Wednesday, 31 July 2019

அமாவாசைக்கு கடலில் ஏன் புனித நீராட வேண்டும்?

ஆடி, தை அமாவாசை தினங்களில் எல்லா இடங்களிலும் கடல் நீராடலாம். மற்ற நாட்களில் கடலில் நீராடுதல் கூடாது. அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.


ஆடி அமாவாசை மிகவும் முக்கியமான திதியாகும். இந்நாட்களில் முப்பத்து முக்கோடி தேவர்கள் தாமாக முன் வந்து மனிதர்களுக்கு சக்தி அளிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆடி அமாவாசை தினத்தன்று தேவர்கள் பூலோகத்தில் மானுட ரூபத்திலும் வேறு வடிவங்களிலும் வந்து பலவிதமான புண்ணிய நதிகளிலும் கடல் நீரிலும் நீராடி, தங்கள் தேவ சக்திகளை பூலோகத்துக்கு அர்ப்பணிக்கின்றனர்.

தினமும் கடலில் நீராடுதல் கூடாது. ஆனால், ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், தனுஷ்கோடி தீர்த்தம் போன்ற புனித கடல் தீர்த்தங்களுக்கு விதிவிலக்கு உண்டு. ஆடி, தை அமாவாசை தினங்களில் எல்லா இடங்களிலும் கடல் நீராடலாம். மற்ற நாட்களில் கடலில் நீராடுதல் கூடாது.

இன்றைக்கு கடல் நீர் மட்டும் இவ்வளவு உப்புத் தன்மை கொள்ளாவிட்டால் உலகமே அசுத்தமாய், மாறி விடும். ஏனெனில், அனைத்து வித கழிவையும் தன்னுள் ஏற்று அவற்றை சுத்திகரிப்பதாய் அமைந்திருப்பதே கடல் நீராகும்.

எனவே உப்பு சக்தி என்பது தீவினைகளைக் கழிக்கும் ஒரு தெய்வீக சக்தியாகும். இந்த சக்தியை லவண லோகத்திலிருந்து பெற்றுத் தருவதே சமுத்திரராஜனின் தேவாதி தேவ கணங்களாகும். இவர்கள் யாவரும் ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் லவண லோகத்தில் இருந்து வந்து கடலில் பிரசன்னமாகி தம் லவண அமிர்த சக்தியை நீராடுபவர்களுக்கு அளித்துச் செல்கின்றனர்.

எவ்வாறு கடல் நீரானது அனைத்துவித மாசுகளையும் நீக்கி, அதில் உள்ள நச்சுத்தன்மையை அகற்றுகிறதோ, அதேபோல் அமாவாசை தினங்களில் கடல் நீராடுதலால் ஒருவரது மன அழுக்கு நீங்கும்.

ராமேசுவரத்தில் உள்ள அக்னித் தீர்த்தமானது, ‘ஜலாக்னி’ என்ற கணக்குப் புலப்படாத சூட்சும ஜல ரூப அக்னியைத் தன்னுள் கொண்டதாகும். பாதரசம் எனப்படும் அபூர்வமான திரவ வடிவ உலோக சக்தி நிறைந்த ஜலாக்னி சக்தியைக் கொண்டுள்ளது. எத்துணை கொடிய தீவினைகளையும் எரித்து சாம்பலாக்கும் சக்தியும் கொண்டாகும். பலவித கர்ம வினைகளை நாம் பல பிறவிகள் எடுத்து அனுபவித்தே கழிக்க வேண்டும். ஆனால், இவற்றுள் பலவற்றை ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் நீராடுவதன் மூலம் எளிதில் கரைத்து விடலாம்.

எனவே ஆழ்ந்த நம்பிக்கையுடன் ஒவ்வொரு அமாவாசை தினத்திலும், வேதாரண்யம், ராமேஸ்வரம், தனுஷ்கோடி போன்ற புனித கடல் தீர்த்தங்களில் நீராடி புண்ணியம் பெறலாம். ‘மச்ச தேவ சக்தி’ என்கிற தெய்வீக சக்தியை கடலில் நீராடுவதன் மூலமாக மட்டுமே பெற இயலும்.

பாற்கடலில் ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும், அங்கு வாழ்கின்ற தெய்வீக மீன்களில் ஒன்றிரண்டை தேவாதி தேவர்கள் பூலோக நல்வாழ்வுக்கு அர்ப்பணிக்கின்றனர். அவை பாற்கடலில் இருந்து பூலோகத்தை அடையும் உத்தம தினமே ஆடி அமாவாசை ஆகும்.

எனவே, ஒவ்வொரு ஆடி, அமாவாசையிலும் பாற்கடலில் உறையும் ஜீவ ஒளிப்பிரமாணங்கள் பூலோகத்தை வந்தடைகின்றன. அந்த ஜீவ ஒளி சக்தியை நாம் பெறவும் இப்புனித நீராடல் பெரிதும் உதவும்.

மேலும் இந்த உலகில் சூரியன், சந்திரன் மற்றும் நவகோளங்கள், நட்சத்திரங்களின் ஒளி, வெப்ப, ஆன்ம சக்தியைத் தன்னுள் ஈர்க்கும் சக்தி நதிகளுக்கும், கடலுக்கும் மட்டுமே உண்டு. எனவேதான், மலைக்கோவில்களுக்கும், மலைகளுக்கும், கடல் நீருக்கும் அபூர்வ சக்திகளை இறைவன் அளித்துள்ளான்.

எனவே வரும் ஆடி அமாவாசையன்று முக்கிய கடல் தீர்த்தங்களில் நீராடினால், பலவித தீவினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். மேலும் தெய்வீக சக்தியையும் அனுக்கிரமாகப் பெற முடியும்.

ஆடி அமாவாசை தினத்தன்று கடலில் நீராடி, கொன்றை மலரைப் பரப்பி அதன் மேல் தர்ப்பைச் சட்டம் அமைத்து தர்ப்பண மிட்டு தேங்காய் எண்ணை, சீப்பு தானமாக அளித்தால் ஆபத்துகள் நீங்கி, எடுத்த காரியம் வெற்றி பெறும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment