தந்தை கத்தினார், கதறினார். அன்றிரவு அவளது தந்தையின் கனவில் தோன்றிய நல்லம்மா, ‘‘அப்பா கலங்காதீங்க, நான் எப்போதும் உங்களுக்கு துணை நிற்பேன்’’ என்றாள். மகளை எப்போதும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்த அவளது தந்தை அவள் உருவில் சிலை அமைத்து கோயில் எழுப்பினார்.
அறியாத வயதில் மணமுடித்து கன்னியாகவே உயிரை மாய்த்த நல்லம்மா தாமரங்கோட்டை கிராம மக்களுக்கு காவல் தெய்வமானாள். அவள் இறந்த சித்திரை மாதத்தில் தீக்குதித்த அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடைபெறுகிறது. நல்லம்மாவின் மறைவிற்கு பிறகு அந்தக் கிராமத்தில் பால்ய திருமண முறை நிறுத்தப்பட்டது. இப்போதும் அக்கிராமத்தில் நல்லம்மாவை குல தெய்வமாக வழிபட்டு வரும் மக்கள், தங்களது பிள்ளைகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதும் அம்மனுக்கு பூ கட்டி வைத்து பார்ப்பது, திருமாங்கல்யம் செய்ததும் அதை அம்மன் பூஜையில் வைத்து எடுப்பது என திருமணம் தொடர்பான அனைத்து செயல்களுக்கும் நல்லம்மாவை நினைத்தே செய்கின்றனர்.
கணவனின் சடலத்தில் வைக்கப்பட்ட தீயில் குதித்து உயிரை மாய்த்ததால் நல்லம்மா தீ குதித்த அம்மன் என்று அழைக்கப்படுகிறாள். தனது வாழ்க்கை தொடங்கிய நாளிலேயே முடிந்து போனதால் தன்னை நம்பி வணங்கும் பெண்களின் வாழ்க்கை நலமுடனும், வளமுடன் இருக்க தெய்வமாய் துணை இருந்து தீ வினைகளை வேரறுத்து நல்வாழ்வு அளிக்கிறாள், என்கின்றனர் அவ்வூர் பெண்கள். தீக்குதித்த அம்மன் கோயில் தஞ்சாவூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் முத்துப்பேட்டை ஊரிலிருந்து ஏழு கி.மீ தொலைவில் உள்ள தாமரங்கோட்டை கிராமத்தில் உள்ளது...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

கோர்ட் வழக்கை முடித்து வைப்பார் கொடிமரத்து மாடன்.!!

ஆலயங்களில் தேர் ஓடும் முறை வந்தபோது திருச்செந்தூர் முருகன் கோயிலிலும் தேர் ஓட வேண்டும் என்று எண்ணிய நிலச்சுவந்தார்கள்,  கோயிலுக்கு கொடிமரம் வைக்க வேண்டும், மார்கழி மாதம் திருவிழா நடத்த வேண்டும் என முடிவு செய்கின்றனர். உடனே, அப்பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் ஆசாரி என்பவர் தலைமையில் 25 பேர் கொண்ட குழுவினர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்திற்கு மரம் வெட்ட புறப்பட்டனர். 21 வண்டி கட்டி பயணத்தை தொடர்ந்தனர். மரங்களில் கூட தெய்வங்கள், பூதங்கள், ஆவிகள் குடியிருக்கும் என்ற நம்பிக்கை அக்காலத்தில் அதிகம் இருந்தது. அதன் காரணமாக தன்னோடு மாந்திரீகம் தெரிந்த நபரை அழைத்துச் செல்வது நல்லது என்று எண்ணிய ஆறுமுகம் ஆசாரி, நாங்குநேரி அருகேயுள்ள ஏர்வாடி சென்று அங்கு மாந்திரீக சக்தியில் புகழ்பெற்று திகழ்ந்த மந்திரவாதியான சின்னதம்பி மரைக்காயரை தன்னோடு வருமாறு அழைத்தார். அவரும் ஒப்புக்கொண்டு புறப்பட்டார்.

அந்தநேரம் அவரது மனைவி  “நான் பொல்லாத  கனவொன்று நேற்று கண்டேன். வீட்டை விட்டு நீங்கள் வெளியே இன்று மட்டும் செல்லாதீர்கள் என்றுரைத்தாள். அவர் மனைவி சொல்லை மதியாமல் புறப்பட்டார். அவரின் வேண்டுகோளுக்கிணங்க களக்காடு மலையில் கொடிமரத்திற்கான மரத்தை தேடினர். கிடைக்கவில்லை அதனால் மலையடியோரமாக அவர்கள் பயணம் தொடர்ந்தது. ஒரு வழியாக மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள காக்காச்சி மலைக்கு வந்தனர். அங்கு அவர்கள் எதிர்பார்த்து வந்த உயர்ந்து வளர்ந்திருந்த சந்தன மரத்தைக் கண்டனர். இந்த மரம் கொடிமரத்திற்கு ஏற்றதானதாகும் என முடிவு செய்து, ஆறுமுகம் ஆசாரி, சின்னதம்பி மரைக்காயரிடம் அந்த மரத்தை காட்டி, இதை வெட்டலாமா? என்று கேட்க, மரைக்காயர் மை போட்டு பார்க்கிறார். அப்போது அந்த மரத்தில் மாயாண்டி சுடலை உள்ளிட்ட 21 தேவதைகள் மரத்தில் குடியிருப்பது தெரிய வருகிறது.
தேவதைகளை மந்திர சக்தி மையினால் மடக்கிக்கொள்ளலாம் என்று கருதிய மரைக்காயர், மரத்தை வெட்டுமாறு கூறுகிறார். மரத்தை தொழிலாளிகள் வெட்டுகின்றனர். முதல் வெட்டு மரத்தின் மீது பட்டதும், வெட்டப்பட்ட கோடாரி சிதறி தொழிலாளிகள் உள்பட 24 பேரை பலி வாங்கியது. இதைக்கண்டு அஞ்சி நடுங்கிய ஆறுமுகம் ஆசாரி, சின்னதம்பி மரைக்காயர் அருகே ஓடி வருகிறார். அவர், மரத்தின் கிழக்கு திசையில் வாயிலிருந்து ரத்தம் கொட்டியபடி இறந்து கிடந்தார். அவரை பார்த்துக் கொண்டிருக்கும் போது நண்பகல் நேரம் வெள்ளிக்கிழமை, மரத்தின் மேலிருந்து ஆதாளி சத்தம் கேட்டது. ஆறுமுகம் ஆசாரி அஞ்சி நடுங்கி, உயிர் பயம் கொண்டு ஓடினார். அவரை பின் தொடர்ந்து 21 தேவதைகளும் ஓல மிட்டு ஓடி வந்தது. மலையடிவாரம் வந்த ஆசாரி, மகாலிங்கம், சொரிமுத்தய்யன், பூதத்தாரும் வீற்றிருக்கும் ஆலயம் வந்தார். சாஸ்தாவின் சந்நதியில் சாஸ்டாங்கமாக விழுந்து கதறி அழுகிறார்.  
‘‘சொரிமுத்து அய்யா காப்பாத்து’’ என கதறுகிறார். அவரின் அழு குரல் கேட்டு, மனமிறங்கிய சொரிமுத்தய்யன் அவர் முன் தோன்றினார். அஞ்ச வேண்டாம் ஆறுமுகம், என் சகோதரன் ஆறுமுகனுக்கு கொடிமரம் வைக்கும் நோக்கில் வந்த உனது பயணம் வெற்றியாகும். இங்கேயே நில் என்று கூறியவாறு, வெளியே
வருகிறார். ஆதாளி போட்டுக்கொண்டிருந்த 21 தேவதைகளையும் அழைத்தார். என்ன வென்று கேட்க, நாங்கள் குடியிருந்த மரத்தை வெட்டினான் இவன் என்று கூறின தேவதைகள். உடனே சொரிமுத்துஅய்யன் ‘‘உங்களுக்கு குடியிருக்க எனது இடத்தில் இடம் தருகிறேன். அந்த மரத்தை நீங்களே என் சகோதரன் அருளாட்சி புரியும் செந்தூருக்கு கொண்டு சென்று ஒப்படைத்து விட்டு வாருங்கள். இங்கு நிலையம் கொண்டு இளைப்பாருங்கள். எனது ஆலயம் அருகே அமரும் நீங்கள் கேட்ட பூஜையை விரும்பி வாங்கிக்கொள்ளுங்கள். என்னை நாடி வரும் பக்தர்கள் உங்களை பூஜிப்பார்கள். அவர்களுக்கு நல்லருள் புரிந்து, மக்களை காத்து வாருங்கள். முதலில் கொடிமரத்தை கொண்டு சேருங்கள்.
மாயாண்டி உனது மாய விளையாட்டுகள் போதும். கொடிமரம் செந்தூர் செல்ல நீ தான் பொறுப்பு’’ என்று உத்தரவிட்டார் சொரிமுத்தய்யனார். பின்னர் அய்யனாரின் உத்தரவை ஏற்று சாந்தமான சுடலைமாடன் தலைமையில் 21 தேவதைகள் திருச்செந்தூருக்கு கொடிமரத்தை கொண்டு சேர்த்தனர். திருச்செந்தூரில் கொடி மரத்தின் கீழ் அவருக்கு சிறிய பீடம் கொடுத்து கொடிமாடன், கொடி மரத்து மாடன் என நாமங்களில் சுடலைமாடன் அழைக்கப்படுகிறார். கொடியேற்றும் போதும், தேரோட்டத்தின் போதும் இவருக்கு சிறப்பு பூஜை உண்டு. கொடிமரத்து மாடன், கொடிமரத்துக்கு மட்டுமன்றி தேருக்கும் ஊருக்கும் காவலாக இருப்பது மட்டுமல்லாமல் நம்பி வரும் பக்தர்களின் வழக்குகளுக்கு தீர்வு அளிக்கும் நாட்டாண்மையாக இருக்கிறார். கோர்ட்டு வழக்குகள் முடிவு பெறாமல் வாய்தா தள்ளிப்போய் அவதியுறும் அன்பர்கள் கொடிமரத்து மாடனிடம் முறையிட்டால் உடனே தீர்ப்பு வருகிறது என்கிறார்கள் பலன் பெற்ற பக்தர்கள்.கொடிமரத்துக்கு காவலாய் சுடலைமாடன் தலைமையில் வந்த 21 தெய்வங்கள்.
1. சிவனிணைந்தபெருமாள், 2. தவசிதம்புரான், 3.பேச்சி, 4.முண்டன், 5.பிரம்மசக்தி, 6. பலவேசக்காரன், 7. மாசானம், 8.கட்டை ஏறும்பெருமாள், 9.தளவாய்மாடன், 10. தளவாய் மாடத்தி, 11. செங்கிடாகாரன், 12.இருளப்பன், 13.பாதாளகண்டி 14. கொம்புமாடன், 15. கருப்பன், 16. கருப்பண்ணசாமி, 17. கருப்பசாமி,  18. புலமாடன், 19. கரடிமாடன், 20. மாஇசக்கி, 21. கருங்கிடாகாரன் ஆகிய தெய்வங்களாகும். இவர்களுடன் கொலைகளம்(படுகளம்) கண்டு தெய்வமான 21 பேரும் வந்தனர்.
1. திம்மக்கா, பொம்மக்காவுடன் பட்டவராயன், 2. சின்னதம்பி, 3. வண்ணார மாடன், 4. இளையபெருமாள்(புதியவன்), 5. கசமாடன். 6. அத்திமாடன், 7. சப்பாணிமாடன், 8. மாலையம்மன், 9. மாடத்தி அம்மன், 10. கன்னியம்மன், 11.பாலம்மன், 12. தடிவீரன் 13. சிவனணைஞ்ச பெருமாள்(சின்னனஞ்சி),14. வன்னியராயன்(வென்னிமால), 15. பிச்சகாலன்(பிச்ச போத்தி), 16. இடைக்கரை புலமாடசாமி, 17. காத்தவராயன், 18.பொன்னிறத்தாள், 19. பட்டாணிசாமி, 20. ஐவராசா, 21. வெங்கலராசன் ஆகிய படுகள தேவதைகளும் வந்துள்ளனர்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

உங்கள் வீட்டில் குளவி, கூடு கட்டி இருக்கா? அப்படின்னா நீங்க அதிர்ஷ்டசாலியா! துரதிர்ஷ்டசாலியா.!!

குளவி நம்முடைய வீடுகளில் வந்து கூடு கட்டுவது என்பது இயற்கையான ஒரு விஷயம் தான். ஆனால், எல்லோரது வீட்டிலும் குளவி கூடு கட்டி விடுமா? என்று கேட்டால் அது கொஞ்சம் சந்தேகம் தான். குளவி கூடு கட்டினால் என்ன பலன்? அந்த கூட்டை கலைக்கலாமா? கூடாதா? அந்த மண்ணில் இருக்கக்கூடிய அற்புத சக்தி என்ன? என்ன செய்தால் திரும்பவும் அந்த இடத்தில் குளவி கூடு கட்டாம இருக்கும்? என்பதைப் பற்றி விரிவான ஒரு தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

வீட்டில் குளவி கூடு கட்டலாம். அதில் எந்த ஒரு தவறும் இல்லை. இதன் மூலம் வீட்டிற்கு நன்மை தான் நடக்கும். சில வீடுகளில் குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு, குழந்தை பாக்கியம் கிடைக்கப் போகிறது என்பதை அறிவுறுத்த குளவி கூடு கட்டும் என்று சொல்லப்படுவது. சில வீடுகளில் இருக்கும் பொருளாதார பிரச்சினை ஒரு முடிவுக்கு வரும் சூழ்நிலையில் கூட, குளவி அந்த வீட்டில் கூடுகட்டும் என்றும் சில குறிப்புகள் உள்ளன. ஆகவே, குளவி கட்டினால் வீட்டிற்கு நன்மை தான் அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

வீட்டில் குளவி கட்டிய கூட்டை கலைத்து விடலாமா? என்று கேட்டால், அது தவறுதான். கூட்டை கலைக்க கூடாது தான். எந்த ஒரு கூட்டையுமே நாம் கலைக்கக் கூடாது. ஏனென்றால், ஒரு ஜீவன் வாழும் வீடு அல்லவா அது. நம் வீட்டை யாராவது வந்து உடைத்தால் நமக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும்? அதேபோல் தான் மற்ற ஜீவராசிகளுக்கும். அதை கலைக்கும் போது நமக்கு பாவம் சேரத்தான் செய்யும்.

இருப்பினும் குளவி கொட்டினால் விஷத் தன்மை, அதாவது குழந்தைகள் தாங்க மாட்டார்கள். வீங்கி விடும். பல பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் வீட்டின் உள் பக்கத்தில், குழந்தைகளுக்கு கை எட்டும் இடத்தில் எதிர்பாராமல், குளவி கூடு கட்டி விட்டது. குழந்தைகள் தொடும் இடத்தில் அது இருக்கிறது. என்றால், வேறு வழியில்லாமல், குளவி அந்த கூட்டில் இல்லாத சமயம் பார்த்து, அதை கலைக்க வேண்டிய சூழ்நிலை தான் நமக்கு ஏற்படும். அதை கலைத்து விட்டோமே ஆனால், அந்த இடத்தில் சிறிது கோமியத்தை விட்டுவிடவேண்டும். குளவி திரும்ப அந்த இடத்திற்கு வந்து கூட கட்டாமல் இருக்க, கோமியம் ஒரு நல்ல மருந்து என்று சொல்லப்பட்டுள்ளது.

அடுத்ததாக இந்த குளவியின் மண். குளவி கூடு கட்டுவதற்கு கால் படாத இடத்தில் இருக்கும் மண்ணை தான் எடுத்துக் கொண்டு வருமாம். அந்த மண்ணிற்கு அற்புத சக்தி உள்ளதாகவும், அந்த மண்ணை சிறிது எடுத்து தினம்தோறும் நெற்றியில் இட்டு வந்தால் பொருளாதார சூழ்நிலை மேலோங்கும் என்றும் சில குறிப்புகள் உள்ளன. அதற்காக கூட்டில் இருந்து உடைத்து மண்ணை எடுக்க வேண்டாம். சில சமயம் கூட தானாக கீழே விழுந்து விடும். அப்போது, அதிலிருந்து சிறிது மண்ணை எடுத்து விபூதியில் கலந்து கொள்ளுங்கள். இல்லை என்றால், அந்த கூட்டிற்கு வெகுநாட்களாக குளவி வராமல் இருக்கும். அப்போது அந்த மண்ணை எடுத்துக் கொள்ளலாம். அந்த விபூதியை தினமும் நெற்றியில் வைத்து வந்தால் அதிர்ஷ்டம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

ஆக உங்கள் வீட்டில் குளவி கூடு கட்டினால் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் தான். அந்த குளவி உங்களை கொட்டாத வரையில், எதிர்பாராமல் கொட்டிவிட்டது. என்ன செய்வது? சிறிதளவு சுண்ணாம்பு எடுத்து குளவி கொட்டிய இடத்தில் வைத்தால் விஷம் ஏறாமல் இருக்கும் என்று பெரியோர்களால் சொல்லப்பட்டுள்ளது. இதையும் தெரிந்து வைத்துக் கொள்வது நல்ல விஷயம்தானே...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

Monday, 27 April 2020

பின் நடப்பதை முன்னே சொல்வாள் ஜக்கம்மா.!!

எருமார்பட்டி மதுரை

ஆந்திர, கர்நாடக எல்லையில் உள்ள தற்போதைய பெல்லாரி பகுதியே முந்தைய கம்பளம் நாடு. கம்பள நாட்டை பாலராசு நாயக்கர் என்ற மன்னர் ஆண்டு வந்தபோது முகமதியர்கள் கம்பளம் நாட்டை கைப்பற்றினர். அப்போது பாலராசு நாயக்கர், தனது நாட்டிளம் பெண்களை காப்பாற்றும் பொருட்டு நாட்டு மக்களுடன் தென்னகம் நோக்கி வந்தனர். அப்போது மதுரையை நாயக்கர்கள் ஆண்டு வந்தனர். அதனால் கம்பள நாட்டினர் மதுரை அருகேயுள்ள திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் அதிகமாக குடியேறினர். இவர்கள் அதிகம் கரிசல் நில பகுதிகளிலும், மலை சார்ந்த பகுதிகளிலும் குடியேறினர். அவ்வாறு ஜக்கம்மாவின் முன்னோர்கள் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குடியேறினர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகாவிலுள்ளது எருமார்பட்டி ஊராட்சி. இங்குள்ள எருமார்பட்டி, அம்மமுத்தன்பட்டி, ரெங்கசாமிப்பட்டி பகுதிகளை உள்ளடக்கிய பகுதியே முன்பு வையாபுரி கிராமம் என்று அழைக்கப்பட்டது.
வையாபுரி கிராமத்தில் ஆடு, மாடு, விவசாயம், என ஓரளவு செல்வத்துடன் வசித்து வந்தது ஜக்கம்மாளின் குடும்பம். இந்த வையாபுரி கிராமத்திலிருந்துதான் நாஜோதிநாயக்கனூர் ஜமீன் குதிரைகளுக்கு கொள்ளு மற்றும் நவதானியப்பயறுகள்  அனுப்பப்பட்டு வந்தது. அந்தப்பயிர்களை விளைவிக்கும் முன் ஜமீன்தார் வந்து விதைகளை பார்ப்பதும், பயிர்கள் நன்கு வளர துவங்கியதும், அதை பார்வையிடவும் தயார் நிலைக்கு வந்து விட்டது உடனே அறுவடை செய்யுங்கள் என உத்தரவு இடவும் கூட ஜமீன் தார் இந்த கிராமத்திற்கு அடிக்கடி வந்து செல்வார். ஒருமுறை ஜமீன்தார் வையாபுரி கிராமத்திற்குள் குதிரையில் நகர்வலம் வந்தபோது, பதினாறு வயது நிரம்பிய அழகு தேவதையாக இருந்த ஜக்கம்மாளை கண்டார். தாவணி அணியாத முந்தைய பருவம் பாவாடை சட்டையில் நின்று அந்தி நேரம் வீட்டு முற்றத்தை பசும் சாணம் தெளித்து சீர்படுத்திக்கொண்டிருந்தாள். அவளை வைத்த கண் மூடாமல் ஜமீன்தார் பார்த்துக் கொண்டிருந்தார். எதிரே வந்த ஊர் முக்கியஸ்தர், ஜமீன்தார் ஐயா என்று அழைத்ததும் சகஜ நிலைக்கு வந்த ஜமீன்தார், குதிரையிலிருந்து இறங்கி நடந்தபடி பேசினார்.
“புள்ள அழகா இருக்கு, யாரு மகா இது” என்று கேட்டார். அதற்கு ஊர் முக்கியஸ்தர், ஜக்கம்மாவின் குடும்ப விபரம் குறித்து விளக்கினார். உடனே ஜோதி நாயக்கனூர் ஜமீன்தார், ஊர் முக்கியஸ்தருடன் ஜக்கம்மா வீட்டுக்கு சென்றார். ஜமீன் தார் வருகையை எதிர்பார்க்காத ஜக்கம்மாவின் தாயார், கரம் கூப்பி வணங்கி, “ஜமீன் தாரய்யா வாருங்க, உடன் வந்திருக்கும் ஊர் பெரியவங்களும் வாங்க” என்றபடி, வீட்டில் இருந்த பிரம்பு நாற்காலியை ஜமீன் தாருக்கு கொடுக்க, அதில் அமர்ந்த ஜமீன்தார், ஊர் முக்கியஸ்தரை பார்க்க அவர் பேசலானார். ஜக்கம்மாவின் தந்தையை அழைத்து வருமாறு கூற, ஆட்டு மந்தைக்கு சென்று ஆடுகளுக்கு தழைகளை வைத்துக்கொண்டிருந்த ஜக்கம்மாவின் தந்தையையும், மாட்டு தொழுவத்திலிருந்த அவளது அண்ணனையும் வீட்டுக்கு அழைத்து வந்தாள் ஜக்கம்மாவின் தாய். அவர்கள் வந்த பிறகு ஊர் முக்கியஸ்தர் பேசலானார்.
“வீட்டு முற்றத்தில் நின்ற உங்க ஜக்கம்மாவ நம்ம ஜமீன்தார் பார்த்திருக்கிறார். அவள கல்யாணம் செஞ்சுக்கு ஆசப்படுகிறாரு, அதுக்குத்தான் பொண்ணு கேட்டு வந்திருக்கிறாரு.”“ஐயா, என் மவ, விளையாட்டு புள்ள, குடும்பம் நடத்திற அளவுக்கு இன்னும் பக்குவப்படலிங்களே,” என்ற ஜக்கம்மாவின் தந்தையின் பேச்சுக்கு இடையே குறுக்கிட்ட அவளது, தாய், “புருஷன், பொஞ்சாதியா பேசி எடுத்து இருக்கிற அளவுக்கு புள்ளைக்கு உடம்புலயும் தெம்பு இல்லிங்க” என்றாள். “அதெல்லாம் ஜமீன்தார் பார்த்துக்குவார். பெரிய வீட்டு சாப்பாடுண்ணா சும்மாவா, பத்து நாளையில உம் புள்ள தடிச்சிருவா,” என்றதும், ஜக்கம்மாவின் அண்ணன், “நாங்க, கொஞ்சம் யோசனை பண்ணிட்டு சொல்லுறோம்.” என்றதும் சினம் கொண்ட ஜமீன்தார். “என்ன யோசனை வேண்டி கிடக்கு, வருகிற பௌர்ணமியில கல்யாணம் சொல்லிப்புட்டேன். ஆமா” என்றபடி சினம் கொண்டு, உடன் வந்தவர்களுடன் வெளியேறினார் ஜமீன்தார்.
அவர்கள் சென்ற பின் ஜக்கம்மா, தனது தாயின் அருகே வந்தமர்ந்து அழுதாள். எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம் என்றுகூறி அழுதாள். பௌர்ணமிக்கு இன்னும் ஏழு நாட்களே உள்ள நிலையில் ஜமீன்தார் ஆட்களும், ஊர்  முக்கியஸ்தர்களும் பல விதத்திலும் ஜக்கம்மாவின், தந்தை மற்றும் அண்ணன் ஆகியோரிடம் கடுமையாக எச்சரிக்க தொடங்கினர். காலை, மாலை பாராமல் அடிக்கடி வீட்டுக்கு சென்று நச்சரித்தனர். ஜமீனை பகைச்சுக்கிட்டு எப்படி ஊருல வாழுறது என்றெல்லாம் பலவாறு பேசி பயத்தை ஏற்படுத்தினார்கள். இவற்றையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாமல் ஊரெல்லாம் பொங்கலுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் போது முந்தையநாள் இரவு தூங்கப்போகும் முன்பு ஜக்கம்மாவின் தந்தை, தனது மனைவியிடம் ஆலோசனை செய்கிறார்.
பின்னர் ஊரைவிட்டு போக முடிவு செய்கின்றனர். அன்றிரவு ஆடு, மாடு கன்றுகளோடு, பாத்திர, பண்டங்களோடு, ஜக்கம்மாளுடன் அவரது குடும்பத்தினர் மேற்குதொடர்ச்சி மலையிலேறி அதன் பின்பக்கம் உள்ள லிங்கநாயக்கன்பட்டி மலைப்பகுதிக்கு சென்றனர். அப்போது இவர்கள் தங்கிய இடத்தில் கடுமையாக மழை பெய்தது. இதனால் இவர்கள் இருப்பிடம் இல்லாமல் அவதிப்பட்டனர். பாறையின் அருகே ஜக்கம்மாவும், அவளது அண்ணன், அண்ணியுடன் ஒதுங்கி நின்றனர். அப்போது ஜக்கம்மாளின் அண்ணன் மனைவி, ‘‘நல்லா வாழ்ந்த குடும்பம் இவளால்தான் இன்னைக்கு தெருவும் திண்ணையுமா நிக்குது. சாயந்திரம் நேரம் என்னைப்பாரு, என் அழகைப்பாருன்னு மினிக்கிக்கிட்டு யாரு போய் இவள தெரு முற்றத்துல நிக்கச் சொன்னது’’ என்று புலம்பினாள். இதைக்கேட்டு மனம் உடைந்த ஜக்கம்மா, ஆறுதல் தேடி சற்று தொலைவில் ஆலமரத்தின் அடியில் ஒதுங்கி நின்ற தாய், தந்தையிடம் சென்றாள்.
தாயின் மடியில் தலைவைத்து படுத்தது போல் பாவனை செய்த ஜக்கம்மா கனத்த இதயத்தோடு அவள் குமுறிக்கொண்டிருந்தாள். திடீரென வேகமாக எழுந்தாள். என்னம்மா என்ற தாயிடம், இப்ப வாரேன் என்று கூறிவிட்டு, யாருக்கும் தெரியாமல் மீண்டும் வந்த வழியே மலையேறி, மலை உச்சியில் அமர்ந்து வையாபுரி கிராமத்தை பார்த்து அழுதுகொண்டிருந்தாள். அன்று மாட்டுப்பொங்கல். இன்று ஊரிலிருந்தால் எப்படி இருந்திருக்கும் எங்கள் குடும்பம் என்று நினைத்தவள், பழைய நினைவுகள், சிறுவர்களோடு ஓடி, ஆடி விளையாடியது, மாடு, கன்றுகளை தந்தையோடு சேர்ந்து கம்மாக்கரையில் குளிப்பாட்டியது என எல்லா நிகழ்வுகளையும் அசைபோட்டு ஓ வென கதறி அழுதாள். தங்கள் குல தெய்வமும், சக்தியின் அம்சமுமான அந்த அம்மனை மனதில் நினைத்து மனமுருக வேண்டிய ஜக்கம்மா நமது குடும்பம் கெட்டதற்கு ஜமீன்தான் காரணம்.
குதிரை இருப்பதனால்தானே, குதிரையில் வந்து என்னைப்பார்த்து எனது குடும்பத்தையே அழித்து விட்டனர் என கோபம் தலைக்கேறிய நிலையில், வெத்தலையை போட்டு பாறையில் காரி உமிழ்ந்து, இந்தப் பகுதியில் இனி எள்ளு விளைஞ்சாலும் கொள்ளு விளையக்கூடாது. குதிரைக்கு பட்டம் சூட்ட ராஜா இருக்கக்கூடாது. ராஜ பட்டம் சூட்டிய குதிரை இருக்கக்கூடாது என்று கூறியபடியே மலை உச்சியிலிருந்து குதித்தாள். உயிரற்று உடல் பாறையில் உருண்டு உருண்டு மலையடிவாரம் வந்து சேர்ந்தது. அவரது உடலை எரியூட்டுவதற்காக குடும்பத்தினரும், உறவினர்களும் தூக்கிக்கொண்டு வந்தனர். வரும் வழியில் அம்மமுத்தன்பட்டியில் உள்ள பாறைக்கல்லில் இறக்கி வைத்து, மீண்டும் தூக்கி வந்து இப்போதுள்ள ஜக்கம்மாள் கோயில் இருக்கும் இடத்தில் எரியூட்டினார்கள். வேதனையில் இறந்த ஜக்கம்மாளின் சேலை மட்டும் தீயில் கருகவில்லை.
ஜக்கம்மா இறந்த எட்டாவது நாள் வையாபுரி கிராமத்தில் உள்ள சிறுமி அருள் வந்து ஆடினாள். ‘‘ நான், ஜக்கம்மா வந்திருக்கேன். எனக்கு துணி, மணிகளும், வளையலும், சாந்தும் எடுத்து வச்சு பூஜை பண்ணி வணங்கி வாங்க, உங்கள காப்பாத்தி கரை சேர்ப்பேன். நான் இ்ப்படி நடக்குமுன்னு தெரியாம ஜமீன்தார் வரும்போது அந்தி சாயும் போது சந்தி முத்தத்தில நின்னதுனால என் குடும்பமே தெருவுல நின்னுச்சு. அதனால, இனி, யாருக்கும் அந்த நிலைமை வரக்கூடாது. உங்க வாழ்க்கையில பின்னாடி என்ன நடக்கும். எப்படி முன்னாடி யோசிச்சு நடக்கணும் முன்னு என்னை நம்பி வணங்குவோர் நாக்குல வந்து வாக்கு சொல்லுவேன். என பேர சொல்லி, அடுத்தவங்களுக்கு வாக்குச்சொல்ல முன் வந்தா, அவங்க நாக்குலயும் நான் வந்தமர்ந்து குறிப்பறிந்து வாக்குச்சொல்ல வைப்பேன் என்றாள். ஜக்கம்மாள்.
ஜக்கம்மாளின் சாபத்தால்தான் இந்தப் பகுதியில் இதுநாள் வரை கொள்ளு பயறு விளைந்ததில்லை. அப்பகுதியை பூர்வாங்கமாக கொண்ட விவசாயிகளும் அதை விளைவிப்பதில்லை. அவர்களை வாழ வைக்கும் ஜக்கம்மாளை தெய்வமாக வணங்கி வருகின்றனர். ‘‘ஜக்கம்மாள் இறந்த தமிழ் மாதமான தை 2ம் தேதி ஒவ்வொரு வருடமும் ஆண்கள் எல்லோரும் மல்லு வேட்டி, காதோலை கருகுமணி, பழம் தேங்காய் கொண்டு வந்து ஜக்கம்மாளுக்கும் படைத்து வழிபடுகின்றனர். அங்கு பூசாரி பக்தர்கள் கொண்டு வந்த மல்லுவேட்டியை கிழித்து கொடுப்பார்.
அதனை எடுத்து வந்து ஊரில் உள்ள ஜல்லிக்கட்டு காளைகளுக்கு கொம்பில் கட்டி ஜல்லிக்கட்டில் விடுவார்கள். அப்போது காளையை அடக்கி கொம்பில் உள்ள ஜக்கம்மாள் துணியை எடுப்பவனே வீரனாக இப்பகுதி பெண்கள் ஏற்றுக் கொள்கின்றனர். மேலும் ஊர் முழுவதும் வரிபோட்டு ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 3வது புதன்கிழமை ஜக்கம்மாளுக்கு படையல் செய்து பூஜிக்கின்றனர். ‘‘ஜக்கம்மாள் எரிக்கப்பட்ட இடம் சுடுகாடுக்கு சமம் என்பதனாலும், அண்ணன் மனைவியின் கொடுமையினால் இறந்ததனாலும் பெண்கள் யாரும் ஜக்கம்மாள் கோயிலுக்கு செல்வதில்லை என கூறப்படுகிறது. எருமார்பட்டி ஊராட்சி ஒரு ஜக்கம்மா பூமி’’ என்கின்றனர் அப்பகுதியினர்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

உங்கள் வீட்டின் நான்கு மூலைகளிலும் வைக்கவேண்டியது எவை? வைக்கக் கூடாதது எவை?

ஒரு வீடு சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் இருக்க வேண்டுமென்றால் அதற்கு வாஸ்து மிக மிக முக்கியம். வாஸ்துவின் படி ஒரு வீட்டின் நான்கு திசைகளிலும் என்ன இருக்க வேண்டும்? என்ன இருக்கக் கூடாது? என்பதை பற்றியும், ஒருவேளை வாஸ்து தவறி உங்களுடைய வீடு அமைந்து விட்டது, அந்த தோஷத்திற்கான பரிகாரத்தையும் பற்றி இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

வாஸ்துவின் அடிப்படையில் ஒரு வீட்டின் நுழைவு வாயில், அதாவது முன் வாசல் கதவு, நில வாசப்படி எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளலாம். வீட்டின்  தலைவாசல் பகுதி தென்மேற்கு திசை நோக்கி அமைந்து இருக்கக் கூடாது. ஏனென்றால், தீய சக்திகள் உள்ளே நுழையக் கூடிய திசையாக தென்மேற்கு திசை சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவேளை உங்களுடைய வீடு தென்மேற்கு திசை நோக்கிய வாசலில் அமைந்து விட்டது. என்ன செய்வது? உங்கள் வீட்டின் நுழைவு வாயிலில் அனுமனுடைய படத்தை டைல்ஸ் கல்லாக வாங்கி சுவற்றில் பதித்து விடுங்கள். எந்த ஒரு தீய சக்தியும் உள்ளே கண்டிப்பாக நுழைய முடியாது. அடுத்ததாக ஒரு வீட்டிற்கு மிகவும் முக்கியமானது பூஜை அறை. இந்த பூஜை அறை வட கிழக்கு திசையில் அமைத்துக் கொள்ளுங்கள்.

வீட்டின் நான்கு மூலைகள் என்று சொல்லப்படும் ஈசானிய மூலை, அக்னி மூலை, நிருதி மூலை, குபேர மூலை இந்த நான்கு மூலைகளிலும் வைக்க வேண்டியவை எவை என்பதை பின்வருமாறு தெரிந்து கொள்ளலாம்.

ஈசானிய மூலை: வட கிழக்கு மூலையைதான் ஈசானிய மூலை என்று சொல்லுவார்கள். வீட்டிற்கு உள்ளே வரக்கூடிய அனைத்து விதமான ஐஸ்வரியங்களும், நல்லவைகளும் இந்த வழி மூலமாகத்தான் வீட்டிற்குள் நுழையும். இந்த மூலையை எப்போதுமே சுத்தமாக வைத்திருப்பது மிகவும் நல்லது. குழந்தைகள், முதியவர்கள் தங்கும் அறை இவைகளை இந்த மூலையில் அமைத்துக் கொள்ளலாம். இந்த ஈசானிய மூலையில் அதிகமாக பளு இருக்கும் பொருட்களையும் வைக்கக்கூடாது. குளியலறை செப்டிக்டேங்க் கட்டாயம் அமைக்கக் கூடாது. உங்கள் வீட்டில் எதிர்பாராமல் பரணை ஈசானிய மூலையில் வரும்படி அமைந்துவிட்டால், அந்த இடத்தில் மட்டும் பொருட்களை வைக்காமல் இருப்பது மிக மிக நல்லது. ஈசானிய மூலையில் கிணறு, குடிநீர் தொட்டி போன்றவைகளை அமைத்துக் கொள்ளலாம். இந்த மூலையில் கட்டாயமாக கனமாக இருக்கும் பீரோவை வைக்கவே கூடாது.

குபேர மூலை: தென்மேற்கு மூலையில் உங்கள் வீட்டில் பீரோவை வைத்துக்கொள்ளலாம். வாய்ப்பு இல்லாதவர்கள் வடமேற்கு மூலையில் மேற்கு பார்த்தவாறு வைத்துக்கொள்ளலாம்.

அக்னி மூலை: வீட்டின் தென்கிழக்கு மூலை  அக்னி மூலை என்று அழைக்கப்படும். ஒரு வீட்டின் சமையலறை கட்டாயம் அக்னி மூலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அப்படி அக்னி மூலையில் அமைக்க முடியாதவர்கள், வாயுமூலையான வடமேற்க்கு மூலையில் சமையல் அறையை அமைத்துக் கொள்வார்கள். வாயு மூலையில் சமையலறை இருந்தாலும், உங்கள் வீட்டின் அக்னி மூலையான தென்கிழக்கு பகுதியில் சமையலுக்காக பயன்படுத்தப்படும் பொருட்களை வைக்க வேண்டியது மிக அவசியம். முடிந்தவரை ஒரு தீப்பெட்டியை யாவது அக்கினி மூலையில் வைத்துக்கொள்ளுங்கள். சிலரது வீட்டில் வடகிழக்கு மூலையில் சமையலறை அமைந்திருக்கும். வடகிழக்கு மூலையில் சமையலறை இருப்பது உகந்தது அல்ல. இப்படி அமைந்து இருந்தால் மூன்று வெங்கல செம்பினை, சமையல் அறையின் மேல் விட்டத்தில், கவிழ்ந்த மார்க்கமாக தொங்க விடுங்கள். அது கட்டாயம் அடுப்பின் மேல் பகுதியில் தொங்க விடக்கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

வாயு மூலை: வாயு மூலை என்று சொல்லப்படும் வடமேற்கு மூலையில் குளியலறை கழிவறை இவைகள் அமைக்கப்பட வேண்டும். மாறாக வட கிழக்கு திசையில் குளியலறை கழிவறை இருந்தால் வீட்டில் பணப் பிரச்சனை குழந்தைகளுக்கு கல்வியில் பிரச்சினை உண்டாகும்.

நிருதி மூலை: ஒருவருடைய வீட்டில் நிருதி மூலையில் முதன்மை படுக்கை அறை அமைக்கப்பட வேண்டும். அதாவது தென்மேற்கு மூலையை நிருதி மூலை என்று சொல்லுவார்கள்.

இறுதியாக நம்முடைய வீட்டின் மையப் பகுதி. இந்த இடத்தை திறந்த வெளியாகவும், குப்பை கூளங்கள் உள்ளதாகவும் வைத்திருக்கக் கூடாது. வீட்டின் மையப்பகுதியில் சுவர் கட்டாயம் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் வீட்டின் மையப் பகுதியில் சிறிய அளவிலான ஜீரோ வாட்ஸ், நீல வண்ண பல்பை 24 மணி நேரமும் எரிய வைப்பது நல்லது. இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான வாஸ்து சார்ந்த தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

இந்த மாதிரி கோலம் போட்டால் கடன் பிரச்சனை கட்டாயம் குறையாது தெரியுமா?

கோலம் போடாத வீட்டில் கண்டிப்பாக மஹாலக்ஷ்மி காலடி எடுத்து வைக்கவே மாட்டாள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் மஹாலக்ஷ்மி வீதியில் வலம் வருவார்களாம். யார் வீட்டு வாசலில் சுத்தம் செய்து அழகிய கோலம் போட்டு வைத்திருக்கிறார்களோ, அவர்களது இல்லத்திற்கு காலடி எடுத்து வைத்து உள்ளே வருவார்களாம். அதனால் தான் அதிகாலையில் கோலம் போடும் வழக்கத்தை நமது முன்னோர்கள் கடைபிடித்து கொண்டிருந்தனர். ஆனால் இந்த அவசர யுகத்தில் அவர் அவர் சவுகரியதிற்கு ஏற்ப எந்த நேரத்திலும் கடமையே என்று கோலம் போடுகின்றனர். கோலம் போடுவதில் கூட சாஸ்திரமா? என்றால், ‘ஆம்’ என்றே கூறலாம்.

சிலருக்கு எப்போதும் கடன் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும். கடன் தொல்லையில் இருந்து எப்படியாவது விடுபட்டு மீண்டு விட வேண்டும். அதன் பின் இனி கடனே வாங்காமல், உழைப்பதை, இருப்பதை வைத்து வாழ வேண்டும் என்று எவ்வளவோ பேர் தினம் தினம் புலம்பி கொண்டிருப்பீர்கள். வாழ்க்கையில் பாதி நிம்மதியை கெடுப்பது உடன் இருப்பவர்கள் என்றால், மீதி நிம்மதியை கெடுப்பது கடன் வாங்கியிருப்பது தான் காரணமாக இருக்கும். கர்ம வினையில் கடனும் ஒரு பகுதி என்றால் உங்களுக்கு வியப்பிற்கு உரியதாக இருக்கலாம். நீங்கள் செய்த பாவத்தின் பலனில் கடன் வாங்கும் சூழ்நிலையில் தள்ளப்படுவதும் ஒரு பகுதி தான்.

அப்படி வாங்கி வைத்திருக்கும் கடனை அடைத்தாலும், அடுத்த கடன் வாங்க தயாராக ஏதாவது ஒரு பிரச்சனை காத்திருக்கும். என்ன செய்தாலும், எவ்வளவு போராடினாலும் கடனில் இருந்து மீள பெரும் போராட்டமாகவே இருக்கும். சிலர் தாங்கள் வாங்கி வைத்திருக்கும் கடனை பற்றி சிறிதும் கவலை இல்லாமல் இருப்பார்கள். ஆனால் பலர் கடனால் தூக்கம் கூட இல்லாமல் தவித்து கொண்டிருப்பார்கள். கடன் பிரச்சனை தீர நீங்கள் வழக்கமாக கோலம் போடுவது அவசியமாகும். காலை, மாலை இருவேளையும் தவறாமல் கோலம் போடுங்கள்.

கோலம் போடுவது வெறும் அழகிற்காக அல்ல. வீட்டில் மஹாலக்ஷ்மி தேவி நுழையவும், ஈ, எறும்புகள் பசி தீரவும் தான் அந்த காலம் முதல் இந்த காலம் வரை தொடர்ந்து கோலம் போடுவது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த காலத்தில் எதை கொண்டு கோலம் போடுகிறார்கள்? நீங்கள் பச்சரிசி மாவில் தான் கோலம் போடுகிறீர்கள் என்றால் பிரச்சனை இல்லை. இன்றைக்கு சந்தையில் விற்கும் கோலமாவு சுண்ணாம்போ, ஏதோ ஒரு கல்லோ பொடித்து தான் விற்பனை செய்கிறார்கள். இதை வாங்கி கோலம் போடுவதில் ஒரு பயனும் இல்லை என்பதே உண்மை.

கோலம் போடுவதின் முக்கிய தாத்பரியம் ஓரறிவுள்ள ஜீவ ராசிகளுக்கு உணவளிப்பது தான். காலையில் பச்சரிசியில் கோலம் போட்டால் மாலைக்குள் பாதியளவு நிச்சயம் எறும்புகள், மற்ற சிறு ஜீவன்கள் உண்டு காலி பண்ணி விடும். சுண்ணாம்பால் கோலம் போட்டால் நாம் தான் நடந்து நடந்து கலைத்து விட வேண்டும். இதில் என்ன பயன் இருக்கிறது? பச்சரிசியில் கோலம் போட்டால் சரியாக வரவில்லை என்பவர்கள் அரிசி அரைக்கும் போதே கோலமாவு பதத்திற்கு அரைக்குமாறு கேளுங்கள். நைசாக இல்லாமல் சற்று கொர கொரவென அரைத்தால் நன்றாக கோலம் போடலாம்.

கர்ம பலன் குறைய தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் தர்மம் துணையாக இருக்கும். நீங்கள் பச்சரிசியில் கோலம் போடுவதால் உங்களுக்கே தெரியாமல் சிறு சிறு ஜீவ ராசிகள் பசியாறுகின்றன. இதன் பலனாக உங்களுக்கு இருக்கும் கடன்கள் தொடராமல் இறைவன் அருள் புரிவார். காலை மாலை இருவேளையும் கோலம் போடுவதால் மகாலக்ஷ்மியின் அருளும் கிட்டும். அதை விடுத்து சுண்ணாம்பு பொடியில் கோலம் போட்டால் ஒரு பயனும் இல்லை என்பதே நிச்சயம். அறிவியல் ரீதியாக காலையில் எழுந்து கோலம் போடுவதால் உடலும், மனமும் ஆரோக்கியம் அடையும் என்பதும் குறிப்பிடத்தக்கது...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

வெயிலை விரும்பும் வேட்டைக்கார சாமி.!!

கீழப்பாவூர். நெல்லை மாவட்டத்தில் மேற்கு பகுதியில் இருக்கும் வளமான ஊர்களில் ஒன்று. இந்த ஊரில் வேட்டைக்கார சாமி வந்தமர்ந்ததை பார்ப்போம். தென்காசியிலிருந்து வந்த சுடலைமாடன் ஆசாத்நகரில் நிலையம் கொண்டு அங்கிருந்து கீழப்பாவூருக்கு வருகிறார். அந்த காலத்தில் கீழப்பாவூரில் விவசாயிகள் நெல், சோளம் பயிரிட்டு வந்தனர். திடீரென்று பெரும் கோடை நிலவியது. ஆறு, குளம், குட்டைகள் நீரின்றி வறண்டு போயிருந்தது.

குடிக்க தண்ணீரின்றி அவதிப்பட்டனர். ஒரு மாலை வேளை, ஊரில் உள்ள பெரியவர்கள் சிலர், ஊருக்கு தெற்கு பக்கமிருந்த குளத்தாங்கரையில் ஆலமர அடிவாரத்தில் கூடியிருந்து பேசி கொண்டிருந்தனர். அப்போது ஊர் தலைவர் கூத்தன்நாடார், “இப்படி, எத்தனை நாளைக்குத்தான், நம்ம பொண்டாட்டி, பிள்ளைங்க கஷ்டப்படறது. ஆளாளுக்கு ஏதாவது போட்டு ஒரு கிணத்தை வெட்ட பார்ப்போம்பா... யேய் என்னப்பா சொல்லுதியோ.’’ உடனிருந்த ஒருவர் “அண்ணன் சொல்லது சரிதான், இருந்தாலும், சட்டு, புட்டுன்னு முடிவு எடுக்கிற காரியமா, நாலு பேர் கொண்ட விஷயம், எல்லாரு கிட்டயும் கலந்துக்குனும்..” இவ்வாறு பேசிக்கொண்டு இருந்தவர்களில் மற்றொருவர் “பொழுது சாய்ஞ்ச்சிட்டு, கண்ணு வெளிச்சத்துல வூடு போய் சேருவோம்’’ என்று கிளம்புகிறார்கள்.

ஊர்தலைவர் மட்டும் “சரி நீங்க போங்கப்பா, நான் கொல்லப்புறம் போயிட்டு வாரேன்னு” சொல்லிக்கொண்டு செல்கிறார். அந்தி நேரம் குளத்தின் கரையோரம் ஊர்தலைவரைப் பார்த்து பெயரை கூறி ஒருவர் அழைக்கிறார். திரும்பி பார்த்தவரிடம், “கூத்தன் நாடாரே, வாரும், கவலையை விடுங்க, மழை பெய்யும், குளம் குட்டைகள் நிரம்பும், வேளாண்மை பெருகும். தலைமுறையே சிறக்கும். ஆனா, அறுவடையான உடனே எனக்கு கொடுக்கிறத கொடுக்கணும்.”

“அய்யா, நீ யாரு, நல்ல வார்த்தையெல்லாம் சொல்லுத, அது பலிக்குமா.’’ “நிச்சயம், பலிக்கும், நீ வீட்டுக்கு போ, நான் சொன்னது நடக்கும்.” “சரி, அய்யா! நீ கேக்கிறத கொடுக்க முடியாதப்பா, அந்தளவுக்கு எங்கிட்ட வசதியில்லையப்பா.’’ “நீ என்ன சாப்பிடுவியோ, அத எனக்கு கொடு, எந்த ஆடம்பரமும், ஆரவாரமும் எனக்கு வேண்டாம். உனக்கு செலவே வைக்கமாட்டேன் போதுமா. என் பேரு சுடலை, எனக்கு ஏணி வைத்து மாலை சாத்தும் வகையில் மண்பீடம் அமைத்து, அறுவடையான முதல் நெல்லை எடுத்து எனக்கு படைக்கிற அன்னைக்கு அவிச்சு குத்தி, அரிசியாக்கி படையிலிடு, என் நாமம் சொல்லி அழைத்தால், நான் வருவேன்.

உங்களில் ஒருவரிடம் நான் வந்திறங்கி, உன் குற்றம் குறைகளை சுட்டிகாட்டி, வேண்டியதை பெற்றுக்கொள்வேன்.  நீ கூப்பிட்டால், நான் குரல் தருவேன். என்னை தொழுது வந்தால், உனக்கு மட்டுமல்ல, என்னை அடிபணியும் யாவருக்கும், அவர்கள் சந்ததிக்கும் எல்லா வளமும், நலமும் அளித்து காத்து நிற்பேன்.” என்றார். அதற்கு கூத்தன் நாடார் “அய்யா, நான் அதன்படியே செய்யுறேன்.’’ என்றார். சரி, “நான் வேட்டைக்கு போக சமயமாச்சு. நீ வீட்டுக்கு போ” என்று கூறியவர், சிறிது நேரத்தில் மாயமானார்.

கூத்தன் நாடார், மனதுக்குள் சந்தோஷம் கொண்டவராக, ஏதோ ஒரு வித மனபயமும், ஆச்சரியமும் கலந்தவாறாக வீட்டுக்கு வந்தார். மனைவியை அழைத்தார். “ஏ. தங்கம்மா...,’’  “பொறுங்க தண்ணி கொண்டு வாரேன்.”  “தண்ணியெல்லாம் வேண்டாம்புள்ள நான் சொல்றத செத்த கேளு’’ என்று பேச முயற்சித்த போது இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சந்தோஷம் கொண்டார் கூத்தன்நாடார்.

அவர் மட்டும் இந்த சந்தோஷத்தை பெறவில்லை, கீழப்பாவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களும் மட்டற்ற மகிழ்ச்சியும், வியப்பும் கொண்டனர். கொண்டவளிடம் தான் கண்ட அந்த மாடனைப்பற்றி கூறினார். மழையின் காரணமாக குளம் குட்டைகள் நிரம்பியது. ஆறுகளில் பெருவெள்ளம் அடுத்த நாள் முதல் விவசாயப்பணிகள் தொடங்கியது. சோர்ந்திருந்த மக்கள் விவசாய பணிகளில் வேகம் காட்டினர். விளைச்சல் அமோகமாக இருந்தது.

அறுவடை ஆனதும். களத்து மேட்டில் நின்ற, மகனிடம் கூத்தன்நாடார் “ ஏலே, ஒரு மூடையை தனியா எடுத்துவை’’ என்று உத்தரவிட்டார். “அய்யா, எதுக்கு எடுத்து வைக்க சொல்லுதியோ,” “ஏலே, சொன்னது செய்வியா, அத வுட்டுப்புட்டு கேள்வி கேள்விகேட்டிக்கிட்டுருக்க.’’ என்றார் கோபத்துடன். தந்தையின் கட்டளைக்கு ஏற்ப நெல் ஒரு மூடையை எடுத்து வைத்தார் அவர்.

அறுவடை முடிந்த அடுத்த வாரம் ஊருக்கு தெற்கு பக்கம், மையான கரையோரம் வேட்டைக்கார சாமி சுடலைமாடனுக்கு சுண்ணாம்பு கலவையால் மண் பீடத்தை நாடார் அமைத்தார். அன்று காலையில் நெல்லை அவித்து, தனது தாயின் கையால் இடித்து அரிசியாக்கி சமைத்து, சுவாமிக்கு படையல் போட்டார். தனது மனைவி, மக்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரையும் பூஜைக்கு அழைத்திருந்தார். சுவாமிக்கு படையல் போடப்பட்டு, பூஜை நடந்தது. அப்போது கூத்தன் நாடாரின் தம்பி சுவாமி அருள் வந்து ஆடினார்.

அப்போது பூஜையை தான் ஏற்றுக் கொண்டதாக கூறிய அவர், “எனக்கு மஞ்சனை அதிகம் பிடிக்கும். இனி பூஜை செய்யும் போது, மஞ்சனையை அதிகம் கொண்டு வா, பூஜை முடிஞ்சதும் நான் வேட்டைக்கு போகனும். அதற்கு அறையில் கறுப்பு நிற கச்சை கட்டணும். தலையிலே சிகப்பு வஸ்திரம் அல்லது குல்லா வைக்கனும், ஒரு கையில் தீப்பந்தம், மறு கையில் திருநீர் கொப்பரையும், தோளில் திரள கொடுக்கும் உணவுகளை சுமந்து செல்வேன். அதை நீ அடுத்த பூஜையிலிருந்து செய். ம்ம்... நான் சென்று வரும் வரை என் கோட்டையில் எந்த சத்தமும் கேட்க கூடாது.

ம்... புரியுதா,  எனக்கு படைத்த உணவை கோயிலில் வைத்து உண்டு செல்லவேண்டும். இது எல்லாம் மூன்றாம் ஜாமத்துக்குள் முடித்து அவரவர் வீடு போய் சேர வேண்டும். அதன் பின் சூரிய உதயம் காணும் முன் யாரும், என் கோட்டைக்கு திரும்ப வரகூடாது” என்று கூறியுள்ளார். அதன்படியே இன்றும் அப்படிதான் பூஜை முறைகள் இக்கோயிலில் மேற்கொள்ளப்படுகிறது.

பூஜை முடிந்த நாள் முதல் அவ்வூரில் வேளாண்மை சிறந்து விளங்கியது, சில ஆண்டுகள் போனது, ஊர் பெரிதானது, மக்கள் தொகை அதிகமானது. ஒவ்வொரு இனத்தவரும், இந்த வேட்டைக்கார சாமிக்கு தனி பீடம் அமைத்து, கோயில் கட்டி வழிபட்டு வருகின்றனர். இப்படி ஏழு சமுதாயத்தினருக்கு தனித்தனி கோயிலாக சுடலைமாட சாமிக்கு ஏழு கோயில்கள் அருகருகே அமைக்கப்பட்டுள்ளது.

எல்லா கோயிலிலும் ஒரே போல்தான் உருவமில்லாத பீடம் அமைக்கப்பட்டுள்ளது. காரணம் கற்சிலை வடிவத்தையோ, உருவம் வடிவமைக்கப்பட்ட வேறு விதமான சிற்பத்தையோ வேட்டைக்கார சாமி ஏற்றுக்கொள்ளவில்லை.  நெல், சோளம் பயிரிட்டு வந்த இவ்வூரில், தற்போது, நெல், மிளகாய், எள், கடலை, பல்லாரி வெங்காயம், என பல்வேறு தானிய வகைகள் பயிரிடப்பட்டு, விவசாயம் சிறப்புற்று, ஊரும் பேரு, புகழுடன் திகழ்கிறது. வேட்டைக்காரன், சுடலைமாடன் அருளால் விவசாயமும், வணிகமும் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. மக்கள், ஆரோக்யத்துடனும், நல்ல வளத்துடனும் வாழ்ந்து வருகிறார்கள்.

கீழப்பாவூர் சுடலைமாடசுவாமி கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் 2வது செவ்வாய்க் கிழமை கொடைவிழா நடை பெறுகிறது. கோயிலில் சுடலைமாடன், வேட்டைக்காரன், பேச்சியம்மன், இசக்கியம்மன் ஆகிய தெய்வங்கள் உள்ளது. கோயிலில் மூன்று ஆலமரமும், நான்கு வேப்பமரமும் உள்ளது. கோயிலின் வடக்கு பக்கம் இருக்கும் பனைமரத்தில் பைரவர் நிலையம் கொண்டுள்ளார். சுடலைமாட சுவாமி கோயிலில் கொடைவிழா என்றால் மகுடம், வில்லிசை, நையாண்டி மேளம், தாரை, தப்பட்டை, உருமி, கருங்கொம்பு, உடுக்கை முதலான இசைக்கருவிகள் முக்கிய இடம் பெறும். அதுமட்டுமன்றி வண்ண விளக்குகளால் அலங்காரம், செய்யப்பட்டு விழாக்கோலம் பூண்டியிருக்கும் கொடைவிழா. ஆனால் இந்தக்கோயிலில் மட்டும் இவற்றிற்கு மாறாக விழா நடைபெறுகிறது.

கொடை விழா அன்று காலை 6 மணிக்கு, கோயிலில் விழா பணி செய்ய விரும்பும் பக்தர்கள், சுமார் 50க்கும் மேற்பட்டோர், கோயிலுக்கு வந்து தலையில் நல்லெண்ணெய் வைத்து தேய்த்து குளிப்பார்கள். அதன் பின்னர் கோயிலில் அடுப்பு கூட்டி நெல் அவிப்பார்கள். குறிப்பாக ஆண்டு தோறும் பத்து மூடை, பதினைந்து மூடை என்று இருக்கும். ஆண்டுக்கு ஆண்டு கூடுமே தவிர குறைவதில்லை. இந்த ஆண்டு கூட பதினைந்து மூடை (ஆயிரத்து ஐநூறு கிலோ) அரிசி உணவாக்கப்பட்டு சுவாமியின் படையலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அவித்த நெல்லை, மாலை நேரத்திற்குள் காய வைத்து, அதை குத்தி அரிசியாக்கி அந்த அரிசியில் உணவு சமைக்கப்பட்டு, சுவாமிக்கு படையல் செய்யப்படும். இந்த படையலில் எல்லா வகை காய்களும் இடம் பெற்றிருக்கும். சமைக்கப்பட்ட உணவை, சுவாமிக்கு படைக்கும் போது, அப்பணியில் ஈடுபடுபவர்கள் வாய், மூக்கு சேர்த்து வெள்ளைத் துணியை கொண்டு கட்டியிருப்பார்கள்.

காரணம் அந்த உணவின் வாசனையை நுகர கூடாது என்பதற்காக, சேவலை பலி கொடுத்து அதையும் சமைத்து உணவு படைப்பார்கள், முட்டை, முருங்கைக்காய், அப்பளம் முதலான அனைத்து வகை உணவு பதார்த்தங்களும் அதில் இடம்பெற்றிருக்கும். பூஜையின் போது கோயில் முழுவதும் சாம்பிராணி புகை மண்டலமாக, வாசனையாக இருக்கும். அந்த நேரம் தன்னை மெய் சிலிர்க்க வைத்து, தன் அருகிலே, தாயாய், தந்தையாய், கூப்பிட்டால் குரல் கொடுக்கும் அப்பன் சுடலைமாடன் இருப்பது போல பிரம்மயை நமக்குள் ஏற்படுத்தும்.
எல்லா குறைகளையும், பிணிகளையும், அய்யன் கோயில் திருநீறு தீர்க்கும். படையலின் பல்வேறு வகையான பழங்களும் இடம்பெற்றிருக்கும். குறிப்பாக வாழைப்பழம் அதிகமாக இடம்பெறும். சுமார் 2 ஆயிரம் தேங்காய்களை இரண்டாக உடைத்து வைத்திருப்பார்கள். நடு ஜாமம், நள்ளிரவு 12 மணிக்கு பூஜை நடக்கும். அசையும் மரமும் அசையாமல் நிற்கும். அழுத குழந்தையும் அமைதி காக்கும்.

மயானம் அருகே அமைதி நிறைந்திருக்கும் அந்த வேளையில் பூசாரி அப்பாத்துரை கையில் இருக்கும் மணியின் ஓசை மட்டுமே தொடர்ந்து ஒலிக்கும். சாம்பிராணி வாசனையும் புகையுமாக நிறைந்திருக்கும். பக்தர்கள் நிறைந்து இருக்கும் கோயில் காம்பவுண்ட் சுவர்களை இளசுகள் ஆக்கிரமித்திருக்கும். பனை ஓலை விரித்து, பயபக்தியோடு விழாவை காணும் முதுமை நிறைந்தவர்கள் ஒருபுறம், பேரன், பேத்திகள் அரவணைப்பில் ஆண்டவனை மனமுருக வேண்டி இருக்கும் தாய்குலங்கள் ஒருபுறம், அத்தனை மக்கள் கூட்டம் இருந்தும் அமைதி நிலவியிருக்கும்.

பேச்சியையும், இசக்கியையும் மூச்சாய் நினைத்திருக்கும் அம்மக்கள் மூச்சு விடும் ஓசை கூட கேட்பதில்லை. மேள, தாளம் எதுவும் இன்றி இருக்கும் அந்த வேளையில் ஓ...ஓ...என்று ஆதாளி குரல் மட்டும் கேட்கும். புகை மூட்டத்தினிடையே கூர்ந்து பார்த்தால், கோமரத்தாடி(சாமியாடுபவர்) பொன்னையன் அருள் வந்து ஆடிக் கொண்டிருப்பார். சுவாமியின் முன் இருக்கும், மஞ்சனை எடுத்து தனது முகத்தில் பூசிக்கொள்வார். அந்த நேரம் அமைதி மாறி சப்தம் எழ துவங்கும், ஆம். தமிழ் கிராம பெண்களின் வாய்க்குள், தில்லை கூத்தன் நடராஜனைப்போன்று நாக்கு நடனமிட்டு ஓசை எழுப்பும், அந்த குலவை சத்தம் வேகமாக கேட்கும்.

அந்த ஓசையே! அய்யன் சுடலைமாடனுக்கு இன்பமான இசையே! பூசாரி மாலை அணிவித்ததும், ஒருவர் கோமரத்தாடியின் மேனியில் சந்தனம் பூசுவார். உடனே வாலிபர்கள் வந்து கச்சையை(சிறு மணிகள், இணைக்கப்பட்டிருக்கும் கறுப்பு நிற டவுசர்) எடுத்து கோமரத்தாடிக்கு கட்டி விடுவார்கள். தலையில் குல்லாவும், வலது கையில் தீ பந்தமும், திரளுச்சோறும் கொண்டு கோமரத்தாடி மயான வேட்டைக்குச் செல்வார். அவர் சென்று வரும் வரை கோயிலில் நிசப்தம் நிலவும். அவர் வந்ததும்.

நீராடுவார். முதலில் அலங்கார பூஜையும், அடுத்த அன்னபடைப்பு பூஜையும் நடைபெறும். அந்த பூஜையில் மீண்டும் சாமியாடும் கோமரத்தாடி, பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறுவார். அருள்வாக்கு உத்திரவாதத்துடன் இருக்கும். குறிப்பாக சொன்னால் குழந்தை வரம் வேண்டி வருபவரிடம். அடுத்து கொடைவிழாவிற்கு மகனுடன் வருவாய், அப்படி வரும் அய்யன் சுடலைக்கு விளக்கு எடுத்துட்டு வா என்று கூறுவர். மாடன் அருளால் மழலை வரம் பெற்ற தம்பதியினர் திருவிளக்குடன் விழாவுக்கு வருவதுண்டு. கொடைவிழா நிறைவு பெற்றதும், உணவு பரிமாறப்படும். எல்லாம் 3 மணிக்கு முன்னதாகவே முடிந்து, அனைவரும் அவரவர் இல்லம் சென்று விடுவர். வேளாண்மையை பெருகச் செய்ததோடு, வேண்டிய வரம் அளிக்கும் வேந்தனாக திகழ்கிறார் இந்த வேட்டைக்கார சாமி.

இந்த சாமிக்கு பாத்தியப்பட்ட பக்தர்கள் பலர் பெரிய வணிகர்களாகவும், தொழிலதிபர்களாகவும் திகழ்கிறார்கள். வேட்டைக்கார சாமி சுடலைமாடனுக்கு அழகான சிலை அமைத்து பெரிய கோபுரத்துடன் கோயில் கட்ட வேண்டும் என்று முடிவு செய்து, விழாக்குழு, திருப்பணிக்குழு என பணிகளை முனைப்புடன் முடிக்கும் வகையில் தயாரானார்கள்.

ஒரு கொடைவிழாவின் போது சாமி கொண்டாடி(அருள் வந்து ஆடும் அருளாளி)யிடம் கேட்டனர்.

அப்போது சுடலைமாடன், எனக்கு சிலை வேண்டாம், அலங்காரம் வேண்டாம், அபிஷேகம் வேண்டாம். கோயிலும் வேண்டாம், கோபுரமும் வேண்டாம். சுட்ட சுண்ணாம்பு பீடம் போதும். எண்ணெய் மஞ்சனை போதும். சுற்றுச்சுவர் கட்டுங்கள். வெயில் இருப்பதை விரும்புகிறேன். கோபுரம் எழுப்பி அதை தடுத்து விடாதீர்கள் என்று கூறியவாறு அவர் ஆதாளி(ஓ,ஓ வென குரல் எழுப்புவது) போட்டு விட்டு சாந்தமானார்.அதன் பின்னர் வெயிலை விரும்பிய வேட்டைக்கார சாமிக்கு கோயில் கட்டவில்லை...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴