இன்று 29.08.2019 வியாழக்கிழமை ஆவணி மாதம் 12ம் நாள். சதுர்த்தசி திதி.
சித்த யோகமும், அமிர்த யோகமும் கூடிய நன்னாள். இன்று போதாயன அமாவாஸ்யை. நாளைய தினம் பொது அமாவாஸ்யை. பெரும்பாலானோர் நாளைய தினமே முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
இன்று ஆயில்ய நட்சத்திரம். வியாழக்கிழமை என்பதால், குருவுக்கு உகந்த நாள். சிவன் கோவில்களில் தட்சணாமூர்த்தி வழிபாடு சிறப்பாக நடைபெறும். நவ கிரஹங்களில் குரு அதாவது வியாழன் கிரகத்திற்கு மஞ்சள் உடை சாற்றி, கொண்டைக்கடலை மாலை மற்றும் சர்க்கரை பொங்கல் நெய்வேத்யம் செய்தால் குருவின் அருட்பார்வை கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஸ்ரீ ராகவேந்திரர்,ரமணமஹர்ஷி, சேஷாத்ரி ஸ்வாமிகள், யோகிராம்சுரத்குமார், மஹா பெரியவா எனப்படும் காஞ்சி பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் உள்ளிட்ட மஹான்களை இன்றைய தினம் வணங்குவது குருவருளை அதிகரிக்கும். அவரவர் குலா தெய்வத்துடன், தாங்கள் குருவாக ஏற்ற மஹான்களை எண்ணி சிறிது நேரம் த்யானத்தில் அமர்வது சிறப்பு...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment