Wednesday, 28 August 2019

ஒருவந்தூர் பிடாரி செல்லாண்டியம்மன்.!!

ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இந்த நிலம் முழுக்க உப்பு மண்ணாக இருந்திருக்கிறது. உப்பு மண்ணை வெட்டியபடியே இருக்க, ‘ணங்...ணங்’ என்று சத்தம் கேட்டது. ஓசை வந்த இடத்தில் தோண்டிப்பார்க்க குருதி பொங்க அன்னையின் சிலை இருந்தது. ஈசனும், அம்மையும் சேர்ந்து அருள்புரியும் மூர்த்தமாக இருந்ததால் ஒருவந்தூர் என்றானது. பக்தர்கள் பிடாரி செல்லாண்டியம்மன் என்று திருப்பெயரிட்டு அழைத்தனர். பார்வதி தேவி பூஜை செய்வது போன்ற அமைப்பில் சிற்பம் ஒன்று இங்கு உள்ளது. 


மாசி மக நட்சத்திரத்தில் நடக்கும் தேர்த் திருவிழா மிகவும் சிறப்பாக இருக்கும். தினந்தோறும் கோயிலைச் சேர்ந்த வேலும், பூஜைப் பொருட்களும் மேளதாளத்தோடு எட்டுப்பட்டி கிராமங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் கோயிலை அடைகிறது. திருமண வரம் வேண்டி பெண்கள் இத்தலத்திற்கு வந்த வண்ணம் இருக்கிறார்கள். விரைவிலேயே தம்பதியராக வந்து கைக்கூப்பி வணங்கவும் செய்கிறார்கள். நாமக்கல் மாவட்டம், மோகனூர் & காட்டுப்புத்தூர் சாலையில் இத்தலம் அமைந்துள்ளது.

படவேடு -  ரேணுகாம்பாள்

ஜமதக்னி முனிவரின் ஆணைப்படி அன்னையின் சிரசை கொண்டுவந்தார் பரசுராமர். சொன்னதை செய்த உனக்கு என்ன வேண்டுமென்று தந்தை ஜமதக்னி முனி பரசுராமரை கேட்டார். என்னை பெற்றவளையே திருப்பிக் கேட்கிறேன் என்று தீர்க்கமாக சொன்னார், பரசுராமர். தலையையும் உடலையும் கொண்டு வா உயிர்ப்பித்துத் தருகிறேன் என்றார், ஜமதக்னி முனிவர். அப்படி அவர் கொண்டுவந்த உடலை நீர்தெளித்து சேர்த்து ஒளியில் பார்க்க தலைக்குரிய உடல் மாறியிருந்தது. ஆனாலும் அவளே ரேணுகாம்பாள் என்று மகாசக்தியாக மலர்ந்தாள். அவளே படவேடு எனும் தலத்தில் அமர்ந்தாள். 

துயர் எனும் சொல் இனி உங்கள் வாழ்வில் இல்லை என்று திடமாக பக்தர்களுக்காக அமர்ந்திருக்கிறாள். படவேட்டிலுள்ள இத்தலத்தைச் சுற்றிலும் நிறைய ஆலயங்கள் உள்ளன. காளி கோயில்களும் நிறைந்திருக்கின்றன. சக்தியின் வீச்சு மிகுந்த தலத்தில் தலையாய தலமாகவும் இது விளக்குகிறது. சம்புவராயர்கள் படவேடுவை கோயில் நகரமாகவே உருவாக்கினார்கள். ஆரணிக்கும் வேலூருக்கும் இடையில் மலைகளுக்கு நடுவே படவேடு கோயில்கள் அமைந்துள்ளது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment