வேலூர் மாவட்டம் வாலாஜாவில் தன்னை நாடி வரும் பக்தர்ளின் கோரிக்கைகளை தாயுள்ளத்துடன் நிறைவேற்றி தரும் கருணை வடிவாக அருள்பாலித்து வருகிறார் படவேட்டம்மன். தொண்டை மண்டலத்தின் தலைநகரான காஞ்சிக்கு அடுத்தபடியாக கோயில்கள் அதிகம் நிறைந்த ஊர் வேலூர் மாவட்டத்தில் உள்ள வாலாஜா. இந்துக்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறுபட்ட கலாச்சார பின்னணி கொண்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. பாலாற்றின் கரையோரத்தில் பாங்குடன் அமையப்பெற்ற வாலாஜா படவேட்டம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். பக்தர்களின் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்து அவர்களின் ஜீவனோடு கலந்து அருள்பாளிக்கிறார் படவேட்டம்மன்.
300 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வூரில் வாணிபத்தில் கொடிகட்டி பறந்த தனவந்தர் ஒருவர் போளூர் அருகே உள்ள புகழ்பெற்ற படவேட்டம்மன் கோயிலுக்கு அவ்வப்போது சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒருசமயம் அவரால் செல்லமுடியவில்லை. இதனால் அவர் மிகவும் மனம் வருந்தினார். ஊன் உறக்கமின்றி தவித்தார். அப்போது அவரது கனவில் தோன்றிய அம்மன், ‘நீ கவலைப்படாதே, உன்னுடைய இடத்திலேயே வந்து உனக்கு காட்சியளிக்கிறேன்’ என்று கூறினார். இதில் பரவசம் அடைந்து உடனடியாக கண் விழித்து பார்த்தார் அந்த தனவந்தர். அம்பாளே தனக்கு கனவில் வந்து அருள்வாக்கு கூறியதை எல்லோரிடமும் கூறி பரவசப்பட்டார். பின்னர் தனக்கு சொந்தமான நிலத்தில் பார்த்தபோது அங்கு அம்மன் சிலையாக வீற்றிருந்தார். படவேட்டில், தான் தரிசித்த அதே அம்மன் இருப்பதை கண்டு ஆச்சரியத்தில் மகிழ்ந்து போனார். இச்சம்பவம் காட்டுத்தீபோல் பரவ பல கிராமங்களில் இருந்து மக்கள் அம்மனை தரிசித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
வாலாஜா மற்றும் சுற்றியுள்ள மக்களின் காக்கும் கடவுளாகவும், எல்லையை காத்துவரும் அன்னையாகவும், எண்ணிலடங்கா அதிசயங்களை நிகழ்த்திய அன்னையை நேரில் தரிசிப்பவர்களுக்கு நினைத்த காரியம் கண்டிப்பாக கைக்கூடும். போளூர் அருகே படவேடு ரேணுகாம்பாள் கோயிலில் உள்ளது போல் இங்கும், கருவறையில் கருணை பொழியும் தாயாக சிரசு வடிவில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார் படவேட்டம்மன். கோயிலின் வலது பக்கத்தில் 60அடி உயரத்தில் அஷ்ட புஜங்களுடன் படவேட்டம்மனும், இடது புறத்தில் 63அடி உயரத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயரும் விஸ்வரூப தரிசனத்தில் காட்சி தருகின்றனர்.
திருமணம், குழந்தை வரம் கேட்டு பக்தர்கள் வேண்டிக்கொண்டால் விரைவில் திருமணமும், குழந்தைபேறும் கிடைக்கும். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரதமிருந்து அம்மனை வழிபட்டால் விரைவில் குணமாகிறது. மேலும் அம்மனை தரிசிக்க பில்லி, சூனியம், பிணிகள் நீங்கி வளமான வாழ்வு கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. தமிழகத்தில் பல பகுதிகளிலிருந்தும் சித்தூர், பெங்களூரு உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறார் படவேட்டம்மன்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment