கண்ணன் எந்தன் பாதையிலே
நிழலாய் தொடர்ந்து வந்தான்
நின்று நானும் நினைக்கையிலே
நிலவிலே காட்சி தந்தான்!
பாலுடன் அவல் கலந்து
பக்கத்தில் வர அழைத்தேன்!
பக்தி கொண்டு கண்மூடு
பக்குவப்பட வேண்டுமென்றான்!
ஏனிந்த குறும்பு என்றெண்ணி
ஏங்கி கவலை படுகையிலே
தத்துவங்கள் புரிந்து கொள்ள
தவம் செய்ய வேண்டுமென்றான்!
மாலை வெயில் சோலையிலே
மஞ்சள் வண்ணம் தீட்டையிலே
அஞ்சனக் கண்கள் மயங்க
அன்பு குழலிசை படித்திடுவான்!
இசையுருகி கதிரவன் உறங்கசெல்ல
அசையும் கால்பெருவிரல் நிலம்கீற
விசையுடன் வானம் மின்னும்
கசையடியாய் மழை பெய்யும்!
கண்ணன் கருணையில் நனைந்தேனோ
கார்முகில் பொழிவதில் நனைந்தேனோ
கண்டதொரு காட்சியை நான்
கச்சிதமாய் படம் பிடித்தேன்!
மலை மீது நான் நின்று
பால்மேகம் கண்டிருந்தேன்!
கண்ணன் வந்துசேர்ந்ததுமே
கார்மேகம் சூழக்கண்டேன்
மேகம் செல்லும் திசையெதுவோ
தாகத்துடன் கேட்டு விட்டேன்!
பெண்மனம் பயணிக்கும் திசை
புரிந்திடல் கடினம் என்றான்!
குதர்க்கம் தானுன் குணமோ
குறும்பு பேச்சு எதற்கென்றேன்
மேகமாய் மனம் மாறும்வரை
மயக்கம் தெளியாது என்றுரைத்தான்!
அலைகடல் ராகத்தில்
ஆனந்தமாய் இருந்தேன்
நீல வண்ண அலையொன்றை
கண்ணன் உருவில் கண்டேன்
கீதை சொல்லும் சாரமென்ன
அறிந்திட ஆவலென்றேன்
புன்னகை பரிசுடன்
கண்ணனும் நெருங்கி
உள்ளங்கையில் கடல் நீர் முழுவதையும்
அள்ளிவிட ஆசையோ !
உள்ளமெனும் கடலில்
கீதையை படகாக்கு!
உன்னில் எழும்
கேள்விக் கெல்லாம்
இயற்கையிடம்
பதிலுண்டு என சொல்லி
திரும்பி செல்லும் அலையில் சிறு மீனாய்
மறைந்துவிட்டான்!
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment