Monday, 2 September 2019

பிட்டுக்கு மண் சுமந்து பரமன் பிரம்படி பட்ட திருவிளையாடல் நடந்த மாதம் இது.!!

ஆவணி மாதம் வரும் மூல நட்சத்திரம் மிக சிறப்பு  வாய்ந்தது. ஆவணி மூலத்திருவிழாவானது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், 12 நாட்கள் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

சொக்கர், மதுரையில் நிகழ்த்திய, 64 திருவிளையாடல்களில், 10 திருவிளையாடல்கள் இத்திருவிழாவின்போது நடத்தப்படுகிறது.
ஆவணி மூலத்திருவிழாவின்போது, சுந்தரேசருக்கு பட்டாபிசேகம் நடத்தப்படுகிறது. அடுத்த ஐந்து மாதங்கள் சுந்தரேசுவரர் மதுரையை ஆட்சி செய்வார்.
வந்தி பாட்டிக்காக, பிட்டுக்கு மண் சுமந்த லீலையும், மாணிக்கவாசகரின் பக்தியை உலகு உணரும் பொருட்டு நரியை பரியாக்கி மன்னனிடம் அளித்தும் ஆவணி மூலத்தன்றுதான் என்று கருதப்படுகிறது.

ஆவணி மூலத்தன்று காலையில் சூரியன் உதயாமாகும்போதே, வெப்பம் அதிகமாக இருந்தால் அவ்வருடம் முழுவதும் வெயில் வாட்டும் என்றும், மேகமூட்டத்துடன் வெப்பம் குறைவாக இருந்தால் சிறப்பான சீதோசணம் அமையும் என்று கருதப்படுகிறது. 
எனவே நல்ல சீதோணம் அமைய,ஆலயங்களில்,  வழிபாடுகள்  மேற்கொள்ளப்படுகின்றன. இந்த மாதத்தில் சிவபெருமானை தினம்தோறும் வணங்கி நலம் பல பெறுவோமாக...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment