ஒருமுறை பகவத் பாதாள் ஸ்ரீ ஆதிசங்கரர் காஷ்மீரத்தில் தங்கி இருந்தபோது அவர் லலிதாம்பிகையின் சஹஸ்ரனாமாவளிக்கு விளக்கம் எழுத வேண்டும் என விரும்பினார்.
அவர் தமது சீடரை அழைத்து அங்கிருந்த புத்தகசாலையில் தேவி நாமாவளியை எடுத்து வருமாறுக் கூறினார்.
சீடர் அங்கு சென்று ஒரு புத்தகத்தை எடுத்து வந்தார். சீடர் எடுத்து வந்த புத்தகம், விஷ்ணுவின் ஆயிரம் நாமாவளியைக் கொண்ட புத்தகமாக இருந்தது.
ஆகவே தவறாக எடுத்து வந்துவிட்ட அந்த புத்தகத்தை வைத்து விட்டு லலிதா சஹஸ்ரநாமத்தை எடுத்து வருமாறு ஸ்வாமிகள் சிஷ்யரிடம் கூறினார்.
சிஷ்யரும் மூன்று முறை உள்ளே சென்று புத்தகத்தைக் கொண்டு வந்தாலும், மூன்று முறையும் அவர் கொண்டு வந்த புத்தகம் விஷ்ணு சஹஸ்ரநாமமாகவே இருந்ததாம். மீண்டும் மீண்டும் தான் கேட்டதைத் தவிர வேறு புத்தகத்தையே ஏன் எடுத்து வருகிறாய் என சிஷ்யரிடம் ஸ்ரீ பாகவத் பாதாள் கேட்டதும் அந்த சிஷ்யர் கூறினாராம் ' ஸ்வாமி என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
ஒவ்வொரு முறையும் நான் சென்று நீங்கள் கூறிய புத்தகத்தை எடுக்க முயன்றபோது அங்கிருந்த ஒரு சிறுமி, இதுதான் நீ தேடும் அந்த புத்தகம் என ஒரு புத்தகத்தைத் தந்தாள். நானும் அவள் கூறியதை நம்பி அவள் கொடுத்த புத்தகத்தை எடுத்து வர வேண்டியதாயிற்று' என்றதும், ஆதிசங்கரர் அதிர்ந்தே போனார். இதை செய்வது அந்த அம்பிகை தான் என அவருக்கு புரிந்தது.
விஷ்ணுவின் நாமத்திற்கு முதலில் விளக்கம் எழுத வேண்டும் என்பதினால்தான் இப்படி செய்கிறாள். அந்த உண்மையை உணர்ந்து கொண்டவர் முதலில் விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்கு விளக்கம் எழுதிய பின்னரே லலிதா சஹஸ்ரநாமத்துக்கு விளக்கம் எழுதினர்.
இதில் இருந்தே விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் பெருமையை அறிந்து கொள்ளலாம்.
விஷ்ணு சகஸ்ரநாமத்தை தினமும் பாராயணம் செய்பவர்கள் வீட்டில், மகாலட்சுமி மகிழ்ச்சியுடன் வாசம் செய்வாள் என்பது ஐதீகம். விஷ்ணு சகஸ்ர நாமம் முழுவதும் தெரியாதோர், மூன்று முறை ராமா, ராமா, ராமா எனக்கூறினால் போதும் என்கிறது சாஸ்திரம்.
மூன்று முறை ராமா நாமம் சொன்னால், ஸ்ரீ ஹரியின் 1000 திரு நாமங்களை சொன்ன பலன் உண்டு என்பதை, பார்வதி தேவிக்கு, பரம சிவனே விளக்கிய கதையை, அடுத்த பகுதியில் காணலாம்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment