கேரளத்தில் மட்டுமின்றி, தமிழக வாழ் கேரளா மக்களாலும் விமர்சையாக கொண்டாடப்படும் மிகப் பெரிய திருவிழாவான ஓணம் பண்டிகை, பத்து நாட்கள் கொண்டாடப்படும்.
ஆவணி மாதத்தில் ஹஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கும் திருவோண திருவிழா சித்திரை, சுவாதி, விசாகம், அனுசம், கேட்டை, மூலம், பூராடம், உத்ராடம், திருவோணம் என பத்து நட்சத்திர நாட்களிலும் கொண்டாடப்படுகிறது.
மிகவும் விசேஷமாக கடைசி நாளான திருவோணத்தன்று, .தங்களை தேடி வரும் மகாபலி மன்னரை வரவேற்க, கேரள மக்கள், தங்கள் வீட்டு வாசல்களில் 'அத்தப் பூக்கோலம்' போட்டு, புத்தாடைகள் அணிந்து, இனிப்புகள் பரிமாறி, மகிழ்ச்சியை வெளிபடுத்துகின்றனர்.
ஓணம் சத்ய விருந்து
திருவோண நாள் அன்று கேரள மக்களால், உறவுகளுக்கும், நட்புகளுக்கும் அன்போடு பரிமாறப்படுவது சத்ய விருந்து.
கேரளத்தின் பாரம்பரிய உணவு வகைகளான அவியல், தோரன்,காலன், ஓலன், பச்சடி, கிச்சடி, இஞ்சிப்புளி, மாங்காய், எலிசேரி, கூட்டுக்கறி ஆகியவை தலைவாழை இலைபோட்டு பரிமாறப்படும்.
பின்னர் பூவன்பழம், சர்க்கரை, உப்பேரி, காவற்றல், விளம்பி, சாதத்தில் பருப்போடு நெய் சேர்த்து பப்படம் வைத்து சாப்பிடுவார்கள்.
பின்னர், சாம்பார் சேர்த்து உண்ட பின், பிரதமன் எனப்படும் பாயசத்தை சுவைத்துவிட்டு, புளுசேரி கூட்டி, இறுதியாக மோர் கூட்டான் சேர்த்து சாப்பிட்டால், வயிறும், மனமும் நிறைந்திருக்கும்.
விளையாட்டுகள்....
ஓணத்தன்று, மாலை பெண்கள், புதிய சேலை கட்டிக்கொண்டு, கோலத்தை சுற்றி, கும்மி கொட்டியும், வீட்டு வாசலில் ஊஞ்சல் கட்டியும், பந்துகள் விளையாடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.
மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதை பார்த்த மகாபலி மன்னனும் அவர்களுக்கு ஆசிகளை வழங்கிவிட்டு, மீண்டும் பாதாள லோகம் செல்கிறார் என்பது ஐதீகம்
தலை ஓணம்
புதுமணத் தம்பதிகள் இந்த நாளை, தலைத் தீபாவளி போன்று 'தலை ஓணம்' என்று மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். கேரளம் மட்டுமின்றி, மலையாளம் பேசும் மக்கள் வாழும், தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற அண்டை மாநிலங்களிலும் ஓணம், சிறப்பாக கொண்டாடப்படுகிறது...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment