கடலூர் வண்ணாரப்பாளையத்தில் கம்பீரமாக கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் சர்வ வல்லமை படைத்த அம்மனாக விளங்குகிறார். 200 ஆண்டுகளுக்கு முன் அம்பாள் கோயில் கொண்டுள்ள இடம் நீர் நிலைகள் நிரம்பி மரங்கள் அடர்ந்த காட்டுப்பகுதியாக இருந்தது. அப்போது வேப்ப மரங்களும்புற்றுகளும் நாகம் விளையாடும் இடமாக இருந்த இடத்தில் தான் அருள் கொண்டிருப்பதாக அப்பகுதி மக்களுக்கு முத்துமாரியம்மன் உணர்த்தினார். அதனை அடுத்து அங்கு கோயில் எழுப்பி ஊர் மக்கள் வழிபட்டு வந்தனர். அவ்வழியாக செல்பவர்களுக்கு அச்சம் போக்கி நானிருக் கிறேன் என்று நம்பிக்கை தரும் தாயாக இருந்து வருகிறார். இதனால் விவசாயிகள், மீனவர்கள் இக்கோயிலில் வழிபட்டுவிட்டுத்தான் தங்கள் வேலைகளை தொடங்குவர். இன்று அக்கோயில் ஆகம முறைப்படி புதுப்பிக்கப்பட்டு கம்பீரமாக காட்சி அளிக்கிறது.
இக்கோவிலின் தெய்வ ரகசியம் ஞான சக்தி, கிரியா சக்தி, இச்சா சக்தி மூன்றையும் உள்ளடக்கி முத்துமாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இங்கு காவல் தெய்வமாக காத்தவராயன் சாமி உள்ளது.
வடக்கு பார்த்து அம்மன் அருள்பாலிப்பது மிகவும் சிறப்பு. அம்மன் சன்னதிக்கு முன்பாக சிங்கம் சிலை அமைந்திருப்பது அம்மன் ஆக்ரோஷமானவர் என்பதை உணர்த்துவதாக உள்ளது. அக்காலத்தில் கொள்ளை நோய்கள் ஏற்பட்டபோது இந்த முத்துமாரியம்மன் மக்களை நோய்களில் இருந்து காத்து ரட்சித்தார் என்று முன்னோர்கள் கூறுகின்றனர், அம்மன் சன்னதிக்கு முன்பாக 24 மணி நேரமும் எரிந்து கொண்டிருக்கும் அணையா விளக்கு உள்ளது.
மேலும் அத்திமரத்தால் செய்யப்பட்ட சிம்மவாகனம் இங்கு அமர்ந்திருப்பது மிகவும் சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது. திருமணம் ஆகாதவர்கள் இந்த கோவிலில்அம்மனுக்கு தங்க திருமாங்கல்ய பொட்டு சாற்றி வழிபட்டால் திருமண தடைகள் அகன்று விரைவில் திருமணம் நடந்தேறுவதாகவும், நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்கள் இந்த கோயிலுக்கு வந்து 48 நாட்கள் நெய் தீபமேற்றி அம்மனை மனமுருக வேண்டிக்கொண்டால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பதும் ஐதீகமாக உள்ளது.
இந்த கோவில் அருகில் அரச மரம், வேப்ப மரத்தின் அடியில் நாகதோஷம் தீர்க்கும் நாகரும் விநாயகரும் உள்ளனர். முத்துமாரியம்மன் கோவிலில் மாதந்தோறும் நடைபெறும் பௌர்ணமி பூஜை பிரசித்தி பெற்றது. அன்று நடக்கும் சிறப்பு யாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் பில்லி சூனியம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அவற்றில் இருந்து விடுபட்டு நல்வாழ்வு பெறுகிறார்கள். ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. இந்த கோவிலில் நவராத்திரி விழா மற்றும் மாசி மாத உற்சவ விழா போன்ற நிகழ்ச்சிகள் விமரிசையாக நடைபெறும். இது போல் ஆடிப்பூர விழாவன்று அம்மனுக்கு நடைபெறும் வளையலணி விழாவில் ஏராளமான பெண்கள் பங்கேற்று வழிபாடு செய்கின்றனர். ஆடி மாத செடல் உற்சவம், சாகை வார்த்தல் விழாவும் சிறப்பாக நடத்தப்படுகிறது. செல்வது எப்படி? கடலூர் பேருந்து நிலையத்தில் இருந்து தேவனாம்பட்டினம் செல்லும் சாலையில் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வண்ணாரபாளையம் என்ற இடத்தில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. பேருந்து வசதி உண்டு...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment