Wednesday, 31 July 2019

பித்ரு தர்ப்பணத்தின் முக்கியத்துவம்.!!

ஆடி அமாவாசையன்று, `பித்ரு’ எனப்படும் முன்னோருக்கு தர்ப்பணம், சிரார்த்தம் முதலானவை செய்யப்பட வேண்டும்.

அமாவாசை என்பது இந்துக்கள் இறந்து போன முன்னோருக்கு (பித்ருக்களுக்கு) பூஜை செய்யும் நாளாகும். அமாவாசையன்று பித்ருக்களுக்கு செய்யும் பூஜை மூலமாக அவர்கள் குடிநீர் பெறுவதாக நம்பப்படுகிறது. பண்டைக்காலம் முதலே பித்ருக்களுக்கு திதி கொடுப்பது அவர்களுக்கு சாப்பாடு கொடுப்பதாகவும். அமாவாசை பூஜை மூலம் அவர்களுக்கு குடிநீர் கொடுக்கப்படுவதாகவும் நம்பப்பட்டு வருகிறது.

அமாவாசையில் ஆடி அமாவாசை சிறப்பானதாக கருதப்படுகின்றது. ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதங்களாக கருதப்படுவதால் அப்போது பித்ருக்களுக்கு பூஜை செய்வதன் மூலம் அம்மன் அருளும், பித்ருக்கள் அருளும் கிடைக்கும் என்ற நம்பிக்கை காரணமாக ஆடி அமாவாசை சிறப்பானதாக கருதப்படுகின்றது.

ஆடி அமாவாசையன்று, `பித்ரு’ எனப்படும் முன்னோருக்கு தர்ப்பணம், சிரார்த்தம் முதலானவை செய்யப்பட வேண்டும். ஆடி அமாவாசை அன்று தீர்த்தங்களில் எள்ளை விடுகின்றனர். வாழைக்காய் உள்ளிட்ட சில காய்கறி வகைகளைப் படைகின்றனர். விளக்கு முன் பெற்றவர்களின் படங்களை வைத்து உணவு படைத்து பூஜை செய்கின்றனர்.

காகங்களுக்கும், ஏழைகளுக்கும் உணவளிக்கின்றனர். நம் முன்னோர் தங்கியிருக்கும் இடம், `பித்ரு லோகம்‘ எனப்படும். அங்கே, `பித்ரு தேவதைகள் இருக்கின்றனர். நம் உறவினர் ஒருவர் இப்போது பசுவாகப் பிறந்திருந்தால் நாம் அனுப்பும் பொருள் வைக்கோலாகவும், குதிரையாக பிறந்திருந்தால் கொள்ளாகவும்.

யானையாக பிறந்திருந்தால் கரும்பு, தென்னை ஓலை என ஏதோ ஒரு வடிவமைப்புக்கு மாற்றப்பட்டு, நாம் தர்ப்பணம் செய்யும் பொருள் போய் சேர்ந்து விடும். இதை சேர்க்கும் வேலையை, `பிதுர் தேவதைகள்’ செய்கின்றனர். இதற்காகவே, இவர்களை கடவுள் நியமித்திருக்கிறார். இறப்புக்கு முன் நம் பெற்றோருக்கு எத்தனையோ சேவை செய்கிறோம். அது இறப்புக்கு பின்னும் தொடர வேண்டும்.

கிராமங்களில் இன்றும் ஒரு வழக்கம் உண்டு. யாராவது தன் சகோதரிகளைக் கன்னிப்பருவத்தில் இழந்து விட்டால், அவர்களுக்கு புடவை, தாவணி, பாவாடை படைத்து வழிபடும் வழக்கம் இருக்கிறது. இந்த புடவையை ஒரு பெட்டியில் வைத்து, ஒரு வருடம் வரை வீட்டில் ஒரு மூலையில் தொங்க விடுவர்.
அந்தப் பெண் இந்த புடவையை பயன்படுத்திக் கொள்வாள் என நம்புகின்றனர். பிதுர் தர்ப்பணம் செய்யா விட்டால் பிதுர்களால் நமக்கு கிடைக்கும் ஆசி கிடைக்காமல் போய்விடும். எனவே, ஆடி அமாவாசையன்று மறக்காமல் உங்கள் மூதாதையருக்கு ராமேஸ்வரம், பாபநாசம், கன்னியாகுமரி, வேதா ரண்யம் மற்றும் நதிக்கரை, கடற்கரை தலங்களுக்கு சென்று தர்ப்பணம் செய்யுங்கள். மறைந்த மூதாதையர்களின் ஆசி, உங்களுக்கு நிரம்பகிடைக்கட்டும்.

தர்ப்பணம் செய்வது எப்படி?

மறைந்த முன்னோர்களுக்கு வருஷ திதி, தர்ப்பணங்கள் ஆகியவற்றை எவ்வாறு முறைப்படி செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் அறிய வேண்டும். தர்ப்பை புல்லை வைத்து, அதில் பித்ருக்களை ஆவாஹனம் செய்து எள்ளும் நீரும் தருவதை தர்ப்பணம் என்பார்கள். இறந்தவர் தினம் தெரியவில்லை என்றால், மிருகசீரிடம் மற்றும் மக நட்சத்திரத்தில் தர்ப்பணம் செய்யலாம்.

எத்தனை பூஜைகள் செய்தாலும், பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளைச் செய்யாவிடில் அது பலனை தராது. காரை இலை, உளுந்து, முப்பழம், காய், கிழங்கு, செந்நெல், வெல்லம், கோதுமை, நவதானியம், எள், பசும்பால், பாகற்காய், பலாக்காய், மாங்காய், மாதுளம் பழம், கறிவேப்பிலை, எலுமிச்சை, வாழைக்காய், இலந்தை, நெல்லி, திராட்சை, மிளகு, தேன், நெய், கண்டங்கத்திரி, கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சேனைக்கிழங்கு, சீரகம், ஏலம், அவரை, பிரண்டை, தூதுவளை, இஞ்சி, வாழைத்தண்டு, பசுந்தயிர், வள்ளிக்கிழங்கு போன்றவை சிராத்தப் பண்டங்களாகும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

தினமும் காக்காவுக்கு உணவிடுங்கள்.!!

அமாவாசை அன்று மட்டும் அல்ல, தினமும் காகத்திற்கு உணவிட்டு தான் நாம் உண்ணுதல் வேண்டும். அம்மாவாசை அன்று மட்டும் அல்லாமல் தினமும் நமது மூதாதையர்களை நினைத்து நமது வேலைகளை தொடங்குதல் வேண்டும்.


அமாவாசை தினத்தில் மறைந்த நமது முன்னோர்கள் அவர்களது சந்ததிகள் முன்னேற, தடைகள் அகல, பல வித தோஷங்கள் நிவர்த்தி பெற இந்த உலகிற்கு அவர்கள் அந்த தினத்தில் எந்த ரூபத்திலாவது வந்து அருள் புரிவார்கள் என்பது ஐதீகம். அதனால் தான் அன்று காகம் போன்றவற்றிக்கு உணவிட்டு பின்பு நாம் உணவு அருந்த வேண்டும் என்ற சம்பிரதாயம் கடை பிடிக்கப்படுகிறது.

அமாவாசை அன்று மட்டும் அல்ல, தினமும் காகத்திற்கு உணவிட்டு தான் நாம் உண்ணுதல் வேண்டும். அம்மாவாசை அன்று மட்டும் அல்லாமல் தினமும் நமது மூதாதையர்களை நினைத்து நமது வேலைகளை தொடங்குதல் வேண்டும்.

திருமணத்தடை, குழந்தை பிறப்பு தாமதம், வறுமை, நீடித்த நோய் தொல்லை போன்றவை விலக நமது முன்னோர்களுக்கு சரியான முறைப்படி பித்ருபூஜை செய்தால் நல்ல முன்னேற்றத்தை காணலாம். நமது முன்ஜென்ம பாவங்கள் அனைத்தும் ஆடி அமாவசை அன்று முறையான பித்ரு பூஜை மூலம் விலகும்.
இன்று நமக்கு இருக்கும் நோயில்லாத வாழ்வு, நேரத்திற்கு உண்பது போன்றவை நமது முன்னோர்களின் ஆசியினால் என் பதால் அவர்களை ஆடி அமாவாசை போன்ற காலங் களில் வணங்குவது சிறந்தது.

பித்ருபூஜை செய்வது ரொம்ப கஷ்டமான காரியம் அல்ல..காய்கறிகள் தானமாக தர வேண்டும் , குறிப் பாக பூசணிக்காய்.. ஏனெனில் அதில் தான் அசுரன் குடியிருப்பதாக பண்டைய நூல்கள் கூறுகின்றன.. பூஜைக்கு பிறகு இல்லத்தில் இருக்கும் நமது முன்னோர் படங்களுக்கு துளசி சமர்பிக்க வேண்டும்.. அதன் மூலம் பெருமாளின் ஆசிர்வாதத்தை பெற்று நமது முன்னோர்கள் மனதார வாழ்த்துவார்கள்.. முன்னோர்களுக்கு பிடித்த உணவை படைத்து வணங்கி அதை காக்கைக்கு வைத்த பிறகே நாம் சாப்பிட வேண்டும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

அமாவாசைக்கு கடலில் ஏன் புனித நீராட வேண்டும்?

ஆடி, தை அமாவாசை தினங்களில் எல்லா இடங்களிலும் கடல் நீராடலாம். மற்ற நாட்களில் கடலில் நீராடுதல் கூடாது. அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.


ஆடி அமாவாசை மிகவும் முக்கியமான திதியாகும். இந்நாட்களில் முப்பத்து முக்கோடி தேவர்கள் தாமாக முன் வந்து மனிதர்களுக்கு சக்தி அளிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆடி அமாவாசை தினத்தன்று தேவர்கள் பூலோகத்தில் மானுட ரூபத்திலும் வேறு வடிவங்களிலும் வந்து பலவிதமான புண்ணிய நதிகளிலும் கடல் நீரிலும் நீராடி, தங்கள் தேவ சக்திகளை பூலோகத்துக்கு அர்ப்பணிக்கின்றனர்.

தினமும் கடலில் நீராடுதல் கூடாது. ஆனால், ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், தனுஷ்கோடி தீர்த்தம் போன்ற புனித கடல் தீர்த்தங்களுக்கு விதிவிலக்கு உண்டு. ஆடி, தை அமாவாசை தினங்களில் எல்லா இடங்களிலும் கடல் நீராடலாம். மற்ற நாட்களில் கடலில் நீராடுதல் கூடாது.

இன்றைக்கு கடல் நீர் மட்டும் இவ்வளவு உப்புத் தன்மை கொள்ளாவிட்டால் உலகமே அசுத்தமாய், மாறி விடும். ஏனெனில், அனைத்து வித கழிவையும் தன்னுள் ஏற்று அவற்றை சுத்திகரிப்பதாய் அமைந்திருப்பதே கடல் நீராகும்.

எனவே உப்பு சக்தி என்பது தீவினைகளைக் கழிக்கும் ஒரு தெய்வீக சக்தியாகும். இந்த சக்தியை லவண லோகத்திலிருந்து பெற்றுத் தருவதே சமுத்திரராஜனின் தேவாதி தேவ கணங்களாகும். இவர்கள் யாவரும் ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் லவண லோகத்தில் இருந்து வந்து கடலில் பிரசன்னமாகி தம் லவண அமிர்த சக்தியை நீராடுபவர்களுக்கு அளித்துச் செல்கின்றனர்.

எவ்வாறு கடல் நீரானது அனைத்துவித மாசுகளையும் நீக்கி, அதில் உள்ள நச்சுத்தன்மையை அகற்றுகிறதோ, அதேபோல் அமாவாசை தினங்களில் கடல் நீராடுதலால் ஒருவரது மன அழுக்கு நீங்கும்.

ராமேசுவரத்தில் உள்ள அக்னித் தீர்த்தமானது, ‘ஜலாக்னி’ என்ற கணக்குப் புலப்படாத சூட்சும ஜல ரூப அக்னியைத் தன்னுள் கொண்டதாகும். பாதரசம் எனப்படும் அபூர்வமான திரவ வடிவ உலோக சக்தி நிறைந்த ஜலாக்னி சக்தியைக் கொண்டுள்ளது. எத்துணை கொடிய தீவினைகளையும் எரித்து சாம்பலாக்கும் சக்தியும் கொண்டாகும். பலவித கர்ம வினைகளை நாம் பல பிறவிகள் எடுத்து அனுபவித்தே கழிக்க வேண்டும். ஆனால், இவற்றுள் பலவற்றை ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் நீராடுவதன் மூலம் எளிதில் கரைத்து விடலாம்.

எனவே ஆழ்ந்த நம்பிக்கையுடன் ஒவ்வொரு அமாவாசை தினத்திலும், வேதாரண்யம், ராமேஸ்வரம், தனுஷ்கோடி போன்ற புனித கடல் தீர்த்தங்களில் நீராடி புண்ணியம் பெறலாம். ‘மச்ச தேவ சக்தி’ என்கிற தெய்வீக சக்தியை கடலில் நீராடுவதன் மூலமாக மட்டுமே பெற இயலும்.

பாற்கடலில் ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும், அங்கு வாழ்கின்ற தெய்வீக மீன்களில் ஒன்றிரண்டை தேவாதி தேவர்கள் பூலோக நல்வாழ்வுக்கு அர்ப்பணிக்கின்றனர். அவை பாற்கடலில் இருந்து பூலோகத்தை அடையும் உத்தம தினமே ஆடி அமாவாசை ஆகும்.

எனவே, ஒவ்வொரு ஆடி, அமாவாசையிலும் பாற்கடலில் உறையும் ஜீவ ஒளிப்பிரமாணங்கள் பூலோகத்தை வந்தடைகின்றன. அந்த ஜீவ ஒளி சக்தியை நாம் பெறவும் இப்புனித நீராடல் பெரிதும் உதவும்.

மேலும் இந்த உலகில் சூரியன், சந்திரன் மற்றும் நவகோளங்கள், நட்சத்திரங்களின் ஒளி, வெப்ப, ஆன்ம சக்தியைத் தன்னுள் ஈர்க்கும் சக்தி நதிகளுக்கும், கடலுக்கும் மட்டுமே உண்டு. எனவேதான், மலைக்கோவில்களுக்கும், மலைகளுக்கும், கடல் நீருக்கும் அபூர்வ சக்திகளை இறைவன் அளித்துள்ளான்.

எனவே வரும் ஆடி அமாவாசையன்று முக்கிய கடல் தீர்த்தங்களில் நீராடினால், பலவித தீவினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். மேலும் தெய்வீக சக்தியையும் அனுக்கிரமாகப் பெற முடியும்.

ஆடி அமாவாசை தினத்தன்று கடலில் நீராடி, கொன்றை மலரைப் பரப்பி அதன் மேல் தர்ப்பைச் சட்டம் அமைத்து தர்ப்பண மிட்டு தேங்காய் எண்ணை, சீப்பு தானமாக அளித்தால் ஆபத்துகள் நீங்கி, எடுத்த காரியம் வெற்றி பெறும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

தர்ப்பணம், சிரார்த்தம் பற்றிய 30 தகவல்கள்.!!

துவாதியைவிட அமாவாசையும், அமாவாசையை விட தாய் தந்தையருக்கு சிராத்தம் செய்யும் நாட்களும் மிகவும் புண்ணியங்களைத் தரும்.


1. வீட்டில் பசியால் வாடும் தனது வயதான பெற்றோர்களுக்கு சாப்பாடு கொடுக்காமல் தெய்வத்திற்கு சர்க்கரைப் பொங்கல் போன்ற பொருட்களை நிவேதனம் செய்வதாலும் ஆடை இன்றி பெற்றோர்கள் கஷ்டப்படும் போது தெய்வங்களுக்கு பட்டு வஸ்திரங்களை அணிவிப்பதாலும் எந்த பலனும் கிடைக்காது. பித்ரு தோஷம்தான் ஏற்படும்.

 2. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் தர்ப்பணம் நடைபெறும் நாளுக்கு முன்பாக தர்ப்பணம் செய்பவர் தனது வீட்டில் தினசரி தெய்வங்களுக்கு செய்யும் பூஜையைத் தவிர வேறு எந்த ஒரு விசேஷமான பூஜைகளையோ ஹோமத்தையோ செய்யக் கூடாது.

 3. தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் சிரார்த்தம் செய்யும் முன்பாக தங்கள் வீட்டு மங்கள நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.

 4. தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடை பெறும் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக் கூடாது. 

5. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து மூடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை நிறுத்தி வைத்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமான பூஜைகளைச் செய்ய வேண்டும். 

6. சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசையன்று பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.

 7. அமாவாசை திதியை பித்ரு திதி என்று கூறி அன்றைய நாளில் இறந்தவர்களின் பசியையும் தாகத்தையும் போக்க கறுப்பு எள் கலந்த தண்ணீரால் தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் இறந்தவர் களின் பசியும் தாகமும் விலகி ஆசி வழங்குவார்கள்.

 8. அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரப்படவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைந்து வருத்தப்பட்டு கோபத்தோடு செல்கிறார்கள் என்றும், ஒரு சில பித்ருக்கள் சாபம் கூட தந்து விட்டுச் செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. 

9. மறைந்த முன்னோர்களுக்கு நாம் செய்யும் சிரார்த்தங்களும், தர்ப்பணங்களும் நமது குடும்பத் தினரின் நன்மைக்காவே செய்யப்படுகிறது. அகவே தவறாது சிரார்த்தத்தையும் தர்ப்பணங்களையும் செய்ய வேண்டும். 

10. ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு நாட்கள். இவைகளில் 14 மன்வாதி நாட்கள், யுகாதி நாட்கள் 4, மாதப்பிறப்பு நாட்கள் 12, அமாவாசை 12, மஹாளய பட்சம் 16, வ்யதீபாதம் 12, வைத்ருதி 

11, அஷ்டகா 4, அன்வஷ்டகா 4, பூர்வேத்யு 4 நாட்கள். இந்த நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

12. இந்த 96 நாட்களை விட மிக மிக உத்தமமான நாள் என்பது தாய் தந்தையருக்கு சிரார்த்தம் செய்ய வேண்டி நாள்தான்.

13. துவாதியைவிட அமாவாசையும், அமாவாசையை விட தாய் தந்தையருக்கு சிராத்தம் செய்யும் நாட்களும் மிகவும் புண்ணியங்களைத் தரும். ஆகவே அதிக புண்ணி யங்களைத் தரும் தந்தையரின் சிரார்த் தத்தை எக்காரணம் கொண்டும் செய்யாமல் விட்டு விடக் கூடாது.

14. ஒருவன் தனது தாய் தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல் எனக்குச் செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை என விஷ்ணுவும் சிவனும் கூறியுள்ளனர். 

15. இறந்தவருக்கு வருஷம் ஒரு முறையாவது சிரார்த்தத்தைச் செய்ய வேண்டும். ஏனென்றால் அன்றைய நாளன்று இறந்த ஜீவன் காற்று வடிவில் இறந்தவரின் குழந்தைகள் வாழும் வீட்டின் வாசலில் வந்து அவர்கள் செய்யும் சிராத்தத்தில் தரும் உணவை சாப்பிடுவதற்காக காத்துக் கொண்டிருக்குமாம். 

16. சிரார்த்தம் செய்ய எந்த ஒரு வசதியும் இல்லாதவர்கள் கருப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணமாக செய்யலாம்.

17. சிரார்த்தம் நடத்தப்படும் இடம், சிராத்தம் செய் யும் நேரம், சிரார்த்தத்தில் பித்ருக்களாக பாவித்து பூஜிக்கப்படும் நபர், சிரார்த்தத்தில் உபயோகிக்கும் பொருட்கள், சிராத்தம் செய்யும் நபர் ஆகியவை சிரார்த்தத்துக்கு முக்கியமானவை. இவைகள் தூய்மையானவைகளாக இருந்தால் சிரார்த்தத்தின் முழுமையான பலன்கள் கிடைக்கும். 

18. பித்ருக்களை சிரார்த்தம் செய்ய வேண்டிய நாளன்று முறையாக ஹோமம் செய்து சாப்பாடு போட்டு சிரார்த்தம் செய்து அவர்களுக்கு உணவளித்து, அவர்களை திருப்தி செய்தால் அவர்கள் அவர்களது குடும்பத்தினருக்கு நீண்ட ஆயுள், அழியாப்புகழ், உடல் வலிமை, செல்வம், பசுக்கள், சுகம், தானியங்கள் ஆகியவற்றை தருகிறார்கள்.

19. நமது பித்ருக்களிடத்தில் சிரார்த்தத்தை சிரத்தையுடன் செய்வதாகவும், நல்ல உயர்ந்த ஆடை, தீர்த்த பாத்திரம் சிரார்த்தத்தில் வாங்கி த்தருவதாகவும், பிரார்த்தனை செய்து கொண்டு அவ்வாறே சிரார்த்தத்தை நடத்தினால் நிச்சயம் உங்கள் விருப்பம் நிறைவேறும். விரும்பிய பலன் கைகூடும். 

20. இறைவனின் ரூபமான தேவதைகளை விட பித்ருக்கள் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவர்கள். எனவே முதலில் உங்கள் மறைந்த முன்னோர் வழிபாட்டை பிரதானமாக நடத்துங்கள். 35. சிரார்த்தம், தர்ப்பணம் செய்யாதவன் சண்டாள னாகப் பிறப்பான் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. 

21. எள், உப்பு, பொன், பருத்தி ஆடை, இரும்பு ஆகியவற்றை தானம் அளிப்பது மிகவும் நல்லது. தானம் பெற வருபவரை மிகுந்த மரியாதையுடன் நடத்தி தானமளிக்க வேண்டும். 

22. பித்ருக்கள் எங்கிருந்தாலும் சரி, தத்தம் சந்ததியருடைய நல்வாழ்விற்காகப் பாடுபடுகின்றனர் என்பதில் எள்அளவும் சந்தேகம் கிடையாது. 

23. மங்கள நிகழ்ச்சிகள் நம் வீட்டில் நடக்கும் பொழுது முதலில் பித்ருக்களின் ஆசியை நாம் முழுமையாக பெற வேண்டும். இது மிக, மிக முக்கியம். 
24. துவாதசி பன்னிரெண்டாம் நாளன்று பித்ரு பூஜை செய்பவன் சொர்ண லாபம் பெறுவான். 

25. திரயோதசி பதிமூன்றாம் நாளன்று பித்ரு காரியங்களை சரிவர நடத்துபவனுக்கு அறிவு, ஞான சக்தி, பசுக்கள் தேக ஆரோக்கியம், சுதந்திரத்தன்மை, சிறந்த விருத்தி, தீர்க்கமான ஆயுள் பலம், ஐஸ்வர்யம், அனைத்து பலன்களும் தவறாமல் கிடைக்கும்.

 26. சதுர்த்தசி அன்று பித்ரு வழிப்பாட்டை சிறப்பாக செய்பவர்களுக்கு அவர்களுடைய பித்ருக்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டு இறந்திருந்தால் திருப்தி அடைவார்கள். 

27. கோவில்கள், குளங்கள், கடல் போன்ற இடங்களில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு மிக அதிகமான சக்தி உண்டு.

28. திருவாலாங்காடு, திருவள்ளூர், ராமேஸ்வரம், திருமயம் அடுத்து வரும் அரண்மனைப்பட்டி, திருவண்ணாமலை, திருவிடைமருதூர், காசி, திருநள்ளாறு ஆகிய இடங்களில் தர்ப்பணம் செய்வது மிக சிறந்தது.

29. திலதர்ப்பணபுரி எனும் ஊரில் (திருவாரூர்- பூந்தோட்டம் இடையில் உள்ளது) தர்ப்பணம் செய்வது மிக, மிக விசேஷமாக கருதப்படுகிறது. இங்கு ஸ்ரீராமரும் லட்சுமணரும் தம் தந்தையான தசரத மகாராஜாவிற்கு தர்ப்பணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

30. மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய நான்கு மாதங்களிலும் கிருஷ்ணபட்ச அஷ்டமி திதியன்று அஷ்டகை எனப்படும் சிரார்த்தம் செய்ய வேண்டும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

அண்ணன்-தம்பி தனித்தனியே சிரார்த்தம் செய்யலாமா?

மறைந்த பெற்றோருக்கு செய்யும் பித்ரு தர்ப்பண, சிரார்த்தங்களை அண்ணன்-தம்பிகள் தனித்தனியாக செய்யலாமா? அல்லது ஒன்றாக நின்றுதான் செய்ய வேண்டுமா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.


உலகம் நவீனமாக மாற, மாற அன்பும், அரவணைப்பும் குறைந்து வருகிறது. ஒரு காலத்தில் அண்ணன்-தம்பி என்றால் அப்படி ஒரு அன்யோன்யமாக இருப்பார்கள். 

ஆனால் இப்போதெல்லாம் அண்ணன்-தம்பி பாசம் என்பது அளவு எடுத்தது போல ஆகி விட்டது. பொது இடங்களில் கூட கடமைக்காக சிலர் அண்ணன் தம்பியாக வந்து நிற்பார்கள். 

இத்தகைய நிலையில் பெற்றோருக்கு செய்யும் பித்ரு தர்ப்பண, சிரார்த்தங்களை அண்ணன்-தம்பிகள் தனித்தனியாக செய்யலாமா? அல்லது ஒன்றாக நின்றுதான் செய்ய வேண்டுமா என்ற சந்தேகம் ஏற்படலாம். அண்ணன்-தம்பிகள் தனித்தனியாக சிராத்தம், தர்ப்பணம் போன்ற பித்ரு கடமைகளை செய்யலாம். அண்ணன், தம்பிகளில் சிலருக்கு தர்ப்பணம் கொடுக்க வசதி-வாய்ப்பு இல்லாமல் இருக்கலாம். 

அப்படிப்பட்டவர்கள் யாராவது ஒரு சகோதரருடன் சேர்ந்து கொண்டு அவர் கொடுக்கும் தர்ப்பண பூஜைகளில் கலந்து கொண்டு பலன் பெறலாம். பொதுவாகவே அண்ணன் தம்பிகள் ஒற்றுமையாக இருந்தால்தான் பலம். அவர்கள் ஒன்றிணைந்து கொடுக்கும் தர்ப்பணம், சிரார்த்தத்துக்கு சக்தி அதிகம். பிள்ளைகள் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்றாக நின்று நம்மை நினைத்து வழிபடுகிறார்கள் என்பதைப் பார்க்கும் போது பித்ருக்களுக்கு அளவற்ற மகிழ்ச்சி உண்டாகும். அந்த மகிழ்ச்சியில் அளவற்ற பலன்களை நமக்கு தந்து அருள்வார்கள்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

சக்தி பீடம் : கமலாம்பிகை.!!

சக்தி பீடங்களில் கமலை சக்தி பீடம் என்றழைக்கப்படும் கமலாம்பாள், தியாகராஜர் திருக்கோயில் பல்வேறு வரலாற்று சிறப்புகளை உள்ளடக்கியது. பஞ்சபூத தலங்களில் பூமிக்கான திருத்தலமாக விளங்குகிறது. திருவாரூர் தேர் அழகு என்ற ஒரு வார்த்தை போதும் இதன் பெருமையை பறைசாற்ற. இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்று. திருவாரூர் திருக்கோயில் தோன்றிய காலத்தை கணித்து கூறமுடியாது என்று திருநாவுக்கரசரே வியந்து கூறியுள்ள தலம் இது.
சப்த விடங்கத் தலங்கள் ஏழில் திருவாரூரே முதன்மையான கோயிலாகும். தேவாரப்பாடல்களில் அதிக பாடல்களை இத்தலம் பெற்றிருக்கிறது. லலிதா சகஸ்ர நாமத்தின் மொத்த வடிவமாக இத்தலத்து அம்பிகை விளங்குவதால், இங்கு அம்பிகை கமலாம்பிகையாக விளங்குகிறாள். நவக்கிரகங்கள் அனைத்தும் ஒரே கோட்டில் அமைந்து காட்சி தருவதும் இத்தலத்தில்தான். இத்தலத்தில் மட்டும் மாலை, 4.30 மணி முதல் 6.00 மணி வரை தினமும் பிரதோஷ பூஜைகள் நடத்தப்படுகிறது.

தல வரலாறு:

தேவலோகத்தில் இந்திரனுக்கு அசுரர்களால் அவ்வப்போது ஆபத்து ஏற்படுவதும், நீங்குவதும் இயல்பானது. ஒருமுறை இந்திரனுக்கு அசுரர்களால் ஆபத்து ஏற்பட்டபோது, முசுகுந்த சக்கரவர்த்தியின் உதவியோடு இந்திரன் தப்பினான். தன்னை இக்கட்டில் இருந்து காப்பாற்றிய முசுகுந்த சக்கரவர்த்திக்கு கைம்மாறாக ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பி என்ன செய்வது என்று கேட்டான்.
முசுகுந்தரோ பெருமாள் தன்னுடைய நெஞ்சில் கைவைத்து பூஜித்த விடங்க லிங்கத்தைப் பரிசாக கேட்டார். தேவர்கள் பூஜிக்கும் இறை லிங்கத்தை மானிடர்களுக்கு எப்ப டித் தரமுடியும் என்று நினைத்த இந்திரன், மயனைஅழைத்து இதே போன்று லிங்கத்தை வடிவமைத்துக்கொடு என்றான். அதைப்பெற்றுக் கொண்ட முசுகுந்தருக்கு அவை போலி என்பது தெரிந்துவிடவே, வேறு வழியின்றி உண்மையான லிங்கத்தைக் கொடுத்தான் இந்திரன். அந்த நிஜ லிங்கமே திருவாரூரில் அமைந்துள்ளது.

தலசிறப்பு:

9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப் பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக் கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள், 100க்கு மேற்பட்ட சன்னிதிகள், 86 விநாயகர் சிலைகள், 24 க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் என பிரம்மாண்டமான கோயிலாக விளங்குகிறது.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக காட்சிஅளிக்கிறார்.  தியாகராஜருக்கும் தினமும் அபிஷேகம் கிடையாது. இந்திரன் பூஜித்த மரகத லிங்கத்துக்குத் தான் தினமும் அபிஷேகம் நடக்கிறது. இத்தலத்தில் எட்டு துர்க்கைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. முதல் பிரகாரத்தில் மகிஷாசுரமர்த்தினி பிரதான துர்க்கையாக விளங்குகிறாள். மேலும் 2 துர்க்கை சன்னிதியும்  இரண்டாம் பிரகாரத்தில் நான்கும், கமலாம்பாள் சன்னிதியில் ஒன்றுமாக எட்டு துர்க்கை சன்னிதிகள் அமைந்திருப்பது சிறப்பானது.
வன்மீக நாதர் மற்றும் தியாகராஜர் சன்னிதிகள் வன்மீக நாதர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இச்சன்னிதிக்கு வலது புறத்தில் இத்தலத்தின் பிரதான மூர்த்தி தியாகராஜர் சன்னிதி அமைந்திருக்கிறது. இந்த சன்னிதியின் வலதுபுறத்தில் உள்ள பீடத்தில் பெட்டகத்தில் வீதி விடங்கர் மரகத சிவலிங்கம் வைக்கப்பட்டிருக்கிறது. தியாகராஜரின் முகம் மட்டுமே தெரியும். மார்கழி ஆதிரையில் தியாகராஜரின் இடப்பாதத்தையும், பங்குனி உத்திரத்தன்று வலப்பாதத்தையும் தரிசிக்க வேண்டும். மற்ற அங்கங்கள் மூடி வைக்கப்பட்டுள்ளது.
அம்பிகை கமலாம்பிகை திருக்கோயில் மூன்றாவது பிரகாரத்தில் வடமேற்குதிசையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இங்கு அம்பிகை சிரசில் ஈசனைப் போன்று கங்கையையும், பிறையையும் தரித்து யோக வடிவில் அமர்ந்திருக்கிறாள். பராசக்தி பீடங்களுள் ஒன்றான அம்பாள் கோயிலின் மேற்கு மூலையில் அக்ஷரபீடமுள்ளது. இதில் பீடமும்,  51 எழுத்துக்கள் எழுதப்பட்ட திருவாசியும் உள்ளன. இங்கு வந்தால் சில நிமிடங்கள் நின்று தியானித்து செல்ல வேண்டும். ஆடிவெள்ளி, தை வெள்ளி, ஆடிப்பூரம் அன்று அம்பிகையை வழிபட்டால் அருள் உண் டாகும்.

நிலோத்பலாம்பாள் சன்னிதி:

இங்கே அம்பாள் இரண்டு திருக்கரங்களுடன் ஆதிசக்தியாக காட்சி அளிக்கிறாள். தமிழில் அல்லியங்கோதை என்றும் வடமொழியில் நீலோத்பலாம்பாள் என்றும் இவளுக்கு பெயருண்டு. அம்பாளுக்கு இடது புறம் ஒரு சிறுவனை தோளில் வைத்தப்படி ஒரு பெண் காட்சி அளிக்கிறாள். அந்த சிறுவன் மீது அம்பாளின் இடதுகை படிமானமாக இருப்பது போல ஒரே கல்லில் சிலை செதுக்கியிருப்பது வேறு எங்கும் காண முடியாத விசேஷம். அம்பாள் வலதுகையில் குவளை மலரை வைத் திருக்கிறாள்.

தல பிரார்த்தனை:

இங்கிருக்கும் ரெளத்திர துர்க்கை அம்பாள் திருமண வயதை அடைந்த இளம்பெண்களுக்கு உண்டாகும் திருமணத்தடையைப் போக்குகிறாள். ராகு காலத்தில் தனக்கு அர்ச்சனை செய்பவர்களின் குறைகளைத் தீர்த்து வைக்கிறாள்.
நெடுநாள் தீராத கடன் பிரச்னை, வாராக்கடன், தீராத பிணிகள் அனைத்தையும் தீர்த்து வைக்க இங்கிருக்கும் ரண விமோசனர் அருள்புரிகிறார். அமாவாசை அன்று இவருக்கு உப்பு, மிளகு காணிக்கை செலுத்தி வழிபடுகிறார்கள்.
மூலவரான தியாகேஸ்வரரை வணங்கினால் திருமணவரம், குழந்தைவரம், கல்வியில் மேன்மை, வேலைவாய்ப்பு, தொழில்விருத்தி, உத்தியோக உயர்வு ஆகியவை நிறைவு பெறும்.
அம்மன் சன்னிதியில் உள்ள அட்சர பீடத்தை வணங்கினால் கல்வியறிவு பெருகும் என்பது ஐதிகம்.
எண்ணற்ற சிறப்புக்களைக் கொண்டிருக்கும் திருவாரூர் தியாகராஜரையும், கமலாம்பிகையையும் தரிசித்து பெறுவதற்கரிய பேறுகளைப் பெறுங்கள்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡