Sunday, 30 June 2019

இறைவன் பொய்யுரைக்கலாமா?

மனிதர்கள் பொய்யுரைக்க கூடாது என்று இந்து தர்மம் சொன்னாலும் நமது பொய்யால் மற்றவர்கள் துன்பம் குறையும் என்றாலோ, யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் நன்மைக்கு என்றாலோ பொய் உரைப்பது தவறில்லை என்கிறார்கள் முன்னோர்கள். மகாவிஷ்ணுவே தன் அவதா ரமான ஸ்ரீ இராம அவதாரத்தின் போது பொய் உரைத்திருக்கிறார். நன்மை கருதி சொன்ன பொய் என்றாலும் இறைவனே பொய் சொல்லியிருக்கி றார் என்பது தான் இங்கு கவனிக்கத்தக்கது.
கைகேயி ஸ்ரீ இராமன் காட்டுக்கு செல்ல வேண்டும் என்று  தசரதனிடம் வரம் கேட்டாள். தசரதன் ஸ்ரீ  இராமனிடம் அஞ்சியபடி அதைத் தெரிவித்தா லும் மனதில் கவலையின்றி மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டார் ஸ்ரீ இராமன். ஸ்ரீ இராமனுக்கு பட்டாபிஷேகம் என்று மக்கள் மகிழ்ந்திருந்த நிலை யில் ஸ்ரீ இராமன் வனவாசம் மேற்கொள்கிறார் என்று கேள்விப்பட்டதும் மக்கள் சொல்லொணாத்துயரை அடைந்தார்கள்.
இன்றிலிருந்து ஸ்ரீ இராமனின் ஆட்சியில் மகிழ்ந்து மலரப்போகிறோம் என்று காத்திருந்த மக்களுக்கு இந்த செய்தி இடி விழுந்தாற் போல் இருந் தது. ஸ்ரீ இராமனைப் பிரிய நாமே இவ்வளவு வேதனைகளை அனுபவிக்கு போது தசரத சக்ரவர்த்தி எவ்வளவு வேதனை அடைவார் என்று நினைத் தார்கள் அரண்மனை வாசிகள். ஆம் சில நாள்கள் கூட ஸ்ரீ இராமரைப் பிரியாத தசரதர் எப்படி 14 ஆண்டுகள் இராமரைப் பிரிந்திருப்பார் என்று கவ லையுற்றார்கள்.
ஸ்ரீ இராமர் வனவாசம் மேற்கொள்ளப்பட்டு தேரில் ஏறி அமர்ந்துவிட்டார். உடன் இலட்சுமணனும், சீதையும் கிளம்பினார்கள். மக்கள் திரண்டு ஸ்ரீ இராமன் நாட்டை ஆள வேண்டும். வனவாசம் போக கூடாது என்று கூச்சல் எழுப்பினார்கள். தேர் நகராமல் தடுத்தார்கள். தசரதர் அரண்மனை உப்பரிகையில் நின்று மக்கள் தடுத்து விட மாட்டார்களா என்று கண்ணீர் மல்க பார்த்துக்கொண்டிருந்தார்.

தசரதருக்கு மட்டுமா வருத்தம் இருந்தது. ஸ்ரீ இராமனுக்கும் தந்தையைப் பிரிவது வருத்தமாக இருந்தது. ஆனாலும் அதை வெளிக்காட்டாமல் அமைதியாக இருந்தார். சுற்றியிருந்த மக்களை அமைதியடையுமாறு கூறி தேரோட்டியிடம் தேர் ஓட்ட பணித்தார். மக்கள் கண்ணீரோடு ஒதுங்கி னார்கள். எப்படியும் கூடிய கூட்டம் தடுத்துவிடாதா என்றிருந்த தசரத சக்ரவர்த்தி தேர் புறப்படுவதை அறிந்து  தேரை நிறுத்துங்கள் என்று கூச்ச லிட்டார்.

தேரோட்டி ஸ்ரீ இராமனைப் பார்த்தான். நீ தேர் ஓட்டுவதில் கவனம் செலுத்து என்றார் ஸ்ரீ இராமன். நீங்கள் சொல்வது போல் நான் தேரை ஓட்டினா லும் மீண்டும் திரும்பி வரும்போது மகாராஜா என்னை தண்டிப்பாரே நான் என்ன செய்வது என்றான். சில விநாடி அமைதியாக இருந்த ஸ்ரீ இராமர் அப்படி கேட்டால் மக்கள் கூச்சல் போட்டதால் தாங்கள் அழைத்தது எனக்கு கேட்கவில்லை என்று சொல்லிவிடு. இன்னும் இங்கு இருந்து கால தாமதம் செய்தால் அவர் மனம் மேலும் வருந்தக்கூடும். என்னுடைய மனமும் துன்பப்படும். அதனால் வேறு வழியில்லை விரைவாக தேரை செலுத்து என்றார்.

ஸ்ரீ இராமரே தேரோட்டியிடம் பொய் உரைக்க கற்றுகொடுத்திருக்கிறார். ஆனால் யாருக்கும் தீங்கு நேராத  நன்மை தரும் பொய் என்பதால் இது ஏற்றுக்கொள்ளக்கூடிய பொய் ஆகிற்று. மனிதர்களாகிய நாம் கூட அப்படித்தான் நாம் சொல்லும் பொய் ஒருவருக்கும் துன்பம் நேரமால் மாறாக நன்மையே தருமானால் அப்பொய்யால் எவ்வித  தீங்கும் உண்டாகாது. இதை நம் புராணங்களும்  ஒப்புக்கொண்டிருக்கின்றன. அதனால் பொய் சொல்லலாம் ஆனால் அவற்றால் தீமை உண்டாக கூடாது...


🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள்.!!

இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள்


புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புதப் படைப்புகளையும் பற்றி இந்தப் பகுதியில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

ஊர்வசி

விவ்ரிசா-அஹிம்சா தம்பதியரின் மகன்களான நர மற்றும் நாராயணா இருவரும் இமயமலைப் பகுதியில் உள்ள வதரிகாசிரமத்தில் தவம் இருந்தனர். அவர்களின் தவத்தைக் கண்டு பயந்து போன இந்திரன், அவர்களது தவத்தைக் கலைப்பதற்காக பல வழிகளில் முயற்சி செய்தான். பேய் மழை பெய்யச் செய்தான், கொடிய வன விலங்குகளை அனுப்பி வைத்தான். 

எதனாலும் அவர்களின் தவம் கலையவில்லை. அதைத் தொடர்ந்து தேவலோக நடன மங்கையான ரம்பையையும், மன்மதனையும் அனுப்பி வைத்தான். அவர்கள் இருவரும் வந்தபோது, அந்த இடமே பூக்களாலும், செடி கொடிகளாலும் செழுமை அடைந்தது. இதனை தவம் கலைந்த முனிவர்கள் இருவரும் கண்டனர். 

முனிவர்களில் ஒருவரான நாராயணா, அங்கிருந்து அழகிய மலர்களில் ஒரு கொத்தை பறித்து, தன்னுடைய மடியில் வைத்து திரித்தார். அந்த மலரில் இருந்து ஒரு பெண் வெளிப்பட்டாள். மிகச்சிறந்த அழகியாக இருந்த அவளே ஊர்வசி. அவளை இந்திரனுக்கு பரிசாக கொண்டு சென்று கொடுக்கும்படி, முனிவர் அனுப்பிவைத்தார்.

உஷா

பானா என்ற மன்னனின் மகள் உஷா. ஒருநாள் இவளது கனவில் அழகான இளவரசன் தோன்றினான். அவன் யார் என்று அறிந்து கொள்ள உஷா விரும்பினாள். அதை தனது தோழி சித்ரலேகாவிடம் கூற, அவள் உலகில் இருக்கும் இளவரசர்களை எல்லாம் ஓவியமாக வரைந்து காண்பித்தாள். அதில் உஷாவின் கனவில் தோன்றிய முகமும் இருந்தது. அவன் பிரத்யும்னா என்ற அரசனின் மகன், அனிருதா. உஷா, அனிருதாவின் மீது காதல் கொள்ள, மாய மந்திரங்களில் ஜாலம் காட்டும் சித்ரலேகா இருவரையும் சேர்த்து வைத்தாள். இந்த விஷயம் அரசர் பானாவிற்கு தெரியவர, அனிருதா சிறையில் அடைக்கப்பட்டான். இருப்பினும் அனிருதாவின் தந்தை பிரத்யும்னா மற்றும் கிருஷ்ணர் ஆகியோர் அனிருதாவை சிறையில் இருந்து மீட்டதோடு, உஷாவையும் அனிருதாவையும் துவாரகாவிற்கு அழைத்து சென்றனர். அங்கு காதல் ஜோடிகள் ஒன்றாக வாழ்ந்தனர்.

உபநிடதங்கள்

பண்டைய தத்துவ இலக்கியமாக உபநிடதங்கள் பார்க்கப்படுகிறது. இந்துக்களின் ஆதார நூல்களின் கீழ் இவை வகைப்படுத்தப்பட்டுள்ளது. வேதங்களின் கடைசி தொகுப்பாக இவை உள்ளன. வேதங்களை சுலபமாக அறிந்து கொள்ள இந்த உபநிடதங்கள் உதவுவதால், இவை ‘வேதாந்தம்’ என்றும் அழைக்கப்படுகிறது. உபநிடதங்கள் என்பதற்கு, குருவிற்கு மிக அருகில் அமர்ந்து படிப்பது என்பது பொருள். அதற்கேற்ப, ஆசிரியர்-மாணவன் உரையாடல் பாணியிலேயே இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது. உபநிடதங்களில் 108 தொகுப்புகள் இருக்கின்றன. இவற்றில் 13 உபநிடதங்கள் மிகவும் பழமையானவையாகவும், கி.மு. 500 ஆண்டுகளுக்கு முந்தையதாகவும் உள்ளன. உபநிடதங்கள் அனைத்தும் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டவை...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

Saturday, 29 June 2019

அம்மை நோயை குணமாக்கும் படவேட்டம்மன்.!!

வேலூர் மாவட்டம் வாலாஜாவில் தன்னை நாடி வரும் பக்தர்ளின் கோரிக்கைகளை தாயுள்ளத்துடன் நிறைவேற்றி தரும் கருணை வடிவாக அருள்பாலித்து வருகிறார் படவேட்டம்மன். தொண்டை மண்டலத்தின் தலைநகரான காஞ்சிக்கு அடுத்தபடியாக கோயில்கள் அதிகம் நிறைந்த ஊர் வேலூர் மாவட்டத்தில் உள்ள வாலாஜா. இந்துக்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறுபட்ட கலாச்சார பின்னணி கொண்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. பாலாற்றின் கரையோரத்தில் பாங்குடன்  அமையப்பெற்ற வாலாஜா படவேட்டம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.  பக்தர்களின் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்து அவர்களின் ஜீவனோடு கலந்து அருள்பாளிக்கிறார் படவேட்டம்மன். 


300 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வூரில் வாணிபத்தில் கொடிகட்டி பறந்த  தனவந்தர் ஒருவர் போளூர் அருகே உள்ள புகழ்பெற்ற படவேட்டம்மன் கோயிலுக்கு அவ்வப்போது சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒருசமயம் அவரால் செல்லமுடியவில்லை. இதனால் அவர் மிகவும் மனம் வருந்தினார். ஊன் உறக்கமின்றி தவித்தார். அப்போது அவரது கனவில் தோன்றிய அம்மன், ‘நீ கவலைப்படாதே, உன்னுடைய இடத்திலேயே வந்து உனக்கு காட்சியளிக்கிறேன்’ என்று கூறினார். இதில் பரவசம் அடைந்து உடனடியாக கண் விழித்து பார்த்தார் அந்த தனவந்தர். அம்பாளே தனக்கு கனவில் வந்து அருள்வாக்கு கூறியதை எல்லோரிடமும் கூறி பரவசப்பட்டார். பின்னர் தனக்கு சொந்தமான நிலத்தில் பார்த்தபோது அங்கு அம்மன் சிலையாக வீற்றிருந்தார். படவேட்டில், தான் தரிசித்த அதே அம்மன் இருப்பதை கண்டு ஆச்சரியத்தில் மகிழ்ந்து போனார். இச்சம்பவம் காட்டுத்தீபோல் பரவ  பல கிராமங்களில் இருந்து மக்கள் அம்மனை தரிசித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

வாலாஜா மற்றும் சுற்றியுள்ள மக்களின் காக்கும் கடவுளாகவும், எல்லையை காத்துவரும் அன்னையாகவும், எண்ணிலடங்கா அதிசயங்களை நிகழ்த்திய அன்னையை நேரில் தரிசிப்பவர்களுக்கு நினைத்த காரியம் கண்டிப்பாக கைக்கூடும்.  போளூர் அருகே படவேடு ரேணுகாம்பாள் கோயிலில் உள்ளது போல் இங்கும், கருவறையில் கருணை பொழியும் தாயாக சிரசு வடிவில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார் படவேட்டம்மன். கோயிலின் வலது பக்கத்தில் 60அடி உயரத்தில் அஷ்ட புஜங்களுடன் படவேட்டம்மனும், இடது புறத்தில் 63அடி உயரத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயரும் விஸ்வரூப தரிசனத்தில்  காட்சி தருகின்றனர்.  

திருமணம், குழந்தை வரம் கேட்டு பக்தர்கள் வேண்டிக்கொண்டால் விரைவில் திருமணமும், குழந்தைபேறும் கிடைக்கும். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரதமிருந்து அம்மனை வழிபட்டால் விரைவில் குணமாகிறது. மேலும் அம்மனை தரிசிக்க பில்லி, சூனியம், பிணிகள் நீங்கி வளமான வாழ்வு கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. தமிழகத்தில் பல பகுதிகளிலிருந்தும் சித்தூர், பெங்களூரு உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறார் படவேட்டம்மன்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

அனைத்துப் பாவங்களையும் போக்கும் பிரதோஷ கால சோமசூக்தப் பிரதட்சணை முறை.!!

ஒவ்வொரு மாதமும் 2 பிரதோஷங்கள் வரும். ஒவ்வொரு பிரதோஷத்தன்றும் பகலில் விரதம் இருந்து பிற்பகல் 4.30க்கு மேல் சிவபெருமானை ரிஷபாரடராக தரிசனம் செய்ய வேண்டும்.சனிக்கிழமை பிரதோஷம் வரும் நாளில் உபவாசம் இருந்தால் குழந்தை பாக்கியமும், செவ்வாய்க்கிழமை இருந்தால் கடன் நிவர்த்தியும், ஞாயிற்றுக்கிழமை இருந்தால் தீர்க்காயுள், ஆரோக்கியம் ஆகியவையும் ஏற்படும்.இறைவன் தேவர்களைக் காக்க ஆலகால விஷம் உண்ட காலத்தைத் தான் பிரதோஷ காலம் என்பர். பிரதோஷ காலத்தில் சிவபெருமான் தன் தேவியுடன், ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மும்முறை வலம் வருவார். அச்சமயம் முதல் சுற்றில் வேத பாராயணமும், இரண்டாவது சுற்றில் திருமுறை பாராயணமும், மூன்றாவது சுற்றில் நாதஸ்வர இன்னிசையும் நடைபெறுவது ஐதீகம்.


அச்சமயம் பக்தர்கள் அனைவரும் ‘ஓம் நமச்சிவாய’ என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓயாமல் சொல்ல வேண்டும். சிவபெருமான் ரிஷப வாகனத்தில் வீதி உலா வரும்போது பக்தர்களும் பின்னால் செல்வது நல்லது.கோவிலில் இருக்கும் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலையும், சிவப்பு அரிசியும், நெய் விளக்கும் வைத்து வழிபடுவது சாலச்சிறந்தது. பிரதோஷ காலத்தில் சிவலிங்கத்தை நந்திதேவரின் இரண்டு கொம்புகளுக்கிடையே கண்டு வணங்க வேண்டும்.இவ்வாறு, பிரதோஷ காலங்களில் சோமசூக்தப் பிரதட்சிணம் என்னும் முறையில் வலம் வந்து இறைவனை வழிபட வேண்டும்.

பிரதோஷ கால சோமசூக்தப் பிரதட்சணை முறை

முதலில் நந்திகேஸ்வரரின் கொம்புகள் வழியாக சிவலிங்கத்தை தரிசனம் செய்துவிட்டு அப்பிரதட்சிணமாக சண்டிகேஸ்வரர் சந்நிதி வரை சென்று அவரை வணங்கி பிறகு பிரதட்சணமாக ஆலயத்தை வலம் வந்து, சுவாமியின் அபிஷேகத் தீர்த்தம் விழும் நிர்மால்யத் தொட்டியைக் கடக்காமல் அப்படியே வந்த வழியே திரும்பி மீண்டும் நந்தியின் கொம்புகள் வழியே சிவலிங்கத்தைத் தரிசித்து மீண்டும் சண்டிகேஸ்வரர் சந்நிதி வரை சென்று அவரையும் தரிசித்து, மீண்டும் அப்பிரதட்சணமாக வலம் வந்து மீண்டும் சுவாமி அபிஷேகத் தீர்த்தம் விழும் நிர்மால்யத் தொட்டியைக் கடக்காமல் அப்படியே வலம் வந்த வழியே திரும்பி, மீண்டும் நந்திகேஸ்வரரின் கொம்புகள் வழியே இறைவனை வழிபட்டு, மீண்டும் சண்டிகேஸ்வரர் சந்நிதி வரை சென்று அவரை வழிபட வேண்டும். இவ்வாறு மும்முறை வலம் வந்து வழிபாடு செய்வதே பிரதோஷ கால பிரதட்சண முறையாகும்.இது அனைத்துப்பாவத்தையும் போக்கிவிடும் வல்லமை வாய்ந்தது. அதே சமயம் அனைத்து விதமான செல்வ வளத்தையும் தரக்கூடியது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

கண் கொடுத்து காப்பாற்றிய அத்தி வரதர்.!!

ராமானுஜர் காலத்தில் சோழ வள நாட்டை ஆண்டுவந்த குலோத்துங்கச் சோழன் மாபெரும் சிவ பக்தன். நாட்டில் இருந்த சிவ பக்தர்கள் அல்லாதவர்களுக்கு ஒரு ஓலை அனுப்பினான். அதில் அவர்களை ஈசனே சிறந்த தெய்வம் என்று ஒப்புக் கொண்டு, கையொப்பம் இடும்படி ஆணையிட்டான். பலரும் மன்னனுக்குப் பயந்து, கையொப்பம் போட்டு விட்டனர்.மன்னனிடம் அமைச்சன் நாவலூரன், ‘‘மன்னா ராமானுஜர் மட்டும் கையொப்பம் இடவில்லை’’ என்றான். உடனே  மன்னன், ராமானுஜரை அரசவைக்கு அழைத்துவர ஆணையிட்டான்.


அவனது ஆணையேற்று காவலர்கள், ஸ்ரீரங்கத்தில் உள்ள ராமானுஜரின் மடத்திற்கு சென்றனர்.அவர்களது குரல் கேட்டு மடத்தில் இருந்த கூரத்தாழ்வார் மற்றும் பெரிய நம்பிகள் என்ற ராமானுஜரின் சீடர்கள் வெளியில் வந்தார்கள். ( இருவரும் ராமானுஜரின் தலைமை சீடர்கள்.) மடத்திற்கு வெளியில் வந்த இருவரும், காவலர்கள் வந்ததன் நோக்கத்தை அறிந்தார்கள். உடனே கூரத்தாழ்வார், ராமானுஜரது தண்டத்தையும் கமண்டலத்தையும் எடுத்துக் கொண்டு, காஷாயத்தையும் உடுத்திக் கொண்டு, ‘‘நான் தான் ராமானுஜன் வாருங்கள் செல்லலாம்’’ என்று சொன்னார். சோழ வீரர்களும் அவரை அழைத்துக் கொண்டுச் சென்றனர். பெரிய நம்பியும் அவருடன் சென்றார்.இவர்களிருவரும் சோழப் பேரரசின் முன் நிறுத்தப்பட்டனர். ராமானுஜரை, தெரிந்திருந்த அமைச்சர் நாவலூரான் , வந்திருப்பது, ராமானுஜரின் பிரதம சீடர்களான கூரத்தாழ்வார் மற்றும் பெரிய நம்பிகள் என்று அரசனுக்குத் தெரிவித்தான். அதை அறிந்த அரசன் வெகுண்டு எழுந்தான். ‘‘எதிரிகளை சந்திக்க, தைரியமில்லாமல் பயந்து ஓடுவதும், இப்படி ஆள் மாறாட்டம் செய்வதும் தான் வைஷ்ணவர்களின் பிழைப்பா?’’ என்று வார்த்தையால் குத்தினான்.

‘‘ஓய் வைஷ்ணவப் புழுக்களே! என்னப்பன் ஈசனே உலகின் முதல் தெய்வம் என்று ஒப்புக் கொண்டு, இதோ இந்த பத்திரத்தில் கையெழுத்துப் போடுங்கள்’’ என்று கர்ஜித்தான் மன்னன்.‘‘முடியாது’’ தெளிவாகவும் தீர்க்கமாகவும் கூரத்தாழ்வார் மற்றும் பெரிய நம்பிகளிடமிருந்து வந்தது பதில். இதைக் கேட்ட மன்னன் ‘‘காவலர்களே! இவர்கள் இருவரது கண்களையும் பறித்து இவர்களைக் குருடாக்குங்கள்’’ என்று கொக்கரித்தான்.
‘‘ காவலர்கள்  பெரிய நம்பிகள் அவரை கொல்லைக்கு அழைத்துச் சென்று அவரது இரு கண்களையும் பிடுங்கினார்கள். நாராயணா என்ற அவரது ஓலம் கேட்டு அரசவையே  பதறியது.  நடந்ததை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த கூரத்தாழ்வார், வெகுண்டு எழுந்தார்.‘‘அடேய் மூடனே! பரம வைஷ்ணவரான பெரிய நம்பிகளுக்கா தீங்கிழைத்தாய்? அவரையா புழு என்று ஏளனம் செய்தாய்.? விரைவில் புழு என்றால் என்னவென்பதை நீ பூரணமாக உணர்வாய். வைஷ்ணவருக்கு அபசாரம் செய்த உன்னை பார்ப்பதே மகாபாவம். உன்னைக் கண்ட இக்கண்கள் இந்த உடலில் இருக்க அருகதை அற்றது’’ என்று கர்ஜித்த படியே தனது நகங்களால் கண்களைப் பிடுங்கி அதை மன்னன் மீது விசி எறிந்தார்.

 உடனே கூரத்தாழ்வார் அங்கு ஒரு நொடி கூட நிற்கவில்லை. நம்பிகளின் முனகல் வரும் திசையை நோக்கி தத்தி தத்திச் சென்றார். அவரோ தனது இறுதி மூச்சை விட்டுக் கொண்டிருந்தார். ஆழ்வாரின் மடியில் தலை வைத்தபடியே வைகுண்டம் ஏகினார் அந்த மகான்.இது இப்படி இருக்க, சோழப் பேரரசின் மதவெறி அத்து மீறியது. சிதம்பரத்தில் இருக்கும் கோவிந்தராஜப் பெருமானின் மூல மூர்த்தியை கடலில் கரைத்தான். மேலும், பல விஷ்ணு தலங்களை இடிக்க ஆரம்பித்தான். இறுதியாக ஸ்ரீரங்கத்தையும் இடிக்கத் தனது படையோடு கிளம்பினான், அந்தக் கொடூரன். வழியில் அவனது தொண்டையில் ஒரு ரணம் ஏற்பட்டது. விரைவில் அது பெரிய ரணமாகி அதில் புழுக்கள் புழுத்து நெளிய ஆரம்பித்தது. அந்த ரணத்திலிருந்து புழுக்கள் வெளிப்பட்டு அவனது உடலெங்கும் நெளிந்தது. போதாக் குறைக்கு அவன் கொடும் வயிற்று வலியில் அவதிப்பட்டு உயிரை விட்டான். இப்படி அவனது கண்டத்தை (கழுத்தை) கிருமிகள் வியாபித்ததால் அவன், கிருமி கண்ட சோழன் என்று அழைக்கப்படலானான். உலகமே ஒரு உன்னதமான மகானின் வாக்கு எப்படி பலித்து விட்டது என்று அதிசயித்தது.

சோழர்களால் விஷ்ணு பக்தர்களுக்கு வந்த ஆபத்து கிருமி கண்ட சோழனின் மறைவிற்குப் பின் முற்றிலுமாக நீங்கியது. இதை அறிந்த ராமானுஜர் ஸ்ரீரங்கத்திற்குத் திரும்பினார். ஊரே அவரது வரவைத் திருவிழாவாகக் கொண்டாடியது. அவரருகில் வந்து அவரை சாஸ்திர முறைப்படி வணங்கினார்  கூரத்தாழ்வார். தனது சீடர்கள் மூலமாக நடந்ததை முன்னமே அறிந்திருந்த ராமானுஜர், தனது சீடனின் நிலையைக் கண்டு பெரிதும் வருந்தினார். ‘‘ஏனப்பா! இழந்த கண்களை மீண்டும் தருமாறு வேத முதல்வன் நாராயணனைப் பிரார்த்திக்கவில்லை?’’ என்ற ராமானுஜரிடம், ‘‘என்னை இந்நிலையில் வைப்பதில் அவனுக்கு பரம சந்தோஷம் என்றால் இன்னும் ஏழேழு பிறவிக்கும் கூட குருடனாக இருப்பேன் ஸ்வாமி. மேலும் அவனிடம் வேண்டியதைக் கேட்டுப் பெற்றால் சாதாரண மனிதனுக்கும் ஸ்ரீ வைஷ்ணவரான நமக்கும் என்ன வித்தியாசம்?. தங்களுக்கு விருப்பமில்லாததை அடியேன் சொல்லியிருந்தால் தயை கூர்ந்து இந்த சிறியவனை மன்னித்து அருளுங்கள் ஸ்வாமி’’ என்றார் ஆழ்வார். ‘‘ உன்னை இந்நிலையில் பார்க்க என் மனம் சகிக்கவில்லை. ஆகவே உடன் காஞ்சிக்குச் செல். பேரருளாளன் வரதராஜன் வரப் பிரசாதி. கேட்டதையெல்லாம் தரும் கலியுக கண் கண்ட தெய்வம். அவனை சரணாகதி செய். உனக்கு நிச்சயம் மீண்டும் கண்ணொளி தருவான் அந்த மாயக்கண்ணன்’’ என்று வலது கையை உயர்த்தி அவருக்கு ஆசி வழங்கினார் ராமானுஜர்.

ஆச்சாரியரின் சொல்லைத் தட்டாத ஆழ்வார், காஞ்சிக்கு விரைந்தார். வரதராஜனைக் கண் குளிர சேவித்தார். ஒப்புவமை இல்லாத வரதராஜ ஸ்தவம் என்னும் கவிதையை அவன் மீது பாடினார். ஆழ்வார் பாடி முடித்ததுதான் தாமதம். சங்குசக்ர கதாதாரியாக , பூமகள் திருமகள் சமேதனாக திருக்காட்சி தந்தான் வரதன். அந்த அழகனைக் கண்ட ஆழ்வார் அளப்பறியா ஆனந்தம் அடைந்தார். ‘‘அப்பனே, தேவர் பெருமானே, வேத முதல்வனே, ஆதி மூலனே உன்னருளால் கண்ணொளி பெற்றுவிட்டேன். உன் கருணைக்கு எல்லையே கிடையாது. இருப்பினும் அப்பனே, நான் அடைந்த இந்த இன்பத்தை கிருமி கண்ட சோழனும் அவனது அமைச்சன் நாவலூரானும் பெற வேண்டும். அடியர்களைப் பகைத்தவர்கள் மீது நீ காட்டும் கோபத்தை, உக்கிரத்தை, கொடுமையையை, வேகத்தை தண்டனையை அவர்களிடம் காட்டாதே. இதுவே நான் உன்னைக் கேட்டுக்கும் வரம்’’ என்று கைகுவித்தபடியே வேண்டிய ஆழ்வாரின் கண்களில் நீர் தாரை தாரையாக வந்தபடி இருந்தது. ஆனந்தத்தின் உச்சியில் இருந்ததால் அவரது நாவும் தழுதழுத்தது. பகைவர்களிடம் கூட இப்படிப்பட்டக் கருணையை, அன்பே வடிவாகிய வரதனின் அடியவர்களைத் தவிர யார் செய்ய முடியும்?வரதன் ஆழ்வாரின் உத்தமமான தீதில்லா வார்த்தைகளைக் கேட்டு, அகமகிழ்ந்து அவருக்கு அருளி மறைந்தான்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

பல்லிகளாக மாறிய பாலகர்கள்.!!

ஸ்ரீ ஸ்ருங்கி பேரர் என்ற முனிவரின் இரண்டு மகன்கள், கௌதம முனிவரிடம் சீடர்களாக இருந்தனர். கௌதமருக்கு பணிவிடைகள் செய்து வந்தனர். ஒருநாள் ஆசிரமத்தில் கௌதமர் பூஜைக்கு தயாராகிக் கொண்டிருந்தநேரம் பூஜைக்கு வைத்திருந்த தீர்த்தத்தில் பல்லி இறந்து மிதந்து கிடந்தது. இதனால் கோபம் கொண்ட கௌதமர், ஸ்ரீ ஸ்ருங்கி பேரர் மகன்கள் இருவரையும் பல்லிகளாக போகக் கடவீர்களாக என சபித்தார்.தவறை உணர்ந்து விட்டோம் சுவாமி. எங்களை மன்னித்து அருள வேண்டும். சுவாமி, நாங்கள் சாபம் விமோசனம் பெற என்ன செய்ய வேண்டும் என்று கேட்டனர். அதற்கு கௌதமர், நீங்கள் இருவரும் சத்திய விரத க்ஷேத்திரமான காஞ்சிக்கு சென்று அங்கு எழுந்தருளியிருக்கும் வரதராஜ பெருமாளை வழிபட்டால் சாப விமோசனம் பெறலாம். அதோடு உங்களுக்கு மோட்சமும் கிட்டும் என்று கூறினார். இதையடுத்து ஸ்ரீ ஸ்ருங்கி பேரர் மகன்கள் இருவரும் காஞ்சிபுரம் வந்து வரதராஜப் பெருமாளை வழிபட்டனர். வரதராஜப் பெருமாள் அவர்களுக்கு சாப விமோசனம் அளித்தார். மேலும், இருவரின் ஆத்மா வைகுண்டம் செல்லும். அதே நேரம் உங்களின் சரீரம் பஞ்ச உலோகங்களாக எனக்கு பின்புறம் இருக்கட்டும். என்னை தரிசிக்க வருபவர்கள், உங்களையும் தரிசித்து சகல தோஷங்களும் நீங்கப் பெறுவார்கள் என்றும் அருளினார். அதன் படி இந்த ஆலயத்தில் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன பல்லி உருவங்கள் பஞ்ச உலோகங்களால் அமைக்கப்பட்டுள்ளது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡