Friday, 30 August 2019

கணேஷ் ஜி.!!

நேபாளத்தில் பிள்ளையாரை கணேஷ்ஜி என அழைக்கின்றனர். கணேஷ் கோயில்கள் நேபாளத்தில் ஏராளம். அவற்றில் சபாஹில் சந்திர கணேஷ், பந்தாபூர் சூரிய கணேஷ், புங்கமதியில் காரிய கணேஷ், சோபாரில் ஜல்கணேஷ் என நான்கு கோயில் மிகவும் பிரசித்தம். சபாஹில் கிராமத்தில் இருக்கும் சந்திரகணேஷ் மிகவும் சிறிய விக்ரகம். கோபுரம் பித்தளையால் கவசமிடப்பட்டு பளபளக்கிறது. மூஞ்சூறும் பித்தளைதான். பந்தாபூர் சூரிய கணேஷ் அபாரசக்தி கொண்டவர் என நம்பப்படுகிறார். பந்தாபூருக்கு தெற்கே ஒரு மலையடிவாரத்தில் அடர்ந்த காட்டின் நடுவே இந்த கணேஷ் குடியிருக்கிறார். செங்கல், சுண்ணாம்புக் கல்லை இணைத்துக் கோயில் அமைத்துள்ளனர். பேச்சு வராதவர்கள் இங்கு வந்து சூரிய கணேஷை மனமார வேண்டிக் கொண்டால், கணேஷின் அபார சக்தியால் விரைவில் அவர்கள் பேசுவார்களென நம்புகின்றனர். 


புங்கமதி கணேஷும் காட்டில் தனியாக அமர்ந்துள்ளார். இவரை காரிய கணேஷன் என்று அழைக்கின்றனர். மலையின் மீது அமர்ந்துள்ள இவரைக் குடும்பத்துடன் வணங்குகிறார்கள். கஷ்டமான வேலைகளில் ஈடுபடும்போது அது சுலபமாய் முடிய வேண்டுமென இவரை வேண்டுகின்றனர். சோபாரிலுள்ள ஜல்கணேஷ் ஒரு பெரிய பாறையில் செதுக்கப்பட்டுள்ளார். மனக்கட்டுப்பாடு ஏற்பட வேண்டும், தீய எண்ணங்கள் ஒழிய வேண்டும் என இந்த கணேஷிடம் வேண்டிக் கொள்கிறார்கள். 1602-ம் ஆண்டு கட்டப்பட்ட இக்கோயிலுக்குப் பலர் வந்து செல்கிறார்கள். இங்கு சிவன் சிலையும் உள்ளது. பல நூற்றாண்டுகளாக வழிபாட்டிலுள்ள கோயில் இது. நேபாளத்தில் இந்த கணேஷர்களைத் தரிசிக்க வேண்டுமென்பதற்காகவே சுற்றுலா வருவோரும் உண்டு...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment